Tuesday 22 February 2011

கலக்கல் காக்டெயில்-22

கணீர் குரலார் மரணம்


மலேசியா வாசுதேவன் எழுபதுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட பின்னணி பாடகர். சினிமா ஆசையில் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்து முதலில் விளம்பர பாடல்களில் அறிமுகம். எழுபதுகளில் விவிதபாரதி தொடங்கிய பொழுது வந்த மிகக் குறைவான விளம்பரப் பாடல்களில் “கரோணா காலணிகள்” என்று வானொலியில் அறிமுகம். பின்பு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடி குறுகிய காலத்தில் பிரபலமானவர். பின்பு ரஜினி படங்களில் நிறைய பாடல்கள் பாடி ஏறக்குறைய “அருணாசலம்” படம் வரை அவர் பாடல்கள் நிச்சயம் உண்டு. இப்பொழுது மேடையில் பாடுபவர்கள் அவர் குரலை கொண்டு வருவது கடினம். ஒரு வித்யாசமான குரல். அவர் மறைந்தாலும் அவர் பாடிய “கோடைகால கற்றே, ஒரு தங்க ரதத்தில், வெத்தலை வெத்தலை வெத்தலையோ, ஆட்டு குட்டி, ஆசை நூறு வகை, பூங்காற்று திரும்புமா” பாடல்கள் என்றும் எல்லோர் காதிலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
---------------------------------------------------------------------------------------------

மற்றொரு மரணம் “பார்வதியம்மாள்”

தன் இனத்துக்காக போராடி கயவர்களால் காட்டிக்கொடுக்கப் பட்டு கடைசி வரை களத்தில் இருந்து முழுக் குடும்பத்தையும் இழந்து வீர மரணம் எய்திய வீரனைப் பெற்றவள். கடைசிக் காலங்களில் கணவனையும் இழந்து கவனிப்பாரற்ற வாழ்க்கை. ஆனால் நய வஞ்சக அரசியல்வாதியைப் பெற்றேடுக்காமல் வீரனைப் பெற்றதற்கு அம்மையார் சந்தோஷப் பட்டிருக்க வேண்டும். உண்மையான ஈழத் தமிழன் “வீரத்தாய்” என்று கொடாடுவது மிகப் பொருத்தமே.

“ரத்தத் தீவு” அனிதா பிரதாபின் புத்தகத்தைப் படித்தவுடன், பிரபாகரன் பற்றிய என் எண்ணங்கள் மாறியது.

--------------------------------------------------------------------------------------------

கிரிக்கெட் உலகக்கோப்பை

நல்ல நேரத்துல இந்த விளையாட்ட வைத்து பொதுத் தேர்வு படிக்கும் குழந்தைகளுடன் விளையாடுகிறார்கள். போதாத குறைக்கு தேர்தல் வேறு வீதியா மைக் செட்டை வைத்து அரசியல்வாதிகள் பண்ணும் அலப்பறை வேற. படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ரங்கமனிகள் டிவியை அலறவிட்டு இந்த வெத்து போட்டியை பார்க்காதீர்கள். எப்படியும் இந்தப் போட்டிகளில் முதல் பாதியில் கடைசி ஐந்து ஓவர்களும், கடை பாதியில் ஒரு ஐந்து ஓவர்களும் ம்யூட்டில் வைத்து பார்த்தாலே முழு மேட்ச் பார்ப்பதற்கு சமம். நடுவில் எவனும் ஒன்னும் கிழிச்சிடப் போறதில்லை.

-------------------------------------------------------------------------------------

எல்.கே.ஜி. தாதா

தல உன் ஆள்கிட்டே ஒருத்தன் ரப்பர் கேட்குறான் தல.

யார் ரா அவன்?

பெசன்ட் நகர் “பென்னி” தல

யாரவன் என் ஆள் கிட்டே ரப்பர் கேட்கிறது

கூப்பிடுறா “பலப்பம் பாபு” வையும் “செர்லாக் சேகரையும்”

பெசன்ட் நகர் பென்னியோட ஸ்லேட், பீடிங் பாட்டில், டிபன் பாக்ஸ் எல்லாத்தையும் எடுக்க சொல்லுடா மவனே “பெசன்ட்நகர் பென்னி” பன்னி சாவட்டும்.

----------------------------------------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 17 February 2011

கலக்கல் காக்டெயில்-21

தேர்தல் வந்தால் சொல்லியனுப்பு.................


ங்கொயால.. ஒண்ணுமே விளங்கமாட்டேங்குது. மீனவர்களை சிங்கள ராணுவம் கைது செய்ததால ஆர்பாட்டம் நடத்தி கனிமொழி கைதாம். எதுக்கு ஆர்பாட்டம் யாரை எதிர்த்து என்று ஒன்றும் புரியல. ஒரு வேளை காங்கிரஸுக்கு செக் வைக்கவா? சிங்கள ராணுவ நடவடிக்கை என்றால், நாகேஸ்வர ராவ் பூங்காவில் என்ன வேலை?.

நீ நடத்துறா மாதிரி நடத்து, நான் கைது பண்றா மாதிரி பண்றேன், நானும் சிறைக்கு சென்றுவிட்டேன் என்று அலப்பவா?

ஒரு வேளை கையாலாகாத தலைவருக்கு எதிராகவோ? அட போங்கப்பா...ம்மா ரொம்பதான் குழப்புறீங்க.

ஒட்டு காசுக்குதான் சொல்லிப்புட்டோம்.


------------------------------------------------------------------------------------------------
எதிர் முகாம் ஏகத்துக்கும் குழம்புது. அங்க நம்ம வருங்கால முதல்வர் நல்லா வக்கிராறையா ஆப்பு. வூட்டுக்கார அம்மாவுக்கு துணை முதல்வர், தனக்கு மின்சாரத்துறை, பொதுபணித்துறை............, பலே சரியான போட்டி. மருத்துவர் தொலை பேசி அருகேயே இருக்கிறாராம். யாரும் ஒரு மிஸ்டு கால் கூட விடலாம். எப்பா சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, சஸ்பென்ஸ் தாங்க முடியல. அம்மா... கேட்கிறத கொடுத்து கதையை சீக்கிரம் முடியுங்க.
--------------------------------------------------------------------------------------------------------
ரசித்த கவிதை வரிகள்

பழந்துணி அணிந்தாலும்

பசியாலே இறந்தாலும்

பாதை தவறாத

பண்பு உள்ளம்

இருந்தநிலை மறந்து

இழுக்கான குற்றம்தன்னைப்

புரிந்திட லாமென்று

துணியுதடா - நேர்மை

பொல்லாத சூழ்நிலையால்

வளையுதடா.

------பாரதிதாசன்

-----------------------------------------------------------------------------------------------------------

கடி

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 16 February 2011

ரஜினி................ “Entertainer of The Decade”

ரஜினிக்கு என்.டி.டிவியின் சாதனையாளர் விருது


நேற்று என்.டி.டிவியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ““Entertainer of The Decade” விருது வழங்க தொகுப்பாளர் பிரணாய் ராய், ரஜினியை மேடைக்கு அழைத்தார். பின்பு ப. சிதம்பரம் அவர்களால் அந்த விருது வழங்கப்பட்டது. பின்பு நடந்த உரையாடலின் தொகுப்பு எல்லா பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த விருது வழங்கும் போது பிரணாய் ராய் ரஜினியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ரஜினி அளித்த பதில்களும்:

பிரணாய்: எந்திரன் / ரோபோ மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாலிவுட்டின் டாப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்தால்கூட உங்கள் படத்தின் வெற்றியைத் தொட முடியாத நிலை. இதுவரை வந்த படங்களில் எந்திரனை பெஸ்ட் என்று சொல்வீர்களா?


ரஜினி: இதுவரை நடித்த படங்களில் என்று பார்த்தால், எந்திரன் சிறந்த படம்தான்.

பிரணாய்: இந்த விஸ்வரூப வெற்றியை எதிர்ப்பார்த்தீர்களா?


ரஜினி: உண்மையிலேயே இந்த வெற்றியை நான் எதிர்ப்பார்த்தேன். அதே நேரம் இத்தனை பிரமாண்ட வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பிரணாய்: இந்த வெற்றி உங்களுக்கான அங்கீகாரத்தை விஸ்தரித்துள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன சிதம்பரம் அவர்களே...

சிதம்பரம்: நிச்சயமாக. ரஜினி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். இந்தப் படம் (எந்திரன்) பிற மொழிகளிலும் வந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் குவித்த படம். அதுவும் இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினி படம்.


இந்த பதிலை சிதம்பரம் சற்று தடுமாற்றத்துடன் சொன்னார்.

உடனை மைக்கை வாங்கிய பிரணாய், சிதம்பரம் இப்படி தடுமாற காரணம், நீங்கள் (ரஜினி) எப்போதுவேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் என்பதால் இருக்கலாம்... என்று சிரித்தபடி கூற, உடனே ரஜினியும் சிரித்தார்.

அடுத்த நொடியில் மீண்டும் மைக்கை வாங்கிய சிதம்பரம், "1996-ல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக எதிர்ப்பார்த்தேன் நான். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எனக்கும் உங்களுக்கும் ஏன் அவருக்கும்கூட அது நன்றாகத் தெரியும். அவர் அப்போது வந்திருக்க வேண்டும்.." என்றார்.

உடனே பிரணாய், "அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் (சென்சிடிவ்) என்பதால் வரவில்லையோ?" என்றார் ரஜினியின் தோளில் கை வைத்தபடி.

"நாங்கள் சென்சிபிளாக இல்லை என்பதால் அரசியலுக்கு வந்ததாகவோ, அவர் சென்சிடிவ் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இப்போது வந்தாலும் அவர் மகத்தான வெற்றியைப் பெறுவார் (clean sweep)" என்றார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா என்று பின்னர் பிரணாய் ராய் நேரடியாக ரஜினியைக் கேட்டபோது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ரஜினி வழக்கம்போல.

மேலும் உரையாடலின் பொழுது ரஜினி இந்த வெற்றிகளுக்கு காரணம் தன்னயுடன் பணிபுரிந்த சக கலைஞர்களும் ஆண்டவனும்  இதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை என்றார்.

இதில் முத்தாய்ப்பாக பிரணாய் ராய் அரங்கத்தில் இருந்த வித்யா பாலன், கத்ரிணாகைஃப், த்ரிஷா மூவரையும் மேடைக்கு அழைத்தார். மூவருமே அவரின் தன்னடக்கத்தை புகழ்ந்தனர். அவர்கள் அம்மாவிற்கும் ரஜினியைப் பிடிக்கும் என்றனர்.

குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை இவருக்கு உள்ள ரசிகர்களின் ஆதரவு ஒன்றும் அதிசயம் அல்ல.

இன்று ஐம்பது படங்கள் நடித்து ஒரு ஐந்து படங்கள் கூட வெற்றி அடைய செய்ய முடியாத அரைவேக்காடு, அலப்பறை ஹீரோக்கள் ரஜினியிடம் கற்க வேண்டியவை நிறையவே உள்ளன.

இந்தக் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை சொடுக்குங்கள்.

http://www.envazhi.com/?p=23606

---------------------------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 February 2011

முதுமையில் காதலர்தினம்

இருபதிலே இணைந்து


பாசத்திலே பிணைந்து

காதலிலே உழன்று

கணக்குடன் பெற்று

பாசத்தினை பொழிந்து

கல்வி கண் திறந்து

கருத்துடனே கற்பித்து

வாழ்வின் அனுபவங்களை

வடிவாகக் கொடுத்து

கூடிவாழ விழைகையில்

தேடி வந்த வேலை

நாடி சென்ற மக்கள்

சடுதியிலே சென்றதெல்லாம்

மனதினை உடைக்கவில்லை

நாடி தளர்ந்து நழுவுகையில்

நடுங்கும் கையுடன்

தலை கோதி வழியும்

உமிழ்நீரை வாஞ்சையுடன்

துடைக்கும் பொழுது

இடுங்கிய கண்களில்

போகும் உயிரை

நிறுத்த விழைகிராயே

நொறுங்கி உடைகிறது.



வாழும் ஒவ்வொரு

நொடியும் நம்

வாழ்வில் “காதலர்

தினமடி நம்

காதலின் புரிதல்

முழுமை பெறும்

காதலர்தினம்”

-------------------

Follow kummachi on Twitter

Post Comment

Monday 14 February 2011

பரீட்சை நேரம்-----------பெற்றோர்களுக்கு

பள்ளி இறுதி பொது தேர்வு நெருங்குவதால் பெற்றோர்களுக்கு சில யோசனைகள். “ரே ஜாகுவார்” இதைப் பற்றி பதிவு எழுதக் கேட்டுக்கொண்டதன் பேரில் மல்லாக்கப் படுத்து யோசிச்சது.




1. பிள்ளைகள் தொடர்ந்து படித்து மன அழுத்தத்தில் இருப்பார்கள். தினமும் ஒரு அரை மணி நேரம் குடும்ப விஷயமோ அல்லது அவர்களுக்கு பிடித்த விஷயத்தை எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஜாலியா பேசுங்க.

2. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்.

3. தினமும் ஒரு ஆறு மணி நேரமாவது நிம்மதியாக உறங்க சொல்லுங்கள்.

4. அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் அந்த அறையில் குறட்டை விடுவது தப்பாட்டம்.

5. அவர்கள் படிக்கும் பொழுது டிவி யில் மெகா சீரியலை நூறு டெசிபல் சவுண்ட் வைத்துப் பார்ப்பது அழுகுணி ஆட்டம். (தங்கமணிகள் கவனிக்க)

6. பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே நல்ல சத்துள்ள உணவை வீட்டிலேயே தயார் செய்து கொடுங்கள். பச்சை காய் வகைகளும், கீரைகளும் மிக அவசியம். பழமும் அவசியம்.

7. அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து பரீட்சைக்கு முதல் நாள் பயமாக இருக்கிறது என்று அழுதால், “ஒழுங்கா படித்தால் ஏன் பயம், நான் எல்லாம் பயம் இல்லாமப் போய் நூற்றுக்கு நூற்றி இருபது வாங்கினேன்” என்று உதார் விடாதீர்கள்.

8. பரீட்சைக்கு முதல் நாள் தூக்கம் வராமல் தவிப்பார்கள். அவர்கள் மனதை லேசாக்கி உறங்க வையுங்கள். கடைசி நிமிடம் வரை படிப்பது நல்லதல்ல. தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க சொல்லுங்கள்.

9. பரீட்சை நாள் காலையில் வீட்டில் உள்ள மற்றைய பிரச்சினைகள் அல்லது உங்கள் அலுவலக பிரச்சினையில் வரும் எரிச்சலை அவர்களிடம் காட்டாதீர்கள்.

10. முக்கியமான விஷயம் நாம் விரும்புவது அவர்களை அவர்களின் மதிப்பெண்களை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அப்பா “டென் கமான்மென்ட்ஸ்” கொடுத்தாச்சு.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 11 February 2011

கலக்கல் காக்டெயில்-20

அலுவலகத்தில் இந்த வார சூடான விஷயம், எங்களுடன் பணி புரிபவர் ஒருவரை நாய் (நாய்கள்) கடித்து விட்டது. ஒன்றல்ல இரண்டு நாய்கள் தொடையிலும், கையிலும் கடித்து ஒரு ரெண்டு கிலோ கறியை கொதறிவிட்டன. அன்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அந்த வகை நாய்கள் ரோட்பில்லேர், ரோக்பிள்லர் என்று ஏதோ ஒரு வகை நாய் என்று பேசிக்கொண்டனர். எனக்கு தெரிந்த நாய் வகைகள் மூன்றுதான். தெரு நாய், வெறி நாய் சொறி நாய். கூகிள் ஆண்டவரைக் கேட்டால் நூற்றி அறுபது நாய் வகைகள் உள்ளனவாம். அதில் இந்த ராத்வேய்ளர் (Rottweiler) ஜெர்மானிய வகை நாய்கள் ஐந்து வருடம் வரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்குமாம், பிறகு வடைகறி தொடைகறி எல்லாம் கேட்குமாம். இந்த வகை பிறந்த குழந்தையை சாப்பிட்ட கதைகள் ஏராளம். தி ஓமன் (The omen) படத்தில் காட்டப் பட்ட நாய் இந்த வகையை சார்ந்தது. அந்தப் படத்தை நடு இரவுக்காட்சி பார்த்து விட்டு நடந்து வரும் பொழுது நாய் துரத்திய பிரமை நீங்க எனக்கு ஒரு வாரம் ஆகியது.


நாய் கடி பட்டவர் தையல் போடும் முன் தொடை புகைப் படத்தைக் காட்டினார், ஒரு வாரம் சோறு இறங்காது.
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவர் பொதிகை தொலைக் காட்சியில் “விளையாட்டு வினாடி வினா” (Sports Quiz) நிகழ்ச்சியைப் பற்றி எழுத சொல்லியிருந்தார். அரபு நாடுகளில் டாட்டா ஸ்கை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சேனலும் வருவதில்லை. எப்பொழுதாவது இரவு நேரங்களில் சன் டிவியும் விஜய் டிவியும் தெரிந்தால் அன்று நாம் நரி மூஞ்சியில் முழித்தோம் என்று அர்த்தம். ஆனால் இந்த நிகழ்ச்சியை முன்பு பார்த்திருக்கிறேன், என் அக்கா மகன் இதை விடாமல் பார்ப்பான். அதை நடத்துபவரின் அவசரம் ஏனோ என்னை அந்த நிகழ்ச்சியில் அவ்வளவாக ஈடு பட வைக்கவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
இந்த வார சட்ட சபை நிகழ்ச்சியில் பேராசிரியர் “ஓய்வு எடுப்பவர் எப்படி முதலமைச்சர் ஆக முடியும்” என்று கொளுத்திப் போட்டதன் விளைவு எதிர் கட்சிகள் நிதி நிலை அறிக்கையை கிழித்து விட்டு அவையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சட்ட சபை நல்ல தமாஷ்தான். வயசானாலும் லொள்ளு போவதில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

ரசித்த கவிதை

அன்புருவமாய்

அமைதிப் பூங்காவாய்

கருணைக் கடலாய்

பண்புப் பெட்டகமாய்

தியாகச் சுடராய்

அழகுச் சிலையாய்

போகப் பொருளாய்

வரையறுக்கப்பட்ட

அடையாளங்களில்

தொலைந்தே போனது

எம் ஆதி அடையாளம்

---கிருட்டினம்மாள்

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 6 February 2011

போங்கடா நீங்களும் உங்க போக்கத்த தேர்தலும்.............................

இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.


ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வருது, மக்களும் காசு, பணம், சாராயம், பிரியாணி எல்லாம் பெற்றுக் கொண்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுகிறார்கள். இந்தக் கூட்டனின்னு ஒன்ன போட்டுக்கிட்டு எந்தப் பக்கம் அதிக சுருட்டுற கூட்டம் இருக்கோ அவனுங்க வந்து ஆட்சின்னு சொல்லி கொள்ளயடித்துப் போகிறது வழக்கமாப் போச்சு.

இதற்கு சுரண்டுவதை முறைப் படுத்த அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

1. முதலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.

2. மாநிலத்தில் கட்சிகளின் செல்வாக்கு அடிப்படையில் ஒரு ஐந்து கட்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு தனியார் கம்பனிக்கு காண்ட்ராக்ட் விட்டு ஒரு சர்வே நடத்த வேண்டும்.

3. பின்னர் பொது மக்களின் முன்னிலையில் ஐந்து கட்சிகளின் பெயர்களை எழுதி ஒரு குடத்தினுள் போடவேண்டும்.

4. பின்பு குலுக்கல் முறையில் ஐந்துக் கட்சிகளையும் வரிசைப்படுத்த வேண்டும்.

5. முதலில் வரும் கட்சி ஒரு இரண்டாண்டுகள் ஆட்சி புரியட்டும். பின்பு இரண்டாண்டுகள் இரண்டாவது வந்த கட்சி, இரண்டாண்டு என்று எல்லாக் கட்சிகளும் ஆட்சி செய்யட்டும்.

6. மக்கள் நல திட்டத்திற்கு இரண்டாண்டுகளுக்கு உண்டான ஒரு அமௌன்ட் நிர்ணயம் செய்ய வேண்டும்.

7. இதை வளர்ச்சி பணிகளுக்கு, அரசாங்க செலவுகளுக்கு என்று செலவிட வேண்டும், இதில் ஆட்சி புரியும் கட்சி ஒரு குறிப்பிட்ட % சுருட்டிக் கொள்ளலாம்.

8. % நிர்ணயம் செய்வதை மக்களிடம் விடவேண்டும். இதற்கும் தனியார் கம்பனிகளின் உதவியை நாடி சர்வே நடத்தலாம்.

9. தேர்வு செய்யப்பட்ட கட்சி யாரை வேண்டுமென்றாலும் அமைச்சர்களாக நியமித்துக் கொள்ளலாம்.

10. பீத்த மகன்/ள், பெண்டாட்டி, வைப்பாட்டி, உடன் பிறந்த சகோதரி, உடன் பிறவா சகோதரி, அவர்கள் மாமன் மச்சான், அக்காள் மகன், கொழுந்தியா, தொடுப்பு, எடுப்பு, ஓரகத்தி, சக்களத்தி, சித்தப்பா, தொத்தா, ஐயா , ஆயா, பாட்டன், பாட்டி, வளர்ப்பு மகன், வளர்க்காத மகன் என்று யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம்.

11. % பங்கு போட்டுக் கொள்வதை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய அவசியமில்லை.

12. புதிய வரிகள் எதுவும் விதிக்கக் கூடாது.

13. இருக்கும் வரிகளும், டாஸ்மாக் வருமானமும் வைத்துக் கொண்டுதான் அரசாங்கம் நடத்தப் படவேண்டும்.

14. பின்னர் பத்து வருடங்கள் கழித்து மற்றுமொரு சர்வே மற்றுமொரு குலுக்கல் என்று போகலாம்.





இதனால் மக்கள் அடையும் லாபங்கள் நிறையவுள்ளன.

1. தேர்தல் செலவு குறையும்.

2. சட்ட சபை கிடையாது, அதனால் ஆகும் செலவுகள் குறையும்.

3. சட்ட சபையில் வேட்டி சேலை உருவும் காட்சியை அடுத்த சந்ததியனர் பார்க்க முடியாது.

4. இந்தக் கூட்டணி போடுறது, வேட்டி துவைக்கிறது, உள்பாவாடை துவைக்கிறது எல்லாம் காணாமல் போய்விடும்.

5. முக்கியமாக இலவசம் கிடைக்காது. தலைவர் படம் போட்ட, பை, செருப்பு, காண்டம் (நன்றி: பட்டாபட்டி) முதலியவை அறவே ஒழிக்கப்படும்.

6. கட்சி, கொடி, மைக்செட், போஸ்டர் கட்சி ஆபிஸ் என்ற வீண் செலவுகள் குறையும்.

7. மொத்தத்தில் ஒரு கார்பரரெட் வியாபாரமாகி விடும்.

8. கொள்ளையடிப்பது வரைமுறைப் படுத்தப்படும்.



ஏதோ என்னால் ஆனா யோசனையை மல்லாக்கப் படுத்து யோசிச்சு எழுதியிருக்கேன். மேலும் சில யோசனைகளை தொடர் பதிவாளர்களுக்கு விட்டுவிடுகிறேன்.

சத்தியமா தேர்தலுக்கும் மேலே உள்ள பிகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரொம்ப நாளா நம்ம நண்பன் ஒருத்தன் என்ன உன் பதிவுல நல்ல பிகர் படம் போடலேன்னு லொள்ளு பண்றான்.
அதனால் இந்தப் படம். ----------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 3 February 2011

டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா...............................

சென்னை: “மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அம்மா, கைது செஞ்சாலும் குரல் விடுறீங்க, கைது செய்யவில்லை என்றாலும் குரல் விடுறீங்க. முன்ன வந்தா முட்டுறீங்க, பின்ன வந்தா உதைக்கிறீங்க. கொடனாட்டுல குப்புற படுத்துகிட்டு குமுறி குமுறி யோசிச்சிங்களோ.



சென்னை: “செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது” என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

யுவர் ஹானர் இவர் சம்மன் இல்லாமல் அப்பப்போ ஆஜராகிறார். சூரமணி ஸார் ராசாவை கோவலன் என்று கூறிவிட்டு, கண்ணகியும் மாதவியும் யாருன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. தேவையில்லாம ஆப்புல தேடிப் போயி உக்காரறீங்க. பார்த்து உறவு முறையை மாத்தி உண்டகட்டிக்கு ஊசி வைக்காதீங்க. “ரெண்டேழுத்து ரெண்டும் ஒரே எழுத்து” என்று உணர்ச்சில உட்டுராதீங்க. போடி உனக்கு இருக்குடி எதிர் பக்கம் போனா எறி வைப்பாங்க ஆப்பு.


ஐயா உங்க தலைவர் பெரியார், “தனி மனித கோபத்தில் இடது முலையை பிய்த்து எறிந்து மதுரையை எரித்த கதையெல்லாம் டுபாகூர், இதையெல்லாம் பின் தொடராதீங்க” என்றார். உங்களுக்கு தெரியாதா?




ஆனந்தவிகடனில் “இளையதொளபதி”


''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?”

ஏனுங்ணா குருவி, சுறா, வேட்டைக்காரன் வரும் பொழுதெல்லாம் குரோம்பேட்டையில் தேனும் பாலும் ஓடி, தண்ணி கரண்ட்டு தட்டுப்பாடு இல்லாம மக்கள் “சந்தோஷமா” இருந்தாகளாங்காட்டியும். ரொம்பதான் அலப்புறே.

காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த்.... அடுத்து நான்!


“சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!



தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.


எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.



அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.



முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?''



காந்தி, எம். ஜி. ஆர். எல்லாம் உங்க முன்னாடி ஜூஜூபிங்க. அவிய்ங்க என்ன மாமியாருக்கு முதுகு தேய்ச்சாங்களா? இல்லை குருமா தலையோட நடிச்சாங்களா?


ஆறு படம் அடிவாங்கி ஏழாவது படம் முக்கும் பொழுது இந்த அலப்பறை தேவை தானுங்களாங்னா?


மேடமிடம் பேரம் பேசியப்ப உங்கப்பா பேரிக்கா தலயனுக்கு மேயர் பதவி கேட்டிங்களாங்னா?


பாத்துங்கனா இதெல்லாம் ரொம்ப டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 1 February 2011

கலக்கல் காக்டெயில்-19

மனைவிக்கு துணை முதலமைச்சர் மச்சானுக்கு?


செய்தி: தே.தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பேரத்தில் கேப்டனின் மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவியும் குறைந்த பட்சம் அறுபது சீட்டுக்களும் கேட்கப்பட்டதாக ஒரு வார இதழில் வெளி வந்துள்ளது.

அப்படிப் போடு அறிவாள. காப்டனா கொக்கா? ஏனுங்க இதற்கு ஏதாவது அடகு வைப்பதைப் பற்றி பேச்சு வந்ததா? சேலத்தில் கூட்டணியை உங்கள் கையில் விடும்படி தொண்டர்களிடம் கூறியதன் உள் குத்து இதுதானா?

மொத்தத்தில் தொண்டருக்கும் திருவாளர் பொது மக்களுக்கும் அல்வாவா?

இது தாண்டா அரசியல். கொஞ்சம் பணம் யாரோ போட்ட பிச்சையில் புகழ், இதை வைத்துக் கொண்டு க்வாட்டரும், பிரியாணியை வைத்துக் கொண்டு கூட்டம் சேர்க்க வேண்டியது, பின்னர் குடும்பத்திற்கு பேரம் பேசவேண்டியது. நல்லா இருக்குப்பா இந்த பொழைப்பு.

நாடு விளங்கும்......................



ரசித்த கவிதை


என் மாடுகள் செத்திருக்கலாம்

அவிழ்த்துக் கொடுக்கும்போது

இரவலுக்கென்றோ

குளிப்பாட்டவென்றோ

எண்ணிக்கொண்டு

போயிருக்கும்



அந்த நடை

அந்தக் கொம்புகள்

அந்தச் செல்லப் பாய்ச்சல்

குனிந்து தவிடு கிளர்கையில்

பாறை நாக்கால் கன்னத்தில்

நக்கி வைக்கும் குறும்பு

இனி எனக்கில்லை.



ஒரேயொரு சென்னைப்

பயணத்துக்காக

ஒட்டிக்கொண்டு

போய்விட்டான்

நான் துரோகம் செய்து விட்டேன்.



திருமணநாள்

தங்கமனியின் பிறந்த நாளை மறந்து வாழ்த்து சொல்லாமல் பின்பு வாங்கிக்கொட்டிக் கொள்ளும் பொழுது “ங்கே” என்று விழித்த பிரஜைகள் ஏராளம் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பு சொல்லுகிறது.

ஆனால் கல்யாண நாளை யாரும் மறப்பதில்லை. அதற்கு உண்டான காரணங்கள் சொல்லத் தேவையில்லை.

அதுவும் இந்த ஜனவரி 30,31 பிப்ரவரி 1,2 நாட்களில் கல்யாண நாள் கொண்டாடுபவர்கள் ஏராளம், அதற்கு காரணம் “தை பிறந்து பொழுது பிறந்த வழி” யாக இருக்கலாம். அந்த வழியில் என் திருமண நாளை மறக்க முடியாது.

பெறும்பாலும் இது போன்ற முக்கிய நாட்களில் வேலை நிமித்தமாக இருப்பது, வீட்டிற்கு நேரத்திற்கு செல்ல முடியாதது என்பது போன்ற பிரச்சினைகள் உள்ள சராசரி பிரஜை நான்.

இரண்டு வருடம் முன்பு தங்கமணி நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது இந்த வருடம் நீங்க லீவ் போட்டுவிடுங்கள் என்றாள். சரி என்று ஒரு வாரம் விடுமுறை போட்டுவிட்டு ஊருக்குப் போகலாம் என்று இருந்தேன். சென்னை வேண்டாம் வேறு எங்காவது போகலாம் என்றாள்.

சரி ஒன்று செய் நீ நேராக கொழும்பு வந்த விடு, நான் இங்கிருந்து நேராக வருகிறேன் என்று ஏற்பாடு செய்துவிட்டேன்.

ஒரு இரண்டு நாட்கள் முன்பாகவே கொழும்பு சென்று விட்டோம்.

கல்யாண நாளை நாம் தனியாக கொண்டாடலாம் என்றேன். தங்கமணி “என்னங்க நாம அவ்வளவு தூரம் வந்து விட்டோம், என் தங்கச்சி இங்கு இங்கிருக்கிறாள், நாங்கள் பிரிந்து ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது, ஆதலால் நாம் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே ரெஸ்டாரண்டில் ஒரு டேபிள் புக் செய்துவிடுங்கள் அவர்களையும் அழைக்கலாம்” என்றாள்.

மச்சினிக்கு போன் செய்து விஷயத்தை சொன்ன பொழுது “என்ன மாமா இவ்வளவு தூரம் அக்காவும் நீங்களும் வந்திருக்கிறீர்கள் நாங்கள் உங்களுக்கு பார்ட்டி கொடுக்கிறோம், ஆதலால் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள் ஏன் கணவர் ஆபிசில் இருந்து வந்தவுடன் நாம் எல்லோரும் வேறு ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்க்கு அழைத்து செல்கிறோம் என்றாள். மாலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள்” என்றாள்.

அவள் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். அவளுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவள் புருஷன் வர வேண்டிய சமயமாகியும் வரவில்லை. மணி ஒன்பது ஆகியது, மச்சினி இதோ வந்து விடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு தூக்கம் வர ஆரம்பித்து படுத்திக் கொண்டிருந்தனர்.

மச்சினி போன் செய்து அவரை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சிக் கொண்டிருந்தாள். பின்பு ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து உண்டு விட்டு எங்கள் ஓட்டல் வந்து சேர்ந்தோம்.

போன வருடமும் வேலை பளுவில் ஊருக்குப் போகமுடியவில்லை.

“இந்த வருடம் எங்கு போகலாம், நீங்கள் ஊருக்கு வருவீர்கள்தானே” என்று கேட்டாள்.

எனக்கு அந்த நேரத்தில் ஒரு முக்கியமான செமினாருக்கு யு.கே. போக வேண்டும்.

அவளிடம் சொனால் நமக்கு ஆப்பு என்று “முன்பு போல நாம் கொழும்பு போய் விடுவோம், நீ சென்னையிலிருந்து வந்து விடு நான் ஒரு நான்கு நாட்கள் லீவ் போட்டு அங்கு வந்து விடுகிறேன்” என்றேன்.

“வேண்டாம்பா நீங்க உங்க வேலையைப் பாருங்கள்” என்றாள்.

வழக்கம் போல இன்று காலையில் அவளை தொலைபேசியில் அழைத்து “திருமணநாள் வாழ்த்துகள் என்றும்” பின்பு SMS ல் “நல்ல மனையாளும் ஆரோக்கியமுமே சிறந்த செல்வம், அந்த வகையில் நான் செல்வந்தன்” என்று எழுதி அனுப்பித்தேன்.

அவள் பதிலுக்கு “ ஒ ரொம்ப ஹெல்தியா இருக்கீங்களோ (நான் இல்லாம)” என்று பதிலினாள்.

“Any way happy wedding day dear,”.

Follow kummachi on Twitter

Post Comment