Monday 1 October 2012

கலக்கல் காக்டெயில் 88

காவிரி யு டர்ன் அடிக்க வேண்டுமாம்

காவிரி நதிநீர் ஆணையம் வழங்கிய பரிந்துரையை நிறைவேற்று என்று உச்சநீதிமன்றம் கூறிய பொழுதிலும் கர்நாடக அரசியல்வாதிகள் திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்து அரசியல் செய்துகொண்டிருந்தனர்.  பின்னர் நம்ம பிரதமர் அதிசயமாக தனது திருவாய் மலர்ந்தருளி "ஷட்டர் ஷட்டரை திறப்பதுதான் பெட்டர்" என்று கூறிய பின்பு ஷட்டர் பலத்த போராட்டங்களுக்கு இடையில் ஷட்டரை திறந்து விட்டுருக்கிறார். அதுவும் நான்கு நாட்களுக்குத்தான் என்று சொல்கிறார்கள்.

யானை வாய்க்கு சோளப்பொறி.

இந்த வருடம் பருவமழை இருபத்திமூன்று விழுக்காடு கம்மியாம். கர்நாடக மின்சாரத்திற்கு புனல் சக்தியையே நம்புவதால் தண்ணீர் திறந்துவிட யோசிக்க வேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் தங்களது விவசாய நிலங்களை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆதலால்  காவிரியை யு டர்ன் அடிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

இந்தியாவை ஆளும் தகுதிபெற்றவர் அம்மாதான்

நாகப்பட்டினத்தில் நடந்த அ,தி.மு.க ஆலோசனைக்கூட்டத்தில் ஓ.பி. யாரின் கூற்றுதான் இது. இதில் யாவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் ஆள்வதற்கு தகுதிஎன்று ஒன்று இருக்கிறதா என்பதே நமக்கு விடை தெரியா கேள்வி.

ஏனென்றால் இந்திய அரசியல் சரித்திரம் எத்துனையோ தகுதியானவர்களை சந்தித்திருக்கிறது, அவர்களையெல்லாம் வரிசைப்படுத்தி நமது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கவிழக்  காத்திருக்கும் மத்திய அரசு

அட இன்னும் கவிழவில்லையா? என்ன நடக்குது நாட்டில். திரிணாமூல் கழன்றபின் கூட்டணி நொண்டிக்கொண்டிருக்கிறது எனபது எல்லோருக்கும் தெரியும். இன்னும் குறைய நேரத்தை ஓட்ட  சில்லறை கட்சிகளை சேர்த்து எப்படியும் ஒப்பேற்றி விடுவார்கள்.

இன்னும் சில மந்திரி பதவிகள் காட்டி மீதி நாட்டை விற்க ஆள் கிடைக்காமலா போவார்கள்.

ரசித்த கவிதைகள் 

பின்னிரவின் நிலவொளியில்
தார்ச்சாலையில்
நசுங்கி செத்துக்கிடக்கும்
பெயர் தெரியாப் பறவையின்
மரணத்தை பகிர்ந்து
கொள்வதற்க்காவது
வேண்டும் உன் காதல்.
----------------------------------வே. இராமசாமி

விடைபெறும்போது
திரும்பாமல் விலகுகிறேன்
ஒரு வேளை
நீ திரும்பிப் பார்க்கலாம்.

--------------------------------------மார்கன்

ஜொள்ளு01/10/2012

 

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

JR Benedict II said...

நகைச்சுவை தூக்கலா இருந்து இருந்தா ரொம்ப கலக்கலா இருந்து இருக்குமே..

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் கவிதைகள்...

”தளிர் சுரேஷ்” said...

சூப்பருங்க! நன்றி!

கும்மாச்சி said...

ஹாரி, தனபாலன், சுரேஷ் வருகைக்கு நன்றி.

NKS.ஹாஜா மைதீன் said...

அமெரிக்காவை ஆளும் தகுதி கூட அம்மாவுக்கு உண்டு என கூட சொல்வார் ஒ பி ...காக்டெயில் கலக்கல்...

கும்மாச்சி said...

ஹாஜா வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

காவிரியில் அந்த நான்கு நாட்கள் கழித்து டைவ் அடித்தால் என்னவாகும்...?
தகுதி தகுந்த அம்மாவிடம் தான் இருக்கிறது. சாவி கொத்தைக் மறைத்தவிட்டு பீரோவை ஏலத்திற்கு விடுபவர் இல்லையா...எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது கும்மாச்சி அண்ணா.

கவிதை தெரிவு சூப்பர்.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

முத்தரசு said...

காக்டைல்....கலக்கல்

ஜொள்ளு....போங்கு ஆட்டம்

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.