Pages

Thursday 16 August 2012

பயணக்கட்டுரை—இன்ஸ்பரூக், ஸ்வரோஸ்கி, எங்கில்பர்க்


வெனிஸ் நகரத்தைவிட்டு மதியம் புறப்பட்டு இத்தாலியின் வடக்கு எல்லை ஓரமாக ஆல்ப்ஸ் மலைதொடர்ச்சி பின்தொடர சலசலக்கும் நதிகளின் ஊடே ஒரு இனிய பயணம். விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சிறு சிறு நதிகள்தான் ரைன் ஆற்றின் நதிமூலம்.


இங்கு ஆஸ்திரியாவின் எல்லைக்குள் நுழையும் ப்ரென்னர்பாஸ் என்கிற இடம் ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்தது. ஆல்ப்ஸ் மலைகளின் பள்ளத்தாக்குகளின் ஊடே ஓடும் ரயில்கள் ஒரு கண்கொள்ளா காட்சி. இங்கு இருக்கும் ஒரு ஸ்டேஷனில்தான் ஹிட்லரும், முசோலினியும் சந்தித்து பின்னர் உலக நாடுகளுக்கு எதிராக இத்தாலி ஜெர்மனியுடன் இணைந்தது இரண்டாம் உலகப்போரின் ஒரு கொடுமையான நிகழ்வு. ஹிட்லர் ஆஸ்திரிய நாட்டில் பிறந்தவர் என்பது கூடுதல் தகவல்.

அன்று மாலை இன்ஸ்பரூக் என்ற இடத்தை அடைந்தோம். அழகிய சிறு நகரம். ஆஸ்திரியா நாட்டின் தைரோல் மாகாணத்தின் தலைநகரம். இங்கு ஒரு அழகிய தங்கக்கூரை அமைந்த ஒரு சிறிய அரண்மனை ஒரு அபாரம், இரண்டு கட்டிடங்கள் தள்ளி அமைந்திருக்கும் விடுதி உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த அதி நவீன விடுதியாகும்.

இந்த தைரோல் மாகானத்தில்தான் “Sound of Music” என்ற பிரபல திரைப்படம் எடுக்கப்பட்டது.

அடுத்தநாள் காலை சுவரோஸ்கி என்ற இடத்தில் உள்ள “World of Crystals”  பொருட்காட்சி. இங்கு ஏதாவது வாங்க வேண்டுமென்றால் பொடிநடையாக சுவிஸ் சென்று நம்ம ஊரு பெரிய தலைகள் வங்கிக்கணக்கில் ஆட்டையைப் போடவேண்டும். அது இயலாத காரணத்தால் எல்லா பொருட்களையும் ஒரு ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்கவே முடிந்தது.

ஆஸ்திரியாவில் இருந்து புறப்பட்டு சுவிட்சர்லாந்து நோக்கி ஒரு மூன்று மணிநேர பயணம். முதலில் அருகில் உள்ள மலை உச்சிக்கு கேபிள் காரில் சென்று குளிருக்கு பழகிக்கொண்டோம். மலை உச்சியில்  உள்ளூரு மலை வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பும், ஒயினும், உருக்கிய வெண்ணையில் தோய்த்த ரொட்டியும் இன்னும் இனித்துக் கொண்டிருக்கிறது. 

அடுத்த வரும் நாட்களில் ஐரோப்பாவின் உயரமான சிகரத்தில் நமது உடல் பழகிக்கொள்ளவே இந்த மலை உச்சி பயணம்.
-----------பயணம் தொடரும்.

14 comments:

  1. அருமை...அருமை...
    தொடர்கிறேன் ...

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி எஸ். ரா ஸார்.

    ReplyDelete
  3. படங்கள் அருமை, கட்டுரையும்தான்...

    ReplyDelete
  4. தொடருங்கள். கூடவே வருகிறோம். நன்றி. (TM 4)

    ReplyDelete
  5. ஜே வருகைக்கு நன்றி, ஆல்ப்ஸ் மலைகள் அழகு. படங்கள் போடுகிறேன்.

    ReplyDelete
  6. தனபாலன் வருகைக்கு நன்றி. உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. போட்டோவுக்கு தலைப்பு கொடுங்கள்.தாங்கள் தரும் போட்டோ எல்லாம் பெங்களுரா,ஊட்டியா?
    வாழ்க வளமுடன்.
    கொச்சி தேவதாஸ்

    ReplyDelete
  8. சிறப்பான பயண நினைவுகள்! நன்றி

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  9. Beautiful narration with well said details ...Keep it up.

    ReplyDelete
  10. Beautiful Narration with well said details..
    Keep it up.well done.

    ReplyDelete
  11. ஒரிஜனல் தங்க ஓடெல்லாம் போயிருச்சு., இப்போ வெறும் தங்க முலாம் பூசுனதுதான்னு கைடு சொன்னார்.

    ஸ்வாரோஸ்கி கிறிஸ்டல்ஸ் எல்லாம் கண் நிறையப் பார்த்துட்டு சின்னதா ஒரு நினைவுப்பொருள் வாங்கினேன். ஒரு அணில்.

    முதல் படம் சூப்பர். சமீபத்துலே வச்சுருக்காங்களா?

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.