Pages

Tuesday 26 November 2013

கூடங்குளமும், கெயில் எரிவாயு குழாயும் கோமாளி அம்மாவும்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை அரசு எப்படி அடக்கியதோ அதேபோல் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு எதிரான போராட்டத்தை அடக்கி சட்டம் ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

கூடங்குளம் பொறுத்த வரை  அகில உலக அகிலாண்டேஸ்வரி தாய் அம்மா அவர்கள் கட்டிய இரட்டைவேடம் நாம் அறிந்ததே. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கூடங்குளம் போராட்டக்காரர்களிடம் உங்களில் ஒருத்தி நான் என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அடக்குமுறையை ஏவிவிட்டு அசிங்க நாடகம் நடத்தியவர்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருக்கும் அங்கிருந்து மங்களூர் வரை பூமிக்கடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த பணியை கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த பணி 2010ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.

 இந்நிலையில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, இந்த திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதற்கும் தமிழக அரசு விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி பின்னர் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு தடை விதித்து விவாசாயிகள் பக்கம் இருப்பதுபோல் போக்கு காட்டியது.

இந்த திட்டம் கூடங்குளம் போல் போகும் போக்கு நாம் அறிந்ததே.

பாரதி சொன்னது போல் உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவேண்டும்தான். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விவசாயத்திற்கு மூடு விழா காணுவதும் நல்லதல்ல. இந்த குழாய் பாதிக்கும் பாதை முறையாக ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவாக்க வேண்டும். மாற்று பாதை பரிசீலனை செய்யப்பட்டதா?

நம்முடைய கவலை எல்லாம் அம்மா நடாத்தும் அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்கும் முடிவுகளும், ஒட்டு வங்கி அரசியலும் ஒட்டு மொத்தமாக உழவு மற்றும் தொழிலுக்கும் மூடு விழா காணுமோ என்பதே. ஏற்கனவே அம்மா போட்ட திட்டங்கள் பெஞ்சு தட்டி ஓய்ந்துவிட்டதை நாம் அறிவோம்.

Thursday 21 November 2013

கலக்கல் காக்டெயில் -128

சபாஷ் டேவிட் கேமரூன்

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் வெறும் இருபத்தி சொச்சம் நாடுகளே  கலந்து கொண்டன. கிட்டத்தட்ட முப்பது நாடுகள் புறக்கணித்தன. தமிழர்களின் வேண்டுகோளுக்கு தலை சாய்க்காத நமது மத்திய அரசோ வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி  தனது இலங்கை விஸ்வாசத்தை காண்பித்துள்ளது. அவரும் குஞ்சிதபாதமாக குனிந்ததாக செய்திகள் வந்தன, அதன் உண்மை நிலைமை நமக்குதெரியாது. 

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அதிரடியாக போரில் பாதித்த பகுதிகளையும், மற்ற தமிழர் வசிக்கும் பகுதிகளையும் நேரில் சென்று தமிழர்களின் கடைகளில் தேநீர் அருந்தி, மக்களுடன் பேசி உண்மையான நிலைமையை உலகுக்கு அறிவித்துள்ளார்.

உழவு நிலங்களை ஆகிரமித்துள்ள ராணுவங்கள் இன்னும் வெளியேறவில்லை, தமிழர்களின் பகுதிகள் அவர்களுக்கு திருப்பி கொடுக்கப்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

நம்மூரு எம்.பி.க்கள் உண்மை நிலைமை அறிய சென்று என்ன பிடுங்கினார்கள்? என்று தெரியவில்லை. கறிசோறு தின்று ராஜபக்ஷே போட்டதை பொறுக்கி வந்தார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

பெங்களுரு எ.டி.எம் சம்பவம்

பெங்களுருவில் ஒரு வங்கி எ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற பெண்மணியை கொடூரமாக தாக்கி ருபாய் இரண்டாயிரத்தி ஐநூறு  கொள்ளையடித்த சம்பவத்தை இன்று எல்லா தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன.  உண்மையான காட்சியை பார்க்க நேர்ந்தால் இரண்டு நாட்களுக்கு தூக்கம் வராது. அற்ப காசுக்காக கபாலத்தைப் பிளந்தது அநியாயம். இவனுக்கெல்லாம் உச்சகட்ட தண்டனையாக மாறுகால், மாறுகையை வாங்க வேண்டும். சற்று யோசித்தால் இந்த "Barbaric" தண்டனை முறைதான் சிறந்ததோ என்று தோன்றுகிறது.


ரசித்த கவிதை 

"காலையிளம் பிரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்திசையில் இலகுகின்ற
மாணிக்கச் சுடரில்  அவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே  கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்"

---------------பாவேந்தர் பாரதிதாசன்

ஜொள்ளு 


Wednesday 20 November 2013

டிராவிட் இந்தூரில் ஏன் பிறந்தாய்?

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் "சச்சின் சச்சின்" என்று அவர் புராணம்தான். அவருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டி ஒரு சொத்தை டீமுடன் அவசரமாக ஒரு போட்டி ஏற்பாடு செய்து அதையும் அவரது சொந்த மண்ணிலேயே வைத்து அவரை கௌரவித்து விட்டார்கள் பி.சி.சி.ஐயும், எம்.சி.ஏவும்.

இந்த விழாவிற்காக மேட்சே அரக்க பறக்க இரண்டு நாளில் முடிந்து விட்டது. பின்னர் சச்சின் அவரது மாதா, பித,குரு தொடங்கி மாமியார் நாகம்மா வரையில் நன்றி தெரிவித்து ரசிகர்களை நெகிழ  வைத்து விட்டார்.அவரது ரசிகக்குஞ்சுகளும் இனி "சச்சின் இல்லாத கிரிக்கெட்டா, இனி பார்க்கமாட்டோம் என்று" பிரியாவிடை கொடுத்து பிரிந்து விட்டனர்.

மத்திய அரசோ ஒட்டு வேட்டையை மனதில் வைத்து அவருக்கு "பாரத் ரத்னா" வழங்கி இருக்கிறது. உண்மை கிரிக்கெட் ரசிகனுக்கு தெரியும் சச்சினின் லட்சணம்.இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டிய தருணங்களில் யார் நன்றாக விளையாடுவார்கள் என்று. இந்தியாவின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிட் தனது சிறப்பான  ஆட்டத்தினால் எத்துனை முறை இந்திய அணிக்கு வெற்றியும், பின்னர் தோல்வியிலிருந்து காப்பாற்றியும் இருக்கிறார் என்று வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும். அவர் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பொழுது அவருக்கு இந்த அளவு சிறப்பான விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. காரணம் அவர் மும்பைக்காரர் அல்ல என்பதே உண்மை.

இந்திய அணி பெரும்பாலும் எல்லோரிடமும் தோல்வியையே சந்தித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் இந்திய அணியாலும் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திய அந்த சரித்திரப் புகழ்பெற்ற கல்கத்தா மேட்சில் லக்ஷ்மனின் 281 ஓட்டங்களும், ட்ராவிடின் 180 ஓட்டங்களும்தான் அந்த மேட்சை இந்திய அணி வென்றதற்கு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இவர்களெல்லாம் மும்பைக்கு ஆடவில்லை என்ற காரணமே இவர்கள் ஊடகங்களால் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை.

இது கால காலமாக பி.சி.சி. ஐ செய்து வரும் அநியாயம். கவாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அவரை விட சிறந்த வீரரான விஸ்வநாத்திற்கு வழங்கப்படவில்லை. மேலும் வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்து, டி.இ. ஸ்ரீநிவாசன், கபில்தேவ், வெங்க்சர்கார், மொஹிந்தர் அமர்நாத் இவர்களில் கதியெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்.

இதை பற்றி எழுதவேண்டாமென்று தான் இருந்தேன், நேற்று ஒரு சச்சின் வெறியர் உசுப்பிவிட்டுட்டார். அதற்குதான் இந்த புலம்பல்.


Monday 18 November 2013

பேயிருக்குடா.........கோபி

வலை கீச்சுதே

இந்த வார ரசித்த கீச்சுகள்............

உலகத்தின் தைர்யமான பிக்பாகட் மனைவிதான், பணம் எடுத்தியான்னு கேட்டா க்ளவானியா இருக்கற எண்ணை கொலைகாரியா மாத்திடாதீங்கன்னு சொல்றா ----------இளந்தென்றல் 

நம்மைப்பற்றிய நல்லவைகளை கிராம்கணக்கிலும் கேட்டவைகளை கிலோ கணக்கிலும் தெரிந்து வைத்திருப்பவருக்கு பெயர்தான் டேமேஜர்------சகா



நண்பா மச்சி மாப்ள தேவா சூர்யா இதெல்லாம் சரக்கு அடிக்கும்போது மட்டும் தான் பில்லு குடுக்கும்போது எல்லாம் மாறிடும்----அசால்ட்டு ஆறுமுகம் 


ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்----------------வெ. பெத்துசாமி 

வேலை, வாழ்க்கைத்துணை மாதிரி. இல்லேன்னா, ஏங்குவோம். இருக்கும்போது, பொலம்புவொம். இன்னும் பெட்டரா கிடச்சிருக்கலாமேன்னு விரும்புவோம்.----------உளருவாயாண்ஜி 

பேய் இல்லன்னு பேசுறவங்க வரிசைல பேசுற ஒரு பொண்னு பேய் மாதரி இருக்கு ....:-)) # பேய் இருக்குது கோபீஈஈஈ-------------கருத்து கந்தன்

நாங்கள்ளாம் குடும்பம் நடத்துறதே குட்டிச்சாத்தான் கூடத்தான் #கஞ்சா கருப்பு காஞ்ச மாடுகள்...-----------புருடா ஜென்

இறந்தவர்கள் பேயா வந்து பழிவாங்குவார்கள் என்றால் ராஜபக்சேவை ஒருவர் ஆச்சும் கொன்றுபாங்க------------ஆந்தை கண்ணன்

காலையில் தூங்கி எழும்போது எல்லா பெண்களும் பேய்தான்!--------வாழவந்தான் 

சண்டக் கோழியுடன் தான் சண்டைப் போடத் தோன்றும், அமைதிப் புறாவுடன் அல்ல! #நானே சிந்திச்சது----------சுஷிமா சேகர் 

Tuesday 12 November 2013

கலக்கல் காக்டெயில் - 127

ஈழத் தாயும், தந்தையும் 

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளக்கூடாது ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கும் வேளையிலே தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுமே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று இரங்கி கோரிக்கையை நீர்த்துப்போக செய்ய பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்.

இத்துணை நாள் அம்னீஷியாவில் இருந்த வை.கோ இப்பொழுது பா.ஜ.கவை நெருங்குவதால் ஈழப்ப்ரச்சினையை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒலி ஒளி அமைத்தவரை கைது செய்த ஈழத் தாயை வசை பாட ஆரம்பிக்கிறார். நல்லா ஆடுறாய்ங்கப்பா.

மத்திய அரசு ராஜ பக்ஷேவிற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிவிட்டு தமிழக அரசியவாதிகளை கேலிப்பார்வை பார்க்கிறது.

ஈழத்தந்தையோ ஆட்சியில் இருந்த பொழுது மூன்று மணிநேர உண்ணாவிரதம்,போராட்டக்காரர்கள் கைது, ராஜினாமா என்று ஒரு பாட்டம் ஆடிதீர்த்தார்.

இனி ஈழத் தாயும், ஈழத் தந்தையும் வேறு ஏதாவது பிரச்சினையை கையிலெடுத்தால் தான் இன்னும் கொஞ்ச காலத்திற்கு தமிழக அரசியலில் ஜல்லியடிக்க முடியும்.

அம்மாவிடம் வருத்தம் அக்காவிடம் புலம்பிய மானஸ்தன்

கல்கத்தாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்ற உலகநாயகன், மம்தா பேனர்ஜியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இங்கு சினிமா நூற்றாண்டு விழாவில் நாலாவது வரிசைக்குத் தள்ளப்பட்ட அவர் அங்கு முதல் மரியாதை கிடைத்தால் ஏன் சொம்படிக்கமாட்டார்?.

ஐயா மானஸ்தரே அடுத்து ஜெயா டிவியில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்குக் காரணம்  "ஆணவமா? அகங்காரமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம்  நடக்கப்போகிறதாம், அதற்கு உங்களைத்தான் நடுவராக போடப் போகிறார்களாம். 

ரசித்த கவிதை

வேர்கள் 
 

உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
எனையும் மாற்றிக்கொள்வேன்.                    நன்றி:சஞ்சு 

 

ஜொள்ளு 



Monday 11 November 2013

அகில உலக அகிலாண்டேஸ்வரி தாய் அம்மா

அகில உலக அகிலாண்டேஸ்வரி தாயே, ஈழத்தாயே, காவிரித்தாயே, பாரதத்தாயே, வருங்கால பாரதமே, மாண்புமிகு அம்மா அவர்களே உங்களுக்கு தமிழ் நாட்டு சராசரி குடிமகனின் வணக்கமுங்க............

யோவ் சும்மா இருங்கபா இதுக்கெல்லாம் போயி பெஞ்ச் தட்டிக்கினு........

குளிர்கால கூட்டத்தொடர்னு சட்டசபையை ஒரு ஐந்து நாட்களுக்கு கூட்டினீங்க சரி, அத சரியா ஏன் இந்தவாரம் வச்சிங்க அப்படின்னு நாங்க கேள்வி கேட்க ஒன்னும் கட்டிங்க்வுட்டு கவுந்து படுக்குற கேனையனுங்க இல்ல.

பரப்பன ஆக்ராஹாரத்தில தலைய காட்ட வேணாமுன்னு இங்கனயே குந்திக்க வழின்னு இந்த கோவாலு பையன் சொன்னான், அவன்கேடக்குறான், கேப்மாரி பய.

சரி அத்த விடுங்க போன ஆட்சில போட்ட திட்டங்கள் எல்லாம் இப்போ திறப்பு விழாவிற்கு தயாராக கொடி ஆட்டிட்டு வந்திட்டீங்க.

நீங்க பதவி ஏற்றவுடனேயே மிச்சமிருக்கிற போன ஆட்சி மெட்ரோ ரயில் திட்டத்த அடக்கம் செய்திட்டு மோனோ ரயில் அப்படின்னு சொன்னிங்க, உங்க அல்லக்கைகளும் பென்ச் தட்டினாங்க, அந்த திட்டம் இன்னும் டெண்டர் லெவலிலேயே நிக்குது. இந்த திட்டம் தொடங்கப்படுமா இல்லை வெறும் பென்ச் தட்ட போட்ட திட்டமா? இப்படிதான் போன முறை ஆட்சிக்கு வந்த  பொழுது கடல் நீரை குடிநீராக்கும்  திட்டமுன்னு போட்டு ரஷ்யாக்காரன் வந்து நீங்க கேட்ட கமிஷனுக்கு பயந்து துண்டை காணோம்  துணிய காணோமுன்னு ஓடிட்டானுங்க.

சரி சட்ட சபை விஷயத்துக்கு வருவோம்..................இந்த ஐந்து நாட்களில் சட்டசபையில் என்ன கிழிச்சிங்கன்னு நீங்களே யோசித்துப் பாருங்க.....உங்க அல்லக்கை அமைச்சர்  முன்னாள் முதலமைச்சரை "தள்ளுவண்டி தாத்தா" என்று அவரது வயோதிக்கத்தை கிண்டலடிக்க, மற்ற அல்லக்கைகள் பென்ச் தட்டுகின்றனர். மற்றுமொரு அமைச்சர் எதிர் கட்சி தலைவரை "தண்ணி தொட்டி" என்று கிண்டலடிக்க அனைவரும் பென்ச் தட்டுகின்றனர். நீங்களும் அதை கேட்டு அகமகிழ்ந்து உங்களது எதிரிகளை தூற்றிப்பாடிய முதன்மை அல்லக்கைக்கு பரிசாக அமைச்சர் பதவி அளிக்கிறீங்க. நல்ல முன் உதாரணம்.

அம்மா,  டாஸ்மாக் கடை திறந்து மக்களுக்கு போதையை வாரிவழங்கும் உங்களது கட்சியில் உள்ளவர்களோ  இல்லை போன முறை ஆட்சி செய்தவர்களோ இதை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள். மேலும் உங்களது கட்சியில் உள்ளவர்கள் யாவரும் டாஸ்மாக் கடை பக்கம் தலைவைத்து படுக்காதவர்கள் என்று நீங்கள் "வக்கிரகாளியம்மன்" மீது சத்தியம் செய்தாலும் மக்கள் நம்பத்தயாராக இல்லை.

இது என்ன சட்ட சபையா இல்லை டாஸ்மாக் பாரா? அம்மா டாஸ்மாக் பாரில் கூட போதையில் ஒரளவிற்கு கண்ணியம் காக்கப்படுகின்றது என்று சொன்னால் ஆச்சர்யமில்லை.

தமிழகம் இந்த முப்பது வருடங்கள் கண்ட "கழக"ங்கள் ஆட்சியில்  "கடமை, கணியம், கட்டுப்பாடு" இந்த மூன்று வார்த்தைகளுக்கும் உண்மையான அர்த்தத்தை உணர்த்திய பொற்காலம் என்று போற்றும்.......... சீ .................தூற்றும்.



வாழ்க அண்ணா நாமம்....................


Tuesday 5 November 2013

தமிழ் ஈழமும் ஆணுறைகளும்.............

இந்த மாதம் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாரா? இல்லை நமது நாட்டின் சார்பாக வேறு அமைச்சர்களோ அல்லது பிரதிநிதிகளோ அனுப்பபடுவார்களா? என்பதுதான் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தி.

"தமிழ் ஈழம்" என்ற ஒரு சொல்லும் அது சார்ந்த போராட்டங்களும் அரசியலும் இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளால் நன்றாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் எந்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல. முதலில் தமிழ் நாட்டில் தி.மு.க வும், அ.தி.மு.க வும் மாறி மாறி தமிழ் ஈழம் பெற்றுத்தந்தனர். முதலில் ஐயா நான்கே நாட்களில் தமிழ் ஈழம் வாங்கிக்கொடுத்தார். பிறகு "ஈழத்தாய்" மற்றொருமுறை தமிழ் ஈழம்  பெற்றுத்தந்தார்.

இப்பொழுது காங்கிரசும் (தமிழ்நாடு காங்கிரஸ்) தன் பங்கிற்கு தமிழ் ஈழத்தை கையிலெடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அமைச்சர்கள் எல்லாம் விமான  நிலையத்தில் மைக்கைப் பிடித்து "இசைப் ப்ரியா" படுகொலை, ராஜபக்ஷே போர்க்குற்றவாளி, அது இது என்று கூவிவிட்டு செல்கின்றனர். வை கோ. காங்கிரஸ் அமைச்சர்கள் இத்துணை நாட்கள் கோமாவில் இருந்தார்களா? என்று கேட்கிறார். ஆனால் இவரும் சட்டசபை தேர்தலுக்கு முன் அம்மாவிற்கு வால் பிடித்த காலத்தில் கோமாவில் இருந்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.

 ஈழப்போர் உச்ச கட்டத்தில் இருந்த பொழுது நடந்த போராட்டங்களும், அரசின் அடக்குமுறைகளும், தீக்குளிப்புகளும், ரஜினாமாக்களும், உண்ணாவிரத நாடகங்களும் ஊரறிந்தது. இவையெல்லாம் பொய் பித்தலாட்டங்களின் உச்சகட்டம்.

முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு காரணம் யார் என்பது இப்பொழுது கூவிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தெரியும். என்பதுகளில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ் ஈழ ஆதரவு இரண்டாயிரத்து ஒன்பதில் இல்லாது போனது ஏன்? என்பதுகளில் இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் வகுத்த நிலை இலங்கை ஜெயவர்தனே அரசை ஆட்டுவித்தது. இலங்கை அரசு சீன அரசு பக்கம் சாயும்போதெல்லாம் இந்திராகாந்தி இலங்கையை தனது சானக்கியதனத்தால் மிரட்டி அடிபணிய வைத்திருந்தார். அத்தகைய நிலை இப்பொழுது மாறியதற்கு காரணம் இந்திய அரசியல்வாதிகளின் சுயநலம்  என்று சொன்னால் மிகையாகாது. இதற்கு எந்தக்கட்சியும் விதிவிலக்கல்ல.

தேர்தல் வரும் நேரம் எல்லா கட்சிகளும் தமிழ் ஈழத்தை ஆணுரைபோல்  உபயோகித்து விட்டு கழற்றி எறிகின்றனர் என்பதே உண்மை.


Monday 4 November 2013

கலக்கல் காக்டெயில்-126


ஏமாறாதே....

காங்கிரசும், அ.இ.அ.தி.மு.கவும் நெருங்கி வருவதாக செய்திகள் வருகின்றன. அம்மாவும் ப.சி.யும் கூட பகையை மறந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சி.பி.ஐ, வழக்குகள் எல்லாம் அரசியல் பேரங்களுக்காக நடத்தப்படுகின்றன என்பது இவர்களது தேர்தல் சமய நடவடிக்கைகளில் நன்றாக தெரிகிறது. அம்மாவின் தூக்கத்தை கெடுக்கும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வர இப்பொழுது கர்நாடக அரசின் தயவு தேவை. அதற்காக இப்பொழுது காங்கிரசுடன் நெருக்கம்.

தி.மு.க விற்கோ இப்பொழுது காங்கிரசை நம்பி புண்ணியமில்லை. ஆதலால் பாராளுமன்ற தேர்தல் முடிவைப் பொருத்து அடுத்த நடவடிக்கையை தொடங்கலாம் என்றிருக்கிறார்கள்.

நடத்துங்க உங்கள் நாடகத்தை. இலவசமும் டாஸ்மாக்கும் கைகொடுக்க இவர்கள் நாடகம் நன்றாகவே இன்னும் பல வருடம் ஓடும்.

மானஸ்தனும்,ஓட்டைவிழுந்த சொம்பும்

இவன் யாரென்று தெரிகிறதா?
தீயென்று புரிகிறதா?

நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று உதார் விட்ட "உலக்கை நாயகன்" அடுத்த படப் பிரசவம் சுகப்ரசவமாக அமைய "அகிலாண்டேஸ்வரி தாயிடம்" ஐக்கியமாகி பட்டிமன்ற நடுவராகி அம்மா டிவி ஜோதியில் கலந்து விட்டார்.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அம்மா டிவியில் சினிமா நூறு என்று இரவு நிகழ்ச்சியாகப் போட்டு "சாமியிடம் மட்டும் சாந்தமாக பேசும்" அணில் அம்மாவிற்கு சொம்படித்ததை ஒளிபரப்பி "சிக்கிட்டாண்டா ஒரு அடிமை" என்று பறைசாற்றினார்கள். இவர் அடித்த சொம்பில் ஓட்டை விழுந்ததுதான் மிச்சம். 

இந்தக் கதாநாயகர்கள் சினிமாவில்தான் வீரம் பேசமுடியும், இந்த லட்சணத்தில் இவருக்கு முதல்வர் கனவு வேறு..............

டேய் நீங்களெல்லாம் நல்லா வருவீங்கபா...............

ரசித்த கவிதை

விபத்து

நெடுஞ்சாலை விபத்து .சாலை விபத்து .
விமான விபத்து .அது கோரமான விபத்து .
தீ விபத்து திடீர் விபத்து அது கொடுமையே.
அனு விபத்து .மெய் நடுங்க வைக்கும் விபத்து .
எரிவாயு விபத்து.கொழுந்து விட்டு எரியும் விபத்து .

ரயில் விபத்து .தொடருந்து கடவை விபத்து .
தொழிற்சாலை விபத்து .குடோனில் விபத்து .
படப்பிடிப்பில் விபத்து .கிரேன் சரிந்து விபத்து
சைக்கிளில் விபத்து. மதியாத சாதாரண விபத்து .
மின்சார விபத்து டிரான்ஃ பர்மர் வெடித்து விபத்து .

தண்ணிரில் விபத்து தத்தளிக்கும் விபத்து
காமெடி விபத்து.காதலி நினைவில் விபத்து .
படகு கவிழ்ந்த விபத்து .பதற வைக்கும் விபத்து .
கட்டுமானப் பணியில் கம்பிரம் இல்லா விபத்து .
பெருங்கடல் விபத்து .நீர்மூழ்கிக்கப்பலில் விபத்து .
காதலினால் தற்கொலை.அது கவலையான விபத்து .

அருகில் பெண் இருந்தால் அத்துமீறிய வேகமப்பா .
அவதானம் வேண்டுமப்பா ,பொறுமை வேண்டுமப்பா .
உடலை பதற வைக்கும் பல பல கொடிய விபத்தப்பா.
பைக்கில் விபத்தப்பா .கை பேசியால் பந்தா விபத்தப்பா .
விபத்தப்பா.விபத்தப்பா பேஸ்புக் பாவிப்பதால் விபத்தப்பா .
துரதிஸ்ட வசமான விபத்தப்பா ,உயிர் போனால் வராதுப்பா .
அவதானமாக இருப்போம் ...விபத்தை தவிர்ப்போம் ...

நன்றி: தமிழகி

 ஜொள்ளு


 

Saturday 2 November 2013

தீபாவளி வாழ்த்துகள்

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.