Sunday 28 November 2010

ஏட்டையா, நானும் அரசியல்வாதி, பகுத்தறிவாளன் சொன்னா நம்புங்க

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா ஊழல் செய்தார் என்று சிஏஜி குற்றம் சாட்டவில்லை. அவருக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கையில் சில மீடியாக்கள் தொடர்ந்து ராஜாவை குற்றவாளி போல சித்தரித்து வருவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

எந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலையாக இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல்லாம் ஒரு புறத்தோற்றம். உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள்.

இது வெறும் ராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம். ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை, கருணாநிதி சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. ராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும். இதுதானே உங்களுடைய மனு தர்மச் சட்டம். சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி.
ஏய் யாருலே அது, அவனாடா நீயி

அந்த முழுப் பூசணிக்காயை ...த்துல மறைக்கற கூட்டமா

வந்துட்டாரபா ராசாவுக்கு வக்காலத்து வாங்க.

நாடே ஒரு மெகா சைஸ் முறைகேடப் பார்த்து பொத்திக்கிட்டு இருக்காங்க, இவர் வந்துட்டார்பா. முதலில் உச்ச நீதி மன்றம், சி.பி.ஐயிடம் ஏன் ராசாவையும், அந்தத் துறை செயலரையும், மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒலி கற்றை உரிமையை வாங்கி சேவைத் தொடங்கும் முன்பெ கொள்ளை லாபத்திற்கு விற்ற நிறுவனங்களும் விசாரனைக்குட்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய பொழுதுதான், நம் பகுத்தறிவு சிங்கம், தன் மான சிங்கம் “ராசா பேரில் ஆதாரம் இல்லை” என்கிறார். மேலும் இந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லியிருக்கிறது.

ஐயா இதெல்லாம் இவருக்கு தெரியாது போலிருக்கிறது.

வழக்கமாக அடிக்கும் ஜால்ராவுடன் எப்பொழுதும் சொல்லும் “பார்ப்பணீய சூழ்ச்சியை” விட்டு விட்டார்.

சமீபத்தில் ஊழல புகாரில் சிக்கி ராஜினாமா செய்த கல்மாடியும், அசோக் சவானும் சூத்திரர் அல்லவே. ஆனால் வழக்கை எதிர்கொள்ள துணிவு இல்லாமல் இது போன்று கேவலமாக ஜாதியை சாட்சிக்கு அழைக்கவில்லையே.

அங்கே கூடாரமே ஆடிக் கொண்டு இருக்கிறது. குடும்ப தகராறும், கோஷ்டிகளின் உச்சகட்ட நாடகத்தின் விளைவில் விளைந்த இந்த குற்றச்சாட்டில் தாத்தா வாயடைத்திருக்கிறார்.

சூரமனிக்கு எல்லாம் நேரம், தேர்தல் வரும் முன்பே யாருக்கேனும் ஜால்ரா தட்டி கல்லா கட்ட வேண்டும். இம்முறை ஐயா கட்சி.

இப்பொழுது சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கெட்ட வார்தைகளாகிவிடும், நம் பெரியாரின் வாரிசுக்கு.

போயா பெரியார் திடலை சுவிசேஷ கூட்டங்களுக்கும், இயேசு உயிருடன் இருக்கிறார் என்ற கூட்டங்களுக்கும் வாடகைக்கு விட்டு, கல்லா கட்டி பொழைப்பை பாருங்க.

பட்சி ஜாதி நீங்க

பகுத்தறிவெல்லாம் பார்க்காதீங்க.

எந்த பட்சி என்று சொல்லத்தேவையில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 25 November 2010

கலக்கல் காக்டெயில்-13

நாட்டாமை வீட்டில் நாட்டாமை


அந்த நாட்டாமை வீட்டிலேயே இப்பொழுது நாட்டாமை தேவை. தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார், நாட்டாமையின் மகள். இப்பொழுது நாட்டாமை தலை மறைவாகியிருக்கிறார். மகனையும் காணவில்லை. விஷயம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டாமை இருக்கும் ஏரியாவில் அந்த நெடிய வில்லன் நடிகரின் தம்பி ஒரு காலத்தில் சூபெர்மர்கட் வைத்திருந்தார். நாட்டாமை வீட்டு வேலையாள் போய் எல்லா சாமானும் நாட்டாமை அம்மா வாங்கி வரச் சொன்னதாகச் சொல்லி வாங்கிச் சென்றுக்கிறார். காசு கேட்ட பொழுது அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள், அம்மா கொடுப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

தம்பி மாலை அம்மாவிற்கு போன் செய்தால் என்ன தம்பி பணமெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்தா பாப்பாவிடம் பேசுங்கள் என்று பீப்பாவிடம் போனை கொடுத்திருக்கிறார்.

அவ்வளவு தான் அப்புறம் காசு எங்கே வருது.?

ஊரை அடித்து உலையில் போட்ட சொத்துக்குத்தான் இப்பொழுது தகராறு.

நாட்டாமை, கம்பியிலே எக்ஸ்பெர்ட் முறுக்கு கம்பி வேலைக்கு ஆவலையா?.படித்ததில் ரசித்த கவிதை

நிதம்

ஒரு சோறு சமைத்து

அதில்

ஒரு பொரியல் சேர்த்து

நின்று நிறைய பரிமாறி

ஒரு சொல்லும் வலித்திடாமல்

ஒத்தடமாய் பேசி

ஏசல் பூசல்

எல்லாம் பெற்று

யவ்வனமாய் உடுத்தி

நிலவு வரக் காத்திருந்து

ஏந்திழையாள்

ஏவல் எல்லாம் செய்திடவே

தாங்கிப் பெற்றவர்களே

தருகிறார்கள்

தங்க நிலவை ஒரு

சமூக அடிமையாய்

சகல மந்திரங்களும் ஓதி

சபை நிறைந்து இருக்க

அவன் மனைவி என

பெயர் சூட்டி அனுப்புகிறார்கள்

ஆயினும் இங்கே கூடி கூடி

கொக்கரிக்கிறார்கள்

ஆங்கிலேயனை துரத்தியபோழுதே

அடிமைத்தனத்தை ஒழித்து விட்டோமென்று.நகைச்சுவை

நம்ம ஊரு பண்பலை வானொலியில் கேட்டது

ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்“எங்கப்பா ரொம்ப பயந்தான்குள்ளிடா”எப்படிடா சொல்லுறே”“பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும பொழுது என் கையை கெட்டியமா பிடிச்சிக்கிறார்டா”.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 24 November 2010

பார்ப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

“பார்ப்பு வச்கிட்டாண்டா ஆப்புன்னு” வடிவேலு ரேஞ்சுக்கு ஐயா புலம்பும் அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் பாராளுமன்றத்தை பத்து நாட்களாக உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.


அந்த விவகாரத்தில் திக்கு முக்காடி முதலில் ராஜா தலித் ஆதலால் தான் இதை பெரிது படுத்துகிறார்கள் என்று புலம்பினார். இப்பொழுது

சூத்திரர்கோர் நீதி தண்டச்சோறு

பார்ப்புக்கொரு நீதி

என்று பாரதியை மேற்கோள் காட்டுகிறார். மொத்தத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலமையில் தலைமை ஆடிப் போயிருக்கிறது.

போதாதற்கு “நீரா ராடியா” வேறு கனிமொழி ராஜா விவகாரத்தை கிளப்பிவிட்டதே மாறன் தான் என்று புதிய வெடியைப் போட்டிருக்கிறார். அவர்களுக்குள் நடந்த பேச்சு விவகாரம் இப்பொழுது இணைய தளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.

உடனே மாறன் தாத்தாவிடம் போய் புதியத் திரியை கிள்ளி விட்டிருக்கிறார். தாத்தாவிற்கு இந்த வயசில் இது தேவையா?

இது தான் சாக்கு என்று கொடநாட்டில் கும்மியிருந்த அம்மா நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். பட்டுப்போன இலை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.

தேர்தலுக்குள் என்ன என்ன நடக்குமோ தெரியவில்லை.

காங்கிரசின் பீகார் கனவு தவிடு பொடியாகிவிட்டது. தமிழ்நாடு காங்கிரசின் நிலைமை அய்யகோதான்.

யார் யார் என்ன வியூகம் அமைக்கப் போகிறார்கள். மருத்துவர் ஐயா எங்கே பிச்சை எடுப்பார்?, கேப்டன் என்ன உதார் விடுவார்?

நடுவில் சுப்ரீம் ஸ்டார், டண்டணக்கா போன்றோர் கட்சிகள் இருக்குமா காணாமல் போகுமா?.

வைகோவிற்கு போக்கிடம் இல்லை.

மே மாதத்திற்குள் ஒரு வழி பண்ணிவிடுவார்கள். பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 17 November 2010

காதர்கான் மாமா

“தம்பி நீ தான் எஞ்சினு, நீ தண்டவாளத்தில நேரா போனாதான், பாரு உன் தம்பி தங்கைகள் எல்லாம் பின்னாடி வருவாங்க, அவங்க எல்லாம் பின்னாடி வர பெட்டிங்க” என்று அறிவுரை சொல்லுவார். அவருடைய பேச்சு எல்லாம் ரயில்வே உதாரனங்களாகத்தான் இருக்கும்.


என் அப்பாவும் அவரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். காதர்கான் மாமா தவறாமல் ஞாயிற்று கிழமைகளில் எங்கள் வீட்டில் ஆஜராகிவிடுவார். அவருக்கு அப்பொழுது குழந்தைகள் கிடையாது. என் அப்பாவும் அவரும் ஒரே சமயத்தில் வேலையில் சேர்ந்தவர்கள்.

நான் என் அக்கா தம்பி தங்கைகள் என்று மொத்தம் ஆறுபேர். பெரிய குடும்பம். அவருக்கு விடுமுறை நாட்களை எங்களுடன் கழிப்பதில் ஆனந்தம். சில சமயம் எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து செல்வார். கதீஜா அத்தை எங்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார்கள். நாங்கள் சைவம் என்பதால் அன்று அவர்கள் வீட்டில் சைவ சமையல்தான். நாங்கள் அவர்கள் வீட்டில் ஓடியாடி விளையாடுவதை ரசிப்பார்கள். காதர்கான் மாமா கோவப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. விளையாட்டில் அவர்கள் வீட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவோம். எதை உடைத்தாலும் கோவம் கொள்ள மாட்டார்கள். எங்கள் விளையாட்டை ரசித்து “மாஷா அல்லா” என்று இருவரும் சொல்லிக்கொள்வார்கள்.

ரம்ஜான் நாட்களில் சில சமயம் வீட்டிற்கு வருவார், ரம்ஜான் நோன்பின் காரணத்தையும் அவர்கள் உபவாசம் இருப்பதையும், சூரிய உதயத்திற்கு சற்று நேரம் முன் தொடரும் நேரத்திலிருந்து பல்லில் தண்ணீர்கூட படாமல் நோன்பு இருப்பதை சொல்லும் பொழுது எங்களுக்கெல்லாம் இப்படியும் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யம் மேலோங்கும்.

நான் மத்திய கிழக்கு நாடுகளில் வேலையில் சேர்ந்து ஒரு முறை விடுமுறைக்கு சென்னை வந்த பொழுது என்னை பார்க்க வந்தார். அப்பொழுது மனைவியின் நச்சரிப்பால் இரண்டாவது திருமனம் செய்து கொண்டதையும், ஒரு மகன் பிறந்ததையும் சொன்னார். மகன் பிறவியிலேயே பார்வை இல்லாதவன். அவன் ஒரு பிரபல வயலின் வித்தகரிடம் வயலின் கற்றுக் கொள்வதையும், பள்ளியில் படிப்பதையும் சொன்னார்கள்.

பிறகு அப்பாவும் அவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் பென்ஷனர்ஸ் மீட்டிங்கில் சந்தித்துக் கொள்வார்கள். இப்பொழுது இருவருக்கும் வயதாகிவிட்டதால் சந்திப்பு நாள் நாள் பட குறைந்துவிட்டது.

நேற்று நான் நியூ காலேஜ் போக வேண்டிய வேலை இருந்தது. போகும் வழியில் அந்த இடம் அடுத்தநாள் வரப்போகும் ஈத் பெரு நாளுக்கான ஏற்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. காலேஜில் நுழைந்து நான் கண்ட நபர் பார்வை இல்லாதவர். அவர் அங்கு அவர் ஆசிரியராக இருக்கிறார். அவரை விசாரித்த பொழுது அவர் காதர்கான் மாமாவின் மகன் என்று புரிந்து கொண்டேன். அவரை ஒரு வேலை விஷயமாக நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவர் வீட்டு தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.

இன்று காலை அவர்கள் வீட்டிற்கு போன் செய்தேன். காதர்கான் மாமா தான் எடுத்தார். மாமா “ ஈத் முபாரக்” என்றேன். “சங்கர் நீ ஊரில் இருக்கிறாயா அப்பா எப்படி இருக்கிறார், இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை” என்றார்.

இத்தனை வருடம் கழித்து என் குரலை அடையாளம் கண்டு கொண்டு விசாரித்ததில் எனக்கு மேலும் பேச்சு வரவில்லை

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 16 November 2010

கலக்கல் காக்டெயில்-12 (இருநூறாவது பதிவு)

என் பார்வையில் மைனா
இன்று காலை தொட்டே மழை சென்னையில் பெய்து கொண்டிருந்தபடியால் தியேட்டர் பக்கம் ஒதுங்கினேன். பார்த்த படம் மைனா. கதை ஒன்றும் புதியதல்ல. ஒரு வரி கதைதான். ஆனால் வித்யாசமாக சொல்லப்பட்ட விதத்திற்கு பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள். படத்தின் நாயகனும் நாயகியும் புதுமுகங்கள். விதார்த்தும், அமலாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் திரையுலகில் இது போன்ற படங்கள் வந்து அவ்வப்போது புது இயக்குனர்கள் நல்ல படம் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை ஊட்டுகின்றன.

போடி, தேனீ பக்கம் இவ்வளவு அழகான இடங்களா. ஆஹா லொகேசன் அருமை. படத்தின் இன்னும் ரசிக்க வேண்டிய விஷயம் ஈமானின் பின்னணி இசை. காமெடியில் தம்பி ராமையா கலக்கியிருக்கிறார். முக்கியமாக தன் மேலதிகாரியின் பதட்டதைக் குறைத்து, “எனக்கு மட்டுமா தீபாவளி கொண்டாட முடியவில்லை என்று ஆதங்கம் இல்லை. விடுங்க ஸார் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், சாப்பாட்டுல விஷம் வைத்துவிடுகிறேன் என்று தன் எல்லா முகங்களையும் காட்டுகிறார். ஜெயில் அதிகாரியாக வரும் சேது, நாயகியின் அம்மா, நாயகனின் அப்பா என்று ஒவ்வொருவரும் படத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். பேருந்து குத்துப் பாட்டு ஆரம்பிக்கும் முன்பு அரங்கில் எழுந்த ஆரவாரம், குத்துப் பாட்டையும் தமிழ் படத்தையும் பிரிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

படம் முடியும்பொழுது நல்ல படம் பார்த்த திருப்தி.ராசாவும் அலைக்கற்றை விவகாரமும்.


ராசா ராஜினாமா எப்பொழுதோ நடந்திருக்க வேண்டிய ஒன்று, தாமதப் படுத்தியதால், தி. மு. க விற்கு தலைக் குனிவு. ராசாவிற்குப் பிறகு “ராணி”தான் அமைச்சர் என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து காங்கிரெஸ் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் பேரம் பேச அச்சாரம் போட்டுவிட்டனர். அம்மா வேறு கதவை திறந்து கூவுகிற படியால் காங்கிரெஸ் பூனை எந்தப் பக்கம் தாவும் என்பது தற்போது கேள்விக் குறியே. மொத்தத்தில் வரும் தேர்தல் அதிக எதிர் பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. ஒன்று யார் வந்தாலும் ஒன்றும் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.அனுபவமொழிகள்

குற்றம் புரிந்தவன் தனக்கு நியாயம் கேட்கிறான், குற்றத்திற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான், யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம்தான் முடிவு செய்கிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்ப்பது எல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்................கண்ணதாசன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 10 November 2010

சுவரொட்டியும் சிங்கார சென்னையும்...................

“ஜல்” புயல் ஜல்சா பண்ணுதுன்னு சொல்லி தோஹாவில் விமானம் கிளம்ப ஐந்து மணி நேரம் தாமதம். திண்டாடி தெரு பொறுக்கி ஒரு வழியாக சிங்கார சென்னை வந்து சேர்ந்தேன். எல்லா வண்டியும் ஒரே நேரத்தில் வந்ததால் நம்ம இமிக்ரேஷன் முழி பிதுங்கி ஒரே குழப்பம். ஒரு வழியாக வெளியே வந்தால் டாக்ஸி இல்லை. புயலுக்கான அறிகுறியே இல்லை. வெயில் பின்னிக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தேவுடு காத்த பின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். கிண்டி மேம்பாலம் அருகே நம்ம மேயர் தலைமையில் பிளாக்பெர்ரி விளம்பரத்திற்கு கருப்பு மை பூசிக்கொண்டிருந்தார்கள். டிவி கமெரா வைத்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இன்னா விஷயம் என்று சாரதியை கேட்டா, எல்லா விளம்பரத்தையும் அகற்றுகிரார்கள் என்றார். சுவரொட்டி விளம்பர பலகைகள் எல்லாம் அகற்றப்போவதாக சென்னை மாநகராட்சி சொல்லி இருக்கிறார்களாம்.

சுவரொட்டியில்லாத சென்னை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த சுவரொட்டி விளம்பரங்கள் ஒரு பெரிய தொழிற்பேட்டை. சமீப காலமாக, மைனாவிற்கு மஞ்சள் நீராட்டு, மங்கத்தாவிற்கு முதலிரவு, இல்லற வாழ்வில் இணையும் இன்பாவிற்கு வாழ்த்து என்று எல்லா சுவர்களும் பல்லிளிக்கின்றன. மேலும் தேர்தல் நெருங்கும் இந்நேரம் சுவரொட்டி, பெயிண்ட் வியாபாரம் களை கட்டும் இது தவிர்க்கப்படுமா என்பது சந்தேகமே.

என் நண்பர்கள் விளம்பர வியாபாரத்தில் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் “பூவா”விற்கு என்ன செய்வார்களோ தெரியவில்லை. அந்தக் கவலையுடனே வீட்டிற்கு வந்து மாலை “கஜா”விற்கு அலை பேசினேன்.

இன்னாடா உன் தொழிலுக்கு பிரச்சினை போல இருக்கே என்றேன். எவன் சொன்னான், அட போடா போக்கத்தவனே இப்போதாண்டா இருபது லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கேன், சுவரொட்டியில்லா சென்னை சும்மா “ஓளவாகட்டிக்கு” என்றான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 8 November 2010

நாயிடம் நான்

தாயிடம் பிறந்தேன்


தந்தையிடம் வளர்ந்தேன்

தமிழிடம் பயின்றேன்

ஆசிரியரிடம் அறிவுற்றேன்

பணத்திடம் படிந்தேன்

குணத்தினை அடகுற்றேன்

தன்மானம் தவிர்த்தேன்

நிஜ வாழ்கை தேடி

நாயிடம் அகப்பட்டு

பேயாகிப் போனேன்.

Follow kummachi on Twitter

Post Comment