Saturday 28 November 2015

நல்ல காலம்

சதீஷ் அந்தப் பாடலை காதல் உணர்ச்சிக்கூட்டி பாடிக்கொண்டிருந்தான். இயக்குனர் அவனது குரலில் மயங்கி உருகிக்கொண்டிருந்தார். பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்கிய ஒத்திகை ஒரு வழியாக முடிந்து, இப்பொழுதுதான் "டேக்"கிற்கு வந்திருக்கிறது. ரெக்கார்டிங் முடிய இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது. சதீஷ் ரெக்கார்டிங் தியேட்டர் விட்டு வெளியே வந்தான்.

அண்ணே நீங்க உள்ளே இருக்கும் பொழுது வீட்டில அண்ணி அடிக்கடி போன்ல கூப்பிட்டாங்க, நான்தான் அண்ணே உள்ளே இருக்காரு வந்த வுடனே போன் பண்ணுவாருன்னு சொல்லியிருக்கேன், வீட்டுக்கு போன் பண்ணிடுங்கண்ணே  என்றான்.

என்னடா விஷயம் ஏதாவது பிரச்சனையா?.

பிரச்சனை இல்லண்ணே, அண்ணி உங்க கிட்ட  சொல்லியிருந்தாங்களாம், பிள்ளைங்க ஸ்கூலில் நாளைக்கு ஏதோ விசேஷமாம் ரெக்கார்டிங் முடிஞ்சவுடனே இங்கே தங்க வேண்டாம் ஊருக்கு வரசொல்லி நியாபகப்படுத்ததான் போன் பண்ணாங்க என்றான்.

சதீஷிற்கு நியாபகம் வந்தது, நாளை ஸ்கூலில் நிஷாவும், த்ரிஷாவும் நடனமாடுகிறார்கள், அவன்தான் பள்ளிக்கு கூட்டி செல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். மேலும் அவன் இது வரை அவர்கள் பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்டதுமில்லை. குழந்தைகளுக்கு தங்களது தந்தை பிரபலப் பாடகர் என்று பெருமை.

சதீஷ் சரி வண்டியை எடு இப்போ கிளம்பினால்தான் சரியான நேரத்திற்கு ஊர் போகமுடியும் என்றான்.

அண்ணே இன்னொரு விஷயமண்ணே, மிருதுளா ரெண்டு முறை பண்ணிச்சு.

சதீஷிற்கு தெரியும் மிருதுளாவை பார்க்காமல் போகமுடியாது, ஏற்கனவே ரெக்கார்டிங் முடிந்தவுடன் போவதாகத்தான் இருந்தான், ஆனால் இவ்வளவு நேரம் ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை.

மிருதுளாவை கடந்த சிலமாதங்களாகத்தான் பழக்கம். ஒரு முறை ரெகார்டிங் முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது  சந்தித்தான். அதில் தொடங்கிய பழக்கம் ஒவ்வொரு முறை சென்னை வரும்பொழுதும் அவளுடன் தங்கிவிட்டு செல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கமென்பது இப்பொழுது சாதாரண வார்த்தை இப்பொழுத் அது அதற்குமேல் சென்று  அவன் சட்டையில் கைவிட்டு காசு எடுக்கும்வரை வந்துவிட்டது.

அவன் அவர்கள் வீட்டிற்கு போனவுடன் மிருதுளா அம்மா வாய் நிறைய வரவேற்பாள். அன்று அவனிற்காக புது சரக்கு ஓபன் செய்து கோழி, ஆடு என்று எல்லாம் தட்டில் மிதக்கும்.  சாப்பிட்டு முடித்தவுடன் சதீஷ் மேலும் இரண்டு மடக்கு குடித்தால்தான் அவனுக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

ஆனால்  மிருதுளா அம்மா " தம்பி காலைல  ஊருக்கு போவனும் இல்ல  மிருதுளா தம்பிய சீக்கிரம் கூட்டிட்டு ரூமுக்கு போ" என்று துரத்திவிடுவாள். சதீஷ் மனதிற்குள் அவள் உபசரிப்பை நினைத்து சிரித்துக்கொண்டான்.

சரிடா பாண்டி என்ன அவங்க வீட்டில விட்டுட்டு நீ ரெஸ்ட் எடுத்துக்கோ, காலைல நாலு மணிக்கு ஊருக்கு போவலாம் என்று கிளம்பினான்.

பாண்டி சதீஷை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பினான்.

காலையில் நான்கு மணிக்கு பாண்டியை  செல் போனில் கூப்பிட்டு கிளம்பலாம் என்றான்.

வீட்டின் வெளியே வந்தால் பாண்டி கார் கதவை திறந்து வைத்துக்கொண்டு காலை வெளியே நீட்டி நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.பாண்டியை எழுப்பினான்.பாண்டி எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு வெளியே வந்தான்.

சதீஷிற்கு நிலைமை புரிந்துவிட்டது. பாண்டி கார் ஒட்டும் நிலையில் இல்லை. விடிவதற்குள் ஊருக்குப் போகவேண்டும். சதீஷ் தானே வண்டிய எடுக்க முடிவு செய்தான். பாண்டிய பின் சீட்டில் தூங்க சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். இன்னும் விடியவில்லை. நெடுஞ்சாலையை நெருங்கும் பொழுது லாரிகளின் டிராபிக் அதிகமாக இருந்தது. ஒரு வழியாக அவற்றையெல்லாம் கடந்து வேகம் பிடித்தான். ஒரு ஐம்பது கிலோமீட்டர் சென்றிருப்பான். அடுத்த ஜங்கஷனில்  ஒரு நான்கு ஐந்து போலீஸ் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

அந்த இன்ஸ்பெக்டர் சதீஷின்  வண்டியை நிறுத்தினார். பாண்டி வண்டி வேகம் குறைவதை கண்டு முழித்துக்கொண்டான், காரின் வெளியே பார்த்தபொழுது அவனுக்கு நிலைமை புரிந்தது.

அண்ணே நீங்க இருங்க அண்ணே நான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று இன்ஸ்பெக்டரை நெருங்கினான்.

அவர் சதீஷையும் இறங்கி வெளியே வர சொன்னார். சதீஷிற்கு நிலைமையின் தீவிரம்  புரிந்தது. போனமுறை இதே  இடத்தில் நிறுத்திய இன்ஸ்பெக்டர் சதீஷை அடையாளம் கண்டுகொண்டு " சார் நீங்க அந்தப் பாடகர்தானே" சரி போங்க சார் என்று விட்டுவிட்டார். இத்துணைக்கும் அன்று பாண்டிதான் நன்றாக போட்டுவிட்டு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான்.

இந்த இன்ஸ்பெக்டர் ஏதோ சினிமா இன்ஸ்பெக்டர் போல என்று நினைத்துக்கொண்டான்.

அவரிடம் எவ்வளவு வாதாடியும் மசியவில்லை, மேலும் வண்டியை  இங்கேயே விட்டுவிட்டு நாளை வந்து போதை தெளிந்தவுடன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாவியை வாங்கி வைத்துக்கொண்டார்.

சதீஷும் பாண்டியும் அவரை நொந்தபடி வாடகை வண்டியில் வீடு வந்து சேரும்பொழுது காலை ஒன்பது மணியாகிவிட்டது. மனைவியும் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டனர். தன்னிடமுள்ள சாவியை வைத்து திறந்து படுக்கையில் விழுந்தான். கார் இல்லாமல்  பள்ளிக்கூடம் போகவும் தயக்கமாக இருந்தது. நன்றாக உறங்கிவிட்டான்.

மாலை மனைவியும் பிள்ளைகளும் வீட்டிற்கு வந்தனர்.

ஏங்க இவ்வளவு தூரம் சொல்லியும்  நேரத்திற்கு வரவில்லை, பொண்ணுங்க ரெண்டும் உங்க பேர்ல ரொம்ப கோவமா இருக்காங்க. நீங்க சீக்கிரமாகவே கிளம்பிட்டதாக பாண்டி சொன்னானே, ஏன் லேட்டு வழியில என்னாச்சு, கார் எங்கே என்று கேள்விமேல் கேள்வி கேட்டாள்.

வழியில ஒரு சின்ன ஆக்சிடெண்ட்,  அதான் காரை அங்கேயே விட்டுவிட்டு கால் டேக்சியில் வந்துவிட்டேன் என்றான். பாண்டி நாளை வண்டியை எடுத்து வருவான் என்றான்.

நல்ல காலம் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே, விடுங்க ரெஸ்ட் எடுங்க, அடுத்தவாரம் ஸ்கூலில் இன்னுமொரு விழா இருக்கு  என்றாள்.


Follow kummachi on Twitter

Post Comment

Friday 27 November 2015

விகடனார் சொல்வது சரியா?


திடீரென்று ஆயாவிற்கு விகடனார் மேல் கோபம்   விகடன் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களது அதிகாரபூர்வ நாளேட்டில் சகட்டுமேனிக்கு விகடனை நாரடித்துக்கொண்டிருக்கிரார்கள். இதற்கும் மேலாக விகடன் விற்கும் சில்லறை வியாபாரிகளையும் காவல் துறை மிரட்டுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, விகடன் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் நவம்பர் இருபத்தி ஐந்தாம் தேதி வந்த "மந்திரி தந்திரி" கட்டுரைதான். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆயா ஆட்சி செய்த கோலத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டுவிட்டார்கள். இது "மந்திரி தந்திரி"யின் முப்பதாவது தொடர். அதற்கு முன்பே எல்லா மந்திரிகளின் "குனிந்து, படுத்து  சாதித்த சாதனைகளை" சொறி நாய் குறுக்கே போகாத அளவிற்கு கொதறி போட்டு  விட்டார் விகடனார். அதில் ஓ.பி., நத்தம், என்று எல்லா துறைகளின் மந்திரிகள் செயல்பாடுகள் அவர்களின் குலம், கோத்திரம், குடும்ப நண்பர்களின் அட்டகாசங்கள்  என்று விரிவான அலசல்.

இந்த மாதிரி கட்டுரைகள் நமக்கு ஒன்றும் புதியதல்ல. போன ஆட்சியின் இறுதி கட்டத்திலும் "கொய்யா"  மந்திரிகளின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட இதே மாதிரி தோரணம் கட்டினார்கள்.

அதுமட்டுமல்ல அம்மா கேசு பெங்களூரில் நடந்து கொண்டிருக்கும்பொழுது அந்த சொத்துக்குவிப்பு வழக்கின் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ந்து தொடராக எழுதி பரபரப்பாக்கினார்கள். ஆனால் அதில் வந்த விஷயங்கள் எல்லாம் நாம் அறிந்ததே, ஆனால் குன்ஹாவும் அறிந்ததே என்று பிற்பாடு தீர்ப்பு வந்தபின் தெரிந்த விஷயங்கள்.

அப்போதெல்லாம் கண்டு கொள்ளாத ஆயா இப்பொழுது பாய்வதற்கு காரணம் கூப்பிடு தூரத்தில் தேர்தல் இருப்பதால்தான். இந்த அவதூறு வழக்கினால் விகடன் இதுபோன்ற கட்டுரைகளை நிறுத்துமா? என்றால் நிறுத்தாது என்றே தோன்றுகிறது. இன்னும் ஆயா அவலங்களை தோண்டி எடுத்து இனி வறுத்தெடுப்பார்கள் .


இதில் குளிர்காய "கொய்யா" கட்சி இப்பொழுதுள்ள நிலைமையில் கொடுத்து வைக்கவில்லை. என்னதான் கட்சி தொண்டர்கள் விகடன் இதழ்களை வாங்கி மக்களிடம் கொடுத்தாலும் அவர்கள் நிலைமை இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சரி உபரி கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு என்றால் அவர்களும் ஒவ்வொருவரும் முதல்வர் கனவுடன் இருப்பதால் கூட்டு சேர மறுக்கிறார்கள்.

விகடனார் சொல்வது சரியா? தவறா? என்று நாம் ஆராயத் தேவையில்லை. கடந்த இருபது வருடங்களாக தமிழகம் கண்ட வளர்ச்சியும், தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் அண்டைய மாநிலங்களிடம் பிச்சைஎடுக்கும் அவல நிலையும், மேலும் தற்பொழுது மழையில் ஊர் நாரியதைப் பார்த்தாலே இரண்டு கட்சிகளும் என்ன கிழித்தார்கள் என்பது அடை மழையில் அடங்கி அனுபவித்தவர்களுக்கும், மின்சாரம் இன்றி தவித்த சிறு தொழில் செய்வோர்களுக்கும் தெரியும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகம் இப்பொழுது உண்மையை உள்ளபடி மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய நேரமிது. அதை மனசாட்சியுடன் எந்த அடக்குமுறைக்கோ  அல்லது கைநீட்டல்களுக்கோ அடிபணியாமல் செய்தால் மாற்றம் வரலாம்.

செய்வீர்களா? செய்வீர்களா?




Follow kummachi on Twitter

Post Comment

Thursday 26 November 2015

டீ வித் முனியம்மா பார்ட் 37

டேய் இன்னாடா மீச வியாவாரம் எப்படி போய்கீது.....

அடே என்ன வியாவராம் முனிம்மா, மழையில யாரும் வந்திட்டில்லா

டேய் சொம்மா இன்னாடா ரீல் விடுற........மவனே அடிச்ச மயல நீதான் துட்டு அள்ளிகினன்னே ஊரே பேச்சா கீது.......ஊசுன வடையெல்லாம் மார்க்கெட்ல வுட்டுருப்பயே. டீ இன்னா இருவது ரூவாக்கு கொடுத்ததா சொல்றாங்க.

அதெல்லாம் கள்ளம் பரயுது........

சரி அத்த வுடு தோ செல்வமும் லோகுவும் வரானுங்க பாரு சூடா டீ போடு.

இன்னாடா செல்வம் பயம் வியாவாரம் எப்படி போச்சு மயல........

இன்னா முனிம்மா அவனவன் கஞ்சிக்கே வயியில்லாம கீறான் இதுல மயல பயம் எங்கே போவுது. அத்த வுடு நான் வூட்ட வுட்டு நவுரவே இல்ல....வூடு புல்லா தண்ணி வந்திடிச்சு. சரி முனிம்மா உன் வூட்டாண்ட எப்படி.

அதே தாண்டா மயத்தன்னி வூட்டுக்குள்ள வந்து பூ வியாவாரத்த ஊத்தி முடிகினு தண்ணிய பக்கிட்டுல அள்ளி தெருவுல வுட்டுகினி இருந்தேன்.

இன்னா முனிமா அலட்டிகினு கீற.

வா பாய் உனுக்கு இன்னா மச்சு வூட்டுல கீற.

மச்சு வூடா நீ வேற.......பேஜார் பண்ணாத எங்க வூட்டுல மச்சுல கூட மொயங்காலு அளவு தண்ணி வந்துகிச்சு.

ஆமாம் பாய் நம்ம கொண்டிதொப்புல எல்லா எடத்துலேயும் தண்ணி உள்ளார பூந்திடுச்சு.

வா லிங்கம் சாரு............ஆனா மயன்னு கூட பாக்காத காப்ரேஷன் காரனுங்க பம்பு அடிச்சி தண்ணி எடுத்தானுங்க......அவனுங்கள பத்தி ஒன்னியும் சொல்ல மாட்றானுங்க இந்த டீ.வீ காரனுங்க.

ஆமாம் முனிம்மா மெய்யாலுமே ஈ பி காரனுங்க கூட மயல ட்ரான்ஸ் பார்மார்ல ஏறி வேல பாத்தானுங்க.

அதானே நாடார் ஆனா எல்லா டீ.வி காரனும் அவனுகள செஞ்ச வேலைய ஒன்னும் சொல்லல.இதுல தமாசு பாரு லோகு  பழைய மேயரும், கண்ணடிச்சிகினே அம்மாவுக்கு சொமபடிப்பரே ஒரு ஆளு டேய் செல்வம் அவரு பேரு இன்னாடா.

யாரு முனிமா அம்மாகிட்ட காரு வாங்கிக்கினாரே அவுரா.....

அஹாண்டா அவரேத்தான்.........

இன்னாவோ சம்பத்து இல்ல இன்னோவா சம்பத்து.

ஆமா அவரும் டீவில குந்திகினு இந்த நெலமைக்கு யாரு காரணமுன்னு அடிச்சிகினானுங்க.இவன கேட்டா அவுங்க ஆட்சிதான்ரான் அவன கேட்டா இவனுகதான்றான்.

முனிம்மா முப்பது வருசம்மா இதே தான் அடிச்சிகினு கீறாங்க.

எதிர்கட்சிகாரன் சொல்றான் மயல தண்ணி தேங்கி ஜனம் அல்லாம் கஷ்டப்படுதுங்குறான்..........அவங்க டீ வில புரட்சி இதய தெய்வம் அம்மா ஆணைப்படி மய பெஞ்சுது அல்லாரும் சரியா வேல செஞ்சாங்க தண்ணியே எங்கேயும் இல்லன்றாங்க. ஜனம் எல்லாம் குஜாலாகீது அப்படிங்கிறாங்க.

இன்னா அவங்க சொல்லட்டும் முனிம்மா இந்த மயல சென்னை நாரிகினுதான் போச்சு.

ஆமா லிங்கம் சார், இன்ன பேய்ஞ்சு இன்னா புரோஜனம் வெயிலு வந்திச்சினா நாம கொடத்த தூக்கிகினு லாரி பின்னாடி ஓட வேண்டியதுதான். அதுக்கு ஒரு  வழி செய்யமாற்றானுங்க.

அது சரி முனிம்மா ஊருலகீற ஏரி எல்லாம் பிளாட் போட்டு கூவி வித்துகினானுங்க அப்பால எங்க மய தண்ணிய  விடுறது. அல்லா தண்ணியும் எல்லா குப்பையும் வாரிகினு மெரினா பக்கமா போயிடிச்சி.

ஆமாம் பாய் பல்லாவரத்தாண்ட எம்மாம் பெரிய ஏரி இருந்திச்சு இப்போ அது தாராந்து போச்சு. அப்பால சிட்லபாக்கம் ஏரி மேலயும் வூடு கட்டிகினானுங்க அப்பால வூட்டுக்குள்ள தண்ணி வந்திச்சின்னு கூவுரானுங்க. எங்க ஆயா சொல்லும் மதராசுல மொதோல நெறைய ஏரி இருந்துகீதாம், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம் அல்லாம் ஏரி இருந்த எடம் தானாம்.

முனிம்மா வெள்ள நிவராணம் நாலாயிரம் கோடி மோடியாண்ட அம்மா கேட்டாங்களாமே.

ஆமாண்டா லோகு இந்தம்மா மோடிக்கு லெட்டர் எயுதிச்சாம் அந்தாளு பத்து நிமிட்ல 960 கோடி துட்ட தூக்கி கொடுத்துட்டாராம் சொல்லிகிறானுங்க ரத்தங்க.

அது சரி முனிமா அந்தாளு எப்பவும் பாக்கிட்லையே அம்மாம் துட்ட வச்சிகினு சுத்துகினாறு போல.

அது சரி முனிமா அதால நமக்கு இன்னா.

இல்ல பாய் அல்லாருக்கும் ரெண்டாயிரம் ரூவா குடுக்கப் போறாங்களாம்.

அப்ப மீதி துட்டு....

டேய் போடா டோமரு செல்வம் அத்த எலிக்சன் டயத்துல அவுத்து வுடுவாங்கடா.

கலீனறு கூட ஒரு கோடி குடுத்துகிறாராமே.

ஆமாண்டா செல்வம் அத்த வச்சிகினு கவுண்டமணி கணுக்கா மக்கள் நக்கல் விடுறானுங்க.........ஒரு கோடி இங்க கீது, மீதி ஒரு லட்சத்தி எழுபத்தாயிரத்தி தொளாயிரத்தி தொன்னூத்தி ஒம்பது கோடி எங்கேன்னு கேக்குறானுங்க. பொல்லாதவனுங்க குனிஞ்சா ----------யடிச்சிடுவானுங்க.

முனிம்மா விகடன் மேல அம்மா கேசு போட்டுகிறாங்களாமே அத்த பத்தி பேப்பர்ல இன்னா போட்டுக்கிறான்.

லிங்கம் சார் விகடணுல அம்மா ஆட்சிய புட்டு புட்டு வச்சிகிறான். மந்திரி தந்திரின்னு முப்பது வாரமா ஓட்டிகினு கீறானுங்க. அது சொல்ல அம்மா காண்டாகி கேசு போட்டுகீது, அது கண்டியும் அல்ல அல்லா பொட்டிக்கடைலயும் போலீசு உட்டு மெரட்டிகிரானுங்க. விகடனா வித்தா கடை அம்பேலாம்.

அது சரி முனிம்மா வடநாட்டு நாட்டு நடப்பு என்ன?

பீகாருல லாலு பிள்ளைங்க மந்திரி ஆகிக்கிறானுங்க. ஒருத்தன் பத்தாங்கிளாசு பாஸாம், இன்னொரு புள்ள எட்டாங்கிளாசு பாஸாம்.

முனிம்மா இன்னா சினிமா நூசு........

போடா அவனவன் மயல டப்பா டான்சு ஆடி பெஜாரகிட்டானுங்க இதுல சினிமா நூசு, இந்த பேப்பர பிடி படம் பாத்துகினு போய்கினே இரு.









Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 25 November 2015

யாரைக்கேட்டு பெய்தாய்?

தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழை இந்த வருடம் வெளுத்து வாங்கிவிட்டது.......இதுவரையில்.......மற்றுமொரு தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு என வருணபகவான் ஏஜண்டு மைக்கைப் பிடித்து மண்டையாட்டி சொல்லிவிட்டார்.

சமீப காலமாக இணையத்தில் ஒரே மழை செய்திதான். பல பதிவுகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் நிலைமையை படம் பிடித்து போட்டிருந்தன. மூஞ்சிபுத்தகத்தில் மழை ஸ்டேடஸ் தான் முதலில் இடம் பிடித்து லைக்குகளை அள்ளி சென்றது.

சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகள் நிரம்பி வழிந்தாலும் சென்னையின் தாகத்திற்கு அது ஒரு சோள பொறிதான். இதற்கு காரணங்கள் தேவையில்லை. அடுத்த வருடம் பருவமழை தவறினால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தண்ணீர் லாரி பின்னாடி ஓட வேன்டியதுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம், இந்த இரண்டு வாரங்களில் சென்னை மூழ்கிய செய்திகளையும், அரசின் நிர்வாக செயலிழப்பையும் எதிர்கட்சி தொலைகாட்சிகள் மாறி மாறி காண்பித்து மூளை சலவை செய்துகொண்டிருந்தன. ஆளும் கட்சியோ அம்மா ஆணைப்படி பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி என்று மார்தட்டியது. புரட்சிதலைவி அம்மா நாமம் வாழ்க என்று கொசுறு விட மறக்க வில்லை.

ஆனால் உண்மை நிலை மழையினால் அவதிப்பட்ட மக்களுக்கு தெரியும். அதுவும் தாழ்வான இடங்களில் வீடு கட்டிய மக்கள் நிறையவே அவதிப்பட்டனர். ஒரு காலத்தில் உயர்வான இடம் என்று இருந்தாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒதுங்கியவர்கள் நிலைமையும் இதே கதிதான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விடாது பத்து மணிநேரம் பெய்த மழையில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு மாலை ஐந்து மணிக்கு கிளம்பி மறுநாளில் விடியலில் வீடு வந்து சேர்ந்தவர்கள் நிலைமை மிகவும் மோசம்.

இரண்டு பிரதான கட்சிகளும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் தமிழகத்தை ஆண்டு ஒட்டு வங்கி அரசியலில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பட்டா கொடுத்ததும், சிமண்டு வியாபாரத்தை கையிலெடுத்து தெருக்களை கான்க்ரீட் சாலைகளாக மாற்றியதும், மழைநீர் வடிகால்களை சரி வர அமைக்காததும், அமைத்த வடிகாலகளை சரிவர பராமரிக்காததும் இப்பொழுது பெய்த மழை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்டது.


இருந்தாலும் இந்த சூழலிலும் ஓரளவிற்கு உழைத்த மின்சரவாழிய ஊழியர்களையோ, இல்லை தீயணைப்பு படை வீர்கள் செய்த சேவைகளையோ மருந்திற்கும் ஒரு ஊடகம் கூட பாராட்டவில்லை.

ஆனாலும் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதையெல்லாம் சரிசெய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு இது மாதிரி ஒரு பேரிடர் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும்.

மேலும் ஓட்டுப்போடும் மக்களின் நியாபக சக்தி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.இப்பொழுதிற்கு ஓட்டை அள்ள என்ன வழி?, எப்படி வருவாயை பெருக்கி இலவசங்கள் கொடுக்கலாம்?, எந்த திட்டம் அமைத்தால் சீக்கிரம் கல்லா கட்டலாம்? அதற்கு உண்டான வேலைகளும் ஆலோசனைகளும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரிஸ்ஸாவில் அடித்த ஹெலன் புயலின் பாதிப்பும் அவர்கள் எவ்வளவு விரைவில் இயல்பு வாழக்கைக்கு திரும்பினார்கள் என்பதெல்லாம் நமது "விலையில்லா" மக்களுக்கு தெரிய நியாயமில்லை.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 12 November 2015

கலக்கல் காக்டெயில்-173

கடலூருக்கு வந்த சோதனை

சில வருடங்களுக்கு முன்பு வந்த "தானே" புயல் கடலூரை புரட்டி போட்டு சென்றது. துண்டிக்கப்பட்ட மின்சாரம் வர கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு மேலானது. அந்த சமயமும் இதே அரசுதான் ஆட்சியில் இருந்தது. போர்க்கால நடவடிக்கை என்று சொல்லியே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்தான் கடலூர் இயல்பு நிலைக்கு திரும்பியது. இத்துணைக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த சமயத்தில் முதல் முறையாக சரியாக கணித்து இந்த இடத்தில்தான் புயல் கரையை கடக்கப் போகிறது என்று கணித்தது. இருந்தும் அரசு மெத்தனமாக இருந்து விட்டது.

தற்பொழுது அடித்த மழையில் மறுபடியும் கடலூர் அடிபட்டு இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மறுபடியும் உயிரழந்தவர்களுக்கு காசு என்று அறிவித்துவிட்டு மெத்தனம் காட்டுகிறது.

தவறுகளிலிருந்து இவர்கள் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இது ஆரம்பம்தான் இந்த வருடம் தமிழ் நாட்டில் வழக்கத்தை விட மழை  12 விழுக்காடு அதிகம் இருக்கும் என்று வானிலைமையம் சொல்லிக்கொண்டிருக்கிறது. மறுபடியும் ஒரு தாழ்வுமண்டலம் அந்தமான் அருகே நிலைகொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

அரசு உஷாராக இருக்குமா? பார்க்கலாம்.

நிதீஷ், லாலு, மோடி

நடந்து முடிந்த பீகார் தேர்தலில் நிதீஷ் லாலு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று பி.ஜே.பி க்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்த வெற்றி மத்தியில் ஆளும் கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவுதான். மோடியின் ஆணவத்திற்கு விழுந்த பெரிய அடி.

மதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட அந்த அடையாள அட்டையை நீக்க பி.ஜே.பி ஒன்றும் முயற்சி செய்வதாக தெரியவில்லை, மாறாக ஆமாம் நாங்க அப்படித்தான் என்று உறுதி செய்வதுபோல்தான் சமீபத்தில் அவர்கள் நடவடிக்கை உணர்த்துகின்றன.

கட்சியின் மூத்த உறுப்பினர்களே இப்பொழுது மோடி மீதும் அமீத்ஷா மீதும் கடுப்பில் உள்ளனர்.

பிரதமர் வழக்கம் போல வெளிநாடு போய்விட்டார். இவர்களும் மாறமாட்டார்கள்.

ரசித்த கவிதை

காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்
அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது
ஃபீனிக்ஸின் இறகுகளைக் கேட்கலாமென்றால்
முழுவதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமென்று தெரிகிறது

சாதகப் பறவையை கேட்கலாமென்றால்
பெருமழை வேண்டிக் காத்துக்கிடக்கச் சொல்கிறது

அன்னப் பறவையை கேட்கலாமென்றால்
நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

மானின் விழிகளைக் கேட்கலாமென்றால்
அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடக்கிறது

உன் மனதை  கேட்கலாமென்றால்
அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கறது.

..................................ராம்சின்னப்பயல்

வாவ்..............சின்னப்பயலின் கவிதைகளுக்கு நான் அடிமை.

ட்விட்டரில் படித்தது

அரசியல் போலதான் இணையமும் எப்பவும் எதிர்கட்சி கூச்சல் போடதான் செய்யும் நாம அம்மா மாதிரி எதயும் கண்டுக்காம தோன்றத செஞ்சிட்டு போய்டே இருக்கணும்


ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Sunday 8 November 2015

டீ வித் முனியம்மா பார்ட் -36

முனிம்மா இன்ன இன்னிக்கி நேரத்துக்கே வந்துட்ட....

ஏண்டா செல்வம் இன்னா கேள்வி இது........வியாவாரம் முடிஞ்சிடுச்சி அதான் உன்னிய கண்டுக்கலாம்னு வந்திட்டேன்............

டேய் மீச அல்லாருக்கும் டீ போடுறா.........பாய்,  நாடாரு, லோகு, லிங்கம் சாரு அல்லாம் வந்துகினு இருக்காக பாரு.......

முனிம்மா தீவாளி வியாவாரம் அல்லாம் எப்புடி போய்கினி இருக்குது.....

அது போவுது பாய்.............

இன்னா முனிம்மா பீகாரு தேர்தலுல மோடி புட்டுகினாரா?

ஆமாண்டா லோகு நிடிஷும் லாலுவும் கூட்டணி வச்சிகினு மோடிய அம்பேலு ஆக்கிகினு கீறாங்க........லாலு பிள்ளைங்க கூட கெலிக்கிரானுங்களாம்.

இரு முனிம்மா இப்பதானே மொத ரௌண்டு என்னிகிறாங்க..........

அடப்போ லிங்கம் சாரு மொத ரௌண்டுலேயே இவனுக கத கந்தலா கீது.

இந்த தபா பீகாருல அடி ஒதை குத்து கம்மியாதான் கீது இல்ல....

ஆமாம் பாய் மொத தபா இது போல எலிக்சன் நடந்துகீது.........தமிழ் நாட்டு நெலம இல்ல அங்கிட்டு.

மோடி ஆணவம், உதாரு அல்லாத்துக்கும் சேத்து ஜெனம் வச்சிகீது ஆப்பு.

இன்னா முனிமா மய வெளுத்து வாங்கிக்கினு கீது.....

டேய் லோகு பெய்யட்டும்டா.......அப்பதான் அடுத்த வருஷம் கொடத்த தூக்கிகினு தண்ணி லாரி தெருத்திகினு ஓட வேணாம்........

அது சரி முனிமா இந்த மயக்கே தெருவெல்லாம் நாரிகினு கீது.

அது அப்படிதான் பாய்.........மத்ராசுல எப்பவும் அப்படிதான், கார்பரேஷன் காரன் என்னிக்கு ஒயுங்கா வேல எடுத்துகிறான்.

இன்ன நம்ம தமியு நாட்டு நூசு என்னா?

இன்னாடா இப்போதான் அம்மா கோடநாட்டுல சார்ஜு ஏத்திகினு மல எறங்கிகீது.............இனிதான் நடக்கும் பாரு.

இன்னா முனிமா சின்னம்மா ஊருல கீற சினிமா கொட்டாய் எல்லாம் வலிச்சி வலிச்சி வாங்கிகீதாம்.

அது இன்னா கதை தெர்ல.........நாடார்...........அவங்க ஆச்சி நடக்குது, அப்படிதான் செய்வாக........கேசு வந்தா இருக்கவே இருக்குது துட்டு அத்த வச்சி கேச பூட்டகேசு ஆக்கிடுவாங்க.

ஆமா முனிமா சாராயத்துல வேற காசு கொட்டுது இல்ல........கொமாரசாமி மாறி ஒரு ஆளு மாட்டாமையா போய்டுவாரு........

சரி முனிமா தமிழ் நாட்டுல அடுத்த வருஷம் எலிக்சன் வருது இன்னா கூட்டணி பத்தி ஒன்னியும் பேச்சு காணோம்......

இருடா லோகு இன்னும் டைமு கீது இல்ல........ரெண்டு கயகமும் அடிச்ச துட்ட வச்சிகினு கூவுவானுங்க..........அதுல சில்லற கச்சி உனுக்கு நூறு எனிக்கி முன்நூருன்னு பேரம் பேசுவானுக.........பேரம் படிஞ்சா கூட்டணி........வூட்டனின்னு கூறு கட்டுவானுங்க.........

தளபதி இன்னா அடுத்த ரவுண்டு கட்டுலையா?

வருவாருடா, சைக்கிளு ஓட்டுனாரு, ஆட்டோ ஓட்டுனாரு........இன்னும் ரயிலுதான் ஒட்டல அத்தையும் ஒட்டி பரோட்டா சால்னா அடிப்பாரு.......

கேப்டன் இன்னா சொல்றாரு?

அவரு ரண்டு கச்சியும் வாணாம் தனி வழின்னு சொல்லிகினு கீறாரு.........
கடேசில காசு வாங்கி ஏதோ ஒரு கூட்டத்துல மேர்ஜ் ஆவாரு........தமாசுதான் போ.

அப்பால தீவாளிக்கி இன்னா நூசு.........

அது இன்னாடா வயக்கம் போல நம்ம ஜெனம் தியேட்டர் வாசலுல கூடி கும்மியடிப்பானுங்க..........மீதி ஆளுங்க டிவி முன்ன குந்திகினு இத்துப்போன படத்த பாத்துகினு இருப்பானுங்க. வயக்கமா அதானே தீவாளி.

இன்னா முனிமா தீவாளிக்கி பேப்பருல இன்னா பெசலா போட்டுக்கிறான்.........

டேய் செல்வம் உனுக்கு இன்னாடா எப்பவும் தீபாவளிதான்.






Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 4 November 2015

"பதிவர்" திரட்டி

நமது பதிவுகள் பலபேர்களை சென்றடைய திரட்டிகளின் பணி மகத்தானது. அந்தவகையில் தற்போது புதியதாக வந்துள்ள திரட்டி "பதிவர்"

இதனுடைய முகப்பு மிகவும் எளியதாகவும் நன்றாகவும் உள்ளது.

பதிவர்கள் அனைவரும் பயன் பெற இந்த திரட்டியை உபயோகப்படுத்தலாம்.

பதிவர் திரட்டியை காண இந்த சொடுக்கியை சொடுக்குங்கள்.




Follow kummachi on Twitter

Post Comment

Monday 2 November 2015

கலக்கல் காக்டெயில்-172

அறுபது கோடியிலிருந்து ஆயிரம் கோடி வரை

ஆங்கில நாளிதழில் "JAZZ" சத்யம், லுக்ஸ் திரை அரங்குகளை வாங்கிய செய்தி வந்தவுடன் எதிர்கட்சி தலைவர்கள் ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.

அறுபது கோடிக்கே ஆ..........ஊ...........ன்னு குதிச்சு கும்மாளம் அடிச்ச எதிர் கட்சிகள் இப்பொழுது ஆடுவதற்கு கேட்கவா வேண்டும்.

நீங்க என்ன வேணா செய்யுங்க நாங்க எங்க அரசில் இப்படித்தான் செய்வோம் என்று செய்துகொண்டிருக்கிறார்கள். அதனாலென்ன அடுத்தவர் ஆட்சிக்கு வந்து இன்னும் வேறு ஏதாவது வாங்கிக்கொள்ளலாம்.

அப்படியே வழக்கு என்று வந்தால் குமாரசாமி மாதிரி ஒருவர் மாட்டாமலா போகப்போகிறார்.

இந்த அரசியல்வாதிகள் ஒன்றை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறார்கள், "கொள்ளையடிங்க ஆனா பெருசா அடிங்க" என்று.

ஹூம் வேற........... வேற................

புதிய வெடிகள் 

புதிய வெடிகள் என்று நகைச்சுவை ஒன்று இணையங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி இதை நீங்க பத்தவச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கான்னு எல்லா நாட்டுக்கும் போகும். குழந்தைகள் கிட்ட கொடுத்து பத்த வைக்க சொல்லலாம். செல்பியும் எடுக்கலாம்.  இதோ ஸ்பெஷாலிடியே கடைசி வரைக்கும் இந்தியாவில் வெடிக்காது.

இது கொஞ்சம் ஈசியான வெடி, நமக்கு நாமே வெடிக்கலாம், இதை நீங்க பத்த வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோ கிட்ட போய்தான் வெடிக்கும்.

இதுல மெயின் வெடிகூட ஒரு கட்டு வெடி இருக்கும். நீங்க மெயின் வெடியை பத்தவச்சா அந்த கட்டுல மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.

இந்த வெடியோட சிறப்பம் அம்சமே இதை தண்ணியில நனைச்சு வச்சீங்கன தான் வெடிக்கும், கவனமா இருக்கணும் சில நேரம் "தூக்கி அடிச்சிரும்".

இந்த துணுக்குகள் முதலில் வந்த பொது வெடியின் பேரோடுதான் வந்தது, இப்போ இதையே க்விஸ் போல நடத்தி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.......... இதை யூகிப்பது ஒன்று கடினமான வேலை இல்லை.

கலக்குறாங்கப்பா............

ரசித்த கவிதை 

ஆட்டுதி அமுதே!

ந்த அதிகாலை பயணிகள் ரயிலில் 
சுண்டல் வாடையொடு கலந்து
துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.
குழந்தையான சிறுவனொருவன்
என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
இடுப்புக்குக் கீழே இரண்டு குச்சிகள்.
ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.
சுண்டுவிரலைப் போன்றதான கட்டைவிரல்
வாயைப் போன்றதான ஓட்டைக்குள்
அழுந்திக் கிடக்க
நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.
புதிதாய் வந்தமரும் ஓர் இளைஞன்
தன் ஸ்மார்ட்போனை முடுக்கிவிடுகிறான்.
'டங்காமாரியான ஊதாரி’ எங்கள் பெட்டிக்குள்
வந்து குதித்தான்.
நான் அந்த இளைஞனை
அவன் போனை
அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.
பார்க்கவே கூடாது என்று
முகம் திருப்பியிருந்தபடியால்
பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்
கண்டேன்
அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்
அப்படி... அப்படி...
விளங்காத காலே ஆயினும்
அதை அப்படி ஆட்டு
என் செல்லமே!
நன்றி: இசை 

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment