Wednesday 30 October 2013

தோண்டுறா டேய்...........

ஐயே இன்னா கபாலி இங்கன குந்திகினு கீறே.......

தோடா கொமாரு, ஒரு ஆள கண்டுக்கினு போக வந்துகிறேன்.

வயக்கமா டாஸ்மாக் கடயாண்டதானே வுயுந்து கெடப்ப.

போடா கடதொறக்க நேரமாவுமில்ல.

அத்தவுடு, இன்னா மேட்டரு

நம்ம மேஸ்திரி இல்ல, முன்சாமி அவரு ஒரு வேலை கொடுத்துகிராறு பா.

இன்னா வேல

கடக்கால் எடுக்க பள்ளம் நோண்டனுமாம். துட்டு தரேன்னு சொல்லிகீரான்.

அதுக்கு இங்க குந்திகினு இன்னா செய்வ, கடப்பாறைய எடுத்து நோண்டவேண்டியது தானே.

ஐயே நாங்க கூலி வேல செஞ்சு அஞ்சு பத்து வருசம் ஆவுது.

பின்ன இன்னா ஆளு வச்சு நோண்டுவையா?

இவன் இன்னாடா நாட்டு நடப்பு தெரியாதவனா கீறான்.


ஐய்யே இன்னா..........

ஏண்டா நோண்டுனா நோண்டர்துக்கு நாங்க இன்னா டோமரா.

இன்னா பின்ன.

தோடா செவுளிலியே வுட்டா தெரியும்.

தெனைக்கும் டீக்கடையாண்ட வரியே, நூஸ் படிக்குறதில்ல ஏண்டா பள்ளம் நோண்ட மந்திரியாண்ட சொன்னா ஆளு பட வச்சி நல்லா செய்வானுங்க.

அதெப்படி

தோடா வடநாட்டுல ஒரு சாமியாரு சொன்னாருன்னு சொல்லி பெரிய பள்ளம் நோன்டிகிரானுங்க.

அதுக்குதான்  இங்கன குந்திகினு கீரையா, கபாலி இங்க எரோப்லாணுல போறவரவங்கதான் வருவானுங்க.

தெருது, அதான் மந்திரி ஒருத்தரு வார வாரம் வந்து மைக்குல கூவிட்டு போவாரே அவரு வரராறம், அவரண்ட சொல்லிபோடலான்னு குந்திகினு கீறேன்.

அவராண்ட பள்ளம் நோண்ட சொல்லுவியா, இன்னாடா இது.

நாங்க அவராண்ட நேக்கா சொல்லுவோம்.

அதெப்படி.

போடா, குடாக்கு, அவராண்ட அங்கன புதையல் கீது, "எங்க  அப்பீட் ஆன ஆயா கனவுல ரிபீட் ஆயி வந்து புதையல் கீதுன்னு சொல்லிச்சு  ஐயா"ன்னு சொன்னா அவரு மேலிடத்துல சொல்லி எந்தா பெரிய பள்ளம் வேணா நோண்ட வப்பாரு.

ஐயே.....

ஐயே இன்னாடா ஐயே, அவராண்ட கண்டி சொன்னேன்னு வையி பாஞ்சு நாளுல முடிச்சிடுவாறு, அ ஆங்........

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 29 October 2013

யாமறிந்த மொழிகளிலே............

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும்காணோம்.......

நாம் அன்றாடம் எவ்வளவோ படிக்கிறோம், இல்லை காண்கிறோம், சிலவற்றை மற்றவர்களுடன் பகிர்வதில் ஒரு பெரிய ஆனந்தம் உள்ளது. அந்த வகையில் நான் கண்ட இந்த காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை

Follow kummachi on Twitter

Post Comment

Monday 21 October 2013

அடங்கா இடுப்பழகி........நடுங்கா நாக்கழகி

அம்மாவும் ஐயாவும் தேர்தல் நேரத்தில் தங்கள் அறிக்கைப் போரை தொடங்கிவிட்டார்கள்.சமீபத்தில் ஐயா அம்மாவை எதிர்த்து விட்ட பதிலறிக்கை இது. தொடக்கத்திலேயே நடுங்கா நாக்கழகி என்று வசைகளுடன் ஆரம்பித்து விட்டார். இரண்டு கட்சித்தளைவர்களுக்கும் வயது அறுபதுக்கு மேலாகிறது. வாழ்க்கையில் நிதானமும், வார்த்தைகளில் அடக்கமும் வருகிற வயசு. அந்த அடக்கத்தை இருவரிடமும் எதிர்பார்த்தால் வீண்.

இது ஐயாவின் அறிக்கை.

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு "நடுங்கா நாக்கழகி" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது. 
என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்!
மேலே இருப்பது அந்த அறிக்கையின் தொடக்கம்

பதிலுக்கு அம்மா ஒரு அறிக்கை விடுவார். அதில் கோபம் கொப்பளிக்கும்.
கலீனறு மேலும் ஒரு அறிக்கை தயார் செய்ய பின் வரும் பட்டப்பெயர்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

கோடி வீட்டு கோமளவல்லி.
அடங்கா இடுப்பழகி.
நடுத்தெரு நர்த்தகி.
கொடநாட்டு குந்தாணி.
பையநூர் பத்திரக்காளி
போயஸ் தொட்டது பெருச்சாளி 
வாய்தா வடிவுக்கரசி 
ஊழல் ஊர்மிளா 
சட்டசபை சர்வாதிகாரி

இது போன்று இன்னும் பல வசை பெயர்கள் ஸ்டாக்கில் உள்ளன.

ஆனால் தலீவரே இதையெல்லாம் உபயோகப்படுத்த நள்ளிரவு கைதுக்கு தயாராக இருக்கவேண்டும்.அ,ஆ,இ.ஈ............எல்லாம் இன்னும் ஒரு முறை  சொல்லிப் பார்த்துக்கோங்க.
போன முறை வெட்கத்த விட்டு சொன்னீங்க அண்ட்ராயர் கூட போடவில்லை என்று.
இந்த முறை பட்டா பட்டி போட்டுக்கோங்க, இல்ல அரை வேட்டியை அவுத்துடுங்க, மறுபடியும் வெட்கத்த விட்டு அறிக்கை விட ஏதுவாக இருக்கும்.  
அம்மா பதிலறிக்கை வந்தவுடன் அம்மாவிற்கு ஐயா மேல் பாய வசவுகள் இலவசமாக தயாரித்து அனுப்பப்படும்.
.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 18 October 2013

அம்மா உணகவகம், அம்மா நீரகம், அம்மா குடிப்பகம்........அல்லாம் அம்மாதான்

இன்னா கபாலி எப்புடி கீறே

தோடா கொமாரு...........நல்லா கீறேன்பா, நீ எப்போ நெல்லோருலேந்து வந்த.

இன்னா கபாலி வேலைக்கி போவல.

போடா டோமறு ஏண்டா நாங்க இன்னா குடாக்கா வேலைக்கி போவ.

ஐயே இன்னா கபாலி அப்படிசொல்லிபுட்டே, வேலைக்கி போவாம எப்படி குஜாலா கீறே.

ஐயே தோடா கேக்குறான் பாரு கேனப்பு.........கணுக்கா..

அடப்போ கபாலி சொம்மா டபாய்க்காத...

அம்மா புண்ணியவதி ஆச்சியில நாங்க ஏண்டா வேலைக்கி போவனும்...

பின்னிய...........

காலில எயுந்தமா கட எப்போ தொறக்கும்னு பாத்தமான்னு இருக்கணும்.........

அப்பால

அப்பால இன்னாடா அப்பால ரெண்டு கட்டிங் உடுனும்..............சுர்ருன்னு ஏறோ சொல்ல தோ அதோ காப்ரேசன் கக்கூசாண்ட கீது பாரு உணவகம் அங்கன போனா ரெண்டு இட்லியும் சாம்பாரும் ரெண்டு ரூவைக்கி கொடுப்பாய்ங்க அதா உள்ள தள்நா ஒரு மாதிரி கேரோவா இருக்கும், அப்படியே பஸ் ஸ்டான்டாண்ட  போயி மட்டையாயிடனும்.

அயே..........

ஐயே இன்னடா ஐயே தோ நேத்திக்கி பஸ் ஸ்டாண்ட வுயுந்தேன் ஒரு பொம்பள வந்து யோவ் இங்கே படுக்காதேண்ணுது................. எனுக்கு ஒரு மாதிரி சுர்ருன்னு உச்சில வந்திச்சு பாரு, ஏய் இன்னாடின்னு  லிங்கிய தூக்கி மேலே கட்டினேன் பாரு, காலிடுக்குல வால உட்டுக்கினு ஓடுற கார்பரேசன் நாய் மாதிரி விர்ருனு அடுத்த பஸ் ஸ்டாண்டுக்கு பூடிச்சு.

இன்னா கவாலி பேஜார் பண்ற.........

சரி அத்தே வுடு, நம்ம மேட்டருக்கு வருவோம்............கொஞ்சம் மப்பு இறங்க சொல்ல திரியும் கடையாண்ட வந்து ரெண்டு கட்டிங் வுட்டுக்கினா, சும்மா சுர்ருன்னு ஏறும்.................திரியும் உணவகத்தில சாம்பார் சோறு கொயப்ப்பி அடிச்சா..............மதியம் சூர்யன் .............த்து மேல அடிக்க சொல்ல த  பஸ் ஓடுது பாரு அங்கன பிளாட்பாம் ஆண்ட படுத்துக்குவேன்..........திரியும் எயுந்து கடையாண்ட வந்தா சும்மா கூட்டம் நிக்கும் பாரு, ஆபீசு செனம் அல்லாம் வந்து கீவுல நிப்பானுங்க, திரியும் ரெண்டு கட்டிங் உட்டா வூடு போக கரீட்டா இருக்கும்..........

அப்பால...

அப்பால இன்னா அப்பால கூலி வேல செஞ்சிட்டு அஞ்சல  வந்திருக்கும்.......நல்ல மீன் கொயம்பு சோத்துல  போட்டு கொயப்பி அடிச்சுட்டு மட்டை ஆய்டுவேன்.

ஐயே துட்டுக்கு இன்னா பண்ணுவே..........

தோடா அஞ்சலைய கயுத்தமட்டையிலே ரெண்டு வுட்டா குடுக்குது. இல்லீனா அம்மா கொடுத்த சாமான வித்தா போச்சு. ஏற்கனவே பேணு, கிரைண்டாறேலாம் வித்துட்டேன்.  இன்னு ஒன்னு ரண்டு பாக்கி கீது. எலிக்சன் வருது, கச்சில பணம் கொடுப்பாய்ங்க. பணத்துக்கு இன்னா பஞ்சம்.

அப்பால

அப்பால நாலு மாசம் முன்ன அஞ்சலைய கண்ணாலம் கட்டிகினேன்.

இன்னா கபாலி உனுக்கும் அஞ்சலைக்கும்தான் அஞ்சு வர்ஷம் முன்னிய கண்ணாலம்  ஆச்சே.

அது நெசம், இது இலவச திருமணம், துட்டு, கட்லு, தாலி, துணியெல்லாம் கொடுத்தாங்க. கச்சி ஆளுக்கு கமிசன் போவ, நமக்கு நல்லா கெடச்சிது.

சரி இந்த ஆச்சி போச்சினா இன்னா பண்ணுவே..........

இவன் என்னடா விசயம் தெரியாதவனா கீறான்...........

இன்னா விசயம்.............

அம்மா போனா இன்னா ஐயா வருவாரு, அவரு வந்தா மவராசன் லெக் பீசு, குஸ்கா, போட்டி, ஆட்டுக்கால் பாயான்னு எலவசமா குடுப்பாரு........எலெக்சன் வேறே வருது பாரு...............அப்பால எவனாவது நடிகரு டாகுடரு, டோமருன்னு  இலவசம்னு கொடுப்பான் தையல் மெசினு அது இதுன்னு கீது, கொமாரு நீ இன்னா பண்றே.......

அடப் போ கபாலி, நெல்லூர்ல தீயா வேலை செஞ்சு, நாயா திரிஞ்சுகினு, பேயா அலைஞ்சினு கீறேன்...........பாடுங்க இதெல்லாம் அங்கன குடுக்க மாட்டேங்குறானுங்க...........

அப்ப அல்லாத்தையும் இயுத்து மூடிட்டு இங்க வந்திடு, குஜாலா இருக்கலாம்.  




Follow kummachi on Twitter

Post Comment

Thursday 17 October 2013

நைட்டிய கண்டுபுடிச்சவன் நாசமா போவ

வலை கீச்சுதே.

இந்த வாரம் ரசித்த கீச்சுகள்.

"பாய்" ஃப்ரெண்டு இல்லையே என பெண்களைவிட ஆண்கள் அதிகமாக கவலைப்படும் தினம் இன்று #பக்ரீத் #பிரியாணி--உதய பிரபு.

அடப்பாவிகளா பக்ரீத் பண்டிகைக்கு டிவில ஸ்பெஷல் ப்ரோக்ராம்ஸ் இல்லையா?#என்னத்த வேற்றுமையில் ஒற்றுமையோ-----திருட்டு குமரன்.

சுறா படத்தை ரசித்தவர்கள், நையாண்டியைப் பார்த்து புலம்புவாங்க #தமன்னாவுக்கு எத்தனை தொப்புள் சீன்ஸ்----------மூடன் மணி 



மனுஷக்கறி மட்டும் சுவையா இருந்தா உலகத்துல பாதி பிரச்சனை இருக்காது.-----------ஓலைக்கணக்கன்


மைக் இல்லன்னு சத்தமாக பேசணும்.மைக் இருந்தா நார்மலா பேசினாப் போதும் இந்த விதி வைகோ-வுக்கு பொருந்தாது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆக்ரோஷம்தான்---------V. ஸ்ரீதர்


சாப்டு கை கழுவி முந்தானைல கை தொடைச்ச காலம் போயே போச்சு # நைட்டிய கண்டுபுடிச்சவன் நாசமா போவ..!-------கட்டதொர 


அமெரிக்க ஆயுத கப்பலை விடுவிக்க முடியாது - GKவாசன்# சைக்கிள்காரன்ட்டயே லைசன்ஸ் கேட்கற போலீஸ் கிட்டே கப்பல் சிக்கிட்டா கம்முனு இருப்பாரா?---------சி.பி.செந்தில்குமார் 


நம்மைவிட வேகமா வண்டி ஓட்டுனா, 'பைத்தியக்காரத்தனமா ஓட்டுகிறவன்'. மெதுவா வண்டி ஓட்டுனா, 'வண்டி ஓட்டத்தெரியாதவன்' #நம்மலாஜிக்---செந்தில்


10 வருஷமாய் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறேன் என்றால்,கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே என்கிறார்கள், பெண்ணியம் பேசும் பெண்கள் உட்பட.----------Dream Merchant


பெரும்பாலானவர்களுக்கு கடவுள் இல்லை என்பது இந்து மதத்தில் உள்ள கடவுளை மட்டுமே குறிக்கிறது.-----------ராஸ்கோலு 


நம்ம வாழ்க்கையை விடவா ஒரு suspense thriller கதை இருந்துடப் போகுது? எந்த character க்கு எப்போ என்ன ஆகும்னே தெரியாது! :)--------தமிழரசி 


காந்திமதியும் வடிவுக்கரசியும் நண்பர்களா ஒரு படமாச்சும் நடிச்சிருந்தா பெண்களுக்குள்ளயும் நட்பு இருக்கும்ன்னு நம்பியிருப்பேன்!---------லார்டு

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 16 October 2013

மாயமில்லே மந்திரமில்லே----------iPad Magician

மந்திரவாதிகள் காட்டும் எத்துணையோ வித்தைகளை பார்த்திருப்போம். ஆனால் இங்குள்ள காணொளியைப் பாருங்கள். iPad ஐ வைத்துக்கொண்டு இன்னா கமாலு வேலை காட்டுறான்பா.



மின்னஞ்சலில் சுட்டி அனுப்பிய நண்பர் சாரதி அவர்களுக்கு நன்றி.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 October 2013

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க?

அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.

அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.

மனைவி: என்னங்க டாக்டர் எனக்கு ஒய்வு தேவை, ஒரு மாதம் சுவிட்சர்லாந்த், பாரிஸ் எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு சொல்றாங்க, நாம எங்கேங்க போகலாம்?.

கணவன்: வேறே டாக்டர்கிட்டே போகலாம்.

என்னடா நாய தொறத்துற?

மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு! நானும் பயந்துபோய் ஓடுனேன். கொஞ்சம் தூரம் வந்தது அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து கொலைக்க ஆரம்பிச்சிருச்சு. அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. ஒரு நாய் கூட மதிக்க மாட்டேங்குதுனு... அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..

போடா.. நீயும் உன் நாய்க்கதையும்..

போலி சாமியருக்கும் மாமியருக்கும் என்ன வேற்றுமை..............?
சாமியார் வெளிய இருந்தா பிரச்சனை மாமியார் வீட்டின் உள்ளே இருந்தா பிரச்சனை..... 

மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார்.





Follow kummachi on Twitter

Post Comment

Monday 14 October 2013

பாய்லின் பறந்துட்டா, ஹெலன் எப்போ வருவா?

ஓடிஸாவில் கோபால்பூரை தாக்கிய பாய்லின் புயல் மிகக்குறைந்த உயிர் சேதத்துடன் கரையைக்கடந்தது. இந்த முறை மாநில அரசாங்கம் மிக சிறந்த முறையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது.


ஓடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆர்ப்பாட்டமின்றி கிட்டதட்ட ஆறு லட்சம் மக்களை கடலோரப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை தடுத்துள்ளார். பேரிடர் மேலாண்மை குழுவும் இந்திய ராணுவமும் மாநில அரசுடன் இணைந்து இந்தக்காரியத்தை மிக அழகாக செய்துள்ளனர்.

மேலும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிகவும் சரியாக இந்தப்புயலை கணித்து மாநில அரசுகளை உஷார் படுத்தியது. அமெரிக்க வானிலை மையம் இந்தியாவின் கணிப்பு தவறு, இது காத்ரீனா புயலைவிட சக்தி வாய்ந்தது என்று குறை கூறி வந்தது. ஆனால் இந்தியா மிகவும் துல்லியமாக கணித்ததை நினைத்து நாம் பெருமை படவேண்டும். 1999 ல் ஓடிசாவை தாக்கிய சூப்பர் புயலில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் பேர் உயிரிழந்தனர். இம்முறை அத்தகைய உயிர்சேதம் ஏற்படவில்லை எனபது போன புயலில் கற்றுக்கொண்ட படிப்பினை.

துண்டிக்கப்பட்ட மின்விநியோகம் மிகவும் குறைந்த நேரத்தில் சரி செய்யப்பட்டுவிட்டது. தானே புயலில் மின்வெட்டை கண்ட கடலூரில் இயல்பு வாழ்க்கை திரும்ப வர எத்தனை மாதங்கள் ஆனது என்பது நமக்கு சற்று உறுத்தவே செய்கிறது.

தந்தி தொலைக்கட்சியில் அன்று புயல் பற்றிய செய்தி தொகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. இந்த புயல்களுக்கு பெயர் வைப்பதை பற்றிய செய்தி தொகுப்பு நமது சந்தேகங்களுக்கு விடையளிப்பதாக இருந்தது.

இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடா கடல்களில் உண்டாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பனி இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திடம் உள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஓமன், மியான்மர், மாலத்தீவு, தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒரு நாட்டிற்கு எட்டு பெயர்வீதம் அறுபத்தினாலு பெயர்களை வெளியிட்டுள்ளது. அந்த பெயர்கள் சுழற்ச்சி அடிப்படையில் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடாவில் உருவாகும்  புயல்களுக்கு சூட்டப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த புயலுக்கு தாய்லாந்து அளித்த பெயரான "பாயலின்" என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நடைமுறை 2004 ல் இருந்து அமுலுக்கு வந்தது.

இந்திய கொடுத்த எட்டுப்பெயர்கள் முறையே அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லேஹர், மேக்ஹ், சாகர், வாயு.

அடுத்த வரும் புயலுக்கு வங்கதேசம் அளித்த பெயரான "ஹெலன்" என்று அழைக்கப்பட இருக்கிறது.

அடுத்து "ஹெலன்" எப்போ வருவாளோ? எங்கு வருவாளோ?

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 8 October 2013

கலக்கல் காக்டெயில்-125

வேண்டாமே பிரிவினை 

ஆந்திராவை இரண்டாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக்கும் மேலாக இருக்கும் ஒன்று. அதனை சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு வருடம் ஆட்சி செய்த எந்த கட்சிகளுமே செய்யவில்லை. ஆனால் இப்பொழுது மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தனது சுயலாபத்திற்காக இந்த காரியத்தை செய்யத் துணிந்திருக்கிறது.

அதை தொடர்ந்து ஆந்திரம் இப்பொழுது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே உத்திரப்பிரதேசம், பீஹார், மத்தியப்பிரதேசம் என்று மூன்று மாநிலங்களை பி.ஜே.பி. பிரித்துப் போட்டார்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இனி ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோல் கூறுபோட அரசியல் ஆதாயங்களுக்காக குரல் எழும்.

இந்தியாவை நன்றாக கூறு போட்டு கொள்ளையடிக்க வசதியாக இருக்கும்.  இந்த புழுத்த அரசியல்வாதிகள் கைகளிலிருந்து இந்தியாவிற்கு எப்பொழுதுதான் விடிவுகாலமோ?

முடிகவுடா

அம்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்திற்கு தடை விதித்தாலும், நீதிபதி ஓய்வு விஷயத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என தீர்ப்பு வழங்கியதிலிருந்து அம்மா வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது.

அதற்கேற்றார் போல் புதியதாக இந்த வழக்கிற்கு நியமனம் செய்யப்பட்ட முடிகவுடா கிடுக்கிப்பிடி போட ஆரம்பித்திருக்கிறார். தீர்ப்பு  அம்மாவிற்கு சாதகமாக வர வாய்ப்பில்லை.

தேவுடா............லாலுவை தொடர்ந்து மற்றுமொருவரா?

ரசித்த கவிதை 

தமிழா தமிழ் பேசு ....
தமிழ் பேசு தமிழா, நாளொன்றுக்கு, ஒரு வாக்கியமேனும் !!!
நீ பேச அதை உன் சந்ததிகள் கேட்க , உரக்க தமிழ் பேசு தமிழா !!!
தாய்க்கும் மேலான தாய் தமிழை நீ பேசு தமிழா !!!
தமிழை தயங்கி பேசும் தமிழனாய் நீ இல்லாமல் தமிழ் பேசு தமிழா !!!
சங்கம் வளர்த்த தமிழை நீ சாகடிக்காமல் பேசு தமிழா !!!
மொழி என்ற சொல்லுக்கு பொருள் தரும் தமிழை பிழை இல்லாமல் நீ பேசு தமிழா !!!
வந்தவரெல்லாம் பார்த்து வியந்த விந்தை தமிழை நீ பேசு தமிழா !!!
தரணியில் தமிழ் வாழ தமிழை நீ பேசு தமிழா !!!
அமுதினும் இனிய தமிழை ஆங்கிலம் தின்னாமல் தமிழை நீ பேசு தமிழா !!!

இளம்கவி அரிமா



ஜொள்ளு 







Follow kummachi on Twitter

Post Comment

Monday 7 October 2013

லிமெரிக் கவுஜ.........கவுஜ

கவிதை எழுதுவதற்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.சுப்பையா வாத்தியார் தமிழில் மார்க் வாங்காத காரணத்தால் முட்டியை உடைத்ததால் இலக்கணத்தில் நாட்டம் வரவில்லை. அதற்குப் பதிலாக மனப்பாட பகுதியை "டப்பா" அடித்தே தேறியாகிவிட்டது.

இந்த தளை, சீர்,மாங்கா, புளியங்கா எல்லாம் புரிபடாத விஷயம். கவிதை எழுத இது எல்லாம் தேவையாம். புதுக்கவிதை  கொஞ்சம் சுலபம். உரை நடையையே அங்கே இங்கே பட்டி தட்டி டிங்கரிங் பண்ணி, பிரிச்சு பிரிச்சு போட்டு ஒப்பேத்தி விடலாம். இந்த லிமெரிக் என்ன அதையும் தான் ஒரு கை பாப்போம் என்று தொடங்கிய முயற்சியே இது.


இனி நம்ம சரக்கு

வரப்போகுது தெலுங்கானா
அரசியவாதிகள் விடுவானா
கடல் பகுதி சீமாந்திரா
ரெண்டுபடப்போகுது ஆந்திரா
வம்பு எதுக்கு? வேணா


பரீட்சை எழுதினான் அசோக்கு
வாங்கவில்லை பாஸ் மார்க்கு
திருத்தியவன் ஒரு அரை லூசு
ஆகிப்போனான் பீஸ் பீசு
தேடிப்போனான் டாஸ்மாக்கு


அம்மா போடுது பொங்கலு
உணவகத்தில் இப்போ கும்பலு
இட்லிக்கு உண்டு சட்டினி
மக்கள் இல்லை பட்டினி
எதிர்கட்சி இப்போ வெம்பலு.


ஊழல் செய்தோர் கோடி
ஒழிப்பேன்றாரு மோடி
அடுத்தப் பிரதமர் அம்மா
மற்றவரெல்லாம் சும்மா
காலில் விழலாம் வாடி.


Follow kummachi on Twitter

Post Comment

Saturday 5 October 2013

நாராயணசாமி நமீதாவா தெரிவார்

வலை கீச்சுதே 

இந்த வாரம் ரசித்த கீச்சுகள் 

லிஃப்டு கேட்டு ஏறியவர் ஏதேதோ பேசி அறுத்துவிட்டு "இந்த உலகம்   ரொம்ப  சின்னது பாஸ்"னார் அப்டினா நடந்து போங்கன்னு எறக்கி விட்டுட்டேன்---நாயோன்

சென்னை விமான முனையத்தில் ஆறாவது முறையாக மேற்கூரை சரிவு# மாப்பு மேற்கூரை தானா சரியுதான், ஒழுகுதான்....இதெல்லாம் சந்திரமுகி வேலைதானோ---------------ட்விட்டர் தாத்தா 



அந்த காலம் மாதிரி அக்கா தங்கச்சிங்க பேன் பாக்கிற சீனே கண்ல படலை..பேன் ஒழிஞ்சுடுச்சா..இல்ல பாசம் ஒழிஞ்சுடுச்சான்னு தெரில-------கட்டதொர



நான் ஒரு தமிழர் - என்னோட பாஸ்போர்ட் தமிழ்நாடு அட்ரஸ்ல இருக்குது - நமீதா # டேய் தொழிலதிபர்களா ...........!-------பட்டர் கட்டர் 


தக்காளிய எப்படி வாங்கினாலும் வீட்டுக்காரம்மா திட்றாங்களா? ஸ்ரீ திவ்யா மாதிரி , நஸ்ரியா மாதிரி வாங்குங்க திட்ட மாட்டாங்க !----------பட்டர் கட்டர்



ரேஷன் அரிசியை சமைச்சி சாப்ட்டா ஏழை,இட்லிக்கு போட்டா மிடில் க்ளாஸ்,வீட்டு வேலைக்காரிக்கி கொடுத்தா பணக்காரன் #அவ்ளோ தான்,--------சாந்த்



முதலில் கழிவறைகள் கட்ட வேண்டும்; பிறகே கோயில்கள் கட்ட வேண்டும் - மோடி! #சரிதான்! நீங்க கோயில் கட்டனும்னாலே நிறைய வயிறு கலங்கும்ல!-------------வேடன் 


காதலிக்கு கோவில் கட்டலாமென்றிருந்தேன்,முடியாது கழிவறைதான் கட்டவேண்டுமென தடுத்துவிட்டார் மோடி------------உடன் பிறப்பே



ராகுல் எனக்கு காமராஜராக தெரிகிறார் : EVKS # அப்ப நாராயணசாமி நமிதாவா தெரியணுமே இவருக்கு ..பீ கேர்புல்-------------நாடோடி


இந்த வாரம் ரெண்டு பார்ட்டி அபிசியல் ஒன்னு அன்-அபிசியல் ஒன்னு, வீட்ல பெர்மிசன் வாங்கியாச்சு. அநேகமா சண்டே சமையல் என்னொடததான் இருக்கும்!------------ஜப்பான் ரகு 


கட்சிக்கு உழைக்காதவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்-நாராயணசாமி # ஊழல் செய்யாதவர்கள் உருட்டிவிடப் படுவார்கள் – நாரதசாமி----------கள்வன் 


காதல் ஒரு துவைக்காத தலையணை, பலர் தலைக்கு வைப்பாங்க, சிலர் காலுக்கு வைப்பாங்க, ஆனா எல்லோரும் கட்டிப்புடிச்சு தூங்க நினைப்பாங்க :-)---------ஆல்தோட்ட பூபதி 

Follow kummachi on Twitter

Post Comment

Friday 4 October 2013

ஊழல் என்பார் ஒழிப்பேன் என்பார்.......

ஊழல் என்பார்
ஒழிப்பேன் என்பார்
வாழும் கடவுள் என்பார்
பாழும் பாரதத்தில்
ஏழ்மை இல்லையென்பார்
எங்கும் அமைதி என்பார்
தாழ்வு நிலைகளை
தனியே வைத்திடுவார்
போதை தரும் மருந்தை
பொதுவிலே வைத்திடுவார்
தாகம் தீர்க்கும்
குடிநீரை விற்றிடுவார்
தேர்தல் வந்திடினிலே
"ஒட்டு"க்கு விலைவைப்பார்
கூழைக் கும்பிடும் கூடவே
கூட்டி வருவார்
கேளிக்கை பொருட்களெல்லாம்
விலையில்லா பரிசென்பார்
நீதியை வளைத்திடுவார்
நேர்மையை புதைத்திடுவார்
ஜாதிகள் இல்லை என்று
வீதிகளில் முழங்கிடுவார்
வாக்கு வங்கிகளில்
ஜாதிகளை அடைத்திடுவார்
எதிலும் புரட்சி என்பார்
எளிமையான ஆட்சி என்பார்
கூட்டணி வைத்திடுவார்
கோடிகளில் கொழித்திடுவார்
நாட்டு வளங்களை எல்லாம்
நாம் வாட சுரண்டிடுவார்
இமயம் முதல் குமரி வரை
எங்கும் நிறைந்திருப்பார்
எங்கள் வளம் பெருக்க
நாங்கள் தேர்ந்தெடுத்த
ஏழைப் பங்காளர்கள். 


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 3 October 2013

அக்டோபர் 2 காந்திக்கு மட்டும்தானா?

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது தெரியும். கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவுநாளும் அதே தினம் தான்.

அதே தினத்தில்தான் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமரும் பிறந்தார். அரசியலில் ஒரு நெறிமுறையுடன் வாழ்ந்த அந்த தலைவர் பிறந்தநாளை ஏன் நாம் அவ்வளவு விமர்சையாக கொடாடுவதில்லை என்பது புரியாத புதிர்.

அவரைபற்றி இந்துவில் திரு. பூ.கொ. சரவணன் அவர்கள் எழுதிய கட்டுரை.


லால் பகதூர் சாஸ்திரி - அரிதான அரசியல் தலைவர்

அக்டோபர் இரண்டு என்றால் எல்லாருக்கும் காந்தியை ஞாபகம் வரும். இன்னொரு தலைவருக்கும் அக்டோபர் இரண்டு தான் பிறந்த நாள். அவர் லால் பகதூர் சாஸ்திரி. சாஸ்திரி படித்து பெற்ற பட்டம் - சாதி பெயர் இல்லை. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.

இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரி படிக்கிற காலத்தில் விடுதலைப்போரில் மனிதர் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.

திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை பெறுவது வழக்கமாக இருந்த காலத்தில் கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே பெற்றுக்கொண்டார் .

அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு வழக்கம். ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று வந்தார். மகள் அந்த காலம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை சென்றார் சாஸ்திரி.

இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. எளிமை,நேர்மை இது தான் அவர். வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,"இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.

இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் . இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.

அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் சொன்னார்,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று . சாஸ்திரி மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில் தோன்றுகிறார்கள்!

 

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 2 October 2013

கலக்கல் காக்டெயில்-124

இது முடிவல்ல ஆரம்பம் 

லாலு பிரசாத் யாதவ் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு முன் செய்த ஊழலின் அளவு 900 கோடியாம். அடேங்கப்பா...........இதற்கு கூட்டாக மேலும் நாற்பத்தைந்து பேர். முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உட்பட அத்துனை பேரையும் ராஞ்சி நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனையை நாளை மறுநாள் வழங்கவிருக்கிறது.

மாட்டுத்தீவனம் வாங்குவதில் போலி ஆவணங்களைகாட்டி ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள். இது பொய் வழக்கா இல்லை உண்மையிலே ஊழல் நடந்ததை மறுப்பதற்கில்லையா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே  தெரியும் உண்மை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கையா? இல்லை ஆந்திர ஜகன்மோகன் ரெட்டி வழக்கு போலா?

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றால் வரவேற்போம். மேலும் இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, அலைக்கற்றை ஊழல், இன்னும் நிலக்கரி, ரயில்கேட் என்ற எண்ணற்ற ஊழல் வழக்குகளிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர் பார்ப்போம்.

எல்லாவற்றிற்கும் இந்த மாட்டுத்தீவனம் ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.

ஆட்டத்திற்கு வரும் வை.கோ.

போன சட்டசபை தேர்தலில் அம்மாவால் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்ட வை.கோ வின் கட்சி தேர்தலில் போட்டியிடாமலே போனது. ஆனால் இந்த முறை வை.கோ ஒரு முடிவோடு இருக்கிறார்.

தன்னுடைய கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தங்கள் கட்சியின் வியூகத்தை ஓரளவிற்கு கோடிகாட்டியுள்ளார். அநேகமாக பா.ஜ.க வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராவது போல் உள்ளது. அம்மா தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டதாலும், தி,மு.க வுடன் இனி கூட்டு இல்லை என்று ஈழ இறுதிப்போருக்கு பின்னர் எடுத்த நிலைப்பாட்டாலும் மேற்படி முடிவை நோக்கி அவர் நகர்வது தெரிகிறது.

பா.ஜ.கவும், ம.தி.மு.க பின்னர் தே.மு.தி.கவும் இணைந்தால் நாற்பதும் நமதே கனவில் இடி விழ வாய்ப்புள்ளது.

இனி தேர்தல் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும், வழக்கம் போல மேட்ச் பிக்சிங், பிட்சில் அடிதடி, என்று களைகட்டும்.

ரசித்த கவிதை

எங்களைத் தடை செய்யாதீர்..! 

எங்களை..!
உங்கள் முகம் பார்த்து வீசுகையில்
கொள்ளையர்களை எச்சரிக்கைச் செய்கிறோம்
விசையோடு வீசுவதால் - எங்களால்
திசை மாற முடியவில்லை
திசைமாற்றம் எமக்கிருந்திருந்தால்
வீசும் கைகளை நாசம் செய்திருப்போம்
எங்களால் உங்களுக்குண்டான காயம் போல்
ஆறா காயம் நாங்களும் கொள்கிறோம்
உங்கள் அழகு முகங்களைப் பழுதாக்கி
உணர்வுகளைச் சருகாக்க
எங்களுக்கு மனமில்லை
தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்
தண்டனை முறைக்கு
அமிலத்திற்கு அமிலம்
நான் தயாராயிருக்கிறேன்..!

தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!

-------------------செ.பா. சிவராசன்

ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 1 October 2013

வட போச்சே

வைகைப்புயல் வாயைக்கட்டாத காரணத்தால் திரையுலகிலிருந்து புறக்கணிக்கப்பட்டாலும் அவரது வசனங்கள் இன்றும் எல்லோராலும் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இணையத்தில் படித்தது மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.

கல்லூரியில் மாணவர்கள் வைகைப்புயலின் வசனங்களை எங்கே எல்லாம் உபயோகிக்கிறார்கள்.

Class Test: சொல்லவே இல்லை

Teaching: முடியல

Exam: உக்காந்து யோசிப்பாய்ங்களோ

Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாபிடற மாதிரி

Bit: எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்

Result: மாப்பு வச்சிட்டாண்டாஆப்பு

Degree: வரும்  ஆனா வராது

Assignment: ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே

Class Attendance: அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்

Professors: ஒரு க்ரூப்பாதான் அலையுறாய்ங்க

Lecture: இப்பவே கண்ணை கட்டுதே

student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரப்படாது பேச்சு  பேச்சாத்தான் இருக்கணும்

 mark sheet:  நீ புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்


கடைசியாக ஜொள்ளு விட்ட பிகரு கழட்டி விட்டால்..............வட போச்சே 

Follow kummachi on Twitter

Post Comment