Pages

Thursday 27 October 2011

கலக்கல் காக்டெயில் -46

தீபாவளி

கம்பெனியில் இடைவிடாது ஆணி பிடுங்கியதால் எனது தீபாவளி வாழ்த்துகளும், பதிவும் சற்றே தாமதமாக வெளி வருகிறது. எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள். வீட்டிலும் தீபாவளியை விமர்சையாக கொண்டாட முடியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் தீபாவளி அவ்வளவு விமர்சையாக கொண்டாட முடிவதில்லை. டாலரை துரத்துவதில் உள்ள இழப்பு இது.

நீதிமன்றத்தில் அம்மா

அம்மா போவாங்களா? மாட்டாங்களா? என்ற எதிர்பார்ப்புக்களுக்கு நடுவில் அம்மா இரண்டு நாட்கள் அல்ல மூன்று நாட்கள் தனி விமானத்தில் பறந்து பறந்து நீதிமன்றத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிரார்கள். கேள்வி நீளமாக இருந்தாலும் பதில் ஆம், இல்லை வகையா தெரியவில்லை.

அரசு வக்கீல்: இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் தானா?

அம்மா:  ஆம்

அரசு வக்கீல்: இன்னும் முன் போல அதே மாதிரி சொத்து சேர்க்கறீங்களா?

அம்மா: ????????????

உள்ளாட்சி தேர்தல்

எப்படியோ ஆளும் கட்சி ஐயருடன் கூட்டணி வைத்து எல்லா நகராட்சியையும் கைப்பற்றிவிட்டார்கள். கலைஞர் நேற்றைய தினம் புள்ளி விவரத்துடன் எல்லா கட்சிகள் பெற்ற ஒட்டு சதவிகிதத்தை புட்டு புட்டு வைத்தார். தி.மு.க தமிழகத்தில் இரண்டாம் கட்சியாக இருந்தாலும் மக்களின் கோபம் இன்னும் குறையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கலைஞரின் தற்போதைய நிலைமை கட்சியை பற்றி நினைக்க தோன்றுமா என்பது சந்தேகமே.

ரசித்த முடிவு தே.தி.மு.க, பா.ம.க விற்கு கிடைத்த அல்வா.!!!!!!!!!!!

ரசித்த கவிதை

வண்ண விளக்குகள்
மின்னும் நகைகள்
அர்த்த ஜாமத்தில்
உறக்கம் கெடுக்கும்
ஊர்வலம் வருகிறாள் அம்மன்
பக்தியுடன் கும்பிட்டாலும்
ஆசையுடன் மனம்
முன்னாள் ஆடிச்செல்லும்
கரகாட்டக்காரியின் பின்னே.


---------------பொன்குமார்  

ஜொள்ளு



Thursday 20 October 2011

திசை திரும்பும் கூடங்குளம் போராட்டம்


கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று “தி.மு.க” மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். போராட்டதிற்கு ஆதரவாக இதை தெரிவித்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் அதற்கு அடுத்த சொல்லியது தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு வரவேற்புக்குறியது என்ற கூற்று சந்தேகத்தை எழுப்புகிறது. 

இந்த போராட்டம் தொடங்கிய பொழுது நானும் இதை ஆதரித்தேன், அணு மின்நிலையம் வேண்டாம் என்பதற்காக அல்ல, அதனுடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தி மக்களின் நம்பிக்கை தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ஆனால் இப்பொழுது போராட்டக்குழு போகும் திசையைப் பார்த்தால் இதில் உள்ள உண்மையான கொள்கை சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. மேலும் மத்திய அரசு அமைத்துள்ள பாதுகாப்பு குழுவையும் சந்திக்க மறுக்கிறது. 

அணு மின்நிலையம் பற்றிய என்னுடைய போன இடுகை பார்க்க

உலகில் எழுபத்தி மூன்று நாடுகள் அணுமின் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட தொளாயிரம் அணு மின்உலைகள் உற்பத்தியில் உள்ளன. இந்தியாவில் மட்டும் இருபத்தியேழு மின் உலைகள் உள்ளன. அவற்றில் தாராப்பூர் மின்உலை ஆயிரத்தி தொளாயிரத்து அறுபத்தி இரண்டாம் ஆண்டு முதல் உற்பத்தியில் உள்ளது. இரண்டு அணு மின் உலைகள் நூற்றி அறுபது மெகவாட் மின்சாரம் ஒவ்வொரு மின் உலையிலிருந்தும் உற்பத்தி செய்கிறது. இன்று வரை எந்த ஒரு அசம்பாவிதம் நடந்ததாக குறிப்பு ஏதுமில்லை.

காற்றாலை மூலமாகவோ அல்லது சூரிய ஒளி மூலமாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யாது. மேலும் இதை அமைக்க உண்டாகும் செலவும், மற்றும் இயக்கும் செலவும் மிக மிக அதிகம். 

வளரும் நாடுகளின் தேவை அணுமின்நிலையம். அதற்கு கடலோர மாநிலங்களின் உதவி தேவை. மேற்கு வங்கம் இதை எதிர்த்ததனால் இழந்த இழப்பு அதிகம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பின் நான் பார்த்த கொல்கத்தா இப்பொழுதும் அப்படியே இருப்பது வளர்ச்சியா வீழ்ச்சியா? தெரியவில்லை.

கூடங்குளம் இவ்வளவு செலவு செய்த பின் உற்பத்தியை தடுப்பது நியாயமாக தோன்றவில்லை.

கடலோரா மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சொல்பவர்களுக்கு கடலில் இருக்கும் NORM (Naturally Occurring Radioactive Materials) பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும்?.

Wednesday 19 October 2011

வயிற்றுப் போக்கு (பயலலிதா|)

நாளை முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து “முதலமைச்சருக்கு வயிற்றுப் போக்கினால் பெங்களுரு நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் கேட்டிருக்கிறார்” என்று ஒரு அறிக்கை வந்தால் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
முதலமைச்சரின் சார்பில் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்யப்பட்ட  மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் நீதிபதிகள் கால தாமதம் செய்வதை கண்டித்திருக்கின்றனர்.  
மேலும் கர்நாடக அரசின் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறது. ஆனாலும் முதலமைச்சர் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் தொண்ணூற்றி ஆறு மணி நேரம் முன்பு அறிவிக்கப் படவேண்டிய வரைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு இந்த வழக்கில் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன.
ஜெ ஏன் இந்த வழக்கில் ஆயிரம் முட்டுக் கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார்?
நெஞ்சு வலி முதல், தும்மல், இருமல், தமிழில் குற்றப் பத்திரிகை வேண்டும் என்று இந்த வழக்கை எவ்வளவு தாமதப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்துவிட்டனர்.
இந்த முறை வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு போன்ற காரணங்கள்தான் மிஞ்சியிருக்கின்றன.
இதற்கு என்று தனி ஆலோசனை குழு நியமிக்கப்பட்டு மேலும் நாம் சற்றும் எதிர்பாராத  “டுபாக்கூர் காரணங்கள்” வந்தாலும் வரலாம்.
ஆனால் இவரை ஏதோ ஊழலை ஒழிக்கப் பிறந்தவர் என்று ஒரு கூட்டம் கொண்டாடுவதைதான் சகிக்க முடியவில்லை.

Monday 17 October 2011

கலக்கல் காக்டெயில் -45

ஒரே குட்டையில்

முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் மாநில தேர்தல் ஆணையத்திடம் சரமாரியாக புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சோ ஐயரோ “பொதுமக்களிடமிருந்து புகார் வரவில்லை” என்ற ஓரே பல்லவியை திரும்ப திரும்ப பாடிக்கொண்டிருக்கின்றார் (ஏம்பா நான் சரியாதான் சொல்றேனா). பல வாக்குச்சாவடிகளில் நீதிமன்ற உத்தரவுப்படி வெப் காமெரா பொருத்தப் படவில்லையாம். போன முறை நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.

எல்லோரும் எதற்கு இந்த கவுன்சிலர் பதவிகளுக்கும், தலைவர் பதவிகளுக்கும் அடித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மை கருவிலிருக்கும் குழந்தைக்கு கூட தெரியும்.

வாழ்க ஜனநாயகம்.

கெடுவான்(ள்)

இரண்டு நாட்களாக கோலிவுட் கசமுசா கல்யாணம் நின்று போய்விட்டதாக ஊடகங்களிலும், இணையங்களிலும் செய்தி போட்டு கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கலாம். மற்ற எல்லோருமே சற்றேரக்குறைய “--ரே போச்சு” போயா என்று அடுத்த வம்புக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேரளாவில் அந்த கதாநாயகியின் வீட்டின் முன் நெடிய வரிசையில்

யோவ் பின்னாடி போய் நில்லுயா, நான் காலையில் நாலு மணியில் இருந்து காத்திருக்கேன்.

மொத்தம் ஒன்பது பேர்தானாம்.

“ஒன்பது தாரம்னு தப்பா புரிஞ்சுகிட்டாய்ங்களோ”

தமிழில் போர்நோக்ராஃபி

தமிழில் போர்நோக்ராஃபி இருக்கிறதா என்று கேட்டு சில வருஷங்களுக்கு முன் இந்தப் பக்கங்களில் இருப்பதெல்லாம் “சாஃப்ட் போர்னோ வகை என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது தமிழில் போர்னோ வயசுக்கு வந்து விட்டது. அண்மையில் வெளிவந்த சில புத்தங்கங்களையும், பத்திரிகை கதைகளையும் குறிப்பிட்டு ஆகத்தான் வேண்டும். சாரு  நிவேதித்தாவின் “எக்சிஸ்டன்ஷியலிசமும் பேன்சி பனியனும்” “கர்நாடக அரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும்” என்ற இவ்விரு புத்தகங்களின் எல்லை மீறிய கெட்டவார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லாது எல்லா வக்கிர உறவுகளையும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களை விவரிக்க வார்த்தைகள் புத்தகத்திலேயே இருக்கிறது. “டோட்டல் டிஸ் இன்டக்ரேஷன்” “டோட்டல் ஃபார்ம்லஸ்னஸ்”

...........................கணையாழியில் சுஜாதா.

ஹைக்கூ

சாயங்கால இருளில்
கதவோர மலர்வளையம்
காற்றிலாடுகிறது.


ஜொள்ளு

Friday 14 October 2011

களப்பணி


கட்டிங்வுட்டு கள்ள ஒட்டு போட்டேனா? இல்லை
க்வார்ட்டருக்கும் பிரியாணிக்கும் விற்றேனா? இல்லை
கைகட்டி தொண்டர் என்று பின் சென்றேனா? இல்லை
தலைவன் என காலில்தான் விழுந்தேனா? இல்லை
கடமையில் கைநீட்டி கையூட்டு பெற்றேனா? இல்லை
பணிசெய்ய தலைசொறிந்து நின்றேனா? இல்லை
தடியெடுத்து தலையில்தான் போட்டேனா? இல்லை
கத்தியால்தான் மத்தியில் குத்தினேனா? இல்லை
ஊர் முழுக்க கூத்தியாதான் வைத்தேனா? இல்லை
பேர்சொல்ல சின்னவீடுதான் வைத்தேனா? இல்லை
அறப்போராட்டத்தில் கல் வீசி எறிந்தேனா? இல்லை
சிரிப்புடனே சிறைதான் சென்றேனா? இல்லை
ஊரறிய உண்ணாவிரதம் இருந்தேனா? இல்லை
ஊழலைதான் ஒழிப்பேன் என்று சொன்னேனா? இல்லை
படத்தில்தான் பத்துபேரை துவைத்தேனா? இல்லை
வடநாட்டு நாயகியைதான் தொட்டேனா? இல்லை
பாட்டிகளை பாங்குடனே அனைத்தேனா?
ஈதனைத்தும் நினைக்கும் முன்னே நீ ஏனடா
கட்சியில் சேர்ந்து களப்பணியாற்ற சொல்கிறாய்? 

 
படத்துக்கும்  கவிதைக்கும் சம்மந்தமில்லீங்க

Thursday 13 October 2011

கலக்கல் காக்டெயில் -44

என்னதான் நடக்குது?

சமீபத்தில் சென்னை பெண் ஷமீலா மூணாறில் கொலை செயப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவளது கணவனும் தன் சொந்த ஊரில் (கோபிசெட்டிபாளையம்) தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்கொலைக்கு முன்பு அவன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் போலிஸ் கையில் கிடைத்துள்ளது. அதில் தன் மனைவி பத்து பேருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததனால் கொன்றதாக எழுதியுள்ளான். அதைத் தொடர்ந்து போலிஸ் அந்த பத்து பேரையும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

படித்தவர்கள் இது போல் நடந்து கொள்வது உறுத்துகிறது. முன்பெல்லாம் மண், பெண், பொன் ஆசை எல்லாம் கேடு விளைவிக்கும் என்று சொல்லிகொண்டிருந்தனர், இப்பொழுது மண், பொன், ஆண் என்று மாற்றி சொல்லவேண்டும் போலிருக்கிறது. கடவுளே இந்த ஆண்களை எல்லாம் காப்பாற்று.

இடைதேர்தல் .

திருச்சி இடை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அறுபது சதவிகிதம்தான் வாக்குப் பதிவாம். குறைந்த வாக்குப் பதிவு என்றால் வெற்றியை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

குஷ்பு பிரசாரம் செய்த இடைதேர்தல் வாக்குப் பதிவைப் பார்த்தால் இது “தமண்ணா இடை” தேர்தல் போலிருக்கிறது.

அம்மா மக்களுடன்தான்  

இன்று அம்மா உள்ளாட்சி தேர்தல் ஒட்டு வேட்டையில் கூடங்குளத்தில் பேசும்பொழுது கூடங்குளம் விவகாரத்தில் நான் மக்கள் பக்கம் என்று சொல்லியுள்ளார்கள். மக்களே உஷார்.

இதெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரையில்தான்.

ரசித்தவை

ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

பசியில எழுதிருக்காங்க போலும்.

பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு
ஆவிதான் போயின பின்பு யாரோ அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்.

அம்மையாருக்கு முன்பே தெரியும் போலும் 2ஜி விவகாரம்.

நகைச்சுவை

சும்மா சிரிச்சிட்டு போங்க


மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்குறது ஒரு தனி சுகம்

ஜொள்ளு