Pages

Friday 31 July 2009

கவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...


அரசியலில் அவசரம் கூடாது. மிகவும் நிதானம் தேவை. முற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஜெயலலிதா பொது செயலாளராக இருக்கும் கட்சியில் முற்படுத்தப்பட்ட எனக்கு இடமில்லை. அவங்க மட்டும் இருந்தால் போதுமா...? இக்கட்சியில் அதிக அநியாயம் முற்படுத்தப்பட்டவர்களுக்கே நடக்குது.

குற்றாலத்தில் நடைபெறும் சாரல் விழாவில் எஸ்.வி.சேகர் குழுவின் நாடகம் இடம் பெறுகிறது. இதற்காக குற்றாலம் வந்துள்ள எஸ்.வி.சேகர், தட்ஸ்தமிழுக்காக தொலைபேசி மூலம் சிறப்புப் பேட்டி அளித்தார்.
செய்தி-நன்றி-தட்ஸ்தமிழ்.

அனிதா அம்மாவிடமிருந்து
அதிரடி நீக்கம்,
அரசியல் சரண் புக,
அறிவாலயம் கதவு,
எப்போதும் திறக்கும்,
எஸ் வீ சேகருக்கு
எப்போதும் திறக்காது,
ஏனென்று எல்லோருக்கும் தெரியும்,
எஸ் வீக்கு தெரியாதோ,
எதற்கு பின் வேண்டாத
எடுபிடி.
எட்டி உதைத்தபின்,
எப்படி வந்தது,
எதற்கும் உதவாத ஜாதி.

கவிஞர் கும்மாச்சி.

படிச்சிட்டிங்களா வோட்டப் போடுங்க.

Thursday 30 July 2009

நகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப் போட்டு, அப்படியே வோட்டையும் போடுங்கப்பு.


சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜனி, கமல் காலம் தமிழித் திரையுலகின் பொற்காலம்,

அப்படின்னா
இளைய தலைவலி, தருதல, புரத்சிதலவலி, லிட்டில் ஆப்பர் ஸ்டார் காலத்தை என்ன சொல்லுறது?.

"கேடுகாலம்தான்".
---------------------------------------------------------------------------------------------------------------------------
"தேரரசு" பஞ்ச் டயலாக்.

டேய் "தருதலபடமேல்லாம் நான் இயக்கமாடேன்".

அவன் சொல்லி அடிக்கிறதுல "பல்லி"
சொல்லாம சொல்லி நடிக்காததுல "பழகிய தலைவலி மகன்"
மரம்போல நிக்கறதுல "குதிர"
இரட்டை வேடத்துல "டல்லு"
ஆட்டத்துல "மச்சின்"
வரபோறாண்டா "வோட்டக்காரன்"
அவன் ஒருமுடிவு எடுத்தானா, அவன் ஜட்டி சொன்னாலே கேக்கமாட்டான்"
"சைலென்ஸ் பேசிட்டிருகொம்லே அப்படின்னு சொன்னான், எல்லாம், எல்ல்லாம், சும்மா சும்மா அப்படியே அபிட் ஆயிடுவானுங்கோ".

Monday 27 July 2009

தவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.?






தெரியும்டா தவா மவனே உன் செல் கிராஸ் செய்து போவோ சொல்ல கொரல் வுட்றே.
உன்னியே பாக்கமாட்டேண்டா?

மவனே நாம் மாட்னா என்னே சுளுக்கேடுத்துருவானுங்கோ.
அதுகண்டி இல்லே, நீ வெளிலே வந்தா என்னையேப் போட்டுத் தள்ளிடுவே.
அல்லாம் தெரியுதுமா, நானும் நீயும் ஜோடியாப் போனா அல்லாப் பயலுவளும் அலறுவானுங்கோ. அந்தப் பரத் ஓட்டலாண்ட, போனவருஷம் தீவளிக்கி மொதநா புல் டைடாயி நல்லா கறிதுன்னு,, துட்டுகேட்ட சர்வர் மவனே, வாய் வெத்திலப்பாக்கு போடவேச்சொமே அப்போ மாட்டினா கூட ஒன்னயே எதோ சும்மனாங்காடியும் நாலு தட்டுதட்டி வுட்ட்ருப்பனுங்கோ.

அத்தவுடு ஒரு கா நீ விரியம்பக்கம் போய் இட்டந்தையே ஒரு பிகரு, அதே நம்ம இட்டுகினு கோவாலு இல்லாதே சொல்லே, அவன் குடிசைக்கு பின்னாடி வச்சு நொந்கொஸொல்லொ, அப்போ பக்கத்துவூட்டு பேமானி போட்டுக்குடுட்து, எட்டு வரசொல்ல எஸ்கேப் ஆனோமே, அல்லாம் உன்னியே மாதிரி ஆளுதாண்ட கணுக்கா செய்யமுடியும். தொ அங்கினே மாட்டினான்காட்டியும் நீ இப்போ உள்ளே வந்துருக்கே மாட்டியேடா.
நான் அந்த கோகிலாவே கொதரிட்டு கைவுட சொல்லே அத்தே தம்பரத்துலே வச்சிக்கினு என் அப்பன் ஆயிக்கிட்டே போட்டு கொடுக்காம அத்தே அப்படியே பெரம்பூருக்கு பாக் பண்ணிகினியே நீ கில்லாடிடா.

அல்லாம் சரி, நான் தியேட்டராண்ட வரேசொல்லே, இன்னா நீ அந்த சேட்டுப்பையனை சொருவிட்டேயேடா. போலிசு உன்னியே கயித்தப் பிடிச்சு இட்டுகினு வண்டிலே எத்துறதே நான் பாத்து எஸ்கேப் ஆயிட்டேண்டா. சேட்டுப் பையன் இன்னா செஞ்சான் உன் டாவு மல்லிகாவே லேசா உறசிக்கினான், என்னாண்ட சொல்லிகிநேன்னு வயீ மவனே அவனே புட்டத்துலேயே போட்டு, மவனே குறகாலத்துக்கு குந்த வுடாம பண்ணிகினு இருப்பேன். உனக்கு இன்னாட அத்தினி காண்டு.

இப்போ செயிலாண்ட கொளுத்து வேலே செய்ய வந்த எண்ணியே சுரங்கப் பாதை வெட்ட சொல்லுறியே இது நியாயமா?

நானே இப்போதான் அல்லாத்தையும் வுட்டுகினு, கண்ணாலம் கட்ட்டிகினு கமுக்கமா கிறேன்.

எண்ணியே கேக்குறியேடா, வாணாம், இன்னொருதபா உன்னியே நான் பாக்கமாட்டேன்.

அப்பாலே வெளியே வந்து, மொத வேலையே என்னியப் போட்டு தள்ளிடுவே,

ஆங் மல்லியாவே நான் இப்போ ஜபெர்கான் பெட்டையாண்டே வச்சிகினு, நீ திரியும் வரமாட்டேன்னு சொல்லி ஒட்டிகினுகிறேண்டா, மன்னிச்சிக்க மாமு.

Saturday 25 July 2009

காவிரி பாயும்........


எடியூரப்பா: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை--செய்தி



காவிரி "யு டர்ன்" அடிக்கவேண்டும்
கர்நாடக மக்கள் வேண்டுதல்.
கபினி கரை புரளும் பொழுது,
காவிரி தமிழ் நோக்கிப் பாயும்,
கண்துடைப்பு உண்ணாவிரதம்,
கதாநாயகர்கள் மேடைச்சண்டை,
கடந்த வருடம் போல் இந்த வருடம்,
கடற்கரையில் கிடையாது,
கவலையில் தொலைக்காட்சிகள்,
அரசியல் நாடக அரங்கேற்றம்,
அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.

Friday 24 July 2009

போங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.


என்னிடம் பணிபுரியும் "உள்ளூர் மண்ணின் மைந்தருக்கு" கல்யாணம். அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இது நான் முதல் முதல் போகும் அரபு நாட்டுக் கல்யாணம். ஊருக்கு நடுவே பொறம்போக்கு நிலத்தில் டென்ட் போட்டு, குளிர்சாதன வசதியுடன், ஒரு ஆயிரம் பேர் புழங்க வசதியுள்ள இடம். நான்கு பக்கமும் இருக்கைகள் போட்டிருந்தார்கள். ஆனால் மொத்தம் நூறு பேர்தான் இருந்தார்கள்.

நான் போகிறேன் என்று சொன்னவுடன், என்னுடன் ஒரு ஆறுபேர் சேர்ந்துகொண்டார்கள். எல்லோரும் கலக்ஷன் போட்டு, ஒரு கைக்கடிகாரமும்,பேனா செட்டும் வாங்கிவிட்டோம். ஆறுபேரும் என் வீட்டுக்கு வந்து பிறகு என் வண்டியில் போவதாக முடிவாகிவிட்டது. ஒருவன் "தீர்த்தவாரி" ஆரம்பித்து பிறகு போகலாம் என்றான். நான் அதெல்லாம் மரியாதையாக இருக்காது, கிளம்புங்க போகலாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேன்.

கல்யாண மண்டபம் (டென்ட்) அடைந்தவுடன், நேராக நம்ம மாப்பிள்ளைப் பையன் உள்ளூர் உடையின் மேலே ஒரு கருப்பு அங்கி அணிந்து கொண்டு அதே போல உடையில் அவனுடன் இருவர் நடுநாயகமாக நின்று கொண்டிருந்தனர். நண்பர் குழு பரிசை என்னிடம் கொடுத்து, கொடுக்க சொன்னார்கள், நான் அவனிடம் கொடுத்து வாழ்த்து சொல்லும் பொழுது, அருகில் இருந்த கருப்பு அங்கி நான் அவனுடைய அப்பா எனக்கும் எதாவது கொடுங்கள் என்று சொன்னார். (அந்த இடத்தில் பரிசு கொடுத்த ஒரே சிகாமணிகள் நாங்கள் தான், அவர்களுக்கு இந்த பழக்கம் கிடையாது போலிருக்கிறது).

இப்பொழுது தொழுகை நேரம் வரவே, அனைவரும் தொழுதார்கள். பிறகு இசையும் நடனமும் தொடங்கிற்று. இது நம்ம ஊரு "யாரு வூட்ல பார்ட்டி எங்க வூட்ல பார்ட்டி" டைப் கிடையாது. இது கூறிய வாளை வைத்துக் கொண்டு, தப்படித்துக் கொண்டே பாடுவார்கள். எல்லாப் பாட்டும் ஒரே ராகத்தில் தான் இருக்கும்.

சாப்பாடு போட டைம் ஆகும் போல இருந்தது.

நிற்க, கல்யாண இடத்தில் எதாவது பிகர் வரும் என்றால், மருந்துக்கு ஒன்னு கூட கிடையாது. சுத்தமான நம்மக் கூட்டம்தான்.

நண்பன் சொன்னான், இதே போல பெண் வீட்டில் பார்ட்டி நடக்குமாம், அங்கே வீடியோ கூட பெண்கள்தான் எடுப்பார்களாம். அங்கு ஆண் வாசனையே இருக்ககூடதாம்.

இந்த இரண்டு பார்ட்டியும் முடிந்தவுடன் மாபிள்ளை மட்டும் பெண்வீட்டு பார்ட்டியில் என்ட்ரி கொடுப்பாராம்.

ஆஹா நம்ம ஊருலே கல்யாணம்னா பட்டுபுடவை சரசரக்க,, நகை கடையே ஏறக்குறைய அணிந்துகொண்டு, கடைக்கண் பார்வை பார்க்கும் கன்னிகைகள் கல்யாண மண்டபத்தை அலங்கரிப்பார்கள்.

செல்லச் சிணுங்கல்களும், மொக்கை ஜோக்குகளும், அவையில் நிறையும் அற்புதம். ஒருக் கல்யாணத்தில் மற்றுமொரு கல்யாணம் முடிய அச்சாரம். இதெல்லாம் இங்குக் கிடையாது போலிருக்கிறது.

போங்கடா, நீங்களும் உங்கக் கல்யாணமும் என்று, அங்கிருந்து கிளம்பி, பெர்கேர்கிங்கில் சப்ப மூக்கி “பிளிபைநியிடம்” சல்லிசாக "பெர்கர்" வாங்கி சரக்கடித்து மட்டையானோம்.

Thursday 23 July 2009

காவியக் காதல்


கமலீ நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று,
கழுத்தை நோக்கி சொன்னதால்
காலனியைக் கழட்டி எறிகிறாய்,
கண்ணைப் பார்த்து சொன்ன,
கயவனுடன் காதல் என்கிறாய்,
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற,
நீ இருக்கிறாய் என்றால்,
கயவனைக் கழட்டிவிடவா போகிறாய்,
அடுத்தமுறை காதலை சொல்லும்பொழுது,
நழுவும் துப்பட்டாவை பிடித்து நிறுத்து,
உண்மைக் காதல் புரியும்.

Wednesday 22 July 2009

அப்பா கொடுத்த அம்மா


அவன்
குழந்தையைப் பிரிந்து ஒரு பொழுதுக் கூட இருக்க முடியவில்லை. அபர்ணாவுக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் தாத்தாவையும் பாட்டியையும் தவிர. அவர்கள் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் வயதாகிவிட்டது. அக்காவோ ஜெர்மனியில் இருக்கிறாள். நான்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வந்து போகிறாள்.

எவ்வளவோ மேனேஜரிடம் கெஞ்சியும் என்னை இரண்டு நாட்களுக்கு இந்த வேலைய முடிக்க இந்த ஊருக்கு அனுப்பிவிட்டார். ஒருமணிக்கு ஒரு முறை வீட்டுக்கு தொலை பேசி ஆகிவிட்டது. குழந்தை என்னைப் பிரிந்து ஏங்குகிறாள். கமலீ எப்படி என்னையும் குழந்தையும் தனியே விட்டுப் போக மனசு வந்தது. நீ என்ன செய்வாய் உனக்கு வந்த மூளைக் கட்டி எனக்கு வந்திருக்கக் கூடாதா. தூக்கம் பிடிக்கவில்லை.

ரூம் மணி அடிக்கிறது. யார் இந்த வேளையில். கதவைத் திறந்தேன், அவள் சுதந்திரமாக அறையினுள் நுழைந்தாள். நல்ல அழகி, தவறி என் அறையினுள் நுழைந்து விட்டாளோ?
இல்லை அவள் போலீஸ் ரைடுக்கு பயந்து இங்கு சடுதியில் என் அறையில் நுழைந்து விட்டாள். இந்த ஓட்டலிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா. என்னை மன்னிச்சிடுங்க சார் என்கிறாள்.

இரவு தங்க அனுமதி கேட்கிறாள். எனக்குப் பாவமாக இருக்கிறது. இரவு அவளிடம் விசாரித்தப் பொழுது . தன கதையை என்னிடம் கூறினாள். இவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கயவனால் ஏமாற்றப் பட்டிருக்கிறாள். அது வீட்டிற்கு தெரிந்து இவளை விரட்டி இருக்கிறார்கள். பின்பு அவள் நாதியற்று நாயடி பேயடி பட்டு இந்தத் தொழிலில் தள்ளப் பட்டிருக்கிறாள்
காலையில் அறையை விட்டு கிளம்பிவிட்டாள்.

அவள்

நான் பார்த்த ஆண் பிள்ளைகளில் இவன் வித்யாசமானவன் என்று நினைத்து கொண்டிருந்தேன், அவன் அடுத்த நாள் என்னை ஓட்டல் வாசலில் கண்டு என்னைக் கூப்பிடும் வரை.

என்னை அறையினுள் அழைத்துச் சென்றான். ஆனால் என்னைத் தொடவில்லை. அவன் மனதில் இருப்பதை சொன்னான். பாவம் மனைவியை இழந்து குழந்தையுடனும், வயதான பெற்றோருடன், அவர்கள் அவனை நினைத்து மனசு நொந்து போவதையும் பற்றி. எனக்கு கேட்க என்னவோ போலிருந்தது. நான் பார்த்தவர்கள் ஒரு குவார்டரை குடித்து விட்டு முள்ளு மூஞ்சியுடன் என் மார்பில் தடவுவார்கள். பின்பு தாகம் தீர்ந்தவுடன் கட்டிப் பிடித்து குறட்டை விடுவார்கள். இவன் வித்யாசமானவன்.

பிறகு அவன் விருப்பத்தை சொன்னான். எனக்கு நம்ப முடியவில்லை. இவனை நம்பி போவது எனக்கு பிடித்திருந்தது, ஆனால் எந்த அளவுக்கு உண்மை.

ஆனாலும் முடிவெடுத்து விட்டேன். என்ன புரோக்கர் தகராறு பண்ணுவான். அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுக் கிளம்பவேண்டும்.

பெற்றோர்

அவளை எங்களுக்கு பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விட்டது. குழந்தையுடன் ஒட்டிக்கொண்டு விட்டாள். கல்யாணம் வெறும் சம்பிரதாயமாக ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்துக் கொண்டோம். எங்களையும் குழந்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள். ஷீலாவும் ஜெர்மனியிலிருந்து தம்பி சந்தோஷமாயிருந்தால் சரி என்று சொல்லிவிட்டாள்.

அவளின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை?

குழந்தை

அப்பா எனக்கு ஊரிலிருந்து நல்ல அம்மா கொண்டுவந்தார்கள்.

Tuesday 21 July 2009

அம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து................. கிளம்பிட்டானுங்கையா..........


1)என்னதான் திட்டித்தீர்த்தாலும் மறுபடியும் ஒருவித வெற்று சிரிப்போடு கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுதல்.

2)ஒவ்வொருமுறை காலில் விழும் பொழுதும், சிரிக்கும் ஆணவச் சிரிப்பு.

3)கூட்டணி பேரத்தில் கலைஞர் எவ்வளவு சீட் கொடுப்பாருன்னு முன்பே அறிந்ததுபோல அதைவிட கூட கொடுப்பதாக நினைத்து, குறைத்துக் கொடுக்கும் தந்திரம்.

4)எவ்வளவு சீட் கொடுத்தாலும், கூடவே கொடுக்கும் பெட்டிகள்.

5)தோத்துப் போனாலும், தொடர்ந்து குறை சொல்லாமல் இருப்பது.

6)கொடுத்ததை திரும்ப கேட்காமல் இருப்பது.

7)ராஜ்ய சபை சீட் கேட்டபொழுதும் அது மகனுக்குத்தானே என்று கேட்டு தர்ம சங்கடப் படுத்தாமல் இருந்தது.

8)அடுத்த கூட்டணிக்கு அச்சாரமாக இன்னும் திட்டி அறிக்கை விடாமல் இருப்பது.

9)இன்னும் தோழி காலில் விழ சொல்லாமல் இருப்பது.

10)சீட்டுக் கணக்கு பார்த்து உணவு வகைகள் பரிமாறுவது. ( தண்ணி, சோறு, சாம்பார், வத்தல், எண்ணெய், மோரு என்று ஆறு வகைதான் போட்டது)

சும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்


அன்று சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம். அம்மா எவ்வளவு தடுத்தும், அவள் நம்பிக்கையை கேலி செய்து, அவள் சொல்ல சொல்ல கேளாமல், வீட்டிலிருந்த உணவை உண்டு, என்னுடைய பட்டப் படிப்பு சான்றிதழை எடுத்துக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நோக்கி கிளம்பிவிட்டேன்

அங்கு சென்றவுடன் நீண்டக் க்யு. என் முறை வர ஐந்து மணி நேரம் ஆகிவிட்டது. பின்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரை பதிவு செய்து வீட்டுக்கு திரும்பிவிட்டேன். சூரிய கிரகணம் முடிந்து, வீட்டில் அம்மா செய்துவைத்த பலகாரத்தை உண்டு, மறுபடியும் வெளியே கிளம்பிவிட்டேன். இந்த முறை தெருக்கோடியில் நண்பர்களுடன் பிகுரே லுக் விட்டு மார்க் போடும் நேரம்.

இரவு வீட்டுக்கு வரும் பொழுது நல்ல தலைவலி. இரவு போகப் போக உடம்பு வலியும் சேர்ந்துகொண்டது. காலையில் எழுந்திருக்க முடியவில்லை. அம்மா எனக்கு நல்ல காய்ச்சல் என்று ஆஸ்பத்திரி கூட்டிசென்றாள். என்னால் நடக்க முடியவில்லை. கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.

அவ்வளவுதான் எனக்குத் தெரியும், நான் எப்படி வீட்டுக்கு வந்தேன், எங்கு இருக்கிறேன் என்று எனக்கு சுயநினைவு வரும் வரை தெரியாது. என் சுய நினைவு வந்த பொழுது என் அம்மா என்னருகில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

பிறகு அக்கா நான் இரண்டு நாட்களாக நினைவில்லாமல், படுத்திருந்ததும், அம்மா அருகில் உட்கார்ந்து என் அருகில் அரற்றிக் கொண்டிருந்ததையும், சரியாக சாப்பிடாததையும் சொன்னாள்.

இப்போதெல்லாம் அம்மா இந்த மாதிரி எது சொன்னாலும் நான் கேட்டு விடுகிறேன். அவளின் நம்பிக்கைகளை கிண்டல் செய்வதில்லை. நான் நம்புகிறேனோ இல்லையோ, அவளின் நம்பிக்கை உணர்வு சம்பந்தப்பட்டது. அதைக் கிண்டல் செய்ததை நினைத்து வருந்துகிறேன்.

Monday 20 July 2009

தந்தை சொல் மிக்க...............




காற்றுப்புகா என் இதயத்தில்
நேற்றுப் புகுந்தவனே
காளை போல வந்து
தோளை நிமிர்த்தி
வேளை அறிந்து உன் காதலை
என் தந்தையிடம் சொல்.

Sunday 19 July 2009

ஒண்ணுமே புரியலை பதிவுலகத்திலே,


ஒண்ணுமே புரியலை பதிவுலகத்திலே,
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது,
மொக்கைப் பதிவெல்லாம் பிரபலம் ஆகுது,
நல்லப் பதிவெல்லாம் நாசமாய்ப் போகுது,
என்னான்னு தெரியலே, எப்பவும் விளங்கலே,
மொக்கைப் பதிவுபோலே எதுவும் இல்லே.

கம்ப்யூட்டர் பதிவெல்லாம், கரெக்டாக வருகுது,
குன்சாப் பதிவெல்லாம் கும்மாளம் போடுது,
பிரபலப் பதிவரெல்லாம், சண்டைப் போடுறாங்க,
இதுக்குப் ஏராளமாய் பின்னூட்டம் வருகுது,
என்னான்னு தெரியலே, எப்பவும் விளங்கலே,
மொக்கைப் பதிவுபோலே எதுவும் இல்லே.

நல்லப் பதிவுக்கு நாலு ஓட்டுத்தான் விழுகுது
.

Saturday 18 July 2009

சலவைக்காரி


சலவைக்காரன் பக்கிரி. மனைவியுடன் ஒழுங்காக தொழிலை செய்துகொண்டு மகிழ்ச்சியாகாதான் இருந்தான், போன வாரம் கழுதை மர்மஸ்தானத்தில் உதைக்கும் வரை. கழுதை அவன் வளர்த்ததுதான் "பஞ்சக் கல்யாணி". பஞ்ச் கல்யாணி ஆகிவிட்டது.

சிலநாட்கள் படுத்திருந்து அபிட் ஆகிவிட்டான்.

துக்கம் விசாரிக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் வந்தார்கள்.

எல்லாப் பெண்களும் அவன் மனைவியிடம் எதோ கேட்டார்கள். அவள் முடியவே முடியாது என்றாள்.

அப்படி என்னதான் கேட்டார்கள்.

கழுதையை விலைக்கு கொடுப்பாயா? எவ்வளவு விலை என்றாலும் தருகிறேன்.

வண்ணானுக்கு வண்ணாத்தி மேல ஆசை,
வண்ணாத்திக்கு கழுதை மேல ஆசை.

Friday 17 July 2009

பதிவர்களின் அகாடமி விருது

செந்தழல் ரவி அவர்கள் தொடங்கிவைத்த அவார்ட் இப்போது கடல்புறா பாலாவினால் எனக்கு கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

பதிவுலகிற்கு இதுபோன்ற "தான்தோன்றி" அவார்டுகள் மிக அவசியமானதே. எதோ முகம் தெரியாதவர்கள் நம் எழுத்தைப் படித்து பிடித்து ஒட்டு, பின்னூட்டம் எல்லாம் இட்டுப் பின்னர் அவார்டும் கொடுத்தால் இருக்கும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதுதான்.

எனக்கு பிடித்தப் பதிவர்கள்.

1) குழந்தைநிலா,, உப்புமடச்ச்சந்தி ஹேமா.
2) லோஷன் தற்போது சிங்கப்பூரில் சிங்கிளாக உலா வந்து கொண்டிருக்கிறது.
3) கார்த்திகைப்பண்டியன்.
4) ராகவன் நைஜீரியா
5) அப்பாவி முரு
6) ச்சின்னப்பையன் பார்வையில் பூச்சாண்டி.

இவர்களுக்கு இந்த விருதை நான் அளிக்கிறேன்



மேலும் நிறையப் பதிவர்கள் இருக்கிறார்கள், இப்போது அவார்ட் கைவசம் இல்லாததால், இதயத்தில் இடம் அளிக்கிறேன்.

Tuesday 14 July 2009

அஞ்சா நெஞ்சனும் தளபதியும்


தலைப்பைப் பார்த்து இது எதோ கழகக் கண்மணிகளுக்கு என்று நினைத்து வந்தீர்கள் என்றால் அப்படியே அபிட் ஆயிடுங்கோ.

இது என்னையும் என் தம்பி “அங்குதன்” அஞ்சா நெஞ்சனையும் பற்றியது.
நாமதான் முதல் பிள்ளை என்பதால் அம்மாவிடமும், நைனாவிடமும் சில சலுகைகள் உண்டு. அது கைக்கு கிடைக்கும் முன்பே அஞ்சா நெஞ்சனுக்கு மூக்கில் வியர்த்துவிடும். அதை எப்படியாவது தடுத்து விடுவான். சலுகைகள் தனக்கு மட்டுமோ அல்லது இருவருக்குமோ கிடைக்குமாறு செய்து விடுவான். அம்மா கோழி அடித்து கறி வைத்தால் ஒரு லேக் பீஸ் நைனாவுக்கும் மற்றொன்றை நமக்கும் வைத்திருப்பார்கள், அவன் குறுக்கே பூந்து கும்மியடித்து லேக் பீசை லவட்டிடுவான்.
இருவரும் சேர்ந்து விளையாடினால் எப்படியும் பத்து நிமிடத்தில் இருவருக்கும் மூண்ட சண்டையில் முடியைப் பிடுங்கி, சட்டை கிழிந்துவிடும். குறுக்கே தடுக்க அக்கா வந்தால் முக்கலாகிவிடுவாள். இதிலே அனுபவம் பெற்ற அம்மா குறுக்கே வரமாட்டாள். “சண்டையிலே மவனே ரெண்டு பெரும் சாவுங்கடா” என்பாள்.

ஆனால் இவையெல்லாம் இருந்தும் வூட்டுக்கும், ஊருக்கும் அல்வா கொடுக்கிறது, பக்கத்து தோட்டத்துலே மாங்கா தேங்கா அடிக்கிறது, மவனே எங்க கூட்டணியை எவனும் பிரிக்கமுடியாது. தெருவுலகீர பயலுக, விடலைப் பொண்ணுங்க எல்லோருக்கும் மவனே எங்களைக் கண்டா ஒன்னுக்கு இருந்துருவாங்கோ. ஊருலே நடக்கிற டகல்பாஜி வேலை எல்லாம் நாங்க சேர்ந்துதான் நடத்துவோம். நம்ம அஞ்சாநெஞ்சன் கிறானே அவன் நல்ல பல சாலி, நம்மளவிட சின்னவனா இருந்தாலும், ஆளு சும்மா கெடா வெற்றவன் கணக்கா இருப்பான். விஷயம் தெரியாதவங்க அவன் தான் அண்ணன்னு என்னிக்குவாங்க. அதெல்லாம் விடுங்க இப்போ நான் இன்னா சொல்றேன்னா இந்த அஞ்சா நெஞ்சன் கொஞ்ச நாளா நம்மளைக் கண்டா பம்முறான். இன்னா விஷயம் சொல்றேன் கம்முன்னு கேளுங்க.
நைனா கடை வேலையெல்லாம் முடிச்சு, ரவைக்கு வூட்டுக்கு வந்து நம்மாலே கேட்டுகிறார். நம்ம அஞ்சா நெஞ்சனோட திருட்டுக் டம் அடிச்சு வூட்லே என்ட்ரி குடுக்கொசொல்ல, நைனா பாஞ்சி வந்து வுட்டாரு என் செவுள்ளே. எனக்கு வாயி வெத்தலைப் பாக்கு போட்டுகிச்சு.

"இன்னாடா செஞ்ச சேட்டு பொண்ணுகிட்டே", அப்படிங்கிறாரு.

"நான் இன்னா செஞ்சேன் நைனா, எனிக்கி ஒன்னும் தெரியாது, மெய்யாலுமா" ங்குறேன்.
நைனா இன்னாடா மவனே பொய்யா சொல்லுறே, நம்மலே ரௌண்டு கட்டி அடிக்குறாரு.
நம்ம அஞ்சா நெஞ்சன் கூட வந்தவன் எங்கேயோ அம்பேல் ஆயிட்டான்.

"இல்லே நைனா மெய்யாலுமா நான் ஒன்னும் செய்யலே நைனா", ங்குறேன்.
"அப்போ வாடா சேட்டு வூட்டுக்கு",

நமக்கு இன்னா பயம், "வா நைனா, நான் ஒன்னியும் செய்யலே நைனா".
சேட்டு வூட்டுக்கு போய் நைனா, சேட்டாண்ட "சேட்டு நம்ம பையன் ஒன்னும் ராங் செய்யலே சொல்லுறான்" ன்னாரு.

சேட்டு அவன் தர்பூசணி சைசுல கிற வவுத்த வச்சிகின்னு, உள்ளே "ரவீனா" ன்னு குரல் வுடுறான்.

சிம்ரன் கணக்கா ஒரு பிகுர் வந்து நின்னுச்சு.

“இன்னா பேட்டி இவனா உங்கிட்டே ராங் பண்ணிச்சு”, ங்குறான்.

சேட்டு பொண்ணு நம்மலே லுக் வுட்டு, " கலத் ஹோகயா பப்பா, எ ஆதமி நை ஜி" ங்குது.
நைனா "சேட்டு எவனோ தப்பா சொல்லிக்கிறான் சேட்டு நம்ம பையன் அதுபோலே செய் மாட்டான்", ன்னாரு.

சேட்டு "பேட்டா மாப் கர்" ங்கிறான்.

"மாப் கர்ரா, மவனே சேட்டு உனக்கு வைகிரோம்லே ஆப்பு" அப்படின்னு நினைசுகினே நைன்னாவோட வந்துக்கினேன்

திரியும் வூட்டாண்ட வரசொல்ல, அஞ்சாநெஞ்சன் பம்மிகின்னு நிக்கிறான்.
அப்பாலே நம்மகிட்டே வந்து "அண்ணாத்தே இன்னா ஆச்சுங்கிறான்".

"மவனே சேட்டு பொண்ணு கிட்டே எவனோ ரவுசு கட்டிகிறான், அது நம்மளே ராங்கா சொல்லிகிது"

"வேறே எதாச்சும் சொல்லிச்சா" அஞ்சா நெஞ்சன்.
"ஏண்டா இன்னாத்துக்கு கேக்குறே"

"ஒன்னும் இல்லேமா அது நான் தான், நைனாகிட்டே சொல்லிடாதே"

மவனே இப்போ எல்லாம் அஞ்சா நெஞ்சன் நம்மளே கண்டா பம்முறான், அதுவும் எப்படி, பொட்டை நாயி காலுக்கு ஊடாலே வாலே வுட்டுகின்னு ஓடுமே. அது போல.

Monday 13 July 2009

கொண்டாபுரத்து தேவதை


நண்பனுக்கும் எனக்கும் மும்பையில் வேலை நிமித்தமாக நேர்காணல். இருவரும் பள்ளியிலிருந்தே தோழர்கள், கல்லூரியிலும் ஒரே சப்ஜெக்ட் எடுத்தோம். பின்பு ஒருவழியாக தேறி இப்போது வேலைதேடும் படலம். மும்பைக்கு தொடர் வண்டிப் பயணம். எதையும் புதிதாக செய்யும் ஆர்வம். மும்பை முதன் முதலாக பார்க்கும் ஆவல் எல்லாம் கலந்து கட்டிய எண்ணங்களோடு பயணித்துக்கொண்டிருந்தோம்.

வண்டி ஆந்திரா வழியாகப் போய்க்கொண்டிருந்தது. இரவு ஏழு மணி ஆனவுடன் நண்பன் அவன் அண்ணனிடம் சுட்ட அரை பாட்டில் விஸ்கி வைத்திருந்தான். இருவரும் வண்டியின் வாயில் புறமாக ஒதுங்கி கையில் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலுடன் மிக்ஸ் செய்து சக பயணிகளுக்கு தெரியாமல் சப்பிக்கொண்டிருந்தோம். பின்பு சாப்பிட்டு, அவரவர் இருக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.

நடு இரவில் நல்ல நான் மான்களெல்லாம் துரத்த ஒரு அழகியப் பெண்ணை கனவில் துரத்திப் கையைப் பிடிக்கும் வேலையில் என்னை யாரோ உலுக்கி கனவைக் கலைத்தார்கள். பார்த்தல் நண்பன், "டேய் தண்ணி பாட்டில் எங்கேயடா" என்றான்.

"நீ தானேடா கடைசியாக எடுத்துக் கொண்டு வந்தாய்" என்றேன். அந்த பாட்டில் காலியாக இருந்தது, சரக்கடிக்க உபயோகித்து விட்டோம்.

"டேய் ரொம்ப தாகமாக இருக்குடா, தண்ணி வேண்டுமேடா" என்றான்.

எனக்கும் இப்போது தண்ணீர் வேண்டியிருந்தது. போட்ட சரக்கும், சாப்பிட்ட மசாலா சாப்பாடும், கோடை வெயிலில் வண்டியின் இரவின் சூடும், நல்ல தாகத்தை கிளப்பி விட்டிருந்தது. சகப் பயணிகள் யாவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

வண்டி அப்போது வேகம் குறையவே நண்பன் "டேய் வாடா எதோ ஸ்டேஷன் வருது, தண்ணீர் பிடித்துக்கொண்டு வரலாம் என்றான். அப்போது இருட்டில் வண்டி எதோ ஒரு ஸ்டேஷன் உள்ளே நுழைவது போலிருந்தது, வண்டி வேகம் மேலும் குறையவே "டேய் நீ இறங்கி பிடித்துவாடா, நான் கதவருகே நிற்கிறேன்” என்றான்.

நான் வண்டி நகர்ந்து கொண்டிருக்கும் போதே இறங்கி தண்ணீர் குழாயைத் தேடி சென்றேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் போல இருந்த ஒரு இடத்தில் ஒற்றை விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது, நான் அந்த திசையை நோக்கி ஓடினேன்.

நான் தண்ணீர் குழாயை அழுத்தி தண்ணீர் பிடிக்கும் பொழுது, திரும்பி வண்டியைப் பார்த்த பொழுது, வண்டி வேகம் பிடிக்க தொடங்கியது, நான் பாட்டிலை குழாயிலிருந்து பிடுங்கி திரும்பி வண்டியிடம் செல்லும் பொழுது கடைசி தொடர், என்னை அம்போ என்று விட்டு விட்டு வேகம் பிடித்தது. இருட்டில் நிலைமை புரிய பயம் தொற்றிகொண்டது. நான் அந்த ஒற்றை வெளிச்சம் உள்ள அறையை அடைந்த பொழுது உள்ளே யாரும் தென்படவில்லை. சுவற்றில் "கொண்டாபுரம்" என்று மஞ்சள் போர்டில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மற்றும் ஜாங்கிரி ஜாங்கிரியாக கருப்பு வண்ண மசியில் எழுதியிருந்தது. ஒரு அரை நிஜாரும், டி ஷர்டும் அணிந்துகொண்டு ரப்பர் செருப்புடன், ஒரு அத்வானக் காட்டில் தன்னந்தனியாக என் நிலைமை எனக்கே பரிதாபமாக இருந்தது. நேர்காணலுக்கு எப்படி போகபோகிறேன், மேலும் ஆளில்லா இந்த ஸ்டேஷனில் அடுத்த வண்டி வரும் வரை எப்படி கழிக்கப் போகிறேன் என்று இருந்தது. தொலைவில் பல வினோதமான சப்தங்கள் வேறு.

கம்பி வேலி வழியாக வெளியே நோக்கினேன், யாரும் தென்படவில்லை. ஒரு அரைமணி போயிருக்கும், எதோ சப்தம் கேட்கவே வேலிக்கு அப்பால், யாரோ ஒருவர் சைக்கிளில் வருவது தெரிந்தது. "ஐயா" என்று குரல் கொடுத்தேன். சைக்கில் நேராக என்னருகே வந்து ஒரு கிழவன் "ஏமி" என்றான். நான் எனக்கு தெரிந்த திருப்பதி தெலுங்கில் "வண்டி போயுந்தி" என்றேன். கிழவனுக்கு என் நிலைமை புரிந்திருக்க வேண்டும். என்னை வெளியே வரச்சொல்லி தன் சைக்கிளில் அமரச்செய்து வண்டியை ஓட்டினான். வீடு அங்கு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. தொலைவில் இரண்டு மலைகள்தான் தெரிந்தன. ஒரு அரை மைல் போனவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, வயலுக்கு நடுவே உள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.
வீட்டில் உள்ளே அழைத்து சென்று என்னை ஒரு சாளரம் ஓரமாக இருந்த திண்ணை போல இருந்த இடத்தில் படுக்கசொன்னான். அவன் கீழே தரையில் படுத்துக் கொண்டு என்னை எங்கிருந்து வருங்கிறேன் என்றெல்லாம் கேட்டுவிட்டு குறட்டை விட ஆரம்பித்தான். எனக்கு தூக்கம் வரவில்லை, அப்பப்போ வளையல் சத்தம் வேறு கேட்டுகொண்டிருந்தது, அது வீட்டிலிருந்து வருகிறதா, அல்ல வெளியே ஏதாவது மோகினிப் பிசாசா ஒன்று தெரியவில்லை. எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது. சிறிது நேரம் கழித்து முழிப்பு வந்த பொழுது, வெளிச்சம் சாளரத்தின் வழியே தெரிந்தது, நான் என் நிலைமை அறியுமுன், சாளரத்தின் ஊடே நான் கண்ட காட்சி, என்னை தன் நிலை மறக்க செய்தது.

என் கைக்கெட்டும் தூரத்தில், சாளரத்தின் மிக அருகில் ஒரு பெண்ணின் திறந்த மார்பு தெரிந்தது. எனக்கு கனவா நனவா ஒன்றும் புரியவில்லை. ஒரு அனிச்சையான செயலாக என் கை அந்த திசை நோக்கி நீண்டது, உடனே ஒரு குரல் "ஒத்து பாபு" என்றது, குரல். எனக்கு நிலைமை புரிந்து பயம் தொற்றிக்கொண்டது, நாமே இங்கு அடைக்கலமாக வந்து, எந்தக் காரியம் செய்ய இருந்தோம். இவள் யார் இந்த வீட்டில் உள்ளவளா, கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும், மவனே நமக்கு இன்று சமாதிதான் என்று எழுந்து விட்டேன். கிழவன் நான் எழுந்த அரவம் கேட்டு அவனும் எழுந்து விட்டான்.

பிறகு கிழவன் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொடுத்து முகம் கழுவச்சொல்லி, “கொண்டம்மா” என்று குரல் கொடுத்தான், கொண்டம்மா வந்த பொழுது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது, சந்தேகம் இல்லாமல் இவள் தான் சாளரத்தின் அருகே குளித்துக்கொண்டிருந்தது. நல்ல "ராஜமுந்திரி" தேகம், சினிமாவில் வரும் அழகிகளெல்லாம் இவள் முன்னால் "ஜூஜூபி".

என்னை பின்பு அவள் வீட்டின் உள்ளே அழைத்து சென்று நல்ல சூடாக டீ கொடுத்தாள். எனக்கு அவளை நிமிர்ந்து பார்க்க பயமாக இருந்தது. காலையில் நடந்ததை கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும்?. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்க வில்லை. கிழவன் என்னை தயாராக இருக்கச் சொன்னான். தெலுங்கிலேயே எதோ தொடர் வண்டி வரப்போவதாகவும், அதில் நான் போகலாம் என்றும் சொன்னான்.
நாங்கள் சைக்கிளில் கிளம்புமுன் கொண்டம்மா என்னிடம் ஒரு பொட்டலமாக எதையோக் கொடுத்தாள். நான் வழியில் சாப்பிடுவதற்கு போலிருக்கிறது.

கிழவன் வண்டியை கிளப்பும் பொழுது, என்னைப் பார்த்து கொண்டம்மா "போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்" என்று மெல்லியக் குரலில் சொன்னாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. பிறகு நான் வண்டி பிடித்து மும்பை போய் நண்பனுடன் நேர் கானல் சென்றதெல்லாம் பெரியதாகத் தெரியவில்லை. கொண்டாபுரத்தில் கண்ட தேவதை என் நினைவை விட்டு அகலவில்லை.

Saturday 11 July 2009

வயாகரா தாத்தா (18++)






கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.....................

புதிதாக கல்யாணமாகிய ஒரு கணவனும் மனைவியும் லேடி டாக்டரைப் பார்க்க வந்தனர்.

மனைவிக்கு இரண்டு முழங்கால் முட்டியிலும், சிவப்பாக கன்னிப் போய் வீங்கியிருந்தது.

அவளை செக் செய்த லேடி டாக்டர் “இது மாதிரி கேஸ் நான் இதுவரை பார்த்ததே இல்லை என்னம்மா ஆச்சு” என்று அந்த பெண்ணைக் கேட்டார்.

“போங்க டாக்டர் எனக்கு வெட்கமா இருக்கு” என்று சிணுங்கினாள்.
“உன் கணவன் வந்திருக்காரா, எங்கே அவனைக் கூப்பிடு” என்றாள் டாக்டர்.

கணவன் அறையின் உள்ளே வந்தான்.
டாக்டர் அவனிடம் “ஏம்பா எவளவு முறை இருக்கு, நீ படிச்சதே இல்லையா, இந்தப் புத்தகத்தைப் பார்” என்றாள்.

அதற்கு அவன் “எனக்குத் தெரியும் டாக்டர், இரண்டுபேரும் டிவி பார்கவேண்டும் என்றாள் இதைவிட வேறு வழி இருக்கா சொல்லுங்க” என்றான்.

(நன்றி: சுஜாதா)

Thursday 9 July 2009

யார் எழுதச் சொன்னது?










அன்றும் பக்கத்து வீட்டிலிருந்து பலத்த சத்தம் கேட்டுகொண்டிருந்தது. இது ஒன்றும் புதியதல்ல வழக்கமான ஒன்றுதான். மாமியாருக்கும் மருமகளுக்கும் பலத்த சண்டை. மருமகள் எதோ பலத்த குரலில் கத்தினாள். பிறகு ஒரு நிசப்தம். நான் வழக்கமாக வெராண்டாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். மனைவி எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் கிச்சேனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். பிறகு வெராண்டாவுக்கு வந்து என்னிடம் இன்னிக்கி கொஞ்சம் சண்டை அதிகம் தான். நான் "சரி விடு, நமக்கு என்ன வந்தது" என்று தூங்கப் போகத் தயாரானேன்.

"அம்மா அப்பா தூங்கியாச்சா" என்றேன், அவர்கள் அப்பவே தூங்கப் போய்விட்டார்கள், கோபியும், கார்த்தியும் என்றேன், கார்த்தி தூங்கப் போயிட்டான், கோபி எதோ புக் வேணும் என்று பிரெண்டு வீட்டிற்கு போயிருக்கான், வர நேரம் தான் என்றாள்.
கோபி வந்தவுடன் நாங்கள் தூங்க சென்றோம், மறுநாள் காலையில் எழுந்து சீக்கிரம் வேலைக்கு போகவேண்டும், அந்த "tender quotation" கொடுக்காவிட்டால் மேனேஜர் காச்சு காச்சு என்று காச்சு விடுவார்.

மறுநாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், மனைவி எனக்கு காபி எடுத்து வந்து கொண்டே "ஏங்க உங்களுக்கு தெரியுமா, பக்கத்து வீட்டு கிழவரும், கிழவியும் நேற்றைய இரவு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்களாம்". என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு ஒரே பையன், ஒரு மகள், எங்கோ அமெரிக்காவில் இருக்கிறாள், ஏழு எட்டு வருடத்திற்கு ஒரு முறைதான் வருகிறாள், அதுவும் காரில் வந்து அவர்களை ஒரு மணி பார்த்துவிட்டு திரும்ப சென்று விடுவாள். அவர்கள் அந்த தம்பியின் வீட்டில் தங்கி நான் பார்த்ததில்லை.

என் மனைவி "எங்கு போயிருப்பார்கள், முதியோர் இல்லத்துக்கு போயிருப்பார்களோ என்றாள்".

"முதியோர் இல்லம் என்ன சத்திரமா, அங்கேயும் சேர ஏதாவது நிபந்தனை இருக்கும், அந்தமாதிரி சண்டை போட்டு வருபவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டால் இன்றைக்கு எல்லா முதியோர் இல்லமும் ஹவுஸ் புல்லாக இருக்கும்" என்றேன்.
"சரி விடு, இன்னக்கி என்னவோ கடைத்தெருவுக்கு போகணும் என்று சொன்னயே வா போகலாம் என்றேன்".

நாங்கள் கடைத்தெருவில் இருக்கும் பொழுது என் மனைவி கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தது. நடைபாதை கடைகளில் நடுவே, கிழவரும் கிழவியும் கழுத்தில் ஒரு பெரிய சாமி படத்தை மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர், முன்னே ஒரு கிழிந்த வேட்டியில் சில்லறை நாணயங்கள் சிதறிக் கிடந்தன.

அதைக் கண்டவுடன், என் மனைவியின் கண்களில் நீர் முட்ட ஆரம்பித்தது, "என்னங்க அநியாயம் இது, வாங்க அவங்களை நம்ம வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகலாம்" என்றாள்.

"அதெல்லாம் வேண்டாம்மா நமக்கு எதற்கு வீண் வம்பு வா வீட்டிற்கு போகலாம்" என்றேன்.
"ஆமாம் நான் சொல்லுவதை என்னிக்கி நீங்க கேட்டிருக்கீர்கள், நம்ம வீட்டு அவுட் ஹவ்ஸ் வாடகைக்கு விட காலியாகத்தானே இருக்கிறது அதில் அவர்கள் இருந்து விட்டு போகட்டும்".

"இதோ பார் இந்த வம்பெல்லாம் நமக்கு எதற்கு, பேசாமல் வா" என்று நகர ஆரம்பித்தேன்.

"ஆமாம் உங்களுக்கு ஆபீஸில் ஜானுக்கும் பூனுக்கும் பத்தாயிரமும், இருபதாயிரமும் கொடுத்து ஏமாறத் தெரியும் இந்த மாதிரி வயதானவர்களுக்கு செய்வதற்கு யோசனை"

சரியான இடத்தில் என்னை அடித்துவிட்டாள்.
நாங்கள் பிறகு அவர்களை அணுகி, வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவதாக சொன்னவுடன், மிகவும் முரண்டு பிடித்து பின்பு தான் வந்தார்கள்.

மனைவி இரவு அவர்களை எங்களுடன் உண்ண வைத்தாள். கிழவி அழுதுகொண்டே சாப்பிட்டாள்.

பின்பு வழக்கமாக வெராண்டாவிற்கு பேப்பரை எடுத்துக்கொண்டு கிழவருடன் அமர்ந்து பேச்சுக் கொடுத்தேன். அவருக்கு இப்பொழுது எழுபத்தாறு வயதாகிறதாம், அந்தக் காலத்தில் ஏதோ ஒரு வெள்ளைக்காரக் கம்பனியில் செயலாராக இருந்து, ஓய்வு பெற்றவராம். பக்கத்து வீடும் அவர் ஓய்வூதியத்தில் வாங்கியதாம், பெண் கல்யாணம் முடிந்தவுடன் அதை மகன் பெயருக்கு மாற்றிவிட்டாராம்.

நேற்று சண்டையில் கிழவி மருமகளிடம் ஏன் என்னிடம் சண்டை போடுகிறாய், நான் தான் எல்லா வீட்டு வேலையும் இந்த தள்ளாத வயதில் செய்கிறேன் என்பதற்கு, நீ செய்யும் வேலைக்கு கிழவற்கும் சேர்த்து தானே தண்ட சோறு போடுகிறேன் என்று சொன்னாளாம்.

கிழவர் அதை மகனிடம் சொல்லி, "உன் பெண்டாட்டியை கேட்கக்கூடாதா என்றதற்கு, நீ உன் பெண்டாட்டியைக் கேள்" என்று சொன்னானாம்.
அடுத்த நாள் நான் வேலைக்கு போய் வீட்டில் நுழையுமுன் பக்கத்து வீட்டுக்காரன் என்னை பிடித்துக் கொண்டான்.

"ஏன் சார் உங்களுக்கு ஏன் வம்பு, அவர்களை எதற்கு உங்கள் வீட்டில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டான்"

"ஏம்பா நீ செய்வது உனக்கே நியாயமாக இருக்கிறதா, இந்த தள்ளாத வயதில் அவர்கள் எங்கு போவார்கள் சொல்லு" என்றேன்.

"எங்கேயாவது போகட்டும் சார், இங்கே அருகிலேயே இருந்தால் என் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள் மற்றவர்கள் தான் என்ன நினைப்பார்கள்" ன்றான்.

"அவர்கள் நினைப்பது இருக்கட்டும், அவர்களை சண்டையோ சச்சரவோ நீதானே பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று மேலும் நான் அந்தக் கேள்வியை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன்.

"ஏம்பா இந்த வீடுக்கூட அப்பா உன் பெயருக்கு கொடுத்திருக்கிறார் அந்த நன்றிக்காவது அவர்களை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டாமா?"

"யார் எழுதச் சொன்னது?" என்றான்.

அடப் பாவி!!!!!!!

Wednesday 8 July 2009

ஹைக்கூ (இரண்டாம் பாகம்)


துபாய்

கையில் கொல்லர் கரண்டி,
கண்கள் விண்ணைத்தாண்டி,
விடுமுறை விடியல்.

வெள்ளம்

ஆற்றில் நடுவே, தத்தளிக்கும் சிறுமி,
கரையில் ஆனந்தக் குளியல்,
தாய்.

நூறாவது நாள்

நூறாவது நேர்காணல்,
கோப்பில் அழைப்பிதழ்,
தலைவர் பட நூறாவதுநாள்.
.
தந்தையர் தினம்

தந்தையர்தின வாழ்த்து,
கிழவன் கோலாகலக் கொண்டாட்டத்தில்,
முதியோர் இல்லம்.

Monday 6 July 2009

மோகனின் சபலம்


மோகனுக்கு அன்று வேலை முன்னதாகவே முடிந்து விட்டது. உடனே ஊருக்கு திரும்பவும் முடியாது. மறுநாள் மாலைதான் விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தாள், ரோசி அவனுடைய காரியதர்சினி. ஹெட் ஆபிசுக்கு தொடர்புகொண்டு அவளை டிக்கெட்டை அன்று மாலையே மாற்ற முடியுமா என்று கேட்டான். அன்று எல்லா விமானமும் "ஓவர் புக்டாம்". மணி இரண்டுதான் ஆகியிருந்தது. மறுநாள் மாலை வரை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓட்டல் அறையில் எவ்வளவு நேரம் தான் டிவி பார்த்துக்கொண்டிருப்பது. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு எப்படியோ நான்கு மணிவரை பொழுதைக் கழித்துவிட்டான்.

பிறகு வெளியே புறப்பட ஆயத்தமானான். எங்கே போவது என்று தெரியவில்லை. ஓட்டலை விட்டு வெளியே வந்து காலாற நடந்தான். ஒருகடையில் நுழைந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கினான். மறுபடியும் அறைக்கு வந்து அவற்றை பெட்டியில் வைத்துப் பூட்டினான். மணி ஆறாகியிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஓட்டலின் "ரூப் கார்டனுக்கு" சென்று கடைசியில் ஓரமாக இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டான். வைட்டரிடம் ஒரு பீர் ஆர்டர் செய்துகொண்டு, மெதுவாக சப்ப ஆரம்பித்தான்.

அப்பொழுதுதான் அந்த இடத்தில் மெதுவாக மேசைகள் நிரம்ப ஆரம்பித்தன. கையில் இருந்த " Ipod" ஐ ஆன் செய்து சும்மா தட்டிகொண்டிருந்தான். அப்போது "எக்ஸ்க்யுஸ் மீ" என்ற குரல் கேட்டு குரல் கொடுத்தவளை பார்த்தான். ஒரு நவ நாகரீக நங்கை இன்னும் மூன்று நங்கைகளுடன் நின்றுகொண்டிருந்தாள். "Do you mind if we sit here" என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டாள். அவர்களை அமர்ந்துகொள்ளச் சொன்னான். கேட்டவள் மோகனின் அருகிலும் மற்றவர்கள் எதிர்புறமும், பக்கவாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.

அருகில் அமர்ந்தவள் மெதுவாக மோகனிடம் பேச ஆரம்பித்தாள். எதிரில் இருப்பவர்களையும் அறிமுகப் படுத்தினாள். பிறகு மோகனிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டாள். மோகன் வேண்டாம் என்றாலும் அவனுக்காக இன்னும் ஒரு பீர் ஆர்டர் செய்து, மற்ற எல்லோருக்கும் "gin with lime cordial" ஆர்டர் செய்தாள். பின்பு நால்வரும் சரளமாக மோகனுடன் பேச ஆரம்பித்தனர். அருகில் அமர்ந்தவள் அகஸ்மாத்தாக படுவது போல் மோகனின் தொடை மேல் கை வைத்தாள். மோகனின் ரத்த நாளங்கள் முறுக்கிக் கொண்டன.

பின்பு டின்னெர் ஆர்டர் செய்தனர். ட்ரிங்க்ஸ் பில் வந்த பொழுது ஒருவள் பிடுங்கி குடுப்பது போல் பாவனை செய்ய, மோகனின் தன்மானம் இடம் கொடுக்காமல் பில் கொடுத்தான். (கம்பெனி கணக்கில் சேர்த்துக் கொள்ளளலாம்) . அருகில் அமர்ந்தவள் மோகனை தடவிக் கொண்டே மிக அருகாமையில் வந்து " Do you wanna jump" என்றாள். மோகனின் நரம்புகள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தன. நீங்கள் இந்த ஓட்டலில் தானே தங்கி இருக்கிறீர்கள், வாங்க ரூமுக்கு போய் வரலாம் என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.


மோகனின் தயக்கத்தை சபலம் வெல்ல ஆரம்பித்தது. அவளை கூட்டிக் கொண்டு ரூமுக்கு சென்றான். அறை கதவை மூடியவுடன், அவள் தன் உடைகளை தளர்த்தி மோகனை இறுக அனைத்துக் கொண்டாள். உடன் அவள் செல் போன் அலற ஆரம்பித்தது. அவள் அதை எடுத்து எதோ சொல்லிவிட்டு வாங்க நாம பிறகு வரலாம், "restaurant" போய் விடுவோம் என்றாள். அவர்கள் போகும் வழியில் “நீங்க போங்க நான் டாய்லெட் சென்று வருகிறேன்” என்று கழண்டு கொண்டாள். மோகன் திரும்ப "restaurant" வந்த பொழுது, மற்ற நங்கைகளை காணவில்லை. அவன் டேபிள் காலியாக இருந்தது. அப்பொழுது தான் அவனுக்கு அவ்விடத்தில் தன்னுடைய "ipod" அங்கே விட்டு சென்றதையும், அது காணாமல் போனதும் புரிய ஆரம்பித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவனிடம் வந்து “என்ன சார் எல்லாம் போயிடுச்சா. நீங்க ரொம்ப லக்கி. இந்த குரூப் இது இங்க வழக்கமா பண்ற வியாபாரம் தான். உங்க கதையிலே எங்கேயோ தப்பு நடந்திருக்கு, நீங்க ரூமுக்கு போனவுடன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்து கதவை தட்டுவான். நீங்க திறந்தவுடன் உங்களை அர்ரஸ்ட் செய்வதாக சொல்லி செமையாக கறந்துவிடுவான். பின்பு அவளையும் அர்ரஸ்ட் செய்வது போல் சொல்லி கூட்டி செல்வான். இந்த வித்தையை இவர்கள் கூட்டாகத்தான் செய்கிறார்கள்”.
மோகனுக்கு தன் அதிர்ஷ்டம் கைகொடுத்ததை நம்பி மகிழ்ச்சியானாலும், தன் "Ipod" பணமும் போனதில் மிக்க வருத்தம், மேலும் தான் ஏமாற்றப்பட்டதில் ஒரு குற்ற உணர்ச்சி.

அடுத்தமுறை இந்த மாதிரி நடந்தால் தான் கொண்டு வந்தப் பொருள்களை நியாபகமாக ரூமுக்கு எடுத்து செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

Wednesday 1 July 2009

கவுஜ -கண்மனிக்கு கடிதம்


கூத்தியா கொடுத்த குலக்கொழுந்தே,
நாம கூடி அடிச்ச கும்மியிலே
கூறு கெட்டு போனதடி,
நம் தமிழின நாடகம்.

அச்சம் கொள்ளாதே,
உடன் பிறப்புகள் உன்மத்தம் கொண்டு,
உதிரம் கொட்டி, உண்டி குலுக்குவார்கள்,
நாம ஊடு கட்டி அடிக்கலாம் கொள்ளை....
அவாளெல்லாம் ஆவேசம் கொண்டு,
பத்திரிகையிலே பாடும் பல்லவியை,
நாம் துச்சமென மிதிப்போம்.

அஞ்சா குஞ்சன் உண்டு நம் படையில்,
தொளபதி தொண்டவராயனும் உண்டு,
குடி உயர கோமகனும் உண்டு,
மேலுறார், பாற்காட்டார், வேராசிரியர்,
மற்றும் சுட்டெரிக்கும் சூரியனை,
டாஸ்மாக்கில் தண்ணியடித்து,
பிரியாணி தின்று, தூக்கி நிறுத்தும்,
தொண்டர் படையுண்டு.

கூத்தியா கொடுத்த குலகொழுந்தே,
அஞ்சாதே கோமளமே,
பதவிச்சுமை காத்திருக்க,
குடும்பத்திலே குழப்பம் வேண்டாம்,

வீழ்வது தமிழினமாயிருப்பிலும்,
வாழ்வது நம் குடியாயிருக்கும்.