முகம்மது அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்டது. இப்பொழுது தூக்கு தண்டனை தேவையா? என்ற விவாதம் மீண்டும் தொடரும்.
கசாபின் விஷயத்தில் இது அநியாயமாகப்படும். பாம்பே வி.டீ ஸ்டேஷனில் எல்லோரையும், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என்று பாராமல் வெறியாட்டம் ஆடி குருவி சுடுவது போல் சுட்டும் கையெறி குண்டை வீசி கொலை செய்தவனை என்ன செய்வது?ஏறக்குறைய வீ.டீ ஸ்டேஷனை கசாப்பு கடை ஆக்கியவன்.
இந்தியாவில் இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை 1995 ல் அலிபாகை சேர்ந்த சுதாகர் ஜோஷி, புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். மூன்று கொலைகள் செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்ற "Hangmen" தூக்கிலிடுபவர் என்று ஒருவர் இருப்பார். தற்பொழுது அது போன்று ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு எழுபத்தியிரண்டு வயதாகிறது. அவரை இப்பொழுது கேட்டபொழுது நான் இது வரை செய்ததற்கே வருத்தப்படுகிறேன், ஆதலால் நான் தூக்கிலிட வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
கசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர காவல்துறை ஒரு காவலர் மூலமாகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது.
ஒய்வு பெற்ற நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர் வாதம் மீண்டும் சந்தைக்கு வருகிறது. இந்த உலகில் ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. பின்னர் கசாபுக்கும் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் என்ன?
மிகவும் விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம் இது. தற்போழுது கசாபின் மனு ஜனாதிபதியிடம் உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பது கேள்விக்குறி.
நம் மனதில் அன்று மும்பையில் நடந்த அந்த கொடூரம் மறக்க முடியாதது. அதை செய்தவர் யாராக இருந்தாலும் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டியவரே.

|
|
Follow @kummachi
Tweet