Pages

Sunday 28 July 2019

கலக்கல் காக்டெயில்-191

Lion King

லயன் கிங் முதலில் வந்தது 1994ல், அப்பொழுது எனது மகனிற்கு நான்கு வயது,  இந்த படத்தின் "ஒளிநாடா" அவனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் காலையில் முழிப்பதே இந்த படத்தின் முதல் பாட்டு ஒலி கேட்டுத்தான், சுப்ரபாதம் போல் ஒலிக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் நான்கு முறையும், பள்ளிநாட்களில் இரண்டு முறையும்  வீட்டில எல்லோரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.

அதற்குப் பிறகு இதனை லைவ் ஆக ஹாங்காங்கிலிலும், லாஸ் ஏஞ்சலிசிலும் நிறைய முறை பார்த்தாகிவிட்டது. இன்று சிக்காகோவில் மறுபடி வேறு வித அனிமேஷனில் உருவாகியிருக்கும்  அதே படம் பார்த்தேன்,  இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு 3D வடிவில் லயன்கிங்,  ஒரு புது அனுபவம்.

லயன்கிங், ஜங்கிள்புக், டாம்அண்ட் ஜெர்ரி எல்லாம் எப்பொழுது பார்த்தாலும் நம்முள் இருக்கும் "ரெட்டைவால் ரங்குடுவை" உசுப்பி விடுகிறது என்றால் மிகையாகாது.

காப்பீடு முக்கியம்

மருத்துவ காப்பீடு இப்பொழுதெல்லாம் மிகவும் அத்யாவஸ்யமான ஒன்று. அது அம்பாசமுத்திரத்தில் இருந்தாலும் சரி இல்லை அண்டார்டிகாவில் இருந்தாலும் சரி. பணியில் இருந்த பொழுது இந்த பிரச்சினை வந்ததில்லை. கவலை இல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்பொழுது ஓய்வு பெற்ற பின் மகளுடன் இருக்க சிகாகோ வரும் பொழுதுதான் பிரச்சினை. இந்தியாவிலிருந்தே காப்பீடு எடுத்துக்கொண்டு வரலாம் என்றால், இங்கு அதை சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் அங்கு கட்டும்  பிரமீயம் நேரு கணக்கில் (அது என்ன எப்பவும் காந்தி கணக்கு) போய்விடும். ஆதலால் இங்கு வந்தவுடன் எடுக்கலாம் என்று அசால்ட்டாக இருந்துவிட்டேன். ஆனால் பிரச்சினை  ப்ளேனில் கொடுத்த சீஸ் மசாலாவில் வந்தது. அதை சாப்பிடும் பொழுது எனது கிரீடத்தை இழந்து விட்டேன். இது ஒன்றும் மனிமுடியல்ல, பெரிய தலைப்பு செய்தியாக வர, கடவாய்ப்பல்லில் ரூட் கெனால் செய்து மேல இட்ட கிரௌன் சீசுடன் ஒட்டிக்கொண்டு வந்து விட்டது.  சரி அப்படியே பெவிக்கால் போட்டு ஒட்டிக்கலாம் என்று பல் டாக்டரிடம் போனால்,  அவர் அது அப்படி ஒன்று சுலபமல்ல,  உங்க பல்லுக்கு பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து வேலை செய்யணும், ஆதலால் இவ்வளவு ஆகும் என்று ஒரு பில்லைக் கொடுத்தார். அந்த பில்லில் நம்ம வூருல 32 பல்லையும் தங்கத்திலேயே செய்து கொடுப்பார்கள்.

என்ன செய்ய அடுத்த முறை வரும் பொழுது "சீஸ்" பக்கம் போகக்கூடாது, இல்லை  அலிக்கோவில் முறைவாசல் செய்துவிட்டுதான் கிளம்பவேண்டும்.

ரசித்த கவிதை 

தாமரைப்பூவில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
என் உள்ளத்திலே நீ நின்று ஆடுகிறாய்

நன்றி: ??????


தமிழ் திரை உலகம்

"உலக்கை நாயகன்" பெரிய முதலாளியில் (BIG BOSS) எத்தனையோ பேரை கொண்டு வந்து கல்லா கட்டுகிறார், அனால்  இன்று வரை சின்னையா புகைவிடும் ரேஞ்சுக்கு இன்னும் ஒருத்தரை கொண்டு வரவில்ல என்பது ஒரு பெரிய குறையே..................





Thursday 25 July 2019

ரிலாக்ஸ் ப்ளீஸ்.............

ரிலாக்ஸ் ப்ளீஸ்  என்று ஒரு வலைத்தளம், ஆனால் அவர் எப்பொழுதும் முறுக்கி, இறுக்கி டென்சனா..........இருப்பார். அவருடைய பெரும்பாலான பதிவுகள் நான்தான் அறிவாளி, மற்றவன் எல்லாம் அறிவிலி, என்ற தொனியிலேயே இருக்கும்.

கட்டுமரம், பகுத்தறிவு, பெரியார் மண், நாத்திகன் இந்த சப்ஜெக்டுகளுக்கு எதிராக ஏதாவது ஒரு பதிவு வந்தால் தன் மனதை ரிலாக்சாக வைத்துக்கொண்டு பின்னூட்டப் பெட்டியில்  வந்து துப்புவார். பின்னர் ஆங்கில அகராதியில் தேடிப்பிடித்து எல்லா கெட்டவார்த்தைகளும் பிரயோகித்து ஒரு பதில் பதிவு இடுவார். ஆங்கிலத்துல திட்டனும் அப்போதான் நம்மள அறிவாளின்னு உலகம் ஒத்துக்கும், தமிழில் திட்டினால் தரக்குறைவு, என்று தாமாகவே எண்ணிக்கொண்டு ஆங்கிலப்படங்கள் பார்த்துக் கற்றுக்கொண்ட ஆங்கில அறிவை பதிவுகளில் அள்ளித் தெளிப்பார்.

இவர் ஒரு வித்யாசமான உபீஸ் போல என்று ஒரு எண்ணம் உண்டு.

சமீபத்தில் அவருடைய பதிவில் வந்த பொன்மொழிகள்



 Listen idiots!

Once one become a rationalist, there is NO fucking WAY to come back and worship your fucking God! If someone goes back, that only means he/she was fake from the beginning!

Leave the people who don't care about pleasing your fucking God! 

அன்பரே ரிலாக்ஸ் ப்ளீஸ்....

அத்தியும் அத்தையும்

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தண்ணியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எழுபதில் வெளியே வந்த பொழுது எனது அத்தையும் மாமாவும் காஞ்சிபுரத்தில் இருந்தார்கள். நிறையமுறை அங்கே வந்தால் சுலபமாக தரிசனம் செய்து வைப்பதாக சொல்லி கூப்பிட்டார்கள்.  அவர்கள் எத்தனை முறை அழைத்தும் அப்பொழுது போக முடியவில்லை. மாமா அப்பொழுது காஞ்சிபுரத்தில் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமும் கம்மியும் கூட, பெரியார் மண் என்ற பிரயோகம் எல்லாம் புழக்கத்தில் இல்லாத நேரம். எனது குடும்பத்தில் என்னைத் தவிர எல்லோரும் சென்று அத்தியை கண்டுகொண்டார்கள்.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு 2019 ல் அத்தி தண்ணியிலிருந்து தற்பொழுது வெளியே வந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு முறை காஞ்சி வழியாக சென்னை பெங்களுரு பயணம், இருந்தும் அத்தியை தரிசனம் செய்யமுடியவில்லை. காரணம் எனக்கும் கூட்டத்திற்கும் ஆகாது. உலகத்தில் எங்கு சென்றாலும் க்யூ (வரிசை) வில் ஒழுங்கு கடை பிடிப்பதை பார்க்கலாம், இந்தியாவைத் தவிர. இங்கு வரிசைத் தாவுவது ( Que Jumping) என்பது கல்யாணங்களிலும் மற்றைய விழாக்களிலும உறவினர்களிடையே " எனக்கு அந்த கட்சியின் "வட்ட சதுர செயலாளர்" ரொம்ப வேண்டப்பட்டவர், நான் அங்கே வரேன் என்று சொன்னவுடன் ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் கடந்து என்னை தரிசனம் செய்ய வைத்தார் என்று சுய தம்பட்டம் சப்ஜெக்ட்.

இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில்  செய்தி வந்து கொண்டிருக்கிறது. பெரியார் மண், சொறியார் புண் என்று பிதற்றிக்கொண்டிருந்த பக்கூத்தறிவு கூட்டம்தான் சிபாரிசு கடிதத்துடன் முன்னால் முண்டியடித்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.

தட்டில் பாப்பான் பிச்சை எடுக்கிறான் என்று சொல்லி வரிசையில் முந்திய பரிகாரத்திற்கு துட்டு இட்டிருக்கிறார்கள்.

டேய் போலி பகூத்தறிவாளிகளா, உங்கள் முகமூடிகள் கிழிந்து கொண்டிருக்கிறது, இன்னும் கோவணம் கிழியும் முன்பே, உங்களது பகுத்தறிவு போராளி பெருச்சாளிகளை உஷார் செய்யுங்கள்.

Wednesday 24 July 2019

பரியேறும், பேட்ட 96

பெங்களூரிலிருந்து சிகாகோ 22 மணி நேர பயணம் முதலில் நான்கு மணி நேரத்தில் டோஹா, பின்னர் இரண்டு மூன்று மணி நேரங்கள் கழித்து டோஹவிலிருந்து 15 மணி நேர பயணம், சற்று கடினமானது தான். என்ன வேளைக்கு சாப்பிட்டுவிட்டு, விட்டுவிட்டு தூக்கம், அவ்வப்பொழுது திரையில் இருக்கும் படங்களில் ஒரு மூன்று படங்கள் பார்க்க நேர்ந்தது. அந்த படங்களை பற்றிய எனது பார்வை.

ரியேறும் பெருமாள், வெகுகாலமாக பார்க்கவேண்டிய படம் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. ப. ரஞ்சித் தயாரிப்பில் மாரிதாஸ் இயக்கத்தில் "பரியேறும் பெருமாள்". ரஞ்சித் படமென்றால் என்ன சப்ஜெக்ட் என்பதை கண்டுபிடிக்க ஒன்றும் மெனக்கெட வேண்டாம், அதேதான் ஜாதி வெறிதான். இவர்கள் எல்லாம் இதே மாதிரி படம் எடுத்துகொண்டு இருக்கும் வரை இந்த பிரச்சினை அணையாமல் இருக்கும். காலத்தின் கட்டாயம் கூட.

இனி படத்தை பற்றி, மிகவும் எதார்த்தமான நடிப்பில்  கதிரும், ஆனந்தியும் மிளிர்கிறார்கள். ஆனந்தியை தமிழ் சினிமா இன்னும் சரியாக உபயோகிக்கவில்லை. சற்றும் மிகைப்படுத்தாத நடிப்பு, ஓராயிரம் உணர்சிகளை காட்டும் கண்கள். கதிரும், யோகிபாபுவும் கல்லூரியில் கடைசிபென்ச் மாணவர்கள், இயல்பான நடிப்பு, எங்களது கல்லூரி காலம் நினைவிற்கு வருகிறது. படத்தில் பிரச்சார நெடி சற்றே அதிகம்தான், ஆனால் தமிழ் சினிமா காலம் காலமாக இதை தவிக்க முயற்ச்சி செய்யவில்லை, சில  இயக்குனர்களை தவிர.


பேட்ட , வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது தலையாய கடன்,  பேட்ட வந்த பொழுது அதை கடை பிடிக்க முடியவில்லை. கிராம வேலைகளில் மும்முரமாக இருந்ததால் தவற விடப்பட்டது. இப்பொழுது விமானத்தில் பார்க்க நேர்ந்தது.

அக்மார்க் சூப்பர் ஸ்டார் படம். பிரேமுக்கு பிரேம் தலைவரின் அதிரடி. படத்திற்கு வேறெதுவும் தேவையில்லை. சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா எல்லாம் வந்து போகிறார்கள். கூடவே சசிகுமார், பாபி சின்ஹா, விஜய்சேதுபதி என்று  பெரிய பட்டாளம் கூடவே வருகிறார்கள். ஆனால் படம் முழுவதும் ரஜினி, ரஜினிதான். பாபி சிம்ஹா வீட்டிற்கே சென்று மிரட்டுவது, அதகளம். சர்க்கரை சற்று தூக்கலா ஒரு டீ என்று பாபி சிம்ஹா அம்மாவிடம் கலாய்ப்பதும், பின்னர் டீ கேன்சல் என்று நடப்பதும், டிபிகல் ரஜினி.

96

90 கிட்ஸ் காதல் கதை, விஜய் சேதுபதி, த்ரிஷா, நடிப்பில் ஒரு காதல் கதை. அரைச்சு கரைச்சு தமிழ் சினிமா கொத்சு,  சட்டினி செய்த கதைதான். புதியதாக ஒன்றுமில்லை. என்ன த்ரிஷாவிற்கு வெகு பொருத்தமான வேடம், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். விஜய்சேதுபதி வெகு வருடங்கள் கழித்து த்ரிஷாவை பார்க்கும் காட்சியில் காட்டும் எக்ச்பிரசன்ஸ் என்ன என்று புரியவில்லை.

படத்தின் கடைசி ஒரு 45 நிமிடம் எதற்கு என்று நமக்கும் புரியவில்லை, இயக்குனருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.




Friday 19 July 2019

அண்ணாச்சி

சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி வாழ்க்கை "பிறன்மனை நோக்கா பேராண்மை" கருத்தில் கொள்ளாததன்  விளைவு.

சாதாரண மளிகைக்கடை வைத்து தொழிலை தொடங்கி, பின்னர் சின்னதாக கே.கே நகரில் ஒரு  சிற்றுண்டி விடுதியை தொடங்கி பின்னர் அதை விஸ்தரிக்க செய்வதற்கு எத்தனை உழைப்பும், சிந்தனையும் வேண்டும்.

70 களில் கே.கே. நகரில் தொடங்கிய மளிகைக்கடையை அடுத்தே தனது முதல் ஓட்டலை திறக்கிறார். சென்னையில் பணிபுரிந்துகொண்டிருந்த பொழுது வளசரவாக்கத்தில்  கிரிக்கட் விளையாட விடுமுறை தினங்களில் மோட்டர்பைக் சகிதமாக ஒரு புல் டீம் கிளம்புவோம். அப்பொழுதுதான் கே.கே நகர் பணிமனையை அடுத்த அந்த சாலை போடப்பட்ட புதிது, காலை  ஏழு மணிக்கு கிளம்பி கே.கே நகர் சரவணபவனில் காலை சிற்றுண்டியை முடித்து வளசரவாக்கம் மாந்தோப்பை நோக்கி கிளம்புவோம். அந்த ஓட்டலில்  ஒரே ஒரு சின்ன ஏசி ஹால்தான் இருக்கும், மொத்தம் நான்கு மேஜைகள். அப்படி ஒரு வாரம் போகும்போதுதான் எங்களது பக்கத்து மேஜையில் (ஒரே காலியான மேஜையில்) டைரக்டர் எ.ஜெகநாதனும், நடிகரும் செந்தாமரையும் அமர்ந்து ஏதோ சீரியசாக "இந்த ஏகாம்பரம் பேரை சொன்னா" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பிறகு அது போல அந்த சரவணா பவனில் நிறைய கதை விவாதங்களை பார்த்திருக்கிறோம். அப்போழுதே அந்த ஓட்டல் சிற்றுண்டிகள் சுவையாக இருக்கும். பின்னர் எங்களது கிரிக்கட் டீம் சமீபத்தில் உலககோப்பையை இழந்த இந்திய அணியைப்போல சிதறி, வேலை நிமித்தமாக பலர் அமேரிக்கா, ஆஸ்திரேலியா, அபுதுபாய், அண்டார்ட்டிக்கா என்று சிதறிவிட்டோம்.

பின்னர் சில வருடங்கள் கழித்து தாய் நாடு திரும்பிய பொழுது சரவணா பவன் என்ற பெயரில் தி. நகர், பீட்டர்ஸ் ரோடு என்று மேலும் சில சரவணபவன்கள். கல்லா  பெட்டி அருகில் பெரிய கிருபானந்தவாரியார் படம் இருக்கும், அருகில் அண்ணாச்சி அமர்ந்து கொண்டிருப்பார். பிறகு சென்னையில் பல இடங்கள், டெல்லி, அமேரிக்கா, துபாய் என்று அண்ணாச்சி தனது வியாபார கரங்களை நீட்டி கிட்டத்தட்ட உலகமெங்கும் வியாபித்து விட்டார். இது சாதாரண விஷயமல்ல.

அதே சமயம் அண்ணாச்சி, முதலில் கிருத்திகா, பின்னர் ஜீவஜோதி விவகாரமும் பெரிதாகிக்கொண்டிருந்தது. அப்பொழுதே வாரியார் சுவாமிகள் அண்ணாச்சியிடம் அடுத்தவன் பெண்டாட்டி மேல் ஆசை படுவது தவறு என்று சொன்னதாக செய்திகள் வந்தது.

அண்ணாச்சியின் ஜோதிட நம்பிக்கை, பெண்ணாசை  அவரது  அறிவுரைக்கு செவிமடுக்கவில்லை போலும். பின்னர் நடந்த வாய்தா, வழக்கு சரித்திரம். அண்ணாச்சி காசைக்கொண்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்று நம்பியிருந்ததாக தெரிகிறது.

இந்த வழக்கில் காவல்துறைக்கு கிடைத்த தடயங்களை வைத்து மிகவும் வலுவான குற்ற பத்திரிகை தயாரித்தார்கள். வழக்கும் அண்ணாச்சிக்கு எதிராக திரும்பி தண்டனை வழங்கியது. இடையில்  அண்ணாச்சி தடயங்களை அழிக்க, வழக்கை  வாபஸ் வாங்க ஜீவஜோதியை தாமாகவே சென்று மிரட்டியது ஆக!! எல்லாவற்றிற்கும் அவர் ஈட்டிய பொருள் காக்கவில்லை.

கடைசியில் அவரது ஆயுள் தண்டனையை சிறையில் கழிப்பதை தவிர்க்க  (உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தும்) தனது முயற்ச்சியை மேற்கொண்டார்.

இருந்தும் விதி வலியது.


Monday 8 July 2019

கலக்கல் காக்டெயில்-190

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் 

மத்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறில் மேற்கோள் காட்டி நடப்பு ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை பாராட்டியும் நக்கலடித்தும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. "யானை புக்க புலம் போல" வரிகள் விதிப்பது தவறு என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே" என்று தொடங்கும் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.நிதியமைச்சர் அவரது பெயரை "பிசிர் ஆந்தையார்" என்று உச்சரிப்பு தெரியாமல் உளறுகிறார் என்று "தமில் வால்க" கூட்டம் நக்கலடித்துக் கொண்டிருக்கிறது. அவரது இயற்பெயர் ஆந்தையார், அவரது ஊர் பாண்டிநாட்டில் உள்ள பிசிர் என்று இருந்த ஊர். அதனாலாயே அவர் பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டார். இப்பொழுது அவரது உச்சரிப்பு சரியா? தவறா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அனால் அந்த செய்யுளுக்கு பொழிப்புரை கேட்ட பொழுது நமது முன்னாள் "காற்றில் கறந்த" அமைச்சர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே "ராஜா, தெய்வீக சிரிப்பையா உமக்கு".


இந்த பட்ஜெட் பற்றிய கருத்து எதிர்கட்சிகள்: இது கார்பரேட்களுக்கான பட்ஜெட்
ஆளுங்கட்சி: வளர்ச்சிக்கான பட்ஜெட்

உலகக் கோப்பை

இலங்கை கிரிக்கட் குழு ஒரு மொக்கையான டீம். நேற்றைய அவர்களுடைய ஆட்டம் டாஸ் வென்ற நல்ல நிலைமையை கோட்டை விட்டதிலிருந்தே தெரிகிறது அவர்களது திறமை. ஆனால் சிறீலங்காவில் உள்ள சிங்களர்களைவிட தமிழகளுக்கு இலங்கை  டீம் மேல் அபார  நம்பிக்கை. சமீபகாலத்தில் அவர்கள் சமூக வலைதளங்களில்  இந்தியாவை நக்கல் அடிப்பதை பார்த்தால் தெரியும் அவர்கள் இந்தியாவின் மீதுகொண்டுள்ள வெறுப்பை, இது கிரிக்கட் மட்டுமல்ல இந்திய அரசியல், தமிழ அரசியல் என்று அவர்கள் நக்கல் செய்வதை பார்த்தால் புரியும். திராவிட அரசியல்தான்  தொப்புள் கொடி, அக்குள் முடி என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறது, மற்றபடி அவர்கள் நம்பளை "*அப்டமன்கார்டாக" கூட மதிப்பதில்லை. (*கிரிக்கட் விளையாடியவர்களுக்கு புரியும்)

ரசித்த கவிதை


கூர்

நீரோடு நீராடி
முற்றும் துறந்து துறவியானது
தன் கூராடை களைந்த
ஆற்றின் கூழாங்கற்கள்..!

நன்றி:
- ச.மோகனப்பிரியா

திரையுலகம்

சிந்துசமவெளி சர்ச்சையை  தொடரும் அமலா பால் "ஆடையில்"


Friday 5 July 2019

நான்காம் கலீனரும் கல் தோசையும்

தி.மு.க வில் யாருக்கு பதவி தந்தாலும் அதைப்பற்றி கருத்து சொல்லும் உரிமை தி.மு.கவினருக்கு மட்டுமே உண்டு----------தோசை மாறன்

சரிதான் அவரு இன்னா சொல்றாருன்னா உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுத்ததற்கு குறை சொல்லும் உரிமை இன்பநிதிக்கு கு...கழுவிவிடும் தோசைமாறன் வகையறாக்களுக்கு மட்டுமே உண்டாம்.

எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. இந்திரா காந்தி தொடங்கி, அன்புமணி, ஒபிஎஸ் மகன் வரை அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்கள் என் குடும்ப வாரிசுகள் பட்டத்திற்கு வர இது ஒன்றும் சங்கரமடமல்ல என்று பிலிம் காட்டவில்லை.

தாத்தா தொடங்கி அப்பன் வரை என் மகனோ மருமகனோ பதவிக்கு வரமாட்டார்கள் என்று வாக்குறுதி கொடுத்து தொண்டர்களை ஏமாற்றவில்லை.

தி.மு.கவிற்கு கோடிகளில் சொத்துக்கள் உண்டு. அதற்கு இப்பவே வாரிசுகளை தயார் செய்யணும், இல்லையென்றால் நடுவில் வேறு யாராவது ஆட்டையை போட்டு விடுவார்கள். மேலும் இதெல்லாம் "கிச்சன் காபினெட்" முடிவு என்பதை ஊரறியும்.

உபீசுகளின் உண்மை நிலை அறிந்தே சுடாலின் அறிவித்திருக்கிறார், அப்படியே அந்த பொருளாளர் பதவியையும் செல்விக்கோ, அருள்நிதிக்கோ கொடுத்தீர்கள் என்றால் வேலை முடிந்தது.

கணியக்காவிற்கு எம்.பி யோட சரி, சும்மா பொத்திக்கிட்டு இருக்கணும்.

போண்டா வாயன் இப்பொழுதே உதயநிதிக்கு அடிவருட ஆரம்பித்துவிட்டார். இல்லையென்றால் அவருக்கு ஆப்பு அடிக்கப்படும். ஏற்கனவே அவரது மகன் தேர்தலில் வெற்றிபெறாமல் இருக்கவேண்டிய ஆயத்தங்களை செய்தாகிவிட்டது.

கோவாலுக்கு ராஜ்யசபா எலும்புத்துண்டு போட்டாகிவிட்டது, இல்லையென்றாலும் சற்றுநேரம் குரைத்துவிட்டு ஓய்ந்துவிடும். இருந்தாலும் அவர் வெளி ஆள்.

அடேய் இணைய அல்லக்கைகளா அப்படியே முட்டுகொடுத்துகிட்டு இருங்க. உங்களது சம்பளம் 200 லிருந்து 250  ஆக உயர்த்த நான்காம் கலீனர் ஆவன செய்வார். ஆனா நல்லா கழுவனும் OK. தோச புரிஞ்சுதா.........நல்ல சோப்பா வாங்கி வச்சுக்க.....ஆமா.


Thursday 4 July 2019

உலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈழமும்

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதி இடத்தை பங்களாதேஷ் அணியை வென்று உறுதி செய்துவிட்டது. இதுவரையில் நமது பலவீனங்களை உணர்ந்து எல்லா அணிகளிடனும் நன்றகாவே ஆடினார்கள், இங்கிலாந்து நீங்கலாக. வழக்கம் போல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ரசிகர்கள் புகைவிட ஆரம்பித்து விட்டனர். இதில் பாகிஸ்தானும், பங்களாதேஷ் அணிகள் இந்த போட்டிகளில் பிரமாதமாக ஆடினார்கள், அனால் இலங்கை அணி சொதப்பிய சொதப்பல்கள் கிரிக்கட் உலகம் அறிந்தது. இங்கிலாந்தை  வென்றது அவர்களின் ஆட்டம் அன்று சிறப்பாக இருந்தது. பங்களாதேஷ் ரசிகர்களும், பாக் ரசிகர்களும் சற்று அடங்கிவிட்டார்கள், ஸ்ரீலங்கா ரசிகர்கள்?.

இப்பொழுது வழக்கம்போல இந்தியா, ஸ்ரீலங்கா ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளார்களோ இல்லையோ, ஸ்ரீலங்கா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். சமீபத்திய இந்திய ஸ்ரீலங்கா போட்டிகளின் முடிவுகள் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் முகநூலில் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ ஓவியா "பெரிய முதலாளி" வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மையத்தாரின் ஆஸ்தான ஷோவிற்கு பார்வையாளர்கள் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்பொழுது நடக்கும் பெரிய முதலாளியில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாச்லியா பங்குபெறுகிறார். இலங்கை கிரிக்கட்டில் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களுக்கு, இலங்கை தோல்விமுகம் காணும் பொழுது சிறிது லாஸ்லியாக்கும் "ஜொள்ளுகிறார்கள்".

"பேண்டவர்" ஆறாம் தேதி வரை லாஸ்லியா வெளியேறாமல் பார்த்துக்கொள்வது அவருக்கும் இலங்கை கிரிக்கட்டுக்கும் நல்லது.

அது சரி அது என்ன இத்துப்போன ஈழம்?, அதற்கு நம் தொம்பிகளை தான் கேட்கவேண்டும். ஆமைக்கறியார் தலைவர் எப்படி சம்பாதித்தார் என்று சமீபத்திய செய்திகள் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது.