Pages

Sunday 31 August 2014

டீ வித் முனியம்மா பார்ட்-19

இன்னா செல்வம் முனியம்மாவை கண்டோ.........

டேய் மீச இன்னா முனியம்மாவ கேட்டுன்னு கீற, பொயுதோட வந்து குந்திகினுகீறன் எனுக்கு மொதல்லோ ஒரு சைனா டீ போடுறா டோமரு....

இன்னா லிங்கம் சாரு முனிம்மா வராம ஒரே புளிப்பூத்துது.....

டேய்  இர்றா........தோ வருது பாரு

இன்னா செல்வம், லோகு, பாய், லிங்கம் எல்லாம் இங்கன குந்திகினுகீறிங்க கடைல வியாவாரம் இல்ல.......

நாடாரு எங்கடா?......... லோகு ஆளே காணோம்,

அவரு சரக்கு பிடிக்க காலில கோயம்பேடு போனவருதான், இன்னும் கடையாண்ட வரல. அது சரி முனிம்மா இன்னா நூசு போட்டுக்கிறான் பேப்பர்ல.....

சன் டீ.வி.க்கு ஆப்பு வக்குறாங்க போல.

ஐய இது இன்னா புது நூஸா கீது........

ஆமாம் பாய் அவனுங்க தானே கேபிள் டிவி அல்லாத்தையும் வலிச்சிகினு ஆட்டம் போட்டானுங்க.......இப்போ எல்லாம் அம்பேல்.

ரண்டு மாறனுங்களையும் பிடிச்சி உள்ளார போடுவானுங்க போல.

அதான் லிங்கம் சாரு பேப்பர்ல போட்டுக்கிறான். அந்த மலேசியா காரனுக்கு ஸ்பெக்ட்ரம் காண்ட்ராக்ட் கொடுக்க சொல்ல அவனுங்க கிட்ட சண் டிவியில அறுநூறு கோடிக்கு துட்டு வாங்கி ஆட்டைய போட்டுகிறாங்க போல. சி.பி.ஐ இப்போ முயுச்சிகினு கேசு போட்டு உள்ளார தள்ள போறாங்க.

தமியு நாட்ல துட்டு அடிச்சவங்க கேசெல்லாம் இப்ப வெளிய வருது, வரமாசம் வேற பெங்களூரு கோர்ட்டுல தீர்ப்பு சொல்லப்போறாங்க. இன்னா ஆவபோவுது முனிம்மா.

இன்னா ஆவும், ஒன்னியும் ஆவாது லிங்கம் சாரு. அப்பால கீய கோர்ட்டு, மேல கோர்ட்டுன்னு போயி அல்லாம் எஸ்கேப்பு தான்.

இன்னா விசயம் முனிம்மா கலீனறு கச்சில அல்லாம் போயி கேப்டன கண்டுக்குரானுங்க. அன்பழகன் போனாரு, அப்பால நெப்போலியன் போனாரு.

அதெல்லாம் தெரிஞ்ச விசயம்தானடா லோகு, அடுத்த தபா எலிக்ஸனுக்கு ரெடி ஆவுரானுங்கோ.

இன்னா முனிம்மா உள்ளாட்சி இடைத்தேர்தலுல கலீனறு போட்டி இல்லங்கறாரு.

அடபோடா லோகு, இவரு நின்னாலும் ஒன்னியம் புடுங்க முடியாது.

இன்னா முனிம்மா  வை.கோ கூட்டணி உட்டு கயிண்டுக்கப் போறாராமே.

அவரு இன்னா செய்வாரு பாய், சொம்மனான்காட்டியும் டகில் பாச்சா காமிக்குராறு, அவுரால யாருக்கு லாவம்?

முனிம்மா ஒரு நூசு கேட்டியா? நம்மூருல ஒரு ஜட்ஜூ ஊருக்கு போயிருக்க சொல்ல அவரு வூட்டுலயே முப்பது பவுனு நகைய எவனோ லவுட்டிகிறான்.

அம்மா ஆச்சில கொள்ளக்காரனுங்க எல்லாம் ஆந்திரா பக்கம் ஜகா வாங்கிக்கினானுங்க அம்மா சொல்லிச்சு, இன்னும் இங்கதான் கீறானுங்களா?

முனிம்மா ஐசு பக்கிட்டு போட்டியாமே இன்னா விசயம் ஊரே பேசிக்கிதே,

டேய் பயம் எல்லாம் உன் மேட்டருதாண்டா, ஏதோ ஒரு நோய் கீதாம் அதுக்கு உதவி செய்ய துட்டு கேட்ட எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சு கீறான், அத்த வச்சிக்கினு நம்மூரு நடிகைங்க அம்மணம்மா நின்னுகினு ஐசு தண்ணி ஊத்துதுங்க, இன்னாத்த சொல்ல.

முனிம்மா நூஸ் பேப்பர இப்பால தல்லு, இன்னா படம் போட்டுகிரானுங்க.........

நடுப்பக்கத்துல பாருடா செல்வம்.





  

Friday 29 August 2014

களிமண்ணு கணபதியே-கவிதை

களிமண்ணால் செய்திடுவோம் கணபதியே
கண்கள் மூடி கும்பிடுவோம் கணபதியே
குடையொன்று வைத்திடுவோம் கணபதியே 
கொழுக்கட்டை படைத்திடுவோம் கணபதியே 
கடலை சுண்டல் அளித்திடுவோம் கணபதியே 
கற்பூரம் காட்டிடுவோம் கணபதியே 

கரிய முகக் கடவுளான கணபதியே 
கருணையுடன் கேளும் ஐயா கணபதியே
கட்டைவண்டியில் ஏற்றி உன்னை கணபதியே 
கடலில் கொண்டு போடப் போறோம் கணபதியே
கலகங்கள் வராமல் இருக்க கணபதியே 
காக்கிசட்டை துணையிருப்பார் கணபதியே  









Thursday 28 August 2014

கலக்கல் காக்டெயில்-154

நெருங்கும் க்ளைமாக்ஸ் 

சொத்துக் குவிப்பு வழக்கு முடியும் தருவாயில் உள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் முடிவு ஏறத்தாழ எல்லோராலும் யூகிக்க முடிந்ததே. 

இறுதி வாதம் முடியவேண்டிய தருவாயில் வழக்கறிஞர் கோர்ட்டுக்கு வராததால் நீதிபதி கோபமடைந்து ஐந்து மணிக்குள் வரவில்லை என்றால் தீர்ப்பு தேதியை அறிவித்து விடுவேன் என்று சொல்லியும் இறுதி வாதம் முடிந்ததாக தகவலில்லை.

இந்த மாதிரி விஷயமெல்லாம் இங்கு மிக சாதாரணம். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கு பலவிதமாக இழுத்தடிக்கப்பட்டதை நாடு அறியும்.

சாமானியனின் கேள்வி எல்லாம் இதே போன்று வழக்கை இழுத்தடிப்பது ஒரு சாதாரண குடிமகனால் முடியுமா? என்பதே.

மூன்று சம்மன் பெற்று கோர்ட்டுக்கு வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டியாக தீர்ப்பு வழங்க சட்டத்தில் அனுமதியுண்டு.

அது ஏன் இது போன்ற வழக்குகளில் உபயோகப்படுத்தவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக்குறி?

கேப்டனின் நிலை 

கேப்டன் ஆரம்பத்திலிருந்தே கடவுளிடமும் மக்களுடனும் தான் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே எல்லா கூட்டணிகளிலும் ஒரு வலம் வந்து விட்டார். தற்பொழுது கலைஞரின் தூதுவர் ஒருவர் கேப்டனை சந்தித்து ஏதோ பேச்சு வார்த்தைகள் நடத்தியதாக செய்தி.

என்னதான் கேப்டனை எல்லோரும் ஓடி ஓடி ஓட்டினாலும் தமிழ் நாட்டு அரசியலில் இன்னும் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகவே தெரிகிறது.

கேப்டன் இன்னும் சிறிது காலத்திற்கு கட்சியை ஓட்டலாம் கவலை இல்லை.

ரசித்த கவிதை 

சல்லடை நினைவுகள் 



வேர்களுக்குள் வேர்த்தபடி
என்னுள் கிளைவிட
தோல்கீறி
முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்.

சில....
நிழல் பரப்பும்
எலுமிச்சை வாச வேர்களின்
நடுவில்தான்
உனது வீடும்
எனது வீடுமெனச் சொல்லி...

வானம் தாண்டிய
ஒரு பெருவெளியில்தான்
முந்திய நம் குடிசை
இருந்ததாக
அன்றைய ஊடல் பொழுதில்
எழுதியும் வைத்திருந்தாய்.

எப்போதெனக் கேட்டபடி
உன் தோள் சாய
முன்பொரு காலமென
நீ...சொல்ல
நான்...சிணுங்க
மெல்ல என்....
கொலுசின் மணிகளைக்
கழற்றிக் கொண்டிருந்தாய்.

பூக்களில்தான்
உன் குடியிருப்போ
தேனீக்களின்
தோழியோ நீ
இறகுகளை
தேவதைகளுக்குப்
பரிசளிப்பாயோவென...

வான் பறக்கும்
பறவைகளாய் மாறி
கண் தரும் காமக்களியில்
உன்னோடு களிப்பதில்தான்
எத்தனை அற்புதம் !!!

நன்றி: குழந்தைநிலா ஹேமா !


ஜொள்ளு



Wednesday 27 August 2014

நூறு நாட்கள் மோடி ஆட்சி -கவிதை

நூறு நாட்கள் ஆண்ட

 மோடி செய்த சாதனை 

கூறு என்று கேட்டால்

 தேடி ஒன்றும் பயனில்லை

வேறு ஒன்றும்  புதிதாக 

 நாடி நம்மிடம் வரவில்லை 

மாற்று ஆட்சிப் பெருமையை  
  
 பாடிப்  பசி ஆறுவோம்.



Tuesday 26 August 2014

இருக்கு ஆனா இல்ல.

ரசித்த கீச்சுகள்

அஞ்சான் படத்துல சூரி கார வச்சி இரண்டு தடவை முன்னாடியும் பின்னாடியும் இடிப்பாரு அத விளம்பரப்படுத்திட்டானுக "பம்பர் ஹிட்"--------விகடகவி

தன்னை ஃபிகராக காட்டிக்கொள்ளும் ஆண்ட்டிக்கு எப்படிப் புரியவைப்பது.....ஆண்ட்டிதான் உங்கள் சிறப்பென்று?-------------நவீன்குமார்

பிக்கினியில் நடிக்கிறார் திரிஷா # ஏதோ இருக்கிற மாதிரி தெரியுது, இல்லாத மாதிரியும் தெரியுது. இருக்கு ஆனா இல்ல------------சுபாஷ்

தலைவரே சரவணபவன்லேர்ந்து போன் வந்துச்சு 3 மாசமா ஆர்டரே பண்ணலையாம் என்ன ஆச்சுன்னு கேட்டாங்க # ஏம்பா சண்முகம் டெசோ கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு---------நாட்டி நாரதர் 

இன்று ரஜினி பக்தர் ஒருவரை சந்தித்தேன்! அமிர்தலிங்கம் எனும் தன் பெயரை அமிர்தலிங்கா என கெசட்டில் மாற்றிக்கொண்டு விட்டார்# ரஜினியின் பலம் இவர்களே------------ட்விட்டர் MGR.

"அமைதிப்படை" படத்தின் அமாவாசை கேரக்டரை அப்படியே பிரதிபலிக்கிறார் நரேந்திர மோடி........மணிவண்ணன் சார்......நீங்க ஒரு தீர்க்கதரிசி----------சரவணன்.

கையில் டீ கோப்பை வைத்திருக்கும் பெண் அதிர்ச்சி தகவலைக் கேட்டால் அதை உடனே கீழே போடவேண்டும் # சினிமாவில்------------மண்டகசாயம்.

பொண்ணு சமந்தா மாதிரி இருக்கும். ஐய்யய்யோ டவுசரோட சுத்துமா? இது ஆவறதில்லைங்க-----------சி.பி. செந்தில்குமார்.

ஹேர் ஸ்ட்ரைனிங் செய்து வெண்மை நிற லெக்கின்ஸ் அணிந்த பெண்களை காணும்போது பழைய ஜகன்மோகினி  பிசாசை நேரில் பார்த்த உக்கிர உணர்வு.-------தமிழரசன்.

இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியா நடமாடலாம்-மம்முட்டி # இனி எண்டே ராகம் தண்டி, எண்டே CM உம்மன் சாண்டி, எண்டே நடனம் கதக்களி, எண்டே லவ்வர் ஓமனே.-----------கருத்து கந்தன் 

இப்பல்லாம் பாட்டுல ஹீரோயின் கொஞ்சம் லோநெக் டிரஸ் போட்டுருந்தா அந்த இடத்துல கலர் அடிச்சிரானுங்க# நீங்க மட்டும் நல்லா பாருங்கடா------------உளவாளி.

விநாயகர் சதுர்த்தி டொனேசன் கேட்டு ஒரு குரூப்பு! தட் " கூழு குடிக்க வேணா வர்றோம்; குடுக்கறதுக்குலாம் ஒண்ணுமில்ல.."மொமன்ட்டுகள்"-----------குணா யோகசெல்வன். 

Monday 25 August 2014

டீ வித் முனியம்மா ----பார்ட் 18

டேய் மீச இன்னாடா காலில கடில இம்மா கூட்டம், யோவ் ஒத்துயா.

அட இன்னா முனிம்மா காலில வரசொல்ல பேஜார் செய்யுற, தா அங்கதான் இடம் கீதே அங்க குந்து.

மீச இன்னாடா பெசலு இட்லி வடகறியா, ஐயே நேத்து சுட்ட மசால்வட போனியாவலையா?

ஐயே முனிம்மா உனுக்கு இன்னா வேணும் அத்த சொல்லு காலிலேய மீசைய ஓட்டிகினு கீற.

டேய் செல்வம் வாடா............

இன்னா நூசு இன்னிக்கி முனிம்மா.........

இன்னா பாய் ஒன்நியம் பெசலு இல்ல........

கேப்டனு கடைய மூடனும் சொல்லிகிறாரு.

ஆமாண்டா அவர சரக்கு பார்ட்டின்னு அல்லாரும் கலாய்ச்சினு கீறானுங்க, அதான் கடிய மூடிட்டா அவர யாரும் ஓட்ட முடியாதில்ல.........

இன்னா தலிவரு அயகிரிய கட்சில சேத்துக்குவாறு போல.

ஆமாம் பாய் இத பெரிய நூசு போல கேக்க வந்துட்ட..........அவருக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல........இப்போ இருக்குற நெலமையில இன்னா செய்யலாமுன்னு குத்த வச்சி குமுறின்னு கீறாரு. குடும்பத்துல கொயப்பம் வேணான்னு பாக்குறாரு.

அப்போ முனிமா கண்ணு கடிச்சுது, கயுத்த அறுக்குதுன்னு அறிக்கை வுடுவாறாங்காட்டியும்.

ஆமா லோகு சொம்மனான்காட்டியும் குடும்ப அரசியல் கலக்கினு கீறாங்க.

அம்மா மேட்டரு இன்னா?

அந்தம்மாவே உ.பி.ச கொடுத்த ஒன்னரை கோடி ரூவா கடன பத்தி யோசிச்சிக்கினு கீது.

ஐயே இது இன்னா புது மேட்டரு.

இன்ன லிங்கம் சார் நாட்டு நடப்பு தெரியாம கீற. அந்தம்மா காளான் பயிரிட்டு இந்தமாக்கு ஒன்னரை கோடி ரூவா கடனா கொடுத்துகிதுன்னு வக்கீலு சொல்லிகிறாரு.

காளான் போட்டா இம்மா லாவம் வருமா?

வந்துகிதுன்னு சொல்லிக்கிறாங்க பாய்.

அம்மா சொத்து கணக்கா பார்த்தா கேசுல போட்டதவுட ஜாஸ்தியாகும் போல.

கர்நாடகா இடை தேர்தலுல காங்கிரஸ் ரெண்டு சீட்டு புடிச்சிகினு கீறாங்க.

ஆமாண்டா செல்வம் இன்னொரு சீட்டுல எடியூரப்பா மவன் கெலிச்சுகீரான்.

அங்கயும் குடும்ப அரசியலா?

இன்னா முனியம்மா ரஜனி அரசியலுக்கு வரப்போறாராமே.

இன்னா பாய் அவரு மைசூருல வச்சி சொன்னத சொம்மா ஊதி பெருசாக்கி ஒரு கூட்டம் அலையுது.

அவருதான் அப்பால சொன்னாரே, இப்போ எனக்கு தேவை நிம்மதி, பதவி இல்லன்னு சொல்லி மேட்டர கிலோஸ் பண்ணிட்டாரு.

அப்பால கத்தி மேட்டரு இன்னா ஆவுது?

அது எவனோ ராஜபக்ஷே கைக்கூலி எடுக்கிற படமாம், அது வரக்கூடாது, அவன் போட்ட காச திருப்பி கொடு. இல்ல நடக்குறதே வேறன்னு ஒரு கூட்டம் கொடி புடிச்சுகினு கீது.

இன்னா ஆவுதுன்னு பாக்கலாம்.

சரி முனிம்மா இன்னா படம் போட்டுக்கிறான். டேய் செல்வம் உனுக்கு ரெண்டு படம் போட்டுக்கிறான் பாரு.









Friday 15 August 2014

இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்

வெள்ளையன் அன்றே கொடுத்திட்டான்
சுதந்திரம் என்றே களித்திட்டோம்
கொள்ளையர் கையில் அகப்பட்டோம்
தந்திர வலையில் விழுந்திட்டோம்

பொது நலமென்றே உரைத்திடுவார்
பொய்கள் பல புனைந்திடுவார்
சுயநலம் ஒன்றே கொண்டிடுவார்-(சுதந்திர)
கைகளை இங்கே கட்டிடுவார்
காடுகள் எல்லாம் அழித்திடுவார்
கனிம வளங்களை விற்றிடுவார்
ஏடுகள் சொல்வது பொய்யென்பார்
இனிதே மறக்க செய்திடுவார்
ஜாதிகள் இங்கே இல்லை என்பார்
சமத்துவமே கொள்கை என்பார்
நீதி நெறிகளை மறந்திடுவார்
மிக ஜாதி அரசியலே செய்திடுவார்
ஏழ்மையை ஒழிப்போம் என்பார்
எதிலும்  வளர்ச்சி என்பார்
ஊழலை உரமிட்டு வளர்ப்பார்
அதிலும் முதலிலே நிற்பார்

வெள்ளையன் அன்றே கொடுத்ததனை
முதலாம் சுதந்திரம் என்றிடுவோம்
கொள்ளையர் பிடியில் விடுபட்டு
இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்.





Thursday 14 August 2014

கலக்கல் காக்டெயில்-153

கட்ஜும் கருணாநிதியும் 

உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கும் கலைஞருக்கும் என்ன வாய்க்கா வரப்பு பிரச்சினை என்று தெரியவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி நியமன விஷயத்தில் பிரதமரை கலைஞர் மிரட்டினார் என்று தொடங்கி அடுக்கடுக்காக அவர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்.

கலைஞரின் குடும்ப  சொத்து விவரங்களைக் கேளுங்கள் என்றும் "அம்மா குட், ஐயா பேட்" என்ற ரேஞ்சில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலைஞரை தாக்கிக்கொண்டிருக்கிறார்.

அவர்களுக்குள் கொடுக்க வாங்கல், வாய்க்கா வரப்பு பிரச்சினை இருக்குமோ?

பாரத் ரத்னா

கிரிகெட் வீரர் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது என்ற பேச்சு அடிபட ஆரம்பித்தவுடனே தொடங்கியது இந்த விருதின் தரம் பற்றிய சர்ச்சை. இந்த முறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வாஜ்பாய் என்று பல பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்க அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.  மகாராஷ்டிர காங்கிரஸ் வேறு இரண்டு பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழகத்திலிருந்து யாரோ? தெரியவில்லை.

வர வர பாரத் ரத்னா "விஜய் டீ.வி அவார்ட்ஸ்" ரேஞ்சுக்கு வந்து விட்டது.

கொடிபிடிக்காத ஒரே விலையேற்றம்

சரக்கு விலை ஏறுகிறதாம், மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்த விலையேற்றம் ஒன்றிற்கு மட்டும்தான்  யாரும் போராட்டமோ கொடியோ பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் குடிகாரர்களுக்கென்று ஒரு சங்கம், பின்னர் கட்சி என்று வரும் நாள் வெகு தூராத்தில் இல்லை.


ரசித்த கவிதை

பார்வை 

"வயது முற்றிய
கொலுசுக் கால்களின்
உஷ்ண உரசலை
அதற்கும் மீறிய
அந்தரங்க வலிகளை
சக ஆணின் சபலப் பார்வையால்
வேகமாய்ச் சுற்றிய
விரல்களின் கோபத்தை
சிரிப்புடன் சிதறிய
துணிகளின் துணுக்கை
என்
பனிகொட்டும் இரவில்
எல்லாம் யோசித்தபடி
விழித்துக்கொண்டிருந்தது
ஏற்றுமதி நிறுவனத்தின்
தையல் இயந்திரம்"

-----முத்துக்குமார்

ரசித்த கீச்சுகள்

புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் இறங்குகிறார் விஜயகாந்த் - செய்தி.#ஆமா இவரு முதுமலை காட்டுக்கு போன யானை பாரு..புத்துணர்ச்சியா வர்றாரு..!!--------சுபாஷ் 

என்னுடைய முதல் பிள்ளை, முரசொலி -கலைஞர் கருணாநிதி # மத்த புள்ளைங்களால மனக்கஷ்டம், மூத்த புள்ளையால பணக்கஷ்டம் -//----------கருத்து கந்தன்.

டாஸ்மாக்கினால் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு குறைந்துவிட்டது.- நத்தம்விசுவநாதன் #ஆமாம், கற்ப்பழிப்பு சாவுதான் அதிகமாகுது.----------தில்லு தொர.

நான் என்ன அவள மாதிரியா, ஓரே ஒருத்தன தான் வச்சிருக்கேன்,தெருச்சண்டையில் ஒரு குண்டம்மா # இதுல என்னம்மா பெரும----------ப்ரியா

ஜொள்ளு





Wednesday 13 August 2014

குடி உயரக் கோன் உயரும்!!!


தமிழா 
உனக்கென்ன 
தலைக்கு மேலா 
வேலை?
ஆயிரம் ஆயிரம் 
இலவசங்கள்
சரக்கை கொடுத்து, 
கொறிக்க  
சைடு டிஷும் கொடுத்து
கலந்தடிக்க தண்ணியும் 
இன்ன பிற பொருளையும் 
இறைத்து 
தாலிக்கு தங்கம் 
வீட்டிற்கு மனை 
பிழைப்பிற்கு ஆடு, மாடு,
கோழி 
உழைப்பினி 
தேவையில்லை.

வருத்தரைக்க மசாலா 
வறுத்தெடுக்க எண்ணெய்
உவர்ப்பிற்கு 
மலிவு விலையில் 
உப்பு.

களித்திருக்க 
தொலைகாட்சி பெட்டி
நரம்புகளின் நாட்டியம் 
வரம்பு மீற
விளக்கணைக்க மின்வெட்டு 
சரசத்திற்கு கட்டில் 
தலையணை மெத்தை
பிறக்கும் சிசுவிற்கு 
பதினாறு பொருட்கள் 
நிறைந்த பெட்டகம்
இனி என்ன
பிணி வந்தால் 
பிழைத்து  எழ 
மாற்றாக
மலிவு விலையில் 
மருந்து.

அம்மா ஆட்சியில் 
சும்மாவே கிடைக்கும்
தமிழா இனி நீ 
தனியாக உழைக்கத் 
தேவையில்லை

நீர் உயர 
நெல் உயரும்
நெல் உயரக் 
கோன் உயரும் 
கோன் உயரக் 
குடி உயரும்-
என்று இயம்பியவளோ 
இன்றிருந்தால் -இங்கு 
குடி உயரக் 
கோன் உயரும்
நீரும் நெல்லும் 
தாமாக 
உயர்ந்து நிற்கும்
என்றே எடுத்துரைப்பாள்.

ஆதலினால் தமிழா நீ 
வைகறையில் துயிலெழுந்து 
கைக் காசில் 
சரக்கடித்து 
விளக்கணைத்து 
களித்திருப்பாய்.













Tuesday 12 August 2014

தெரிந்து கொள்வோம்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்"

என்றார் பாரதி.  நாம் பேசும் தமிழில் எத்தனையோ வேற்று சொற்கள் கலந்துவிட்டன. இன்றைய தமிழ் இன்னும் இனிக்கிறதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி?

உண்மையில் நம் தமிழ் மொழி ஒரு சொற்களஞ்சியம். எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் உள்ளன, ஆனால் பிற மொழிக் கலப்பில்  அவை வழக்கொழிந்து போய் விட்டன.

பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை
கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை
பற்றும் புலமையும் அற்றவருக்குத் தெரியுமா
நற்றமிழ் பெருமை

என்கிறார் தேவநேயப் பாவாணர்

மேலும்

எளிதாகப் பேசுமொழி தமிழ் பாப்பா - மூச்
சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா
பேசு பாப்பா - தமிழ் பேசு பாப்பா
 என்கிறார்

அந்த வகையில் சில நல்ல தமிழ் சொற்களை வழக்கில் கொண்டு வருவோம்

இசையில் பல்லவி, அனுபல்லவி, சரணம்  போன்ற சொற்களின்  தமிழ் சொற்களை தெரிந்து கொள்வோம்.

பல்லவி--இதை தமிழ் சொல் என்கிறார் தேவநேயப் பாவாணர்
அனுபல்லவி-துனைப்பல்லவி
சரணம்-உருவடி
தொகையறா (உருது சொல்)-உரைப்பாட்டு

தாளங்களுக்கு

ஏகம்-ஒற்றை
ஆதி-முன்னை
ரூபகம்-ஈரொற்று
சம்பை-மூவொற்று
திரிபுடை-மூப்புடை
சாப்பு- இனையொற்று

கோள்களின் தமிழ் பெயர்கள்

சூரியன்-திவாகரன்
சந்திரன்-சோமன்
செவ்வாய்-நிலமகன்
புதன்-புலவன்
குரு-சீலன்
சுக்கிரன்-கங்கன்
சனி-முதுமகன், காரி
ராகு-கருநாகன்
கேது-செந்நாகன்

தமிழில் பேசுவோம்.........


Monday 11 August 2014

டீ வித் முனியம்மா----------பார்ட் 17

டேய் செல்வம் இன்னாடா கடிய தொறக்காம இங்க வந்து குந்திகிட்ட.....

அட போ, முனியம்மா நாட்டு நடப்பு ஒன்நியம் புரில, அல்லா வெலவாசியும்  ஏறிக்கினு கீது, இன்னாத்த கடைய தொறந்து இன்னாத்த வியாவாரம் செய்யுறது.........

அடே மீச செல்வத்துக்கு ரண்டு மசால்வடையும் டீயும் கொடுரா..........

டேய் வெலவாசிய பத்தி நீயேண்டா பெஜாராவுற வாங்குற ஜனம் தானே மெர்சலாவனும்..........

இன்னா முனியமா சட்டசபையில இன்னா நூசு.........

அது இன்னா பாய் வயக்கம்போல அம்மா பேசும் அவங்க அல்லக்கைங்க பெஞ்சு தட்டுவானுங்க........

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்துல, தமியுநாடு அமைதிப்பூங்காவா கீதுன்னு அம்மா சொல்றாங்க, அல்லாம் பெஞ்சு தட்டுதுங்க.......

அத்த வுடு லிங்கம் சார், அதுக்குதான் கலீனறு அறிக்கை வுட்டுகிறாரே, நாட்டுல நடக்குற  கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு லிஸ்டு கொடுத்துகிராறு........

அஹான் தமியு பேப்பரு ஒன்னு விடாமா படிப்பாராங்காட்டியும்...........

இன்னா முனியம்மா சினிமாகாரனுங்க ராஜபக்ஷேவ எதித்து போராட்டம் பண்ணிகிரானுங்க........

அது வயக்கமா செய்யுறதுதான், அவனுகதான் அம்மாவ பத்தி காதல் கடிதமுன்னு கட்டுரை எழுதினத்துக்கு மன்னிப்பு கேட்டுட்டானுன்களே......அப்பாலிகா செத்த பாம்ப அடிச்சிகினு, நாங்களும் அம்மாவுக்கு சொம்படிப்போமுன்னு காடுரானுங்க.

சீமான புடிச்சிகிரானுங்க, பத்திரிகைக்கரனுங்க......இன்னாவோ லைக்கா மொபைலாமே அத்த ராஜபக்ஷே மச்சான்தான் வச்சிகிரானாம், அவன் தமியு நாட்டுல சினிமாகாரனுங்கள வச்சி படம் எடுக்குறானாம்.

டேய் லோகு அந்தாளு ஒரு காலி டப்பாசு.................சொம்மனான்காட்டியும் அவனுக்கு கொம்பு சீவி விடுறானுங்க.

ஸ்டாலினு வலது கைய தூக்கிட்டானுங்க...........

டேய் அது வயக்கமா நடக்குற குடும்ப கூத்துதான்...........அயகிரியகூட கச்சில சேக்கப்போறராமே.

ஆமாம் பாய், அதான் நமக்கு தெரியுமே, கண்ணு புளிச்சுது, காது அடைக்குதுன்னு அறிக்கை விடுவாரு பாரு.

பெங்களூரு கேசுல இன்னா நடக்குது...........

சசிகலா அம்மா வக்கீலு பேசிகினு கீறாரு..........அதுவே அம்மாவுக்கு கடன் கொடுத்துகீதாம்..........ஒன்னரை கோடி ரூவா வரைக்கும் துட்டு கொடுத்துகீதாம்.........

அதுக்கு எங்க அம்மாம் துட்டு கெடிச்சுது............

அது வெவசாயம் செஞ்சு கடன் கொடுத்துதான்...........நல்லா கொடுக்கிறாங்க டீடைலு......அது வீடியோ கடத்தானே நடத்திச்சின்னு சொன்னானுங்க.....

இன்னா முனியம்மா "அம்மா பிராட் பேன்ட்" வருதாமே......லிங்கம்.

இன்னாது அம்மா அல்லாருக்கும் "தொளபுளா" பேண்ட்டு கொடுக்குதா தமாசா கீதே.......

அடேய் செல்வம் அது பேண்ட்டு இல்லடா "பிராட் பேன்ட்", கம்பீட்டரு விஷயம்....அத்த வச்சி நீ "யு டூபுல" பலான படம் பாக்குலாம்.......இன்னடா நாட்டு நடப்பு தெரியாதவனா கீற...உனுக்கு சைக்கிளு டூபே தெரியாது...

அது சரி முனியம்மா நமக்கு இன்னா கம்பீட்டர பத்தி தெரியும்........

அடப்போடா பேமானி இப்போ எங்க பூ வியாவாரமே கப்பீட்டருல செய்யுரானுங்க......

முனியம்மா எபோலா காய்ச்சல் ன்னு சொல்றானுங்களே ........இன்ன மேட்டரு.

லிங்கம் சாரு, அது ஆப்பிரிக்காவுல இருக்குறவனுக்கு வருதாம்........வருசா வருஷம் புச்சு புச்சா அரசியல் கச்சிங்க மாதிரி வந்துகினே கீது........பறவை காய்ச்ச்சல்னாங்க, பன்னி காய்ச்ச்சல்னாங்க இப்போ எபோலாவாம்.........இன்னா காய்ச்சலோ.............

அயே பயமாகீதே முனியம்மா?

அடப்போடா பொயுதன்னிக்கும் சரக்கடிக்கிற உனுக்கு ஒன்னியும் ஆவாது செல்வம்........

சரி பேப்பர கொடு முனியம்மா இன்னா படம் போட்டுக்கிறான் பாக்கலாம்.....















Monday 4 August 2014

கலக்கல் காக்டெயில்-152

சூரியன் மேற்கே உதித்து விட்டது.

இலங்கை பாதுகாப்பு இணைய தளத்தில்,  தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு மீனவர்கள் பிரச்சினை குறித்து எழுதும் கடிதங்களை விமர்சித்து "How meaningful are Jayalalitha's love letters to Modi" என்று தலைப்பிட்டு ஒரு தரக்குரைவான கட்டுரை வெளிவந்தது.

அதை எதிர்த்து தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களுமே கண்டனம் தெரிவித்தனர். இலங்கையின் இந்த தரக்குரைவான செயலை எதிர்த்து தி.மு.க தலைவர் முதலில் தன் கண்டனத்தை தெரிவித்தார். எல்லா கட்சித் தலைவர்களுமே இந்த விஷயத்தில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். தே.மு. தி. க மட்டும் இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரியது. தமிழகத்தில் முதன் முதலாக அனைத்துக் கட்சிகளும் இந்த  விஷயத்தில் ஒருமித்தக் கருத்தை தெரிவித்தன.

இந்த செயல் தமிழக மக்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி. தமிழர்கள் வஞ்சிக்கப்படும் எல்லாப் பிரச்சினைகளிலுமே இது போன்ற ஒற்றுமை மனப்பான்மையைக் கடைப் பிடித்தால் தமிழகம் செழித்து விளங்குமே.

நட்வர் சிங்க் சுயசரிதை 

நட்வர் சிங்க் சுயசரிதை எழுதி இந்திரா காலத்து ரகசியங்களையும், ராஜீவின் இலங்கை சொதப்பல்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். மேலும் சோனியா ஏன் பிரதமராகவில்லை என்று கூறியதன் மூலம் சோனியாவையும் சுயசரிதை எழுத தூண்டியிருக்கிறார். அந்தம்மா நானும் எழுதுவேன் என்று சொல்லியிருக்குது.

இதெல்லாம் ஏன் முன்னாடியே சொல்லவில்லை? என்ற நம் கேள்வி அர்த்தமற்றது. இவர்களெல்லாம் இப்படித்தான், ஆடி அடங்கும் பொழுது சுயசரிதை எழுதி தாங்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்துவார்கள்.

ராஜீவின் இலங்கைக் கொள்கை இவர் எழுதிதான் நமக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அப்பொழுது ராஜீவும் கூட இருந்த அவரது செயலர்களும் இலங்கை விஷயத்தில் எப்படி சொதப்பினார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

இன்னும் வேறு யாராவது காகிரசில் சுயசரிதை எழுதி சாக்கடையைக் கிளறி நாறடிக்க இருந்தால் இப்பவே செய்யுங்கப்பு..............எங்களுக்கும் போரடிக்குதில்ல.

நகைச்சுவை 



ரசித்த கவிதை

களவாடிய பொழுதுகள் (STOLEN HEART)

களவு கொடுத்தலும், களவாடுதலும்
வாடிக்கை தான் நமக்கு !!

களவுப்பொருளை பதுக்கும் இயல்போடு
விழி விளிம்பில் ஒளித்துவைப்பாய்
அந்தமந்திரப்புன்னகையை
மனத்திரையில் தீட்டி
தேடுவதாய் நானும்
தொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!

எத்தனையோ முறை
நீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!

நன்றி ------------------மைதிலி கஸ்தூரிரங்கன் 


ஜொள்ளு 



Saturday 2 August 2014

"வ" க்வாட்டர் கவிதை

எல்லாம் இன்பமயம் என்றே
நல்லோர் சொல் கேட்கிறது
கல்லாதோற்கும் கற்றவர்க்கும்
கையில் காசு இருக்கிறது
இருமலா என்று மருத்துவர் கேட்கின்
நிர்மலா வந்து நிற்கின்றாள்
கருமம் பிடித்த கடன்காரன்
வர்மம் காட்டி கேட்கின்றான்
பெண்களும் ஆண்களும் ஒன்றாகட்டும்
பேரின்பம் என்றே கொண்டாடட்டும்
மழைநாட்களில் சாமியார்
வாழ்வை நினைத்து நிற்கின்றார்
பப்படத்துக்காரி பார்வதி
அப்படித்தான் சொன்னாள்
"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் தூக்கம் வரும்
காத்து வராது"
பாரத் தலைவிரிக்கும் பன்னாடை
சோர இளநீர் சுமந்து நிற்கும்
எல்.ஐ.சி மேலே ஏறி
எகிறிக் குதி
சேட்டுக்கடை பீடா
சேர்த்தடிக்க சோடா
பாவிகள் நாடும் பிதாவே
ஆவிகள் சொல்......... ஆமென்
மனதை ஒரு வில்லாக்கி
அரை வெந்தயத்தை ரசமாக்கி
நக்கிக்குடிப்பது எக்காலம்
கற்க கசடற கற்ற பின்
விற்க நல்ல விலைக்கு
கற்றதனால் ஆய பயனென்கொல்
மற்றவளை கட்டி அனைக்காவிடின்
யாண்டு பலவாகியும் நரையில
என்று வினவுவீர் ஆயின்
மீண்டும் மீண்டும் வீ கேர்
டை அடித்தே வழுக்கை ஆனதே
கருப்பா நீ என்னை கலாய்ச்சி ஃபை
ஃபை  ஃ பை ஃபை வைஃபை
கனெக்ஷன் இல்லாமல்
கடுப்பேத்தி ஃபை
வெட்கத்தை துரத்தி
கழட்டி ஃ பை
வீடு பத்திகிச்சாம்
உள்ளே இருந்த பானுமதிக்கு
புடவை பத்திக்கிச்சாம்....
கைகூப்பி கேட்பாங்க ஓட்டு
அப்புறம் விடுவாங்க ஜூ.....ட்டு
அம்மா உணவகம்
அல்வாத்துண்டு
ஐயா கொடுத்த
அரை முழம் துண்டு
கோழி கொண்டை கொக்கு
கோலப் பீயை நக்கு
இந்திரன் தோட்டத்து முந்திரி
இருக்கையை விட்டு எந்திரி
மாங்கனிகள் தொட்டிலிலே
அழுகியதே அன்று
நாயாம் நாயாம்
தெரு நாயாம்
நங்கையும் நம்பியும்
நவுந்தாங்களாம்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
எச்சை சோறு போடுங்களேன்
தமிழை வளர்க்க
தரணி என்றும் தடி எடுத்த
தாத்தா தா.........த்..........தா
உ.......வ..........வே......... உ..........வ்.............வே









Friday 1 August 2014

பெரிதினும் பெரிது கேள்------ஒரு நிமிடக் கதை

சும்மா அங்கே போய் பே...ப்பேன்னு நிக்காதீங்க, சட்டு புட்டுன்னு கேளுங்க, வீடு கட்டுறேன் கடன் ஒரு முப்பது லட்சம் வேணும்னு கேளுங்க என்று சொன்னாள் நித்யா.

என்னடி நமக்கெதுக்கு முப்பது லட்சம்?, வீட முடிக்க நாலு லட்சம் இருந்தா போறுமே. ஏற்கெனவே தான் முக்கால் வீட்டை முடிச்சிட்டோமே. முப்பது லட்சத்தை எப்படி திரும்பக் கொடுக்கிறதாம்? என்றான் ராகவன்.

திரும்பக் கொடுக்கிறது பற்றி இப்ப என்ன கவலை?

இல்லை நித்யா, நமக்கு நாலு லட்சம் இருந்தா தரை போட்டு, பூச்சு வேலை முடிச்சு, வெள்ளையடிச்சு வர ஐப்பசி மாசமே கிருகப்பிரவேசம் செய்திடலாம். இந்த வீட்டுக்காரனோட மாரடிச்சு மாளல, வருஷா  வருஷம் வாடகை ஏத்திடுறான், கட்டுபடியாக மாட்டேங்குது. அதற்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட ஓரளவிற்கு வீடு முடிக்கிறளவுக்கு வந்துட்டோம். நமக்குன்னு ஒரு சொந்த வீடு வேண்டும்.

ஆமாம் தரை போட்டு வெள்ளையடிச்ச மட்டும் போதுமா, ஏ.சி, பர்னிச்சர் லொட்டு லொசுக்குன்னு நமக்கு ஆயிரம் செலவு இருக்கு என்றாள் நித்யா.

ஏண்டி அந்த ஆடம்பரமெல்லாம் நமக்கு எதுக்கு? முதலில் ஒரு சொந்த வீட்டுக்கு இங்க முழி பிதுங்கறது? பி.எப், ஹௌசிங் லோனுனு எல்லாத்திலேயும் கை வச்சாச்சு.

நான் சொல்லுறத கேளுங்க, கடன் கேக்கறதுலையும் ஒரு கௌரவம் வேணும், நாலு லட்சம் கேட்டா உங்க நிலைமை ரொம்ப மோசம்னு கடன் கொடுக்க மாட்டாங்க, அதுவும் உங்க உறவினர் இருக்காரே அவங்க நாயை அவுத்து விட்டாலும் விடுவாங்க.

சீ சீ அப்படியெல்லாம் செய்யமாட்டார்.

ஆமாம் போன வருஷம் ராகுலிற்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு போய் நாம் ரெண்டு பேரும்தான் போய் கேட்டோம்  அப்ப என்ன சொன்னாரு?  நான் இப்போ பிசி அப்படின்னு தட்டி கழிச்சார். அதே அப்போ வந்த உங்க தூரத்து உறவினருக்கு நம்ம எதிரிலேயே பத்து லட்சத்திற்கு செக் கொடுத்தாரு. உங்கள ஒரு மனுஷனாவே அவரு மதிக்கல.

அது அவங்களுக்குள்ள என்ன டீலிங்னு நமக்கு தெரியாது.

உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுங்க, அவர் மனைவி என்கிட்டே சொல்லிட்டாங்க, அதனால தான் சொல்லுறேன் முப்பதாவது கேளுங்கன்னு.

அதுக்குன்னு முப்பது லட்சமா? எப்படி திரும்பக் கொடுக்கிறதாம்? என்றான் ராகவன் கவலையோடு.

திரும்ப கொடுக்கிறதா?!!! அதை அப்புறம் பார்ப்போம், நீங்க கேட்டுத்தான் பாருங்களேன் அப்புறம் நான் சொல்றது புரியும். பெரிய பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறீங்க, இன்னும் இந்த சின்ன விஷயம் கூட தெரியல? "பெரிதினும் பெரிது கேள்"  ன்னு பாரதியே சொல்லியிருக்கிறார் என்றாள் நித்யா விடாப்பிடியாக.

அதுக்கு ஏன் பாரதி எல்லாம் இழுக்கிற? அவர் கடனுக்கு சொல்லலை.

அடப் போங்க சும்மா விதண்டாவாதம் செஞ்சுண்டு, இப்ப எல்லாம் கடன் கேட்க ஒரு கௌரவம் வேணும். ஸ்கூட்டரில் போய் கடன் கேட்டா உங்க உறவினர் கொடுக்க மாட்டார், உங்க நண்பரின் காரை எடுத்துகொண்டு போங்க ஒரு கெத்தா இருக்கும்.

உண்மையாதான் சொல்லுறியா? என்று தன் நண்பனிடம் கார் கேட்கக் கிளம்பினான் ராகவன்.