Thursday 1 September 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 6

இந்த வரிசையில் எனக்கு பிடித்த மற்றுமொரு பதிவர் நண்டு @ நொரண்டு. இவரின் இயற்பெயர் எஸ்ரா ராஜசேகர். மற்றுமொரு ஈரோட்டுக்காரர். வழக்கறிஞர். பெறும்பாலும் அரசியல் சமூகம் சார்ந்த பதிவுகள் இடுபவர். 

http://nanduonorandu.blogspot.com

கிட்டத்தட்ட முன்னூறு பதிவுகள் எழுதியிருக்கிறார். தொடர்பவர்களின் எண்ணிக்கை இருநூறை தொட இருக்கிறது. முகப்பில் “Question Everything”  என்று தொழில் ரீதியான வழக்கத்துடன் நம்மையும் கேள்விகள் கேட்க வைக்கிறார்.
இவரின் இயல்பான நடைக்கு நான் ரசிகன். சொல்ல வந்த கருத்தை மிகவும் எளிய வார்த்தைகளில் கொடுத்து சமூக அநீதிகளை சாடுவது இவரது பெரிய பலம்.
“மரணதண்டனையை ஒழித்திடு ...ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு” இவரது சமீபத்திய இடுகை. மரணதண்டனை எனும் காட்டுமிராண்டித்தனத்தை ஒழிக்க எல்லோரையும் ஒன்று பட்டு செயல் பட அழைக்கும் இந்த இடுகை நான் மேற்கூறிய காரணங்களுக்கு எடுத்துக்காட்டு.

வருடா வருடம்
வருடங்களைத் தாங்கி

வாழ்க்கை
கரையாக
பயணிக்கின்றன
டைரிகள் ...

டைரிகள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதையின் சில வரிகள். என்ன எளிமையான சொற்கோவை. மேலும் “வசதிகள்”, “அவளின் இதயத்தில்” “என் கவிதை”, “புலிகளாவோம்” போன்ற கவிதைகள் நல்ல தரம் வாய்ந்தவை.
இவர் பதிவுகள் தொடங்கிய பொழுது நிறைய தன்னுடைய தொழில் சார்ந்த பதிவுகள் எழுதி நமக்கு வித்தியாசமான அணுகு முறையில் நாட்டு நடப்புகளையும், ஜனநாயக மீறல்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
வழக்கறிஞர் ராஜசேகர் அவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. வாழ்த்துகள். 

காணாமல் போன பதிவர்கள் 

“சிரிப்பு போலீஸ்” என்ற பெயருடன் ஒருவர் பதிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய பதிவுகளை சமீப காலமாக பார்க்கமுடியவில்லை. விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Follow kummachi on Twitter

Post Comment

38 comments:

settaikkaran said...

நண்டு@நொரண்டு - பல விஷயங்களில் இவருடன் மாறுபட்ட கருத்துள்ளபோதிலும், இவரது இடுகைகளை தவறாமல் வாசிக்கிறேன்.

"மரணதண்டனையை ஒழித்திடு ...ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு" - எனது கருத்துடன் பெருமளவு ஒத்துப்போன ஒரு இடுகை! எளிமையாக எழுதினாலும், நிறைய முனைப்புடன் எழுதுபவர் என்பதை கவனிக்க முடிகிறது. பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

சிரிப்பு போலீஸ் எங்கே? - என்று தேடுகிறவர்களில் அடியேனும் ஒருவன். :-)

கும்மாச்சி said...

சேட்டை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Mohamed Faaique said...

//நண்டு@நொரண்டு - பல விஷயங்களில் இவருடன் மாறுபட்ட கருத்துள்ளபோதிலும், இவரது இடுகைகளை தவறாமல் வாசிக்கிறேன்////

என் கருத்தும் இதுவேதான்..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி முகமது, தங்களுக்கு எங்களது ஈத் பெருநாள் வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிமுகத்திற்கு நன்றி .மிக்க மகிழ்ச்சி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜசேகர் ஸார்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிரிப்பூ போலீஸ், பெண் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்.. ஹி..ஹி..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி, என்ன கொஞ்ச நாட்களாக காணவில்லை?. காணாமல் போனவர்களில் போடலாம் என்றிருந்தேன்.

K said...

வணக்கம் கும்மாச்சி சார்! கும்புடுறேனுங்க!

நண்டு சார்! ரொம்ப நல்ல பதிவர் ஆச்சே! அவருக்கு வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

ஐடியா மணி வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூவை கலக்கலுடன் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு@நொரண்டு எங்க ஊர்க்காரர்

>>>சிரிப்பு போலீஸ்” என்ற பெயருடன் ஒருவர் பதிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய பதிவுகளை சமீப காலமாக பார்க்கமுடியவில்லை. விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


அவர் கல்யாணத்துக்குப்பிறகுதான் போஸ்ட் என அவரது 12 லவ்வர்ஸ் மேலும் சத்தியம் பண்ணி இருக்கிறார்

கும்மாச்சி said...

செந்தில் உங்களை மனதில் கொண்டுதான் அவரை மற்றுமொரு ஈரோட்டுக்காரர் என்று எழுதினேன், சிரிப்பு போலிஸ் திருமணம் முடித்து விரைவில் வலைப்பூவில் வர எதிர்பார்க்கிறோம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்டு@நொரண்டு பற்றி தெரிந்துக் கொண்டேன்...

கண்டிப்பாக அவர் பதிவுகள் மூலம் சூப்பர் ஸ்டார்தான்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிரிப்பு போலீஸ் மீண்டும் வர விரும்புகிறேன்...


வாழ்த்துக்கள்...

Unknown said...

மாப்ள கலக்கலா எழுதி இருக்கீங்க....வாழ்த்துக்கள் நண்பர் ராஜ சேகர் அவர்களுக்கும் தங்களுக்கும்!

மன்மதக்குஞ்சு said...

நல்ல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்யும் இந்த தொடருக்கு நானடிமை.
இதன் மூலம் காணாமல் போன பதிவர்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

M.R said...

ஆம் ராஜசேகர் நல்ல நண்பர் அவரது பதிவும் நல்ல அறிவு பூர்வமாக இருக்கும் .அவரது பதிவை தொடரும் நண்பரில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி.

எனது பதிவிர்க்கு வந்து பின்னூட்டமிட்டதர்க்கு மிக்க நன்றி கும்மாச்சி நண்பரே.
தொடர்ந்து வாருங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிப்பு போலீஸ் இப்போது கூகிள் பஸ்சில் பிசியாக இருக்கிறார்......

கும்மாச்சி said...

சிரிப்பு போலிஸ் பற்றிய தகவல் கொடுத்ததற்கு நன்றி ப.கு.ரா.

M.R said...

தமிழ் மணம் எட்டு

உலவி 1

M.R said...

சாரி உலவு இணைக்க வில்லையா நண்பரே ஒட்டு போட இயலவில்லை

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எம்.ஆர். உலவில் இணைத்த என்னுடைய நான்கு இடுகைகளும் ஏனோ இன்னும் வெளிவரவில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

சிரிப்பூ போலீஸ், பெண் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்.. ஹி..ஹி..//

மை போட்டு பாப்பானுகளோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“சிரிப்பு போலீஸ்” என்ற பெயருடன் ஒருவர் பதிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய பதிவுகளை சமீப காலமாக பார்க்கமுடியவில்லை. விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.//

அவர் போன்ற அறிவாளிகள் நம் பதிவுலகிற்கு தேவை. அவர் எங்கிருதாலும் உடனே அவரது இலக்கிய மிக்க பதிவை போட வேண்டும் என வேண்டுகிறேன் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேட்டைக்காரன் said...

சிரிப்பு போலீஸ் எங்கே? - என்று தேடுகிறவர்களில் அடியேனும் ஒருவன். :-)//

விதி யாரை விட்டது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

அவர் கல்யாணத்துக்குப்பிறகுதான் போஸ்ட் என அவரது 12 லவ்வர்ஸ் மேலும் சத்தியம் பண்ணி இருக்கிறார்//

அண்ணே அந்த 12 லவ்வர்ஸ் விலாசம் ப்ளீஸ். விலாசம் விலாசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கும்மாச்சி said...

செந்தில் உங்களை மனதில் கொண்டுதான் அவரை மற்றுமொரு ஈரோட்டுக்காரர் என்று எழுதினேன், சிரிப்பு போலிஸ் திருமணம் முடித்து விரைவில் வலைப்பூவில் வர எதிர்பார்க்கிறோம்.
//

:)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிப்பு போலீஸ் இப்போது கூகிள் பஸ்சில் பிசியாக இருக்கிறார்......//

அதில் பன்னிகுட்டி ராம்சாமி கண்டக்டராக வேலை செய்கிறார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ஆல்

போன வாரம்தான ஒரு போஸ்ட் போட்டேன்.

கும்மாச்சி said...

ரமேஷ் சத்தியமா நீங்க ரொம்ம்ம்ப நல்லவரு, எத்தனை பின்னூட்டம் போட்டிருக்கிங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கும்மாச்சி said...
ரமேஷ் சத்தியமா நீங்க ரொம்ம்ம்ப நல்லவரு, எத்தனை பின்னூட்டம் போட்டிருக்கிங்க.
///////

மாடரேசனை மட்டும் எடுத்துப் பாருங்கண்ணே....

kobiraj said...

உங்கள் தளத்துக்கு நான் புதுசு .

நிகழ்வுகள் said...

எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவர்....வாழ்த்துக்கள் சார் ..

Anonymous said...

கும்மாச்சி உங்கள் பணி தொடரட்டும்.

கும்மாச்சி said...

புதிய வரவு கோபிராஜை, வருக.

இராஜராஜேஸ்வரி said...

வழக்கறிஞர் ராஜசேகர் அவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. வாழ்த்துகள்./

சூப்பர் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

கும்மாச்சி said...

நன்றி ராஜராஜேஸ்வரி.

வலிப்போக்கன் said...

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க களத்தில் குதித்திருக்கும் தங்களுக்கு நன்றி! நன்றி!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.