Tuesday 29 April 2014

வாக்காளர்- பயோ(யங்கர)டேட்டா

பெயர்-----------------------------------------------------வாக்காளர்

தொழில்--------------------------------------------------தேர்தலில் ஓட்டுப் போடுவது.

பலம்-------------------------------------------------------வாக்குரிமை

பலவீனம்-------------------------------------------------நியாபக மறதி

மறந்தது---------------------------------------------------போனமுறை வாக்களித்தது

மறக்காதது-----------------------------------------------மாற்றி மாற்றி குத்துவது

சமீபத்திய மகிழ்ச்சி----------------------------------ஓட்டுக்கு பணம் கிடைப்பது

சமீபத்திய எரிச்சல்------------------------------------நோட்டா காசு கொடுக்காதது

பிடித்தது-------------------------------------------------கூட்டம் கூட கொடுக்கப்படும் சரக்கு

பிடிக்காதது---------------------------------------------தேர்தல் நாளில் டாஸ்மாக் மூடல்

ரசிப்பது-----------------------------------------------------தலைவர்களின் பேச்சை

வெறுப்பது-------------------------------------------------நடிகைகள் இல்லாத பிரச்சாரம்



Follow kummachi on Twitter

Post Comment

Monday 28 April 2014

டீ வித் முனியம்மா----------பார்ட் 7

முனியம்மா இன்னா டென்சனா கீற...........

இன்னா லோகு...... பேமானிங்க.......... இந்த கச்சிகாரனுங்க ரண்டு நாளா நம்ம எரியாண்டையே மார்கயி மாச நாயிபோல சுத்திகினு கீறானுங்க.........

ஏன் இன்னா விசயம்முனிம்மா.............

இன்னா நாடாறு கையில துட்டு வச்சிகினு அல்லாருக்கும் குடுக்க கூப்பிடுரானுங்க........ஓட்டு  போடணுமாம்.
அப்படியே எங்க குப்பத்து ஜனங்க மெர்சல் ஆயிடுதுங்க............

ஐய முனிம்மா இன்னா பிலிமு காடுற, துட்டு குடுத்தா கணுக்கா அமுக்கிக்க.......சொம்மனாகாட்டியும் இங்கன வந்து உதார் உட்டுகினுகீர......

போடா பேமானி, பயம் உன்னிய மாதிரி அயுகின பயம் விக்குற பார்ட்டியாடா.........அப்படியே செவுலுல உட்டா அகுளு பகிளாயிடும்.......இன்னா மூவாயிராம் ரூவா கொடுக்கிரானுங்களாம், அத்த குத்துட்டு இவனுங்க அஞ்சு வருஷம்அங்கப் போயி இன்னா காசு அடிப்பானுங்க தெரிமா? தொகுதி மேம்பாடுல ஆட்டையப் போடுவானுக, ட்ரைன்ல டிக்கட் எடுக்காம சுத்துவானுங்க, எராப்லான்லையும் வித்தவுட்ல போவானுங்க, அப்பாலிக்கா லட்ச கணக்குல சம்பளம் போட்டுப்பானுங்க.............நமக்கு கணக்கு போட்டுப்பாரு அஞ்சு வருசம் இவனுக அனுபவிக்க மூவாயிரமா,? அப்பா தெனத்திக்கு என்னாச்சு சொல்லுடா பயம்.

அஹான் அந்த கனுக்கு தெர்ஞ்சா நான் ஏன் பயம் விக்குறேன், நீயே சொல்லு முனியம்மா.

ஒரு ரூவா அருவத்தினாலு காசுடா குடாக்கு. தோ சிக்னலாண்ட பிச்ச எடுக்கிறானே அவன் பொயப்பே தேவல............சரி அத்த உடு நாம ஏதோ ரீஜென்டா பூ வித்து பொயப்பு நடத்திகினு கீறோம், நம்மாண்ட வந்து துட்ட நீட்டுரானுங்க ஊயலுக்கு பொறந்த பெருச்சாளிங்க...................

அதானே, மூவாயிரம் கோடி  துட்ட அள்ளி உட்டுகிராங்கலாம் ஆளும் கச்சி, சரி உடு முனியம்மா சூடாவாத...........யாரு கெலிப்பாங்க அத்த சொல்லு........

அய்ய நமக்கு இன்னா தெரியும்.......இல்ல நம்ம கச்சினு ஏதாவது வச்சிகிராமா தலீவரண்ட சொம்படிக்க..............ஏதோ ஒருபார்ட்டிவருவான்,சீட் பத்தல ஐயாநீ வரியா?அம்மா நீ வரியான்னு துட்டு காட்டி கூவுவாம், நம்ம தமியு கூட்டம் கீதே துண்டடில வெரல உறுவி அங்கன போயி சேந்துருவானுங்க ............அப்பாலிகா தமியன சுட்டான்,  தமியு ஈயம் பித்தளைன்னு நம்மாண்ட தெனைக்கும் வந்து கூவுவானுங்க இதே பொயப்பா போச்சி...............

முனியம்மா நெம்ப சூடா கீற? நீ ஒட்டு போட்டுகினையா?

அதெல்லாம் கரீட்டா போயி வரிசையில நின்னு குத்திட்டன்....

தமியு நாட்டுல யாரு கையி ஓங்கும்............மோடியா?, லேடியா?, டாடியா?

அல்லாரும் நல்லாத்தான் கூவினாங்க. மே பதினாருதேதிக்கு அல்லாம் தெரிஞ்சுடும். இப்போ நம்ம ஒட்டு குத்தியாச்சு இல்ல, இப்போ அந்தம்மா கொடனட்டுல குந்திகினு கரீண்டு வெலய ஏத்தப்போவுதான்...........கரீண்டு வேற அப்பப்போ புடுங்கிடுது..............அஹான் வராத கரீண்டுக்கு இன்னா துட்டு வச்சா நமக்குஇன்னா?

அஹான் இனி எல்லா டகிலு பாச்சா வேலையெல்லாம் அவுத்து விடும்.........

அப்பாலிகா முனிம்மா இந்த நூருநாளு வேல கொடுக்குற திட்டத்துல ஊயல் கீதாமே......

அஹான் பாய் மெய்யாலுமே அதிலயும் நல்லா ஆட்டைய போட்டுகிரானுங்க........அமிதா பச்சகனு, ஐஸ்வர்யா ராய், டெண்டல்கரு அல்லா பேர்லயும் கணுக்கு எய்தி சுட்டுகிரானுங்க.......பாடுங்க.......

சினிமா நூசு இன்னா?

அல்லாம் எலிக்ஸனுக்கு ஒட்டு போட்டு போசு கொடுத்துகினு போயினேகீறானுங்க......வேற இன்னா நூசு கீது........

இல்லமுனிமா புச்சாவந்த பொண்ணு இனி புல்லா காட்டப்போவுதாமே........


த பயத்துக்கு புத்தி போவுது பாரு.................படம் ஒன்னியும் கையில இல்லன்னா அதான் செய்வாளுங்க................இதெல்லாம் ஒரு நூசுன்னு கேக்குறான் பாரு...............








Follow kummachi on Twitter

Post Comment

Thursday 24 April 2014

மோடி, லேடி, டாடி, கேடி-------------கவுஜ

மதவாதத்திற்கு ஒரு மோடி
பிடிவாதத்திற்கு ஒரு லேடி
எதிர்வாதத்திற்கு ஒரு டாடி
என்னத்த சொல்ல போடி

கோத்ரா புகழ் மோடி
கோடநாடு வாசி லேடி
கோபாலபுரத்தில் டாடி
கொண்டாடுவோம் பாடி

சாயா போடுவார் மோடி
வாய்தா வாங்குவார் லேடி
வழக்கு போடுவார் டாடி
வாங்கிக்கொள்வார் கோடி

"நமோ" என்றால் மோடி
"அம்மா" என்றால் லேடி
"ஐயா" என்றால் டாடி
அனைவரும் கொள்ளையில் கேடி

மோடி வைப்பார் தாடி
லேடி அடிப்பார் கோடி
டாடி சுருட்டுவார் பாடி
சின்ன வீட்டுக்கும் கோடி
 
தேர்தல் என்றால் கோடி
தெருவில் புழங்கும் ஆடி
டாஸ்மாக் சரக்கடித்து பாடி
ஜனநாயகம் காப்போம் வாடி




Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 23 April 2014

கலக்கல் காக்டெயில்-143

அம்மாவும் நாற்பது அடிமைகளும்

அம்மா தனது அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி குனிய வைத்து பிரச்சாரம் செய்தது தான் அரசியல் தேர்தல் களத்தில் சூடான தகவல்.
கோவிந்தா கோவிந்தா...................
அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா.
இந்தக் காட்சி நமக்கு ஒன்று புதியதல்ல. இதை எழுதி கிண்டலடிக்காத பத்திரிகைகள் தமிழகத்தில் இல்லை என சொல்லலாம் (மக்கள் குரல், நமது எம்.ஜி, ஆர் நீங்கலாக).

1996 தேர்தலில் தோற்ற பொழுது அனைத்து உலக அகிலாண்டேஸ்வரி தாய் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இதையெல்லாம் தான் வெறுப்பதாக ஒரு பேட்டி அளித்தார். ஆனால் இப்பொழுது நாம் காணும் காட்சிகள் வேறு, அம்மா ஹெலிகாப்டரில் வரும் பொழுது அனைத்து அமைச்சர்களும் மற்ற அல்லக்கைகளும் தரையில் விழுந்து கும்பிட்டு பின்னர் அம்மாவை வரவேற்க ஓடுவது கண்கொள்ளா காட்சியாக தொலைக்கட்சிகளில் தினம் ஒளிபரப்பப்படுகிறது.

எப்போ திருந்துவீங்கப்பு............

லேடி,மோடி,டாடி

குஜராத் வளர்ச்சி,  தமிழக வளர்ச்சி என்று போட்டி போட்டுக்கொண்டு மோடியும், லேடியும் வார்த்தைதோரனங்கள் கட்ட பிரச்சார மேடை ஜொலிக்கிறது. ஆனால் உண்மை நிலையில் தமிழகம் இருண்டு கிடக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தை கடந்த முப்பது வருடகாலமாக மாற்றி மாற்றி ஆண்டு கொண்டிருக்கும் இரு கழகங்களும் தமிழக வளர்ச்சிக்கு ஒன்றும் "புடுங்கவில்லை" என்பதே உண்மை. இரண்டு கழகங்களும் இலவசங்களை அள்ளி வழங்கி டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கியதுதான் சாதனை.

போதாத குறைக்கு தமிழகத்தின் வளர்ச்சி எங்கள் டாடியால்தான் என்று தளபதி தன் பங்கிற்கு  வார்த்தை சிலம்பம் ஆடுகிறார்.

அந்த நாட்களிலிருந்தே "பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர் கூட்டம்" என்று வார்த்தை சிலம்பம் ஆடியே மக்கள் மூளையை மழுங்க அடித்திருக்கின்றனர்.

வாழ்க தமிழகம்.

அரசியல் களத்தில் ரசித்த கீச்சுகள்

"சந்தியாவின் மகள் இந்தியாவை ஆள்வார்" நாஞ்சில் சம்பத் # இன்னோவா வாங்கியோர் சொம்படித்தே சாவார்------------தில்லுதொர 

இது வரை தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடாத ஒரே பத்திரிகைன்னா அது திருமணப் பத்திரிகை மட்டும் தான்.


ரசித்த கவிதை 

யார் யாராக

என் கை பற்றி 
நீ நடக்கும்போது
உன் பிடியில் 
நான் அடங்குவதாய் நீயும்
என் பிடியில்
உன்னை வைத்திருப்பதாய் நானும்
நாடகமாடுகிறோம்.
நீ நானாகவும்
நான் நீயாகவும்
மாறி மாறி ஆடும் ஆட்டத்தில்  
நீ நீயாகவும்
நான் நானாகவும்
சில நேரம் தடுமாறுகிறோம்.
யார் யாராக
எப்பொழுது மாறுகிறோம் எனக் 
கணிக்க இயலாது....................................எஸ்.ஆர். சரஸ்வதி



ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 22 April 2014

டீ வித் முனியம்மா பார்ட்-6

யோவ் மீச ஒரு டீபோடு

இன்னா லிங்கசாரு நேரத்தே வன்னு, முனியம்மை  இன்னும் வந்தில்லா.......

டேய் மீச எனிக்கி தெரியாதா, அம்மை கிம்மன்னு..............

நாடார் வியாவாரம் எப்புடி?

இன்னா வியாவாராம் எலிக்சன் டைமு அல்லாம் டாஸ்மாக்கான்டதான் நிக்குது.

தா முனியம்மாவும் பயமும் வந்திட்டாக...........

டேய் மீச முனியம்மாக்கு ஸ்டாங்கா ஒரு டீ,வயக்கம்போல பயத்துக்கு சைனா டீ.

இன்னா முனிம்மா எலிக்சன் நிலவரம் எப்படிகீது?

இன்னா பாய் இன்னியோட மைக்கு வச்சுகினு கூவறத நிப்பாட்டிடுவானுங்க.......அப்பாலதான் கீது இந்த வட்டம் மாவட்டம் அல்லாம் போசொல்ல வரசொல்ல கால கைய பிடிப்ப்பானுங்கோ.........

நாடார் டாஸ்மாக்க மூணு நாளைக்கி மூடிகிரானுங்களே நம்ம ஜனம் இன்னா செயவானுங்கோ?

அடப்போ லிங்கம், அதுக்குதான் மூணு நாலு சரக்க கோணியில அள்ளி முடிச்சிகினானுங்க அல்லாரும்.................ஒரே நாள்ல வியாவாரம் முன்னூறு கோடியாம்............

அப்படியா சொல்ற முனியம்மா............

அஹான் பாய். மவனுங்க சோறு துண்ணாம வேணா இருப்பானுங்க சரக்கு இல்லாம ஆவாது...........இவனுக எல்லாம் தாய்ப்பால மறக்க சொல்லவே குடிக்க ஆரம்பிச்ச்சவனுங்க..................

அத்தவுடு முனியம்மா அம்மா நாப்பதும் நமதேன்னு கூவிகினு இருந்திச்சே அடிச்சிடுமா.............

இன்னா நாடார் அப்படி சொல்லிகின, பயம் கூட அம்மா நாப்பது அடிச்சி பிரதமர் ஆகி டாஸ்மாக்கு, அம்மா இட்லி, சாம்பார் சோறு  அல்லாம் நாடு முயுக்க குடுக்கும்னு கீறான்........இப்போ பதினைந்துக்கே அம்மாக்கு டப்பா டான்சு ஆடுதாம்.........இதுல சந்துல சிந்து பாடுறவரு ஐயாதாணு சொல்லிகிரானுங்க.........


கரூர்ல அல்லாருக்கும் வேட்டி சேலை அம்மா கட்சிக்காரனுங்க வீடு வீடா போய் கொடுக்குரானுங்களே மெய்யாலுமா?

ஆமாம் பாய், அங்கன தம்பிதுரை நிக்குறாரு, அவரு போனதபா கெலிச்ச பொறவு அந்தப்பக்கமே போவலையாம், அதால ஜனம் காண்டாகீதான். அம்மா பிரச்சாரத்துக்கு போனப்போ அல்லக்கைங்கள சுலுக்கு எடுத்துகீறாங்க.  இப்படியே வுட்டா............சின்னசாமி பூந்துருவாறுன்னு அம்மாக்கு காப்ரா ஆவுதான்.............அதான் அம்மா இந்தாண்ட வர சொல்ல துட்டு, வேட்டி  சேலன்னு வுடுரானுங்கோ.

ஆனா ஜனம் இப்ப எல்லாம் உசாராயிட்டானுங்க...........ஓட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுத்தா.............கணுக்கு போட்டு நாளிக்கி அம்பத்தினாலு காசு அஆவுது............த்தா...........சிக்னலுல  நிக்கிற பிச்சைக்காரன் இத்தபோல பத்து பங்கு அரை நிமிட்ல சம்பாரிப்பான்..........

இந்த முறை சினிமாகாரானுங்க ஜனநாயக தொண்டு ஆட்டல போல கீது..

அஹான் நாடாறு உசாராயிட்டானுங்க.......ஏதோ மார்க்கெட்டு போனவளுங்கதான் மைக்கு பிடிச்சிகினு கூவராளுங்க............அப்பாலிக்க அங்க கைய வச்சான் இங்க கைய வச்சான்னு பொலம்புவாளுங்க........

முனியம்மா சினிமா நூசு இன்னா............

ஏதோ ரெண்டு போனியாவாத டைரக்டரும் ஒரு பிகரும் காணாலாம் கட்டப்போவுதாம்.................

அப்படியா யாரு முனியம்மா?

டேய் பயம் படம் காட்டுறேன் நீயா பாத்துக்க.............









Follow kummachi on Twitter

Post Comment

Monday 21 April 2014

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா....


700வது பதிவு.

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க உளறல்களும், ஊதார்களும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களை சார்ந்த கட்சி அரசியல் தலைவர்களின் பரப்புரைகளை (??) ஒளிபரப்பி ஆதித்யா, சிரிப்பொலி சேனல்களுக்கு இணையாக நம்மை நகைக்க இல்லை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன..........

நமது கீச்சர்களுக்கு இது போன்ற அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் அல்லக்கைகளின் பேச்சுகளை நக்கல் செய்வது கோடையில் கூலிங் பீர்குடிப்பது போல.............அவர்கள் பங்கிற்கு ட்விட்டரில் அடிக்கும் கும்மிகளின் தொகுப்பு.

மதுவை ஒழிக்க கேப்டனை ஆதரிக்கவேண்டும்--பிரேமலதா
குடும்ப ஆட்சியை அழிக்க என் தம்பி சுதீஷை ஆதரிக்க வேண்டும்--பிரேமலதா# ஏசுவே ஏ ஏ ----------------ட்விட்டர் தாத்தா 

குஜராத் மின்மிகை மாநிலமாக இருக்க மாநில அரசே காரணம், தமிழகத்தின் மின்வெட்டிற்கு மத்திய அரசே காரணம்--#$மோடி (அறிவுதிறன்கள்)----ஷீபா

ஏப்ரல் 24க்குப் பிறகு மோடி அலை சுனாமியாக மாறும்---அமீத்ஷா#தட்ஸ்தமிழ்

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், தி.மு.க தேர்தல்அறிக்கை # இதுக்கு சிரிக்கவா செத்துரவா--------------whistle podu

கச்சத்தீவை மீட்க கடலில் இறங்கிப் போராடத்தயார்-விஜயகாந்த்# அது வேற தண்ணி தலைவா விட்டுடுங்க நமக்கு ஒத்து வராது-----------------சதீஷ்

இத்தனை வருட காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் மக்களுக்கு  பண்ணிய ஒரே ஒரு நல்லது மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதுதான்------------ரோபல்காந்த் 

ரேஷன் கடை பொருட்களில் உருவானதுதான் அம்மா உணவகம்-------கனிமொழி

வைகோ, அன்புமணி, பாலு, கார்த்தி, திருமா, கி.சாமி - கட்சி பேதமில்லாம  ஜெயிச்சு பார்லியில் கலக்கப் போறதாக கனா கண்டேன் தோழி நான்-----------கோவைகமல் 

ஓட்டு  கேக்குறேன்னு வந்து காதுலயே சங்கு ஊதி  எழுப்பி விடுகிற நீங்க எல்லாம் இந்த ஜெமத்துல ஜெயிக்க மாட்டீங்க-------------மலர்  

நடந்து வந்து ஓட்டு கேட்கலாம், காரில் வந்து ஓட்டு கேட்கலாம் ஏன் ஹெலிகாப்டரில் வந்துகூட ஓட்டு  கேட்கலாம் ஜாமீனில் வந்து??# ஆதரிப்பீர் உதயசூரியன்-------------------சுபாஷ்

கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நதிகள் இணைப்பது சாத்தியமாகும்----தா.பா. இத்தாபா அப்போ அது சத்தியமா சாத்தியமாகாது எக்காலத்துக்கும்---------------எமகாதகன்

இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபியாகிறார், கிறித்துவ மதமென்றால் கலைஞர் ஏசுவாகிறார், இந்து மதமென்றால் மட்டுமே கலைஞர் பெரியாராகிறார்----------நா குமரேசன்

அனைத்து கீச்சர்களுக்கும் நன்றி.............


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 17 April 2014

தேடிப்போய் ஆப்பு வைத்துக்கொண்ட ஜெ .....................

நாடாளுமன்றத்தேர்தல் அறிவிப்பிற்கு பின்  தமிழக அரசியல் களத்தில் புதுப்புது வியூகங்கள், எல்லோரும் எதிர்பார்த்தது போல ஜெ. கூடவே  இருந்து ஜால்ரா தட்டிய கம்யூனிஸ்டுகளை கழற்றி விட்டார். போன சட்டசபை தேர்தலில் தே .மு.தி. க வின் ஓட்டுக்களை சேர்த்து வெற்றிபெற்ற பின்  அவர்களின் தயவு தேவையில்லை என்று சட்டசபையிலேயே கேப்டனின் வேட்டியை உருவி அவரை  வம்பிற்கு இழுத்து துரத்தியடித்தார்.

அடுத்து "சோ" அவர்களின் அறிவுரைப்படி தனக்கு பிரதமராக வாய்ப்புள்ளது என்று தங்களது அடிப்பொடிகளை உசுப்பிவிட்டு ஊரெங்கும் போஸ்டர் அடித்து வருங்கால பாரதமே, இந்தியாவின் எதிர்காலமே என்றெல்லாம் அலப்பறை செய்தார்கள். பின்னர் பி.ஜே.பி. விற்கு எப்படியும் தங்களது ஆதரவு தேவைப்படும் என்று கணக்கு போட்டு மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கலாம் என்று ஒரு கணக்கு ஓடியது. தேசிய கட்சிகள் இரண்டுமே பெரும்பான்மை பெற வாய்ப்புகள் இல்லாததால் பிராந்தியக் கட்சிகளின் தயவு தேவை என்பதால் அதிக சீட்டுகளை வெல்லும் கட்சியே பேரம் பேச முடியும், ஆதலால் தேர்தல் பிரச்சாரத்தில் முதலில் "இந்த தேர்தல் காங்கிரசையும் தி.மு.க. வையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல்" செய்வீர்களா? செய்வீர்களா? என்று ஹெலிகாப்டரில் பறந்து பறந்து முழங்கினார். மறந்தும்கூட பி.ஜே.பி யை அப்பொழுது விமர்சனம் செய்யவில்லை.

இதை கவனித்த பி.ஜே.பி யின் தமிழக கூட்டணிக்கோ ஜெ  மோடி தயவில் எங்கே தங்களது கூட்டணிக்கு வரவேண்டிய ஓட்டுக்களில் ஆட்டையைப் போட்டுவிடுவாரோ என்று கலங்கின. வை. கோ. வெளிப்படையாகவே இது அயோக்கியத்தனம், கயவாணித்தனம் என்று விமர்சித்தார்.

பின்னர் பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் ஜெ  விற்கு முதல் ஆப்பு தொடங்கியது. தி.மு.க அம்மையாரை உசுப்பி விட பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் பொடி வைத்தனர்.

அம்மா உளவுத்துறையின் தகவல்படி "பி.ஜே.பி யை விமர்சிக்காததால்" சிறுபான்மை வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகவும் மென்மையாக மோடியின் தேர்தல் அறிக்கையில் காவிரி பற்றி ஒன்றுமில்லை, மீனவர்கள் பற்றி ஒன்றுமில்லை என்று சிறுபான்மையினரை வருடிக்கொடுக்க தொடங்கினார்.

ஆனால் ஸ்டாலின்,  அம்மையார் பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் உள்ள பொது சிவில்சட்டம், ராமர் கோயில் கட்டுவது போன்றவற்றை  விமர்சிக்காதது ஏன்? என்று அடிமடியிலேயே கைவைக்கும்  கேள்விகளை எழுப்பினார். மேலும் அ.தி.மு.க விற்கும் பி.ஜே.பி விற்கும் கள்ளத்தொடர்பு உள்ளது என்று போட்டு தாக்கினார். இப்பொழுது அம்மா மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

இவையெல்லாம் தவிர அம்மாவின் அல்லக்கை மந்திரிகள் ஒட்டுக்கேட்டு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் மின்வெட்டையும் தண்ணீர் தட்டுப்பாட்டையும் காரணம் காட்டி விரட்டி அடிக்கப்படுகின்றனர். அமைச்சர்களுக்கே இந்த கதி என்றால் அந்த தொகுதி எம்.எல். ஏக்களின் நிலைமை கேட்கவே வேண்டாம். மின்வெட்டை சரிசெய்ய ஒன்றும் இது வரை செய்யாதது இப்பொழுது தேர்தல் நேரத்தில் குடைச்சல் கொடுக்கிறது. அதை சமாளிக்கத்தான் தேர்தல்  நேரத்தில் மின்வெட்டு வருவது சதிவேலை சில கட்சிகளின் மேல் சந்தேகம் எழுகிறது என்று தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொள்கிறார். தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையில் சதிவேலை என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

இதற்கெல்லாம் மேலாக அம்மையாரை விரக்தியடையச் செய்திருப்பது மோடி ரஜினி சந்திப்பு. காலையில் ரஜினியின் சிறப்பு பேட்டி ஜெயா டிவியில் ஒளிபராப்பாகிறது. மாலையில் மோடி  ரஜினியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.மேலும் இந்த சந்திப்பிற்கு மூலகர்த்தாவே அம்மையாரின் அரசியல் ஆலோசகர் என்ற கூடுதல் எரிச்சல் வேறு. உளவுத்துறையின் கணிப்பில் சிறுபான்மையினர் ஒட்டு  தி.மு.க பக்கம் போகிறது என்ற செய்தி வேறு தான் ஏறி உட்கார்ந்துகொண்டு ஆப்பை அசைத்து பார்க்கிறது.

இது எல்லாம் தி.மு.க வின் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றிக்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற கலக்கம்.

தமிழகத்தின் தலை எழுத்து இந்த இரண்டு கட்சி(கழிசடை)களையும் விட்டால் வேறுவழியில்லை. 



Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 16 April 2014

டீ வித் முனியம்மா---------பார்ட் 5

நாடார் இன்னா முன்னியமே வந்து குந்திகினு கீற..........

டேய் பயம் நீதான் ஆள் வச்சுகினு வியாவாரம் செய்வியா.........நமக்கும் ஆள் கீது...........பையன் கீறான்........கல்லாவுல குந்திகினு.......

பாத்து நாடார் கல்லாவுல கை வச்சிடப்போறான்.....

டேய் பேமானி வாய கயுவுடா..................பயம்.........

இன்னா லிங்கம் சார் இன்னா மேட்டரு...............

தோ டா முனியம்மா வந்துகினு கீது அதான்டையே கேளு...............

டேய் இன்னாடா லோகுப்பயல டீக்கடையாண்ட காணோம்...........

தோ வந்துகினே கீறேன்க்கா.............

சரி முனியம்மா இந்த தாடி மனுஷன் மோடி இன்னாத்துக்கு நம்ம தலீவரு படையப்பாவ வூட்டாண்ட போயி கண்டுகினு வந்துகிராறு.............

அட லோகு இன்னா இது ஒரு புது மேட்டரா? எலிக்சன் வர சொல்ல அந்தாள அல்லாரும் வந்து பாத்துகினு போட்டோ பிடிச்சிகினு போவானுங்க............

நம்ம படையப்பரும் சரி அவருக ஆளுங்களும் உஷாரு பார்ட்டிங்கோ...........வாய் உட மாட்டாங்க............

அவரு யாருக்குதான் ஒட்டு போட சொல்லுவாராம்?

அட இது இன்னா கேள்வி லிங்கம் .............அவரு வயக்கம் போல உங்களுக்கு யாரு தோணுதோ அவருமேல குத்துங்கன்னு சொல்லிட்டு இமயமலியாண்ட குந்திக்குவாறு..........

ஆனா தலீவரு டக்கர் பார்ட்டிப்பா..................அவரு கண்டி நெனைச்சா...............சரி அத்த வுடு ...................

இன்னா மோடி தலீவரு வூட்டாண்ட போனதில கேப்டன் காண்டாயிட்டாராமே...............நாடார்

அஹான் நாடாறு இந்தாளு கூட்டணி தலீவருன்னு ஒரு கணுக்கா மப்புல வரசொல்ல மோடி அவர கண்டுக்கினா கேப்டன் கான்டாக இன்னா செய்வாரு?

இன்னா இன்னும் ஒரு ரெண்டு கட்டிங் எஸ்டா உட்டுகினு...........மக்கழ கூவிகினு போயிருப்பாரு.......பாய்

பாய் உங்காளுங்க இன்னா அம்மா கட்சிக்கு ஆதரவு இல்லைன்னு சொல்லிகினு ஐயா கட்சிக்கு ஆதரவுன்னு சொல்லிகிறாங்க............

இன்னா முனியம்மா அப்டி சொல்லிகின, அல்லாரும் நம்ம ஆளுதான்..........இதெல்லாம் அரசியல வயக்கம்போல நடக்கிறதுதான்..........

இன்னா முனியம்மா வைகோ வாண்ட விருதுநகரு ஆளுங்க ஓட்டுப்போட துட்டு கேட்டடுகிரானுகளா?

அஹான் மீச அந்தாளு ஒரே பெஜராயிட்டாறு..................சூடாய் அங்கிருத்து எஸ் ஆகிக்கிராறு............

இன்னா நம்ம கார்த்திக்கு எலிக்ஸனுக்கு கூவ போயிட்டாராம்........

அதான் பாய், அந்தாளு தொப்பி ஒன்னு வாங்கிகீரான் அத்த போட்டு சொம்மா பிலிமு காமிச்சிகினு கீறான்...............சரியான காமெடி பீசு........

சரி முனிம்மா சினிமா நூசு இன்னா................

இன்னாடா இப்போ நூசு கோச்சடையான் வருதான்............அதான் நூசு.......இந்த வாரம் நம்ம வைகைப்புயலு படம் வருது..........அப்பாலிகா இப்போ எலிக்சன் டயம் அதால அல்லா ஸ்டாருங்களும் அப்படியே அம்பேல் ஆகிட்டானுங்க.....................இவனுக எதாச்சும் கொரலு வுட்டு அப்பாலிக அந்தம்மா படம் வர வுடாம செய்யுன்னு பம்மிகிரானுங்க.........

அதான் நூஸா முனிம்மா அதான் அணிலு, பெருச்சாளி எல்லாம் பொந்துல பூந்திடுச்சா...........................

ஆமாண்டா பயம்.............இந்த எலிக்சன் வந்ததால நம்ம கொண்டிதோப்புல பகலுல டூபு லைட்டு போட்டுகிரானுங்க.................ரவைக்கி உருவிடுரானுங்க..........இன்னா வோ நடக்குது போ...........





Follow kummachi on Twitter

Post Comment

Monday 14 April 2014

கலக்கல் காக்டெயில்-142

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


முத்துவும் மோடியும்

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மோடி போயஸ் கார்டன் சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த ரஜினி நாங்க அரசியல் பேசவில்லை என்கிறார். பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தமிழ் திரையுலகில் நுழைந்து இன்று தமிழ் படங்களை உலகளவு வியாபாரத்திற்கு வித்திட்டவர்கள் ரஜினியும், கமலும் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் ரஜினியின் பங்கு இதில் அளப்பரியது. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை பெரிய ரசிக பட்டாளத்திற்கு சொந்தக்காரர். எத்துணையோ தயாரிப்பாளர்கள் இவரால் நல்ல நிலையை அடைந்தவர்கள். இவரது புகழை பயன்படுத்தி ஒட்டு வேட்டையாட ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா கட்சி தலைவர்களும் போயஸ் கார்டன் இல்லத்தில் தவமிருப்பது வழக்கம்.

ரஜினி சுயமாக சிந்திக்கக் கூடியவர். நல்ல மனிதர் என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர். இது போன்ற அரசியல் தலைவர்களுக்கு தனது புகழையும் நன்மதிப்பையும் விற்று தமிழர்களின் மனதிலிருந்து இறங்கமாட்டார் என்று அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரஜினி கைவிடமாட்டார்.

நாளைய பாரதம்

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அல்லக்கைகளின்  பித்து தலைக்கேறிக்கொண்டிருக்கிறது. போனமுறை கேப்டனை நக்கல் செய்து சன் டிவியும் கலைஞர்  டிவியும் திரும்ப திரும்ப போட்டு காண்பித்த காட்சிகள் இப்பொழுது ஜெயா டீவியிற்கு மாறியிருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம், நாளைய பிரதமர், வருங்கால பாரதம் என்ற கோஷங்களும், சுவரொட்டிகளும் இப்பொழுது நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க வை விமர்சிக்காத அம்மாவின் பேச்சு இப்பொழுது தடம் புரள்கிறது. யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் எனபது இப்பொழுது கேள்விக்குறி?

எப்படியோ யாருக்கு எவ்வளவு கிடைத்தாலும் சாமானியனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அரசியல் கட்சிகளின் குதிரை பேரத்திற்கு தான் உதவப்போகிறது.

இந்த முறை தமிழன் சித்தித்து வாக்களிப்பானா? இல்லை பணத்திற்கும் படாடோபத்திற்கும் விலை போவானா? மே பதினாறு தெரிந்துவிடும்.

ரசித்த கவிதை 

விழி அசைத்த இரவு 


உறங்கிக்கிடக்கிறது ஊர்.
பக்கத்து வீட்டு 
விளக்கொளிகளும்
வீட்டாரோடு சேர்ந்து தூங்குகின்றன
நடு நிசியில்
நாயின் குரலோ
கைபேசி சினுங்கல்களோ 
ஆள் நடமாட்டமோ 
எதுவும் கேட்கவில்லை 
தூக்கம் வராத நான்
அங்குமிங்கும் நடந்த போது
என் கண்ணொளி இரண்டும்
அம்மாபெரும் இருட்டை 
அசைத்துக்கொண்டிருந்தன.
-------------------------------------------------வசந்த் பூபதி.
 



ஜொள்ளு




Follow kummachi on Twitter

Post Comment

Thursday 10 April 2014

ஹன்சிகா மாதிரி பொண்ணு கெடைச்சா..

வலை கீச்சுதே..................ரசித்த கீச்சுகள்............

நம்மூர்ல பகுத்தறிவுன்னா இந்து தெய்வங்களையும் கும்பிடுறவங்களையும் சகட்டுமேனிக்கு வையறது---------------------கோவை கமல்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவோம்--பா.ஜ.க# முதல்ல குப்பங்களில் பாத்ரூம் கட்டுங்கடா பன்னாடைங்களா------தில்லு தொர

நோட்டு கொடுத்தா ஒட்டு- கொடுக்காட்டி நோட்டாவுக்கு ஒட்டு-----காமன் மேன் --------------------------------------------டான் டான் டான்

வைரமுத்து தமிழ்நாட்டுல பிறந்ததால கவிஞர் ஆகிட்டாரு, கேரளாவில பிறந்திருந்தா கதகளி டான்சர் ஆகிருப்பாறு# அவரு பேசறப்போ முகத்தை கவணிங்க---------------------------------------ஜூனியர் ஒல்ட்மாங்க்

என்னது ட்விட்டர்ல லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போகுதா? ஒரு நல்ல DP வச்சு நாமளும் சீக்கிரமே செட்டில் ஆகுறோம்# லவ் மூட் ஸ்டார்ட்டட்:-)))-------------------------------------------------கோட்டிக்காரன் 

லூசாடி  நீ அப்படின்னா வெட்கத்துல சிரிக்கிறா "பைத்தியமா நீ" என்றால் கோவப்பட்டு திட்டுறா ரெண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டாளோ தெரியல.---------------------------------அல்டாப்பு

ஹன்சிகா மாதிரி பொண்ணு கெடைக்கும்னா பீட்டர் மேல மட்டுமில்ல அண்டர்டேக்கர் மேல கூட கையை வைப்பேன்டா-------------நோட்டா 

என்னதான் ரயிலில் முண்டி அடித்து முதலில் சீட் பிடிக்க ஏறினாலும் ஒரு கர்சீப்பிடம் தோற்றுப்போக வேண்டியுள்ளது------------சப்பாணி

தமிழ் சினிமா பாடல்களில் முக்கல் முனகல்களை இசையாக்கி பிரபலப்படுத்தியதில் இளையராஜா, ஜானகியின் பணிகள் அளப்பரியது# ஏதாவது சொல்லுவோம்--------------------------கும்மாச்சி (அடியேன்தான்)

நாலரை வருடம் அரசியல்வாதிக்கும் ஆறுமாதம் தேர்தல் கமிஷனுக்கும் மக்கள் அடிமையாக  இருப்பதன் பெயர்தான் ஜனநாயகம்----------rasigan637.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 5 April 2014

டீ வித் முனியம்மா---------பார்ட் 4

டேய் மீச எங்கடா முனியம்மா ............இன்னும் வர்ல...........

எனிக்கி தெர்ல நாடார்..............வரசமயம்ஆயி




 டேய் பயம் முனியம்மா காலில கண்டுகினியா...............

யோவ் லிங்கம் சொம்மா உதார் உடாதே அது கண்டு கேட்டுச்கிச்சு உன்னிய கோதாவுல உட்டு குமுறிடும்.

தோ முனியம்மா வருது...............

டேய் பயம் இன்னாடா லிங்கத்த கலாய்ச்சினு கீறே

அது ஒன்னியும் இல்லே..............

சர்தான் பாய் வரலியா...................தோ வந்துகினே கீறேன்..............

முனிம்மா இன்னா நூசு...................இந்தம்மா சும்மா ஹெலிகோப்டர்ல்லேயே பறந்துகினு கீதே.............அதுக்கு யாரு துட்டு கொடுப்பாய்க.............

அதான் தெர்ல பாய், எலிக்சன் கமிசன் அதுக்கு கணுக்கு கேக்க மாற்றானுங்கோ.........

எலிக்சன் கமிசன் தலீவர் கீரானே அந்தாளு அம்மா மச்சான் போல , போன எலிக்சன்லேயும் ஸ்ரிரங்குத்துல அம்மா முந்தானிய அவுத்து வுட்டு சில்லரை செதற வுட்டுது அந்தாளு கண்டுக்கினா மாதிரி தெர்ல.......

மவனே இவனுக இன்னதான் டகில் பாச்சா காட்னாலும், ஜனம் கீது பாரு அது மெய்யாலுமே ரிவிட் அடிக்கும்...........

சரி  முனிம்மா அது இன்னா பக்கடா...........பார்ட்டி............பக்கடா பார்ட்டி............ன்னு .........சொம்மா வைகோ கூவின்னு கீறாரு............

அந்தாளு போன எலிக்சன்ல கைட்டிவுட்ட காண்டுல அம்மாவையும் அவிக அல்லக்கை பாடுகளையும் வுட்டு  கைற்றாறு..............அந்தம்மா கிட்டே கீறானே ஒரு சூப்பர் பாடு அவன்தான் பேச்சு வார்த்தைன்னு சொல்லி அல்லாருக்கும் வடையும் பக்கடாவும் கொடுப்பானாம்...................

அதுயாருக்கா?.......................செல்வம்

டேய் பயம் விசயம் தெரியாதவனா கீறேயே? அம்மா கிட்டே அன்டின்னுகீற சூப்பர் பாடு யாருடா? ஓ.பி டா......,

இன்னா இந்த தபா தளபதிதான் பின்னி பெடலேடுக்கிறாராமே...........

அஹான் மெயாலுமே இப்ப தூள் கெளப்பினு கீறாரு............

இந்தம்மா  உடுற ஊதார நக்கல் செய்ய..................தாஜ்மகால கட்ட்னதே எங்கம்மா தான்னு சொல்வானுங்க ன்னு டபாய்க்கிராறு..............

அயகிரி மேட்டர் இன்னா.................

அந்தாளு சொம்மா பேட்டி, பெட்டின்னு ஆஃப் ஆயிட்டார் போல............

கேப்டன் இன்னா சொல்றாரு................

அந்தாளு இன்னா சொல்லுவாறு.........................அவரு மப்பு ஆகி மட்டை ஆயிடுவாரு......................அவரு பொன்சாதி கீதே அதுதான் சொம்மா அல்லாருக்கும் ஆப்படிக்கீது.....................அதுக்கு ஏதோ அம்மா மேல காண்டு போல...........

முனிம்மா இந்த தோனி பையன் கூட்டம் இன்னா பண்ணிகிரானுங்கோ........

இன்னா பாய் கடேசி வரிக்கும் கெலிச்சுகினே வந்துகிரானுங்கோ.............


கோப்பைய தூக்கிரானுவங்ககளா?

அது நமக்கு இன்னா தெரியும், துபாய்ல டெண்டடிச்சு குந்திகிரானுன்களே ஐ.சி.சி அந்த பாடுங்க இன்னா நெனைக்கிரானுன்களோ?

டேய் பயம் இந்நாடா கம்முனு கிறே?

இன்னாக்கா நம்ம மேட்டர் ஒன்னியும் காணோம்..............

மவனநீ  திருந்த மாட்ட...................





Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 2 April 2014

கலக்கல் காக்டெயில்-141

போடுங்கம்மா ஓட்டு

இந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டி போடுவதனால், பிரசாரங்களில் காமெடி தோரணம் கட்டி ஆடுவதில் வியப்பில்லை. பிரதான கட்சிகளோ ஒருத்தர் சொத்து மதிப்பை மற்றொருவர் விமர்சித்து சேரை வாரி அடித்துக்கொள்கிறார்கள். மெகா கூட்டணியில் நிறைய காமெடி பேச்சாளர்கள். எல்லோரையும் சகட்டு மேனிக்கு நக்கலடித்து கூட்டம் சேர்க்கிறார்கள். சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி மக்கள் சில பிரச்சினைகளை மட்டுமே மனதில் கொண்டு தேர்தலை எதிர்கொல்கிறார்களாம்............அவற்றில் முதலில் விலைவாசி பிரச்சினை.  இரண்டாவதாக மின்வெட்டு. பின்னர் வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் குடிநீர் பிரச்சினை.

இருந்தாலும்  வெற்றியை நிர்ணயிப்பதில் பணமும், சரக்கும் பெரும் பங்கு வகிக்கப்போவது என்பதை மறுப்பதற்கில்லை.

புதுமைப்பித்தன்

அண்மையில் நண்பரிடமிருந்து புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு "புதுமைப்பித்தன் கதைகள்" என்ற புத்தகம் எடுத்து வந்தேன். எம். வேதசகாயகுமார் தொகுத்து அளித்திருக்கிறார். இதற்கு முன்பு புதுமைப்பித்தன் சிறுகதைகளில் விட்டுப்போனவை பலவற்றை இந்த தொகுப்பில் படிக்க முடிந்தது.

புதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும் உலக இல்லைக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளை படைத்து அளித்தவர்  புதுமை பித்தனே ஆவார். என்று த. ஜெயகாந்தன்குறிப்பிடுகிறார்.

பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் போன்ற கதைகள் புதுமைப்பித்தன் என்றவுடன் நியாபகம் வருபவை.

கட்டில் பேசுகிறது, மோட்சம், நியாயம், செல்வம் போன்று இன்னும் நிறைய முத்துக்கள் இருக்கின்றன.

புதுமைப்பித்தன் "சிறுகதை" இலக்கியத்தின் முன்னோடி என்பதில் சிறிதளவும்  ஐய்யமில்லை.

ரசித்த கவிதை

 பாட்டும் தொடையும் அடியுமே

ஆசிரியப் பாவெண்பா கலிப்பா வஞ்சிப்பா
அவ்வண்ணமே பாவகை நான்குண்டு கொள்ளப்பா
யோசித்து நீகட்டப்பா எண்வகை தொடையப்பா
அப்பப்பா அப்புறம்காண் பாவேயொரு அழகப்பா!

பாவடிக்கும் இதுபோல் பல்வகை உண்டாம்
பகுத்துச் சொன்னாரே பஞ்சமென்று அதுவாமே
மேவுசீர் இரண்டிருப்பின் குறளடியாம் சிந்தடியே
முச்சீர் நாற்சீர் அளவடி ஐய்சீர்கள் நெடிலடி
முடிவாய் கழிநெடிலடிக் காம்அறுசீ ரும்மேலாம் !

 -------------------நன்றி: வ.க. கன்னியப்பன்

ஜொள்ளு











Follow kummachi on Twitter

Post Comment