Monday 28 December 2015

கேப்டன் துப்பியது யார் மீது?

தேர்தல் நெருங்கும் முன்பு கேப்டனின் முக்கியத்துவம் இப்பொழுது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ஊடகங்களாலும் உணரப்படுகிறது என்பதையே கேப்டனின் "துப்பல்" உணர்த்துகிறது. கேப்டன் கேள்வி கேட்ட ஊடகத்தின் மீது மட்டும் துப்பவில்லை, இலவசம் வாங்கி சரக்கடித்து தூங்கிக்கொண்டிருக்கும் நமது மக்களின் மீதும் துப்பியிருக்கிறார்.

2011 தேர்தலில் என்னதான் எதிர்கட்சிகளும்,ஊடகங்களும்  தனது வேட்பாளரின் பேரை மாற்றி சொன்னதால் தட்டியதை கிராபிக் செய்து கேப்டனை கழுவி கழுவி ஊத்தினாலும் முடிவுகள் அவரது அரசியல் பலத்தை காண்பித்தது. பின்னர் அவர் முதுகில் சவாரி செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் அவரை கழற்றிவிட்டது தனி கதை.

செம்பரம்பாக்கம் ஏரியை அகால நேரத்தில் திறந்து விட்டு சென்னை மக்களை தத்தளிக்க விட்டு தூங்கிய ஆளுங்கட்சியை கேள்வி கேட்க துப்பில்லாத கேடுகெட்ட ஊடங்களின் மீது கேப்டன் துப்பியது ஒன்றும் தப்பில்லை. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் இப்பொழுது நடிகனின் பீப் பாடல் கிடைக்குமா, என்று அலைந்து அதை வைத்து செய்திகளை திசைதிருப்பி தங்களது கீழ்த்தரமான வேலையை செய்துகொண்டிருக்கிறது. ஒரு வாரம் பீப் பாடல் பிறகு இளையராஜா பேட்டி என்று இரண்டு வாரங்கள் ஓட்டியாகிவிட்டது பின்னர் இப்பொழுது கிடைத்தார் கேப்டன்.

இதை வைத்து இன்னும் சிறிதுகாலம் ஒட்டி பின்னர் நடிகர் சங்கம், இல்லை எதாவது ஒரு நடிகனின் படம் வெளியாவதில் சிக்கல் என்று ஜல்லியடித்து பிரதான விஷயத்தை மறக்கடிக்கப் பார்க்கிறார்கள்.

ஆளுங்கட்சிக்கு துணை போகும் இந்த ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கப் போவது வெகு தூரத்தில் இல்லை.

அது வரை கேப்டனுடன் சேர்ந்து நாமும் இந்த ஊடகங்களின் மீதும் வெட்டி அரசியல்வாதிகளின் மீதும் துப்புவோம்.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 23 December 2015

டீ வித் முனியம்மா பார்ட் 39

இன்னாடா மீச கடிய ஒரு மாறி தொறந்துகின.............இன்னடா வெள்ள நிவாரணம் கடிச்சுதா?

எந்தா லிங்கம் சாரு........ஒன்னும் கிட்டில்லா..........பாய்...யானும் காசு கொடுத்தது.

சரி முனிம்மா வருது சாய் அடி.

டேய் லோகு இன்னடா வியாவாரம் எப்படி கீது?.

அது இன்னா பீ.........ப்.............வியாவாராமோ போ செல்வம்.

டேய் இன்னாடா பயய  வார்த்தையெல்லாம் வுட்டுகினு கீற.

இன்னா முனிம்மா இந்த சொம்பு லுச்சா..பையன் போட்டிய பத்தி பாடிக்கினானமே. இப்போதான் போட்டி கறி துன்ன கூடாதுன்னு வடநாட்டுலே அடிச்சிகினானுங்க, இப்போ இன்னாவாம் போட்டிக்கி.

டேய் செல்வம் அது போட்டி இல்லடா..........நீ கண்ணாலம் கட்டிக்கும் முன்னி பேசிக்கினு இருந்தே நம்ம பாச...........நம்ம எல்லாம் அத்த வுட்டுட்டு இன்னா ரீஜென்டா மாறிகினோம்.........இந்த சொம்பு பையனும், அந்த ஓம குச்சியும் ஒரு பாட்டு போட்டுகிறானுங்க.......இன்னா பாட்டுன்னா இன்னா பு....க்கு லவ் பண்ண..அப்படின்னு போட்டுக்கிறான். அந்த வார்த்த வரசொல்ல பீப் ன்னு சவுண்டு வுட்டுகிறான்,,,,,,,,,,பாட்ட கேட்டவங்க சொல்றானுங்க பீப் சவுண்ட விட கெட்டவார்த்தைதான் சவுண்டா கேக்குதான்.

சரி விடு முனிம்மா........இதெல்லாம் இந்த வெடல பசங்க வாழ்க்கைல அப்டி இப்டி இருப்பானுங்கோ.

அது இல்ல லிங்கம் சாரு............இத எதிர்த்து இப்போ கோர்ட்டுல கேசு போட்டுகிறானுங்க. இத்த விசாரிக்க சொல்ல ஒரு வக்கீலு ஜட்ஜாண்ட சொல்லிக்கிறான் பாட்ட ஒரு தபா கேட்டுப்பாருன்னு.........இவரு ஐய நமக்கு இதெல்லாம் வேணாம்பா.......அப்பால போலிசாண்ட சொல்லிகிறாரு, நீங்க அவனுகள புடிச்சி உள்ள போட எல்லா ஆதாரமும் இருக்குதுன்னு. சரி விடு இதெல்லாம் ஒரு மேட்டருன்னு நாம குத்த வச்சி படிச்சிகினு கீறோம்.

முனிம்மா இந்த டெல்லி கற்பழிப்பு கேசுல அந்த சின்ன பையன வெளியே வுட்டுட்டானுங்களாமே. இதென்ன நியாயம்.

பாய் நம்ம நாட்டுல சட்டம் இன்னா சொல்லுதுன்னா.....பதினெட்டு வயசு கீய இருந்த அஜால் குஜால் படம் பாக்கக்கூடாது............ஆனா மேட்டருக்கு ஒகேவாம்........இன்ன சட்டமோ.

ஆமாம் முனிம்மா அவனுக்கு தையல் மெசின்னு..........பத்தாயிரம் பணம் வேற கொடுத்துகீறாங்களாம்.

ஆமாண்டா செல்வம் ஆனா இந்த பொடிப்பையன் தான் அந்த பொண்ணு உள்ளார இரும்பு கம்பிய வுட்டு பெருங்கொடலு எல்லாம் டேமேஜ் பண்ணிக்கிறான். அது விடுறான்னு கெஞ்ச சொல்ல.........பொட்ட நாயே சாவுடின்னு இன்னும் கம்பிய வுட்டு ஆட்டிகிறான். அதுக்குதான் கவர்மெண்டு ரிவார்டு கொடுத்துகீறானுங்க.

சரி முனிம்மா வெள்ளம், வெள்ளநிவாரண நிதி, ஸ்டிக்கர், செம்பரம்பாக்கம் மேட்டர் எல்லாம் இன்னாச்சு?.

அதான் நாடார் நம்ம ஜனங்க மனசு..........புச்சா மேட்டரு ஒன்னிய கண்டுகிணானு வச்சிக்கோ பழைய மேட்டரு டீல் வுட்டு அம்பேல் ஆயிருவானுங்க. மொதலோ கொரலு வுடுவானுங்க அடுத்த தபா எலிக்சன் வரசொல்ல வக்கிறேன் பாரு ஆப்புன்னு.............அப்பால துட்டு வாங்கி  ஒட்டு போட்டு சரக்கடிச்சு மட்டையாய்டுவானுங்க. இன்னத்த சொல்ல நம்ம தமிழ் நாட்டு விதி.

சரி முனிமா ஒரே நூசெல்லாம் பேஜாராகீது. நம்ம சினிமா நூசு எதாவது சொல்லு.

டேய் செல்வம் அவனுகள பத்தி பேசாத..................சொம்பு பாட்டு வார்த்தையெல்லாம் வண்டை வண்டையா வருது........படத்தப் பாத்து கம்முன்னு போய்கினே இரு.
Follow kummachi on Twitter

Post Comment

Monday 21 December 2015

பீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்

ஊடங்களில் எதை திறந்தாலும் சொம்பு, ஓமகுச்சி, என்று ஆளாளுக்கு பேட்டி, டாக்(நாய் அல்ல)  ஷோ என்று கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளமும் மற்றும் ஏரியை சரியான நேரத்தில் திறக்காமல் தூங்கிய பாட்டியும் இப்பொழுது பின்னுக்கு தள்ளப்பட்டு இந்த பீப்.......பு...கு(புண்ணாக்கு) பாட்டு அதை தொடர்ந்த தமிழர்களுக்காக முட்டி போட்டு ஆடிய சொம்புவின் அறிவு சார்ந்த பேட்டி என்று புளிப்பூத்துகிறார்கள்.

சரி நம்ம இசைஞானி கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுறார். பொது இடமுன்னு வந்தா நாலு பேரு நாலு கேள்வி கேட்கத்தான் செய்வான், அதை எப்படி சாதுரியமாக பதில் சொல்லி கேள்வி கேட்டவனுக்கு பல்பு கொடுக்கனும்முன்னு தெரிசிருக்கணும். அதை விட்டு "உனக்கு அறிவு இருக்கானு?" கேட்டா இருக்கு அதால தான் சார் உங்களிடம் கேள்விகேட்டேனு பல்பு வாங்கக்கூடாது. அதோட போனாலும் பரவாயில்லை உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவை வச்சி சொல்றேன்னு இவரு கேட்க போயி நல்ல காலம் அந்த நிருபர் பதில் சொல்லவில்லை அதற்குள் அவரது ஆதரவாளர்கள் தடுத்து விட்டார்கள். இல்லையென்றால் இசைஞானியின் அறிவு அம்பேல் ஆயிருக்கும். இசைஞானி முதலிலேயே பீப்  கேள்விக்கு "No Comments" என்று சொல்லியிருந்தால் பிரச்சினையே இல்லை.

குறுக்கால பாட்டி செம்பரம்பாக்கம் எரிய சரியான நேரத்தில் தொறக்காம தூங்கிட்டு இப்போ வாட்சப்பில் வந்து புலம்பிகிட்டு இருக்கு. இருக்கட்டும் பாட்டி நீங்க பொலம்புங்க, ஆனா மக்களுக்காகதான் வாழுறேன் எனக்கு யாருமே இல்லேன்னு போட்டீங்களே ஒரு போடு ஆயா, கவுண்டமணி,செந்தில் வடிவேலு எல்லோரையும் ஒரே பேச்சுல அப்பீட் ஆக்கிட்டீங்க.  நடுவில் கட்டுமரம் அவர் பாட்டிற்கு குறுக்கு சால் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

ஏம்பா நாட்டுல இன்னும் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கிறது அதையும் கொஞ்சம் கவனிங்க. பதினெட்டு வயசுக்குள்ள இருக்கற பசங்க "ரேப்"பினா ஒரு தையல் இயந்திரமும் பத்தாயிரம் ஓ...வா பரிசாம். நம்ம சட்டமே சொல்லுது. அப்படி அதை எதிர்த்து யாரவாது குரல் கொடுத்தா பிடிச்சு உள்ளே போடுவாங்களாம். இதையும் நம்ம ஊடங்கள் கொஞ்சம் கவனிக்கலாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 16 December 2015

மானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று........அழைக்கப்படுவீர்கள்

பாட்டி........ஆத்தாவாகி...........ங்கொக்காவான.......கதை.

ஆத்தா நிர்வாக குளறுபடிகளை மறைக்க வாட்ஸ்சப்பில் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கலங்காதீர்கள் நான் எப்பொழுதும் உங்களுடனே இருப்பேன் 
Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 December 2015

பித்தம் தெளியவேணும் பாட்டி

தமிழக அரசியலில் "பாட்டி" (இதய தெய்வம்......புரட்சி தலைவி..ஆத்தா|) இப்பொழுது காமெடி செய்துகொண்டிருக்கிறது. முன்னாள் டி.ஜி.பி நடராஜ் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி பின்னர் மறுபடியும் சேர்த்துக்கொண்டு மழையால் நொந்து நூலாகிப்போன மக்களை நகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

வெறும் தொலைக்காட்சி செய்தியை வைத்து ஒருவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தான் இன்னும் அதே "எடுப்பேன் கவிழ்ப்பேன்" நிலையில்தான் இருக்கிறேன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் தந்தி டிவிக்காரன் நடராஜை "வச்சு நல்லா செஞ்சிட்டான்".

செம்பரம்பாக்கம் ஏரியை இரவோடு இரவாக திறந்துவிட்டு சென்னை மக்களை வெள்ளத்தில் மூழ்கவும் மிதக்கவும் விட்டதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு என்று பத்திரிகைகளும் எதிர்கட்சிகளும் கூறிக்கொண்டு இருப்பதற்கு காரணமில்லாமில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஏறி, குளம், குட்டை, கழிப்பிடங்கள் எல்லாம் மாண்புமிகு புரட்சி .............இதய..........ஆத்தா ஆணைப்படிதான் திறந்து விடப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது பற்றி ஆத்தாவிற்கு தெரியாமல் இருந்திருக்காது.  இப்பொழுது விஷயத்தின் தீவிரம் உணர்ந்து தலைமை செயலர் அறிக்கை விடுகிறார், முதலமைச்சரின் உத்தரவு காத்திருக்கவில்லை, அதற்கு அவசியமுமில்லை என்று. ஒரு கட்சி உறுப்பினர் விஷயத்திலேயே இவ்வளவு தெளிவாக முடிவெடுக்கும் ஆத்தா செம்பரம்பாக்கம் ஏரியை வைத்து நல்லாவே "செஞ்சிட்டாங்க"

இப்பொழுது தமிழ்நாடு அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா? இல்ல ஆத்தா போல் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ஸ்டிக்கர் ஓட்டுவது மட்டும் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது, இப்பொழுது பச்சைக் கலர் "ஆத்தா" டோக்கன் வேறு கொடுக்கிறார்களாம்.

ஒன்று நிச்சயம் ஆத்தா இப்பொழுது செயல்படுகிறாரா? இல்லையா?என்பது பெரிய சந்தேகமாக உள்ளது. அதற்கு உடல்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். தற்போதைய நிலைமை பித்தம் பிடித்திருக்க வைத்திருக்கலாம். இவற்றை தெரிந்துகொண்டுதான் கட்சிக்காரர்கள் நிவாரண நிதியில் ஆட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடலூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்த வழியாக ஒரு 400 கோடிக்கு வழி செய்துவிட்டார்கள்.

தமிழ் நாட்டு தலை எழுத்து செயல்படாத அல்லது செயல்படாத முடியாதவர்கள்தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.

பாட்டிக்கு இப்பொழுது "பித்தம் தெளிய நல்ல மருந்து" வேண்டும். வெள்ளநிவாரண நிதியிலிருந்தே எடுத்து கணக்கு காட்டிக்கொள்ளலாம்.


Follow kummachi on Twitter

Post Comment

Monday 14 December 2015

கலக்கல் காக்டெயில்-174

வெள்ள அரசியல் 

சென்னையில் வெள்ளம் அடித்து வடிந்துவிட்டது. இப்பொழுது அரசியல் வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. சென்னை வெள்ளத்தின் காரணம் இயற்கை மட்டுமல்ல செயலற்று இருந்த நிர்வாகமுமே காரணம் என்று இந்தியா டுடே, ஃப்ரென்ட் லைன் பத்திரிகைகளில் செம்பரம்பாக்கத்தில் ராவோடு ராவாக திறந்துவிட்ட தண்ணீரே காரணம் என்று பிரித்து மேய்ந்து விட்டனர். இதற்கெல்லாம் அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது.

இதுதான் சாக்கு என்று இதை பெரிய அரசியல் ஆக்கி லாபம் பார்க்க மற்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டன. ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதில் நடந்த குளறுபடிகள், அதிகாரிகளின் கையிலிருந்து மாறிய அதிகாரம் முதலியவற்றை விரிவாக இந்து நாளிதழ் அலசி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. ஆத்தாவின் ஆணைப்படியே நடந்த வழிமுறைகள் வெள்ள நேரத்திலும் தொடர்ந்ததால் சென்னையில் உள்ள மக்கள் இரவோடு இரவாக தண்ணீர் மட்டம் உயர,  போட்டதை போட்டபடி ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இப்பொழுது  ஆளுநரிடம் இந்த குளறுபடியை  சென்னை உயர்நீதிமன்ற தலைமையில் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

யாரு அந்த அதிர்ஷ்டசாலி நீதிபதியோ?


காவி அரசியல் 

சென்னையில் சமீபத்திய வெள்ளத்தில் சிக்கித்தவித்தவர்களை காப்பாற்றி உண்ண உணவு, இருப்பிடம் என்று கொடுத்து ஜாதி மதங்களை புறந்தள்ளி ஒருவருக்கொருவர் உதவி செய்திருக்கின்றனர்.

இது ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல. காலம் காலமாக இங்கு அனைத்து மதத்தினர்களும் ஒற்றுமையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் காணும் மதக்கலவரங்கள் தமிழகம் ஒரு போதும் கண்டதில்லை இனியும் காணமுடியாது.

மேலும் இப்பொழுது அடித்த வெள்ளம் காவி அரசியலுக்கு இங்கு ஒரு போதும் இடமில்லை, எப்படியாவது இங்கு காலூன்றலாம் என்ற அவர்களின் ஆசையை அடித்து சென்று கடலில் போட்டு விட்டது.

நீர் வழிச்சாலைகள் 

சமீபத்தைய சென்னை வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னையின் மேற்கு கிழக்காக ஓடும் அடையாறு, மற்றும் கூவம் பற்றிய கட்டுரைகள் தற்பொழுது நிறைய பேர்களால் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. பக்கிங்காம் கால்வாய் பற்றிய கட்டுரை "எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்" துளசிதரன் தில்லைகாத்து வலைதளத்தில் வந்துகொண்டிருக்கிறது. மிகவும் பயனுள்ள கட்டுரை. முக்கால் வாசி சென்னை வாசிகளுக்கு அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் பற்றி அதிகம் தெரியாது. அவர்களை பொறுத்தமட்டிலும் தூர்நாற்றம் வீசும் எந்த நீரோடையும் கூவம்தான். பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர்களால் நீர்வழி சாலையாக உருவாக்கப்பட்டு பொருட்கள் எடுத்து செல்ல உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் அது புறக்கணிக்கப்பட்டு கழிவு நீர் சாலையாக மாறி சென்னையின் வடக்கு தெற்காக ஓடி சென்னையை மணக்க செய்துகொண்டிருக்கிறது.

ரசித்த கவிதை 
சூழ்ந்து நிற்கும் கேள்விகள் 


சேவலின் உச்சிக் கொண்டையாய்
மைக் கொண்டு பாங்கு ஓதும் பள்ளிவாசல்களில்
ஒதுங்கிநிற்கிறோம்.
வாடகை வீடுகள் மறுக்கப்பட்டவர்களின்
பள்ளிவாசல்கள்தான் அவை.
செல்பேசிகள் அணைந்துவிட்டன.
சகமனிதர்களிடம் பேசத் தொடங்கினோம்.
இப்போது இருட்டிலும் அவர்கள் தெரிகிறார்கள்.
அல்லது இருட்டில்தான் அவர்கள் தெரிகிறார்கள்.
சாதனங்கள் முடங்கிய
மின்சாரத்துக்கு அப்பாலான
காலத்தில் நிற்கிறோம்.
அந்தக் காலத்தில் தண்ணீர் இருந்தது.
ஆறுகள் நிறையத் தண்ணீர் இருந்தது.
ஏரிகள் நிரம்பத் தண்ணீர் இருந்தது,
தண்ணீர் திணறத் திணற
பாட்டில்களில் அடைத்து விற்பனையைத் தொடங்கினோம்.
தண்ணீரின் நெஞ்சாங்குழி அதிர
தூண்களை இறக்கி கட்டடங்கள் எழுப்பினோம்.
மிச்சமிருந்த தண்ணீரை
குளிர்பானங்கள் ஆக்கி
அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினோம்.
நமது கால்களுக்குக் கீழ் நழுவும் பூமியில்
சில கேள்விகளோடு
அலைந்துகொண்டிருந்தது தண்ணீர்.
அந்தக் கேள்விகள்
ஆகாயத்துக்குப் போய் மீண்டும்
பூமிக்கு இறங்கி
இப்போது நம்மைச் சூழ்ந்துகொண்டன.
பள்ளங்களில் தேங்கி நிற்பவையும்
பாலங்களின் மேல் எழுந்து நிற்பவையும்
தண்ணீரின் கேள்விகள்தான்.
வாசலைத் தாண்டியும்
நம் வீடு வரைக்கும்
கேள்விகளை அனுப்பியிருக்கிறது தண்ணீர்.
ஆனாலும் நம் பதில்களை
தண்ணீரிலேயே எழுதி
கரைக்கத் தொடங்கும்பொழுதுகளில்
வானத்தின் ஏதேனுமொரு மூலையில்
கருமைகொண்டு
உறுமத் தொடங்கும் கேள்விகள்.

நன்றி: சுகுணா திவாகர் ஜொள்ளு 
Follow kummachi on Twitter

Post Comment

Friday 11 December 2015

காணவில்லை!!!

சமீபத்தில் சென்னையில் அடித்த வெள்ளத்தில் கீழ் காணும் நபர்களை காணவில்லை. அவர்களது விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தப்பி தவறி அவர்களை எங்காவது கண்டால் யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் காணாமல் போன நபர்களின் படங்கள் அவசியம் இல்லாததாலும் ஏற்கனவே நொந்து போயிருக்கும் மக்களுக்கு மேலும் பீதியை கூட்ட வேண்டாம் என்று  பிரசுரிக்கவில்லை.

இவர் தனது ஒரே!!! கட்சியின் ஒரே ஒரு சட்டசபை அங்கத்தினர், மேலும் சட்டசபையின் மேஜை உடைந்து போவதில் பெரும்பங்கு வகிப்பவர். நாட்டாமை அல்லது சித்தப்பா என்று அழைத்தால் திரும்பிப்பார்க்க வாய்ப்பிருக்கிறது. இவரை கடைசியாக நவம்பர் இறுதியில் திருநெல்வேலியில் பார்த்ததாக சொல்கிறார்கள். அப்பொழுது கையில் சொம்புடன்......வயல்காட்டில்........"மரமானாலும் சட்டசபையில் ஆத்தாவிற்கு பெஞ்ச் தட்டும் மரமாவேன், தோலானாலும் ஆத்தா காலுக்குசெருப்பாவேன்" என்று சொம்படித்ததாக அவருடன் கழித்தவர்கள்!!! சொல்கிறார்கள். சென்னையில் கடைசியாக  இவர் ஆத்தாவிடம் பல்பு வாங்கி சோகமுகத்துடன் திரும்பியதை கண்டிருக்கிறார்கள். அதற்கு பிறகு சென்னையில் அடித்த வெள்ளம் இவரை கிழக்கு கடற்கரையில் ஒதுக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவரை யாராவது கண்டால் திரும்பி பார்க்காமல் ஓடிவிடுவது நல்லது.

இவர் தம்மை தமிழச்சி என்று சொல்லிக்கொண்டு தமிழை தப்பு தப்பாக பேசுவார். சித்தி அல்லது வாணி ராணி என்று விளித்தால் மாடு சாணி போடுவது போல் முகத்தை வைத்துக்கொள்ளுவார். அண்டை மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டாலும் தனது மாநில ஆட்களை " ரெட்டி ரெட்டி" என்றழைத்து இழிவு படுத்துவதாக நினைத்து மைக் பிடித்து கூவுவார். சித்தப்பாவுடன் அவ்வப்பொழுது இருந்தாலும் தொலைக்காட்சி தொடரில் எதிரணியுடன் சில்லறை சேர்ப்பார். இவரை சமீபத்தில் யாரும் கண்டதாக தெரியவில்லை. இவரையும் சமீபத்திய வெள்ளம் கொட்டிவாக்கம் பக்கம் ஒதுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது, இவரை யாரேனும் கண்டால் பிச்சைக்காரனை கண்ட பொட்டை நாய் போல் காலுக்குள் வாலை நுழைத்து தலை தெறிக்க ஓடினால் தெரு நாய்களுக்கு நல்லது.

தந்தையின் பெயரை தனது பெயரின் முன்பாதியில் வைத்து அவ்வப் பொழுது தலை காண்பிப்பார். கடைசியாக இவரை தொலைக்காட்சியில் "பரதேசி நாய் பரதேசி நாய்" என்று சொல்லி திரிந்து கொண்டிருந்ததாக கண்டவர்கள் சொல்கிறார்கள். எப்பொழுதும் கூட்டி கழித்து கணக்கு பார்த்து சரி சரி சரியாக இருக்கும் என்று பெனாத்திக்கொண்டு தி. நகர் அபிபுல்லா தெரு பக்கம் சுத்திக்கொண்டிருப்பார். சென்னை வெள்ளம் இவரை அடித்து சாந்தோம் பக்கம் ஒதுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவரை யாராவது கண்டால் தயவு செய்து எந்த துப்புரவு தொழிலாளரிடமும் சொல்லி அவர்களை இழிவு படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மருத்துவராகிய இவர் ஆத்தா புண்ணியத்தில் டில்லி வரை அனுப்பப்பட்டவர். கடைசியாக இவரை தென் சென்னை மக்கள் போன வருடம் கண்டதாக சொல்லுகிறார்கள். அப்பொழுது அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா என்று திறந்த வண்டியில் கட்சி குண்டர்கள் புடை சூழ பிச்சை எடுத்ததாக சொல்லுகிறார்கள்.சமீபத்திய வெள்ளத்தில் இவருக்கு பிச்சை போட்டு வாழ்வளிக்கலாம் என்று பொது மக்கள் தொடர்பு கொண்ட பொழுது அவரது அலை பேசி "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் ஆத்தா திசை நோக்கி கும்பிட்டு   தண்ணியில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்" என்று பதில்வந்ததாக சொல்கிறார்கள். தப்பி தவறி இவரை யாரேனும் தொடர்பு கொண்டால் சிம் கார்டை பிடுங்கி வெள்ளத்தில் வீசுவது இவருக்கும் நாட்டுக்கும் நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையில் அடித்த வெள்ளம் இவர்களை போன்று இன்னும் பல பேர்களை காணாமல் அடித்துள்ளது. இதை பற்றிய மேலும் அறிவிப்புகள் இன்னும் தொடர்ந்து வந்து மக்களுக்கு இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர் வாக்கை நினைவு கொள்ள காத்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 10 December 2015

கொண்டதென்ன? கொடுத்ததென்ன?

கேட்கும் பொழுது பொய்ப்பாய் 
கேளாத பொழுது பெய்வாய் 
வாராது வந்த மா மழையே -உன்னை 
வேண்டாதுக் கொடுத்தது எத்தனை
பள்ளம் மேடு பாராமல் 
பாய்ந்து அடித்துச் சென்றனை
செல்லும் வழியின் கழிவுகளை 
அள்ளிச் சென்று விழித்தனை
ஜாதி மத பேதங்களை 
தேடிச் சென்று அழித்தனை
வீதி எங்கும் மனித நேயங்களை 
விதைத்துச் செழிக்க வைத்தனை
தூங்கிக் கிடந்த ஆற்றல்களை 
ஓங்கி அடித்து எழுப்பினை  -நீ 
கொண்டு சென்றது சிறிதளவு 
கொடுத்து சென்றதோ பெரிதளவு
Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 9 December 2015

டீ வித் முனியம்மா பார்ட் 38

இன்னா முனிம்மா வெள்ளம் வந்து அல்லாத்தையும் அள்ளிக்கினு போச்சே.....

ஆமா பாய் இன்னாத்தா சொல்ல, ரெண்டாந்தேதி மதியம் வரிக்கும் நல்லாத்தான் இருந்திச்சு அப்பால அடிச்சுது பாரு ஐயோ இன்னா அடிங்கற.....

அது சரி முனிம்மா அப்போகூட தெருவுல இம்மா தண்ணி வரலே தோ அந்தா காவால கூட தண்ணி கம்முன்னுதான் போய்கினு இருந்திச்சு.

டேய் செல்வம் அதானடா எப்புடி அடையாறுல வெள்ளம் வந்திச்சின்னு தோ பேப்பருல போட்டுக்கிறான் பாரு.

செம்பரம்பாக்கத்த முன்னாடியே தொறந்தாங்க கண்டி இந்த வெள்ளம் இம்மாம் தூரம் வந்திருக்காதாம்.

ஏனாம் அதாம் ரமணனு அடிக்கடிக்கி சொல்லிகினே இருந்தாரே அது இன்னாடா  லோகு.

கனமய, அதி கனமய, மிக அதி கனமய அல்லாத்துக்கும் பேரு வச்சிகினாறு.

ஆமாண்டா லோகு மய பொத்திக்கிட்டு ஊத்தப்போவுதுன்னு சொன்னாரு. அப்பவே ஏரிய தொரந்துகினா இம்மாம் தண்ணி வாராது.

பின்ன என்ன புடிங்கிகிட்டு இருந்தனுங்களாம்  கவுர்மெண்ட்ல.

அப்பால பாத்துக்கலாமுன்னு உட்டுருப்பானுங்க. இல்ல லிங்கம் சாரு இப்படி இருக்குமா.....ஏரி தொறக்கனும்...........அணையை தொரறக்கனும்முன்னா அம்மா சொன்னாதானே அதிகாரிங்க தொறப்பானுங்க..........அம்மா சொல்லலயாங்காட்டியம்.

அது இன்னா அடையாறுல பூந்த வெள்ளம் ஜாபர்கான் பேட்ட, ஈக்காட்டுதாங்கலு, கண்ணம்மாபேட்ட, கோட்டூருபுரம், தி. நகரு அல்லா இடத்துலயும் தண்ணி பூந்திடிச்சி. தோ இம்மாம் ஐயத்துக்கு தண்ணி வந்திடிச்சு, வீடெல்லாம் மூய்கி போச்சு.

டேய் செல்வம் அதுக்குதான் அல்லா பேப்பரு, பத்திரிக அல்லாம் படிக்கணும், நீ எங்க பேப்பரு எதுக்கு பாக்குற.........நடிக கில்மா படம் பாக்கத்தானே பேப்பரே எடுக்கற. உனுக்கு கீது பாரு ஒரு நாளிக்கி அஞ்சலயாடையும், தேன்மொழியாண்டையும்.

த சும்மா என்ன நக்கலடிக்காத.......மேட்டரு இன்னா  அதுக்கு வா முனிம்மா..

விகடணுல புலவர் மகுடேஸ்வரன் எழுதிக்குறாரு பாரு, அடையாறு ஆயம் எங்க எங்க எப்படி கீது.........ஏன் ஊருக்குள்ள தண்ணி வந்திக்கிச்சு. எர்போர்ட்டு ஏன் மூய்கிடிச்சு, அல்லா ப்ளேனையும் இஸ்துகினு போயி காட்டுல போட்டிருச்சுன்னு.

சரி முனிம்மா  காப்பறேசணுல ஒவ்வொரு தபா மேயரு சொன்னாரு காவா தூறு வார நானூறு கோடி, சாக்கட அள்ள ஐநூறு கோடி, அப்ப இவனுங்க ஒன்னும் புடுங்கலியா?

அடப்போ நாடார் நீ வேற காமெடி பண்ணிகினு.........அதத்தான் கமலதாசன் கேட்டாரு வரி துட்டு இன்னாச்சு..மக்கள் கஷ்டப்படுதுங்கோ....சன்னலில லுக்கு வுட்டேன்னு.........இப்போ அவரு வூட்டான்டையே காவா இயுத்து கரண்டு புடிங்கிட்டானுங்கோ.

அட சொம்மா அவர சொல்லாத முனிம்மா......அவரு அப்படி சொல்லவே இல்லியாம்.

இல்லடா லோகு அதாண்டா கொயப்பமா கீது.........மொதலோ கம்முன்னுதான் இருந்தாரு...........அப்பால பன்னீரு கூவிகின சொல்ல மாத்திகினாரு.

முனிம்மா ஆத்தா எலிகாப்டருல போச்சே பாத்தியா.

ஆமாம் பாய் சொம்மா.. ஆத்தா ... அவங்க வெள்ளத்த பாக்கல அல்லாரும் கூவிகினே இருந்தாங்களா, அதான் சொம்மா நல்ல மேக்கப் போட்டுகினு தா இம்மா சைசுக்கு ஓதட்டுல சாயம் பூசிக்கினு சொம்மா ஸ்டைலா போவுது. நல்ல தமாசு போ.

இன்ன முனிம்மா ஆனா நம்ம சென்னை பசங்க நல்லா வேல செஞ்சானுங்க.

ஆமா லிங்கம் சாரு அல்லாம் சின்ன பசங்க இன்னா துடியா வேல செஞ்சானுங்க.........பாய் ஆளுங்க, நம்ம ஆளுங்க  அல்லாரும் கவருமெண்டு காரனுங்க ஒன்நியம் செய்யமாட்ரானுங்க........அல்லாம் நாம தானுனு நல்லா வேல பாத்து நெறைய ஜனத்த வெள்ளத்துல அள்ளிகினு வந்தானுங்க.......நம்ம மீனவ குப்பம் ஆளுங்க போட் எத்துகினி எத்தினி பேர தன்னிலேந்து தூக்கி விட்டானுங்க...அவனுக எல்லாம் நல்லா இருக்கணும். அல்லாருக்கும்  சோறு தண்ணி கொடுத்தாங்க.

அ..ஆமாம்... முனிம்மா மந்திரிங்க எங்க போனாலும் ஜனம் தொரத்தியடிச்சிடிச்சி  போல.

ஆமாண்டா இதுக ஒன்னும் செய்யாம.........செஞ்சிகினு இருக்கவங்கிட்ட புடுங்கி ஸ்டிக்கர் ஓட்டினா.......அதாம் மந்திரிங்கள..... மவளே ஏரியா பக்கமே வராதன்னு அடிச்சி விட்டானுங்க.

சரி முனிம்மா மோடி ரெண்டாயிரம் கோடி கொடுத்துகிறாரே நமக்கு ஏதாவது கெடிக்கும்..........

போடா லோகு சரியான  கேன புண்ணாக்கா கீறே........அல்லாத்தையும் அவனுங்களே ஆட்டைய போட்டுப்பனுங்க........நீ கட்சில கீரியா அப்போ உனுக்கு பொற துண்டு போடுவானுங்க உன் நாய்க்கி ஆச்சி. போ......

இல்ல முனிம்மா வூடு போச்சினா பத்தாயிரமாம்....ஆத்தா சொல்லிகீது.

போடா சரியான லுச்சாவா கீறயே..........நீ அவங்க கச்சியா.......அப்போ துட்டு கெடிக்கும். இல்லேன்னா உன் குடிசை மேல அவங்க கொடிய நடு, கொடுப்பானுங்க அது கூட வட்டம், மாவட்டம், சதுரம் அடிச்சது போக ஆயிரம் வந்தா உனுக்கு டாஸ்மாக்குக்கு ஆச்சி அப்பால அது அவனுகளுக்கே போயிடும்.

தோ மீச கடில அல்லாம் வெள்ளத்துல அடிச்சிகினு போச்சு........லிங்கம் சார் அவனுக்கு கடை போட்டுதாறேன்னு சொல்லிகிறாரு. எனுக்கி வீடே போச்சு. பாய் துட்டு தாரேன்னு சொல்லிகிறாரு.........கவருமெண்டு எல்லாம் நம்புற ஆளு நம்ம இல்ல. அதே போல பாய்க்கி எதாச்சும்னா நான் எல்ப்பு செய்வேன். அல்லாம் நமக்கு நாமே தான்.

இந்த ரோடெல்லாம் இப்படி தொண்டி வுயுந்து போச்சே எப்போ சரி செய்வானுங்க.....

தோடா............அடுத்த வருஷம் எலிக்சன் வருது அதுக்கு முன்னே கண்டிசனா கல்லு மண்ணு போட்டு ரொப்பிடுவானுங்க.......அப்பால அது புடுங்கிகினு தபா தபா தொண்டி வியும்.

சரி மத்த கட்சிகாரனுங்க இன்னா ஆனானுக.

தோ மய உட்டிடிச்சி இல்ல.......அல்லாம் வேட்டிய தூக்கி கட்டிகினு கொட பிச்சிகினு வருவானுக பாரு.

இந்தாடா செல்வம் பேப்பர புடி. நானு ஒரு வாரத்துக்கு அப்பால் கடிய போட்டுகிறேன். வேல கீது.....ஏதோ பத்து மொயம் விடத்தான் இன்னிக்கு சோறு. பாத்து தொர மயல நெனஞ்சு கீது........அதேபோல மயல நெனஞ்சிகினு எவ படமாவது போட்டிருப்பான். பாத்துக்க.
Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 8 December 2015

நிவாரண பொருள கொடு ஸ்டிக்கர ஒட்டனும் இல்ல ஆத்தா வையும்

கடந்த சில நாட்களாக முகநூலிலும், ட்விட்டரிலும் வந்த கருத்து சித்திரங்களின்  தொகுப்பு


Follow kummachi on Twitter

Post Comment

மனிதநேயம் மரிக்கவில்லை

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழனாக வளர்ந்து தமிழனாக  இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இந்த மழை ஏற்படுத்திய பேரிடரில் உதவிய சென்னைவாசிகள் குறிப்பாக இளைஞர்கள் செய்த தன்னலமற்ற உதவி நமது எதிர்கால கவலையை போக்குகிறது.

சென்னையின் பலபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பொழுது சிக்கிய பொதுமக்களை மீனவ இளைஞர்கள் தங்களது படகுகளை எல்லா இடங்களிலும் செலுத்தி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியுள்ளனர். நடிகர்களின் படங்களுக்கு பாலூற்றி வீணடிக்கப்படுகின்றதே இன்றைய இளைஞர் சமுதாயம் என்று நொந்த பெரிசுகளுக்கு இந்த பேரிடரில் அவர்கள் செய்த இந்த தொண்டு ஏதோ ஒன்றை சொல்லுகிறது. இப்பொழுது இவர்கள் பனி கடலூரிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அரசின் கையை எதிர்பாராமல் எண்ணற்ற தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி கடுமையான மழையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

சில முதியவர்கள் கூட ஆயிரம் இரண்டாயிரம் பேருக்கு உணவு சமைத்து தங்களது இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முக்கியமாக ஜாதி மதம் கடந்து எல்லோரும் கைகோர்த்து இந்த பேரிடரை கையாண்டது உலகத்திற்கு முக்கிய செய்தியை சொல்லுகிறது. இந்து கோயில்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டதும், மசூதிகளில் இந்துப் பெண்களை தங்க வைத்து உதவிகள் செய்ததும் "ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது" என்று ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறார்கள்.

வடநாட்டு ஊடகங்கள் நமது பேரிடரை முதலில் கண்டுகொள்ளாததும் எண்ணற்ற வட இந்தியர்கள் நாம் அழிவை ரசித்த பொழுதும் தமிழக மக்கள் எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம்  என்று காட்டியிருக்கிறார்கள்.

தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 6 December 2015

கண்டோம், கற்போம்

தமிழகத்தில் தற்போது பெய்த மழை எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக சென்னையும், கடலூரும்  நிலைகுலைந்து போயிருக்கிறது
.

வெளிநாடு வாழ் தமிழர்கள் கடந்த ஒரு வாரமாக தங்கள் சுற்றங்களின் நிலைமையை அறிய கொண்ட தொடர்புகள் முடிவுறாமல் நின்றன. டிசம்பர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைக்கட்சியில் கண்ட காட்சிகள் பயத்தைக் கூட்டின.  அவ்வப்பொழுது ஏற்பட்ட அரை குறை தொடர்புகள் மனதில் மேலும் கவலையூட்டின.


சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரசாங்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஓரளவு சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுத்திருக்கலாம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் சென்னையை வெகுவாக பாதிக்கும் என்று "தானே புயல் முன்னறிவிப்பு" போல் வெகு சரியாக கணித்தது. அரசாங்கம் அப்போதும் விழித்துக்கொள்ளவில்லை. அவர்களது தொலைக்காட்சி இருக்குமிடத்தை பாதுகாத்ததில் ஒரு பங்கை மற்ற இடங்களுக்கு செய்திருந்தால்கூட பேராபத்தை தவிர்த்திருக்கலாம்.

ஏரிகள் நிரம்ப ஆரம்பித்தவுடன் மதகுகள் திறப்பதை முன்கூட்டியே அறிவித்து ஆறுகளின் அருகில் இருப்பவர்களை வெளியேற்றி இருக்கலாம். செம்பரம்பாக்கத்திலிருந்து வினாடிக்கு இருபத்தி ஐந்தாயிரம் கன அடி திறக்கப் போகிறோம் என்று வந்த அறிவிப்பு காலம் கடந்த ஒன்று. அவர்கள் அறிவித்த பொழுது அடையாரில் திறந்து விடப்பட்ட அளவு அதைவிட அதிகம். அதைவிட கொடுமை அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு அது எண்பதாயிரம் கன அடியாக ஏறியது.

சென்னையில் முக்கால்வாசி இடங்களில் தண்ணீர் ஆறடிக்கும் மேலாக உயர்ந்தது. தி. நகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஆறடிக்கும் மேலாக ஓடியது. அதில் இருசக்கர வாகனங்கள், கார்கள், இறந்த ஆடு மாடுகள் அடித்து செல்வதை பார்த்தவர்கள் அதிகம். நந்தனத்தில் இரவு பகலாக விழித்திருந்து உதவியர்கள் அவை வடிகால்களில் இழுத்து செல்லப்பட்டதை தொலைக்கட்சியில் கூறிக்கொண்டிருந்தனர்.

ஒரு தொலைக்காட்சி நிருபர் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மேற்பார்வையிட வந்த சென்னை மேயரிடம் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்க அவர் அமைச்சரிடம் அனுப்பினார், அந்த அமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் ஆணைப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லிகொண்டிருக்கும் பின்னணியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் நின்று கொண்டிருந்த பத்து இருபது பேர் தங்களை காப்பாற்ற வேண்டி கையசைத்துக் கொண்டிருந்தனர். மற்றொரு அமைச்சரோ மைக்கை தட்டி விட்டு பேட்டி என்றவுடன் அறை சேலை அவிழ்ந்து விழ தலை தெறிக்க ஓடினார். இந்த கழிசடைகள்தான் ஊழல் வழக்கில் தங்கள் தலைவி சிறை சென்றவுடன் ஒப்பாரி வைத்து அழுதனர். மற்ற அரசியல் வாதிகள் இந்த நிலைமையை வைத்து குளிர் காய்கின்றனர்.

இந்த வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களை கற்று தந்து வங்காள விரிகுடா நோக்கி சென்றிருக்கிறது. திரும்பவும் அங்கிருந்தே வரும் நாம் கற்றோமா? என்று மதிப்பிட.

சென்னையில் இருந்த கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் வெறும் முப்பதாக குறைந்தது நம்மை இது வரை ஆண்டவர்கள் செய்த திருக்கோலம்.

சென்னை வாசிகள் இந்த இடர்பாடில் சிக்கித்தவித்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மனித நேயத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். அடுத்த வீட்டு நபர் யாரென்று தெரியாதவர் இப்பொழுது நட்பு பாராட்டுகின்றனர்.

இந்த வெள்ளம் சென்னையில் உள்ளவர்களின் பொருட்களையும் சில உயிர்களை மற்றும் அடித்து அழித்து செல்லவில்லை. நம்மிடம் உள்ள ஜாதி மத பேதங்களையும் அடித்து சென்றிருக்கிறது. பாதித்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் ஜாதியோ மதமோ அல்லது எந்த எதிர்பார்போ இல்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னை இளைஞர்கள் தங்களை உயிரை பணயம் வைத்து என்னற்றவர்களை காப்பாற்றி இருப்பதை காண நேர்ந்தது.

அரசியல்வாதிகள் வழக்கம்போல தங்கள் அல்ப விளம்பர குணங்களை இந்த நேரத்திலும் காட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் திருந்தமாட்டார்கள்.

நாம்தான் புரிந்துகொண்டிருக்கிறோம்.

இனி ஒரு விதி செய்வோம்
அதை தேர்தலில் காப்போம்
ஒட்டு பொறுக்கி கூட்டத்தை
நாட்டை விட்டு அகற்றுவோம்.Follow kummachi on Twitter

Post Comment