Pages

Thursday 23 February 2012

கலைஞர் பயோடேட்டா


இயற்பெயர்
தட்சினாமூர்த்தி
நிலைத்த பெயர்
கலைஞர்
தற்போதைய பதவி  
தி.மு.க தலைவர்
தற்போதைய தொழில்
குடும்ப விவகாரம்
உபரி தொழில்
அறிக்கை விடுவது, கதை, வசனம் எழுதுவது
பலவீனம்
சி.ஐ.டி காலனி
தற்போதைய சாதனை
மக்கள் கொடுத்த ஓய்வு  
நீண்டகால சாதனை
குடும்ப வளர்ச்சி
சமீபத்திய நண்பர்
கேப்டன் 
நீண்டகால நண்பர்
பேராசிரியர், ரொம்ப நல்லவரு
பூர்வீக சொத்து 
மஞ்சள் பை
தற்போதைய சொத்து
கணக்கிலில்லை
சமீபத்திய எரிச்சல்
வீரபாண்டியார்
நிரந்தர எரிச்சல்
மதுரையில் உள்ளது
நம்புவது
இந்திராவின் மருமகள்
நம்பாதது
கட்சி கொள்கை
பிடித்த பல்லவி
நாங்கள் தோற்கவில்லை
பிடிக்காத பல்லவி
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
சட்டசபை
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை செல்லுமிடம்
கூட்டணி தர்மம் 
நொண்டி குதிரை
 

Wednesday 22 February 2012

பத்திரிகா தர்மம்


தி.மு.க.வுக்கு எதிரான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது “பத்திரிகா” தர்மம் அல்ல@#கலைஞர்
தலைவரே அது பத்திரிகா அல்ல பத்திரிகை.......குசும்பு கொஞ்சம் ஓவர்தான்

தமிழ் நாட்டில் எட்டு மணி நேர மின்வெட்டு..............அரசு அறிவிப்பு
இன்வெர்ட்டர் விலை ஏற்றம் வியாபாரிகள் கொண்டாட்டம், மக்கள் தவிப்பு 

பத்மநாபாவின் ஒரு நகையை மதிப்பிடவே குறைந்து இருபது நிமிடம் ஆகும்.............கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு
நகையை லவுட்டறதுக்கு அவ்வளவு நேரம் ஆகாது.........தமிழக அரசு

சங்கரன்கோவிலில் நாங்கள் போட்டியிடவில்லை, யாராவது போட்டியிட்டால் ஆதரிப்போம்##பா.ம.க. தலைவர் ஜி.கே.வேலுமணி.
கேப்டனை ஆதரிப்பீங்களா? எதற்கும் மருத்துவர கேட்டுட்டு பேசுங்கப்பு.

தமிழகத்தில் மின்சாரம் எப்போ போகுது எப்போ வருது ஒன்னும் புரியல
என்ன வாழ்க்கைடா இது?, சம்சாரம் இல்லாமல் கூட இரண்டு வாரம் இருக்கலாம், மின்சாரம் இல்லாம இரண்டு மணி இருக்க முடியல.

ஜெயலலிதாவிற்கு ஒன்றும் தெரியாது, எல்லாவற்றுக்கும் நானே காரணம் ..............நீதிபதிமுன் கதறியழுத சசிகலா
அப்படி சொல்லவில்லை என்றால் சென்னை திரும்ப முடியாது..............களி எப்படியும் நிச்சயம்.


ராவணவதம் தொடர்கிறது, மேலும் இரண்டு வழக்கு பாய்கிறது...........செய்தி
கொடுக்கிறத கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை இல்லை......இப்போ வருந்தி என்ன பயன்.

சங்கரன்கோவில் திராணியை நிரூபிக்க தி.மு.க.வும் களமிறங்கியது வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார்.
வேட்பாளருக்கு செலவழிக்க திராணியிருக்கணும் அதுதான் முக்கியம்.

எல்லா மாநிலங்களிலும் காங்கிரசை ஒழிப்பேன்..............சீமான் ஆவேசம்.
அப்ப்...............பா .......................முடியல.

படம் எடுக்காதார்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்..............இயக்குனர் அமீன்
அணில் அப்பாவதானே சொல்லுறீங்க, அதான் அவரு மகன் படத்தையும் நிறுத்திட்டாங்க.

மெட்ரோ குளுகுளு ரயில் பெட்டிகள் பிரேசிலில் தயாராகின்றன.........செய்தி
கட்டணம் என்ன பிளைட் ரேஞ்சுக்கு இருக்கும்.........அம்மான்னா சும்மாவா?


ஹைக்கூ
மழைக்கு பயந்து
அறையில் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

Saturday 18 February 2012

கலக்கல் காக்டெயில் -61


ஒன்னுமே புரியலே

இந்த வாரம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உ.பி.ச. ஆஜராகி சுமார் நானூறு கேள்விகளுக்கு விடையளிக்க இருக்கிறார் என்பது பரபரப்பு செய்தி.

அம்மாவுக்கு எதிராக ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் தோட்டத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டபின் இந்த வழக்கில் திடீர் திருப்பமெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்பின் போட்டிருக்கிறார். வங்கி கணக்கிற்கும் அம்மாவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

இவர்கள் விவகாரம் இன்னும் மக்களுக்கெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.

ஒரு வேளை உ.பி.ச பலிகடா ஆக்கப்படுகிறாரா?

உண்மை தெரிந்தவன்(ள்) யார்?

எங்கே செல்கிறது இன்றைய மாணவ சமுதாயம்

சென்னையில் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தி பாடம் சரியாக படிக்க வராததானால் ஆசிரியையின் கண்டிப்பு ஆளாகிய மாணவன் எடுத்த விபரீத முடிவு ஒரு உயிரை காவு வாங்கி இரண்டு பெண் பிள்ளைகளை அனாதைகள் ஆக்கியிருக்கிறது.


இது ஏதோ சடுதியில் வந்த கோபத்தினால் ஏற்பட்ட விளைவாக மேம்போக்காக தெரிந்தாலும், மாணவனின் மூர்க்கம் எதிர்கால மாணவ சமூகத்தின் நிலையை  கவலைகொள்ள வைக்கிறது.

இதை பற்றிய சின்னபயலின் கவிதை என்னை சிந்திக்க வைத்தது. அந்த கவிதையின் சில அடிகளை ரசித்த கவிதையில் கொடுத்திருக்கிறேன்.


ரசித்த கவிதை

என் ஆசிரியனைகொல்ல

எனக்கும் ஆசைதான்
என் ஆசிரியனைக்
கொல்லவேணுமென்று

என்ன செய்தாலும்
தவறு கண்டுபிடிப்பார்
எவ்வளவு சரியாக எழுதினாலும்
பிழை கண்டு சொல்வார்.....................................



இந்த வார ஜொள்ளு







20/02/2012

Friday 17 February 2012

கேப்டன் பயோடேட்டா


இயற்பெயர்
விஜயகுமார்
நிலைத்த பெயர்
கேப்டன் விஜயகாந்த்
தற்போதைய பதவி  
எதிர்க்கட்சி தலைவர்  
தற்போதைய தொழில்
தீவிர அரசியல்
உபரி தொழில்
தீவிரவாதிகளை பின்னி பெடல் எடுப்பது  
பலம்
மனைவி, மச்சான்  
தற்போதைய சாதனை
சட்டசபைக்கு 28 பேருடன் சென்றது    
நீண்டகால சாதனை
கழக ஒட்டு வங்கியில் ஆட்டையைப் போட்டது
சமீபத்திய நண்பர்(கள்)
கோபாலபுரம் குலக்கொழுந்து, சிவகங்கை சிங்கம்   
நீண்டகால நண்பர்
இப்பொழுது அம்மாவுடன் ஐக்கியமாகிவிட்டார்  
பூர்வீக சொத்து 
ரைஸ் மில்  
தற்போதைய சொத்து
கல்யாணமண்டபம், பொறியியல் கல்லூரி
சமீபத்திய எரிச்சல்
சட்டசபையில் சஸ்பென்ட் ஆனது
நிரந்தர எரிச்சல்
டாஸ்மாக் விவகாரம்   
நம்புவது
தொண்டர்கள் கூட்டணி   
நம்பாதது
கடவுளுடன் கூட்டணி
பிடித்த பல்லவி
ஏய் மவனே (நாக்கை கடித்து)
பிடிக்காத பல்லவி
இறங்கு முகம்  
சட்டசபை
புரியாத புதிர்  
கூட்டணி தர்மம் 


ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது

தேர்ட் அம்பயர்


நகைச்சுவை காணொளிகள். யூ டுயுபில் மேய்ந்து கொண்டிருக்கும்பொழுது கிடைத்தவை உங்கள் பார்வைக்காக. முதலில் இருப்பது ஒரு விளம்பர காணொளி.  


இப்படியும் பெற்றோர்களை ஏமாற்றலாமா?




நம்ம லாலுவின் ஆங்கிலப்புலமை



மூஞ்சில முட்டை பரோட்டா


தேர்ட் அம்பயர் வேணுமாம் 

Wednesday 15 February 2012

இடைத் தேர்தல்


ங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்துவிட்டு ஆளும்கட்சி இருபத்தியாறு அமைச்சர்கள் உட்பட முப்பத்திநான்கு பேர் கொண்ட ஒரு பெரும் படையே சங்கரன் கோவிலில் இறக்கி இருக்கிறது. ஏறக்குறைய தலைமைசெயலகமே சங்கரன்கோவிலில் சங்கு ஊதிக்கொண்டு இருக்கிறார்கள். கோப்புகளை எல்லாம் யார் பார்ப்பார்களோ?

 அட  இடை(த்)தேர்தல் இது இல்லைங்ணா  


அதன் தொடக்க வேலையாக இலவசங்கள் அள்ளி அளிக்கப் படுகின்றனவாம். அரசு செலவில் கொடுக்கப்படும் விலையில்லா மிக்ஸி, விலையில்லா க்ரைன்டர், இதைத்தவிர வாக்காளர்களுக்கு முதல் போனியாக காசு கொடுத்து சுபமாக தொடங்கி இருக்கிறார்கள்.

ஆளும்கட்சிக்கு தங்கள் “த்ராணி”யை நிரூபிக்க வேண்டிய அவசியம். எப்படி இருந்தாலும் இடைத் தேர்தலில் ஆளும்கட்சிகள் வெற்றிபெற படைபலம், பணபலம் என்று எல்லாவற்றையும் இறக்கி எப்படி தகிடுதத்தம் செய்து வெற்றி பெறுவார்கள் என்பது பால் குடிக்கும் பாப்பாவுக்கு கூட தெரியும். (அதானே நம்ம கேப்டனுக்கே தெரிஞ்சிருக்கு)

ஆனால் இது முடிந்தவுடன் எதிர் கட்சிகள் “பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது” என்று புளிப்பூத்துவார்கள். இதற்கு எந்த கழகங்களும் விதிவிலக்கல்ல.

“தக்காளி” இதற்கு திருமங்கலம் பார்முலா, பொன்னேரி பார்முலா என்று வேறு பெயர் சூட்டல். வெளங்கிடும் ஜனநாயகம்.

நமக்கு என்ன பொழைப்பை பார்த்தோமா, காசு வாங்கினோமா டாஸ்மாக்கில் கொடுத்தோமா என்று போதை ஏற்றி போய்க்கினே இருக்க வேண்டியதுதான். யார் வந்தாலும் நம்ம வேலை தடைபடாது.