Pages

Saturday 23 February 2013

இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்- தெரிந்துகொள்வோம்

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஒரு தமிழர் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று இந்தியாவில் கடை பிடிக்கப்படும் பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகள் இவரால் வடிவமைக்கப்பட்டதே.

அந்த நிதியமைச்சர் திரு. சண்முகம் செட்டி. சண்முகம் செட்டி அவர்கள் 1892ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் கோயம்பத்தூரில் பிறந்தார். தன பள்ளிப்படிப்பை கோயம்பத்தூரில் பயின்றார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னை கிறிஸ்துவ கல்லூரியிலும், பின்னர் சட்ட படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார். ஆங்கிலேய அரசாங்கத்தில் மத்திய சட்ட சபையின் உறுப்பினராக இருந்தார். சிலகாலம் கொச்சின் சமஸ்தானத்தின் ஆளுநராகவும் இருந்தார்.

அரசியலில் ஸ்வராஜ் கட்சியில்உறுப்பினராக இருந்தார். பின்னர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு பிரதமர் நேரு அவர்களால் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த பெருமை தமிழரான சண்முகம் செட்டி அவர்களையே சாரும்.

இவர் தமிசைசங்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். செட்டி அவர்களின் தந்தையாரும், தாத்தாவும் கோயம்பத்தூரில் நூற்பு ஆலைகள் வைத்திருந்தனர்.

இவர் நிதியமைச்சராக இருந்த பொழுது கோயம்பத்தூர் மில் தொழிலுக்கு பாரபட்சம் காட்டினார்  என்ற குற்றசாட்டு எழுந்ததனால் தன் பதவியை 1949ல் துறந்தார்.

இருந்தாலும் தன்அரசியல் வாழ்க்கையை கைவிடவில்லை. 1952ல் சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார்.

சண்முகம் செட்டி அவர்கள் 1953ம் ஆண்டு  மே மாதம் 5ம் மாரடைப்பால் காலமானார்.



Thursday 21 February 2013

காவிரியும், கன்னித்தமிழ்நாடும், தேர்தலும்

சமீபத்தில் அரசியல் அரங்கில் அரங்கேறும் செயல்கள் யாவையும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே நடப்பது போல் தோன்றுகிறது. இத்துணை  நாட்கள் தமிழகம் கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத காவிரி நீர், நடுவர் மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டு விட்டதனால் இனி வரும் காலங்களில் தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படுமா என்ற கேள்விக்கு விடையில்லை.

நடுவர் மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டவுடனேயே கர்நாடக அரசு ஷட்டரை மூடிவிட்டதாக செய்திகள் வருகின்றன.

அதற்குள் தமிழகத்தில் இருக்கும் பிரதான கட்சிகளோ தேர்தலை குறிவைத்து அரசு இதழில் வெளிவர "தாங்கள் தான் காரணம்" என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.

நடுவர்மன்ற தீர்ப்பை ஒட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் காவிரி பிரச்சனை முடிந்துபோய்விடவில்லை. இனி நடுவர் மன்றத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவது எப்படி? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் நம் முன் இருக்கின்றன. தமிழகம்- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் விவகாரம் சுமார் 200 ஆண்டுகால பிரச்சனையாகும். ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் இவை எதுவும் பலனின்றிப் போல 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீதிமன்றத்தில் பல வழக்குகளையும் தன்னகத்தே கொண்டதுதான் காவிரி நதிநீர் விவகாரம். தற்போதும் கூட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிட்டப்பதுடன் இந்த விவகாரம் ஓய்ந்து விடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கும் கூட கர்நாடகா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
 
நதிநீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு எடுத்துக்கொண்டாலும் பாரபட்சம் இல்லாமல் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசு இதழில் வெளியிட்டாலும், மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு முப்போகம் விளைவிக்க வழி செய்தால் தான் இதனுடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும்.

அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். 


Wednesday 20 February 2013

தமிழன்-பயோடேட்டா

அரசியல்வாதிகளையும், சினிமா நடிகர்களையும் பற்றியே பயோடேட்டா எழுதி புளிப்பு ஊத்தியாச்சு.  ஒரு மாறுதலுக்காக மொத்தமாக தமிழனைப் பற்றிய பயோடேட்டா.

சும்மா நகைச்சுவைக்குதான்.









காரணப்பெயர்
தமிழன்
பட்டப்பெயர்
ரொம்ப நல்லவன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்)
மற்றுமொரு பெயர்
இளித்த வாயன்
பேசும் மொழி
தங்லீஷ்
குணம்
சாத்வீகம்
பெருமை
வேலைக்காரன் 
வியாபித்திருப்பது
அகிலமெங்கும்
வீரம்
வாய் சொல்லில்  
பொங்குவது
சக தமிழன் வளரும்போது
அடங்குவது
தமிழர் அல்லாதோரிடம் 
நண்பர்கள்
தேடிக்கொண்டிருப்பது
எதிரிகள்
தானே சேரும் கூட்டம்  
மறந்தது 
ஈழத் தமிழர்கள்
மறக்காதது
அடிமைத்தனம்
நம்புவது
சினிமாவை
நம்பாதது
திறமை


 



Tuesday 19 February 2013

கலக்கல் காக்டெயில்-103

ஹெலிகாப்ட்டர் ஊழல்-அகஸ்டா வெஸ்ட்லேண்ட்

காங்கிரஸ் வரலாறு காணாத ஊழல் புகார்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த், 2ஜி அலைக்கற்றை வழக்கு வரிசைகளில் இப்பொழுது புதியதாக ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் ஆறு ஹெலிகப்டர்கள் வாங்க மூவாயிரத்து சொச்சம் கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அகஸ்டாவிற்கு இந்த ஆர்டர் கிடைக்க கிட்டத்தட்ட முன்னூறு கோடி ருபாய் வரை இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு கையூட்டு கொடுத்ததாக குற்றம்சாட்டி அதன் சி.ஈ.வோவை இத்தாலிய அரசாங்கம் கைது செய்திருக்கிறது.

அவர்கள் கொளுத்திப்போட்ட திரி இப்பொழுது டில்லியில் வெடிக்க ஆரம்பித்திருகிறது. எப்பொழுதும் வாய் திறவாத பிரதமர் இதில் மறைக்க ஒன்றுமில்லை, விசாரணைக்கு ரெடி என்கிறார்.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இந்த சர்ச்சையிலேயே கழியப்போகிறது, உருப்படியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை.

குஷ்புவும்  கலைஞரும் மற்றும் குமுதமும்

குஷ்பு தி.மு.க வில் இருப்பதனால் குஷ்புவிற்கு ஆதாயமா இல்லை தி.மு.க. விற்கு ஆதாயமா என்ற பட்டிமன்றம் வைத்தால் நிச்சயமாக தி.மு.க விற்குதான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பார். காரணம் குஷ்புவின் ஆங்கில பேச்சுத் திறைமையை போன தேர்தலின் பொழுது நன்றாகவே உபயோகப்படுத்திக் கொண்டனர். அ.தி.மு.கவின் டாக்டர் மைத்ரேயனைவிட குஷ்பு வட இந்திய ஊடகங்களை நன்றாகவே கையாண்டார். கலைஞரும் இதை மனதில் வைத்துதான் குஷ்புவை கூட வைத்துக்கொண்டார்.ஆதலால் குஷ்புவிற்கு அங்கு கிடைத்த மரியாதை எல்லோரையும் பொறாமை படவைத்தது.

அதுதான் இப்பொழுது வினையாகிவிட்டது. குமுதம் ரிப்போர்ட்டர் இதை வில்லங்கமாக்கி குஷ்புவை அடுத்த மணியம்மை என்று அநாகரீகமாக விமர்சித்திருக்கிறது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்க குமுதம் இதை எழுதி காசு பார்ப்பது, நல்ல!!! பத்திரிகை தர்மம்.

ஐயோ பார்த்து தொலைச்சிட்டேன்

அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்து தொலைச்சிட்டேன் அந்த விஸ்வரூபத்தை, அப்புறம் இனி இதை பற்றி ஒன்றும் எழுதுவதில்லை என்று "பாப்பாத்தி"யம்மன் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறேன்.


ரசித்த கவிதை 

கண்ணாடிக் குவளை

தோழியுடன்
உரையாடிக்கொண்டிருந்தபோது
அருகிலிருந்த
கண்ணாடிக்குவளையைக்
கொண்டுபோய் உரிய இடத்தில்
வைத்துவிட வேண்டும்
என்பதில் இருந்த
கவனத்தைவிட
அது உடைந்த பின்
அள்ளி எடுக்கும்போது
கூடுதலாயிருந்தது.

...............................................சின்னப்பயல் 

சின்னப்பயலின் எளிமையான வரிகளுக்கு நான் அடிமை

ஜொள்ளு

19/02/2013

Monday 18 February 2013

வேசியாகவே இருந்தாலும்...........சூர்யநெல்லி

டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்குப் பிறகு செய்திதால்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ முதலில் இடம் பிடிப்பது கற்பழிப்பு சம்பவங்களே.  கற்பழிப்பு என்ற சொல்லைக் கேட்டாலே "எடுரா வண்டியை" என்று எல்லா ஊடகங்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இப்பொழுது கேரளாவை கலக்கிகொண்டிருப்பது சுர்யநெல்லி கற்பழிப்பு வழக்கு.

பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். 1996ல் பதினாறு வயது சிறுமியை நாற்பது நாட்களுக்கு சூர்யநெல்லி என்ற இடத்தில் ஒரு விருந்தினர் மாளிகையில் அடைத்து வைத்து 42 பேர் கற்பழித்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலானோர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். இதில் ராஜ்யசபா துணை சபாநாயகர் பி.ஜே.குரியனும் அடக்கம்.அந்த பதினாறு வயது சிறுமியை முதலில் மிரட்டி தன் இச்சைக்கு பணியவைத்து பின்னர் எல்லோருக்கும் விருந்து வைத்தவர் ஒரு பஸ் கண்டக்டர். அவருக்கு உடந்தையாக இருந்தவர் உஷா என்ற பெண்மணி.

இந்த வழக்கு முதலில் கீழ் கோர்ட்டில் வந்த பிறகு 2000 ஆண்டு முப்பத்தைந்து பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில்அந்த கண்டக்டருக்கும் உஷா என்ற பெண்மணிக்கும் பதிமூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்தது, இதில் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் தர்மராஜன் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் இந்த வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டதில் முப்பத்தைந்து பேரை நிரபராதிகள் என்றும் வக்கீல் தர்மராஜந்தான் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. கற்பழிக்கப்பட்ட பெண் கொடுத்த ஆதாரத்தின் பெயரில் பி.ஜே.குரியன் பெயர் சேர்க்கப்பட்டாலும் கேரளா உயர்நீதி மன்றத்தால் பி.ஜே.குரியன் உரிய சாட்சியங்கள் இல்லாததால் நிரபராதி என்று தீர்மானிக்கப்பட்டார்.

இப்பொழுது இந்த வழக்கு பதினாறு வருடங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளது. சம்பவம் நடந்த சமயத்தில் குரியன் மந்திரியாக இருந்தார். என்னதான் அவர் பாதுகாப்பு பரிவாரங்களுடன் ஊடாடினாலும் சம்பவம் நடந்த அன்று அவர் பாதுகாப்பு காவலர்கள் கண்ணில்  மண்ணை தூவி எஸ் ஆகியிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. தற்பொழுது அவர் ராஜ்ய சபாவின் துணை சபாநாயகராக உள்ளார். சமீபத்திய டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு வர்மா கமிட்டி பரிந்துரையின் பேரில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனை பரிந்துரை மசோதா லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்த மசோதாவின் மேலான விவாதம் நடைபெறும் பொழுது கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரே அவை துணை தலைவாராக இருப்பது கேலிக்குரியது என்று குரல் எழுந்துள்ளது. 

இதை வைத்துதான் கேரளா அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அதில்தான் குரியனுக்கு குடை பிடிக்கும் ஒரு காங்கிரஸ் எம்.பி. கற்பழிக்கப்பட்ட அந்த பதினாறு வயது சிறுமி ஒரு விலைமகள் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பலவந்தப் படுத்தி விலைமகளுடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரமே என்று அவருக்கு தெரியாது போலும்.

பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.
 


Tuesday 12 February 2013

கலக்கல் காக்டெயில்- 102

ஜாங்கிரியா தூக்குல போட..

இந்திய அரசாங்கம் அவசர அவசரமாக இரண்டு தீவிரவாதிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கடந்த மூன்று மாத காலத்தில் தூக்கில் போட்டிருக்கிறது.  கசாப் கையும் களவுமாக பிடிபட்டவன். ஆனால் அப்சல் குரு சந்தர்ப்பசூழ்நிலை சாட்சிகளால் (circumstantial evidences) பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறான். இவனுக்கு ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த நாளே தண்டனை நிறைவேற்றப் படுகிறது.

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாகவே நிலவி வந்த அமைதி இப்பொழுது சற்று ஆட்டம் கண்டிருக்கிறது. சமீபத்திய நடவடிக்கைகளால் இப்பொழுது ராஜீவ் கொலை குற்றவாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மனித உரிமை ஆணையம் இந்திய அரசாங்கத்தை தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு வெகுநாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறது. வீ.ஆர். கிருஷ்ண ஐயரும் வெகு காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். யாருடைய உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அது அரசாங்கமே இருந்தால் கூட. யாரையோ திருப்திப் படுத்த அவசர அவசரமாக செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இப்பொழுது பேசாமல் இருக்கிறார்கள். இதில் உள்ள நியாய தர்மங்கள் புரியவில்லை.

தூக்கில் போடுவதற்கு பதில் தண்டனையை கடுமையாக்கி சிறையிலே வைத்திருக்கலாமே. ஆனால் அவர்களை பராமரிக்கும் செலவையும் வீண் செலவு என்று  குரல் கொடுக்க ஆளிருக்கிறது.

என்னதான் செய்ய?

நடிகவேள் 

ஜூனியர் விகடன் கழுகார் பதில்களில் ஒரு கேள்வி. விஸ்வரூபம் படத்திற்கு வந்த மாதிரி அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு வந்தால் என்ன செய்திருப்பார்?

அவர் காணாத பிரச்சினைகள் இல்லையாம். அவர் நாடகம் நடக்கும் பொழுதே பாம்பு, மாடு, நாய் முதலியவற்றை அரங்கின் உள்ளே விடுவார்களாம். மேடையில் அவர் வந்தால் செருப்பு சோடா பாட்டில் முதலியவை பறக்குமாம். ஆனாலும் கவலைபடாமல் தன் நாடகங்களை தொடர்ந்தார். அவர் சட்டம் ஒழுங்கை கெடுக்கிறார் என்றெல்லாம் அன்றைய காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்ததாம். நான் நாடக அரங்கை வாடகைக்கு எடுத்திருக்கிறேன், இங்கு நாடகம் பார்ப்பவர்கள் தங்கள் விருப்பப்படிதான் உள்ளே வருகிறார்கள் அவர்களை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று வாதிட்டாராம்.

அவரே தான் தன்னுடைய ரசிகர்கள் ரசிகர்மன்றம் ஆரம்பிக்கப்போவதாக அவரிடம் சொன்ன பொழுது, கூத்தாடி பசங்களுக்கெல்லாம் மன்றம் வைக்காதீங்கப்பா, நாடு உருப்படாது என்றாராம்.

வித்யாசமான மனிதர் தான். அவருடைய வசன உச்சரிப்பு ஸ்டைல், அந்த மாடுலேஷன், அந்த நக்கல் நடிப்பிற்கு அவருடைய கொள்கை பிடிக்காதவர்கள்கூட அவரது நடிப்பிற்கு அடிமை என்றால் அது மிகையாகாது.

ரசித்த கவிதை

பஸ்ஸில் போனபோது
சாலையோரம் இரண்டு செம்பாறைகள்
ஒன்றையொன்று கேலிசெய்து கொண்டன
ஒன்று உறுதியளித்தது
இயேசு சீக்கிரம் வருகிறார்
இன்னொன்று சொன்னது
hmt வாட்சுகள்
உங்கள் நேரத்தை
சரியாக காட்டும்

------------------------ நாகூர் ரூமி
 
ஜொள்ளு


12/02/2013

Sunday 10 February 2013

கமல்ஹாசன்-பயோடேட்டா


இயற்பெயர்
கமலஹாசன்
பட்டப்பெயர்
 உல(க்கை)க நாயகன்,
தற்போதைய தொழில்
உலகத்தரமென்ற பெயரில் உல்டா (உட்டாலக்கடி) படமெடுப்பது
நிரந்தரத் தொழில்
தயாரிப்பாளர்களை பிச்சைக்காரர்களாக்குவது
சொல்லிக்கொள்வது
பகுத்தறிவாளன்
சொல்லாதது
தீவிர வைணவன்
சமீபத்திய சாதனை
விஸ்வரூபம் வெளியிட்டது
நிரந்தர சாதனை
 நடிகையர்கள் உதடுகளை டேமேஜ் செய்தது
பலம்
ரசிகர்கள்
பலவீனம்
சக கலைஞர்களை நம்பாதது
அரசியல்
குதித்தால் அடிபடும் ஹி..ஹி..ஹி..
 ஆசை
ஆஸ்கார் விருது
 நிராசை
சூப்பர் ஸ்டார்
 சமீபத்திய எரிச்சல்
ஆத்தா
 நிரந்தர எரிச்சல்
இசைப்புயல்