Pages

Wednesday 28 September 2011

ப்ரின்சிபால்நாயை காணோம்

உன் நண்பன் யாரென்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன் ரஹ்மானின் அடுத்த ஆல்பம் எதுவென்று சொல் ஹாரிஸ் இன் அதற்கடுத்த ஆல்பம் எதுவென்று சொல்வேன்.
முன்பெல்லாம் மேனேஜ்மென்ட் மீட்டிங்குகளில் நாலு பிஸ்கோத்து தருவார்கள். இப்ப அதுவும் இல்லை வெறும் தண்ணிதான் என்னங்கடா நடக்குது நாட்ல?#$%^&*() Global recession
சதீஷ்: ஏண்டா ப்ரின்சிபால் உன்னை திட்டுறார்.
ரமேஷ்: அவர் நாயை காணோம் என்று பேப்பரில் விளம்பரம் கொடுக்க சொன்னார்.
நான் “ப்ரின்சிபால்நாயை காணோம்” என்று விளம்பரம் கொடுத்தேன்.
ரஜினி தேசம் என்பதை கூட தேஷம் என்கிறாரே...இதை எல்லாம்  கிரந்தம் தவிர் போராட்டக்குழு கண்டிக்காதா?
அவர் எது சொன்னாலும் ஓகே  மச்சான்.................
உள்ளாட்சி தேர்தலில் தே.தி.மு.க தனித்துப் போட்டி. பா.மா.க தனித்து போட்டி.
சபாஷ் சரியான போட்டி, இப்போ எல்லா கட்சியின் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்.
நடிகை சோனாவுக்கு மாரடைப்பு.
எஸ்.பி. பி வீசி எறிந்த ரொட்டித்துண்டில் இதயம் சீராக அடிக்க தொடங்கியது.
எல்லா மச்சான்சும் என்னே மேலே பார்க்காதீங்க.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு அழகான பெண் இருப்பாள்.
ஒரு சாமியார்மடத்தின் சொத்துக்குப் பின்னால் பல நடிகைகள் இருப்பார்கள்.
காதலிலே நற்கலவி உண்டாம் கர்ப்பமும் உண்டாம், ஆட்கொல்லி நோயுமுண்டாம்  ஆதலால் “காண்டம்”உடன் கல்வி செயவீர் இவ்வுலகத்தீரே.---------எய்ட்ஸ் வாசகம்
அம்பாள் ஊசி முனையில் தவம் செய்தாலும் நாம் அடித்துக்கொள்வது என்னவோ சுண்டலுக்குதான்.==========ட்வீட்டரில் படித்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு இழப்பு 1,76,000 கோடியில்லாமல் வெறும் 2645 கோடிதானாம்...................அடப்பாவிகளா காத்திலேயே கணக்கு போடறது இதானா?

Thursday 22 September 2011

கலக்கல் காக்டெயில் -42


கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அந்த ஊர் மக்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்களும் உண்ணாவிரதம் இருந்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி. சமீபத்திய உண்ணா விரதப் போராட்டங்களில் இது சற்று வித்தியாசமானதே. முழுக்க முழுக்க கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் அநாவசியமான விளம்பர யுத்தியோ வேறேதுவுமில்லாது சாதித்தது இந்த நாட்டில் இன்னும் ஆளும் வர்க்கத்திற்கு சற்றே நெஞ்சில் ஈரம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது.

“தமிழ் நாட்டு அண்ணா ஹஜாரே” இந்த மாதிரி போராட்டத்துக்கேல்லாம் வரமாட்டாராங்காட்டியும், அம்மாவிற்கு பயந்து பம்மினாரா இல்லை விளம்பரம் இல்லை என்று ஒளிந்தாரா? தெரியவில்லை.

இதில் தலைப்பில் உள்ள அறிவு ஜீவி, பாதுகாப்பானது என்றால் ஒத்திகை எதற்கு என்று கேட்கிறார். எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்கும் பொழுது hazop study” “emergency preparedness” மற்றும் விபத்து ஒத்திகை செய்வது தேவையான ஒன்று. சீமான் போன்றவர்கள் விளம்பரத்திற்காக மைக் கிடைத்தால் எதை வேண்டுமென்றாலும் உளறலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எதுத்துக்காட்டு.

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்

பட்டோடி அந்த சமஸ்த்தானத்தின் நவாப் என்பதெல்லாம் சமூக ஆர்வலர்களுக்கு. ஆனால் எங்களுக்கு அவருடைய மட்டையடிதான் அவரை புகழ் பெற செய்தது என்பது மறக்க முடியாத ஒன்று. முக்கியமாக களத்தில் பந்தை தடுத்து நிறுத்துவதில் புலி என்ற காரணத்தினால்தான் “டைகர் பட்டோடி” என்று அழைக்கப் பட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிரிக்கட்டில் எல்.பி. டபிள்யூ, என்பதற்கு அர்த்தம் இவர் ஷர்மிளா தாகூரை காதலித்தது “love before wedding” என்று அவர் காலத்து பெரிசுகள் பேசிக்கொண்டு ஏதோ கெட்ட வார்த்தை பேசுவதாக நினைத்துக் கொண்டு எங்களை மாதிரி விடலை பசங்களை துரத்திவிடுவார்கள்.

பட்டோடி அல்லாவின் திருவடி சேர வேண்டுகிறோம்.

ரசித்த கவிதை

திங்கள்...
செவ்வாய்...
புதன்...
வியாழன்...
என்று விரல்விட்டு எண்ணி
காணவில்லை ஐந்தாவது ஆணுறை என்று
கணக்கு கேட்கும் உன்னிடம்
எப்படிச் சொல்வேன்...
நேற்று மதியம்
உன் தங்கை வந்தாள் என்று...!
**************************************************
நன்றி.......................பிரபாகரன்

ஜோக் கார்னர் (18++++ மட்டும்)

யார் குற்றவாளி?

கணவனும் மனைவியும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மனைவி கனவில் “ஐயோ என் கணவர் வந்துவிட்டார் சீக்கிரம் போய்விடு”.

கணவன் உடனே  ஜன்னலை திறந்து குதித்து விட்டான்.


ஜொள்ளு

Tuesday 20 September 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 8


பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இந்த முறை அண்ணன் “பன்னிகுட்டி ராம்சாமி”. இவருக்கு ஒரு இணைப்பு கொடுத்தால் பத்தாது. ஏனென்றால் தலைவர் மூன்று வலைப்பூக்கள் வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். 




இவருடைய சுய அறிமுகம் பார்த்தால் தெரியும் பயங்கர நக்கல் பார்ட்டி என்று.


இவருடைய பதிவுகளில் இதே நக்கல் நையாண்டிக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வலைப்பூக்களிலும் மொத்தமாக கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பது பதிவுகள்  இட்டிருக்கிறார். 

இவருடைய டெர்ரர் கும்மியில் “பூமியைத்தேடி” என்று ஒரு புதிய விஞ்ஞான தொடர்கதையை தொடங்கி இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அடுத்த தொடரை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். 

படிக்க வேண்டியவை டெர்ரர் பாண்டியனின் பய(ங்கர)டேட்டா,
பதிவுலகின் மாமாமேதை (நான் மாமேதைன்னா என்ன விட பெரியாளு மாமாமேதைதானே?) சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களை புகழ்ந்து ஒரு வாழ்த்துப்பா பாடியவாறு தொடங்குகிறேன்.

“பதிவுலகம் கண்ட மாமாமேதையே...
உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...
உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...
ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...
அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...
பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...
பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...
பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...
நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?

செம நக்கல்பா.

காணாமல் போன பதிவரில் நான் சிரிப்புபோலிசை பற்றி எழுதியிருந்தேன் அதற்கு ஒரு பதிவர் அவர் கூகிள் பஸ்ஸில் இருக்கிறார் என்றதற்கு நம்ம ப.கு ஸார் ஆமாம்பா அவர் டிரைவரா இருக்கிறார், நான் கண்டக்டர் என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இப்போதான் மேட்டர் புரியுது.

“ஓடு ஓடு நிக்காம ஓடு வேலாயுதம் வருதாம்” ஏன் இந்த கொலை வெறி?.

 ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!

175869

ரொம்ப லொள்ளுதான்.

இவருடைய பதிவுகளைப் பற்றி எழுத நமக்கு வார்த்தை பத்தாதுங்க ஹி......... ஹி.................. ஹி....................

நீங்களே போயி “ராப்பகலா கண்ணு முழிச்சு கடைய தொறந்து வச்சிக்கிராறு”, போங்க அவருக்கு போனி பண்ணுங்க.

Sunday 18 September 2011

கன்றுக்குட்டியின் கற்புக்குக் கூட உத்திரவாதமில்லை இந்த ஆட்சியில்.


குழந்தைகளின் முதல் மொட்டை தாய் மாமனின் பர்சையும் சேர்த்தே அடிக்கப்படுகிறது!@#$%^மொய் எழுதி மொட்டையான மாமன்.
என்னடா வாழ்க்கை சேர்ந்தாற்போல் இரண்டு வேலை பட்டினி இருக்கவும் முடியவில்லை, இரண்டு வேளைக்கு சேர்த்து சாப்பிடவும் முடியலை.................*&^%$சோற்றுக்கு வழியில்லாதவன்.
சரக்கடிக்காதவன் மட்டையானதா சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லை...............*&%^$ டாஸ்மாக் வாசகம்
பரமக்குடியில் துப்பாக்கிசூட்டில் ஆறு பேர் சாவு, குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம்......................சுடு பின் கொடு.........அரசியல் தத்துவம்.
உன்னை கண்டதும் என்னை மறந்தேன்
உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்
----------------ஜொள்ளு கவிதை.
வேலை தெரியாம வேலையில் சேர்ந்தது தப்பில்லை, சேர்ந்த பிறகும் வேலை தெரிஞ்சிக்காம இருக்கிறதும் தப்பில்லை, ஆனால் அதை அடுத்தவன் கண்டுபிடிக்க விடறதுதான் மகா தப்பு.................ட்வீட்
செந்தில்: அண்ணே சாப்ட்வேர், ஹார்ட்வேர் அப்படிங்கராங்களே அப்படின்னா என்னாங்க அண்ணே?.
கவுண்டர்: அடேய் ப்ளுடூத் மண்டையா.........செடிய புடுங்கினா வருமே அது சாப்ட்வேருடா, மரத்தை பிடுங்கினா வருது ஹார்ட்வேருடா மௌஸ்தலையா................... அதுக்குதாண்டா இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா
ட்வீட்டுபவர் சிறியோர் ரி ட்வீட்டுபவர் பெரியோர் ட்வீட்ட்டரில் உள்ளபடி
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ட்வீட்டை ரி-ட்வீட் செய்தல்-----------------------கரையான் என்பவர் ட்வீட்டரில்
ட்வீட்டரில் ட்வீட்டுக ட்வீட்டிய பின் பிற ட்வீட்டிற்கு
ரி ட்வீட்டுக அதற்கு தக.
கோவையில் நான்கு இளைஞர்கள் கன்றுக்குட்டியை கற்பழித்து கைது.............
கன்றுக்குட்டியின் கற்புக்கு கூட உத்திரவாதமில்லாத காட்டாட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது..........................தலைவர் அறிக்கை
கண்ணா காலண்டரில் தேதி கிழிப்பது முக்கியமல்ல, அந்த தேதியில நீ என்ன கிழிக்கறேன்றதுதான் முக்கியம் தெரிஞ்சுக்கோ
தமிழ்நாட்டில் கேளிக்கைவரி நூறு சதவிகிதம் உயர்த்தப்பட்டது, போன ஆட்சியில மொக்கைபடம் கொடுத்து அடிச்ச கொள்ளைக்கு ஆப்பு வச்சிட்டாங்க#$%^&* அம்மா..........அம்மான்னா அம்மாதான்...............
ஆண் மூலம் அரசாளுமாம், மவனே சிம்மாசனத்தில் உட்காரவே முடியாது அப்புறம் எப்படி அரச ஆளறதாம். #$%^&*( ஆதிமூலம்.

Thursday 15 September 2011

இலவசம்






சோற்றுக்கு அரிசி இலவசம்

மாவாட்ட, மசாலா அரைக்க
க்ரைன்டர், மிக்சி
இலவசம்.


வியர்க்காத உடலுக்கு
காற்று வாங்க மின்விசிறியும்
இலவசம்


Wednesday 14 September 2011

கலக்கல் காக்டெயில் -41

பரமக்குடி பதட்டம்

பரமக்குடியில் நடந்த கலவரத்தில் காவற்படை துப்பாக்கியினால் சுட்டதால் இது வரை ஆறு பேர்கள் உயிரிழந்திருக்கின்றனர். பலபேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். மருத்துவமனை வாயிலில் கூடிய உறவினர் கூட்டம் இன்னும் நகராமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். 144 தடையுத்தரவு இருந்தும் அரசு பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இந்தக் கலவரம்  ஒன்றும் திடீரென்று உணர்ச்சிப் பெருக்கில் ஏற்பட்டதாக தோன்றவில்லை. செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு தினம் அன்று, பரமக்குடியில் கலவரம் ஏற்படுத்தி, தேய்ந்து வரும் சாதிக் கட்சிகள் தங்கள் இருப்பினை தூக்கி நிறுத்தவே திட்டமிட்டு செய்திருக்கிறது என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்து.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியை அந்த செப்டம்பர் 11 ல் யாரும் நினைவு கொள்ளவில்லை.

அரசு உயிர் இழந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து விசாரணை வைத்தால் முடிந்துவிடும் விஷயம் இல்லை. உளவுத்துறை இதைப் பற்றி முன் கூட்டியே அரசுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அரசு இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டுவிட்டது போலும். ஜான் பாண்டியனை சில நாட்கள் முன்பே அர்ரஸ்ட் செய்து, ஏனைய கலவரக்காரர்களையும் முன் கூட்டியே சிறை பிடித்திருந்தால் தேவையில்லாத உயிர் பலியையும், அரசுக்கு நேர்ந்த அவப்பெயரையும் தடுத்திருக்கலாம்.

இனி எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் “தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதைதான்”. 

ஆஜராவாரா அம்மா

பெங்களுருவில் நடக்கும் ஊழல் வழக்கில் அக்டோபர் இருபதாம் தேதி அம்மா நேரில் ஆஜராகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அம்மா ஆஜராவார்களா இல்லை மேலும் வாய்தாவா, இல்லை புதிய நாடகம் ஏதாவது அரங்கேறுமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.

அரக்கோணம் ரயில் விபத்து

அரக்கோணத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் நிறைய உயிர் சேதம், பல பேர் காயமுற்றுள்ளனர். வழக்கம்போல் ரயில்வே அமைச்சர் இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கப்போய் விடுகிறார். இன்னும் எத்துனை காலங்கள்தான் இதையே செய்து கொண்டிருப்பார்கள். சின்ன தொழிற்சாலைகள் கூட இந்தக் காலத்தில் விபத்தை தடுக்க தனி பிரிவு அமைத்து அருமையான திட்டங்களை செயலாக்கிகொண்டிருக்க, ரயில்வே என்ற பெரிய நிர்வாகம் இதில் ஒரு அடி எடுத்து வைத்ததாக தெரியவில்லை. ட்ரான்ஸ்போண்டேர்ஸ் (Transponder), பிங்கர் (Pinger), எளிய மின்காந்த அமைப்புகள் என்று எத்துனையோ உபகரணங்கள் எதிரில் வரும் அபாயத்தை முன் கூட்டியே தெரிவிக்க வந்துவிட்டன. ஆனால் நமது ரயில்வே நிர்வாகம் இதை எல்லாம் அறிந்து கொண்டதாக தெரியவில்லை.


நையாண்டி கவிதை

இலவசங்கள் இல்லையாம்
“டாஸ்மாக்”கும் இல்லையாம்
“நத்தமும்” “ஆற்காட்டரும்”
நர்த்தனம் ஆடுகின்ற
நாள் முழுவதும்
பவர் கட்டும் இல்லையாம்
அரசாங்க கஜானாவில்
ஒரு லட்சம் கோடியாம்
நீர் என்ன நரேந்திர மோடியா?
இல்லை மோடி மஸ்தானா??

--------------கவிஞர் கும்மாச்சி


ஜோக் கார்னர்

ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..."
"
அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு"
"
அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..."
"
நல்ல விஷயம்.."
"
இல்ல வர ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா"
"
ஓ கலக்கு"
"
அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் சர்ச்க்கு போய்டுவாங்களாம்"
ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? "
"
இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ"
"
ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்லி தர வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.

அந்தப் பொண்ணு வீட்டுக்கு போறான், எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.அவங்கம்மா,"சரிப்பா.ம்நாங்க சர்ச்சுக்கு போறோ,நீங்க பேசிட்டு இருங்க, சின்ன வயசுப்பசங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல"ன்னாங்க.

அவன் அவசரமா “அப்படி எல்லாம் இல்லீங்க நானும் சர்ச்சுக்கு வரேன்” என்றான்.

அந்தப் பொண்ணு பதட்டமா ஆனா அவன் காதுல கிசுகிசுப்பா,"யேய் என்ன சொல்ற நீ இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே"

அவன் உடனே சொன்னான்,"உங்கப்பா ஃபார்மஸிஸ்ட்னு நீ மட்டும் சொன்னியா?"

வலைப்பூவில் படித்தது. 


ஜொள்ளு