Saturday 26 November 2011

கலக்கல் காக்டெயில் -50


ராசாவே  உன்னை நம்பி

ஆ. ராசா நேற்று திஹார் சிறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “நான் வாயை திறந்தால் பல பேர் சிறைக்கு செல்ல வேண்டிவரும்” என்று சொல்லி இல்லை பினாத்தியிருக்கிறார். இதை தான் தேடிப் போய் ஆப்பில் உட்காருவது என்கிறார்களோ?. இத்தனை நாள் விசாரணையில் அவர் உண்மையை சொல்லவில்லையா? மேலும் கனிமொழி ஜாமீனில் வந்த பின்தான் என் ஜாமீனைப்பற்றி யோசிப்பேன் என்றிருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் “ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறாரோ என்று சந்தேகம்” இப்பொழுது இவருடைய பேச்சு அதை ஊர்ஜிதம் செய்கிறது. 2ஜி ஒளிக்கற்றை விவகாரம் நிறைய தலைகளை காவு வாங்குமா? இல்லை எல்லா ஊழல் வழக்குகள் போல அம்பேலாகுமா? பார்ப்போம்.

என்ன நியாயம்?

நமது பாராளுமன்றத்தின் சபாநாயகர் தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே எம்.பி.க்கள் சம்பளம் ஏற்றப்பட்டு மக்களின் எரிச்சலை கிளப்பியுள்ளது. இந்த லட்சணத்தில் இது போன்ற விவகாரங்கள் அவர்களின் மேல் மேலும் எரிச்சல்களைளைத்தான் மூட்டுகிறது. இதே ஒரு சாமான்யன் கட்டவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படுவது நிச்சயம், ஆனால் இவர்களுக்கு அதெல்லாம் கிடையாது போல. பின் ஏன் பொதுப்பணித்துறைகள் நஷ்டத்தில் ஓடாது?

கல்யாணத்திற்கு நான் செலவு செய்யவில்லை.

அம்மா ஒரு வழியாக எல்லாக் கேள்விகளுக்கும் பெங்களூரு நீதிமன்றத்தில் பதில் சொல்லிவிட்டார்கள் கவனிக்க விளக்கம் அளிக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு “தெரியாது” பதில் தான். வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை, எல்லாம் பெண் வீட்டுக்காரர்கள்தான் செய்தார்கள் என்று அவர்களை வேறு வம்பில் இழுத்து விட்டிருக்கிறார்கள்.

கல்யாண ஊர்வலத்தில் அம்மாவும்உ.பி.ச. வும் யானை லங்கோடு சைசில் ஒட்டியாணம் போட்டிருந்தாங்களே அதுவும் அவிய்ங்க கொடுத்ததுதானா இல்லை அன்பளிப்பா? பாலுவுக்குதான் (ஜ்வெல்லர்ஸ்) வெளிச்சம்.

ரசித்த கவிதை

வியட்நாம் யுத்தத்தின் பொழுது கண்ணதாசன் எழுதியது

ஆதிக்க வெறியர்களின் ஆவியெல்லாம்
அமெரிக்கத் தலைவர்கள்பால் குடிபுகுந்து
சாதித்த சாதனையே வியட்நாம் ரத்தம்
சமுதாய படுகொலையே வியட்நாம் யுத்தம்
வாதிட்டு வெல்லாத தத்துவங்கள்
வாள்கொண்டு களமேறி வெல்லுமாயின்
நீதிக்கு காலேது வெறியர்க்கெல்லாம்
நிலையான சுடுகாடு வியட்நாம் மண்ணே.

இதையே சற்று வார்த்தைகளை மாற்றி போட்டுப் பார்த்தால் ஈழப் போருக்கும் பொருந்துகிறது.  

சிரிக்க சிந்திக்க 


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 24 November 2011

கொலவெறி


கொலவெறி பாட்டு கேட்கும் முன்னாடி இந்த கொலவெறி டான்சுங்க்னா





ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி




இதையும் பார்த்துக்குங்க 

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 23 November 2011

குடித்தால் அடி


குடித்தால் அடி -----------அன்னா ஹசாரே
அடித்தால் குடி--------------டாஸ்மாக் கபாலி 
-------------------------------------------------------------------------------------- 
கலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்
மக்கள்!!----------------ரத்தக்கண்ணீர்
கேப்டன் உண்ணாவிரதம் காலை எட்டு மணி தொடங்கி ஐந்து மணிவரை, பிறகு (அம்மா ஊத்தி கொடுக்க) சரக்கடித்து விரதத்தை முடித்து வைப்பார்.
ஒய்  திஸ் கொலைவெறி கொலைவெறிடி ------------------தமிழ்நாட்டின் அடுத்த தேசியகீதம்.................இனி அரசுவிழாக்களில் “நீராருங்கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுக” முடியாது.
--------------------------------------------------------------------------------------------

வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை-------------கோர்ட்டில் ஜெ. #$%^ எல்லாம் மக்கள் பணம்தான். 
---------------------------------------------------------------------------------------------
உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------
டெண்டுல்கர் சதம் அடிக்க பிட்ச் போட்டா, குறுக்க இவனுங்க பூந்து கும்மி அடிக்கிறானுங்க......................மும்பை டெஸ்ட் போட்டியை குத்தவைத்து  பார்க்கும் ரசிகர்.
-----------------------------------------------------------------------------------------------
வளர்ப்புமகன் திருமணத்துக்கு நான் ஒருபைசா கூட செலவழிக்கவில்லை-ஜெ. #அப்ப யானைக்கி கட்டுற கோமணம் சைஸ் ஒட்டியாணமும் அன்பளிப்பு தானா?-----------------ட்விட்டரில் படித்தது (பிரதீஷ்)
--------------------------------------------------------------------------------------------
மக்கள்நலபணியாளர்கள் நீக்கம்: அரசு அப்பீல் மனு தள்ளுபடி---------சென்னை உயர்நீதிமன்றம்.
----------------------------------------------------------------------------
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
யாரங்கே வண்டி ரெடி பண்ணுங்கப்பா தமிழினம் காத்த வீராங்கனை வெளியே வராங்க, சும்மா தாரை தப்பட்டை எல்லாம் அதிர வேண்டாமா?
-------------------------------------------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 22 November 2011

கலக்கல் காக்டெயில் -49


பாலும் கசந்ததடி, பயணம் நொந்ததடி

அம்மா என்னதான் காரணம் சொன்னாலும் விலை ஏற்றம் மக்களை கடுப்படையவே செய்திருக்கிறது. பேருந்து கட்டணம் அதிகரிப்பை ஓரிரு மாதங்கள் முன்பாகவே முன்னறிவிப்பாவது செய்திருக்கலாம். ஏதோ முதல் நாள் அறிவித்துவிட்டு அடுத்த நாள் காலையில் கட்டணம் ஏற்றியதை ஏழைகள் மன்னிப்பார்களா? தெரியவில்லை.

பால்விலை ஏற்றத்திற்கு  சொல்லப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இத்தனை நாள் நஷ்டத்தில் ஓடியதாக சொல்கிறார்கள். அதை கண்டு பிடிக்க ஆறு மாத காலமா? என்னையா அரசாங்கம் இது. அது சரி இதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், முதலில் மாற்றுக் கட்சி ஆளுங்களை எப்படி உள்ளே போடலாம் என்று குத்தவைச்சு யோசிச்சிருப்பாய்ங்க போல.

மின்சார கட்டணம்  அதிகரிப்பிற்கு கொஞ்ச நாளாகும் போல் தெரிகிறது. அதுவரைக்கும் மக்கள் இல்லாத மின்சாரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

அரசின் வருவாயை பெருக்க ஆயிரம் வழிகள் உள்ளன. விலையேற்றம் என்பது கடைசி வழியாக இருந்திருக்கவேண்டும். மக்கள் சுமையை கொஞ்சமாக ஏற்றினால் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் இவர்கள் ஏற்றியது பெரிய மலையை, கடினம்தான்.

பதினாறு நாள் காரியத்திற்கு பிறகு பங்கு போட்டவர்கள் இனி அடுத்த நாள் பாலுக்கே பங்கு போடும் நிலை.



நானும் உண்ணாவிரதம் இருக்கேன்

கேப்டன் தன் பங்கிற்கு விலையேற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போறாராம். அம்மாவை எதிர்த்து அரசியலா? பலே சரியான போட்டி.  
டவுட்டு தனபால் கேட்கிறான், கேப்டன் எதைக் குடித்து உண்ணாவிரதத்தை முடிப்பார்? என்று, தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

ரசித்த கவிதை
அம்மாவிற்கு மகனாய்
அப்பாவிற்கு வாரிசாய்
அண்ணனுக்கு அடிபணியும்
தம்பியாய்
நண்பர்களுக்கு
நன்றியுள்ளவனாய்
காதலிக்கும் பொழுது
காதலனாய்
சிரிப்பவர்களுடன் சிரித்து
அழுபவர்களுடன் அழுது
எப்பொழுது?
எங்கே?
எது நான்?


டி ஆரின் ஆங்கிலம் (என்ன கொடுமை ஸார் இது)


Follow kummachi on Twitter

Post Comment

Monday 21 November 2011

பிணந்தின்னிகள்


குடிக்கும் நீர் தொடங்கி
அடிக்கும் பட்டை வரை
கலந்திருக்கும் அழுக்கு
கடிக்கும் கொசு ஒழிப்பு
உடுக்கும் உடை, உணவு
கழிவு நீர் அகற்றல் 
படிக்கும் கல்வி முறை
நடக்கும் பாதை, கழிவுநீர்
உண்ணாவிரதம், போராட்டம்
சண்டை, சச்சரவு, சாவு,
நோவு, போக்குவரத்து,
நூலகம், மருத்துவமனை
எல்லா துறைகளிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
நிலையா அரசியலும்
நடத்தும் கூட்டமும்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 16 November 2011

வாடகை வீடு


இந்த மேன்ஷன் வாழ்க்கை சரவணனுக்கு பிடிக்கவில்லை. சென்னைக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. படித்து முடித்து வேலைக் கிடைத்தவுடன் சென்னை வந்தாகிவிட்டது. நண்பர்களின் பேச்சைக் கேட்டு மேன்ஷனில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறான். அவனுடைய அறையில் மற்றும் இரண்டு ஆட்கள், இதுவரை வீட்டிலேயே தனி அறையில் இருந்து பழக்கமாகிவிட்டதால் இந்த வாழ்க்கை ஒத்துக்கொள்ளவில்லை. இங்கு பாத்ரூம் போகக்கூட வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. மேன்ஷனில் உள்ள “அக்கா மெஸ்” சாப்பாடு சுத்தமாக பிடிக்கவில்லை. உருளைக்கிழங்கு பொரியல் ஒரு மாதத்திற்கு செய்து விட்டார்கள் போலும். 

அம்மாவும், அப்பாவும் அகமதாபாதில் இருக்கிறார்கள், அப்பாவிற்கு அங்கு வேலை. அக்கா வேறு பிரசவத்திற்கு அங்கு வந்திருக்கிறாள். அம்மாவுடன் போனில் பேசியபொழுது மேன்ஷனில் கஷ்டம் என்றால் தனியாக வீடு பார்த்துக் கொள்ளேன் என்று சொன்னாள். வீடுகிடைத்தால் சாப்பாடு பிரச்சினை தீர்ந்துவிடும், நாமே எதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். சென்னையில் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பது அத்தனை எளிதா?

எங்கு சென்றாலும் அவன் வேலை சம்பளம் எல்லாம் கேட்டுவிட்டு (வீட்டையும் காண்பிக்காமல், வாடகையையும் சொல்லாமல்) இல்லைப்பா பேச்சிலருக்கு நாங்கள் கொடுப்பதில்லை என்பார்கள். இப்படித்தான் அன்று நகரின் நல்ல பிரதானப் பகுதியில் ஒரு வீட்டில் மாடியில் ஒரு படுக்கையறை, ஹால், கிச்சன் உள்ள வீடு காலியாகி இருப்பதை தெரிந்துகொண்டு அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவை திறந்தவர், அவனை மேலும் கீழும் நோக்கி 

என்னப்பா என்ன வேண்டும்?.
வீடு வாடகைக்கு வேண்டும் ஸார், உங்கள் மாடி போர்ஷன் காலி என்று கேள்விப்பட்டேன்.
ஆமாம் காலிதான், உங்க குடும்பத்தில் எத்தனை பேரு?
அம்மா, அப்பா, அக்கா, பின்னே நான் ஸார், என் பெயர் சரவணன்.
அப்படியா? நாலு பேருக்கு இந்த வீடு பத்தாதேப்பா?
நீ எங்கே வேலை செய்யறே?
வேலை செய்யும் இடத்தை சொன்னான்.
என்ன போஸ்டு?
சரவணன் தன்னுடைய போஸ்டை சொன்னான்.
அப்படியா? நமக்கு எந்த ஊரு?
திருநெல்வேலி ஸார். 
அப்படியா நம்ம ஊருதான், உட்காருப்பா என்று திண்ணையை காண்பித்தார்.
அக்காவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதா?
ஆயிடுச்சு ஸார்.
அப்போ, நீ அப்பா, அம்மா தான் இந்த வீட்டில் இருக்கப் போறீங்களா?
இல்லை ஸார், வீடு எனக்கு மட்டும்தான், அப்பா இன்னும் வேலையில் இருக்கிறார், அப்பாவால் அகமதாபாதை விட்டு நகர முடியாது. அம்மாவும் அப்பாவை விட்டுவிட்டு வர மாட்டாங்க ஸார்.
அப்படியா, நீ மட்டும் தானா?.
சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே ஹோட்டலா இல்லை மெஸ்? என்று இழுத்தார்.
இல்லை ஸார் நானே சமைத்துக் கொள்வேன்
அப்படியா சமைக்க தெரியுமா, எனக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது என்றார்.
என்ன ஸார் வீட்டை பார்க்கலாமா?
மாடி வீட்டு சாவி என்னிடம் இல்லை, மனைவியிடம் இருக்கிறது நீ மாலை வாயேன் நான் சொல்கிறேன் என்றார்.
சரவணன் ஏமாற்றத்துடன் வெளியில் வந்தான்.
தெருமுனை வந்தவுடன்தான் அவனுக்கு தன் அலைபேசியை அவர்கள் வீட்டு திண்ணையிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது.
அதை திரும்ப போய் எடுத்து வந்து விடலாம் என்று அந்த வீட்டை அடைந்தான்.

பெரியவர் வெராண்டாவில் இல்லை. உள்ளே ஹாலில் இருக்கிறார் போலும் என்று அழைப்பு மணியை அழுத்தினான். கரண்ட் இல்லை போலும் சத்தம் வரவில்லை. கதவை தட்டலாமா, இல்லை ஸார் என்று கூப்பிடலாமா என்று யோசிக்கும் பொழுது அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் உள்ளே ஹாலில் உரத்தக் குரலில் பேசிக்கொண்டிருந்தது அவனுக்கு தெளிவாக கேட்டது.

வீட்டை வாடகைக்கு விடறதை விடுங்க, அந்த பையன் அட்ரெஸ் கேட்டு வச்சிட்டிங்களா?
ஐயோ இல்லை.
உங்களுக்கு எல்லாம் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. பையன் நல்ல வேலையில் இருக்கிறான். ஆளும் நல்லா இருக்கான், நம்ம ஜோதிக்கு பார்க்கலாங்க.
அப்போ அந்த பையன் வந்தால் மாடி வீட்டை கான்பிக்கலாமா?.
நான் சொல்வதை முதலில் செய்யுங்க, வாடகைக்கு வேறே யாராவது குடும்பஸ்தர் வருவார்கள். அந்த பையனின் தாய் தந்தையர் அட்ரஸ் வாங்குங்க மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்.
சரவணன் அழைப்பு மணியை அழுத்தாமல் கம்பிக்ராதியின் வழியே தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்.

Follow kummachi on Twitter

Post Comment