Pages

Friday 30 August 2019

நானும் ரவுடிதான்


காட்சி

காலை நேரம் ஏழு மணி, செயல் தலீவரு வீட்டு ஹால்

ஆ.....க செயல் வீட்டில் மிச்சர் தின்றுக்கொண்டிருக்கிறார். வூட்டம்மா பாபா  கோவில் பொங்கல் வாங்க தூக்குடன் போயிருக்கிறார்.

மூன்றாம் கலீனறு, லவ்வில் ஜூட் லாங்க்வேஜ்டன் தொலைபேசியில் அடுத்த ஆறாம் கலீனர் மேட்டரை பேசிக்கொண்டிருக்கிறார்.

மூன்றாம் கலீனறு கக்கா போன பேக்குடன் உடன் பிறப்பை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

கூர்க்கா வீட்டின் மெயின் கேட்டில் ஒரு முப்பது உடன் பருப்புகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார்.

ஓசி சோறு உடன் பருப்புகள் பின்னாடி தட்டுடன் நின்று கொண்டிருக்கிறார்.

இனி

செயலின் அலைபேசி அழைக்கிறது

அன்பு உடன் பிறப்பே...............

ஆமா உண்ட பிறப்புதான்........................ நான்தான் செல்வி

சொல்லு சகோ.....................

இப்போதான் அஞ்சாநெஞ்சன் பேசினாரு...........அவருக்கு கட்சில ஏதாவது ஒரு பதவி கொடேன்............

பதவியா இன்னா பதவி வேணுமாம்

தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி கேக்குறார்..............இனி உன்னோட சண்டை போடமாட்டார்.........

இனாது நோசான்ஸ்...............சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பான்னு சொல்லிடு........................ ஆக எடப்பாடி பதவி விலக......

அடேய் சும்மா நிறுத்து........எப்பபாரு எடப்பாடி......காட்பாடின்னு ............

அலைபேசி கட்டாகிறது............

அருகிலிருக்கும் போண்டா வாயன்  ....................

தல...........என்ன பண்ற.............நம்ப பொழப்ப எவனோ பேரி தாசோ........மாரி தாசோ........நாரடிச்சுன்னு இருக்கான்......நீ இங்க மிச்சர துன்னுகினு, பொங்கலுக்கும் உண்டகட்டிக்கும் தேவுடு காத்துக்கினு இருக்க.....

அப்படியா என்ன மேட்டரு செப்பண்டி.................

நம்ம கட்சிக்கும் பாகிஸ்தான் தொடர்பு, ஹவாலா....எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சிட்டான்.

சரி நம்ம இணைய அல்லக்கைங்கள கவனிக்க சொல்லுவோம்.

டேய், மிருகபுத்திரா, நீ பாரிசாலன், மாரிதாசன் டுபாக்கூர் அப்படின்னு கலீனர்  டீவில பேசுற......இந்தா இருநூறு ரூவா, அப்படியே ஒரு கவிதைன்னு சொல்லி ஏதோ போடுவியே அத தேட்டர்ல போட்டுரு

தளபதி அது தேட்டர் இல்ல ட்விட்டர்.

டேய் பியூசு நீ இன்னா பண்ற பாஜக ஆபீசுல போயி........பொருளாதாரம் ஏன் புட்டுக்கிச்சின்னு விளக்கம் கேளு.........வாய் மேலேயே போடுவானுங்க........மெர்சல் ஆவாத.....நான் ஒரு அறிக்கை ரெடி பண்ணிட்டேன் அத்த உட்டு உன்னிய பாத்துகிறேன்.

டேய் கக்கூசு நீ என்ன  பண்ற ஆரியம் வடஇந்தியா பொருக்கி தேசமுன்னு அல்லாத்தையும் மட திருப்பு.

டேய் தோச நீ வழக்கம்போல தோச, ஆரியம், பார்பனீயம், ட்ராவிடமுன்னு வட சுடு......

ஆக எடப்பாடி பதவி விலக  வேண்டும்............பாசிச மோடி............

அல்லக்கைகள்: தனி ஒரு மனிதனாக தரணிய கலக்கும் தளபதிதான் அடுத்த முதல்வர்.............











Monday 26 August 2019

கலக்கல் காக்டெயில் -192

திமுக

தி.மு.க விற்கு பலவிதமான விளக்கங்களை பார்த்திருக்கிறோம்,

திருட்டு முட்டாள் கழகம்
திருக்குவளை முன்னேற்ற கழகம்
திருடர்கள் முன்னேற்ற கழகம்

இப்பொழுது திராவிட முஜஹிதீன் கழகம்

மாரிதாஸ் யு ட்டுயூபில் போடும் ஆதாரங்களைப் பார்த்தால் திமுக விற்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்பந்தம் இருக்குமோ இருக்காதோ தெரியாது, ஆனால் கட்டாயமாக காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சம்பந்தம் இருப்பது புலனாகிறது. மேலும் முப்டி, அப்துல்லா குடும்பங்களின் வாரிசுகள் சென்னையில் வசிப்பதாகவும், கட்டுமரக் குடும்ப வாரிசுகளுடன் வியாபாராம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் மாரிதாசின் பதிவிற்குப் பிறகு, உபீஸ் பொங்குவதும், கொலைமிரட்டல் விடுவதையும் பார்த்தால் "நெருப்பில்லாமல் புகையாது போலிருக்கிறது"

மேலும் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்ற செய்தி திராவிட முஜஹிடீன் கழகத்தின் சமீபத்திய டெல்லி போராட்டத்தின் வீர்யத்தை!!! குறைக்க செய்யப்பட்ட திசை திருப்பல் நடவடிக்கை என்று மிருகபுத்திரன் முகநூல் பொங்கல் திமுக கலங்கி இருப்பது தெரிகிறது. ஏதோ நடக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

ப.சி திருவிளையாடல்

 ப.சிதம்பரம் முன்ஜாமீன் மறுக்கப்பட்டு இருபத்தியேழு மணி நேர ஓடி ஒளிந்த பிறகு சுவரேறி குதித்து கைதி செய்யப்பட்டது நாடறிந்த விஷயம். அவரது விசாரணை போகும் போக்கைப் பார்த்தல் ஒன்று நன்றாக தெரிகிறது, வினைவிதைத்தவன் வினையறுப்பான். இந்திராணி முகர்ஜி, பெண் நிருபர்கள் ஜல்சா என்று காட்சிகளை போட்டுக் காட்டி முன்னாள் நிதியமைச்சரை கலங்கடித்து  உண்மையை வரவைக்கிறார்களாம். சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு நமக்கு தெரியும்.

ஒரே கேள்வியை வேறு வேறு நபர்கள் கேட்பார்களாம், தொடர்ச்சியாக யாராலும் பொய் சொல்லமுடியாது கான்செப்ட் தான்.

ப.சி கூட ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியாததா இந்த விசாரணையின் போக்கு பற்றி.

இந்த ஊழல் வழக்குகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம், கடைசியில் இதன் முடிவு என்னவென்று ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.

ரசித்த கவிதை 

தாக்கம்

நினைத்த நேரத்தில் 
பறந்து விடுகின்றன பறவைகள்
பாவம் கிளைகள்தான்
நீண்டநேரம் அசைந்து கொண்டிருக்கின்றன.

நன்றி: திரு வெங்கட்

திரையுலகம் 

தமிழ் திரையுலகம் இன்னும் சரியாக உபயோகிக்காத தமிழ் நடிகை "கயல் ஆனந்தி" என்று சமீபத்தில் அவர் படங்களை பார்த்த பின்  தோன்றியது எனக்கு மட்டும்தானா?.


Tuesday 20 August 2019

யார் மண் இது?

மீபத்தில் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டு மண் பற்றிய பேச்சு அதிகமாக உள்ளது.

அதுவும் அத்திவரதர் நாற்பது வருடங்களுக்குப் பிறகு எழுந்தருளியதால் சர்ச்சை தொடங்கியது. நிறைய பெரியார் அல்லக்கைகள் ஏதோ இந்த முறைதான்  அத்தி வந்ததாகவும் நாற்பது வருடங்களுக்கு முன் அவர் இல்லை எனவும் பிதற்றிக்கொண்டிருந்தார்கள். 1979ல் எழுந்தருளிய பொழுது சமூக வலைத்தளங்கள் இல்லாத காரணத்தால் வந்த கூட்டம் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை வேறு

இத பார்த்துட்டு வருவாங்க பாருங்க ஒரு ஓசி சோறு கூட்டம் 


அந்த காண்டுலதான் கடைசிநாள் வந்த நயன்தாராவும் அர்ச்சகர்கள் விட்ட ஜொள்ளும்.

இருந்தாலும் அத்திவரதர் ஆனந்தமாக மறுபடியும் ஆனந்தசர்ஸ் குளத்தில் ஐக்கியமாகிவிட்டார்.

மிழக எதிர்கட்சி தலைவரின் துணைவியார் சமீபத்தில் ஏதோ ஒரு தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் தலைவர் பாபா கோவில் பொங்கலும், பெருமாள் கோவில் புளிசோறு!!! முதலியவற்றை கேட்டுவாங்கி சாபிடுவாராம். அதற்காக ஒரு அட்டவணையே வைத்து கோவில் போவாங்க போல.
இம்ப்ரமேசன் இஸ் வெல்த்

டைசியா தலைவரின் அறிவை வியந்த ஒரு மீம்ஸ்




Wednesday 14 August 2019

தமிழ் மணத்திற்கு என்னாச்சு?

வலைப்பதிவுகளை திரட்ட நிறைய திரட்டிகள் வந்து போனாலும் ஓரளவிற்கு களத்தில் நின்று  விளையாடியது "தமிழ்மணம்" என்று சொன்னால் அது மிகையாகாது.
யோவ் தமிழ்மணத்திற்கும் எனக்கும் என்னையா தொடர்பு,

சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை என்று பல சிறப்பு அம்சங்களுடன் திரட்டிகளில் தனித்துவமாக இயங்கிக்கொண்டிருந்தது.

நடுவால த இன்ட்லி, ஈகரை, நியூஸ் பானை, தமிழ் திரட்டி, நம்குரல், பதிவர், தமிழ்களஞ்சியம் என்று எத்துணையோ திரட்டிகள் வந்து சிறிது  காலம் இயங்கி பின்னர் மாண்டு போய்விட்டன.

சமீபகாலமாக நம்முடைய பதிவுகள் சமர்ப்பிக்க தமிழ்மணம் ஒன்றே இருந்து வந்தது, ஜூலை 26ம் தேதிக்கு பிறகு தமிழ்மணம் இயங்குவதாக தெரியவில்லை. இந்த பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை அகில உலகத்திற்குமா என்று விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் காஷ்மீரில் "தால்" ஏரிக்கரை ஓரம் ஒன்றரை ஏக்கர் நிலமும், ஒரு ஆப்பிள் தோட்டமும் எழுதிக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

இந்த சலுகை அம்பானி கடை போடும்வரைதான்.

ஆதலால் சக பதிவர்கள் முந்திக்கொள்ளவும்.

அதுவரை என்னுடைய மொக்கைகள் முகநூலிலும், கீச்சுலகிலும் தொடர்ந்து வந்து தாளிக்கும்.

Monday 5 August 2019

370

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பாக அளிக்கப்பட அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை இப்பொழுது மத்திய அரசு நீக்கி இருக்கிறது. லால்பகதூர் சாஸ்திரியோ, இல்லை இந்திரா காந்தி அம்மையாரோ இந்தக் காரியத்தை செய்யமுனைந்தும்  அப்பொழுது இருந்த உலக அரசியல் சூழ்நிலை இடமளிக்கவில்லை. தற்பொழுது காலம் கனிந்து வரும்பொழுது மத்திய அரசு அதற்குண்டான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பின்னர் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.

இதுநாள் அரசியல் சாசனம் 370 அதன் கூட 35A இரண்டும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருந்தது,

அதன் படி


  • ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம், பாகிஸ்தானிலும் குடியேறலாம்.
  • ஜம்மு காஷ்மீருக்கு தனிக்கொடி உள்ளது, அது இந்திய தேசியக்கொடியுடன் ஏற்றப்படவேண்டும், ஆனாலும் இந்திய தேசியக் கோடியை அவமதித்தால் தேசத் துரோக வழக்கு கிடையாது.
  • ஜம்மு காஷ்மீரின் சட்டசபையின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள்.
  • இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் அத்துனை உத்துரவுகளும் ஜம்முகஷ்மீரை கட்டுப்படுத்தாது.
  •  பாராளுமன்றத்தால் அந்த மாநிலத்தில் சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஆணை திருமணம் செய்தால் குடியுரிமையை இழப்பார். அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள ஆணை திருமணம் செய்தால் ஆணிற்கு குடியுரிமை வழங்கப்படும்,
  • ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.
  • காஷ்மீர் மக்களுக்கு வரிச்சலுகை இந்திய அரசாங்கம் அளிக்கவேண்டும்.( இந்த ஓசியை  அனுபவித்துக்கொண்டு நமது தேசியக்கொடியை அவமதிப்பது, நமது ராணுவ வீரர்களை முதுகில் குத்திக் கொலை செய்வது என்பதை ஒரு வித நன்றி உணர்வோடு செய்துகொண்டிருப்பார்கள், நாம் கண்களை மூடி  இருக்க வேண்டும்)
இப்பொழுது இந்திய அரசாங்கம் இதுக்குத்தான் ஆப்பு வைத்திருக்கிறது. 

வழக்கம் போல சுடலை கோஷ்டி இதை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் நாட்டுக்கு நன்மையா தீமையா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. சைக்கோ, சுடலை, குருமா இவர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள் என்றால் மத்திய அரசின் முடிவு நன்மைக்காகத்தான் இருக்கும்.