இன்று இரண்டு செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று உமாசங்கர் மீண்டும் பணி நியமனம். தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கர் டான்சி உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது மாநில அரசுக்கு விழுந்த அடி. ஊழலை அம்பலப் படுத்தியதற்காக பழைய கோப்பை தூசி தட்டி எடுத்து மாநில அரசு அவரை வீண் பழி சுமத்தி தற்காலிக பணி நீக்கம் செய்தது. அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உமா சங்கருக்கு கிடைத்த முதல் வெற்றி.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
மறுபடியும் தர்மம் வெல்லும்.
இரண்டாவது செய்தி, கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிகெட் வீரர்களை ஐசிசி நீக்கியிருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் எங்கு சென்றாலும் தொல்லைதான். மிகவும் ஒழுக்கமானவர், மத நெறிகளை கடைபிடிப்பவர் என்று சொல்லப் பட்ட சயீத் அன்வர், சக்லைன் முஷ்டாக் சவுத் ஆப்ரிக்காவில் பாரில் பௌன்செர்களிடம் அடி வாங்கிய செய்தி சில வருஷங்களுக்கு முன்னால் நடந்தது உலகறிந்த விஷயம். இப்பொழுது அமிர, ஆசிப், பட், மூவரும் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் வரும் செய்திகள் பாகிஸ்தான் அரசை உலக அரங்கின் முன் சங்கடப் படுத்தியிருக்கிறது.
ஆதலால் பாகிஸ்தான் இப்பொழுது இந்தியாவை இதற்கு குறை சொல்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்திய உளவு அமைப்பான ரா(RAW) தான் காரணமாம். நல்லா யோசிக்கிரானுங்கப்பா. சரத் பவார் இதை திட்டமிட்டு செய்ததாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை சூது கவும்,
அதை பாகிஸ்தான் இந்தியா மீது ஏவும்.
சும்மா ஒரு ப்லோல வந்திடுச்சு.
correct
ReplyDeleteபித்தன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteபாகிஸ்தான் கிரிக்கெட்டை சூது கவும்,
ReplyDeleteஅதை பாகிஸ்தான் இந்தியா மீது ஏவும்.
.....எப்படிங்க..... இப்படி! கலக்கிட்டீங்க!
நன்றி சித்ரா
ReplyDeleteபாகிஸ்தான் கிரிக்கெட்டை சூது கவும்,
ReplyDeleteஅதை பாகிஸ்தான் இந்தியா மீது ஏவும்.
//
சரியா சொன்னீங்க தல...
hahaha.. super அண்ணாச்சி...:)
ReplyDeletegud post
ReplyDeleteஇதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...!!
ReplyDeleteகரெக்ட் தல
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்கு!
ReplyDelete