Pages

Thursday 27 August 2009

விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை.


காங்கிரஸில் இணையும் இளய தலைவலியின் தொண்டர்களுக்கு அறிவுரை. உங்கள் தலைவர் உங்கள் பேட்டைக்கு வரும்பொழுது சுவரொட்டி, தட்டி வைப்பதற்கு இலவசமாக வாசகங்கள் தரப்படும்.

சொல்லி “கில்லி”யில் ஜல்லியடித்த பல்லியே வருக.
“அழுகிய தலைவலி மகனே” வருக.
குப்புறப் பறந்த “குருவி”யே வருக.
பல்லுதெரித்த “வில்(லு)லே வருக.
கோமகன் சந்திரசேகர் பெற்றெடுத்த “போக்கிரி”யே வருக.
டக்கடிக்கும் டகல்பாஜி “சச்சி(ன்)னே வருக.
வெத்து வேட்டு “வேட்டைக்கார(ன்)னே வருக.
ஐம்பது படம் நடித்தும் நடிக்காத இளைய தலைவலியே வருக.
சைலென்ஸ் புகழ் சாக்ரட்டீசே வருக.
குத்துப் பாட்டுத் தலைவா வருக.
தென்னகத்தின் ஒபாமாவே வருக.
தெலுங்கு ரீமேக் தென்னக சிரஞ்சீவியே வருக
வாயைத் திறக்காமல் வசனம் பேசும் வலிப்பு வாயனே வருக.
தமிழகத்தின் அடுத்த அறுநூறாவது சூப்பர் ஸ்டாரே வருக.
கோஷ்டிபூசலில் குத்தாட்டம் ஆடும், குணமானே வருக.
தென்னகத்தின் நேருவே வருக
தென்னகத்தின் ராஜீவே வருக
தென்னகத்தின் பிரியங்காவே வருக.
விஜயகாந்தியே வருக.

காங்கிரஸில் இணையும் இளையத் தலைவலியே
வாழ்த்த வார்த்தைகள் இல்லை,
வசை பாடுகிறோம்"

Wednesday 26 August 2009

கடவுச்சொல் (பாஸ்வோர்ட்)


பழையவள் பாதியில் போனதால்,
பாஸ்வோர்ட் ஆகிப் போனாள்
புதியவள் புதிராய் இருக்கும் நேரம்,
புளகாங்கிதம் அடைகிறாய்,
புதியவளும் புண்ணாக்கி,
பர்சை மண்ணாக்கி,
பரிதவிக்க விட்டுப் போவாள்,
ப்லோக் தொடங்க,
புதிய பாஸ்வோர்ட் கிடைக்கும்.
பதிவுலகம் உன் பதிவுக்காகக்
காத்திருக்கிறது.

Tuesday 25 August 2009

இந்திய நரகம்


நம்மாளு ஒருத்தன் அபிட் ஆனவுடன், நரகத்துக்கு அனுப்பப்பட்டார். சொர்கத்திற்கு எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. சைடிலே கைடிலே வெட்டி போக முடியுமான்னு பாத்துகிறார், நடக்கலே.

நரகத்திற்கு போனவுடன்தான் தெரிஞ்சிகினார், அமெரிக்காகாரன், ரஷ்யாகாரன், இங்கிலாந்துக்காரன், இந்தியாகாரன் நரகம்னு தனி தனியா கீது.

நம்மாளு கீயே இருந்தபோது கொருக்குப்பேட்டையே தாண்டினது இல்லே, அதாலே நரகத்திலேயாவது இங்கிலாந்து நரகம் போலான்னு அங்கே போய் இந்த நரகத்திலே இன்னா செய்வாங்கன்னு கேட்டுகிறார். அங்கேகிற ஆபிசர் சொல்லிக்கிறான், “மொதல்லே ஒரு அரை மணி நேரம், எண்ணெய் கொப்பரையிலே போடுவோம், அப்பாலே தொ அங்கனே முள்படுக்கை கீது அதிலே ஒரு அரைமணிநேரம் படுக்கோணும், அப்பாலே ஒரு ஆள் வந்து ஒன்னயே நாள் முழுக்க சைக்கிள் சைன்லே அடிச்சிகினே இருப்பான். அவ்வளவுதான்பா”.

நம்ம கொருக்குபெட்டை மச்சான் இது வேலைக்கு ஆவாது அப்படின்னு அமெரிக்காகாரன் நரகத்திலே கேட்டுகிறார். அங்கேயும் அத்தையேதான் சொல்லிகிறாங்கோ. அப்பாலே ரஷ்யாகாரன் நரகம் போய்கிறார், அதேய்தான்பா, அப்படின்னு இந்திய நரகம் போய்கிறார். அங்கே போனா அல்லா மவனுங்களும் க்யுலே நின்னுகின்னு இருக்கானுங்கோ. நம்ம கொருக்குபெட்டை மச்சானுக்கு, கேரோவா போய்டுச்சு. இங்கே இன்னா "பெசல்லுன்னு" கேட்டுகிறார்.

இங்கேயும் அதே போலத்தான்னு சொல்லிகிரானுங்கோ. பின்னே ஏம்பா இங்கே இவ்வளவு கூட்டம்னு நம்மாளு க்யுலே நின்னுகிரே இன்னொரு ஆளாண்டே கேட்டுகிறார்.

அந்தாளு சொல்லிக்கிறான், "அது ஒன்னும் இல்லேபா இந்தியா நரகத்திலே, எண்ணெய் ஸ்டாக் இல்லையாம் நைனா, அப்பாலே அந்த முள்ளு படுக்கையிலேகீறே ஆணியெல்லாம் மவனே எவனோ லவுட்டிகின்னுகிறான். சைக்கிள் சைன்லே அடிக்கிறே ஆபிசரு அரசாங்க ஆளாம், தெனத்துக்கும் வந்து ரேஜிச்டர்லே ஸைன் பண்ணிகினு வூட்டுக்கு போயடுவாராம்பா".

அப்போ நம்மாளு கேட்டுகிறான், மச்சி இந்த க்யுவிலே நானும் பூந்துக்கலாமன்னு.

Monday 24 August 2009

பதிவுலக ஜாதிகள் பலவிதம்-கவிதை


பதிவுலகில் பல ஜாதி,
மொக்கைகள் என்றோர் ஜாதி
மோட்டுவளைக் கவிதைகள் ஓர் ஜாதி
புரியும் கவிதைகள் ஓர் ஜாதி
புரியாக் கவுஜகள் ஓர் ஜாதி
ஆத்திகம் பாடும் ஓர் ஜாதி
நாத்திகம் நாடும் ஓர் ஜாதி
கதைகள் எழுதும் ஓர் ஜாதி
கதை விடும் ஓர் ஜாதி
கட் பேஸ்ட் என்றோர் ஜாதி
கண்மூடி காப்பி என்றோர் ஜாதி
பிரபலங்கள் என்றோர் ஜாதி
பிரபலமாகத் துடிக்கும் ஓர் ஜாதி
விமர்சனம் எழுதும் ஓர் ஜாதி
விடிய விடிய எழுதும் ஓர் ஜாதி
எத்துனை இருந்தும் இங்கு ஜாதி
பதிவுலகம் இயங்கும் என்பது நியதி.

Saturday 22 August 2009

அண்ணாமலை


அண்ணாமலை பால்ய நண்பன். தெருவில் உள்ள எங்கள் டீமுக்கு பெரும்பாலும் விளையாட வரமாட்டான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பன். கோடை விடுமுறையில் வெய்யில் அதிகமாகி வெளியே விளையாட முடியா விட்டால் அண்ணாமலை வீடுதான் அடைக்கலம். காலை பத்து மணிக்கு தொடங்கும் சீட்டுக்கச்சேரி மாலை எங்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கும் வரை நடக்கும்.

அண்ணாமலை வீட்டிற்கு கடைசி பிள்ளை. வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன் அக்காள் எல்லோருக்கும் அவன் குழந்தை. மனசிலும் குழந்தை தான். அவன் வீட்டின் பின்புறம் ஒரு பெரிய தோட்டம் உண்டு. அதில் சில மாமரங்களும், தென்னை மரம், கொய்யா மரம் எல்லாம் இருக்கும். எப்பொழுதாவது அவனிடம் மாங்காய், கொய்யா என்று கேட்டால் சடுதியில் மரத்தின் மேல் ஏறி எங்களுக்கு பறித்துக் கொடுப்பான்.

இதற்கு நேர் மாறு, அவன் எதிர் வீட்டில் இருந்த ஜெயராமன். அவனுக்கும் அண்ணாமலைக்கும் ஒத்து வராது. எங்கள் எல்லோரிடமும் அண்ணாமலையின் அக்காளைப் பற்றியும், அம்மாவைப்பற்றியும் தவறுதலாக சொல்லி என்னுடைய நட்பை கெடுக்க முயற்சி செய்தான். அதோடு இல்லாமல் எங்களுக்கு அண்ணாமலையின் அக்கா அம்மாவைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

ஒரு நாள் காலை எப்பொழுதும் போல் நான் பால் வாங்க சென்றபொழுது, அண்ணாமலை எதிரே சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தான். நான் எப்பொழுதும் போல் அவனிடம் பேச்சுக் கொடுக்க அவன் வண்டியை நிறுத்தி என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, அவசரமாக எங்கேயோ சென்றான். பாலை வாங்கி திரும்ப வரும்பொழுது அண்ணாமலையின் வீட்டில் கூட்டம் இருப்பதைக் கண்டு அங்கு சென்றேன். அண்ணாமலையின் அம்மா கிணற்றில் இரவு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அண்ணாமலை காலையில் என்னிடம் பேசிய பொழுது தன் துக்கத்தை துளியும் காட்டிக் கொள்ளாதது எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்.

அவன் அஞ்சா நெஞ்சன். எந்த வீர விளையாட்டும் அவனுக்கு அத்துப்படி. எங்களுக்கு கம்புச்சண்டை, கராத்தே எல்லாம் அனாவசியமாக அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்துக் கற்றுக் கொடுத்தான். இன்று ஓரளவுக்கு என்னைப் போன்றவனுக்கு துணிவு இருக்கிறதென்றால் அதற்கெல்லாம் அண்ணாமலைதான் காரணம்.

அந்த முறை நான் விடுமுறைக்கு ஈரோட்டில் எனது அத்தை வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ள சில பையன்களுடன் ரயில்வே பாதை ஓரமாக உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த ரயிலிலிருந்து என்னை யாரோ கூப்பிட்டார்கள். பார்த்தால் அண்ணாமலை. கோடை விடுமுறைக்கு பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தான். என்னைப் பள்ளித் தோழர்களுக்கு ஆனந்தமாக அறிமுகம் செய்து வைத்தான். அண்ணாமலையின் ஆனந்த சிரிப்புக்கு ஆயிரம் கோடி கொடுக்கலாம்.

அன்றுதான் நான் அண்ணாமலையை கடைசியாகப் பார்த்தது. விடுமுறை முடிந்து திரும்பி ஊருக்கு வந்த பொழுது, எனக்கு அந்த இடி காத்திருந்தது.

அண்ணாமலை சாலக்குடியில் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, பாறைகளின் நடுவே விழுந்து இறந்து விட்டானாம்.

உலகில் எத்தனையோ பேர்கள் இறக்கிறார்கள், அண்ணாமலையின் மரணம் இயற்கையின் அகோரம்.

Friday 21 August 2009

சந்திரபாபுவின் வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.....மெட்டில் படிக்கவும்.-கவுஜ


பிரபலமான பதிவரெல்லாம்
புத்திசாலியில்லை,
புத்தியுள்ள பதிவரெல்லாம்
வெற்றி காண்பதில்லை.
வெற்றி காண்பதில்லை.

நல்லப் பதிவுக்கெல்லாம்
ஒட்டு கிடைப்பதில்லை
வோட்டுப் பெற்ற பதிவு எல்லாம்
நல்லப் பதிவும் இல்லை.

ஒட்டு போடும் மனிதரெல்லாம்
பின்னூட்டம் இடுவதில்லை
பின்னூட்டம் இடும் மனிதரெல்லாம்
ஓட்டுப் போடுவதில்லை.

பிரபலமானப் பதிவுகளில்
காண்பதெல்லாம் மொக்கை
பிரபலமாகாப் பதிவுகளில்
இருப்பதெல்லாம் சக்கை.
நல்லப் பதிவு,மொக்கைப் பதிவு
எந்தப் பதிவு ஆனாலும்.,
படிச்சிக்கிட்டு ஆகவேண்டும்
நாமெல்லாம் மட்டை...............

பிரபலமான பதிவரெல்லாம்
புத்திசாலியில்லை,
புத்தியுள்ள பதிவரெல்லாம்
வெற்றி காண்பதில்லை.
வெற்றி காண்பதில்லை.


இன்றைக்கு ஒரு பதிவரின் "ஒட்டுவிழவில்லை" என்ற புலம்பலின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு மொக்கை பாட்டு. சும்மா நகைச்சுவைக்குத் தான். முடிஞ்சா சிரிச்சுட்டு ஓட்டப் போடுங்க.

டாஸ்மாக் நண்பர்களிடம் வேண்டுவன.


கலப்படம் இல்லாத சரக்கு வேண்டும்,
கலந்தடிக்க சோடா வேண்டும்,
தொட்டுக்கொள்ள ஊறுகா வேண்டும்,
நண்பர்கள் சரக்கு வாங்க வேண்டும்,
ஓசியில் குடிப்பவன் ஒதுங்க வேண்டும்,
ஆப் போயில் போடுபவன்
அருகில் இல்லாமல்,அறைக்கு வெளியே
அலம்ப வேண்டும்.

மூணு ரவுண்டு முடியவேண்டும்,
முடியாதவன் ஒதுங்க வேண்டும்,
முடிந்தவர்கள் தொடர வேண்டும்
நாலாம் ரௌண்டில் நடுங்குபவன்
நாக்கைப் பிடுங்கி சாக வேண்டும்.

அடுத்த ரவுண்டு ஆரம்பிக்குமுன்
அருகில் உள்ள என்னை,
அலுங்காமல் நலுங்காமல்,
அப்பன் ஆயியும் அறியாமல்,
அடுத்தத் தெருவில்
அமைதியாக விடவேண்டும்.
அம்சமான பிகர் அருகே வந்தால்
அப்படியே என்னை விடாமால்,
அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதி கூடத்தில் அடைக்கவேண்டும்.
நர்ஸ் பிகர் அருகே வந்தால்
நாசியா(nausea) என்று சொல்ல வேண்டும்.
இவையெல்லாம் நண்பர்கள் அறியவேண்டும்,
இல்லையென்றால் நான் வரமாட்டேன்
என்ற செய்தி தெரிய வேண்டும்.

Sunday 9 August 2009

அம்பேல் ஆகிறேன் (தற்காலிகமாக), பத்திரமா பாத்துக்கோங்க.


பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, வோட்டுப் போடுபவர்களே, பின்னூட்டம் இடுபவர்களே,

நான் ஒரு சிறிய விடுமுறையில் தாய் நாடு செல்வதால், எனது மொக்கை எழுத்துக் களப்பணியில் இருந்து சிறிது நாட்கள் அம்பேல் ஆகிறேன். (அப்பா தொலஞ்சாண்டா)

எனதுத் தொண்டர்கள் யாவரும் விமான நிலையத்திற்கு பேரெழுச்சியுடன் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். (நடு ராத்திரி போய் இறங்கினா தங்க மணியே வரமாட்டா)

தயவு செய்து எனது தொண்டர்கள், வழி நெடுக கட் அவுட், வைப்பதை தவிர்க்கவும்.
"குன்சாப் பதிவு கும்மாச்சியே வருக, மொக்கைப் பதிவுலகத் திலகம், பதிவுலகப் பெருந்தகையே வருக, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" போன்ற கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தாரை, தப்பட்டை, மேள தளங்கள், நூறு கார்கள், கொடி, முதலியவைகள் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் மிகவும் எளிமையானவன். ஆதலால் விமான நிலையத்திலிருந்து, மீன்பாடி வண்டியோ, கட்டை வண்டியோ பிடித்து, இல்லை பொடி நடையாகவோ வீடு சேர்கிறேன்.

பத்திரமா பாத்துக்கோங்க...
போனமுறை விடுமுறையில் சென்ற பொழுது, கூகிள் ஆண்டவர் “மொக்கைப் பதிவே எரிந்து போ” என்று இட்ட சாபத்தில் எனது ப்லோக் எரிந்துவிட்டது.
ஆதலால் இந்தமுறை எதிர் கட்சியின் சதிக்கு இரையாகாமல், தொண்டர்களே என் ப்லோகை "பத்திரமா பாத்துக்கோங்க".


சத்தியமா உக்காந்து யோசிச்துங்கன்னா.

Saturday 8 August 2009

காற்று, நடனமணி, கவிதை கிறுக்கல்கள்


காற்று

விரையும் வண்டியில்,
நுழையும் காற்றே,
அருகில் உள்ளவளின் ஆடையை
அனுமதியின்றி கலைக்காதே,
என் புத்தகத்தின் இதழை,
வீணாகத் திருப்பாதே ,
அலையும் என் கண்களில்
தெரியும் காட்சியினால்
அவள் பார்வை வெப்பமாகிறது,
என் மனது குப்பை ஆகிறது.



நடனமணி.

என் சம்மதமின்றி
என் அழகு,
ஏராளமான கண்களுக்கு,
எதிர் விருந்தாகிறது.
எனக்கென்று ஓர் இதயம்,
எனக்கென்றோர் ஆசை,
என்னிடம் உள்ளக் கவிதை,
எவரும் கேட்பதில்லை,
என்னைப் பெற்றவள்,
எடுத்த முடிவு,
எதிர்க்கத் துணிவில்லை,
ஏழெட்டு நடன மங்கையரில்,
எங்கோ ஓர் மூலையில்,
எதற்கு இந்த இடுப்பை
எக்கும் ஆட்டம்?

Friday 7 August 2009

விஜயகாந்த் நிதானத்தில் உள்ளாரா?.


விஜயகாந்த், தே.தி.மு.க தலைவர் சமீபத்தில் பேசும் பேச்சுக்களைப் பார்த்தால் அவர் நிதானத்தில் தான் உள்ளாரா? என்று சந்தேகமாக இருக்கிறது.

அவருடைய படங்களில் வரும் வசனங்களில் எல்லா புள்ளி விவரங்களும் கொடுத்து, ஏறக்குறைய ஒரு முடி சூடா "புள்ளிராஜாவாகவே" இருந்தார்.

ஆனால் நேற்று கலைஞர் கொடுத்த விளக்கங்களுக்கு புள்ளி விவரங்களுடன் சரியான பதில் கொடுக்காமல் "உளறுகிறார்" என்கிறார்.

இது மிக அநாகரீகமான ஒரு செயல்.

இவரைப்பற்றி ஏற்கனவே ஒரு புகார் எல்லோருக்கும் தெரிந்ததே, சட்ட சபைக்கு மப்போடு வருகிறார் என்று.

இடைத் தேர்தல் என்ற உடன் அவரு குஷி ஆகிட்டார் போல.

நல்ல மப்போடுதான் மீட்டிங் போகிறாப் போலத் தெரியுது.

மக்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இவர்களெல்லாம் திரைப் படத்துறையில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை தப்பும் தவறுமாகப் பேசி, ரெண்டு பைட்டு, ஒரு குத்துப் பாடு, ஒரு வடக்கத்தியாளின் தொப்புள், பின்பு ஐட்டம் என்று காண்பித்து, ஒரு ஜொள்ளுக் கூட்டத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.

அப்புறம் என்ன, மைக் கையில், சரக்கு உள்ளே, உளர வேண்டியதுதான்.

சமீபத்திலே இதே போல இன்னொருத்தர் கிளம்பியிருக்கிறார். வாயைத் திறக்காமலே வசனம் பேசுவார். (என்ன ஒரு தகுதி).

வாழ்க தமிழகம்.(வாள்க தமிலகம்)

கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்....................


கணேஷ் என் பால்ய சிநேகிதன். அவன் எனக்கு பரிச்சியமாகி பின்பு நண்பனானது ஒரு கதை.
நாங்கள் இருந்த அந்தத் தெருவில், உள்ள நாற்பது வீடுகளும் எங்களுக்கு அத்துப்படி. தெருவில் எங்களுடைய கிரிக்கெட் டீம் உண்டு. எங்களுடைய விளையாட்டுக்கள் சீசனுக்கு சீசன் மாறும். மழைக்காலங்களில் பம்பரம், கோலிகுண்டு, குச்சிப்லே என்று நாங்கள் விளையாடாத விளையாட்டுக்களே இல்லை என்று சொல்லலாம். பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் "பேட்மிண்டனும்" சேர்த்துகொள்ளும். தெருவில் வீடுகட்ட இன்னும் ஆரம்பிக்காத ஏதோ ஒரு புண்ணியவானின் இரண்டு கிரவுன்ட் நிலத்தில் நெடிய நெட் கட்டி பூபந்து பேட்மின்டன் ஆடுவோம்.

ஒரு கோடை விடுமுறையில் ஒரு புதியவன் (கணேஷ்) வந்து சேர்ந்தான். முதலில் அவன் எங்கள் விளையாட்டுக்களை வேடிக்கைப் பார்க்க வந்தான். பின்னர் சிறிது சிறிதாக மொட்டைக் குமாருடன் பேச ஆரம்பித்து, டீமில் சேர விண்ணப்பித்தான். விண்ணப்பம் அணித்தலைவனான என்னிடம் வந்தது. நமக்கு என்றைக்குமே கொஞ்சம் பந்தா அதிகம். புதியவன் நல்ல ஆஜானு பாகு. நான் அவன் முன் சத்யராஜ் முன் நிற்கும் குள்ள மணிபோல இருந்தேன். இருந்தாலும் அவனை இன்று போய் நாளை வா என்று அனுப்பிவிட்டேன்.
பிறகு அவனை அடுத்த நாள் வந்த பொழுது நேர்காணல் எல்லாம் வைத்து, பின்னர் மாதச் சந்தா ஒழுங்காகக் கொடுப்பாயா என்றெல்லாம் கேட்டு டீமில் சேர்த்துக்கொண்டேன். ஆள் நல்லத் திறமை சாலி. எந்த விளையாட்டிலும் ஒரு லாவகம் இருந்தது. போகப் போக எனக்கு நல்ல நண்பன் ஆகிவிட்டான்.

எங்கள் டீமில் யாரும் எங்கள் தெருப் பெண்களிடம் கடலைப் போடமாட்டோம். அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு, ஒரு பிகரும் நன்றாக இருக்காது, மேலும் சுமாரான பிகரெல்லாம் ரொம்ப ஸீன் உடும். ஆதலால் எங்கள் எல்லோருக்கும் பக்கத்து தெருப் பெண்கள் தான் எங்கள் "கடலை" தேவதைகள். தண்ணி லாரி வந்தால் பக்கத்துக்கு தெரு தண்ணி தொட்டிக்கு சென்று, லாரிகாரனுக்கு உதவி செய்வது போல் கடலை போடுவோம். சுமாரான பிகருக்கு ஒருகுடம் என்றால், நல்ல பிகருக்கு கமுக்கமா நாலு குடம் பிடிக்க வுடுவோம். இதை எதிர்த்து யாரவது “ஆண்டி” குரல் கொடுத்தா பாதித் தண்ணியக் கீழே வுட்டுடுவோம்.

நிற்க நான் சொல்லவந்தது நாங்கள் போட்டக் கடலை பற்றி அல்ல.
கணேஷும் நானும் நல்ல நண்பர்கள் ஆகி, கல்லூரிவரை ஒன்றாக இருந்து பின்ன வேலை நிமித்தம் நான் வெளிநாடு வந்தக் காரணத்தால் பிரிந்துவிட்டோம். மேலும் நான் வெளிநாடு வந்த பிறகு என் பெற்றோர்கள் வாடகை வீட்டிலிருந்து நான் வாங்கிய புதிய வீட்டிற்கு வந்து விட்டார்கள். ஆதலால் எங்களுக்கு பழைய இடத்திலிருந்த நண்பர்களிடம் இருந்த தொடர்பு இயல்பாகவே குறைய ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஒரு பத்துவருடம் கழித்து நான் கணேஷை மறுபடிப் பார்த்தேன். அவனும் கல்யாணமாகி குழந்தைக் குட்டிகளுடன் அதே தெருவில் வசிப்பதாகச் சொன்னான். தற்போது அவன் நடத்தி வந்த அச்சுக் கூடத்தில் நஷ்டம் வந்து விட்டதால் மிகவும் மனது நொந்துப் போயிருப்பதாகச் சொன்னான்.

நான் அவனுக்கு நஷ்டத்தை சரி கட்ட பணஉதவி செய்யப் போவதாக தங்கமணியிடம் சொன்ன பொழுது, "கேட்காமல் யாருக்கும் உதவி செய்வது நல்லதல்ல நான் பணம் கொடுப்பதைப் பற்றி சொல்லவில்லை, நட்பு முறியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றாள்.

நான் அவனிடம் பணத்தைக் கொடுத்து "உன்னால் எப்பொழுது திரும்பக் கொடுக்க முடியுமோ கொடு, எனக்கு அவசரமில்லை" என்று சொல்லிவிட்டு வந்தேன்.
பிறகு நான் அடுத்த முறை போன பொழுது என்னால் அவனை சந்திக்க முடியவில்லை. தொலை பேசியில் அழைத்தேன், அவன் மகள் அப்பா ஊரில் இல்லை வந்தவுடன் நான் அழைத்ததாக சொல்கிறேன் என்று சொன்னாள்.

அடுத்த வந்த ஒரு மூன்று நான்கு வருடங்களிலும் என்னால் அவனை சந்திக்க முடியவில்லை.

இந்த முறை அவனை கட்டாயம் பார்த்து அவனுடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று சென்றேன்.

அவன் வீட்டை நெருங்கும் பொழுது அவன் குழந்தைகள் அவனுடன் உரையாடும் சத்தமும், பின்பு அவனுடைய குரலும் கேட்டது. அவன் வீட்டு அழைப்பு மணியை அடித்தேன். சற்று தாமதமாகவே கதவுத் திறக்கப் பட்டது. கதவை பாதி திறந்த அவனுடைய மகள் “அப்பா ஊரிலே இல்லே நீங்கள் அப்புறம் வாங்கோ” என்று கதவை என் மேல் சாத்தினாள். நான் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. உள்ளே அழைத்து என்னிடம் சொல்லியிருக்கலாம்.
நான் திரும்புவதற்கு சற்று தயங்கி நின்றேன்.

"அந்தக் கடன்காரன்தான்பா" என்று உள்ளே குரல் கொடுத்தாள் அவனுடைய மகள்.

Thursday 6 August 2009

கதை கேளு.-கவிதை


மழலைகள் மடியில் அமர்ந்து,
கிழவன் என்னிடம் கதை கேட்க,
பள்ளி நினைவுகளை
அள்ளி வழங்க வேண்டுமாம்.

என்னென்று சொல்வேன்,
அன்னையின் உழைப்பிலே
வளர்ந்த நான், புத்தகம்,
இரவல் வாங்கிப் படித்ததா,
மதிய இடை வேளையில்,
மாணவர் அனைவரும் உண்டு களிக்க,
உண்ணா நோன்பு இருந்ததா,
சீருடை மட்டுமே உடுத்தி,
வேறுடை உடுத்தாமல் இருந்ததா.
பொங்கலுக்கும் சீருடை,
பெருமையுடன் அணிந்ததா.
எட்டாம் வகுப்பில்
கட்டாத பணத்திற்காக,
எட்டாமல் என் படிப்பு நின்றதையா.
கட்டிடத் துறையில்
எட்டடுக்கு மாளிகைகளில்
எவனோ வசிக்க,
பட்டினிக் கிடந்தது,
கட்டிக் கொடுத்து,
உழைத்ததையா.
இத்துணை இருந்தும்,
உங்கள் தகப்பன்கள்,
கேட்பதைக் கொடுத்து,
படிக்க வைத்ததையா
வருஷம் ஒருமுறை,
என்மடி உறங்கும் மழலைகளே,
ராஜா உங்கள் ஐயா,
ராணி உங்கள் அப்பத்தா,
எங்கள் ராஜ்ஜியத்திற்கு,
அடுத்த வருடமும் வந்து,
மடி உறங்குங்கள்.

Wednesday 5 August 2009

ராணி - சிறிது தாமதமாக நண்பர்கள் தினப் பதிவு.


நாங்கள் அப்பொழுதுதான் அந்தத் தெருவிற்கு புதியதாக குடி பெயர்ந்தோம். தெருவில் மொத்தம் இருபது வீடுகளே இருந்தன. சில வீடுகளுக்கு நடுவில் காலி மனைகளும் இருந்தன. எங்கள் வீட்டிற்கு எதிர்புறத்தில் ஒரு இரண்டு வீடுகளுக்கு நடுவே இருந்த காலி மனைதான் எங்கள் விளையாட்டு மைதானம். எல்லோருமே அந்த தெருவில் புதியதாக கட்டிய வீடுகளில் குடி புகுந்தவர்கள், என்பதால் தெருவில் உள்ளப் பையன்கள் எல்லாம் விரைவிலேயே நண்பர்கள் ஆகி, ஒரு கிரிகெட் டீம் ஆரம்பித்தோம்.

எங்கள் மைதானத்தின் அருகில் உள்ள வீட்டில்தான் ராணியும், அவள் அக்காள் மாயாவும், அவர்கள் அம்மாவுடன் இருந்தார்கள். ராணி சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவள். அவள் அம்மா ஏர்போர்ட் கஸ்டம்சில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவள் அம்மாவை ஒரு இளவயதினன் தினமும் மோட்டார் பைக்கில் கொண்டுவிடுவான். சனி, ஞாயிறுகளில் அந்த மோட்டார் பைக் அவர்கள் வீட்டு வாசலிலேயே எப்பவும் இருக்கும். அவனுக்கும் ராணியின் அம்மாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெருவில் ஒரு பேச்சு உண்டு.
ராணி நானும் ஒரே வயதினர்கள். எங்கள் தெருவில் உள்ளப் பையன்களில் என்னைத்தவிர யாருடனும் ராணி பேசமாட்டாள். எங்களில் பழக்கம் ஒன்றாகப் படிப்பதில் ஏற்பட்டது. பள்ளி இறுதிப் பரீட்சைக்கு அவள் என்னிடம் கணக்கு மாதிரி வினாத்தாள்கள் வாங்க வந்ததிலிருந்து எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான நேரங்களில் அவளும் அவள் அக்காளும் தனியாக இருப்பதனால் யாவரும் அவர்கள் வீட்டுக்குப் போவதில்லை. ராணிக்கு ஏதாவதுத் தேவை என்றால் என்வீட்டுக்கு வருவாள். என் அம்மாவுடனோ அக்காளுடனோ ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசுவாள். ஆதலால் என் அக்காள் அவளைக் அவனுடன்தான் பேசுவாயோ என்றுக் கிண்டல் செய்வாள்.

ராணியின் அக்கா மாயா காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாட்களாக அவளைக் காணவில்லை. நான் ராணியிடம் கேட்டபொழுது ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னாள். அனால் எங்களுக்கு காதில் விழுந்த செய்தி வேறு. மாயா யாரிடமோ கெட்டு இப்பொழுது கர்ப்பமாக இருப்பதாகவும், ஆதலால் கோவையில் அவள் சித்தி வீட்டில் தங்கி கருக்கலைப்பு செய்வதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். என் வயதில் அதெல்லாம் ராணியிடம் உண்மையா என்று கேட்கப் பயமாக இருந்தது.

பிறகு நானும் ராணியும் கல்லூரியில் வெவ்வேறு சப்ஜெக்ட் எடுத்து ஒரு தற்காலிகப் பிரிவு எங்களுள் இருந்தது. இந்த இடைவெளியில் மாயாவுக்கு கல்யாணமாகிப் போய்விட்டாள். இப்பொழுதெல்லாம் ராணியின் வீட்டில் அந்த பைக் இரவில் இளைப்பாற ஆரம்பித்தது. அவர்கள் வீட்டு மாடிப்படியின் கீழ் வரிசையாக அடுக்கி வைத்திருந்த மதுப் பாட்டில்களை நான் ஒரு முறைப் பார்த்திருக்கேன்.

நான் என் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த நேரம் மாயவும் திரும்ப அந்த வீட்டுக்கு வந்து விட்டாள். அவளது கணவன் உண்மை தெரிந்து அவளை விவாகரத்து பண்ணி விட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். ஒரு சிலநாட்களில் இரவில் அந்த மோட்டார் பைக் காரனுடன் மாயா அமர்ந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு போவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

ஒரு நாள் நான் இரவு பனி முடித்து பதினொரு மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது அந்த மோட்டார் பைக் இளைஞனுடன் இம்முறை ராணி உரசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். ராணியின் நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது. ராணி என் பார்வையை தவிர்த்தாள். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. ராணி அவ்வாறு செல்வது எனக்குத் துளிக் கூடப் பிடிக்கவில்லை. ராணி தவறானப் பாதையில் செல்வதாக எனக்கு பட்டது.

அப்பொழுது எங்கள் கம்பனியில் ஒரு செகரட்ரி காலியாக இருந்தது. அதை ராணிக்கு வாங்கிக் கொடுத்தால் அவள் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எனக்கு தோன்றியது. ஆதலால் நான் அவளைக் காண அவள் வீட்டிற்கு சென்றேன். அவள் என்னைப் பார்க்க தயங்கி அவள் அக்காளிடம் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டாள். இருந்தாலும் நான் அவள் அக்காளிடம் சொல்லி அவளை வேலைக்கு மனு போடச் செய்து, என் மேனஜரிடம் பேசி அந்த வேலையை வாங்கிக் கொடுத்து விட்டேன். நிஜமாகவே அவள் வாழ்வில் அந்த நிகழ்ச்சி ஒரு திருப்பு முனைதான்.

பிறகு ராணி கல்யாணமாகி இப்பொழுது ஜெர்மனியில் குழந்தைக் குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டாள். சமீபத்தில் அவளை விடுமுறைக்கு சென்றிருந்தப் பொழுது பார்த்தேன். என் வீட்டிற்கு வந்து என்னுடன் அமர்ந்து பேசினாள்.

அப்பொழுதுதான் அவள் வாழ்வில் நடந்த திருப்பம் அன்று இரவு அவளை நான் நோக்கிய ஒரு நொடியில் நிகழ்ந்த உண்மையை என்னிடம் சொன்னாள். அன்று இரவு நான் நினைத்துப் போலவே அவள் குடித்திருந்தாள். அந்த மோட்டார் பைக் இளைனனுடன் அன்று இரவைக் கழித்திருந்தால், கெடுத்திருப்பான் என்றும் அவள் வாழ்வும் மாயாவைபோல் சீரழிந்திருக்கும். அவனிடம் அன்று இரவு உடம்பு சரியில்லை, பிறகுப் பார்க்கலாம் என்று சொல்லி தனது அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவின் தனிமையையும், மாயாவின் நிலைமையையும் அவன் உபயோகப் படுத்திக் கொண்டு அவர்கள் வாழ்வை சீரழித்து விட்டான். இப்பொழுது அவன் குறி ராணி மீது. போதாதற்கு குடி வேறு.
அவள் கடைசியாக என்னிடம் சொன்ன வார்த்தை என்னைப் பெருமை அடையச் செய்தது.

"பிரபு நீ எனக்கு நல்ல நண்பன், நான் உன்னை நினைக்காத நாளில்லை, நாம் எத்தனை ஆயிரம் மைல் தள்ளி இருந்தாலும், நீ என்றும் என்னிடம் இருக்கிறாய், ஆம் என் பையனின் பெயரும் பிரபு தான்" என்றாள்.

Tuesday 4 August 2009

கன்றுக்குட்டியின் ஏக்கம்


முட்டி முட்டி
குடிக்கும் என்னை,
எட்டி இழுத்துக்
கட்டிய எஜமானி,
ஓட்டக் கறந்த பின்,
வெற்று மடியில்,
முட்ட விட்டு,
உன் குழந்தைக்கு
மூச்சு முட்ட,
பால் கொடுக்கும்,
தாயல்லவோ நீ.

Monday 3 August 2009

நண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.



கல்லூரி கோடை விடுமுறையில், தெருவில் உள்ள நண்பர்கள் பகலில் விளையாட்டு, மாலையில் தெருக்கொடியிலும், கோவில்களிலும், வரைமுறை இல்லா கடலை, பின்பு இரவில் நைட் ஷோ மொட்டை மாடியில் உறக்கம் என்று இருந்தக் காலம்.

ஒரு நாள் இரவு எங்களூர் டூரிங் டாகீசில் பிட்டுப் படம் போடபோவதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. ஆதலால் நண்பர்கள் எல்லோரும், அன்று கடலை நேரத்தை குறைத்துக் கொண்டு, இரவில் சினிமாப் பார்க்கப்போவதற்கு எப்படி ஏற்பாடு செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். படம் முடிந்தவுடன் எங்கள் வீடு மொட்டை மாடியில் எல்லோரும் உறங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டோம்.

அவனவன் இரவு தூங்குவதற்கு தலையனை, பாய் எல்லாம் கொண்டுவந்து மாடிப்படியின் கீழே போட்டு வைத்து கிளம்பத் தயாரானோம். எங்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் வீட்டில் அனுமதி வாங்குவது என்பது, இயலாத காரியம். அவன் வீட்டில் சாமிப்படம் என்றால் தான் அனுமதி கொடுப்பார்கள்.

அந்தத் திரையரங்கில் "ஜெய் ஆஞ்சநேயா" என்றப் படம் திரையிடப் படுவதாக போஸ்டர் ஒட்டியிருந்தது. ஆதலால் அன்று அனுமதி வாங்குவது பெரிய விஷயாகமாக தோன்றவில்லை. எங்கள் குழுவிலிருந்த ஒருவன் போஸ்டர் எல்லாம் அப்படித்தான் ஓட்டுவார்கள் அது பகல் காட்சிக்கும், மாலைக்காட்சிக்கு மட்டும்தான், இரவில் சும்மா இந்தப் படம் போடுவதுபோல் இரண்டு மூன்று ரீல் ஓடவிட்டு பின்பு பிட்டுப் படம் வரும் என்று ஏதோ பிட்டுப் படக்காட்சி விஷயத்தில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் சொன்னான்.

அன்று இரவு எல்லோரும் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு டூரிங் டாக்கீஸ் சென்று டிக்கெட் வரிசையில் நின்றோம். மாலைக்காட்சி முடிந்து அப்போழுதுத்தான் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் வரிசையில் ஒருவரும் இல்லை. ஆதலால் இரவு பிட்டுப் படம் கட்டாயம் இருக்கும் என்று நண்பன் சொன்னான். நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு நல்ல சீட்டாகப் பிடித்து அமர்ந்துக் கொண்டோம். படம் ஆரம்பிக்க சில நேரம் முன்பு ஒரு மூன்று நான்கு பெண்கள் அங்கங்கே அமர்ந்திருப்பதைக் கண்டோம். எங்களுக்கு இரண்டு வரிசை முன்பு நம்ப பக்திப் படத்துக்கே அனுமதிக்கப்படும் நண்பனின் அத்தையும் மாமாவும் அமர்ந்திருந்தார்கள். நண்பன் உதற ஆரம்பித்து விட்டான்.அவனை நாங்கள் தேற்றி “கவலைப் படாதே, நீ பக்திப் படம் தான் வந்திருக்கிறாய், மேலும் அவர்கள் திரும்பிப் பார்த்தால் நீ தலையை குனிந்துக் கொள்” என்றோம்.

படம் போட ஆரம்பித்து விட்டார்கள். படம் ஆரம்பித்து ஒரு நான்கு ரீல் போன பின்பும் அது பக்திப் படம் மாதிரியே தெரியவில்லை. முதலில் கான்பித்தப் ஆஞ்சநேயர் படம் தவிர பக்தி வருகிறா மாதிரி ஒன்றுமே வரவில்லை. ஒருவன் அதில் குடித்து கும்மாளமடித்துக் கொண்டு எல்லாக் கெட்டக் காரியங்களும் செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒருவன் இதெல்லாம் தப்பு என்றும் ஆஞ்சநேயப் பக்தனாகிவிடு என்று பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அட்வைஸ் செய்துக் கொண்டிருந்தான். அடிக்கடி ஜெய் ஆஞ்சநேய என்று ஹம்மிங் வேறு வந்துக் கொண்டிருந்தது. பின்பு ஒருத்தி இடுப்பில் கோமணமும், மேலே கச்சை போல ஒரு சமாசாரம் அணிந்துக் கொண்டு ஏறக் குறைய மொத்த திரையையும் அடைத்துக் கொண்டு ஆடினாள். பின்புலத்தில் அதே அரைகுறை ஆடையுடன் ஒரு இருபது பெண்கள் இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டிகொண்டிருந்தார்கள்.



இந்த நடனம் முடிந்து இடை வேளை வந்தது. நாங்கள் நண்பனின் அத்தை கண்ணில் படக்கூடாது என்று அரங்கின் உள்ளேயே அமர்ந்திருந்தோம். எங்கள் இடை வேளை தம்முக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் அவர்கள். இடை வேளை முடிந்து படம் தொடர ஆரம்பித்தது. முன்பாதியில் கெட்டக் காரியம் செய்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுதான் ஆஞ்சநேயர் ஆப்பு வைக்க ஆரம்பித்திருந்தார். நாங்கள் சற்று எதிர் பாராமல், திரையில் இப்பொழுது ஒரு மலையாள அழகி, ஒரு வெள்ளை புடவையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவளுடைய அந்தரங்கங்கள் திரையில் தெரிந்துக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் நாங்கள் இடைவேளையில் வெளியே சென்ற பெண்கள், அத்தை மாமா உள்பட யாவரும் அரங்கத்திற்கு திரும்பவில்லை என்பதைக் கவனித்தோம். நண்பன் இப்பொழுது தைரியமாகிவிட்டான்.

மேலும் பக்திப் படம் அப்படியே நிறுத்தப்பட்டு, பிட்டை தொடங்கி விட்டார்கள், மலையாளத்தில் ஆரம்பித்து, தாய்லாந்து வழியாக, வெள்ளைக்காரி அழகிகள் என்று ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். எல்லாக் கதையிலும் கெட்டக் காரியம் ஆரம்பிக்கும் முன்பு திரை வேற்று நாடு அழகிக்கு தாவி விடும். ஒரு வழியாக சரித்திரப் புகழ் பெற்ற எங்களுடைய அந்த பிட்டுப் பட ஷோ முடிந்து வீட்டுக்கு வந்து மொட்டை மாடியில் தூங்கினோம்.
அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் தெரு முக்கில் கடலை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நண்பனின் மாமா அவனிடம் வந்து,
"நேற்று எந்தப் படத்துக்கு போயிருந்தாய்" என்று கேட்டார்,
அதற்கு அவன் "ஜெய் ஆஞ்சநேயா மாமா" என்றான்.

"அது பக்திப் படம் மாதிரியே இல்லையடா, நானும் உன் அத்தையும் இடை வேளையிலேயே வந்து விட்டோம்" என்றார்.

நான் சும்மா இல்லாமல் "சார் அப்புறம் ஒரே பக்திதான் சார், அந்தக் கெட்டவன், திருந்தி ஆஞ்சநேயப் பக்தனாகி, ஊருக்கு நல்லது செய்கிறான் அது தான் சார் கதை, அய்யயோ பாதியிலேயே வந்து விட்டீர்களே சார். நாளைக்கு வேணுமென்றால், மாலைக் காட்சி பாருங்கள் சார். இரவுக் காட்சியில் இடை வேளைக்குப் பின் படம் சரியாய் தெரிய மாட்டேங்குது சார்" என்றேன்.

"சரிப்பா நாளைக்கு அந்த மீதிப் படத்தை கட்டாயம் பார்கிறேன்" என்றார்.