Pages

Sunday 5 March 2017

கலக்கல் காக்டெயில் 179

சசி இல்லேன்னா சுசி 

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. ஒரு வழியாக ஜல்லிக்கட்டு முடிந்து, ஒ.பி.எஸ், மினிம்மா, பரப்பன ஆக்ராஹார, தினகரன், எடப்பாடின்னு செட்டில் ஆகும் பொழுது மீண்டும் பரபரப்பு ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் நெடுவாசலில் மையம் கொண்டிருந்தது.

அந்த போராட்டம் வலுப்பெற்று அரசை ஆட்டிப்பார்க்கும் வேளையில் அடுத்த புயல் ஆபாச வேடம் தாங்கி இளைஞரை திசை திருப்புகிறது.

பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் தளத்தில் இரண்டு நடிகர்கள் கையைப்பிடித்து இழுத்தார்கள் என்று புலம்பலுடன் தொடங்கி (ஏம்ப்பா நீ கையபிடிச்சு இழுத்தியா?) பின்பு அவர்கள் சில நடிகைகளுடன் கில்மா வேலையில் இருந்த ஒரு சில பிட்டு படங்களைப் போட்டு அடுத்து இந்த நடிகர் இந்த நடிகையுடன் திங்கள் கிழமை வெளியிடுவேன், மற்றுமொரு நடிகர் நடிகையுடன் செவ்வாய்க்கிழமை வெளியிடுவேன் என்று ஒரு அட்டவணையே வெளியிட்டு நெட்டிசண்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்....

மேலும் ஒரு சில பாடகிகள், நடிகைகள் எப்படி வாய்ப்பு பெற்றார்கள் என்ற "casting couch" கோடம்பாக்க பழக்க வழக்கங்களை கொட்டி இருக்கிறார்.

இணையப்போரளிகளின் கவனம் இப்பொழுது சசியை விட்டு சுசியிடம் திரும்பி உள்ளது.

தண்ணீர் பஞ்சம்

கடந்த வருடம் பருவமழை பொய்த்த காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்று நீர் நிலைகளின் இருப்பு சொல்கிறது. கோவை, நெல்லை தவிர மற்ற மாவட்டங்கள் இந்த தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்பொழுது நடக்கும்!!!! அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. முன்னேற்பாடுகள் அவசியம். ஆனால் ஆளும் கட்சியோ தங்கள் பஞ்சாயத்தை தீர்ப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.

வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம். அது சரி அடுத்த தேர்தல் வந்தால் இருக்கவே இருக்கறது கண்டைனர் பணம்............போடுங்கம்மா ஒட்டு....

ரசித்த கவிதை 

சந்திப்பு 

நீண்ட நாட்களுக்குப் பிறகு
அப்பாவின் நண்பர் ஒருவரை
வழியில் சந்திக்க வாய்த்தது
அவரின் மகனாவென
அவரும் கேட்கையில்
இறந்து வருடங்களான
அப்பா குறித்து பகிர்ந்திட
என்னிடம் எதுவுமில்லை
எனினும்
எங்கள் கண்கள்
சந்தித்து மீண்ட
அச்சிறு தருணத்தில்
எனக்குள்ளிருந்த அப்பாவும்
அவருக்குள்ளிருந்த அப்பாவும் புன்னகைத்தபடி
கைகுலுக்கிக் கொண்டதை
என்னைப்போல அவரும்
உணர்ந்திருக்கக்கூடும்.

நன்றி: கே. ஸ்டாலின்

சினிமா

அதேகண்கள் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது, வித்யாசமான கதை. ஆட்டம்போடும் நடிகர்களுக்கு நடுவில் சத்தமில்லாமல் நல்ல கதை களத்தில் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளிவரும் இது போன்ற படங்கள் நன்றாகவே உள்ளன. என்ன ஒரு கூட்டம் இதெல்லாம் தியேட்டரில் பார்க்கமுடியாது என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சொம்படிப்பர்.

அதேகண்கள் ஷிவ்தா நாயர்.

Thursday 2 March 2017

விதிக்குரங்கின் சேட்டைகள்

வீடு வாசல் துறந்து
கடற்கரையில் திரண்டு
நாடு வியந்து நோக்க
அமைதி வழியில் நடந்து
அதிரடியில் அரசாங்கம்
அவசர சட்டம் இயற்றி...
நாடு மெச்சும் வகையில்
வாடி வாசல் திறந்து .
அரசியல் அவலங்களை
அசதியுடன் கடந்து..
இனி வரும் காலங்கள்
இனிதாக இருக்கும் என்று
இறுமாந்து போகையிலே
அடுத்து வரும் அறிவிப்பு
நெடுவாசல் தொட்டு
தமிழ்நாட்டை அழிக்க வந்த
இயற்கை எரிவாயு திட்டமாம்
மறுபடியும் மக்களை
வீடு வாசல் விட்டொழித்து
நடு வீதியில் நிற்க வைக்கும்
நன்மை பயக்கும் திட்டம்!!
வாழ்க்கை சீரமைய
போராட்டங்கள் அவசியம்
போராட்டங்களே வாழ்க்கை ..
என்றாகிப்போனது.....
விஞ்ஞான வளர்ச்சியின்
பெயரில்.....
வியாபாரிகளின் உயரிய
நோக்கில்....
விதிக்குரங்கின்.................
சேட்டைகள்