Pages

Wednesday 30 January 2013

ஆத்தா கோபத்திற்கு ஆளானாரா கமல்?

கமலின் விஸ்வரூபத்திற்கு பிரச்சினை மேல் பிரச்சினை. நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எப்படியும் படம் வந்துவிடும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று பெருத்த ஏமாற்றம். அரசு வழக்கறிஞர்கள் ராவோடு ராவாக தலைமை நீதிபதி குழுவை சந்தித்து மீண்டும் தடை வாங்கி அம்மாவின் ஆணையை நிறைவேற்றிவிட்டனர்.

இந்த வழக்கை அரசியல் வழக்கறிஞர்கள் வாதாடிய விதத்திலிருந்தே அரசின் நிலைமை இன்னும் சொல்லப்போனால் ஆத்தாவின் கோபம் தெள்ளத்தெளிவாகிவிட்டது. இந்தப்படம் என்னதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் வெளிவந்தாலும் ஆத்தா தொல்லையில் "தாங்காது" என்றே தோன்றுகிறது. கமல் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக செய்திகள் வருகின்றன.

ஆத்தாவின் கோபத்திற்கு உண்டான காராணத்தை எதிர்கட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் வந்த ஒரு படத்திலும் இந்தப் பிரச்சினை வந்த பொழுது ஆத்தா தரப்பில் இருந்த ஆதரவு நாம் அறிந்ததே.

விஸ்வரூபம் இனி வந்தாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை ஒத்துழைப்பு இருக்காது என்று தோன்றுகிறது.

அரசியல் விளையாட்டில் கமல்தரப்பும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளும் பகடைக் காய்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

திரையுலகில் சக கலைஞருக்கு பிரச்சினை வரும்பொழுது ஒரு சிலரே குரல் கொடுக்கின்றனர். மற்றவர்கள் ஆத்தா கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க மௌனம் காத்து தாங்கள் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.


Monday 28 January 2013

கலக்கல் காக்டெயில்-100

கலக்கி காக்டெயில் ஊத்த ஆரம்பித்து எப்படியோ நூறாவது கலக்கலுக்கு வந்தாகிவிட்டது. இதுவரை கலக்கலை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

மதுரை மல்லியும், டக்கீலாவும், மற்றும் நாச்சியார் கோவில் விளக்கும்

மதுரை மல்லிக்கு GI TAG புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்கவிருக்கிறது. மல்லிபூ வகையிலே மதுரை மல்லிக்கு உள்ள தனிவாசமும் அதன் இதழ்களின் அடர்த்தியும் வேறு எங்கு விளையும் மல்லி வகைகளுக்கு கிடையாது. ஆதலாலே மதுரை மல்லிக்கு தனி சிறப்பு.

அந்த வகையில் மெக்சிகன் சாராயமான டக்கீலாவிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட இருக்கிறது. அது சரி இதன் சைடு டிஷ் ஸ்பெஷலான இடது உள்ளங்கை உப்பிற்கு வழங்கப்படுமா தெரியவில்லை.

நாச்சியார் கோவில் விளக்குகளும் மேற்படி புவிசார் குறியீடு வகையில் சேர்கின்றது. திருவாரூர் மாவட்ட நாச்சியார் கோவில் குத்து விளக்கு தயாரிப்பில் பெயர் பெற்றது.

சமீபத்திய அம்மா புண்ணியத்து மின்வெட்டால் இந்த தொழில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ரயில் கட்டண உயர்வு

ரயில்வே பட்ஜெட் வருவதற்கு முன்பே ரயில் கட்டணத்தை ஏற்றி சராசரி மனிதனின் தலயில் இன்னும் ஒரு டன் சுமையை ஏற்றிவிட்டார்கள். மேற்படி கட்டண உயர்வு ஏ.சி. வகுப்பிற்கு கிடையாதாம். இந்திய அரசாங்கமும், அதை நடத்தும் அரசியல்வாதிகளும் நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் முதுகில் சவாரி செய்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நல்லஅரசுடாஇது!

கடல்

மணிரத்னம் இயக்கும் ஜெயமோகன் கதையில் புது முகங்கள் கெளதம் (கார்த்திகன் மகன்) துளசி நாயர் (ராதாவின் மகள்) நடிக்க ராஜீவ் மேனன் காமெரா கைவண்ணத்தில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் "கடல்" பாடல்கள் பிரமிக்க வைக்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கிறார். "ஏலேகிச்சான்", "நெஞ்சுக்குள்ளே", "மூங்கில் தோட்டம்", "அடியே", "சித்திரை நிலா" எல்லா பாடல்களுமே சூப்பர்.  "நெஞ்சுக்குள்ளே" பாடலில் சக்தி கோபாலன் குரல் என்னவோ செய்கிறது. சர்ச்சில் வரும் பிரார்த்தனை பாட்டு வித்தியாசமான இசை.

ரொமாண்டிக் த்ரில்லரான "கடல்" பிப்ரவரி ஒன்றாம் தேதி வர இருக்கிறது.

போதை பொருட்கள் 

டைம்ஸ் ஆப் இந்தியா இந்திய பெருநகரங்களில் போதை பொருட்களைப்பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  சென்னையில் போதை பொருட்கள் விநியோகம் கல்லூரி, பள்ளி மாணவர்களை வைத்து விற்பனை செய்கிறார்களாம். போதை பெருச்சாளிகள்  இணையத்தின் மூலமாகவும் கைபேசி மூலமாகவும் மாணவர்களைப் பிடித்து விற்பனை செய்கிறார்கள். போதை தடுப்பு பிரிவு காவலர்களுக்கு  இந்த "ஹைடெக்" விற்பனையை தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படித்ததில்  ரசித்தது 

நஞ்சிருக்கும் தோலிருக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்து பற்பட்டால் மீலாது-விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன்  வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்.

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை  தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்து செட்டியாரே.

மேற்படி இரண்டு கவிதைகளும் சிலேடையில் காளமேகப் புலவர் எழுதியது.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனயில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக்கிழுச்சீங்க.

------------------------------------------பட்டுக்கோட்டையார்.

நகைச்சுவை 

மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு. 
 
 கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?
 
 மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?


ஜொள்ளு




28/01/2013


   

Thursday 24 January 2013

கமலை துரத்தும் சர்ச்சைகள்

கமல் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. வழக்கம்போல் அது விஸ்வரூபத்திற்கும் தொடருகிறது.

விருமாண்டி படம் பெயர் பிரச்சினையில் சிக்கி சின்னாபின்னமாகி ஒரு வழியாக வெளிவந்தது. பின்னர் வந்த படங்கள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. அதிலும் மன்மதன் அம்பு திசைமாறி சேற்றில் விழுந்தது.

தற்பொழுது விஸ்வரூபம் டி.டி.ஹெச்  பிரச்சினை, திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் எல்லாம் கடந்து எப்படியும் இன்று வெளிநாடுகளில் வந்து விடும் என்ற நிலைமை இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளிலும் இன்று வெளிவரும் என்று காலை செய்தித்தாள்களில் குறிப்பிட்டு இருந்தார்கள். பிறகு ஜகா வாங்கி நேபாள படம் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கொடனாட்டில் இருந்து திரும்பிய ஆத்தா முதல் வேலையாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் மறுபடியும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் இன்னும் பதினாலு நாட்களுக்கு படத்தை திரையிடக்கூடாது என்று ஆணை பிறப்பித்துவிட்டார்கள்.

கமலின் வாதம் சரியானதே, படம் தணிக்கை குழுவின் அனுமதி பெற்று வெளிவரும் வேளையில் மாநில அரசு தடை செய்வது ஏற்கமுடியாதது. அவர் அரசின் ஆணையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தை தங்களுக்கு இந்த மாதம் இருப்பத்தி ஆறாம் தேதி திரையிட சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பின்தான் முடிவு வெளியாகும். அதுவரை ஊடகங்களுக்கு(நமக்கும்) நல்ல தீனிதான்.

படத்திற்கு தேவையான அளவு ஏன் சற்று அதிகமாகவே விளம்பரம் கிடைத்துவிட்டது. கமல் போட்ட காசை எடுத்து விடலாம்.



Sunday 13 January 2013

கலக்கல் காக்டெயில்-99


எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


புத்தகக் காட்சி 

இப்பொழுதுதான் பிரபாகரனின் "புத்தகக் காட்சி" பதிவை படித்தேன், எனது புத்தகக் காட்சி நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டார்.நான் சென்னையில் ஒரு மூன்று முறைதான் புத்தக காட்சிக்கு சென்றிருப்பேன். அப்பொழுது சென்னை உரத்தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு முறை சென்னை வூட்லண்ட்ஸ் மைதானத்திலும், காய்தே மிலத் கல்லூரியிலும் மற்றும் ஒரு முறை தேனாம்பேட்டை மைதானம் என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் புத்தங்கங்கள் வெகு மலிவாக கிடைத்தன. மைக்கில் சுஜாதா வருகிறார் என்று கூவிக்கொண்டிருப்பார்கள். எனது ஆதர்ச எழுத்தாளர் அவரை நான் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. அவருடைய புத்தகங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன, ஒரே ஒரு சிறு நாவலை தவிர. "செப்டம்பர் பலி" என்ற புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்க வில்லை. பிறகு பிழைக்க கடல் கடந்து வந்த பிறகு ஓரிரு புத்தக காட்சி (ரஷ்ய கப்பலில்) போயிருக்கிறேன், அனால் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. என்ன தமிழ் புத்தகங்கள் ஒரு பத்து இருந்தால் ஆச்சர்யம்.

சென்னை புத்தகக் காட்சியை மறுபடியும் பார்க்கவேண்டும் எனது ஆசை எப்பொழுது நிறைவேறுமோ தெரியவில்லை.

ஆனாலும் ஒவ்வொரு விடுமுறையும் ஊருக்கு சென்றுவரும்பொழுது குறைந்தது ஒரு ஐந்தாறு புத்தங்கங்கள் வாங்கி வருவது வழக்கமாகிவிட்டது. 

Men are from Mars Women are from Venus

 ஜான் கிரே எழுதிய இந்த புத்தகத்தை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். என்ன எப்பொழுதோ படித்திருக்க வேண்டியது. ஆண் பெண் உறவை புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும். இதைப் படித்தாலும் பெண் மனதை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் தான்.

விஸ்வரூபம் சர்ச்சை 

கமலின் பிரச்சினைகள் முடிந்து படம் ஒரு வழியாக வெளிவரும் போல் தோன்றுகிறது. இருந்தாலும் டி.டி.ஹெச்சில் கட்டியவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா? இல்லை படமே  போடுவார்களா? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரியவில்லை.

விருமாண்டி படத்திற்கு முதலில் வைத்த "சண்டியர்" பெயர் சர்ச்சையில் தொடங்கி அவர் எந்தப் படமென்றாலும் எதாவது ஒரு சர்ச்சைதான்.சண்டியர் பெயர் பிரச்சினையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ் கலாசார காவலர்களையும், "சமணர்களை கழவிலேற்றியதாக" குற்றம் சாற்றப்படும் சைவர்களையும் கலங்கிய கண்களுடன் சாடினார். இந்த முறை தியேட்டர் காரர்கள்.

இதற்கு முடிவில்லை.

ரசித்த கவிதை

உலகுக்கு சோறு
போடும் விவசாயி
நகை நட்டு விற்றும்
கடன் பட்டும்
விதை விதைத்தான்
அறுவடை செய்யும்
காலமும் வந்தது
ஆவலுடன் எதிர்
பார்த்த அவனுக்கு
காலம் கடந்து
வந்த மழையால்
அவனுக்கு மிஞ்சியது
அவனது கண்ணீரும்
அவனது குடும்பத்தின்
இழப்புகளுமே................
 ------------------------------------------சிந்து.எஸ்.

ஜொள்ளு




13/01/2/13

Friday 11 January 2013

சாதனை அரசு!!!!!!

அம்மா ஆட்சியில் நிறைய சாதனைகள். ஒரு மணி நேரமா இருந்த மின்வெட்டை இப்பொழுதெல்லாம் இரண்டு மணிமுதல் பதினான்கு வரை அதிகரித்து எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனை செய்திருக்காங்க. இதற்கு முன்பெல்லாம் மேற்கு வங்கமும்,பீகாரும்தான் இந்த சாதனையில் முன்னோடியா இருந்தாங்க. இப்போ தமிழகம் அவங்க சாதனையெல்லாம் முறியடித்து முன்னனியில இருக்காங்க. இந்த நிலைக்கு தமிழகத்தை கொண்டுவந்த பெருமை கிட்டத்தட்ட இருபது வருடமா மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு கழகங்களுக்குமே உண்டு.

அடுத்ததுதான் மிகப்பெரிய சாதனை. டாஸ்மாக் வருமானம். இந்த மாதம் திருவள்ளுவர் தினம்,வள்ளலார் தினம், மிலாடி நபி, குடியரசு தினம் என்று நான்கு நாட்களுக்கு டாஸ்மாக்கிற்கு விடுமுறை. ஆதலால் குடிமகன்களுக்கு அந்த நாட்களில் சப்ளை கிடையாது. இதனால் அரசு வருமானம் இந்த நாட்களில் பூச்சியம்தான். ஆதலால் வரும் பொங்கல் விடுமுறை நாட்களுக்கு சரக்கு அதிகமாக விற்க ஐநூறு கோடி என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார்களாம்.ஐநூறு கோடியென்ன ஆயிரம் கோடியே வரும்.
சரக்கு கொடுத்தா போதுமா? சைடு டிஷ் எவன் கொடுப்பானாம்?.

சரக்கு விற்பனை தனியார் கையில் இருந்த பொழுது ரூபாய் இரண்டாயிரம் கோடிதான் அரசுக்கு வருமானம். இதை போன முறை அம்மா ஆட்சியில் ஒரு ஆணை போட்டு அரசு எடுத்து நடத்துவதில் இருந்து கிட்டத்தட்ட வருடத்திற்கு ரூபாய் இருபத்தோராயிரம் கோடி வருமானமாம்.  ஆதலால் பணம் கொழிக்கும் இந்த துறையில் தட்டுப்பாடு வரக்கூடாது என்று நான்கு நாட்களுக்கு சரக்கு கொள்முதல் செய்து அடுக்கிவிட்டார்கள். இனி என்ன சரக்கு வெள்ளமாகி புரண்டு ஓடும். அரசு கஜானா ஆல்வேஸ் ஃபுல்.

பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை கிடைக்கிறதோ இல்லையோ, சரக்கு தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும்.

நல்ல ஆட்சி.

இன்னும் அரசு வருமானத்தை பெருக்க மோடியிடம் இன்னும் நிறைய ஐடியா கேட்டு வந்திருக்காங்களாம், நல்லா பெருக்குங்க.அப்படியே மின்வெட்டிற்கும் ஒரு வழி பண்ணுங்க. சரக்கடிச்சிட்டு இருட்டுல வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரிய மாட்டேங்குது. 

Thursday 10 January 2013

அடுத்த ஆத்தா ரெடி

என்னை மிரட்டமுடியாது..........பயப்படமாட்டேன்......டி.டி.எச்சில் வெளியிடுவேன்............ஆனால் இப்போ இல்லை...................கமல்

முதலில் டி.டி.எச்சில் பணம் கட்டியவர்களுக்கு திருப்பிக்கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.......................&%#அவசரப்பட்டு பணம் கட்டி ஆந்தை போல் முழிக்கும் சங்கம்.


தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயர்.......கி.வீரமணி ஆதரவு........சருகுகளின் சலப்புகள் தானே அடங்கும்............

அஞ்சா நெஞ்சனை சருகு என்கிறீர்களா...........மதுரைப்பக்கம் போயிடாதீங்க உங்களுக்கு நொங்குதாண்டி

இந்திய வீரர்களை பாக் ராணுவம் கொல்லவில்லை............ஹீனா ரப்பானி.

ஆமாம் அவங்களே கொன்னுகிட்டாங்க............அடுத்த ஆத்தா ரெடி.

EMI  கட்டாமலே வீடு வச்சிக்கலாம்..................அமர்ப்ரகாஷ் விளம்பரம்.

இன்னாது கட்டாமலேயே (சின்ன) வீடு வச்சிக்கலாமா? ...........#$% தெய்வமடா நீங்க.

தன்னை ஒருவன் உரசினான் என்பதற்காகவே, தீக்குளித்து செத்துப்போனாள் தீக்குச்சி.......................ட்விட்டரில் விவாஜி

கவிதை கவித கவுஜ.....................

வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது ............#$ ரயில் கட்டண உயர்வு பற்றி தமிழக முதலமைச்சர் 

வெந்த புண் என்று பஸ் கட்டண உயர்வை சொல்லுறாங்களோ அம்மா. 

ஃபேஸ் புக்கிலும் சச்சின் சாதனை, ஒரு கோடி ஃபேன்ஸ்..........#$%செய்தி 

ஏண்டா நீங்க அடங்கவே மாட்டீங்களா?

அரசு வழங்கும் பொங்கல் பைகளில் அம்மா படம்.

ஒரு வேளை சொந்தக்காசில் கொடுக்குறாங்களோ? 

அனைத்து சாதி ஒற்றுமைக்காக பாடுபடுகிறார் எங்கள்  மருத்துவர் ஐயா.......பா.ம.க.

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறாரே?..........இதுதான் தனியா விட்டா தன்னால புலம்பறது  என்பதா? 

தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று தலைவரே சொல்லி இருக்கிறார்................................அஞ்சா நெஞ்சன்.

ரைட்டுதான் அங்கே வாரிசு பிரச்சினையெல்லாம் கிடையாது. அதைதான் சூசகமா சொல்லுறாரு தலீவர்.

 





Wednesday 9 January 2013

நண்பர்களின் கவனத்திற்கு

நான் சென்னையில் பெரும்பாலும் பேருந்தை உபயோகிப்பதில்லை. கடந்த சில வருடங்களாகவே பேருந்தில் பயணிக்காததால் இப்பொழுது புதியதாக வந்த ரூட் நம்பர்கள் எல்லாம் தெரிவதில்லை. இருந்தாலும் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவலை தமிழாக்கம் செய்து பதிவு செய்கிறேன். கண்டிப்பாக இது சென்னை பேருந்தில் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இனி மின்னஞ்சலின் தமிழாக்கம்

உண்மை சம்பவம் ---------ரஞ்சனி

நான் சென்னை துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறேன். தினமும் பணிமுடித்துவிட்டு சென்னை மாநாகர போக்குவரத்து பேருந்தில் ஜெயின் கல்லூரி நிறுத்தத்தில் ஏறி டைடல் பார்க் நிறுத்தத்தில் இறங்கி தொடர் வண்டி பிடித்து வீடு போய் சேருவேன். கேளம்பாக்கத்திலிருந்து வரும் பேருந்துகள்  (19B, 21H) ஆரம்பகாலத்தில் டைடல்பார்க் நிறுத்தத்தில் நிற்பதில்லை. ஆதலால் நான் T51 பேருந்தைப் பிடித்து டைடல் பார்க் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்வேன். நாளடைவில் 19 B பேருந்துகளும் அங்கு நிற்க ஆரம்பித்தன.

அன்று இரவு 8:30 மணி அளவில் அலுவலகத்தை விட்டு கிளம்பி 9:28 மணி தொடருந்தை டைடல் பார்க் நிறுத்தத்தில் பிடிக்கலாம் என்றிருந்தேன். ஆதலால் ஜெயின் கல்லூரி நிறுத்தத்தில் 19 B பேருந்தில் 8:45 மணியளவில்   ஏறிக்கொண்டேன். நடத்துனரிடம் டைடல் பார்க் நிறுத்தத்திற்கு டிக்கட் கேட்டேன். அவர் இந்த பேருந்து அங்கு நிற்காது வேண்டுமென்றால் சிக்னல் நிறுத்தத்திலோ அல்லது அடுத்த நிறுத்தத்திலோ இறங்கிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் நான் தினமும் இதே வண்டியில்தான் செல்கிறேன் அவர்கள் நிறுத்துகிறார்களே என்று கூறியும் அவர் அதையே சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஏதோ ஒருமுறை பேருந்தில் பயணிக்கும் பொழுது ஒரு புகார் எண்ணை (9884301013)என்னுடைய அலை பேசியில் சேமித்து வைத்திருந்தேன். அந்த எண்ணை அழைத்து நடத்துனர் நிறுத்தத்தில் நிறுத்தமாட்டார் என்று எனது புகாரை சொன்னேன்.

மறுமுனையில் பேசிய அந்த சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி  அலைபேசியை நடத்துனரிடம் கொடுக்க சொன்னார். நடத்துனரோ அதை வாங்கி பேச மறுத்துவிட்டார். அதை அந்த அதிகாரியிடம் சொன்னேன். அவர் அதற்கு பேருந்து இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறது என்று கேட்டார். நான் கந்தன்சாவடி அருகே இருக்கிறோம் என்றேன். பின்னர் பேருந்தின் பதிவு என்னையும் கேட்டார். பிறகு சரி நான் அவர்களுடன் பேசிக்கொள்கிறேன் என்றார். எனக்கு இவர் எப்படி நடத்துனரிடமோ இல்லை ஒட்டுனரிடமோ பேசுவார் என்று சந்தேகம்.

சற்று நேரத்தில் ஓட்டுனர் அருகே இருந்த Wireless transmitter அலற ஆரம்பித்தது. ஓட்டுனர் உடனே வண்டியை ஓரங்கட்டினார். எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஓட்டுனருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவருக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும். அவரிடம் அந்த அதிகாரி ஏன் டைடல் பார்க் நிறுத்தத்தில் நிறுத்தமாட்டீர்கள் என்று கேட்டார். அதற்கு ஓட்டுனர் இல்லை நிறுத்துகிறோமே என்றார். பின் ஏன் நடத்துனர் நிறுத்த மாட்டோம் என்று சொன்னார் என்று கேட்டார். ஓட்டுனர் நடத்துனரை விட்டுக்கொடுக்காமல் அவர் இந்த தடத்திற்கு புதியவர் அவருக்கு தெரியாது என்றார். பின்னர் ஓட்டுனர் நடத்துனரிடம் இதை பற்றி கேட்க அவர் பேசாதிருந்தார்.பின்னர் ஓட்டுனர் என்னிடம் நான் டைடல் பார்க்கில் நிறுத்துகிறேன் என்றார்.

பின்னர் சென்னை மாநகர பேருந்து அதிகாரி புகார் கொடுத்த நபரிடம் பேசவேண்டும் என்றார். நான் ஒலிவாங்கியின் அருகே சென்று அவரிடம் பேசினேன். அவர் நடந்தற்கு மாநகர் போக்குவரத்து சார்பில் மன்னிப்பு கேட்டார். பேருந்தில் உள்ள சக பயணிகளுக்கு ஒரே ஆச்சர்யம். என்னை ஒரு மாதிரி பார்த்தனர். சில பயணிகள் யாருக்கு போன் செய்தீர்கள் அந்த எண் என்ன? என்று என்னடம் கேட்டனர். பின்னர் வண்டி டைடல் பார்க் நிறுத்தத்தில் நின்றது, நான் இறங்கிக்கொண்டேன்

பின்னர் நான் மறுபடியும் அந்த அதிகாரியை அழைத்து வண்டி நிறுத்தத்தில் நின்றது உங்கள் உதவிக்கு நன்றி என்று  சொன்னேன்.

எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல சக பயணிகளுக்கும் ஏன் ஓட்டுனர் நடத்துனருக்குமே ஒரு புது அனுபவம்தான். நமது அரசாங்கத்திலும் இது போன்ற நல்ல செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன.

நவீன தொழில் நுட்பத்தை கையாண்டு நல்ல காரியங்கள் செய்கிறார்கள்.

இது போன்ற புகார்களுக்கு அழைக்க வேண்டிய எண்கள் (9884301013,9445030516,9383337639)  


Tuesday 8 January 2013

விஸ்வரூபம்-புஸ்வாணமா?

கமல் என்றாலே பிரச்சினைகளுக்கு பஞ்சம் இருக்காது. இப்பொழுது விஸ்வரூபம் வெளிவரும் நேரத்தில் படம் வருமா வராதா? என்ற சந்தேகம் அதிகரிக்கும் வகையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமல் தரப்பிற்கும் உள்ள போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இரண்டு வாரம் முன்பு என்.டி.டிவியில் கமலின்பேட்டி வந்தது. அதில் கமல் விஸ்வரூபத்தை டி.டிஹெச் முறையில் வெளியிடப்போவதில் மிகவும் உறுதியாக இருந்தார். படத்தை பதினொன்றாம் தேதி இரவு 9:30 மணிக்கு ஆயிரம் ரூபாய் கட்டி வீட்டிலேயே பார்க்கலாம் என்று விளம்பரங்கள் வேறு தன் சொந்தக்குரலிலேயே செய்திருந்தார். படத்தை மிகுந்த பொருள் செலவில் அதாவது தொண்ணூற்றி ஐந்து கோடி மதிப்பில் தயாரித்திருப்பதாக பேட்டியில் தெரிவித்தார். மேலும் படத்தை டிவியிலும் தியேட்டர்களில் வெளியிடுவதால் நூறு விழுக்காடு லாபம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஆனால் இதற்கு தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டிவியில் போட்டுவிட்டால் தியேட்டர் கலெக்ஷன் அடிபடும் எனபது அவர்களது ஐயப்பாடு. மேலும் இனி கமல் படங்களை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்று அறிவித்திருந்தனர். இதனால் கமல் போலிஸ் உதவியை நாட வேண்டியதாகிவிட்டது. முதல்வரும் இதில் தலையிடுவதாக தெரியவில்லை.

அனால் தற்போதைய நிலவரப்படி கமல் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் டி.வியில் வெளியிடுவதிலிருந்து பின் வாங்கிவிட்டதாக தெரிகிறது. இதற்கு காரணங்கள் பல விதமாக சொல்லப்படுகின்றன.

டி.வியில் வெளியிடுவதில் எதிர் பார்த்த அளவு வரவேற்பில்லை என்று தெரிகிறது. இதற்க காரணம் தமிழ்நாட்டின் மின்வெட்டும் ஒரு காரணம். மேலும் வடநாட்டில் டிவியில் வெளியிட்டாலும் தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கலில்லாத நிலைமை மாறி அவர்களும் ஜகா வாங்கிவிட்டார்களாம். ஆதலால் கமல் தன் நிலைமையை மாற்ற வேண்டிய கட்டாயம்.

கமல் நல்ல கலைஞர் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அவரது படங்கள் எல்ல  ஏரியாக்களிலும் எதிர் பார்த்த அளவு போவதில்லை. மேலும் சமீபத்திய அவரது படங்கள் உன்னைபோல் ஒருவன், மன்மதன் அம்பு தயாரிப்பாளருக்கு சொம்பு கொடுத்ததுதான் மிச்சம்.

எது எப்படியோ படத்திற்கு தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கிடைத்து விட்டது.

இனி படம் விஸ்வரூபமா அல்லது புஸ்வாணமா என்பது  சிறிது நாட்களில் தெரிந்துவிடும்.

Monday 7 January 2013

கலக்கல் காக்டெயில்-98

ஊடகங்கள் 

நாகை மீனவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள், காரணம் யாவரும் அறிந்ததே. தினந்தோறும் சிங்கள படையினரால் சுட்டு கொல்லப்பட்டு சக மீனவர்களை இழந்து செய்வதறியாது அரசாங்கத்திடம் தங்களுக்கு ஒரு தீர்வு காண மத்திய அரசை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரோ அம்மா ஓலை அனுப்புவார்கள் என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். ஊடங்கங்கள் இதை ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் இன்று மத்திய அரசு சேவை வரி விதித்ததை எதிர்த்து நடிகர்கள், நடிகைகள் உண்ணாவிரதத்தை ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு நாள் முழுவதும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் டி ஆர்.பி ரேட்டிங்கும் கொழிக்கும் பணமும் செய்கின்ற வேலை.

கற்பழிப்பு சம்பவங்கள்

புது டில்லி கற்பழிப்பு சம்பத்திற்கு பிறகு ஊடங்கங்களில் முதல் பக்கத்தை ஆக்கிரமிப்பவை கற்பழிப்பு சம்பவங்களே.எந்த ஊடகத்தை பார்த்தாலும் கொட்டாம்பட்டியிலோ இல்லை கொல்கத்தாவிலோ ஏதாவது ஒரு சிறுமியையோ அல்லது பெண்ணையோ யாராவது ஒருவர் அல்லது பலர் கற்பழித்த செய்திதான். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடமும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்று ஒரு புள்ளி விவரம் கூறியதை இவர்கள் இப்பொழுதுதான் உணர்ந்தார்களா? என்பது தெரியவில்லை.

அவ்வப்பொழுது பேசப்படும் சம்பவங்கள் எதுவென்றாலும் அதற்கு தலைவாரி பூச்சூட்டுவதே இவர்கள் பிழைப்பாகிவிட்டது.

ரசித்த கவிதை

செருப்புகளும் மதங்களும்

விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்
தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று
அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன
சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே
பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்
மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்.
.......................................................கவிமதி 

நகைச்சுவை

மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...? கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...



ஜொள்ளு
07/01/2013

Friday 4 January 2013

புத்தாண்டு

முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த வருடம் புத்தாண்டிற்கு சென்னை வந்து சேர்ந்தேன். புத்தாண்டிற்குஒன்றும் பெரிய கொண்டாட்டம் இல்லை. வழக்கம்போல் மூடியை முகர்ந்து மட்டையாகி உறங்கியது ஒருபுறமிருக்க, மற்றபடி வழக்கம்போல் மற்றுமொரு நாள்தான்.

முப்பத்தி ஒன்றாம் தேதி காலையில் விமானமிறங்கி வீடு வந்து சேர்ந்தவுடன், முதல் ஆப்பு முன்னாடி நின்று ஆடியது. என்ன வழக்கம்போல் மின்சராம்தான், எப்படியோ தட்டு தடுமாறி கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்து செட்டில் ஆனாவுடன் ஆப்பு எல்லாம் வரிசயாக நின்று வாழ்த்து  சொல்லிக்கொண்டிருந்தன.

மின்சாரம் வந்தவுடன் மடிக்கணினியை ஆன் செய்து மின்னஞ்சல் பார்க்கலாம் என்றால், WiFi இணைப்பு "பெப்பரப்பே" என்றது. சரி லேன்ட் லைனை சரியா? என்று பார்த்தால் அது "அம்மா ஆட்சி எதிர்கட்சி தலைவர் போல" அடங்கியிருந்தது. சரி ஏர்டெல் உதவிக்கு அழைத்தால் அது மொபைலில் உள்ள எல்லா எண்களையும் மற்றும் உபரி சாவிகளையும் அழைத்த பின் ஒரு மொக்க பார்ட்டி வந்து குலம் கோத்திரமெல்லாம் கேட்டறிந்து ஒரு கம்ப்ளைன்ட் நம்பர் கொடுத்து அபீட் ஆகியது.

பின்னர் பழுது பார்ப்பவர், ஒயர்மேன், கம்பமேறி என்று ஒவ்வொருவர் காலை கையை பிடித்து இப்பொழுதுதான் ஒருவழியாக வேலை செய்ய ஆரம்பித்தது.

இனி புத்தாண்டு கவிதை

வருடா வருடம் யாரும்
அழைக்காமல் வந்து போகிறாய்
வரும் பொழுது மின்சாரம்
கொண்டு வந்தால்  என்ன
குறைந்தா போய்விடுவாய்
கன்னியர்களின் கற்பை காத்து
கடந்த வருடம் போலில்லாமல்
கர்னாடக கலாசாரம் விட்டு
காவிரியை கற்பிழக்க சொல்...................


04/01/2013