Pages

Sunday 31 March 2013

கலக்கல் காக்டெயில்-106

சென்னையில் பலநாள்  

விடுமுறைக்கு சென்னை வந்த பொழுது நன்றாகத்தான் இருந்தது. பிப்ரவரி மூன்றாவது வாரம் வந்திறங்கிய பொழுது கோடை ஆரம்பமாகாமல் வெட்பநிலை மிதமாக இருந்தது. மார்ச் இரண்டாவது வாரம் தொடங்கி சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டான். போதாத குறைக்கு ஆற்காட்டாரும், நத்தமாரும் செய்த குளறுபடியில் பீசை பிடுங்கி புழுங்க வைக்கிறார்கள். தண்ணி வேறு கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறது. பேருக்குதான் இரண்டு மணிநேர மின்வெட்டு, நடு இரவில் குளிர்ச்சியாக இருக்கும் நேரத்தில் கனவில் மானை துரத்தி பிடித்து ராஜகுமாரியிடம் ஒப்படைக்க அந்தப்புரம் நெருங்கும் பொழுது வேர்த்து விருவிருக்க முழிக்க வைக்கிறார்கள். ஸ்ஸ்ஸ் அப்பா இதுக்குமேல சென்னையில் தாங்குதுராப்பா, எப்போ பிழைக்கும் ஊருக்கு கிளம்பலாம் என்று எதிர் நோக்க வேண்டியிருக்கிறது.

தனி ஈழம் 

தனி ஈழம் கேட்டு மாணவர் போராட்டங்களும், மற்ற போராட்டங்களும் வலுப் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் போஸ்டர் போராட்டங்களில் ஈடுபட்டு உண்மை காரணத்தை கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மீனவர்களை சுட்ட இத்தாலிய கடற்படையினரிடம் மத்திய அரசு காட்டும் தீவிரம் நமது குரலுக்கு செவி சாய்க்காமல் மெத்தனம் காட்டுகிறது. இதிலிருந்து மத்திய அரசு தமிழகத்தை எந்த அளவிற்கு மதிக்கிறது என்று தெரிகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரசின் நிலைமை தமிழகத்தில்  தெரிய வரும்.

தமிழினத்தலைவரும், ஈழத்தாயும் செய்யும் கேடுகெட்ட அரசியல் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை.

ரசித்த கவிதை 

ரசாயண மருந்தா
பல்லிக்கு உணவா
அடித்துக் கொலையா
உயிரோடு மின் தகனமா
இயற்கையாவா
வாழ்க்கை
எப்படி முடியப்போகிறதென்று
தெரியாமலே
பறந்து வருகிறது கொசு

ஆனந்தவிகடன் சொல்வனத்தில்  த. சாந்தி "முடிவு" என்ற தலைப்பில் எழுதிய கவிதை

நகைச்சுவை 

அத மட்டும் 35ன்னு வச்சுருக்காங்களே...தேங்க்ஸ் கடவுளே!



அமெரிக்க டாலரோட மதிப்பு ஒரு டாலருக்கு 55க்கு மேல போயிருச்சு...

பால் விலையும் 40 ரூபா வர வந்துருச்சு...

பெட்ரோல் விலையும் 70 ரூபாவுக்கு மேல போயிருச்சு...

இந்த இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்... பரீட்சையில் பாஸ் மார்க்கை இன்னும் 35ன்னுதானே வச்சுருக்காங்க....!



ஜொள்ளு



31/03/2013

Wednesday 20 March 2013

தமிழினத்தலைவருக்கு ஒரு பகிரங்க கடிதம்

ஐயா,

நீங்க தமிழக மீனவர்களை சிங்கள காடையர்கள் வேட்டையாடி ஒவ்வொரு முறை ஒழிக்கும் பொழுதும் நம்ம மண்ணு மோகன்னு சிங்குக்கு கடிதம் கடிதமாக எழுதினீங்க. இப்போ இருக்கிற அம்மாவும் அதைதான் செய்துகிட்டு இருக்காங்க, அது வேற விஷயம். அதே போல எங்களைப் போன்ற பதிவர்களும் அப்பப்போ இந்த மாதிரி கடிதமெல்லாம் எழுதுவோம் ஆனால் உங்களுடைய கடிதத்திற்கும் எங்களது கடிதத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. நீங்க எழுதுற கடிதமெல்லாம் நம்ம சிங்கு குண்டி தொடச்சு போட்டுடுவார். அப்புறம் இன்னாது கடிதமா அந்த மாதிரி எதுவுமே வரவில்லை என்பார். ஆனால் எங்கள் கடிதங்களை சக பதிவர்கள் படித்து பின்னூட்டம் ஒட்டலாம் போட்டு ஒரு மதிப்பு கொடுத்துருவோம். சரி விஷயத்திற்கு வருவோம்.

நேற்று நீங்க சடால்னு முடிவெடுத்து மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டீங்க. ஆனால் நீங்க எப்படியும்  இந்த முடிவை எடுப்பீங்க என்று அரசியலே தெரியாத எங்க வீட்டு வேலைக்காரியம்மா கூட சொல்லிட்டாங்க.

நீங்க வெளியே வர ஆயிரம் காரணம் இருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் இலங்கை பிரச்சினைதான் என்பதை நம்ப தமிழ்நாட்டில் எந்த தற்குறியும் தயாராக இல்லை.

நீங்க என்னதான் டெசோ, தமிழ் ஈழம், தன்மானம், மயிரு மட்டு  என்று எதை சொன்னாலும் நீங்க காலையில் இட்லியும் மீன்குழம்பும் அடித்து விட்டு மதியம் மட்டன் பிரியாணி கூப்பிட அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பொழுதே உங்களுடைய நாடகத்தை மக்கள் யூகிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதில் யாருக்கு ஆதாயம் என்றால் "நோவாமல் நோன்பு கும்பிட்ட" அம்மாவிற்குத்தான். இன்றைக்கு நீங்கள் பதவியை துறந்து வெளியே வந்தாலும் இதில் ஏதோ 2ஜி உள்குத்து இருக்கிறது என்று மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்து விட்டனர். போதாத குறைக்கு ரத்தத்தின் ரத்தங்கள் வேறு இன்று நாடு பூரா நீங்கள் சரித்திர புகழ்பெற்ற உண்ணாவிரதம்  இருந்த புகைப்படத்தையும் உங்களது அருமை மகள் ராஜபக்ஷே முன்பு எல்லா பல்லையும் காட்டி அவர் போட்ட ரொட்டித்துண்டுகளை பொறுக்கியதை டிஜிடல் பேனர் போட்டு உங்களது அரை வேட்டியை உறுவி "மந்திரியை" (இந்த மந்திரிக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள பரதேசி பாருங்கள்) வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் என்னதான் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று கணித்திருந்தாலும் ஆதாயம் அம்மாவிற்கே என்பதை நாடு அறியும்.

என் போன்ற சராசரி தமிழ் மகனின் கவலை எல்லாம் அண்ணா வளர்த்த ஒரு இயக்கம் உங்களிடம் சிக்கி சின்னா பின்னம்மாகிவிட்டதே என்ற கவலைதான்.

டிஸ்கி:  அண்ணா சொன்ன கடமை கன்னியம் கட்டுப்பாடு அவரது  கல்லறையிலே புதைக்கப்பட்டது வேதனை.

இதற்கு யார் காரணம் என்று நான் சொல்லதேவையில்லை. கண்ணதாசன் எப்பொழுதோ எழுதிவிட்டார்.

இப்படிக்கு

லூசு தமிழன்



Tuesday 19 March 2013

பரதேசி-பாலாவின் தடுமாற்றம்

தயாரிப்பாளர்: பாலா
எழுத்து: நாஞ்சில் நாடன்
திரைக்கதை, இயக்கம்: பாலா
மூலக்கதை: ரெட் டீ (பால் ஹாரிஸ் டேனியல்)
நடிப்பு: அதர்வா,  வேதிகா, தன்சிகா
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செழியன்
எடிட்டிங்: கிஷோர்
பட்ஜெட்: ஒன்பதரை கோடி

வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம்  "பரதேசி". கடந்த நான்கு நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையால் இன்றுதான் காணமுடிந்தது.

இந்த விமர்சனம் ஒரு பாமர ரசிகனால் எழுதப்படுகிறது. ஆதாலால் மாண்டேஜ், கிளிஷே, சர்ரியலிசம் போன்ற வார்த்தைகள் இருக்காது. வெறும் பாமர ரசிகனாகவே இந்தப் படத்தை பார்த்தேன். ஏற்கனவே சேது, நான்கடவுள் பார்த்த தாக்கத்தினால் அதிக எதிர் பார்ப்பு இருந்தது.

சாலூர் கிராமம் பஞ்சத்தில் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கிராமத்தில் நுழையும் கேமரா லோ ஆங்கிளில் நகரும் பொழுது நம்மை உண்மையான கிராமத்தின் சந்து பொந்துகளில் நடக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமத்து கல்யாணம் தண்டோரா போடுகிறார் "ஒட்டு பொறுக்கி "அதர்வா". கல்யாணத்தில் நெல் சோறு ஊராரின் எதிர்பார்ப்பு. வெகுநாட்களுக்கு பிறகு நல்ல சாப்பாடு. ஆனால் பெரியப்பா என்று ஒட்டு பொறுக்கியால் அழைக்கப்படுகிற பெரியவர் மண்டையைப் போடுகிறார். அவரது பிணத்தை மறைத்து வைத்து கல்யாணமும் விருந்தும் நடந்தேறுகிறது. அதற்குப்பிறகு பெரியப்பா பற்றிய பேச்சில்லை. கதைக்கு அது அவசியமும் இல்லை. அதர்வாவை காதலிக்கும் லூசுப் பெண்ணாக வேதிகா. பாலாவின் கேரக்டரைசேஷன் எப்பொழுதுமே நன்றாக இருக்கும். வேதிகா விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். அதர்வா வேதிகா காதலில் ஒரு அழுத்தமும் இல்லை.

பஞ்சத்தில் அடிப்பட்டிருக்கும் கிராமத்து ஆட்களை ஆசைக்காட்டி தேயிலை தோட்டத்திற்கு அழைத்து செல்லும் கங்காணி அங்கே அவர்களை அடிமைப்படுத்துகிறார். அங்கே வரும் மருத்துவர் (இல்லை கம்பௌண்டர்), பின்னால் வரும் மருத்துவர், என்று வரும் கேரக்டர்கள் பாலாவின் கைவண்ணம். தேயிலைத்தோட்டத்தில்  வேலையில் சேரும் அதர்வாவின் ரூம் மேட் தன்சிகா. கணவன் தப்பி ஓடிவிட்டான், குழந்தையுடன் அங்கு காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறாள். வருடம் ஒருமுறை சம்பள நாட்களில் காசை கண்ணில் காட்டி கழித்துக்கொண்டு அவர்களை மேலும் பல வருடம் அடிமைப்படுத்த ஒரு வெள்ளைக்கார அடிமை கூட்டம். இந்த அடிமை வாழ்விலிருந்து தப்பி ஓட அதர்வா முயற்சிக்க கால் நரம்பு அறுக்கப்பட்டு மேலும் அடிமையாக்கப்படுகிறார். தேயிலை தோட்ட கூலிகளை விஷ நோய் தாக்க கொத்து கொத்தாக இறக்கின்றனர். பிறகு வெள்ளைக்கார முதலாளிகள் கூடி பேசி ஒரு மருத்துவர்(நிஜ மருத்துவர்) வரவைக்கின்றனர். அவர் மருத்துவத்துடன் மதமாற்றத்தையும் செய்கிறார். இனி கதாநாயகன் தப்பித்தார?  அவரால் கர்ப்பமாக்கப்பட்ட வேதிகா என்ன ஆனார்? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் பாராட்டப்படவேண்டியது

அதர்வாவின் இயல்பான நடிப்பு. நிச்சயமாக இது அவருக்கு சிறந்த படம்.
தன்சிகாவின் முகபாவங்கள், குறிப்பாக ஒட்டுபொருக்கி கூலி வாங்க செல்லும் பொழுது அவர் காட்டும் முகபாவங்கள்.
நாஞ்சில் நாடனின் வசனங்கள்: எதுல கஷ்டம் இல்லை "மூல வியாதிக்காரனுக்கு பேள்றது கூட கஷ்டம்" இவனுக்கு தாயத்து இடுப்புல கட்டக்கூடாது புடுக்குலதான் கட்டனும்.
பாலாவின் கதை சொல்லும் நேர்த்தி.
படத்தில் வரும்  உபரி கதாபாத்திரங்கள் கூனி கிழவி உற்பட நடிக்கும் அபாரமான யதார்த்த நடிப்பு.
படத்தின் கலை இயக்குனர், சாலூர் கிராமத்தை வடிவமைத்தற்கு.

படத்தில் உறுத்தும் விஷயங்கள்

முதலில் இசை:இந்த மாதிரி படங்களுக்கு சிறந்தவர் இளையராஜாவே. பிதாமகனில்  கஞ்சா தோட்டத்தில் கேமரா நுழையும் முன்பே வரும் இசையும், சேதுவில் கதாநாயகி விக்ரமை பார்த்துவிட்டு திரும்பு முன்பு வரும் இசையும்  சிறந்த உதாரணம்.

ஜி. வீ. பிரகாஷ்குமார் க்ளைமாக்சில் தேவையில்லாத ஒப்பாரியை வைத்து காட்சியின் வீர்யத்தை குறைத்துவிட்டார்.

வேதிகா கேரக்டரை சொதப்பியது.

பாலா ஏன்உங்களுக்கு இந்த தடுமாற்றம். நீங்களும் வியாபார திரைப்படத்துக்கும், நல்ல திரைப்படத்துக்கும்  உள்ள  இடைவெளியில் சிக்கி விட்டீர்களோ என்ற கவலை என் போன்ற ரசிகர்களிடம் உள்ளது.

இருந்தாலும் பரதேசி ஒரு நல்ல படமே.
 

செய்திகளும் மைன்ட் வாய்சும்

கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் சந்திப்பு: முடிவெடுக்கப்படவில்லை.

அடுத்தகட்ட தமிழ் ஈழ நாடகம் எப்படி கதை வசனம் எழுதி வெளியிடுவது என்பதைப்பற்றிய முடிவா?

மறு உத்தரவு வரும் வரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, இத்தாலிய தூதருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

அவரு எஸ் ஆகி ஐந்து நாளாகுதாம், அங்கே அவர் பெயருல ஆபிஸ் பையன்தான் இருக்கானாம்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்- கருணாநிதி வலியுறுத்தல். 

அப்போ அலைக்கற்றை ஊழலில் உங்களையும் சேர்ப்போம் பரவாயில்லையா?

கருணாநிதியை திருப்தி படுத்துவோம்-மத்திய அமைச்சர் நாராயணசாமி பேட்டி.

இன்னும் பதினைந்து நாட்களிலா? இது கூடங்குளம் இல்லீங்க? நிருபர் வேறே கேள்வி கேட்குறாங்க, நல்ல கேட்டு பதில் சொல்லுங்க.

மத்திய அரசிலிருந்து விலகுவதாக கலிஞர் அறிவிப்பு.

போனமுறை வாங்கின ராஜினாமா கடிதமெல்லாம் பத்திரமா இருக்கா? அறிவாலயம் வாசலில் உள்ள குப்பைதொட்டியிதேடுங்க உடன் பிறப்புகளே.

 இலங்கைப் பிரச்சினை- சினிமா இயக்குனர்கள் இன்று உண்ணாவிரதம்.

இட்லி கெட்டி சட்டினி சாப்பிட்டாச்சா- மதியம் எஸ்.எ.சி. ஆயிரம் உணவுப் பொட்டலம் ஆர்டர் செய்திருக்காறாம்.

இலங்கை பிரச்சினைக்கு இன்று உண்ணாவிரதமாம்-என்ன பிரச்சினை என்று யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க.

 

 

  

 

Thursday 14 March 2013

பரதேசி பார்க்கலாமா? வேண்டாமா?

பொதுவாகவே பாலாவின் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பாலாவின் முதல் படம் "சேது" விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த படம். பின்பு வந்த நந்தா சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அடுத்து வந்த பிதாமகன் விக்ரமிற்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த படம்.


நான் கடவுள் பாலாவிற்கு தேசிய விருது கிடைத்த படம். நான் மிகவும் ரசித்த பாலாவின் படங்களில் "நான் கடவுளுக்கே" முதலிடம். அவன் இவன் பார்க்கவில்லை. ஆனால் பரதேசி பற்றிய பேச்சு எழுந்த போதே இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், அதுவும் தற்பொழுது விடுமுறையில் இருப்பதால் முதல் நாள் பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். காரணம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பே. "ரெட் டீ" என்கிற பால் ஹாரிஸ் டானியல் எழுதிய ஆங்கில நாவல், இதன் தமிழ் மொழிபெயர்ப்பு "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் வந்தது. இரண்டையும் படிக்க வில்லை, படித்தால்  சத்தியமாக படம் பார்க்கும் ஆவலிருக்காது. ஏன் என்றால் நல்ல நாவல்களை படமெடுக்க தமிழில் ஆள் கிடையாது என்பது என் கருத்து. அதற்கு உதாரணம் தி. ஜானகிராமனின் "மோகமுள்".

கிட்டத்தட்ட நாற்பதுகோடி ருபாய் பொருட்செலவில் பாலவே தயாரித்திருக்கும் படம். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வேதிகா. தன்சிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வாவின் அம்மாவாக உமா ரியாஸ்கான்.

படத்திற்கு இசை இந்த முறை இளையராஜாவை விட்டு ஜி.வி.பிரகாஷிடம் கொடுத்திருக்கிறார். மதுபாலகிருஷ்ணனின் "செங்காடே"   மட்டும் கேட்டேன். "பிச்சை பாத்திரம்" அளவிற்கு இல்லை. மிருகம் பாட்டில் சூப்பர் சிங்கரில் இரண்டாவதாக வந்த பிரகதி, பிரசன்னாவுடன் பாடியிருக்கிறார், நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் கேட்கவில்லை.

சரி தலைப்பிற்கு வருவோம். படத்தை பற்றிய வந்த டீசரில் பாலா எல்லா நடிகர்களையும் சாத்து சாத்தென்று சாத்துகிறார். பின்னர் ரியல் மேகிங்  என்று கேப்ஷன் போடுகிறார்கள்.

இதை பார்த்தவுடன் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த மாதிரி ட்ரைலர் வெளியிடுவது, பாலாவும்  மலிவான விளம்பர உத்தியை தேடுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

படம் நாளை வெளிவர இருக்கிறது.



Monday 11 March 2013

கலக்கல் காக்டெயில்-105

நாளை டெசோ பந்த்

தமிழினத்தலைவர் நாளை தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக முழு நாள் பந்த் அறிவித்திருக்கிறார். கலைஞரின் தொப்புள் கொடி பாசத்தை, அப்பப்போ கையில் எடுக்க எதுவும் இல்லையென்றால் "ஈழ பாசத்தை" டெசோ  மூலம் கையில் எடுத்து பிலிம் காட்டுவார். அவர் விடுத்த அழைப்பில் மத்திய அரசை தொடர் வண்டிகளைக் கூட  நிறுத்த சொல்லியிருக்கிறார். ஏன் முடிந்தால் விமான சேவைகளைக் கூட நிறுத்த வேண்டும் என்கிறார். (ஸ்ஸ்ஸ்...அப்பா முடியல!!!)

ஆனால் அரசோ நாளை பேருந்துகளை ஓட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. ஆக இவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது. 

சமீபத்தில் நான் படித்த  இது சம்பந்தப்பட்ட இடுகை ஏறக்குறைய நம்முடைய எண்ணங்களையே பிரதிபலிக்கிறது.

இடுகையை படிக்க

பா.ஜ.க வுக்கு சாவுமணி
 
கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்  மரண அடி வாங்கிய பாஜக; காங் மாபெரும் வெற்றி! இது எதிர்பார்த்த ஒன்று தான். தென்னகத்தில் பா.ஜ.க முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய இடம் கர்நாடகாத்தான். இதை வைத்து படிப்படியாக தென்னகத்தில் வேரூன்றலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் இன்னும் இருநூறு வருடமானாலும் முடியாது என்பது வேறு விஷயம். 

ஆனால் கர்நாடகாவில் கிடைத்த ஆட்சியை உள்கட்சி பூசல்களாலும், எடியூரப்பாவின் குளறுபடியினாலும் கிடைத்த ஆட்சியை  குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் ஆக்கிவிட்டது.

காங்கிரசுக்கு லாபம்தான். இததான் நோவாம  நோம்பு கும்புடறதுன்னு சொல்லுவாங்க.

ரசித்த கவிதை 

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?
 
..................................நன்றி: கவிதன் 

நகைச்சுவை

மனைவி - எதுக்கு அடிக்கடி என் முகத்தில் தண்ணி தெளிக்கிறீங்க

கணவர் - உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பார்த்துக்க சொன்னார்ல அதான்...!
 
ஆட்டோ வாசகம் 

டாப் அப் போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக்கப் போட்டு மிஸ்ட் கால் கொடுக்கும் பெண்ணை நம்பாதே..! ...
 
ஜொள்ளு


11/03/2013

Thursday 7 March 2013

டெசோ எனும் கப்சாவும், தமிழீனத்தலைவரும்

இன்று பாராளுமன்றத்தில் டி.ஆர். பாலு நிகழ்த்திய உணர்ச்சி பூர்வமான உரையில் உண்மைத்தமிழன்  மயங்கிவிடமாட்டான் என்பது ஈழப் பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வரும் எவருக்கும் தெரியும். ஈழத்தமிழர்களின் அழிவின் தொடக்கம் 2009 க்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது ஊரறிந்த செய்தி. போராளிகளுக்கு வரும் ஆயுதக் கப்பலை தடுத்து நிறுத்தியதில் இருந்து  இந்திய கடற்படை தமிழனுக்கு குழி தோண்டியதை தொடங்கியது. அப்பொழுது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த தமிழீனத்தலைவர் இப்பொழுது வெகுண்டு எழக் காரணம் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலே. தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை தான் இது. இப்பொழுது புலம்புகிறார். புலம்பல் இதோ...............


சென்னை: இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மையென்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை நான் திரும்பப் பெற்றேன். ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்சேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்ற போது; இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அப்போதே காட்டவில்லை என்பதைப் போல ஒருசிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை; அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை; தி.மு.கழகம் அப்போது ஆட்சியிலே இருந்த காரணத்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாம், ஆனாலும் தடுத்து நிறுத்தவில்லை என்பதைப்போல தெரிந்தோ, தெரியாமலோ கூறி வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, தி.மு.கழகம் எதுவும் செய்யவில்லையா? அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். 26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள். அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன். அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நானாக முடிவெடுத்துச் சென்றேன். அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மையென்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை நான் திரும்பப் பெற்றேன். ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்சேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் இருந்தும்கூட, சிங்கள ராணுவம் தன்னுடைய தாக்குதலைத் தொடர்ந்தது. இன்னமும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போர் நிறுத்தப்பட்டதாக சிங்கள அரசு பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம்தானே? இதற்கு வழி காணத்தான் தற்போது தி.மு.கழகம் ஆட்சியிலே இல்லாவிட்டாலும்கூட, டெசோ இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதன் சார்பாக பல போராட்டங்களையும், மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நான் அக்கறை காட்டியதற்காகவே இரண்டு முறை ஆட்சியை இழந்திருக்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையே பேராசிரியரோடு சேர்ந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதற்கு மேலும் விஷமத்தனமானப் பிரச்சாரங்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன். 12ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை எப்போதும் போல வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டியது தமிழகத்திலே உள்ள அனைத்துச் சாராரையும் சேர்ந்ததாகும். இந்த நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஜெனீவா நகரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலே இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்க முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்து, அதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

எண்பதுகளில் கொழும்புவில் மூன்று லட்சம் தமிழர்களை எரித்துக் கொன்ற ஜெயவர்தனே அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டம் உலகம் காணாதது. அந்த எழுச்சி இப்பொழுது இல்லாதது ஏன்?  சிந்திக்க வேண்டிய விஷயம். இப்பொழுது டெசோ எனும் கப்சாவை தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதுதான். 
 

Wednesday 6 March 2013

தமிழ் சினிமா- பயோடேட்டா


காரணப்பெயர்
தமிழ் சினிமா
பட்டப்பெயர் (கொச்சைப்பெயர்)
கோலிவுட்
படமெடுப்பது
பெரும்பாலும் வெளிநாட்டில்
மொழி
தங்லீஷ்
பெருமை
தொழில்நுட்பம்  
வியாபாரம்
அகிலமெங்கும்
நம்புவது
தொப்புளும், தொடைகளும்
நம்பாதது
திரைக்கதை
கதாநாயகிகள்
தமிழ் பேசாத  அல்லது தெரியாத உள்ளூர் சேட்டுப்பெண்கள்
கதாநாயகர்கள்
பந்தாப்பார்ட்டிகள், காசு கொழிப்பவர்கள்  
இசை
ஆண்டிகள் குத்தாட்டம் போட டமுக்கு டப்பான்
தயாரிப்பாளர்கள்
தலையில் துண்டுடன் அலைபவர்கள்
சமீபத்தைய எரிச்சல்
விநியோகஸ்தர்கள்
நிரந்தர எரிச்சல்
ரசிகர்கள்


Tuesday 5 March 2013

ஹரிதாஸ்-சினிமா விமர்சனம்

பெரியளவு ஒன்றும் மார்க்கெட்டிங் இல்லாமல், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம் ஹரிதாஸ். எல்லா நாளேடுகளும் "கட்டாயம் பார்க்கவேண்டிய படம்" என்று ஒருமனதாக எழுதியிருந்ததால் இன்று எக்ஸ்பிரஸ் அவென்யுவில் படத்தை பார்த்தேன்.

ஒரு ரவுடி கும்பலை ஒழித்துக்கட்ட ஸ்பெஷல் அசைன்மென்டில் இருக்கும் போலிஸ் ஆபிசர் சிவதாஸ் தன்னுடைய ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை (ஹரிதாஸ்), மனைவி பிரசவத்தில் இறந்து போக தன்னுடைய தாயிடம் விட்டுவிட்டு தன் கடமையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தாய் இறந்து போக மகனின் வளர்ப்பு கேள்விக்குறியாகவே தானே அவனை நகரத்தில் கொண்டு வந்து வளர்க்கிறார். மிகவும் பிரயத்தனப்பட்டு பையனை ஒரு அரசு பள்ளியில் சேர்க்கிறார். ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை அரவணைத்து சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை அமுதவல்லி வகுப்பில் பையன் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். ஆடிசம் ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடே  அவர்களது உலகம் வேறே என்று டாக்டர் அறிவுறுத்த பையனிடம் உள்ள வினோத திறைமைய எதேச்சையாக அறிந்து கொள்ள அவனுக்கு தந்தை குருவாக இருந்து பயிற்சி அளிக்கிறார்.

பையனின் திறமை வெளிப்பட்டதா? சிவதாஸ் ரவுடி கும்பலை என்ன செய்தார்?  இனி மற்றவையை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்.

சிவதாசாக கிஷோரும், அமுதவல்லி டீச்சராக ஸ்னேஹாவும் நன்றாக செய்திருக்கின்றனர். கிஷோர் ஏறக்குறைய அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்னேஹா வழக்கம்போல் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.  ஆடிசம் குறைப்பாடுள்ள பையனாக வரும் பிரிதிவி ராஜ் தாஸ் நடிப்பு மெச்சப்பட வேண்டிய ஒன்று. மற்றபடி பரோட்டா சூரி, மற்றும் கிஷோரின் நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கின்றனர்.

படத்தில் குறைகளும் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுட்டிக்காட்டி இது போன்ற முயற்சிகளை விமர்சிப்பதில் கடமையுணர்வு குறுக்கிடுகிறது.

படத்தின் பின்னணி இசையில் விஜய் ஆண்டனி விளையாடியிருக்கிறார். கதை வசனம் இயக்கம் ஜி.ஏன்.ஆர். குமாரவேலன். ஒளிப்பதிவு ரத்தினவேல்.

உலகத்தில் பிறக்கும் எண்பத்தெட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஆடிசம் குறைபாடோடு பிறக்கின்றது. அவர்களது திறமை அறிந்து நன்றாக வளர்க்கப்பட்டால் அவர்களும் பெரிய மனிதர்களாகலாம் என்ற மேசெஜோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், படம் பார்ப்பவர்களுக்கு ஆடிசம் பற்றிய மற்றுமொரு பரிமாணம் தெரிய வரும், இதுவே இயக்குனருக்கு பெரிய வெற்றி.. 

Saturday 2 March 2013

கலக்கல் காக்டெயில்-104

அலங்கார நிதியறிக்கை 

நமது நிதியமைச்சர் "இந்த" நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய எதற்கு அவ்வளவு பெரிய்யகோப்பை பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்தார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. அவர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே அம்மா என்ன சொல்வார்கள், ஐயா என்ன சொல்லுவார், சுஷ்மா ஸ்வராஜ் என்ன பேசுவார், ராஜா என்ன கதைப்பார் என்பதெல்லாம் ஒருவாறாக ஊகிக்க முடிந்தது. ரெண்டு விஷயத்தில் வரியைக் கூட்டினால் யாவரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஒன்று சிகரெட் மற்றொன்று மேல்தட்டு மக்கள் செல்லும் ஓட்டல்களின் சேவை வரி. அதைதான் நமது ராபின்ஹூட் நிதியமைச்சர் செய்திருக்கிறார். இன்னும்  சில ஆடம்பரப் பொருட்களுக்கு வரியைக் கூட்டியிருக்கலாம். மேலும் இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் நமது மக்கட்தொகையில் வெறும் சொற்பமே, கிட்டத்தட்ட எல்லோரையும் வருமான வரி செலுத்த வைத்தால் நாட்டை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம், அதற்கு முன் ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்க வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமில்லை அதனால்தான் இந்த நாட்டில் இருப்பவன் கொழிக்கிறான் இல்லாதவன் முழிக்கிறான்.

நல்ல வரவேற்பு 

விடுமுறையில் நாடு திரும்பியவுடன் வீட்டில் முதலில் டிவியும்  ப்ராட்பேண்டும் வேலை செய்கிறதா என்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. என்னதான் ஏர்டெல்லுடன் மல்லு கட்டி சரிசெய்துவிட்டு போனாலும் ஒவ்வொரு முறை வரும்போதும் இரண்டும் "ஞே" என்று முழிக்கும். இந்த முறை சற்று அதிகமாகவே பொறுமையை சோதித்து விட்டார்கள். ப்ராட்பேண்ட்  வர நான்கு நாட்களாகிவிட்டது. ஏர்டெல் சர்வீஸ் நம்பரை அழைத்து யாருடனாவது நமது பிரச்சினை என்ன என்று சொல்வதற்குள் டாவு தீர்ந்துவிடுகிறது. நாம் என்னதான் கடிந்து கொண்டாலும் சளைக்காமல் "சார் இன்றைக்குள்ள உங்க பிரச்சினை தீர்ந்துவிடும் சரிங்களா! என்று கொஞ்சுகிறார்கள்.

எல்லோரும் கனெக்ஷன் வாங்கும் வரை துடியாக இருக்கிறார்கள். அப்புறம் வெண்ணைதான்.

அம்மா முன்னேறிட்டாங்க

நேற்று அடையார்  எல்.பி ரோட்டில் ஒரு ஹார்ட்வேர் கடையை தேடிப்போய் திருவான்மியூர் வரை சென்று விட்டேன். பிறகு அங்கிருந்து யூ டர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்று திரும்பினால் ட்ராபிக்கை நிறுத்திவிட்டார்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து காவலரிடம் விசாரித்ததில் அம்மா வராக சார் என்றார். நமக்கே உரிய குசும்பில் என்ன சார் சிருதாவூர்ல கிளம்பிட்டாகளா என்று கேட்டவுடன் இல்லை சார் மருந்தீச்வர் கோயிலாண்ட வந்துட்டாங்க சார் என்றார் முகத்தில் சிரிப்புடன்.  இப்பொழுதெல்லாம் ஒரு மணிநேரம் நிறுத்துவது இல்லை போல் இருக்கிறது. அவர் சொல்லி இரண்டாவது நிமிடம் அம்மா காலாட்படை, பூனை படை, முன்னே செல்ல எங்களை நோக்கி ஒரு கும்பிடு போட்டு கடந்து சென்றார்கள்.

நல்ல முன்னேறிட்டாக......

ரசித்த கவிதை 

 இவளோ,இவனோ
இதுவோ என்று
ஒவ்வொரு புள்ளியிலும்
நின்று தொடர்கிறது
நல்ல நட்புக்கான
தேடல்.......

------------------------ராதா ரங்கராஜ் 


ஜொள்ளு

03/03/2013