Pages

Saturday, 29 December 2012

மரணம் தின்றது......

மரணம் தின்றது
மனதில் கனவை சுமந்து
மலரத்துடித்த
மாணவியை அல்ல

மரணம் தின்றது
மலரை அல்ல
மனதில் உறைந்த
மனித நேயங்களையும் தான்

மரணம் தின்றது
மலரை அல்ல
பழமை கதைபேசி
கலாசாரம் பேணும்
கயவர்களின்
மனசாட்சியையும் தான்

மரணம் தின்றது
மலரை அல்ல
மனுநீதி காக்கும்
மக்கள் பிரதிநிதிகள்
மேலிருந்த
நம்பிக்கைகளையும் தான்


8 comments:

  1. நல்ல சிந்தனை நண்பரே!

    ReplyDelete
  2. ஆகாஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. கொடுமையான , வேதனையான நிகழ்வு .. உருப்படாத அரசியல் , சட்ட பிரிவுகளால் மற்ற வழக்கு போல இதுவும் மறக்கடிக்கபடுமோ ?

    ReplyDelete
  4. ராஜா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. இனி வரும் ஆண்டிலாவது இது போன்ற வன்கொடுமைகள் நிகழாதிருக்கட்டும்! நல்லதொரு அஞ்சலிகவிதை!

    ReplyDelete

  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.