Friday 31 October 2014

திராவிட இட்லி

சமீபத்தில் வெளிவந்த படத்தில் கம்யூனிச விளக்கத்தை தொடர்ந்து இட்லியை வைத்து சமூக வலைதளங்களில் தாறுமாறாக உப்புமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்றால் என்ன?

தட்டுல இருக்கிற இட்லியை இது திராவிட உணவல்ல ஆரிய உணவு என்று சொல்லிவிட்டு இட்லிய குண்டானோட களவான்ட்டு ஓடறது.

இது ட்விட்டரில் படித்தது.

இனி நம்ம பங்கிற்கு

ஆரியம் என்றால் என்ன?

இட்லிக்குள்ள உருளைக்கிழங்கு போண்டா வைத்து "பட்டட்டா இட்லி" என்று வியாவாரம் செய்து, காசு பார்ப்பது.

அண்ணாயிசம் என்றால் என்ன?

அறுபத்தியாறு கோடி இட்லிய ஆட்டையப்போட்டு ஆறு இட்லிய "விலையில்லா" இட்லியாக கொடுப்பது.

பார்ப்பனீயம் என்றால் என்ன?

நாலு இட்லில கெட்டி சட்னி  வைத்து முக்கிவிட்டு, அடுத்தவன் இட்லில உப்புமா செய்வது.

ஹிந்துத்வா என்றால் என்ன?

இந்துக்கள் எல்லோரும் பத்து குழந்தை பெத்துக்கிட்டு இட்லி உற்பத்தியை பெருக்குவது.

சோஷலிசம் என்றால் என்ன?

ஒரு இட்லிய கட்டிக்கிட்டு, ஒரு துணை இட்லியும், ஒரு தோழி இட்லியும் வைத்துக்கொண்டு மீதி இட்லிகள் வப்பாட்டிகளாய் உள்ளே தள்ளுவது.

பகுத்தறிவு என்றால் என்ன? 

இட்லியையும் பார்ப்பானையும் கண்டால் இட்லியை தின்றுவிட்டு பார்ப்பானை திட்டு என்ற கொள்கை பிடிப்பு.

ஆத்திகம் என்றால் என்ன?

ஆண்டவன் இல்லையேல் அரிசி இல்லை அரிசி இல்லையேல் இட்லி இல்லை ஆனால் சட்னி உண்டு என்று வெறும் சட்னியை தின்பது.

நாத்திகம் என்றால் என்ன?

இட்லியும் இல்லை சட்னியும் இல்லை என்ற பகுத்தறிவு பகலவன் "இடியாப்பர்" கொள்கைதான் உண்மை என்று இடியாப்பம் பாயா சாப்பிடுவது.

இன்னாது குஷ்புயிசம், த்ரிஷாயிசமா?


குஷ்பு இட்லி, த்ரிஷா இட்லிக்கேல்லாம் விளக்கம் தேவையில்லை.





...............ப்ப்பா மிடில

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 29 October 2014

ஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான்.......


ட்விட்டரில் ஒரு நாளுக்கு எத்துணையோ கீச்சுகள் வருகின்றன. ஆனால் சில கீச்சுகள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன. இந்த நவீன "திருவள்ளுவர்"களின் கீச்சுகளில்  நான் ரசித்தது உங்களது நகைப்பிற்கு.

2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம் விஜய், முருகதாஸ், லைகா- நீதிமன்றம் நோட்டிசு#மாசானம் ஹாஸ்பிடல் நர்ஸ் பேரு மேரி. வசனம் எழுதினத்துக்கு சாரி----------சி.பி.செந்தில்குமார்.

பால் விலை உயர்வுக்கு தி.மு.க. காரணம்-ஓ.பி.எஸ்.# கலைஞர் ரியாக்சன்: வன்னாந்துறையில் உள்பாவாடை காணாமல் போனா கூட என்னைய தான் புடிக்க வராங்க!----------------சுபாஷ்.

ஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான் மொக்கை ஆனா கமல் பொண்ணுங்கிற பிராண்ட் நேம் காரணமா பொழப்போட்டுது.........லார்டு.

சென்னை புத்தக கண்காட்சி தேதி அறிவிப்பு # இனி சந்தில் சுற்றும் உப்புமா எழுத்தாளர்களெல்லாம் தம் புத்தகங்களை விளம்பரம் செய்து சாவடிப்பார்களே:-(-----------------வாழவந்தான்.

திரைப்பிம்பமான கூத்தாடிகளுக்கு "Self Appraisal" என்பது அவர்களின் ரசிகமகா கூமுட்டைகள் செய்யும் சில்லறை வேலைகளின் தன்மையில் அடங்கிவிடுகிறது.--------------------மகிழ்வரசு.

கம்யூணீசத்த  பத்தி  தெரிஞ்சுகனுமின்னா இட்லி கடைக்கு போங்க இங்க வந்து உயிரை எடுக்காதீங்க--------------------ரைட்டர்MiRa.

ஆண்ட்டி என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! பாபி என்று சொல்லும்போது தான் உதடுகள் ஒரு முறையல்ல; இரண்டு முறை ஓட்டும் # Hailbobbies---------குணாயோகசெல்வன்.

எனக்கு ஒரே ஒரு டவுட் தான் இந்தப் போராளிகள் போய் உட்காரும் பொது எப்படி குழாய்களுக்குள் ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம இருக்கு?  ரமணா எடுத்த ARMஆ?-----------சுஷிமா சேகர்.

நான் முதலமைச்சர் ஆக மோடி ஆதரவு தருவார்--விஜயகாந்து# மொத நீங்க குடிக்க ஒரு பாட்டிலு சரக்கு தருவாரான்னு கேளுங்க தலைவரே--------சிவனாண்டி.

போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்னு சொன்னா ரஜினி ரசிகன், இருந்தா நல்லாருக்குமேன்னு சொன்னா கமல் ரசிகன், "நான் கடவுள்" ன்னு சொன்னா "பாலா" ரசிகன்------------வெங்கி.

லக்னோவில் லஞ்சம்  கேட்ட அரசு ஊழியர் முன் 40 பாம்புகளை அவிழ்த்து விட்ட விவசாயிகள்------------ராதா இல்லாபடம் சாதா.
இந்த குன்ஹாவெல்லாம் வேலைக்கு ஆவாது 

மச்சினியிடம் இருந்து வரும் மாமா என்ற வார்த்தைக்கு  ஒரு பர்சன்ட் கிக் அதிகம் தான்யா!:))-----------நாட்டுப்புறத்தான்.

அனைத்து கீச்சர்களுக்கும் நன்றி.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 28 October 2014

டீ வித் முனியம்மா பார்ட்-24

டேய் மீச ரண்டு இட்லி வடகறி குடு....

இன்னாடா செல்வம் ரண்டு இட்லி ஏன் மூணுதான் சொல்றது.


அடப்போ முனிம்மா காலிலேயே பேஜார் செய்யாத, மூணாவது இட்லி அடுத்த ஆளுது, வந்து அதுல ஆட்டையப் போட்டா கம்மூனிஸ்ட்டுங்க காண்டாய்டுவானுங்க, சொல்லிகிறாங்க.

அடப்போடா, கோடி கோடியா சம்பாரிக்கிறவனுங்க சினிமாவுல வசனம் பேசுவானுங்க அதுக்கு பிகில் உட்டு இங்க வந்து பேசுற, டேய் உன்னிய மாதிரி ஆளுங்கலாலத்தான் எளிக்சணுல துட்டு கொடுத்து அப்பால நம்ம துட்டுல ஆட்டையப் போடுறானுங்க.......இன்னா சொல்லுற பாய்.
டேய் செல்வம் அஞ்சலைய கண்ணாலம் கட்டிகினு வாராவதியாண்ட ஒரு  பிகர ஓரம் கட்டுறியே அங்க எங்கடா போச்சு உன் கம்மூணிசம்.

அஹான் முனிம்மா அந்த சினிமாவ கண்டுக்கினுதான் ஒருத்தன் மப்பாய் பாடிக்கினே போறான்
கொக்க கோலா பிரவுனு கலருடா
என் அக்கா பொன்னும் அதே கலருடா
கொயாவுல தண்ணி வரலடா-என் வாயில
வண்ட வண்டயா வருதுடா..........

டேய் மீச டீ போடுறா......இன்னாடா டீ வெலை ஏறிடுச்சா.

அதே முனிமா பாலு எறிப்போயில்லே.

வெலை ஏறாத சொல்லவே நீ பாலுல தண்ணி ஊத்துவ, இப்ப இன்னா மீச தண்ணில பால ஊத்துறையா? இன்னிக்கி செத்தா நாளிக்கி பாலுன்னுவானுங்க, இப்போ அதுக்கே வழியில்ல....நாமெல்லாம் அப்பீட் ஆயிட்டா பாலு கெடியாது..........தண்ணிதான் ஊத்துவானுங்க போல.

இன்னா முனிம்மா இன்னா................ மய பெயுது...

அதானே பாய், இந்தாளு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனாரு, மய பொத்துகிட்டு ஊத்துது, மக்கள் முதல்வர் இருக்கசொல்ல மய இல்ல, ஆனா பாரு லிங்கம் சார், தெருவெல்லாம் ஒரு தொண்டி உயுந்து போயி, அங்க அங்க பொத்தலாகீது.....இந்த கார்பரேசன் காரனுங்க இன்னா செயுரானுங்களோ.

மேயரு, அமைச்சர் அல்லாரும் மக்கள் முதல்வர் வயக்குலேர்ந்து வெளிய வர மண் சோறு துன்றாணுக, அவிங்களுக்கு எங்க இதுக்கு நேரம்?

இன்னா முனிம்மா அடுத்த கேசு வருதுபோல.......

அதான் லோகு சாரு, இப்போ 2G கையில எடுத்துகிறானுங்க.

எவன் எவனுக்கு ஆப்பு உயப்போவுதோ.

ஆமா நாடார், போன தபா அந்த ஆயா ஜெயிலுக்கு போவ சொல்ல நான் பேசறத பார்த்து ஒரு பாடு சொல்லுறான், நீ இன்னா களிஞருக்கு ஜால்ரான்னு.

அதுக்கு நீ இன்னா சொன்ன முனிம்மா.

டேய் லோகு எவன் கொள்ளையடிச்சாலும் தப்புடா........இதுல ஆயா என்ன தாத்தா என்ன?

இவனுக அதிகாரம் இருக்க சொல்ல, தேடி தேடி ஆட்டையப் போடுவானுங்க, அப்பால் அந்த துட்டு வச்சிகினு இனாம் குடுத்து ஆச்சியப் பிடிப்பானுங்க, அப்பால கேசு வந்திச்சினா அந்த துட்டு வச்சே வெளில வருவாய்ங்க. இன்னா ஜனநாயகமோ.

அது சரி முனிமா விலைவாசி ஏறிப்போச்சுன்னு நீ இன்னா மீன்கறி துன்னாமையா கீற.

அடேய் செல்வம் கவர்மெண்டுல வேலை செயுறவன், பெரிய பெரிய கம்பெனில வேல செயுறவன் அல்லாருக்கும் விலைவாசி எர்ச்சுன்னா பஞ்சப்படி அந்தப்படி இந்தப்படின்னு கொடுத்து சம்பளம் ஏத்திடுவானுங்க, பயம் விக்கிற உனுக்கு, பூ விக்கிற நமக்கு எவண்டா ஏத்துவான், நாம எட்டணா ஏத்தினா வந்துருவானுங்க இன்னா வேலைய ஏத்திட்டேனு.

அதான் முனிம்மா நீ சொல்றதும் சரிதான், நாம  வெலை ஏத்தி இன்னா ஸ்விஸ் பாங்குலேயா துட்ட வச்சிகீறோம்.

அதானே லோகு, இப்போ ஸ்விஸ் பாங்குல துட்டு வச்சிக்கிற நாலு பேர சொல்லிகிறாங்க.

இன்னும் யாரு யாரு வச்சிகிறாங்க?.

அது கச்சிகாரனா இருந்தா சொல்லமாட்டாங்க, அது அவனுக்குள அடுஜஸ்டுமெண்டு.

கரீட்டு முனிம்மா, வியாபாரிங்க பேர்தான் சொல்லிகிரானுங்க.

முனிம்மா இன்னா தீவாளிக்கு இன்னா செஞ்ச, படம் கிடம் பார்த்தியா?

அடப்போடா, தீவாளி அன்னிக்கும் வியாவாரம்தான்..........அப்பால நடுவீட்டுல படையலு வச்சி சாமி கும்புட்டேன்.........இன்னா படம்னாலும் டீவில போடுவானுங்க அப்பால பார்க்கவேண்டியதுதான்.

நல்லா வெவரமாத்தான் கீற முனிம்மா........

சரி முனிம்மா நூஸ் பேப்பர கொடு இன்னா படம் போட்டுக்கிறான்.......

டேய் செல்வம் நீ உருப்பட மாட்ட போ........படமெல்லாம் மேல போட்டுக்கிறான் பாரு......





Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 21 October 2014

கலக்கல் காக்டெயில்-159

கூத்தாடிகளை கொண்டாடாதீர்...........

சமீபத்தில் ஊழல் வழக்கில் சிக்கி பிணையில் வெளி வந்திருக்கும் ஒரு கட்சி தலைமைக்கு நடந்த வரவேற்பு கூத்தும் அதை ஒளிபரப்பிய அந்த கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியும் மற்றும் அந்த கட்சி தலைமைக்கு அடிவருடும் மற்றுமொரு கூட்டமும் "வானம் வரவேற்றது" "பூமி புடுங்கிடிச்சு", "நாடி நட்டுக்கிச்சு" என்று வாழ்த்துப்பா பாடி மக்களை வதைத்தார்கள்.

கூத்தாடிகள் தங்களது சுயநலத்திற்காக அரியணையில் எவர் இருக்கிறாரோ அவர்களை நாலு காலில் மண்டியிட்டு நாக்கு தள்ள லாவணி பாடுவது ஒன்றும் இந்த கேடுகெட்ட தமிழகத்திற்கு புதியதல்ல.

அதன் உச்சகட்டமாக உச்ச நடிகரின் வாழ்த்து இப்பொழுது வலைதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

யூ டூ......................உச்சம்.

ஒரு மலேசியா கூட்டத்தில் நடிகவேள் பேசியது நியாபகத்திற்கு வருகிறது.

"நாங்களெல்லாம் கூத்தாடி பசங்க, ஏதோ நாங்க நடிக்கும் நடிப்பை பார்த்து கைதட்டுங்க. உங்க கிட்ட காசு வாங்கிக்கிட்டுதான் நடிக்கிறோம். அதால் ஏதோ கைத்தட்டிட்டுப் போங்க. அத விட்டு விட்டுட்டு மன்றம் ஆரபிக்கிறேன், கட்சி ஆரம்பிக்கிறேன்னு வராதீங்க. நடிகன் எல்லாம் நாட்ட ஆண்டா நாடு உருப்படாது".

ராதா ஒரு தீர்க்கதரிசி.

இன்னும் கூத்தாடிகளையே நம்பி, அவர்கள் பின்னே சென்றுகொண்டிருக்கும் இந்த தமிழ் கூறும் கேடுகெட்ட சமுதாயத்தை என்ன சொல்வது.


"கஞ்சி குடிப்பதற்கில்லார்
அதன் காரணங்கள் எவை என்று
அறியுமில்லார்"

மோடி சுனாமி

நடந்து முடிந்த மகாராஷ்டிரம், ஹரியான சட்டமன்றத் தேர்தல்களில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடி இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் தனிபெருங்கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க இன்னும் இருபது முப்பது சீட்டுகளை பெற வேண்டிய நிர்பந்தம். ஆதலால் இங்கு அமீத்ஷா சொல்வதுபோல் சுனாமி அடிக்கவில்லை.

ஹரியானாவில் வேணுமென்றால்  சொல்லிக்கொள்ளலாம்.

இருந்தாலும் பி.ஜே.பி தென்னகத்தில் கால்பதிப்பது சந்தேகமே. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாய்ப்பே  இல்லை.

எந்த நடிகரை நம்பி களம் இறங்கினாலும், பின்னர் சேற்றை பூசிக்கொள்வது நிச்சயம்.


ரசித்த கவிதை 

ராமவாணம் ஒளிரும் கணம் 
சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்
சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!

நன்றி: ஜான் சுந்தர்.

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

Saturday 18 October 2014

உள்ளே வெளியே..........எங்காத்தாடா

நேற்றைய தினம் மக்கள் முதல்வருக்கு (அப்போ  ஓ.பி.எஸ் என்ன ஆடு மாடுங்களுக்கு முதல்வரா? என்று சின்ன புள்ளதனமா கேள்வியெல்லாம் கேக்கப்டாது ஆமா) உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அதை அடுத்து "ரர"க்கள் லட்டு கொடுத்தும், வெடிகள் வைத்தும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். (தெய்வத்திற்கு மனிதன் ஜாமீன் வழங்குவதா?).

அடுத்து ட்விட்டரில் அம்மா அல்லக்கைகள் ஓவராக சலம்ப ஆரம்பித்து விட்டனர்.

நீதியை வென்ற தேவதையாம் (அடேய் அப்ரசண்டிகளா ஆத்தா பெயிலில்தான் வராங்க, நிரபராதியாக அல்ல, இன்னும் குற்றவாளிதான், ஓவர் சலம்பல் உடம்புக்கு ஆகாதுடி).

இன்னும் சிலர் பழைய மொக்கையே மம்மி ரிடர்ன்ஸ் என்று படம் போட்டு சந்தையை நாற அடித்தனர். இந்த படத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி உபயோகப்படலாம்.

பிறகு அணில்குஞ்சுகளை உசுப்பேற்ற அம்மா வெளியே கத்தி உள்ளே என்று நக்கலடிக்க ஆரம்பித்தனர். மேலும்  "பொன்னாரம் பூவாரம் பைப்போரம் பண்டாராம்" என்று பழைய பாடலை நினைவு கூர்ந்து கலாய்க்க ஆரம்பித்தனர்.

பத்திரிகைகளோ தங்கள் பங்கிற்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களை வைத்து அவரவர்க்கு கதை கட்ட ஆரம்பித்தனர்.

தினத்தந்தி மக்கள் முதல்வர் பிணையில் வெளியே வருவதால் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று லிஸ்ட் போட்டு கொடுத்தது.

அதில் மக்கள் முதல்வர்  கட்சி தலைவி என்ற முறையில்  தேர்தல் பிரச்சாரங்களில் ஈடு படலாம் என்று போட்டு சொம்படி வேலை துவங்கியது. உடல்நிலை காரணம் காட்டி பிணையில் வந்த ஓம் பிரகாஷ் சௌதாலா கதை என்ன ஆனது என்று தெரியாமல் அறிவுரை வழங்கி பழைய வேலை தொடங்கியது.

எது எப்படியோ தீர்ப்பு ரத்து மேல்முறையீடு வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை இழுத்தடிக்கக்கூடாது. அதற்கான ஆவணங்களை டிசம்பர் பதினெட்டாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையென்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும்.

மேலும் வாய்தா வாங்காமல், வழக்கை இழுத்தடிக்காமல் வழக்கை விரைவில் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மக்கள் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பையோ இல்லை சுப்ரமணிய சாமியை விமர்சித்தோ ஆர்பாட்டங்கள் போஸ்டர்கள் ஓட்டுவதை மக்கள் முதல்வர் கட்சி தலைவி என்ற முறையில் தடுக்க வேண்டும். (உடனே கட்சி தலைவி அறிக்கை வெளியிட்டது செய்தி)
கொடுத்த காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே கூவிட்டோமோ?
அப்படி என்றால் 2015 மார்ச் பதினெட்டு தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும். கர்நாடக உயர்நீதி மன்றம் "சிறப்பு நீதிமன்ற நீதிபதி" கூறிய தீர்ப்பு சரியென்றால் மறுபடியும் பழைய கதை தொடரும். "தாய் எனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே" பாட்டு கொடி வைத்த கார்களில் ஒலிக்கும்.

பழைய படி தாடி, மொட்டைகள், தலையெடுக்கலாம்.

பிணத்திற்கு ஐந்து லட்சம் வியாவாரம் கொடிகட்டிப் பறக்கும். இன்னும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடிகள் அணிவகுக்கலாம்.

இந்த நேரத்தில் அலைக்கற்றை வழக்கும் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அங்கே என்ன என்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ?. அந்த கூடாரத்தில் ஒரு மயான அமைதி நிலவுகிறது.

எனவே அடுத்த வருடம் பரப்பிற்கு பஞ்சம் இருக்காது.


Follow kummachi on Twitter

Post Comment

Friday 17 October 2014

ஆத்தாவுக்கு குடுமா குடுமா அட ஜாமீன் ஒன்னு...........

ஆத்தாவுக்கு ஜாமீன் கேட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் "ரர"க்கள் சிறப்பு வழிப்பாடாம், ஆத்தா டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெயா டிவி நியூஸில் முழுக்க முழுக்க பிரார்த்தனை செய்திகள் கன்னியாகுமரி: அதிமுகவினர் மெழுகுவற்றி ஏற்றி வழிபாடு 

உதகை:108 மூலிகைகளைக் கொண்டு சத்ரு சம்ஹாரா யாகம் நடைபெற்றது. 

ஆசியர்கள் சங்கம் சார்பில் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு 
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் வீடுகளில் விளக்கேற்றி கூட்டு பிராத்தனை 

திருச்சி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு 

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை 

பழங்காநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில் 

திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் 100008 வடைமாலை சாற்றி வழிபாடு 

கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை 
காட்டுபாவா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை 

திருச்சி : மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் 

நெல்லை: கேடிசி பள்ளிவாசலில் இன்று சிறப்பு தொழுகை 

திருப்பூர்: ஐயப்பன் கோவிலில் 1008 நெய்விளக்கு ஏற்றி வழிபாடு 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 108 பால்குடம் 

கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சாய்பாபா கோவிலில் தேர் இழுத்து வழிபாடு சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

அடேய் அப்ரசண்டிகளா உச்சநீதி மன்றத்துல உறையும் ஹெச்.எல். "தத்"தாண்டேஸ்வரர ஏண்டா விட்டு வைக்கறீங்க, அவரையும் வேண்டி அலகு குத்தி பால்காவடி எடுத்தா நீங்க கேட்கும் மீன் நிச்சயம் மாட்டும்.

ஏதோ சொல்றத சொல்லிப்புட்டோம்..............

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 16 October 2014

பரப்பன அக்ராஹாரவில் நான்

நான் பெங்களுரு போயி பல வருடங்கள் ஆகின்றன, இருந்தாலும் எப்படி அந்த பஸ்ஸிலிருந்து சரியாக அந்த இடத்தில் இறங்கினேன் என்று தெரியவில்லை.

நான் இறங்கிய பொழுது சூரியன் சுள்ளென்று சுட ஆரம்பித்துவிட்டான். நான் இறங்கிய இடத்திலிருந்து சிறை வளாகத்தை கண்டுபிடிப்பது ஊரே தெரியாத எனக்கு ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை. எனக்கு முன்பு வெள்ளை வேட்டி கருப்பு சட்டையில் தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு சில கரை வேட்டிகள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்தேன். அவர்கள் பின்னால் ஒரு இருபதடி தள்ளிதான் நடந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் அந்தப் பழக்கப்பட்ட வாசம் என் நாசியைத் தாக்கியது. காற்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்தாலும் காலையிலேயே இந்த நாற்றத்தை எதிர் பார்க்கவில்லை.

சிறை வளாகத்திற்கு முன்பு உள்ள செக் போஸ்டில் அவர்களை விசாரித்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார் காவலர், பின்னாலயே நான் சென்றதால் காவலர் என்னை ஒன்றும் விசாரிக்கவில்லை. புல்வெளி எங்கும் ஒரே மொட்டை தலைகள் தென்பட்டன. இதில் வட்ட மொட்டை, மாவட்ட மொட்டை, கௌன்சிலர் மொட்டை என்பதை பாகுபடுத்துவதில் இயல்பாகவே எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. மொட்டைகளுக்கு சற்றே தள்ளி சில பெண்கள் இருந்தனர். அதில் ஒருத்தர் "சொர்ணாக்கா" போலவும், மற்றுமொருவர் மேக்கப் இல்லாத "ஓடத்தின் மேல் இருந்த பலானது" போல் தோன்றியது. சில சினிமா நூறு விழாவில் வந்து "அடிபோன ஆண்டிக்கோப்பை" பெற்ற முகங்களும் தெரிந்தன.

சற்றே தள்ளி மரத்தடியில் பிளாஸ்டிக் நாற்காலியில் சில தாடிகள் தென்பட்டன, சில காபி நிற தாடிகளும் சில சோன்பப்டி தாடிகளும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்து பின்னர் தன்னிலை உணர்ந்து சோக முகத்தை மாட்டிக்கொண்டனர். பழைய அமைச்சர்கள் போலும்.

சிறைச்சாலையை நெருங்கும் முன் இருக்கும் மரத்தடியில் ஒரே கூட்டம். அங்கு சிலர் நான் வருவதைக் கண்டு "சார் மொட்டை முன்னூறு ரூபா, மொட்டை முன்னூறு ரூபா" என்று சொல்லிக்கொண்டிருந்தார். "சார் அலகு ஆயிரம், பால் காவடி பத்தாயிரம்" என்று மற்றுமொருவர் கூவிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் எனக்கு ஆராய நேரமில்லை. விறுவிறு என்று கட்டிடத்தின் முன் உள்ள கம்பிக்கிராதியைக் கடந்து கட்டிடத்தின் உள்ளே நுழைந்துவிட்டேன்.

"மக்கள் முதல்வரை" எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டு சென்றேன், 7402 என்று தேடினேன். தாழ்வாரத்தில் நாலைந்து எலிகள் நான் வருவதைக்கண்டு தமக்குள்ள ஏதோ "கீக் கீக்" என்று சொல்லி சிரித்தது போல் தோன்றியது. எது எப்படியோ "ஆத்தா"  அறைக்குள் நுழைந்து ஏ. சி. இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்  என்று அறையைத்தேடினேன். அந்த இடதுபுற அறையில் "ஆத்தா போல்" தோன்றியது.

ஹேய் ஹூ  ஆர் யு? "ஆத்தா  குரல் தான்.

வாட் டூ யூ வான்ட்?

எனக்கு என்னுடன் தான் பேசுகிறார் என்பதே உரைக்க சில நேரம் ஆகிவிட்டது.

"மேடம் நீங்க உருட்டுற ஊதுபத்தில ஒரு பாக்கெட் கொடுங்க"

வாட்?

"இல்ல மேடம் நீங்க ஊதுபத்தி" என்று ஆரம்பிக்கும் முன்னே.

"வாட் நான்சென்ஸ்" என்று ஒரு விரலை உயர்த்தி "பிச்சு புடுவேன் பிச்சி" என்று சட்டசபையில் கேப்டனை மிரட்டுவது போல் கையை உயர்த்தினார்.

அதற்குள் இரண்டு மூன்று பெண் கான்ஸ்டபிள்கள்  கன்னடத்தில்  ஏதோ சொல்லிக்கொண்டு என்னை பிடிக்க வந்தார்கள்.

ஐயோ இவர்களிடம் மாட்டினால் நமக்கு "ஜாமீன் என்ன நெத்திலி மீன்" கூட கிடைக்காது என்று வேர்க்க விறுவிறுக்க கம்பிக்கிராதியை நோக்கி ஓடினேன், வழியில் இரண்டு மூன்று எலிகள் என் காலில் மிதிபட்டு தக்காளி சட்னி போல் ஆனதெல்லாம் எனக்கு தெரியவில்லை.

இவர்கள் கையில் மாட்டக்கூடாது என்று  "ஓடினேன் ஓடினேன் சிறையின் ஓரத்திற்கே ஓடினேன்". அப்படியும் ஒரு பெண் போலிஸ் வந்து என் கழுத்தில் கை வைத்தார்கள்.

"என்னை விடுங்க என்னை விடுங்க.............ஐயோ விட்ருங்க" என்று கத்தினேன்.

"எழுந்திருங்க என்ன கனவு ஆபிஸ் போகவேண்டாம், நைட்ல கண்டத்த குடிக்க வேண்டியது, அப்புறம் ஐயோ, அம்மா, அப்பா என்று காலையில் கத்த வேண்டியது எழுந்திருங்க, பாத்திரத்த கழுவிட்டு, துணிய துவைச்சிட்டு ஆபிஸ் போக வேண்டிய வேலையைப் பாருங்க" என்று குரல் வரவே அடுத்த பாத்திரம் தலையில் விழும் முன்பு எழுந்து பாத் ரூமில் அடைக்கலமானேன்.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 14 October 2014

டீ வித் முனியம்மா-பார்ட் 23

இன்னாடா செல்வம் அல்லாருமா காலிலேயே வந்து டீக்கடையாண்ட குந்திகினு கீறிங்க. இன்னா பாய், நாடாரு, லிங்கம் சாரு, லோகு அல்லாம் வந்துகினிங்க இன்னா மேட்டரு.

ஐயே நீ லேட்டா வந்துகினு கேக்குது பாரு.......

டேய் பழம் இன்னாடா புரட்டாசி மாசம கோவிலாண்ட ஜனம் அள்ளுது, வியாவாரமும் வெரசா போய்கினு கீது.........பொயப்ப பாக்க வேணாம். இப்போ சம்பாரிச்சா தான்.........அப்பால கெடிக்காது.

சரி முனிம்மா நாஸ்தா துன்னுகினியா?

இன்னா லோகு நாஸ்தா துன்னல, நீ வாங்கித்தாரியா?

இன்னா வேணம் சொல்லு? இட்லி வடகறி துன்றியா? இல்ல இடியாப்பம் பாயா சொல்லட்டா?

இன்னடா லோகு துட்டு விளையாடுதா? அஹான் டப்பாசு கட வேற போட்டுகிற? சொல்லுடா அல்லாருக்கும் இட்லி வடகறி.

சரி முனியம்மா "புர்ச்சி தலவி" நூசு இன்னா?

பாய் கடையாண்ட தெனிக்கும் வருவாரு ஒருத்தரு? அவரு தீர்ப்பு நகலு வச்சிக்கினு பட்சாராம்? மைக்கலு நல்லா கொடுத்துகிராறாம் அப்படின்னு சொல்லிகினு கீறாரு.

மெயாலுமா?

அஹான் பாய். லோகு கடில பின்னு குத்தி விப்பானே பொஸ்தவம், அது போல ரொம்ப டாப்பா கீதாம்.

இன்னா சொல்லிகிறாராம்?

லிங்கம் சாரு, அந்தம்மாவும் கூட இருந்த கூட்டமும் நல்லாவே வெள்ளாடிகீறாங்க. மூவாயிரம் ஏக்கருக்கு நெலம் வாங்கிகீறாங்க. சார் பதிவாளர வூட்டுக்கே இட்டாந்து அல்லாம் எயுதி வாங்கிகீறாங்க.

இதுக்கு எல்லாம் துட்டு எங்கே?

அதே தாண்டா லோகு மைக்கேலு கேட்டுகிராறு?

முனியம்மா அது யாரு மைக்கேலு?

தோடா இம்மா நேரமாம் கதியா சொல்லிக்கினு கீறேன்? மைக்கேலு குன்னா ஜட்ஜுடா?

துட்டுக்கு நாங்க வாங்கின கம்பெனி துட்டுன்னு சொல்லிகிறாங்க.

அதுக்கு அவரு இன்னா சொல்றாரு?

ஜட்சு இந்த கம்பனிங்க துட்டு வந்து கணுக்கு காட்டுங்கன்னு கேட்டுகிராராம்?

அந்த கம்பெனி கணக்கு வயக்கு ஒன்நியம் இல்லையான்காட்டியும்?

ஆமாம் நாடார். அப்பால செட்டியாருங்க கம்பெனி பங்கு வாங்க சொல்ல தில்லு முல்லு பண்ணி ஆட்டைய போட்டுகிறாங்க.

முனியம்மா போயஸ் தோட்டத்துல எடுபிடி ஒருத்தரு இன்னாவோ சொல்லிகினாருன்னு பேசிகிரானுன்களே இன்னா மேட்டரு.

அஹான் லிங்கம் சாரு. ஜெயராமன்னு ஓராளு அங்க எடு பிடி வேல செஞ்சிகிராறு. அந்தாலாண்ட பணத்த மூட்ட கட்டி பேங்குல போட அடிகடிக்கு சொல்லுவாங்களாம். நம்ம மெட்ராசுல  மட்டும் பத்து பாஞ்சு கணுக்கு வச்சிகிரான்கலாம். அந்தாளும் அல்லாத்தையும் கொணாந்து பேங்குல போடுவாராம். அது எல்லாத்தையும் நேக்கா பாங்கு செல்லானில்ல, செலானு அத வச்சி கண்டு பிடிச்சிகிராங்கலாம்.

அப்பால வளர்ப்பு மவன் கண்ணாலத்துக்கு நாங்க துட்டு கொடுக்கல, சிவாஜி வூட்டுக்காரன்கதான் கொடுத்தாருன்னு சொன்னாங்களே அது இன்னாவாம்?

அஹான் பாய் சொன்னாங்க, ஆனா பந்த செலவுக்கு இந்தம்மாவே செக்குல கைஎயுத்து போட்டு கொடுத்து கீது? அதுல வேற வசமா மாட்டிக்கிச்சாம். அந்த செக்கு வேற கோர்ட்டுல காட்டிக்கிறாங்க.

அதான் சரியாதான் போட்டுகிறாங்க உள்ளார.

ஆமா லிங்கம் சார், அத தவிர இருவத்தியேழு கிலோ தங்கம் வச்சிகிறாங்க, அது ஒன்டியே எட்டு கோடியாம்.

அது மைசூரு மவராசா கொடுத்ததுன்னு சொன்னாங்களாமே?

அப்பால ஏதோ அருவத்தியாருல பாஞ்சு கோடிக்கு கணக்கு காட்நான்கலாம்? நமது எம்.ஜி.ஆறு பத்திரிகைக்கு சந்தா ன்னு சொல்லி.

அதுலேயும் தில்லுமுல்லு செஞ்சிகிறாங்க. மொதல்ல அந்த பில்லு எல்லாம் தாராந்து போச்சின்னு சொல்லிகிறாங்க. ஒரு காருல வச்சிருந்தோம் பில்லுங்கள கார எவனோ லவட்டிட்டிட்டான்  அப்படின்னு பீலா வுட்டுகிறாங்க. அப்பால வருமான வரிகாரன்  பில்லு காட்டிகிறான். ஆனா அல்லாம் 2008ல போட்ட பில்லாம். அதுக்கே சாட்சியா முன்னூறு ஆள கூண்டுல வச்சி கொடாஞ்சிகிராறு.

சரி முனியம்மா இப்போ ஜாமீனு கேக்குறாங்களே இன்னதான் ஆவும்?

ரொம்ப கஸ்டம் பாய், இப்போதிக்கி கடிக்காது. தீவாளிக்கி அங்கேயே களி துன்ன வேண்டியதுதான்.

இத கேலு நாடாறு, அன்னிக்கு கடியாண்ட வளர்ப்பு மவன் கண்ணாலத்துக்கு இந்தம்மா துட்டு கொடுத்துகீதுன்னு சொல்லிகினுகீரன் ஒருத்தன் சொல்றான், அந்தம்மா கொடுத்திருக்கும் அப்பால நாராயணசாமி அப்பால கொடுக்குறேன்னு சொல்லியிருப்பாரு அப்படீங்கறான்.

சர்தான்.

யோவ் போயி பொயப்ப பாரு. அதெல்லாம் சொன்னா கோர்ட்டுல ஒத்துக்க மாட்டாங்க, ஆதாராம் வேணும் கியாபகம் வச்சிக்கன்னேன். இந்த கேள்விய கேட்டபேமானிதான் ஒருநாளு பூ வெலை ஏறிடுச்சு ஒரு ரூவா ஜாஸ்தி கொடுன்னா, இன்ன முனிம்மா பகல் கொள்ளையா கீதேங்குறான்.

ஜெயா டீ வி பாக்குற முனியமா ஒரே தமாசா கீது.

அஹான் பயம், இதய தெய்வம் உள்ளே கீது, அதால கட எல்லாம் தானா மூடிகீது, பஸ் எல்லாம் தானா எரியுது, கல்லெல்லாம் தானா பறக்குது அப்படின்னு சொல்லிகினு கீறான். அதெல்லாம் வுட படா தமாசு, புள்ளிங்க எல்லாம்  அம்மா கைத கண்டிச்சு ஸ்கொலு போவுதான்.

நல்ல தமாசுதான் போ.

சரி முனியமா இத்தையே  பேசிகினு பொயுத ஓட்டிட்டோம்.

சினிமா நூசு சொல்லு.

போடா செல்வம் தீவாளிக்கி நெரிய படம் வருது, போயி சேட்டு பொண்ணுங்கள  பாரு.
















Follow kummachi on Twitter

Post Comment

Monday 13 October 2014

ஊழல் வளர்ப்போம்

லஞ்சம் கொடுத்து நெஞ்சம் நிமிர்த்தி
ஊழல் வளர்ப்போம்
கொஞ்சம் பெற்று நிறைய கொடுத்து
ஊழல் வளர்ப்போம்
நீதியைக் கொன்று நேர்மையை மறந்து
ஊழல் வளர்ப்போம்
ஜாதியைக் காட்டி பீதியைக் கூட்டி
ஊழல் வளர்ப்போம்
கோடிகள் சேர்த்து கொழுத்தவர்களை புகழ்ந்து
ஊழல் வளர்ப்போம்
தண்டனை கொடுத்த நீதிபதியை பழித்து
ஊழல் வளர்ப்போம்
உண்ணாவிரதம் இருந்து பால்காவடி எடுத்து
ஊழல் வளர்ப்போம்
ஆர்பாட்டங்கள்  செய்து அனைத்தையும் எரித்து
ஊழல் வளர்ப்போம்
கர்நாடக சிறையினால் காவிரியைக் காட்டி
ஊழல் வளர்ப்போம்
கேரளம் என்றால் முல்லை பெரியார் என்று
ஊழல் வளர்ப்போம்
ஜாமீன் இல்லையென்றால் பிரதமரைக் காட்டி
ஊழல் வளர்ப்போம்
2ஜி என்றால் "சிங்"கைக்காட்டி
ஊழல் வளர்ப்போம்
டாஸ்மாக்கில் குடித்து தரையில் படுத்து
ஊழல் வளர்ப்போம்
தண்ணியடித்து தத்துவங்கள் பேசி
ஊழல் வளர்ப்போம்
இலவசங்கள் பெற்று இன்புற்றிருக்க
ஊழல் வளர்ப்போம்
கட்சிகள் மாற்றி காலம் கடத்த
ஊழல் வளர்ப்போம்
காசு வாங்கி ஒட்டு போட்டு
ஊழல் வளர்ப்போம்

Follow kummachi on Twitter

Post Comment

Monday 6 October 2014

கலக்கல் காக்டெயில்-158

பொய் வழக்கும், புளித்துப்போன அரசியலும்.

நீதிபதி குன்ஹா தீர்ப்பை எதிர்த்து ஆளும் கட்சியினர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. கட்சித்தலைமையின் கவனத்தை கவர அழுவாச்சி பதவியேற்பு விழா, உண்ணா விரதங்கள், காமெடி பீசுகளின் போஸ்டர்கள் என்று தமிழகம் சிரித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்று குழந்தை அழுவதுபோல் போட்டு "காவிரியை வைத்துக்கொள் அம்மாவைத்தா" என்று உச்சகட்ட காமெடி. காவிரியை வைத்துக்கொண்டால் பூவாவிற்கு என்ன செய்வதாம். மேலும் காவிரி என்ன ஏதாவது அல்லக்கையின் சின்னவீடா?

.....க்காளி நேரம்டா...........ஆட்சி உங்களது இல்ல.........நடக்கட்டும்.................

நீதிபதியின் முழு அறிக்கை இப்பொழுது இணைய தளங்களில் வெளியாகிவிட்டது. அதன் நகலை இப்பொழுது தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

அதில் நீதிபதி குறிப்பிட்டிற்கும் ஒன்று "இதை பொய் வழக்கு என்று கருதமுடியாது இதை ஏற்கனவே உச்சநீதிமன்றம் எதிர்கட்சி எனபது ஆளும் கட்சியை இதுபோன்ற பெரிய ஊழல்களை மக்கள் குரலாக இருந்து தடுக்க வேண்டும் அல்லது வெளிக்கொன்டு வரவேண்டும்" என்று குறிப்பிட்டு அந்த குற்றசாற்றை இந்த வழக்கில் நிராகரித்து உள்ளது.

மேலும் பிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டவில்லை. 66 கோடிக்கு வெறும் பதினொரு கோடிக்கு மட்டுமே ஆதாரங்களைக் காட்டியிருக்கிறார்கள்.. 

மேலும் வேண்டுமென்றே தசரா விடுமுறைக்கு முன்பு சிறை வைத்தார்கள் என்ற குற்றசாட்டுக்கும் பிரதிவாதிகளின் வழக்குரைஞர்களே பொறுப்பு. முதலில் தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி தான்  வருவதாக இருந்தது, ஆனால் தீர்ப்பை முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியதால் தீர்ப்பு தேதி தள்ளிப்போனது. அப்பொழுதும் நீதிபதி இந்த தேதியை அறிவித்த பொழுது கூட்டுத்தொகை ஒன்பது வருவதால் அம்மாவுக்கு ராசி எண், நல்லது என்று ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

ஆதலால் இந்த தீர்ப்பை இவர்களேதான் தேடிக்கொண்டார்கள். இதற்கு இப்பொழுது ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் தேவையா?

இந்தியாவை சுத்தம் செய்வோம்

பிரதமர் மோடி அமெரிக்கா சென்று திரும்பி வந்த கையுடன் "வாருகோலை" எடுத்துக்கொண்டு இந்தியாவை சுத்தம் செய்யக்கிளம்பிவிட்டார். இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் சேர  சச்சின் டெண்டுல்கர், சல்மான் கான், கமல் எல்லோரையும் அழைத்திருக்கிறார்.

நல்ல முயற்சி. "நம்மவர்" இதை ஏற்றுக்கொண்டுள்ளார். 

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான் 

என்று நினைவுகொண்டு நாமும் முதலில் நமது வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும்  சுத்தமாக வைத்திருப்போம். 

ரசித்த கவிதை

குப்பையை அகற்ற வேண்டாமா 

எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

Saturday 4 October 2014

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.............

படகோட்டி பட பாடல்--கொடுத்ததெல்லாம் கொடுத்தான் மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
குன்ஹா நாலு வருடம் கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார் - இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார்-இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்

அறுவது ரூபாய் வருமானமென்றால்
அறுபத்தியாறு கோடி சேர்ந்திடுமா?
சேர்த்ததெல்லாம் நியாயமென்றால்
கணக்கு எங்கே போனதம்மா?
உனக்காக ஒன்று
ஊருக்காக என்றும்
சட்டம் தனியாக கொடுப்பதில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
குன்ஹா நாலு வருடம் கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார் - இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார்-இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்

கொடுத்தவர்மேல் குறையுமில்லை
ஆர்ப்பாட்டங்களில் நியாயமில்லை
எடுத்தவர்கள் மாட்டிக்கொண்டார்
சிறையினிலே கலங்கி நின்றார்
சிலர் கொள்ளையடிக்க
பலர் வாடி நிற்க
ஒரு போதும் சட்டம்
விடுவதில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
குன்ஹா நாலு வருடம் கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார் - இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார்-இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்  

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 2 October 2014

டீ வித் முனியம்மா பார்ட்-22

இன்னாடா ஊருல இம்மாம் நடந்துகினு கீது ஒன்னியம் சொல்லாம பேசாம குந்திகினு கீற லோகு.

இன்னா முனிம்மா நீ வேற பேஜார் பண்ணாத, நம்ம கவல நமக்கு, வியாவாரம் ஆவனுமில்ல, கடிய அடைக்க சொல்லி அடிக்கிறானுங்க பேமானிங்க இன்னாத்த செய்யுறது.

ஆமாண்டா உனுக்கு கஸ்டம்தான், பாவம் நீ இன்னா செய்வ.

அஹான் உனிக்கி இன்னா, பேமானிங்க வந்தாங்காட்டியம் பூக்கூடைய தூக்கிகினு ஓடியாந்துருவ.

அதானே செல்வம், உனுக்கு இன்னாடா ஆச்சி, பயத்த தூக்கிகினு பூட்டானுங்களா?

த ரௌசு செய்யாத? கல்லால கையவுட்டு அத்தினி துட்டையும் லவட்டிட்டாணுக.

கொண்டித்தோப்பாண்ட ஒருத்தனும் கடைய ரண்டு நாளா தொறக்கல.

அது சரிடா கட்சிக்காரன் ஆர்பாட்டம் செய்யுறான், இந்த சினிமாகாரனுவளும் குருட்டு கண்ணாடிய போட்டுகினு ஊயலுக்கு கொடி பிடிக்கிரானுக இந்நாத்த சொல்ல.

ஏன் முனிம்மா உள்ள போட்டுட்டானுங்க சரி. அம்மா ஊயல் செய்திருக்குன்னு சொல்லி ஜட்ஜி ஐயா புட்டு புட்டு வச்சிகிறாரே, இன்னா மேட்டரு.

பாய் , அந்தம்மா கணக்குல காட்டாம அறுபது கோடிக்கு சொத்து வாங்கிக்கீத்து, அப்பால வளர்ப்பு மவன் கண்ணாலத்துக்கு துட்டு நான் கொடுக்கலேன்னு சொல்லுது. அரசு வக்கீலு இன்னா பண்ணிக்கிறாரு அம்மா கைஎழுத்து போட்ட செக்க காட்டிகிறாங்க, இருவத்தேயு லச்சமாம். அது போல அவுங்க வூட்ல வேல செஞ்ச ஒரு ஆளு சசிகலா அப்பப்ப பணமூட்ட கொடுக்கும் அத்த நான்தான் பாங்கில போடுவேன்னு சொல்லிகிறாரு. அதான் மெயின் மேட்டராம்.

ஐயா தொ பாருடா, அப்பால இன்னா முனிம்மா.

லிங்கம் சாரு அந்தம்மாக்கு போன வக்கீலுங்க சரியா எந்த பாயிண்டும் சொல்லல, சொம்மா திராட்ச தோட்டத்துல வந்துதுன்னு சொன்னா எவன் நம்புவான், அல்லாம் பீலா உடுராங்கனு தெரிது.

அதானே முனிமா நமக்கே தெர்து, ஜட்ஜுக்கு தெரியாதா?

அஹான் நாடாரு. இந்த கட்சிகாரனுங்க பெங்களூரு போயி நல்லா உண்ட வாங்கிக்கிரானுங்க. சொம்மா கோர்ட்டாண்ட நின்னுகினு டென்சன் செஞ்சதுல, போலீஸ்காரனுங்க மெர்சல் ஆயி லத்திய உட்டு ஆட்டிகிரானுங்க, ஒரே டமாசு பா.

அம்மா பதவிய உருவ சொல்ல, அல்லா மாந்திரியும் அயுதுகினே பதவி ஏத்துகிரானுன்களே அது குத்தமாவாது.

ஆமாண்டா பயம் அந்த கன்றாவியதான் டீவில காட்னானுன்களே , அத்த இன்னா சொல்றது. இந்திய சட்டத்த மதிப்பேன்னு சொல்லி அயுவுறாங்க அதுக்கு அல்லாரையும் புடிச்சுகினு உள்ளார வக்கணும்.

முனிம்மா இந்த ஜனம் இந்தம்மா சுதந்திர போராட்டத்துல உள்ளிய போனாமாறி இந்தா கூவு கூவுதுங்க.

அதான பாய், நம்ம துட்டுல ஆட்டைய போட்டு உள்ள போயகீது, இன்னாவோ தர்ம தேவதைங்கறான், கடவுள்ங்கிறான். இன்னாத்த சொல்ல. இது போல ஊயல் செய்யுற அல்லா ஆளையும் புட்ச்சி  உள்ள வைக்கணும்.

முனிம்மா இந்த கட்சிகாரனுங்க ஏன் தி.மு.க பேருல காண்டாவரனுங்க, சூனா சாமி தானே கேசு போட்டாரு.

அந்தாள ஒன்நியம் செய்ய முடியாது, அதான் இவனுங்க பேருல காண்டாவரானுங்க.

சேப்பாக்கத்துல சினிமாகாரன் கூட்டம் போட்டானுங்களே..........அந்த பக்கம் சரக்கெடுத்துகினு வந்துகினேகீறேன் போலிசு அந்த பக்கம் போவாத உண்ணாவிரதம் இருக்காங்கனு வெரட்டி வுட்டுட்டான்.

ஆமாண்டா செல்வம், இவனுங்க சினிமாவுலதான் ஊயல் ஊயல்ன்னு ஊயளுக்கு எதிரா படம் எடுப்பான், ஆனா இவனுக எடுக்குற படமெல்லா கருப்பு பணத்துல. அட இன்னா அழுவு அழுவுரானுங்க, ஒரு பேமானி சொல்லுறான் அம்மாவ வெளில உடாங்காட்டியும் வெளிநாடுக்கு ஓட்டிடுவானாம். பேமானி இவன் இருந்தா இன்னா? இல்லாங்காட்டி இன்னா? சேட்டு பொம்பிளைங்கள தடுவுற பேமானிங்க.

நீ சொம்மா மெர்சலாவாத முனிம்மா.

இன்னாடா மெர்சலாவாத. நம்ம துட்டுல ஆச்சி செஞ்சுகின்னு ஆட்டைய போடுறானுங்க. பழக்கட, டீகட ஆளுங்க எல்லாம் அரசியலில் வந்துகினு ஊர் சொத்த கொள்ள அடிக்கிறானுங்க. நான் இருவது வருசமா பூ வித்துகினு கீறேன், நீ பழம் வித்துகினுக்கீறே.

அஹான் முனிம்மா, டெல்லில வேற ப்ரெசிடென்ட் வூட்ல முன்ன குந்திகினு கீரானுங்கலாம், அம்மாவ வெளிய வுடுன்னு சொல்லிகினு.

ஆமாண்டா மொத்த ஆளுங்களும் நம்ம தமியன நக்கல் செயுரானுங்க.
பதினெட்டு வருசமா நல்லா விசாரிச்சுதான் தீர்ப்ப சொல்லிகிறாங்க, அத்த மதிக்க மாட்டேன்னு கொரலு விடுறானுங்க.

சரி வுடு முனிம்மா நாலு நாளா இதேதான் பேச்சாகீது. புளிப்பூத்தி நம்ம பொயப்ப கெடுக்குது.

உன் பேச்சும் கரீக்டுதான் பாய்.

மோடி அமெரிகாவுலேந்து வந்துகினாரா?

அஹான் பாய் வந்துகினு தொடப்பம் எட்த்து தெருவ கூட்டிகினு கீறாரு. சரி பாய் வுடு நம்ம பொயப்ப பாத்துகினு போய்கினே இருப்போம்.








Follow kummachi on Twitter

Post Comment