Pages

Saturday 30 January 2010

அபாயகர அழகி -Dangerous beauty-1998


சமீபத்தில் நமது வலை பதிவில் வந்த ஒரு இடுகைக் கண்டு “செர்பிஸ்” என்ற பிலிப்பினோ படத்தைக் கண்டேன். இந்தப் படத்தை இதன் இயல்பான கதை சொல்லும் போக்கை நான் மிகவும் ரசித்தேன். அந்தப் பதிவர் நமது பரங்கிமலை ஜோதியையும்., பாடியில் உள்ள ஒரு கொட்டகையையும் எடுத்துக் கட்டியிருந்தார்.

இந்தப் படத்தில் ஒரு இயல்பான சோக ரேகை ஓடுவதை என்னால் உணர முடிந்தது.

அந்த வகையில் நான் சமீபத்தில் கண்ட படம் “Dangerous Beauty”.
எனக்கு மிகவும் பிடித்த திரைப் படங்களில் இது ஒன்று. 1998 ல் வெளி வந்தப் படம்.

வெரோனிகா ஒரு மேட்டுக குடி விலை மகள். அவளுக்கும் ஒரு பிரபுத்துவ இளைனனுக்கும் (மார்கஸ்) மலரும் காதல். அதை சொல்லப் பட்ட விதம் மிகவும் கவர்ந்தது.

“வெநிசில்” படமாக்கப் பட்ட அருமையான படப் பிடிப்பு. கதாநாயகியின் அபரிமிதமானஅறிவு சார்ந்த அழகு.

இந்தப் படத்தின் கதையை முழுவதும் எழுதி உங்கள் ஆர்வத்தை குறைக்க விருப்பம் இல்லை.
இந்தப் படத்தின் உச்சக் கட்டம் அவளை “சூன்யக்காரி” என்று சொல்லி வழக்காடு மன்றத்தில் வரும் காட்சி, பார்த்து ரசியுங்கள்.

படத்தைக் கண்டு களிக்க

http//www.piratesbay.org

என்ற வலை மனையிலிருந்து தரை இறக்கம் செய்து கொள்ளவும்.

Friday 29 January 2010

மாசறுப் பொன்னே வலம்புரி முத்தே....................



















காலம் பல கடந்தாலும்
கடமைகள் பல கழிந்தாலும்
நேற்று நடந்துப் போல
நினைவுகள் நின்று போகின்றன
உனக்கு என்ன கோவில் குளம்
குழந்தைகள், கால சக்கரம்
கடந்து காட்டாற்று வெள்ளம்
தோழியாய், காதலியாய்,
நல்லாசிரியாய், என்னை
நல் நடத்தினாய்,


என் தனிமை உணர
உனக்கு நேரம் இல்லை
அடியே நமது இணைப்பின்
நன்னாள் நெருங்கும் நேரம்
“மாசறுப் பொன்னே
வலம்புரி முத்தே”
என்று கோவலன் போல்
காதில் சொல்ல விழைகிறது.
என் வாழ்வில் மாதவியும் நீதான்.


ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உனக்கு நம் திருமண நாள் நல் வாழ்த்துகள்.

Thursday 28 January 2010

மக்கள் நலம்


இன்னா கவாலி இந்தா லேட்டா வரே, கடிய மூடிடுவானுங்க பாடுங்க.
அத்தே விடு மாமு, நான் உசாரா ஒரு ஆப் வாங்கிட்டேன்.
இன்னா தலிவரு பாலுவ வுட்டு கைட்டிகிறாரு,
இன்னாபா சொல்றே, ஸ்டாலின் மச்சினிச்சி வூட்டுக் கன்னாலத்திலேயா.
அஹாம் பா
அது ஒன்னியும் இல்லேய்பா பாலு முதலோ பெசநோன்னுகிராறு, சர்தாம்பா அப்படின்னு ஸ்டாலின் ஒதுங்கிக்கிராறு.
இவரு அல்லார் பேரையும் சொல்லே சொல்ல கனிமோயி பேரே உட்டுகிராறு., தலிவரு மேர்சலு ஆகி இதா பாரும்மா தூக்கி ...........த ஓம் பேரைய உட்டுகிறான் பாலுண்ணு சொல்லி பாலுக்கு ஆப்பு வச்சிக்ராறு,
பின்ன இன்னா பா பாலுக்கு போ வேண்டிய மந்திரி பதவியை அந்தாம்மாக்கு அப்டின்னு சொல்லிக்கின்னு பாலுவை களட்டி விட்டுட்டாரு.
பாலு கையி அறிப்பெடுக்குது, அந்த காண்டுலே கனிய கண்டுக்கல.
தலிவரு பின்ன மேர்சல் ஆக மாட்டாரா.
இன்னாதாயான் நடக்குது, ஒன்னியும் பிரியல.
மக்கள் நலம் மக்கள் நலம் சொல்லுவானுங்கபா மொதோல அவனுங்க மக்களை பார்துப்பானுங்க, அப்பால தான் நீயும் நானும்.
அத்த விடு நமக்கு இன்னா, சரக்கு வுட்டாமா சரோஜாவ ................தமா அப்படின்னு நாம போய்க்கின்னே இருக்கணும்.
சர்தான்பா ஆப் பாயில் சொல்லிட்டியா.
ஆப் பாயிலா “போட்டி” யே சொல்லிக்கிறேன் நல்லாத் துன்னு மாமே.

Tuesday 26 January 2010

நேத்ரா


நேத்ரா என் பள்ளித் தோழி. நான்காம் வகுப்பில் நாங்கள் இருக்கும் பொழுது திருச்சியிலிருந்து சென்னை வந்து புதியதாக சேர்ந்தாள். அவள் வீடு என் வீட்டிலிருந்து ஒரு நான்கு வீடு தள்ளி இருந்தது. மிகவும் சூட்டிகையானப் பெண். நானும் அவளும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.

அவளுக்கு தெருவில் தோழிகள் கிடையாது. அவள் வயது பெண்கள் எங்கள் தெருவில் அவ்வளவாக இல்லை. ஆதலால் நாங்கள் விளையாடும் பொழுது தன்னையும் சேர்த்துக் கொள்ளச் சொல்வாள். நாங்கள் ஆண்பிள்ளைகள் விளையாட்டு என்பதால் அவளை சேர்த்துக் கொள்ளமாட்டோம். ஆனால் எங்கள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பாள்.

எங்கள் வகுப்பில் நேத்ராதான் முதல் ரேங்க். இரண்டாம் ரேங்க் எடுக்கும் எனக்கும் அவளுக்கும் நிறைய மார்க்குகள் வித்யாசம் இருக்கும். ஆதலால் எனக்கு அவள் மேல் ஒரு இனம் தெரியாத பொறாமை உண்டு. அதை நினைத்து இப்பொழுது வருந்தாத நாட்கள் இல்லை. அதற்கு காரணம் உண்டு, சொல்கிறேன்.

நேத்ராவுக்கு அப்பா கிடையாது. அவள் வீட்டில் அவள் அம்மாவும் அவள் பாட்டியும் தான். அவள் அப்பா திருச்சியில் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். ஆதலால் தான் அவளும் அவள் அம்மாவும் சென்னைக்கு தன் பாட்டி வீட்டுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அவள் வீட்டில் எனக்கு தனி மரியாதை உண்டு. ஒன்பதாம் வகுப்பு வரை வந்தும் அவளை என்னால் ஒரு தடவை கூட மிஞ்சி முதல் ரேங்க் வாங்க முடியவில்லை. அதை நான் சொல்லி வருத்தப் பட்டால் கூட ஒரு வித முதிர்ச்சியுடன் என்னை தேற்றுவாள்.

போடா நீ ரொம்ப புத்தி சாலி, என்னோட மார்க் எல்லாம் ஒரு பொருள் இல்லை என்பாள். டேய் எனக்கு உன்னைத் தவிர யாரும் நண்பர்கள் கிடையாது. அதால இந்த ரேங்க் விஷயத்தை வைத்துக் கொண்டு என்னை வெறுக்காதே என்பாள். என் வயதுப் பையன்கள் நான் நேத்ராவுடம் பழகுவதை வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். இருந்தாலும் நான் நேத்ராவுடன் பள்ளிக்கு செல்வதை விடவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் அரை பரீட்சை வந்தது. இந்த முறை எப்படியும் நேத்ராவை முந்தி முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பரீட்சை முடிந்து விடுமுறைக் கழிந்த பின் முதல் தினம் பள்ளிக்கு செல்லத் தயாரானேன். அன்றுதான் ப்ரோக்ரேஸ் ரிப்போர்ட் கொடுப்பார்கள். நேத்ராவை கூட்டிக் கொண்டு செல்லலாம் என்று அவள் வீடு நெருங்கும் பொழுது அவள் வீட்டில் ஒரே கூட்டம். எல்லோரும் சோகமாக இருந்தார்கள். அங்கு இருந்தவர்கள் என்னை போ தம்பி பள்ளிக்கூடம் போகிற வழியில் இங்கு என்ன வேடிக்கை என்று விரட்டி விட்டார்கள்.

ஆசிரியர் ரிப்போர்ட் கொடுத்தார். இந்த முறை நான்தான் முதல் ரேங்க். நேத்ரா இரண்டாவது ரேங்க். எங்கள் இருவருக்கும் வித்யாசம் ஒரு மதிப்பெண் தான். நேத்ரா இன்று பள்ளிக்கு வராததால் அவள் ரிபோர்டையும் நான் வாங்கிக் கொண்டேன்.

பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லுமுன் அவள் வீட்டுக்கு போனேன். என்னை பார்த்தவுடன் அவள் பாட்டியும் அவள் அம்மாவும்,

“கோபி நேத்ரா இல்லேடா, சாமிகிட்டே போயிட்டா” என்று அழுதார்கள்.

நான் உணர்ந்த முதல் மரணம் அது. இன்றும் என்னை நடுத்தூகத்தில் வியர்க்க வைக்கிறது.

Monday 25 January 2010

ஆண்மை


பேருந்து நிறுத்தத்தில்
பெரும்பாலான நேரங்களில்
பிச்சை எடுக்கும்
பைத்தியம்
தொலைதூரப் பார்வை
அலைபாயும் கண்கள்
சடைபிடித்த முடி
அழுக்கேறிய உடை
கந்தல் பாவாடை
கையிலே சட்டி
எச்சிலை உண்டு
எறியும் வயிறு
பச்சிளம் வயது,
உப்பிய வயிறு
இவளிடமும் தன்
கைவரிசை காட்டி
வயிறு வீங்கவைத்து
ஆண்மையை அரங்கேற்றிய
ஆண்மகன் எந்த
ஆண்மையின் விளைவோ?
மனதை அறுக்கும்
இந்தக் கேள்விகள்

Sunday 24 January 2010

நம்மத் தமியி (மெட்ராஸ் தமிழ்) மாதிரி வராது


காலிலே எயுந்து கடயான்டப் சிங்கள் டீ அடிக்கப் போனா கஜாகிறான். இன்னா கவாலி ராவிக்கி மப்பா இந்தா லேட்டா வரேன்கிறான். அத்த உடு கஜா இன்னா மேட்டருன்னேன். ஒன்னு இல்லபா தி. நகராண்டா, ஓட்டலுகீது பாரு அதாபா கலிவாணர் செலயாண்ட கீதே பெரிய ஓட்டலு அதுலே ஒரு நாலு ரூமுலே கக்கூசு அடைச்சுகிசான் பா, அங்கே என் கண்டிராயடு தானே கூட்டுகிரானுகப்பா நாமாலே போ முடியாது, நீ முடிச்சு காசு வாங்கிக்கப்பா இன்றான்.

சரித்தான் சொல்லிக்கின்னு வூட்லே போய் சாமானெல்லாம் எத்துகின்னு ஒட்டலாண்ட போறேன். வெளிலே கோமாளிக் கணுக்கா உடை போட்டுக்கின்னு போறானே கொர்கா “தூர்ஜா”” ங்ரான். யோவ தூறு வாரத்தான்யா வந்துகிறேன்னு டபால்னு உள்ளே என்ட்ரி உட்டுட்டேன். அங்கி கோட் போட்டுகிற ஆளாண்ட சொன்ன அவன் எண்ணிய தொ அந்தப் பிகராண்ட பேசு ன்றா மாதிரியா ஏதோ இங்கிலிசு ல சொல்றான். அந்தப் பிகுரு நம்மள ஏதோ “காவாப் பன்னி கடையில வந்தாப் போல” பாக்குது. உதட்டுல சாயத்த பூசிக்கின்னு, “நொங்கு” சைசுல வச்சிக்கினு இங்கிலிசுலே சொல்லுது ஒன்னும் பிரியலபா.

இன்னாப் பன்னுதேன்னே புரியலே, கஜா நம்மப் புயப்புலே மண்ணே போட்டுட்டான். இன்னொரு தபா நொங்கு கைல போனா கொர்காவ கூப்பிட்டு ஏதோ இங்கிலிசு பேசுது. நமக்கு பெஜாராப் போயிடிச்சு. ...த்தா இருவத்தாறு எயுத்த வச்சிக்கின்னு இம்மாம் புல்த்து புல்த்துதுங்கோ. நம்ம தமியிலே முன்னூறு எயுத்து வச்சுகிறோம். ஏண்டி “நொங்கு” நாங்க பேசுற பாசை உன்னலேப் பேச முடியுமாடின்னு சவுண்டு உடனும் போல கீது. நீ இன்னத்தான் பவுடர் போட்டாலும் ஏங்க அமிஞ்சிக்கரை அஞ்சலை மாதிரி வேலைக்கு ஆவாதுன்னு, சொம்மா ரண்டு கை பத்தாதுன்னு நினைச்சிக்கின்னேன். நம்ம ஊருலே வந்து நம்ம மொயி தெரியாதக் கஸ்மாலம்.

இதோ நா இப்போ சொல்ற நூறு வார்த்தைய ஒத்த நிமிட்லே சொல்லமுடியுமா.

நிஜாரு, உஜாரு,பேஜாரு,
டப்சா, கப்சா, டேக்ஸா,
இப்பால, அப்பால, எப்பால,
இந்தாண்ட, எந்தாண்ட, அந்தாண்ட,
என்னாண்ட, உன்னாண்ட, அவனாண்ட,
இட்டுகின்னு, இஸ்துக்கின்னு, பிட்ச்சிக்கின்னு,
ஆயா, பாயா, சாயா,
நைனா, மைனா, சைனா,
தொத்தா, ஆத்தா, ஒ....தா,
டவுசரு, ரப்சரு, டோமரு,
எடக்கு, மடக்கு, குடாக்கு,
கானா, வேணா, பானா,
பாட்லோடு, சீமோடு, கருவாடு,
பன்னு, மென்னு, துன்னு,
தர்பூசு, கக்கூசு,
குச்சைசு, மாங்கபெத்தை,
தேங்காபெத்தை,கம்மருகட்டு,
முட்டாயி, மூசுண்டை,
ஏத்து, ஒத்து, சூ.......,
பன்னி, சு.........,
தமாசு, மெட்ராசு,
மேட்டரு, க்வாட்டரு,
அவுசலு, மேர்சலு,
அகிலு, பிகிலு, செவுலு,
அதல், பதல்,
எங்காத்தா, மங்காத்தா, போடங்கோ.......
ஒன்னுக்கு, ரெண்டுக்கு,
மஞ்சா சோறு, சொண்டி சோறு,
அன்றாயறு, சரக்கு, சப்ப,
மப்பு, கப்பு,
மேல, கீய, எயுந்து, உயுந்து,
லுச்சா, பிசுகோத்து, உஸ்கோலு,
ஏறா, சொறா, பொறை,
வடகறி, கேப்மாரி, சோமாறி,
ஜாதி, மீதி, கூ...
ஆளு, தேளு, பூ...
மயிறு, கொசுறு,
டிக்க்கிட்டு, பக்கிட்டு,
ஏஜென்டு, ரீஜண்டு,
லிங்கி, சொங்கி,
ஒரு தபா, ரெண்டுதபா, தபா தபா,
கொயம்பு, சொம்பு, ஊ....பு,
எக்கா, சொக்கா, நாஸ்தா,
சால்னா, இடியாப்பம், இட்லி, வடகறி.


இத்தே நாங்க சும்மா நாக்க வெளிலே வச்சிக்கின்னே பேசுவோம், இங்கிளிசுலே முடியுமா.

நம்ம மொயியகண்டி நா மேடையிலே எட்த்து வுட்டேன்னு வச்சிக்கோ, நம்ம வாயும் வள்ளுவரு, தமியு வளர்த்தத் தலைவரு, உலகத் தமியி மாநாட்ல, மானாட மயிலாட பிகருங்களே வச்சி மெடல் குத்துவாரு.

அப்படியே சொல்லிக்கின்னு நொச்சிக்குப்பத்துக்கு பஸ் ஏறிட்டம்பா. இவனுங்க கக்கூசு கப்பு ஆனா நமக்கின்னா.

Friday 22 January 2010

சபா நாயகர் வணக்கம் சொல்லவில்லை- சின்ன பிள்ளத்தனமால்ல இருக்கு.



இந்தக் கொடநாடு அம்மாவும், மஞ்சத்துண்டு தாத்தாவும் பண்ற லொள்ளு தாங்க முடியலடா சாமி.

அம்மா, என்னைப் பார்த்து வணக்கம் சொல்லலே, அழு மூஞ்சி காமிச்சாருன்றதும், அதுக்கு அந்த தாத்தா, நான் மூக்கை சிந்தினத அழுமூஞ்சி காமிச்சென்னு அந்தம்மா திரிச்சி சொல்றாங்க புழுகு மூட்டைன்னேல்லாம் பேசிக்கின்னு ஏதோ சின்ன பிள்ளத்தனமா சண்டையைப் போட்டுக்கிறாங்க.

ரொம்ப முக்கியம்டா சாமி.

இவர்களையெல்லாம் தானைத்தலைவர், தமிழினத்தலைவர், புரட்ச்சித்தலைவின்னு, அம்மா என்றெல்லாம் ஒரு கூட்டம் போஸ்டர் அடிச்சு பொழைச்சின்னு இருக்காங்க.
இவங்க இதவிட கேவலமான ரேஞ்சுக்கு போய், கலைஞர் டிவி யிலும் , ஜெயா டிவி யிலும் திரும்ப திரும்ப காமிச்சு நம்மளை ரப்ச்சர் பண்ற நாளு ரொம்பத் தொலைவில் இல்லை.

அந்தம்மா போயஸ் கார்டன் கோபாலபுரம் வழியா போகும்போது எங்க வீட்டில் எச்சில் துப்பிச்சின்னு தாத்தா சொல்ல, அதுக்கு அந்த அம்மா நான் அவர் வீட்டு வாசல்ல வரும் பொழுது பாக்கு பல்லுலே மாட்டிக்கிச்சு அதைதான் துப்பினேன் சொல்றதும்.

அடுத்த நாள் தாத்தா டிவி ல அம்மா எச்சி துப்புனா மாதிரி ஸ்டில் காமிக்கறதும்.

பதிலுக்கு ஜெயா டிவி ல மைனோரிட்டி தி.மு.க அரசின் தலைவர் என் மேல் அபாண்டமாக பொய் கூறி ஒரு புகைப் படத்தை வேறு போட்டிருக்கிறார், அதில் நான் பச்சை புடவை கட்டிக்கொண்டு, செருப்பு போட்டுக் கொண்டிருப்பதாக உள்ளது. ஆனால் அன்று சிகப்பு புடவை கட்டி, ஷு போட்டுக் கொண்டிருதேன். மேலும் நான் பாக்கை வெளியில் துப்புவது கிடையாது, உ.பி.ச கையில்தான் துப்புவேன், இந்த சின்ன விஷயம் கூடத் தெரியாமல், கருனாநிதி ஏதேதோ உளறுகிறார் என்றெல்லாம் பார்க்காமலாப் போகப்போறோம்.

யாரவது இந்தத் தமிழ் மானத்தை தாத்தா கிட்டேயிருந்தும் அம்மா கிட்டேயிருந்தும் காப்பாத்தினா, மக்கள் அவருக்கு முக்குக்கு முக்கு சிலை வைக்க தயாரா இருக்காங்க.

உழவுக்கும் தொழிலுக்கும்.....


வயக்காட்டை உழுது போட
வாடகை ட்ராக்டர் ஒட்டி
பம்புசெட்ட ஓட விட்டு
பயிரை விளைய வைக்க
பணத்த வாரி இரைச்சுபுட்டு
பட்டணத்து பகட்டை நம்பி
கண்ட கண்ட உரத்தப்போட்டு
ஏக்கருக்கு அம்பது மூட்டைன்னு
ஏஜெண்டு வித்த விதையை வாங்கி
நாத்தைப் பிடுங்கி நெடுக நட்டு
மழைய நம்பி மறந்துப்புட்டு
கதிரு முத்தும் வேளையிலே
கான்ட்ராக்ட் ஆள் பிடித்து
ஆணை வைச்சு போரடித்த
ட்ராக்டர் அடித்த காலமும் போயி
வண்டி ஓடும் பாதையிலே
வழிநெடுக இரைச்சுப்புட்டு
வாரிக்கட்டி சேத்ததுலே
தேறியது முப்பது மூட்டை
இழந்த இருபது மூட்டைக்கு
ஈடு கட்ட விலையை வெச்சா
வெட்டிப் பயலுக வெச்சுப்புட்ட
விலைக்கு வித்து
குத்த வச்சு யோசிக்கப்ப
தொழிலு!! செஞ்சுப்
பொழைச்சிருந்தா
தோட்டம் தொறவு
பாத்திருப்போம்
எந்தத் தொழிலுக்கு
வந்தனம் செய்வோம்னு
பாட்டு படிச்சப் புலவன்
புட்டு புட்டு வெக்கலயே.

Thursday 21 January 2010

எங்கள் “கடப்பாரையும்” சரோஜாவின் “டேக்ஸாவும்”


தலைப்பைப் பார்த்து இது ஏதோ குஜால் மேட்டர்னு வந்தீங்கன்னா முதலிலேயே சொல்லிடறேங்க இது அது மாதிரி மேட்டர் இல்லை, ஜுஜுபி விஷயந்தாங்க.

நம்ம வூடு சின்ன வூடுதாங்க ஆனா வீட்டுக்கு முன்னால பெரிய தோட்டத்தைப் பாக்கலாங்க. கேட்ட துறந்து நடுவாலே பாதை மேலே நடந்து வந்தீங்கன்ன, அவரை, பாகல், தக்காளி, கத்திரி, புடலை, சுண்டைக்காய் அங்க காய்ச்சு தொங்கரதே பாக்காம இருக்க மாட்டிங்க. அது மட்டும் இல்லைங்க முளை கீரை, பசலை, பொன்னாங்கன்னின்னு எல்லாம் இருக்கும். எல்லாம் எங்க அம்மா கைவண்ணம் தான். இந்தத் தோட்டத்தில் அவங்க உழைப்பைப் பார்க்கலாம். எங்க வூட்டுலே இருக்கிற இரண்டு கருவேப்பிலை மரமும் காய்கறி வியாபாரிகளுக்கு கொசுறு. ஆனா அம்மா சும்மா கொடுக்க மாட்டாங்க, அவங்க கிட்டே வீட்டுலே இல்லாத காய்கறிலே எதாவது கொடுத்தா தான் பறிக்க விடுவாங்க.

இந்தத் தோட்டத்துக்கு வேண்டிய சமாசாரம் அதாங்க கடப்பாரை, மண்வெட்டி, களைகொத்து , பாண்டு எல்லாம் அதோ மேக்காலே இருக்குதே அந்தச் சின்ன ரூம்புலேதான் பூட்டி வச்சிருப்பாங்க. எங்க அம்மாவைப் பார்த்து அக்கம் பக்கத்து வூட்டுக்காரங்களுக்கும் அதே போல செய்யன்னுமுட்டு அவங்க அவங்க சின்ன சின்னதா தோட்டம் வைக்க ஆரம்பிச்சாங்க. அதற்கு வேண்டிய எல்லா சாமானையும் எங்க வீட்டிலே தான் வந்து வாங்கிட்டுப் போவாங்க. ஆனா அம்மா சும்மா கொடுக்க மாட்டாங்க, ஏதாவது பொருளே எங்க வீட்டிலே வச்சாதான் கொடுப்பாங்க. ஒவ்வொரு வீட்டிலேயும் பொருள் மாறாது. செண்பகா வீட்டு சொம்பு, அலமேலு வீட்டு அண்டா, சரோஜா வீட்டு டேக்ஸா, அப்பத்தான் நம்ம பொருள் யார் வீட்டுலே இருக்குதுன்னு தெரியுமாம். இப்படித்தான் ஒரு நாளைக்கு சரோஜா வந்து கடப்பாரை என்னாண்ட கேட்டா, “நான் உன் டேக்ஸா எங்கே காமி” என்றேன். அம்மா சமையலில் மும்முரமா இருந்தாங்க. “டேக்ஸா மறந்துட்டேன், அரை மணியிலே கடப்பாரைக் கொடுத்திடறேன் என்று வாங்கிச் சென்றாள் சரோஜா.

நான் பிறகு அம்மாவிடம் சரோஜாவுக்கு கடப்பாரை கொடுத்ததை சொன்ன பொழுது, சண்டாளா ஏன் கொடுத்தாய்?, அந்தக் கடப்பாரையை அவளிடமிருந்து வாங்க முடியாது, போய் டேக்ஸா வாங்கிவா என்றாள்.

நான் சரோஜாவிடம் டேக்ஸா கொடு இல்லை என் கடப்பாரையாவது திரும்பக்கோடு, அரை மணி ஆகிவிட்டது, அம்மா வையறாங்க என்றேன். நீ போம்மா நான் இன்னும் சிறிது நேரத்தில் கொண்டு வந்துக் கொடுக்கிறேன் என்றாள்.

அம்மா என்னைப் பிடித்துக் கொண்டு விட்டாள், “நீ என்ன பெரிய வள்ளல்னு நினைப்பா, நான் காரணமாகத்தான் அவர்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு தோட்ட சாமான்களைக் கொடுக்கிறேன், இல்லை என்றாள் நமக்கு வேண்டுகிற பொழுது அவர்கள் சாக்கு போக்கு சொல்லிக் கொடுக்கமாட்டார்கள்” என்றாள்.

இப்பொழுது தெரிந்திருக்குமே உங்களுக்கு கடப்பாரைக்கும் டேக்சாவுக்கும் இடையே நான் பட்ட பாடு.

விகடனுக்கு நன்றி-ஆத்தா நான் இன்னொரு தபா பாசாயிட்டேன்



எனது ப்ளாகை
குட் ப்ளாக்ஸில்
இரண்டாவது முறையாக
அமர்த்தியமைக்கு
யூத்ஃபுல் விகடனுக்கு
மிக்க நன்றி .
எனதுப் பதிவுகளுக்கு
தொடர்ந்து ஆதரவு
அளித்து வரும்
சகப் பதிவர்களுக்கும்,
வாசகர்களுக்கும் மிக்க நன்றி.

விகடன் “குட் ப்ளாக்ஸ்” வெளியிட்ட எனது பதிவு

தேவை.... (நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே)
இந்த ப்லோகைப் படிக்க
http://kummacchi.blogspot.com/2010/01/blog-post_19.html


விகடன் வாசகர்கள் அனைவருக்கும்
மற்றும்
விகடன் குழுமத்தினருக்கும்
எனதினிய நன்னாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நன்றி .


கும்மாச்சி

Wednesday 20 January 2010

கழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்பதுவும்


“ஏலே மருது இன்னாடா இன்னிக்கு வயலுக்கு இவ்வளவு தாமதமா வரே என்று மண்ணாங்கட்டி” குரல் விட்டார்.

“அடே போ பெரிசு கலிஞர் கொடுத்த பெட்டிலே இந்த குட்டிங்க எல்லாம் புட்டத்த ஆட்டிக்கின்னு இருந்தாங்களா, அத்தே பார்த்து அசந்து தூங்கிட்டேன்”.

“ஏலே ஏண்டா தாமதம்னு கேட்டா அசிங்கமா வா பேசுதே போலே போய் வேலயப்பாரு. ஏண்டா நீங்க எல்லாம் பொட்டியில எத்தினி உருப்படியான விஷயம் காமிக்கிரானுங்கோ அத்தே பாக்க மாட்டீங்களா”.

“அட போ பெருசு அதெல்லாம் உன்னியப் போல பெருசுங்களுக்குத்தான்”.

“சரி அத்தே விடு அந்த மதுரக்காரர் அதாண்ட விசயகாந்து இப்போ மத்த கட்சிங்கக் கூட கூட்டணி வச்சிக்க போராராமே, செய்தில போட்டுக்கிறான்”.

“அஹ அஹான் பெரிசு அவருக கட்சியிலே அல்லாரும் சொல்லிக்கிரானுங்கா கூட்டணி இல்லேன்னா அம்பேல் ஆயிடுவோம்னு. அவனுங்க எல்லாம் கைக்காச வுட்டு நொந்து போய்க்கிரானுங்க”.

“அது சரிடா அந்தாளு கடவுளோடையும், மக்களான்டையும் தான் கூட்டனின்னு சொன்னாரு. மேலே வேற அந்த மருத்துவர அஞ்சு வருசம் புடவை துவைப்பாரு, அஞ்சு வருசம் வேட்டி துவைப்பாருன்னு நக்கல் பண்ணாரு. இவரு இப்போ இன்னாத்த துவைப்பாராம்”

“அட போ பெரிசு கடவுள் அத்தக் கேட்டுத் தான் அம்பேல் ஆயிட்டாரம, எங்கே கோமணத்தே உருவிடுவாரோன்னு. மக்களுங்க இப்போ விவரமாயிட்டானுங்க, காசு எவன் தாரானோ அவனுக்குத்தான் கூட்டணிங்கிரானுங்க. எப்போடா எவனாவது மண்டையப் போடுவான் எப்படா இடைத் தேர்தல் வரும்னு கைய தேய்ச்சிக்கின்னு இருக்கானுங்க”.

“சரி இப்போ அவரு யாரோடாப் போவாரு. ஏலே சொல்லுடா மருது”.

“அடப்போ பெருசு உன்னோட காலத்திலே வழிமடையையும், வரத்து மடையும் கையாலேயே துறந்து மூடி விவசாயம் பண்ணே, அத்தே பம்ப் செட் வரைக்கும் கொனாந்து வுட்ட எவன் அன்றாயரையாவது துவைக்கட்டும், இல்லே அ. கு....டி யாவது தேய்க்கட்டும், நம்க்கின்ன பெருசு சும்மா தொனதொனக்கதே வேல செய்யவுடு. நானே மானட மயிலாட பாத்து மப்பாயிருக்கன்”.

ஏலே ஏலே என்னாலே மொனமொனக்குதே, வேலையப் பாரு.

Tuesday 19 January 2010

தேவை ………….(நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே)


நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே. நூறாவது பதிவுலே "சொந்தத்துலே ஒன்றும் சுட்டதுலே ஒன்றும் போட்டிருக்கேன்". எல்லாம் கவுஜ தான், படித்துவிட்டு வோட்டை சரியாக் குத்துங்க. ஒரு வோட்டு குத்தினா ஒரு வோட்டு ப்ரீன்னு "வேட்டைக்காரன்" ரேஞ்சுக்கு நாங்களும் இறங்கிடுவோம்லே.

தேவை

காலையில் எழுகையில்
கவலையற்ற கண்விழிப்பு
கனிவுடன் கடமையாற்ற
கள்ளமில்லா மனது

மாலையில் வீட்டில்
மலர்ந்த முகத்துடன் மனைவி
இனிதே குடும்பத்தினருடன்
இடரில்லா ஓய்வு

சத்தமில்லா சங்கீதம்
குற்றமில்லா உள்ளம்
உற்ற நண்பர்கள்
மற்றவை பெரிதில்லை

பெற்ற இவை யாவும்
போற்ற மனம்
இருந்தால் காணி நிலம்,
காசு பணம் தேவை இல்லை.


ஒரு சாப்ட்வேர் பொறியாளரின் கடைசி கானம்

வீடு வரை விண்டோஸ்
வீதி வரை என்.டி.
காடு வரை யுனிக்ஸ்
கடைசி வரை யாரோ?

தொட்டிலுக்கு பேசிக்
கட்டிலுக்கு யாஹூ
பட்டினிக்கு பாப்கார்ன்
கெட்டபின்பு யு. எஸ்.

Monday 18 January 2010

தமிழ் மொழி போல்.......


செம்மொழியாம் தமிழ்
செய்தி அறிவிப்பு
செய்தி வாசிப்பவரோ
செழுமையில் கவனிப்பு

அரிதாரம் பூசுவதில்
அழகிய கவனம்
உச்சரிப்பில் உதவாத
மெத்தனப் போக்கு

பழமொழியில் கொலை-
மொழிப் பற்று
“விலை”யும் பயிர்
“முலை”லே தெரியுமாம்.

விளையும் பயிரை
தேடுவதிலும் ஆபாசம்.
தமிழ் இனி
மெல்ல சாகும்
கூற்றுப் பொய்யாகும்
செழுமையில் கவனம்
குறையாதப் பொழுது
எங்கள் தமிழ்
முந்தானையில் வாழும்.

Friday 15 January 2010

கட்டினாக் கோட்டை முட்டினாக் கொடநாடு.


மண்ணாங்கட்டி, மறுபடியும் வரேனுங்க. அது என்னாங்க புது செய்தி, அம்மாக் கோட்டை பக்கம் போயிருக்கிராங்கன்னு நம்ம மருதுக் கிட்டே கேட்டா இந்த போக்கனங்க்கெட்டப் பய போயஸ் தோட்டத்துல்லே புல்லு வெட்ட சொல்ல ஒட்டுக் கேட்டா மாதிரி இல்லப் பேசறான்.

சும்மா கொடநாடுக்கும் போயஸ் தோட்டத்துக்கும் போய் புளிப்பு ஊத்திச்சாம். அதாலே கோட்டைப் பக்கம் போய் நாம மஞ்சத் துண்ட வம்பு வலிக்கலாம்னு சகோதரிக்கிட்டே சொல்லிக்கின்னு சடுதியிலே போய்ட்டாங்களாம்.

போய் என்னாத்தடா கிழிச்சாங்கன்னு கேட்டா மருதுப் பையன் சொல்றான், அம்மா சும்மா வுட்டு கேட்டதிலே மஞ்சத் துண்டு மப்பாயிட்டாராம்.

அட போலே போய் வேலையப் பாரு. அந்தாளு பனங்காட்டு நரி சல சலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டாரு. அப்படின்னா இவன் மேலே வம்புக்கு இழுக்கிறான்.

“இன்னா அம்மா இன்ன சோக்கா பாடினாங்க தெரியுமா. “தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதேன்னு” அப்போ இன்னா சொல்வாராம் அப்படிங்கிறான்.

“அட போலே எந்தத் தலைவனே சொல்றாங்கன்னு அந்த அம்மாவுக்கே தெரியலே. அவங்கக் கட்சியிலே எங்கடா தலைவன் இருக்கிறான். அம்மாதானேடா அல்லாம். ஏலே மருது என்னாட சொன்னே மவனே நாளைக்கு வேலைக்கு வராதே”.அப்படின்னு வெருப்பிலே வெடிச்சா

“அட போ பெருசு சும்மா அம்மா வழிய மறக்காம இருக்க சொல்ல போய் கையெழுத்து போட்டு வந்திருக்காங்க, இத்தப் போய் பெரிசா பேசிக்கின்னு, நான் வேலைக்கி வரலேன்னா வரப்புலே களை எல்லாம் எவன் பிடுங்குவானாம்”, அப்படிங்கிறான் நியாயம் தானுங்களே.

Tuesday 12 January 2010

பழையன கழிதலும் புதியனப் புகுதலும்


பொங்கல் வருகிறது என்றாலே “முத்தண்ணா” மேர்சல் ஆயிடுவது வழக்கம். முத்தண்ணாவின் உண்மையானப் பெயர் ஜனார்த்தனம். தெருவில் உள்ள நாங்கள் அவருக்குப் வைத்தப் பெயர் “முன்ஜாகிரதை முத்தண்ணா”. இவர் பயங்கர உஷார் பார்ட்டி. தன் மொபெடை வாசலில் நிறுத்தியவுடன் மறக்காமல் ரியர் வியு மிர்ரோரையும் கழற்றி வீட்டுக்குள் கொண்டு போகும் முன்ஜாகிரத்தை நாங்கள் யாவரும் கண்டிராதது. ஆனால் சொல்லி வைத்தார் போல் அவருடைய வண்டியிலிருந்து ஸ்பார்க் பிளக் லவட்டப் படும்.

இவர் வீட்டை குறி வைத்து திருடும் கோஷ்டி எங்கள் வீட்டில் பின்புறம் இருக்கும் ஒரு குடியிருப்புத்தான். ஆனால் அவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மிகவும் மோசமானப் பார்ட்டி. அவர்கள் நம் கண் முன்பே எல்லாவற்றையும் எடுத்து செல்லும் நவீன கள்வர்கள். கிரிக்கெட் விளையாடும் பொழுது மட்டையைப் பிடுங்கிக் கொண்டு செலவார்கள். அவர்களுடன் சென்று கெஞ்சி பின்னர் நம் பாக்கெட்டில் இருக்கும் ஒரு ருபாய் எடுத்துக் கொண்டு தான் மட்டையைக் கொடுப்பார்கள், விளையாட்டு அநாவசியமாகத் தடைப்படும். அங்கு இருக்கும் பெண்பிள்ளைகள் இவர்களைவிட மோசம நாங்கள் விளையாடும் மைதானம்தான் அவர்கள் கழிப்பிடம், பந்து அந்தப் பக்கம் போனால் அவர்கள் வேலை முடிந்து செல்லும் வரை அந்த பக்கம் திரும்ப முடியாது. எவனாவது அணிச்சையாகத் திரும்பி விட்டால் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் “புழுத்த நாய்” குறுக்கே போக முடியாதபடி விழுந்து தெறிக்கும்.

போகிப் பண்டிகை அன்று அவர்கள் விடியலிலே எங்கள் தெருவுக்கு வந்து கையில் கிடைத்ததை எல்லாம் போட்டு எரிப்பார்கள். துணியெல்லாம் காயப் போடமுடியாது. ஒவ்வொரு வருடமும் முத்தண்ணா வீட்டு மரக் கதவு போகிக்கு இறையாகிவிடும். வருடா வருடம் போகி முடிந்தவுடன் புதுக் கதவு போட்டு பச்சை வர்ணம் அடித்து வைப்பார்.
அந்த வருடம் போகிக்கு நாங்கள் காலை எழுந்த பொழுது அவர் வீட்டுக் கதவு காணாமல் போயிருந்தது. நாங்கள் வழக்கமாக அவர் வீட்டுக்கு சென்று “என்ன சார் இந்த வருடமும் புதுக் கதவா” என்று கிண்டலாகக் கேட்டதற்கு, அவர் “டேய் நான் உஷார் பேர்வழி கதவை ராத்திரியே கழற்றி வீட்டுக்குள் வைத்து விட்டேன்” என்று எங்களை ஒரு வித பெருமிதத்துடன் நோக்கினார். .

அப்போது அவர் மகள் பதட்டத்துடன் ஓடி வந்து “அப்பா தோட்டப் பக்கம் பாருங்கப்பா, குளியலறைக் கதவைக் காணவில்லை, கூடவே பிளாஸ்டிக் பக்கெட், குவளை ஒன்றும் இல்லை நாமெல்லாம் குளிக்க முடியாதப்பா” என்றாள்.

Wednesday 6 January 2010

படித்ததில் ரசித்தது (1)


நான் படித்ததில் ரசித்ததை பகிர்ந்துக் கொள்ள விருப்பம். மொக்கைகளுக்கு நடுவே நல்ல கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


தத்துவ வேகத்தை சத்திய மார்கத்தை
பக்தர்கள் பார்க்கட்டுமே-சிவ
முக்தர்கள் காக்கட்டுமே
பித்தன் இருக்கின்ற காலம் வரையிலும்
பெண்ணை ரசிக்கட்டுமே
மது கண்ணை மறைக்கட்டுமே.


--கண்ணதாசன்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைய நெஞ்சம்
கலந்தனவே.



--கவிஞர் மீரா. (மீ. ராஜேந்திரன்)

Saturday 2 January 2010

2010


ஒரு வழியாக இரண்டாயிரத்து ஒன்பது முடிந்து இரண்டாயிரத்து பத்தில் காலடியெடுத்து வைத்திருக்கிறோம். புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் எல்லா டிவி சேனல்களிலும் வழக்கம் போல் அரைத்த மாவையே அரைத்து கிடைத்த கேப்புகளில் தொப்புள் சூப்பும் தொடை கறியும் படைத்தார்கள். போதாக்குறைக்கு புதிய படத்தை எடுத்த பொழுது ஸ்டுடியோவில் உள்ள வாட்ச்மன் எத்தனை முறை தும்மினார், பினன்சியர் வீட்டு நாய் எத்தனை முறை குறைத்தது என்று புள்ளிவிவரங்கள். நடுவில் ஒரு வடக்கத்திய தொப்புலாளின் அபத்தமான தமிழ்.


சரி என்று சேனல் மாத்தினால் ஜோசியம் என்ற பெயரில் ஒரு பெரிய டுபாக்கூர் நிகழ்ச்சி. எனக்கு புரியாத புதிர் இது. எல்லா ஜோசியமும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள். குரு சனி வ்வூட்ல குந்திக்கின்னு நிலாவே லுக் உடரதால சூரியன் மெர்சலாயி கடக ராசிக்காரன் பைக்ல போசொல்ல செல் போன்ல பேசினா பெஜாராயிடுவான் அப்படின்னு ஒவ்வொரு ஜோசியனும் அவனவனுக்கு தெரிஞ்சதை கதை அளந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு குழுக்கள் பரிசு வேற வைத்து யாருக்கு பரிசு விழும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு ஜோசியத் திலகமும் ஒவ்வொரு ராசி சொல்ல பரிசு விழுந்தது சற்றே சம்பந்தமில்லாத ஒரு ராசிக்காரருக்கு. எனக்கு புரிந்த வரை இந்த நிகழ்ச்சி ஜோசியம் என்ற ஒரு டுபாகூரை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து “பொய்” என்று உணர்த்தவோ என்று தோன்றியது.

கோபி ஒரு முடிவோடத்தான் இருக்காப்ல.

எல்லா ப்லோகங்களுக்கும், ப்லோகிக்களுக்கும் புதிய ஆண்டில் வழக்கம் போல மொக்கைகள் தொடர எல்லாம் வல்ல கூகிள் ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்.