Saturday 26 November 2011

கலக்கல் காக்டெயில் -50


ராசாவே  உன்னை நம்பி

ஆ. ராசா நேற்று திஹார் சிறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “நான் வாயை திறந்தால் பல பேர் சிறைக்கு செல்ல வேண்டிவரும்” என்று சொல்லி இல்லை பினாத்தியிருக்கிறார். இதை தான் தேடிப் போய் ஆப்பில் உட்காருவது என்கிறார்களோ?. இத்தனை நாள் விசாரணையில் அவர் உண்மையை சொல்லவில்லையா? மேலும் கனிமொழி ஜாமீனில் வந்த பின்தான் என் ஜாமீனைப்பற்றி யோசிப்பேன் என்றிருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் “ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறாரோ என்று சந்தேகம்” இப்பொழுது இவருடைய பேச்சு அதை ஊர்ஜிதம் செய்கிறது. 2ஜி ஒளிக்கற்றை விவகாரம் நிறைய தலைகளை காவு வாங்குமா? இல்லை எல்லா ஊழல் வழக்குகள் போல அம்பேலாகுமா? பார்ப்போம்.

என்ன நியாயம்?

நமது பாராளுமன்றத்தின் சபாநாயகர் தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே எம்.பி.க்கள் சம்பளம் ஏற்றப்பட்டு மக்களின் எரிச்சலை கிளப்பியுள்ளது. இந்த லட்சணத்தில் இது போன்ற விவகாரங்கள் அவர்களின் மேல் மேலும் எரிச்சல்களைளைத்தான் மூட்டுகிறது. இதே ஒரு சாமான்யன் கட்டவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படுவது நிச்சயம், ஆனால் இவர்களுக்கு அதெல்லாம் கிடையாது போல. பின் ஏன் பொதுப்பணித்துறைகள் நஷ்டத்தில் ஓடாது?

கல்யாணத்திற்கு நான் செலவு செய்யவில்லை.

அம்மா ஒரு வழியாக எல்லாக் கேள்விகளுக்கும் பெங்களூரு நீதிமன்றத்தில் பதில் சொல்லிவிட்டார்கள் கவனிக்க விளக்கம் அளிக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு “தெரியாது” பதில் தான். வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை, எல்லாம் பெண் வீட்டுக்காரர்கள்தான் செய்தார்கள் என்று அவர்களை வேறு வம்பில் இழுத்து விட்டிருக்கிறார்கள்.

கல்யாண ஊர்வலத்தில் அம்மாவும்உ.பி.ச. வும் யானை லங்கோடு சைசில் ஒட்டியாணம் போட்டிருந்தாங்களே அதுவும் அவிய்ங்க கொடுத்ததுதானா இல்லை அன்பளிப்பா? பாலுவுக்குதான் (ஜ்வெல்லர்ஸ்) வெளிச்சம்.

ரசித்த கவிதை

வியட்நாம் யுத்தத்தின் பொழுது கண்ணதாசன் எழுதியது

ஆதிக்க வெறியர்களின் ஆவியெல்லாம்
அமெரிக்கத் தலைவர்கள்பால் குடிபுகுந்து
சாதித்த சாதனையே வியட்நாம் ரத்தம்
சமுதாய படுகொலையே வியட்நாம் யுத்தம்
வாதிட்டு வெல்லாத தத்துவங்கள்
வாள்கொண்டு களமேறி வெல்லுமாயின்
நீதிக்கு காலேது வெறியர்க்கெல்லாம்
நிலையான சுடுகாடு வியட்நாம் மண்ணே.

இதையே சற்று வார்த்தைகளை மாற்றி போட்டுப் பார்த்தால் ஈழப் போருக்கும் பொருந்துகிறது.  

சிரிக்க சிந்திக்க 


Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா. ஸார்.

Unknown said...

படம் விளக்கம் சூப்பர்
malaithural.blogspot.com

ஹேமா said...

கவிதை சூப்பர் !

mage said...

arumaiyana padhivu.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹேமா

கும்மாச்சி said...

மகே வருகைக்கு நன்றி

SURYAJEEVA said...

கார்பரேட் ஊழல் வாதிகள் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்து விட்டார்கள்... எனக்கென்னவோ ராஜா வெளியே வருவதற்கே பயப் படுகிறார் என்று தான் சொல்வேன்

கும்மாச்சி said...

\\எனக்கென்னவோ ராஜா வெளியே வருவதற்கே பயப் படுகிறார் என்று தான் சொல்வேன் //

உண்மைதான் சூர்யா

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

Unknown said...

1.மாப்ள ராசா அல்ல அது ஒரு பீசா ஹிஹி...ஆள்ளாளுக்கு துன்னுபுட்டு இப்போ புலம்புது!

2. அவங்க தான் பில்லுக்கு பதிலா கத்துராங்களே மன்றத்துல அது போதும்னு நெனச்சிட்டாங்க போல ஹிஹி!

3.ஏன்யா ஒரு பெண் இத்துனூண்டு நகை அணிஞ்சா பொறுக்காத ஆணாதிக்கவாதிய்யா நீர் ஹிஹி

4.கவித கவித

5.கார்ட்டூன் கொடுமை ஹிஹி!

கும்மாச்சி said...

விக்கி பதிவைவிட பின்னூட்டம் அள்ளுது.

Philosophy Prabhakaran said...

ஜொள்ளு விடவே இல்லை...

கும்மாச்சி said...

அடுத்தமுறை ஜொள்ளு விடலாம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.