Pages

Tuesday 28 January 2014

கலக்கல் காக்டெயில்-136

கப்சா விடும் கருத்துக் கணிப்புகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்  எல்லா ஊடகங்களும் கப்சா கருத்துக் கணிப்புகளை அள்ளிவிடுகின்றன. இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து நண்பர் சகபதிவர் நம்பள்கி ஒரு பதிவு போட்டுள்ளார். அவருடைய கருத்துக்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். அவருடைய பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

ஊடகங்கள் தங்கள் வெளியிட விரும்பும் கருத்துக்களை மக்கள் கருத்து போல் சொல்வதற்காக கேள்விகளை மிக தந்திரமாக கேட்பார்கள்.

உதாரணத்திற்கு சிறந்த வக்கீல், விவாகரத்து வழக்கில் தன் பிரதிவாதியிடம் ஆம் அல்லது இல்லை என்ற பதில்தான் சொல்லவேண்டும் என்று கூறிவிட்டு

நீ உன் மனைவியை இன்னும் அடிக்கிறாயா? என்று கேட்பார்.

அதுபோலதான் இந்த டுபாகூர் கருத்துக் கணிப்புகளும்.

கேப்டன்  லொகேஷன் தேடுகிறார்

கேப்டனின் மௌசு இப்பொழுது அரசியல் அரங்கில் ஏறியிருக்கிறது. அம்மாவைதவிர அவர் கட்சியுடன் கூட்டு சேர எல்லா கட்சிகளும் அந்த ஆறு விழுக்காடு ஓட்டுக்களுக்கு ஆட்டையைப் போட காத்திருக்கின்றன. அதற்கப்புறம் கேப்டனை கழற்றி விட தயங்க மாட்டார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும் ஆனால் கேப்டனுக்குத் தெரியுமா என்றால் நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று உண்மை "அண்ணியாருக்கு நன்றாகவே தெரியும்" .

கேப்டன் வழக்கம் போல் கூட்டணி பற்றி நிதானமாக!!!!!!!!!!! யோசிக்க ஹாங்காங், பாங்காக் எல்லாம் சென்று லொகேஷன் பார்த்து வந்திருக்கிறார்.

இனி என்ன முடிவெடுப்பார் என்று பார்ப்போம்.

ரசித்த கவிதை

பசி

ந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ்
பூச்சூடி நிற்கும் காமம்
வளையலை எண்ணிச் சரிபார்க்கிறது.
செல்போனில் மணி பார்க்கிறது.
பூச்சரத்தைப் பின்னால் தள்ளி
கால்மாற்றி நின்று தவிக்கிறது.
கக்கத்து வேர்வையில் கரையும் 
பவுடர் வாசனைக்கு வெறிகொள்ளும் காற்று.
அவள் மேனி புணர்ந்து களைத்து
மெள்ளப் பயணப்பட்டு நெருங்கும்
அந்தக் குடிசை வீட்டுத் தொட்டிலில்
உறங்கும் குழந்தை மூத்திரம் பெய்கிறது.
புரண்டு படுக்கும் அதற்கு
பசிக்கத் தொடங்குகிறது
இவள் அலைபேசியிலோ
'நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும்
வாடிக்கையாளர்
வேறோர் இணைப்பில் உள்ளார்’ என்றொரு
பெண் குரல்
நெஞ்சில் நெருப்பள்ளிக்
கொட்டிக்கொண்டிருக்கிறது.
---------------------------------------------கணேசகுமாரன்

ஜொள்ளு 





Monday 27 January 2014

அஞ்சா நெஞ்சனும் அறுந்த ....ஞ்சனும்

எப்படியும் ஒரு பத்து சீட்டாவது பிடிக்கோணும், இப்ப இருக்கிற நிலைமையில் சாத்தியமே இல்லை. மேலும் மதுரையில் ஒரு தனி அணியாக அப்பப்போ குரல் கொடுப்பது தலைமைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தலைமையின் திட்டத்திற்கு எதிராக செயல்படுவது என்று நிலைமை எல்லை மீறி போனதால் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் அஞ்சா நெஞ்சன்.

இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. போனமுறை நீக்கபட்ட பொழுது பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி வேட்பாளர்களை நிற்கவைத்து வெறும் சொற்ப வோட்டு வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க வை கிட்டத்தட்ட பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வைத்த பெருமை அஞ்சாநெஞ்சனை சாரும்.

இந்த முறை அவ்வாறு நடக்காதவாறு  இருக்க ஏற்கனவே முப்பது மாவட்டங்களிலும் உள்ள அவரது ஆட்களுக்கு ஆப்பு வைத்தாகிவிட்டது. மேலும் தலைமை இந்த "தல தளபதி" சண்டைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டிய கட்டாயம், மேலும் அஞ்சா நெஞ்சனின் புதிய தலைமுறைப் பேட்டி கேப்டனுடன் கூட்டணி வைக்க வேட்டு வைப்பது போலுள்ளதால் அஞ்சா நெஞ்சனுக்கு காயடித்து விட்டார்.

போனமுறை அஞ்சா நெஞ்சனை விலக்கிய பொழுது கொந்தளித்த மதுரை இப்பொழுது அமைதி காக்கிறது. அஞ்சா நெஞ்சனுக்கு இப்பொழுது தன்னிலைமை தெரிந்திருக்கும். தளபதி தலைமை பதவிக்கு வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. அஞ்சா நெஞ்சன்  இனி அரசியலில் இருந்து விலகி இருப்பது தொண்டர்களுக்கும், அதிகாலை நடைபழகும்  அரசியல் பிரமுகர்களுக்கும் நல்லது.

கூட்டணி பலமமாக அமைந்தால் "கண்கள் பணித்து இதயம் புளித்தது" போன்ற அறிக்கைகள் வர சாத்தியங்கள் உள்ளன.

சிலபல தலைகள் உருளுமுன் "இதயம்புளிக்க" வேண்டுவோம்.

Saturday 25 January 2014

நமீதாவே வா----கவுஜ கவுஜ

நடிகை நமீதா அரசியலில் குதிக்கப்போவதாகவும் ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டதாகவும் வந்த செய்தியை தொடர்ந்து கட்சி தலைமையிடமிருந்து வந்த வரவேற்பு மடல்


நமீதாவே வா
நடனமாடிவா
நாடு நலம் பெற
நாட்டமையோடு வா

களப்பணியாற்ற வா
கலாவோடு வா
கட்சி சிறக்க
கட்டாயம் வா

மானாட வா
மயிலாட வா
மக்கள் நலம் சிறக்க
மனம் திறந்து வா

கோன் உயர வா
கோடிகள் கொண்டு வா 
குடும்பம் செழிக்க
பொற்குவை கொண்டு வா

கண்மணிகள் களிக்க
கச்சசணிந்து வா
பா ஆடை புனைய
பாவாடையோடு வா


தலைவர் மனம் குளிர
தமிழ் கொண்டு வா
தலைமை பதவி மட்டும்
தரமாட்டேன் வா




Saturday 18 January 2014

ஊடகங்களின் வெறியாட்டம்

சுனந்தா புஷ்கர் தரூரின் அகால மரணம் உறங்கிக்கிடந்த ஊடங்கங்களுக்கு தீனி போட்டுள்ளது. வழக்கம் போல விசாரணை, போஸ்ட்மார்ட்டம் எல்லாம் முடித்து  தீர்ப்பு வழங்குவதில் இந்திய ஊடகங்களுக்கு ஈடு இணை இல்லை.

சஷி தரூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஆக இருந்த பொழுதே  சர்ச்சைகளில் சிக்கி பதவியை இழந்தார். அப்பொழுது ஐ.பி.எல் கொச்சின் அணி விவகாரத்தில் லலித் மோடியுடன் எற்பட்ட தகாராறில் சிக்கி சின்னாபின்னமாகி சீரழிந்தார். அப்பொழுது அவருடன் இணைத்து பேசப்பட்ட சுனந்தா புஷ்கரைதான் 2010ல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமே அது மூன்றாவது திருமணம்.

மூன்று நாட்களுக்கு முன்தான் சுனந்தா ட்விட்டரில் சஷி தரூருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் மேஹருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று அவர்களுக்கிடையே நடந்த சம்பாஷணைகளை புட்டு புட்டு வைத்தார். அடுத்த நாள் சசி தரூர் நாங்கள் எங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சியாக் உள்ளோம் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இது வெளியாகி இரண்டு நாட்களில் டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அன்று காலை  ஆறு மணிவரையில் சசி கூட இருந்திருக்கிறார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு மனைவியின் மரணம் பற்றி தெரிவித்திருக்கிறார்கள்.

வழக்கம் போல வடஇந்திய ஊடகங்கள் தங்களது கற்பனையை தட்டிவிட்டு பல கதைகள் புனைய ஆரம்பித்துவிட்டன. கொலை, தற்கொலை, இயற்கை மரணம் என்று அவர்களது என்ன ஓட்டத்தில் கற்பனை கதைகள் செய்ய ஆரம்பித்து விட்டன.  ஏன். டி. டி வியின் பர்க்கா டத்திற்கு இது போன்ற செய்திகள் கிடைத்தால் ஏதோ அவரே நேரில் பார்த்த மாதிரி அவரது கருத்தை எல்லோரும் ஏற்க வேண்டும் என்ற தோரணையில் செய்திகளை உண்மை பொய் என்று கலந்து கட்டி அடித்து விடுவார். இது போன்ற செய்திகள் கிடைத்தால் ஊடகங்கள் தங்களது வெறியாட்டங்களை தொடங்கிவிடுகின்றன.

எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும் அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன் என்று மரணத்திற்கு முன் சுனந்தா கடைசியாக ட்வீட் செய்திருக்கிறார்.

தற்பொழுது சசி தரூர் நெஞ்சுவலியால்?? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசி தரூருக்கு பிரச்சினைகள் கூட பிறந்தது போல. மற்றுமொரு முறை அவரது அரசியல் வாழ்வு சந்தேக மேகங்கள் சூழ்ந்துள்ளது போல் தெரிகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லி ஊடகங்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியவில்லை.


Friday 17 January 2014

கலக்கல் காக்டெயில்-135

களப்பணி ஆற்றுவோம்.........

அம்மா வழக்கம்போல் கொடநாட்டில் குப்புறபடுத்துக்கொண்டு அரசாங்க வேலைகளையும் தொண்டர்களையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்கே  உபயோகப்படும் எம்.ஜி. ஆர் நாமத்தை!!!!! துணைக்கு அழைத்து தொண்டர்களை களப்பணியாற்றி நாற்பதையும் வெல்ல கடிதம் எழுதுகிறார்.

அம்மா அங்கேயே இருங்கம்மா,  களப்பணியாற்ற இதோ ஓடி வருகிறோம். நாற்பதும் நமக்குதாமா, நீங்கதான் அடுத்த பிரதமர். கொடநாட்டிலிருந்து நேரே டார்ஜிலிங்கிற்கு சென்று ஓய்வெடுக்கலாம்.

கூட்டணிய அறிவிங்கப்பு

தேர்தல் ஆணையம் பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை அறிவிக்கப் போகிறார்களாம். அநேகமாக ஐந்து கட்டமாக தேர்தலை ஏப்ரலில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். முடிவுகள் மே  மாதத்தில் அறிவிக்கப்படலாம்.

தமிழ் நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை ஒன்றும் மும்முரமாக நடப்பதாகத்தெரியவில்லை.கேப்டன் எல்லோரையும் காயவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் போவதற்கு இரண்டு இடங்கள் தான் உள்ளன.

கலைஞரோ இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்கிறார். அதற்கு முன் ஆறு லோக்சபா, ஒரு ராஜ்ய சபா என்றெல்லாம் பேச்சு வார்த்தை நடந்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது ஒன்றும் பேசவில்லை என்கின்றனர்.

ஒரு வேலை மானாட மயிலாடவிற்கு நடுவராக வர கேப்டனிடம்  பேச்சு வார்த்தை நடத்தியிருப்பார்களோ?

சீக்கிரம் பேசி முடிங்கப்பு.............நாங்க பதிவு போடனுமில்ல.

ரசித்த கவிதை

மரத்துப்போன விசும்பல்கள்

காட்டிலிருந்து
வெட்டிக்கொண்டுவரப்பட்ட
மரம் காத்துக்கொண்டிருந்தது
தன் கதை தன் மேலேயே
அவனால் எழுதப்படும் என்று.

வெட்டுப்படுதலும், பின் துளிர்த்தலும்,
மழை வேண்டிக்காத்திருப்பதும்
வேண்டாத இலைகளைக் களைவதும்
அழையா விருந்தாளிகளைத் தாங்கி நிற்பதும்,  
அண்டி வரும் எவருக்கும்,
யாரெனத் தெரியாமல் நிழல் தருவதுமான
மரத்தின் நினைவுகள்
மறக்கடிக்கப்பட்டு
எழுதுபவனின் அவமானங்களும்
மகிழ்வும்,சோகமும்
அப்பிக்கொண்டன
எழுத்தாக அதன் மேல்.

மரமும் அதைக்கொஞ்சம்
வாசிக்க முயன்று
பின் தன்னைத்தானே
தேற்றிக்கொண்டது
ஏதோ ஒரு வகையில்
அவை தன் கதையை
ஒத்திருப்பதாக.
 ------------------------------சின்னப்பயல்

ஜொள்ளு






Thursday 16 January 2014

2014ல் இனி வெளிவரப்போகும் தமிழ் படங்கள்

இந்த வருடம் வரவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்.


  1. அம்மா அம்மம்மா 
  2. கோலி சோடா  
  3. ஜே.கெ. எனும் நண்பனின் வாழ்க்கை
  4. மாலினி 22 பாளையங்கோட்டை
  5. ரம்மி
  6. மதகஜராஜா
  7. மேகா
  8. அடித்தளம்
  9. எதிரி எண் 3
  10. கங்காரு
  11. பண்ணையாரும் பத்மினியும்
  12. சண்டியர்
  13. வேல்முருகன் போர்வெல்
  14. ஆஹா கல்யாணம்
  15. இது கதிர் வேலன் காதல்
  16. ஜிகிதண்டா
  17. நளனும் நந்தினியும்
  18. ரெண்டாவது படம்
  19. சிப்பாய்
  20. தரமணி
  21. திருமணம் எனும் நிக்காஹ்
  22. வேட்டை மன்னன்
  23. விஸ்வரூபம் 2
  24. தனுஷ் 5ம் வகுப்பு
  25. நான்தான் பாலா
  26. ஒரு கன்னியும் 3 களவாணியும்
  27. உன் சமயலறையில்
  28. அர்ஜுனன் காதல்
  29. பூலோகம்
  30. நெடுஞ்சாலை
  31. புதிய திருப்பங்கள்
  32. சாய்ந்தாடு சாய்ந்தாடு
  33. சுட்ட பழம் சுடாத படம்
  34. சிவபூஜையில் கரடி
  35. வானவராயன் வல்லவராயன்
  36. சங்குதேவன்
  37. உள்ளமெல்லாம் தள்ளாடுதே
  38. சூரன்
  39. யான்
  40. ஜெயமுண்டு பயமில்லை
  41. காதல் 2 கல்யாணம்
  42. நானே வருவேன்
  43. திகில்
  44. காதல் சொல்ல ஆசை 
  45. கலிங்கத்து பரணி
  46. நிமிர்ந்து நில்
  47. ஒரு ஊர்ல 
  48. வாய்மை
  49. டமால் டுமீல்
  50. ஜகஜால புஜபல தெனாலிராமன்
  51. காவியத்தலைவன்
  52. மான் கராத்தே
  53. நான் சிகப்பு மனிதன்
  54. புலிவால்
  55. சலீம்
  56. சட்டென்று மாறுது வானிலை
  57. வை ராஜா வை
  58. வேலையில்லா பட்டதாரி
  59. முறியடி
  60. கோச்சடையான்
  61. என்றென்றும்
  62. நான் என் காதல் 
  63. நேற்று இன்று
  64. விடியல்
  65. விரைவுப் பேருந்து
  66. என்னமோ நடக்குது
  67. காட்டு மல்லி
  68. டானா
  69. ஆதிக்கம்
இவையெல்லாம் முதல் ஆறு மாதத்தில் வரவிருக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட படங்கள். எத்தனை தேறுகிறது என்று பார்ப்போம்.

Wednesday 15 January 2014

பண்ருட்டிக்கு நடக்க முடியல.........

கமல் பாவம்யா, எல்லா பண்டிகைக்கும் ஜெயால தலையைக் காட்டவேண்டியிருக்கு. #விஸ்வரூபம்டா #பயம்டா#அம்மாடா --------ட்விட்டரில் படித்தது.

குனிந்து நிமிர்ந்து பள்ளம் தோண்டி அடக்கம் செய்பவரை வெட்டியான் என்கிறோம், ஆபிஸ்ல வெட்டியா இருக்குற ஆளை "மேனேஜர்"என்கிறோம் #ட்விட்டரில் படித்தது. 

என் தாத்தாவுக்கு நல்ல சாவு, தூங்கிட்டிருக்கும்போதே செத்துட்டாரு, ஆனால் அவர் ஒட்டிகிட்டிருந்த காருல இருந்த ஐந்துபேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க------ட்விட்டரில் படித்தது.

அதிமுகவில் இணைய அழைத்தால் பார்க்கலாம்.. அதிமுக வெற்றிக்கு பங்காற்றுவேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்------#நடந்து போக முடியல, இன்னோவா வேனும்கறீங்க.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது.#ராகுல்காந்தி.
எந்த நாட்டுக்கு இத்தாலிக்கா?

எனது திருமணம் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருக்காது நடிகை அமலாபால் பேட்டி# விஜய் ஒகேசொல்லிட்டாராக்கும்.

கட்டிடத்தையெல்லாம் வீடியோ கான்ஃ ப்ரன்ஸ் மூலமா திறக்கிற டெக்னாலஜியை வைச்சிருக்கோம் ஆனா பாருங்க பிரதமருக்கு மட்டும் கடிதம்தான்.----------அறுந்தவாலு.

நேற்று மீந்து போன பொங்கலை எல்லாம் மாட்டிற்கு வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம் #தமிழண்டா # ட்விட்டரில் படித்தது.



 

 

Friday 10 January 2014

ஜில்லா----இந்த விமர்சனத்தை படிக்காதீங்க

வெளிநாடுகளில் வழக்கம்போல் ஒரு நாள் முன்பாகவே ஜில்லா, வீரம் இரண்டு படங்களும் வெளியாகிவிட்டன. நேற்று ஜில்லா படம் பார்க்க நேர்ந்தது. (வீட்டம்மா ஒரு அணில் ரசிகை)

படம் பார்த்த பின் என்னுடைய கருத்துகள் இவை. தீவிர அணில் குஞ்சுகள் இதை படிக்க வேண்டாம். அப்படியே படித்து கெட்டவார்த்தையில் திட்டுவதாக இருந்தால்அனானியாக வந்து திட்டாதீர்கள்.

சமீபகாலமாக "மாஸ்" "மரண மாஸ்" என்ற வார்த்தைகளில் மயங்கி தாதா, தாதாக்கு தாதா என்று அடி,உதை,குத்து,கொலை,தூக்கிடுறேன் என்று  வன்முறைகள் நிரம்பிய காட்சிகள் வைத்து ரசிகர்களை சோதனைக்குள்ளாக்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மற்றுமொரு படம் "ஜில்லா".

சிவன் (மோகன்லால்) மதுரையில் ஒரு பெரிய தாதா. அவரிடம் வேலை செய்யும் ஒருவரின் மகன்தான் சக்தி (விஜய்). சக்தியின் தந்தை ஒரு கைகலப்பில் இறந்துவிட அதற்கு காரணமானவர் ஒரு காவலர் என்பதை நேரில் கண்ட சக்திக்கு காக்கி சட்டை என்றாலே வெறுப்பு. பள்ளிக்கூடத்தில் யாராவது நான் போலீசாவேன் என்றால் டிக்கியை பஞ்சராக்கிவிடுவார். சிவனின் மனைவியின் பிரசவக்காலத்தில் ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் சக்தி சிவனின் வளர்ப்பு மகனாகிறார்.

பின்னர் சிவன் தனக்கு போலீசில் ஒரு ஆள் இருந்தால்தான்  தனது தொழிலுக்கு நல்லது என்று  சக்தியை கூர்க்காவாக்குகிறார். வேறென்ன சொல்லுவது, கதாநாயகனுக்கு போலிஸ் வேடம் துளிக்கூட பொருந்தவில்லை. கதாநாயகன் கதாநாயகி, காமெடியன் என்று எல்லோருமே போலிஸ் (கூர்க்காக்கள்). 

நாளடைவில் சிவன் செய்வது தவறு என்று சக்திக்கு தெரிய வருகிறது (அது வரையில் அவருக்கு வாயில் வைத்தாலும் கடிக்கத்தெரியாதாம்).சிவாவை சக்தி எப்படி திருத்துகிறார்,உண்மையான வில்லன் யாரு என்று அடையாளம் தெரிந்து கடைசியில் அவரைத்தூக்குகிறார்கள்.

படத்தில் லாஜிக்  என்று எதிர்ப்பார்ப்பவர்கள் இந்த படத்திற்கெல்லாம் வாராதீர்கள். அப்பப்போ அடித்துக்கொள்வார்கள். குத்துவார்கள், தூக்குவார்கள் அதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. அப்பப்போ ஹீரோ காஜல் அகர்வாலை பார்த்து ஜொள்ளுவிடுவார். தலைவா போலவே இதிலும் கதாநாயகி ஒரு காமெடி போலிஸ் பீசு.

காஜல் அகர்வாலை எவ்வளவு மோசமாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக காண்பிக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். விஜய் படத்தில்இசையும் நடனமும் நன்றாக இருக்குமென்றுபடம் பார்க்கும் கூட்டம் இந்தப் படத்தில் ஒவ்வொரு பாட்டிலும் சட்டசபையின் எதிர் கட்சிகள் போல கூண்டோடு வெளியேறினார்கள். ஈமானின் இசை கர்ண கடூரம்.

மோகன்லாலை இன்னும் நன்றாக உபயோகப்படுத்தி இருக்கலாம். விஜய் அவருக்கு தகுந்த லவ்வர் பாய் வேடங்களில் நடிப்பது அவருக்கும் நாட்டிற்கும்?!!! நல்லது.

அதிரடி மாஸ் படங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலசமயம் க்ளிக்  ஆனது, அவரே தனது போக்கை பின்னாளில் மாற்றிக்கொண்டார். நேசன் போன்றவர்கள் இதை உணர்ந்து திரைக்கதை அமைத்தால் தயாரிப்பாளர்கள் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.

ஜில்லா வேலை வெட்டியே இல்லையென்றால் மூன்று மணிநேரம் உட்கார பொறுமை இருந்தால் பார்க்கலாம்.



Tuesday 7 January 2014

கலக்கல் காக்டெயில்-134

வீட்டணியில் கூட்டணி

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு எல்லா கட்சிகளும் இப்போது செயற்குழு, பொதுக்குழு என்று கூட்டங்களைக் கூட்டி கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்களும் தற்பொழுது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மின்வெட்டு, தல தளபதி போன்ற நாட்டின் அத்தியாவசிய தேவை செய்திகளை ஓரங்கட்டி கூட்டணி பற்றி  செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சி யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டி என்று அறிவித்துவிட்டு கூட்டணி நாடகங்களை வேடிக்கை பார்க்கிறது. பிரதான எதிர் கட்சியோ எங்கே அதிகம் கிடைக்கும் என்று எல்லோரிடமும் பேச்சு வார்த்தை நடத்துகிறது. சாதியக் கட்சியோ இரண்டு கழகங்களிடமும் கூட்டனி இல்லை, அந்தாள் வந்த நான் வரமாட்டேன் என்று தனித்து விடப்படுகிறது.

ஐயா கட்சியோ இருக்கிற ஒரு கட்சியையும் கழற்றி விட்டு கூட்டணிக்கு ஆளில்லாமல் இருக்கிறது. போததற்கு சொந்தங்களுக்குள் அடிதடி வேறு. இப்படியே போனால் குடும்பத்தில் உள்ளவர்களே ஒவ்வொரு அணியாகப் பிரிந்து பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பொங்கல் ரிலீஸ் 

பொங்கல் ரிலீசுக்கு வரவிருக்கும் படங்களில் இரண்டு நடிகர் ரசிகர்களுக்குமிடையே பேனர் கட்அவுட்டுகள் வைப்பதில் அடிதடி என்பதால் காவல் துறை அதற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதைக் கண்டு இரண்டு நடிகர்களுமே கலக்கத்தில் உள்ளனராம். காவல்துறை இது தான் சமயம் என்று எல்லா கட்டவுட்டுகள், சுவரொட்டிகளுக்கு தடை விதித்தால் நல்லது. இப்பொழுது இந்த பிளக்ஸ் போர்டுகள், சுவரொட்டிகள், கட்டவுட்டுகள் என்று தெருக்குத் தெரு எழவு, பூப்பெய்தியது என்று எல்லாவற்றுக்குக்கும் போஸ்டர் அடித்து அலம்புகிறார்கள்.

பொங்கல் ரிலீஸ் வேளையில் எந்தப் படம் வரும் எது வராது என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

ரசித்த கவிதை 

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........


கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர்
கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர்
நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும்
நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர்

வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார்
வழித்துணை யாருமே வந்திட மாட்டார்
வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும்
வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார்

கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர்
கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர்
பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும்
பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர்

ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார்
ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார்
ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில்
ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார்

கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால்
கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால்
வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம்
வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார்

இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து
முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே
முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர்
                                                                
                                             நன்றி: கவியாழி கண்ணதாசன்
ஜொள்ளு 


 


Friday 3 January 2014

கேஜ்ரிவால்ங்ணா.............நான் தலைவாங்ணா.......

டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் ஆம் ஆத்மி கட்சியின் மௌசு கூடிப் போயுள்ளது. கட்சியில் பல பேர் விரும்பி இணைந்துள்ளதாகவும், கட்சிக்கு நிதி கோடி கோடியாக கொட்டுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கேஜ்ரிவாலும் தமிழ் நாட்டில் கட்சி தொடங்கி அதை நிர்வகிக்க ஒரு நல்ல  பிரபலமான ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறாராம். தமிழ்நாட்டில் அந்தக் கட்சிக்கு தலைமை வகிக்க நடிகர்களிடையே கடும் போட்டி நிலவுகிறதாம். தல, தளபதி, புரட்சித்தளபதி, புண்ணாக்கு தளபதி, லிட்டில் ஸ்டார், கட்டில் ஸ்டார்  என்று எல்லா நடிகர்களும் டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்திற்கு படையெடுக்கப் போகிறார்களாம்.

அப்படிப் படையெடுத்தால் எப்படி இருக்கும்.

முதலில் இளைய தலவலி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நுழைய எத்தனிக்கிறார். அவரை செக்யூரிட்டி தடுத்து நிறுத்த.

அண்ணா அண்ணா வுடுங்ணா..... கேஜ்ரிவால்ங்ணா.......... பார்க்கனுங்ணா.

அரே க்யா போல்தா ஹை..........

அண்ணா அண்ணா வுடுங்ணா.........

செக்யூரிட்டி அசந்து இருக்கும் பொழுது பூமிய பிளந்து கொண்டு நுழைந்து கேஜ்ரிவால் முன் ஆஜராகிறார்.

அண்ணா வணக்கமுங்ணா
சாங் ஒன்னு கேளுங்கணா
நான் ஒரளற ஓரளறங்ணா.................

கேஜ்ரிவால்: யோவ் இன்னாமென் உனுக்கு இன்னாவேணம்.

கேஜ்ரிவாளுங்ணா உங்க கட்சிக்கு தமிழ்நாட்டுல நான் தலைவர் ஆகிடுறேங்ணா, எங்க நைனா பொருளாளர்ங்ணா, எங்க அம்மா மகளிரணிங்ணா. போன முறை பிறந்த நாள் கொண்டாட விடாம அம்மா ஆப்படிசிடுச்சிங்ணா, அதுக்கு வாங்கின தையல் மெசின், லேப்டாப் எல்லாம் அப்படியே இருக்குதுங்ணா, அத அப்படியே கட்சிக்கு கொடுக்கறேங்ணா. ஹசாரே தாத்தாக்கு கூட என்ன தெரியுங்ணா. ஒரு தபா அவரு உண்ணா விரதம் இருக்க சொல்ல நான் வந்தீங்ணா.

அப்படி போடு
அசத்திப் போடு
கும்பிடு போடு..........

அண்ணா நான் அணில் போல இருப்பேங்ணா.

கேஜ்ரிவால்: சரி மேன் அப்படி ஓரமா போயி நில்லு.

அடுத்து தல உள்ள வராரு............நடக்கிறாரு நடக்கிறாரு நடக்கிறாரு.......அது.....

ஹாய் கேஜ்ரிவால் அது .............யாரு மேன் இங்க தல தலன்னு கூப்ட்து........நான் பேஸ் மாட்டேன்..............அது................நான் நடிகன்..........அது..........அர்ஸ்யல் தெர்யாது............என்ன மெரட்டறாங்க.........வரசொல்லி கட்டாயப்படுத்தறாங்க.............நான் பேஸ்மாட்டேன்..........அது........கீப் இட் சிம்பிள்...........அது..........

கேஜ்ரிவால்: இவன் யாருயா தல.........நம்பில்கியே.......தமில்.......நல்லா பேசுவான்........ஓரமா போயி நில்............

அடுத்து புரட்சி தளபதி, விரலு, வாலு என்று ஒரு பெரிய கூட்டமே உள்ளே நுழையுது...........

கேஜ்ரிவால்: அம்பேல் விடு ஜூட்......................


Thursday 2 January 2014

F**K அஜால் குஜால் அர்த்தங்கள் (18++)

சில ஆங்கில வார்த்தைகளின் நதிமூலம் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால் அவை வழிமொழியாக வந்த விதம் ஆச்சர்யமாக உள்ளது.

ஆங்கிலத்தில் "POSH" என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வார்த்தை தோன்றிய விதம் இப்படித்தான்.

கிழக்கு ஆசிய நாடுகளை ஒருகாலத்தில் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் கடல் வழியாகத்தான் இங்கிலாந்திலிருந்து நம் நாடுகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

கப்பலில் தங்குவதற்கு உள்ள அறைகளில் பணக்காரர்கள் முதலில் நல்ல இடமாக பார்த்து தங்களுக்கு பதிவு செய்துவிடுவார்கள். கப்பலில் "PORT SIDE" "STAR BOARD SIDE" என்று இரு பக்கங்களையும் அழைப்பார்கள். அதாவது கப்பலின் மூக்கு "BOW" என்பது முன்புறம் "STERN" எனபது "PROPELLER" இருக்கும் பின்புறம். பின் புறத்திலிருந்து முன்புறத்தை நோக்கும் பொழுது இடது பக்கம் உள்ளது "PORT SIDE" வலது பக்கம் உள்ளது "STAR BOARD SIDE" .

இங்கிலாந்திலிருந்து  வரும் பொழுது "PORT SIDE" அறைகளையும், திரும்ப விடுமுறையில் வீட்டுக்கு செல்லும் பொழுது "STAR BOARD SIDE" அறைகளையும் நிறைய பணம் கொடுத்து புக் செய்து விடுவார்கள். ஏனெறால் அந்த அறைகளில் தங்கும் பொழுது தான்  பகல் நேரங்களில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும்.

PORT SIDE ONWARD STARBOARD SIDE HOME TRIP.

இதிலிருந்து தோன்றிய வார்த்தைதான் "POSH" பணக்காரர்களை குறிக்கும் சொல்.

அடுத்ததாக பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் உபயோகிக்கப்படும் நான்கெழுத்து வார்த்தை.

இந்த வார்த்தை கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியது. மேற்கத்திய நாடுகளில் ஜனத்தொகையை கட்டுப்படுத்த ஏதோ ஒரு அரசர் நாட்டில் தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அரசரின் ஒப்புதல் இருக்க வேண்டுமென்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதன் படி குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் மேஜிஸ்ட்ரேட்டிடம் ஒப்புதல் பெற்று பின்னர் மன்னரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.   அதாவது "FORNICATING UNDER  CONSENT OF THE KING", அவ்வாறு ஒப்புதல் பெற்ற காகிதத்தை  அந்த தம்பதிகள் வீட்டு வாசலில் ஒட்டி விட்டுதான் குஜால் வேலைகளை ஆரம்பிக்கலாம். அதிலிருந்து தோன்றியதுதான் இந்த அஜால் குஜால் நான்கெழுத்து  கெட்ட வார்த்தை.

அதனால்தான் அந்த காலத்து மன்னர்கள் மாறுவேடத்தில் "மிட்நைட் மசாலா" பார்க்க இரவில் நகர்வலம் வந்தார்களோ?


Wednesday 1 January 2014

கலக்கல் காக்டெயில் -133

2014

ஒரு வழியாக 2013ம் ஆண்டு முடிந்து 2014 தொடங்கிவிட்டது. போன ஆண்டை எல்லோரும் பின்பக்கமாக பார்த்து நடந்தவை, சிறந்த பத்து, பிறந்த பத்து, மொக்கை படங்கள், என்று இணையத்தில் பிரித்து மேய்ந்து விட்டார்கள். இனி வேறு மாதிரி தலைப்புகளை தேடவேண்டும்.

இனி இந்த ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக அமைய வேண்டுவோம்.

மலேசியா 

வேலை நிமித்தமாக மலேசியா சென்றபொழுது அங்கே வாழும் தமிழர்களின் நிலைமை அறிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் உள்ள அமைச்சர்களில் நிறைய தமிழர்கள் உள்ளனர். சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியன், இணை கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ கமலநாதன் என்று நிறைய தமிழ் அமைச்சர்கள் நன்றாகவே பணிபுரிவதாக சொல்கிறார்கள்.

உலகத்திலேயே மதக்கலவரம் இல்லாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது பெருமையளிக்கிறது. மசூதியும், மாரியம்மன் கோவிலும் அருகருகே உள்ளது. நம்நாட்டில் மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டு வருடா வருடம் விநாயக சதுர்த்தியன்றும், மிலாடி நபியன்றும் அடித்துக்கொள்கிறோம்.

கிளம்பிட்டாங்கையா

இங்கே போகமாட்டேன், அங்கே போகமாட்டேன், கடவுளோட கூட்டணி என்று பேசிக்கொண்டிருந்த கேப்டன் இப்பொழுது ஐயாவுடன் பேரம் பேசுவதாக செய்திகள் வருகின்றன. பத்தொன்பது சீட்டுகள் கேட்பதாகவும், ஐய்யா இல்லை அங்கே ஆறு, இங்கே ஒன்று என்று துண்டு போட்டு விரல் பிடிப்பதாக சொல்கிறார்கள்.

கலீனரும் நான் தனி, நீ தனி என்றவர் இப்பொழுது துண்டுக்கடியில் விரல் நீட்டுகிறார்.

சட்டுபுட்டுன்னு முடிங்கப்பு, அவனவனுக்கு வேறே வேலை இருக்குதில்ல.

சம்பள உயர்வு 

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அம்மா 7 விழுக்காடு சம்பள உயர்வு அறிவித்திருக்கிறார்கள்.

கரெக்டா சொன்ன நேரத்திற்கு பீசை பிடுங்குவதால் இந்த பரிசு போலும். இனி சரக்கு விலையேற அதிகவாய்ப்புகள் உண்டு.  குடிமகர்களே உஷாரா இருங்க.

ரசித்த கவிதை

இன்புற செய்யும் "எழுத்து " வலைத்தளம்

கவிதை மிக மெல்ல பிறந்து
உயிர் பெற்ற எழில் தமிழ் "எழுத்து "
போதிக்கும் உவமைகள் கூட
உரைசால் தெளிந்த பத்தினியாயிற்று

ஓங்கிற்றது சுழலும் உண்மை
யாதொன்றும் இனி இப்புவியில்
மூன்றில் ஒரு பங்காகிடும்
பொருந்தா பொய் புரட்டுகள்

காற்றும் ஒளிமிகு திங்களும்
தினமும் சகட்டு மேனிக்கு
சந்தனம் உதறிட்டு பவனி தரும்
தோழர் கவிதைகள்

தங்க தமிழ் மண்ணின்
பாரத தேச நெஞ்சமும்
பதற துடிக்க தேவையில்லை
பாதுகாக்கிறோம் பாரத தமிழை

வானக மாண்பினை காணற்கினிய
சின்னஞ்சிறு குடிலில் (வெப்சைட்டில்)
கோடி எழுத்துக்களை கொணர்ந்து
விந்தை வியக்க செய்வோம் ...
- ----------------------------------------------நெல்லை பாரதி


ஜொள்ளு


புத்தாண்டு கவிதை





நடந்தவை நடந்தாக இருக்க
நடப்பவை நல்லதாக அமைய
கொடுப்பதை சிறப்பாக செய்வோம்
கெடுப்பதை அறவே ஒழிப்போம்

அல்லவை தேய்ந்து அழியவும்
நல்லவை  நாளும் பெருகவும்
அன்பில் உலகம் விழிக்கவும்
பண்பில் சிறந்தே விளங்கவும்

மடமை நீங்க உழைப்போம்
கடமை சிறப்பே புரிவோம்
கனிந்து வரும் வருடம்
இனிதே இருக்க விழைவோம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.