Sunday 30 November 2014

குஷ்பூ துரத்தப்பட்டாரா?

இணையத்தில் அவ்வப்பொழுது "போட்டோ கமெண்ட்ஸ்" வந்துகொண்டிருக்கிறது .  சில புன்னகையை வரவழைக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வந்தவற்றில் ரசித்தது.

கலைஞர் சொத்துல இவ்வளுண்டுதாங்க கேட்டேன்.
வெளிய போடீன்னு சொல்லிட்டாங்க.
நன்றி: சங்கர் 




நன்றி: பன்னிகுட்டி ராமசாமி 

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 29 November 2014

எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவனை அதே பள்ளியில் +2 படித்த மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது.

பாஸ்கரன் என்ற மாணவனை கொலை செய்த மாணவன் மாரீஸ்வரனை (ஏற்கனவே மாணவிகள் கடத்தல் பலாத்காரம் முதலிய வழக்குகள் இவன் மீது இருப்பதாக சொல்லப்படுகிறது) இன்று போலீசார் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர். மாரீஸ்வரன் ஓரின சேர்க்கையாளன், அவன் பாஸ்கரனை உறவுக்கு அழைத்ததால் பாஸ்கரனின் பெற்றோர் காவல் துறையில் புகார் செய்யப்போக அதனால் கோபம் கொண்ட மாரீஸ்வரன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த மாணவ சமுதாயம்? படிக்கும் வயதில் இந்த வக்கிர என்னங்கள் வரக்காரணம் என்ன? நீதி நெறியை போதிக்க வேண்டிய கல்வி இப்பொழுது என்ன சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறது?  ஊடகங்கள் வியாபார நோக்கில் பிஞ்சுகளின் மனதில் தங்கள் பங்கிற்கு நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கோ நடக்கும் ஓரிரு சம்பவங்களால் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தைக் குறை கூற முடியாது. இருந்தாலும் இது போன்ற சம்பவங்களை கேட்கும் பொழுது இயல்பாகவே நாளைய சமுதாயத்தை பற்றியக் கவலை வராமல் இருக்க முடியாது.

ஊடகங்களுக்கும் இது போன்ற செய்திகள் தான் தேவைப்படுகிறது. எத்தனையோ பள்ளிகளில் எத்தனையோ மாணவர்கள் ஒழுங்காகப் பள்ளி வந்து  படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அதை செய்தியாகக் கொடுத்தால் யார் படிப்பார்கள் இல்லை பார்ப்பார்கள்? இதைப் போன்ற ஓரிரு செய்திகள்தான் அவர்களுக்கும் ஸ்கூப் நியூஸ்.

இருந்தாலும் இது போன்ற செய்திகள் மாணவ சமுதாயத்தின் மேல் உள்ள கவலையை அதிகரிக்க செய்கிறது. நீதி நெறியை போதிக்க வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கும் இப்பொழுது நேரம் இல்லை. பெற்றோர்கள் பணத்தை துரத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தங்களது பிள்ளைகளின் மதிப்பெண்கள்தான் முக்கியம். ஆசிரியர்களுக்கோ பள்ளிக்கூடத்தின் பெயரும் சம்பளமும் முக்கியம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் அதையும் செய்யவில்லை எனபது வேறு விஷயம்.

நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் போதிக்கப் போவது யார்? குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் தங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 28 November 2014

செய்திகளும் லொள்ளுகளும்

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம் மீறி அச்சுறுத்தினால் தண்டனை-நீதி மன்றம் அதிரடி உத்தரவு.

இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?

ஒரு நடிகரை இருபது வருஷமாவா  அரசியலுக்கு கூப்பிடுவீங்க-பாரதிராஜா சாட்டையடி.

ஒவ்வொரு பட ரிலீசுக்கும் நூறு வருஷமானாலும் கூப்பிடுவாங்க-ரசிகர்கள் பதிலடி.

உனக்கு தைர்யம் இருந்தால் சட்டசபையில் நான் அமர ஏற்பாடு செய்துவிட்டு தகவலனுப்புங்கள் -கருணாநிதி

சீட்டு இருந்தால் சொல்லியனுப்பு தள்ளுவண்டி கிடைத்தால் வருகிறேன்.

ஸ்டாலினைப் பாத்துட்டாரு தீ போல் பரவிய செய்தியால் பதட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஐயோ நான் பார்க்கலாமா அவருதான் பார்த்தாரு.............ஊ...ஊ..ஊ..

பா.ஜ.க.வுக்கு ரஜினி வந்தால்தான் பலம் என்பதை ஏற்கமுடியாது--தமிழிசை

அவங்க வீட்டு சுண்டல் கொண்டுவந்தால் ஒரு வேளை பலம் வரலாம்.

சோனியா ராகுலை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் குஷ்பு.

இதுக்கு முன்னாடி இந்த கார ஜமீன்தார் வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன ஸ்வப்பனசுந்தரி வச்சிருந்தாக...........ஸ்வப்பனசுந்தரிய..........படுவா ஏண்டா என்னப்பாத்து அந்த கேள்வி கேட்ட.........

நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு இருக்கு?-சீமான்

ஆமா அவிகள வச்சி படையப்பா-2 எடுங்க.

கருணாநிதிக்கு பினாமியின் அர்த்தம் தெரியவில்ல-ஓ.பி.எஸ்.

அஹான் அம்மாகிட்டேயும் வைகுண்டராஜன் கிட்டேயும் கேட்டா சொல்லுவாக விளக்கம்.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 27 November 2014

சி.எம். என்பார் முதல்வர் என்பார் ..........................

நமது பினாமி முதல்வரும் மைனாரிட்டி அரசு நடத்திய கலைஞரும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நொந்து நூடூல்ஸ் ஆகிப்போன ஓ.பி.செல்வம் பாடும் பாடல், புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வந்த "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள" என்ற மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.

சி.எம் என்பார் முதல்வர் என்பார்
நாற்காலி இல்லை அமர
ஒரு அதிகாரமும் இல்லை ஆள
இது பொய்யும் இல்லை
அருகில் அம்மா இல்லை
டீக்கடையில் என்றோ
டீ அடித்தேன் நானே

சட்டசபையைக் கூட்டவில்லை
உட்கார இருக்கை இல்லை
காலியிடம் காணவில்லை
கண்டுபிடிக்க ஆளுமில்லை
கலைஞரும் கேள்வி கேட்டால்
பதிலளிக்க எவருமில்லை
பழிகளை தீர்க்க
வேறு வழி தெரியவில்லை

மேயருக்கு சீட்டு உண்டு
மேலே போட கவுனுமுண்டு
சபாநாயகருக்கு மைக்குண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் கொடுத்தாங்களோ
அம்மா இந்த பதவி எனக்கு
மொத்தத்தில் எனக்கு
நிம்மதி இல்லை

இதய தெய்வம் உன்னை கண்டேன்
தினம் தினம் குனிந்து நின்றேன்
மரியாதை கொடுக்க என்று
காலில் விழுந்து வணங்கி நின்றேன்
பதவி ஏற்கும் போதோ
குலுங்கி குலுங்க அழுது நின்றேன்
சரித்திரத்தில் எனக்கோ
எப்போதும் இடம் உண்டு..............

சி.எம் என்பார் முதல்வர் என்பார்
நாற்காலி இல்லை அமர
ஒரு அதிகாரமும் இல்லை ஆள
இது பொய்யும் இல்லை
அருகில் அம்மா இல்லை
டீக்கடையில் என்றோ
டீ அடித்தேன் நானே

Follow kummachi on Twitter

Post Comment

துலுக்கானமும் திருவள்ளுவரும்

டேய் துலுக்காணம் இன்னாடா லுங்கி கீய வுயுது போய்கினே கீற..........

ஐய உடு நைனா கடையாண்ட ஒரே சனமா கீது, என்பத்திநாலுல ஒன்னு வாங்கணும்............

டேய் பாத்துரா.........ரொம்ப ஓவராயி கோகிலா சுளுக்கு ஏத்தா மாரி இன்னிக்கி எவளாவது .............லிங்கிய உருவிட போறாளுக.

அது இன்னா மேட்டரு தொரை.......

அதாண்டா துலுக்காணம் அன்னிக்கி ஃபுல்லா அட்சி மப்பாயிட்டானா........சிங்கபெருமாலு கோயிலாண்ட பிளாட்பாரத்துல நட்டுகினான்........மப்புல நான்தாண்டா சிங்கபெருமாளுன்னு சொல்லி அந்த ஆளு கசிபு வவுத்த கியிக்கிறேன்னு கத்திகினே பூக்கட வச்சிகீதே கோகிலா அத்த பிடிச்சி வவுத்துல கை வச்சிகீறான், அது மெர்சலாய் இவன கயுத்தாமட்டைல தட்டி கவட்டையிலே வுட்டுகீது......

அதானா வாத்தியாரு ரெண்டு நாளா விரியாம்பாகாத்துல ஒரு காலும் வியாசர்பாடில ஒருகாலும் வச்சிக்கினு போய்கினான்.

இன்னிக்கி காலில இன்னா வண்டலூராண்ட ஒரு பெருச புட்ச்சி பேஜார் பண்ணிக்கின்னுகீறான்.

அந்தப் பெர்சு தாடி வச்சிகினு ரோட்டாரமா போய்கினு இருந்துதா, இவன் மப்புல அந்த பெர்ச புட்ச்சி யோவ் பெர்சு நீ வள்ளுவர்தான.....அப்படின்னு கேட்டுகிறான்.

பெர்சு பேஜாராய் பைய எடுத்து அக்கிளில சொருகிக்கினு  போய்கினே இருந்திகிது.

துலுக்காணம் விடாம பின்னாலேயே போயி ஆ......பெர்சு சொம்மா கேட்டுகினுகீரான் போய்கினே கீறே இன்னா மேட்டரு. பெர்சு நீ வள்ளுவருதானன்னு கேட்டுகினு கெயவர மடக்கிகீறான்.

யோவ் அவரு நான் இல்ல, அவரு போயிட்டாருப்பான்னு அவுரு எஸ் ஆவப்பாக்குறாரு.

துலுக்காணம் விடாம, யோவ் பெருசு இன்னா கமால் காட்ற அவரு எங்க போயிட்டாரு, அப்பீட் ஆயிட்டாரா?, . த நீ அவருதான், மய்லாப்பூராண்ட செல வச்சிகிறாங்க நான் பாத்துக்கிறான், அப்பாலகண்யாகுமரியாண்ட கடலுல சொம்மா கலீனறு செல வச்சிகிறாரே, அதுல கூட நீ அப்படியே சிம்ரன் கணுக்கா இடுப்ப ஓடிச்சிகினு நிப்பயே, அந்தாளுதான் நீ........அதே மாறி தாடி வுட்டுகீற.....

யோவ் நீ குடிச்சிருக்க, சொம்மா வம்பு வலிக்காத, அப்படின்னு கீறாரு.

யோவ் நீ வள்ளுவருதான் எனிக்கி அல்லாம் தெர்யும், நீ இன்னா பாட்டு எய்திகீறன்னு அவரு கைய புட்சிகீரான், . அகர மொதல எயுத்து..........ஆ.........ன்........அதான் கொரலு, டாஸ்மாக் பார்டிகளுக்கு இன்னா எய்திகீற சொல்லு. இந்தா நா சொல்றன் எய்திக்க..........

மிக்ஸ் செய்து குடிச்சவனுக்கு உய்வுண்டாம் உய்வில்ல 
ராவா குடிச்சவனுக்கு.......

கட்டிங் வுட்டு வாய்வாரே வாய்வார் அப்பால 
தெருல உய்ந்து கிடப்பர்.

உயச்சதனால் இன்னா பயனு சொல்லு
க்வாட்டரு அடிக்கான்காட்டியம்.

மவன் நைனாக்கு செய்யும் வேல
பொய்தோட க்வாட்டர் வாங்கியாரனும்.

போதை எறிட்சினா போட்டி வாங்கி 
கொடுப்பான் தோஸ்த்து.

தொ போயி அப்பால வா, இன்னொரு கட்டிங் வுட்டு அப்பால இன்னும் எத்து உட்றேன்னு... அவரு கைய வுட்டுகிறான்.

பெர்சு பைய தூக்கிகினு ஓடற பஸ்சுல ஏறி பூட்ச்சு.........

இந்த துலுக்காணம் பையன் தெனிக்கும் ஒராள புட்ச்சி மெர்சலாக்குறான். கோகிலா கணுக்கா எவங்கிட்டயோ உண்ட வாங்கப்போறான்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 26 November 2014

நல்லவன்

கே. வி. கே நல்லவன் தான் அவர்கள் வீட்டு சமையல் அறை தரையை கடப்பாரை வைத்து நோண்டும் வரை. நான் அவர்கள் வீட்டில் நுழைந்த பொழுது அவனது தங்கை உத்ரா "போடா போய் கே.வி.கேக்கு ஒரு கை கொடு" என்று சமையலறை நோக்கி கை நீட்டினாள். "என்னவோ உன் நண்பன் செய்வது ஒன்றும் பிடிக்கவில்லை" என்றாள். நான் சமையலறை நோக்கி சென்றபொழுது அவன் கடப்பாறையை கையில் கொடுத்து நீயும் நாலு குத்து குத்து என்றான். அப்படியே சீதாராமன், ரவி, சீனா, சுந்து எல்லோரையும் கூப்பிட்டு வா என்றான்.

நான் தயங்கிய பொழுது போடா சொன்ன வேலையை செய், அந்த பெருமாளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றான். பெருமாள் அவர்கள் வீட்டுகாரரின் இளைய மகன். இந்த இடத்தில் கே.வி.கேவிற்கும் பெருமாளுக்கு உள்ள கொடுக்கல் வாங்கலை சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் பெருமாள் தான் கே.வி.கே வீட்டு வாடகை வாங்க வருவான். அதை அவன் கொடுக்கும் விதத்தை நாங்கள் ரசித்ததில்லை. ஏதோ பிச்சைக்காரருக்கு போடுவது போல் முன்னூறு ரூபாயும் பத்து ரூபாவாக மாற்றி அவனது கையில் பிச்சைக்காரனுக்கு போடுவதுபோல் போடுவான்.

பெருமாளுக்கு அம்மா கிடையாது, அவனது சின்ன வயசிலேயே இறந்துவிட்டாள். அப்பா சமீபத்தில்தான் காலமானார். ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. தங்கை ஒரு மனநோயாளி. அடிக்கடி காட்டு கடத்தல் கத்துவாள். அந்த சத்தம் கேட்டால் எனக்கு உடம்பு என்னவோ செய்யும். அண்ணனும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனால் அவர் டை கட்டிக்கொண்டு சில நாட்கள் எங்கோ சென்றுவருவார். நாங்கள் அவருக்கு பைத்தியம் தெளிந்துவிட்டது அதனால்தான் ஆபிஸ் போகிறார் என்று நினைத்துக் கொண்டோம். அதற்கேற்றாற்போல் சில நாட்களில் அவருக்கு கல்யாணம் நடந்தது. அவர்கள் வீட்டிற்கு வந்த மருமகள் இப்பொழுது பொறுப்பை எடுத்துக்கொண்டாள். ஆனால் இதெல்லாம் சில காலம்தான். ஒரு நாள் இரவு அண்ணனுக்கு உடம்பு சரியில்லை என்று ஆம்புலன்ஸ் வரவைத்து பெருமாள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றான், பின்னர் பெருமாள்தான் திரும்பி வந்தான், அண்ணன் என்ன ஆனார் என்று தெரியவில்லை.  சில நாட்கள் கழித்து பெருமாளின் அண்ணியும் அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.

பெருமாள் தன் தங்கையையும் தானே கவனித்துக் கொண்டான். வேலை ஒன்றிற்கும் செல்வதாக தெரியவில்லை. எங்கள் யாருக்குமே பெருமாளை கண்டால் அவ்வளவாக பிடிப்பதில்லை, அதன் காரணம் இன்று வரை தெரியவில்லை. விளையாடும் பொழுது பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் மாடியிலிருந்து கத்துவான். அவர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்தால் இங்கெல்லாம் உட்காரக்கூடாது என்று விரட்டி விடுவான். முக்கியமாக எங்களைக் கண்டால் ஒரு இருகிய முகத்துடன் திட்டிக்கொண்டே செல்வான். இதைத் தவிர வலுவான காரணம் ஒன்றும் இல்லை.

 கே. வி. கேவும்  அவனை வெறுக்க வலுவான காரணம் இருப்பதாகத் தெரிய வில்லை. இருந்தாலும் பெருமாள் மாடியில் இறங்கி வந்தாலோ அல்லது வெளியே செல்லும்பொழுது அவர்கள் வீட்டை கதவை ஓங்கி சாத்துவான். எனக்கு என்னவோ அந்த பகை வீட்டுக்காரருக்கும் குடித்தனக்காரருக்கும் உள்ள பகையாகவே தோன்றியது. ஆனால் கே.வி.கே எங்கள் எல்லோருக்கும் நிறைய உதவிகள் செய்வான். அவன் எங்களை விட பத்து வயதுப் பெரியவன். நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது அவன் ஒரு மருந்துக் கம்பெனியில் பிரதிநிதியாக வேலை செய்துகொண்டிருந்தான். நண்பர்கள் வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் மருந்து சீட்டை அவனிடம் கொடுத்தால் போதும் இலவசமாக மருந்து கொடுப்பான். மேலும் எங்கள் கிரிக்கட் டீமில் உள்ள பொருட்கள் யாவும் அவன் வாங்கிக்கொடுத்தது. ஆதலால் அவன் எங்களுக்கு ரொம்ப நல்லவன்.

ஒரு நாள் பெருமாளுக்கும் அவனுக்கும் பெரிய வாக்குவாதம் அதன் காரணம் எங்களுக்கு தெரியவில்லை. முடிவில் பெருமாள் அவர்களை வீடு காலி செய்ய சொல்லிவிட்டான்.

அவர்களும் காலி செய்ய ஏற்பாடும் செய்துவிட்டார்கள். வீட்டு வாசலில் வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவன் வீட்டாருக்கு உதவி செய்யலாம் என்று அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுதுதான் கே.வி. கே சமையலறை தரையை இடித்துக்கொண்டிருந்தான்.

சீக்கிரம் எல்லா சாமான்களை வண்டியில் ஏற்றுவதற்கு முன் ஹால், பெட்ரூம் தரைகளையும் நோண்டவேண்டும் போய் மற்றவர்களை கூட்டிவா என்றான்.

அவனது அம்மாவும் தங்கையும் வேணாண்டா போனாபோறது விடு என்றாலும் அவன் கேட்பதாக இல்லை.

அவன் என்னை நோக்கி "நீ போய்  அவர்களை கூப்பிட்டுக்கொண்டு வருகிறாயா இல்லையா" என்று கத்தினான்.

நான் தயங்க "போடா போ இனி என் மூஞ்சியில் முழிக்காதே நன்றி கெட்டவனே" என்று கூறிக்கொண்டு இன்னும் தரையை ஒங்கி கடப்பாரையால் குத்தினான்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 25 November 2014

டீ வித் முனியம்மா பார்ட் -26

டங்கமாரி ஊதாரி 
புட்டுகின நீ நாறி 

இன்னாடா செல்வம் வரசொல்லவே கானா பாடிகினு வர........

அயுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்சி கயுவி நாளாச்சி..

டேய் மீச என்க்கும் முனிம்மாக்கும் ரெண்டு ஸ்டாங் டீ போடுறா........

டேய் பயக்கட உனுக்கு வேணும்னா நீ சொல்லிக்க, எனக்கு உன் ஓசி டீ வேணாம்.

ஆடப்போனேன் மங்காத்தா.......
தெரித்தி வந்தா எங்காத்தா......

டேய் பாட்ட நிறுத்துடா.........இன்னா பாட்டுடா இது.

நீ தூக்காதடா பொருள
நான் எடுத்துடுவேன் வெரல........

சரி முனியம்மா இன்னா நூசு. வா லிங்கம் சார், நாடாறு பாரு சைடு வாங்கிக்கினே வராரு. லோகு, பாயோட கடில பேசிக்கினு இருக்கான் தொ வந்துருவான்.......

ஸ்ரீரங்கத்துல இடைதேர்தல் வருதாம்........இளவரசி மருமவப்பிள்ளையதான் நிப்பாட்டப்போறாங்களாம்.

அப்ப மத்த கட்சிங்க யார நிறுத்தப்போறாங்களாம்?

கலீனறு அவரு கட்சில ஒரு ஆள விடுவாரு லிங்கம் சார் அவுற மத்த ஆளுங்க சப்போர்ட்டு குடுன்னு கேப்பாராம்.

பொது வேட்பாளரா?

ஆமாண்டா லோகு........அப்படிதான் சொல்றாங்க.

முனியமா இந்த மீனவங்கள தூக்குதண்டனையிலேந்து வுட்டாங்களே அவனுகள எதுக்கு தில்லிக்கி இட்டுகினு போனாக.

அதெல்லாம் அரசியல் பாய், அவனுக வெளில விட்டதுக்கு நாங்கதான் காரணம்னு சொல்லி அடிச்சிகிறானுங்க....

அதான் முனியமா அதுக்கு அவனுகள டில்லி இட்டாந்து  மாலையெல்லாம் போட்டு ஒரே கும்மியடிச்சிகிரானுங்க.

அஹான் நாடார் இவனுக பொணம்  மேலயே  அரசியல் செய்வானுங்க. அடுத்த வருஷம் தேர்தல் வருதா அதுக்கு இப்பவே துண்டு போடுறானுங்க.

இன்னா முனியம்மா பன்னீரு சட்டசபைய கூட்டிட்டாரு.

ஆமாம் பாய் அதுக்குதான் கலீனறு நக்கலு உட்டுகிராறு, பன்னீரு எங்க குந்துவாருன்னு...................இன்னா அம்மா இல்லைன்னா சட்டசப தமாசா இருக்கும். கேப்டனு கூட வருவாரு பாரு.

இன்னா முனிமா இளங்கோவன் வாசன ஓடுகாலின்னு சொல்லிகினு பேஜார் பண்ணிகினுகீறாரு.....

அவரு அம்மாவையே சுளுக்கு எடுப்பாரு, வாசன் எல்லாம் அவருக்கு ஜூஜூபி.

முனிம்மா மேயரு இன்னா ரிசைன்னு பண்ணிகினாராமே?

ஆமாம் லிங்கம் சார், அம்மா வூட்டாண்ட கூட்டி சுலுக்கு எடுத்திச்சாம்.........ராஜ கீய் பாக்கத்தாண்ட பெரிய பங்களா கட்டிகிறாராமே.........இவனுக எத்த வேணா வுடுவானுங்க.........கவுர்மெண்டு துட்டுல ஆட்டைய போடுறத கண்டி வுடமாட்டானுங்க.

முனிமா இன்னா தலீவரு  படம் வெளிய வருமா, கோர்ட்ல கேசு போட்டுகிறானுங்க.

நாடார் சொம்மனாங்காட்டியும் கேசு போட்டு காசு பாப்பானுங்க. அந்தாளு இன்னா ட்ரைலர் லேயே இன்னா மெரட்டலு காட்டுறாரு. படம் காட்டியும் வரட்டும்.........அப்பால கீது பார். தலீவர் இன்னா ஸ்டைலா கீறாரு பா.

முனிம்மா இன்னா படம் போட்டுக்கிறான் காட்டு..........














Follow kummachi on Twitter

Post Comment

Monday 24 November 2014

கலக்கல் காக்டெயில்-160

சென்னை அனுபவம்

கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் வாசம், அவசர வேலையாக விடுமுறையில் சென்று வந்தேன். இந்த மூன்று வாரங்களில் ஒரு இரண்டு நாட்கள் மழை பெய்தது, அப்படி ஒன்றும் பேய் மழையில்லை. இருந்தாலும் சென்னையின் சாலைகளின் நிலைமை படுமோசம். கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலைக்கு மூப்பனார் பாலத்தின் மேல் ஏறாமல் சைடாக வந்தால் பாலத்திற்கு பீச்சாங்கைப் பக்கம் ஒரு பெரிய பள்ளம், கண்ட குப்பைகளைப் போட்டு தற்காலிகமாக மூடி வைத்திருக்கிறார்கள். அதை கவனிக்காமல் இருட்டில் வண்டியை விட்டால் சில்லறை கிடைப்பது நிச்சயம்.

சமீபத்தில் ரிப்பேர் செய்யப்பட்ட தெருக்கள் மறுபடியும் பல்லிளிக்க ஆரம்பித்து விட்டன. இந்த பேச் வொர்க் எல்லாம் வேலைக்கு ஆவாது. ஒவ்வொரு தெருவையும் அடியோடு நோண்டி எடுத்து புதிதாக கான்க்ரீட் போட்டு மெடல் வைத்தால்தான் அடுத்த மழை வரையாவது தாங்கும்.

இதெல்லாம் நடக்கிற கதையா?

எப்படியெல்லாம் அரசியல் செய்யுறாங்கப்பா?

சமீபத்தில் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் திருச்சி விமான நிலையத்தில் காத்திருக்க அவர்களை சத்தம் போடாமல் டில்லிக்கு திருப்பிவிட்டது மத்தியில் ஆளுங்கட்சி. அங்கே சென்று  கட்டிய லுங்கியுடன் மேடையில் அமரவைத்து அரசியல் நாடகம் ஆடி ஒரு வழியாக திருச்சி கொண்டு வந்து இறக்கினால் அங்கு மத்தியில் ஆளும் கூட்டமும் மாநிலத்தில் ஆளும் கூட்டமும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை வரவேற்று அரசியல் நாடகமாடி அவர்கள் வீட்டாண்ட அம்போ என்று விட்டுவிட்டார்கள். இனி அவர்கள் தேவையில்லை. அடுத்த நாடகத்திற்கு காத்திருப்பார்கள்.

அந்த மீனவர்கள் இதற்கு மரணதண்டனையே மேல் என்று நினைத்திருக்கக்கூடும்.

ரசித்த கவிதை 

வணக்கம்

"கோவை முகப்பில் உங்களை வரவேற்கும்
வாலாங்குளக் கோட்டைமேட்டுப்
பாலத்தின் முனையின்
கள்ளுக்கடைக்கு வணக்கம்.
அதன் வாசல் புழுதியில் கருப்பன்
காசு கொண்டுவரக் காத்திருக்கும்
நகரசுத்திப் பெண்ணுக்கும்
கள்ளுக்கடை சாராயக்கடை
வைன்ஷாப் முதலாளிகளுக்கும்
கொடைக்கானலில் படிக்கும் அவர் புதல்வருக்கும்
அவரின் புதிய கண்டேஸ்ஸா கார்களுக்கும்
வணக்கம்"

நன்றி: உமாமஹேஸ்வரி 


ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 13 November 2014

டீ வித் முனியம்மா-பார்ட் 25

மொத தபா பாத்தேன் உன்ன
பெஜாராகிப்பூட்டேன் பொன்னே

யோவ் மீச ரெண்டு டீ போடுறா.........

இன்ன செல்வம் குஜாலா கீற இன்னொரு பிகர கரெக்ட் பண்ணிக்கினியா?

அடப்போ முனிம்மா ஒன்ன ஒட்டவே இங்க டாவு தீருது........

அதான பாத்தேன் அஞ்சல சொம்மா கரகம் ஆடிடும். அப்பால உன்பாடு டப்பா டான்சுதான்.....

சரி முனியம்மா இன்னா நூசு, கடியாண்ட காணோம்.

எங்கடா மய பொத்துகிட்டு ஊத்துது, வியாவாரம் ஒயுங்க செய்யமுடியல. ரோடெல்லாம் தொண்டி உயுந்துகீது, மவன கார்பரேசன் காரனுங்க இன்னா செய்யுறானுங்க தெர்ல.

கரீட்டா சொன்ன முனிம்மா, அந்தம்மாவ ஊட்டுல குந்தவச்சிகிரானுங்க, அவனவன் மொட்ட போடுறான், காவடி தூகுறான், வேலகண்டி செய்ய மாட்டேங்கிறானுங்க.

அத்த வுடு பாய், இவனுங்க ஒல் பஜனி செய்யுறது அல்லாருக்கும் தெரியும்.

காங்கிரஸ் காரனுங்க இன்னா கூத்தடிக்கிரானுங்க.

நாடாறு அது வந்து அவனுக வயக்கமா செய்யுற லுங்கி டான்சுதான். வாசன் புது கட்சி ஆரம்பிக்கிறாராம். அவரு அப்பா காலத்துல செஞ்சாங்க, போனி ஆச்சு, அப்பால இயுத்து மூடிக்கினாறு. இப்போ புள்ள செய்யுறான், இருக்கிற பத்து பேருல கூட்டம் சேர்த்து கும்மியடிக்கிரானுங்க.

க்ரானைட்டுல ஊயலு, சகாயம் கமிசன் வச்சாங்க இன்னாச்சு.

வைகுண்ட ராஜன் எப்ப வேணா உள்ள தூக்கி போட்டுருவானுங்க லிங்கம் சார். தமாசு பாரு அவர போட்டு கொடைசாங்கன்னு வையி, அல்லா தலையும் உருளும்.

பத்த வச்சாளே
குயா தண்ணி என்ன.......

இந்த செல்வம் பாட்ட நிப்பாட்டுரா, கொயா தண்ணி இன்னா கிஸ்னாயிலா பத்திக்க, ஒரே பாட்ட புடிச்சி கூவிக்கினு கீறான்.

இன்னா முனியம்மா மகாராஸ்ட்ராவில கவுனருக்கு உண்ட கொடுத்துகிரானுங்க.

ஆமாண்டா லோகு அவரு சட்டசபையில் உள்ளார போவாதேன்னு கூவிகினே காங்கிரஸ் காரனுங்க சட்டைய கொத்தா புட்ச்சி குமுரிகிரானுங்க. தமிய் நாட்டு நூஸ் படிக்கிறானுங்க காட்டியம்.

வேறென்னா நூசு.........

டேய் செல்வம் போய் பொயப்பபாரு.  மய வருது, அதுக்குள்ளார வியாவரத்த முடிக்கணும். இந்தாடா பேப்பரு..........உன் மேட்டரு இருக்கா பாரு.






Follow kummachi on Twitter

Post Comment