Pages

Monday 26 July 2010

கிளம்பிற்றுகாண் ...............................போற்றி

திருக்குவளை தந்த திருமகனே போற்றி


திருவாரூர் கண்ட பெருமானே போற்றி

கழகம் வளர்த்த கனவானே போற்றி

கலை வளர்த்த கலைமகனே போற்றி



செந்தமிழ் வளர்த்த செம்மலே போற்றி

தனி ஈழம் கண்ட தலைவா போற்றி

தமிழினம் காக்கும் தலைவா போற்றி

வாழும் திருவள்ளுவரே போற்றி



ஒய்வுக்கே ஓய்வளித்த ஒளியே போற்றி

சூரியனையே துயிலெழுப்பும் சூரரே போற்றி

குடும்பம் வளர்க்கும் குணவானே போற்றி

அனைவரையும் அமைச்சராகிய அப்பனே போற்றி



சினிமாவை குத்தகை எடுத்த குருவே போற்றி

பேரர்களை தயாரிப்பாளராக்கிய தயாநிதியே போற்றி

தொலைக்காட்சி தொண்டு புரியும் தொண்டமானே போற்றி

பொது சொத்தை (தன்)மக்களுக்கே வழங்கிய பாரியே போற்றி



கோடிகளில் வாழும் கோமானே போற்றி

ஓட்டளித்தவர்களை ஓட்டாண்டியாக்கிய ஒரியே போற்றி

காப்பீட்டில் காசடித்த கண்ணாளா போற்றி

ஆயா (சோனியா) விரும்பும் ஐயாவே போற்றி



உமிழ்நீரில் தமிழ் சொரியும் உத்தமரே போற்றி

மானாட மயிலாட தந்த மன்னவனே போற்றி

நமீதாவை நடுவராக்கிய நாயகனே போற்றி

நான்கு மணியில் சுதந்திரம் கண்ட தியாகி போற்றி



உட்கார்ந்த வள்ளுவனை சிம்ரனாக்கியவா போற்றி

ஊருக்கு தமிழ் உபதேசம் தந்த தலைவா போற்றி

பேரர்களுக்கு ஆங்கிலம் தந்த பெரியவா போற்றி

கோமணத்தை உருவிய கோமானே போற்றி



என்னே சொல்வேன் உன்புகழை போற்றி

டாஸ்மாக்கில் தண்ணியடித்து போற்றி

தேர்தல் நேரம் தரும் காசே போற்றி

லெக் பீசு பிரியாணியே போற்றி



கவுந்து படுக்கும் கண்மணிகளே போற்றி

கூட்டணி கட்சிகள் மானமே போற்றி

ஓட்டளிக்கும் ஓட்டாண்டிகளே போற்றி

போற்றி போற்றி போற்றி போற்றி



வாலி, வைரமுத்து, தமிழன்பன் ரேஞ்சுல ஒரு கவிதைப் பாடனும்முனு தோணிச்சு அதான் இந்தக் கவிதை. நாங்களும் புகழ் பாடுவோம்ல.

12 comments:

  1. கும்மாச்சிக்கு மேலவை சீட் ஒன்னு பார்ர்ர்ச்ச்சல்ல்ல்ல்.:), தல எங்கியோ போய்ட்டே...

    ReplyDelete
  2. ஜெ நன்றி , மேலவையில் இடம் கிடைத்தவுடன் ஏதாவது உதவி வேணும் என்றால் சொல்லுங்க தலை

    ReplyDelete
  3. allu allu allu allu thallu thallu thampuduchchi thallu.... thala kalakkitteenga athula kurippaa //கோமணத்தை உருவிய கோமானே போற்றி // engeyo poyitteenga

    ReplyDelete
  4. இப்போதைக்கு நான் பதிவு போட்டா, வந்து படிச்சிட்டு ஓட்டும், பின்னூட்டமும் போடுங்க.....:)

    ReplyDelete
  5. பின்னிட்டீங்க...

    ReplyDelete
  6. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல

    ReplyDelete
  7. பித்தன், நசரேயன், ஜெ, ராமசாமிகண்ணன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. உங்களுக்கு கட்டாயம் அடுத்த தமிழ் மாநாட்டில் கவிதை படிக்க வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  9. வருங்கலத்தில் எதுவும் பெரிய திட்டம் இருக்கோ ! நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. என்னே சொல்வேன் உன்புகழை போற்றி

    டாஸ்மாக்கில் தண்ணியடித்து போற்றி

    தேர்தல் நேரம் தரும் காசே போற்றி

    லெக் பீசு பிரியாணியே போற்றி


    ...... அப்படியே நாட்டில் நடப்பதை, "வஞ்ச புகழ்ச்சி அணி"யில் டார் டாரா கிழிச்சி காயப் போட்டுருக்கீங்க.... சூப்பர், பா!

    ReplyDelete
  11. போற்றி.. போற்றி.

    ReplyDelete
  12. கலைஞரை கலாய்த்த கவிதையே போற்றி...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.