Monday 30 September 2013

ராகுல் காந்தி- பயோடேட்டா

இயற்பெயர்--------------------------ராகுல் காந்தி

மறந்த பெயர்------------------------ராவுல் வின்சி

விரும்பும் பெயர்-------------------ஏழைப் பங்காளன்

வயது-------------------------------------பிரதமராகும் வயது தான்

தகுதி-----------------------------------நேரு குடும்பம்

அரசியல்------------------------------வராத படிப்பு, அவசியமும் இல்லை

தற்போதைய பதவி--------------காங்கிரசின் துணை தலைவர்

நண்பர்கள்----------------------------ஜால்ரா இளைஞர்கள்

எதிரிகள்-------------------------------கட்சிப் பெருசுகள்

பிடித்த பல்லவி---------------------தூக்கி குப்பையில போடு

பிடிக்காத பல்லவி----------------மோடி மோடி

சமீபத்திய சாதனை---------------மண்ணு சிங்கை காண்டாக்கியது

நிரந்தர சாதனை-------------------அரசியல் ஜோக்கர்




Follow kummachi on Twitter

Post Comment

Monday 23 September 2013

கலக்கல் காக்டெயில்-123

சினிமா நூறு

இந்திய சினிமா நூறு விழாவிற்கு அம்மா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்கள். பின்னர் சினிமாவில் சிறப்பு பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை வாங்கியவர்களில் சில பேர்களைவிட தமிழ் சினிமாவிற்கு பங்காற்றியவர்கள் இன்னும் நிறைய பேர் விருதிற்கு தகுதியானவர்கள்.

இந்த விருது பரிந்துரையில் அரசியல் தலையீடு இருந்தததை மறைக்கவோ மறக்கவோ முடியாது. விழாவிற்கு அழைப்பு வைத்ததிலிருந்து தொடங்கியது குழப்பம். சினிமாவில் சிறப்பு பங்காற்றிய எண்ணற்ற கலைஞர்கள் இதில் அரசியல் காரணங்களால் அழைக்கப்படவில்லை.

போதாத குறைக்கு இதற்கு அரசு சார்பில் பத்துகோடி நிதியை வேறு வாரி வழங்கியிருக்கிறார். கோடிக்கணக்கில் காசு புரளும் இடத்தில் இந்த அரசு நிதி அனாவசியமானது. அந்த நிதியை வேறு எதாவது மக்கள் நிலதிட்டத்திற்குசெலவழித்திருக்கலாம்.

செம்மொழி மாநாடு, சினிமா விழா என்று மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இதில் இரு கழகங்களும் சளைத்தவர்கள் அல்ல.

அம்மா வியூகம் 

அம்மா கூடாரம் வரப்போகும் நாடாளு மன்றத்தேர்தலுக்கான வியூகங்களை தொடங்கிவிட்டனர். அடிக்கடி அகில இந்திய உபரிகட்சித் தலைவர்கள் அம்மாவை வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாஸ் அம்மாவை சந்தித்து பேசியிருக்கிறார். அப்பொழுது பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர் அல்ல என்று அம்மாவிடம் சொல்ல அம்மா புன்னகைத்திருக்கிறார்.

பி.ஜே.பி.க்கும், காங்கிரசுக்கும் பெரும்பான்மை வராத போதில் மூன்றாவது அணி பேச்சு அடிபடப்போவது உறுதி. அம்மா நாற்பதையே அடித்தாலும் பிரதமர் பதவி டூ மச் தான். இருந்தாலும் ஆசை யாரை விட்டது. சுப்ரமணிய சாமி பேச்சை நம்பி வாஜ்பாய் அரசைக் கவிழ்த்து கையில் பச்சைபையுடன் பிரதமர் பதவியை கிட்டே மோந்து பார்த்து வந்தவர்தானே.

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் 

நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான இடங்களை பிடித்திருப்பது ஆறுதல் தரும் விஷயம். இத்தனைக்கும் சிங்கள ராணுவம் வீடு வீடாக சென்று துப்பாக்கி வைத்து மிரட்டியும் இது நிகழ்ந்திருக்கிறது.

ஓரளவுக்கு ஈழத்தமிழருக்கு விடிவுகாலம் போல் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசித்த கவிதை 

அரசியல்

அரசியல் என்னும் போர்வாள்
அறியாமையை சாகடித்து,
அறங்களை அரியாசனத்தில்
- அமர்த்த வேண்டும்.


அரசியல் குளிர் தரும்
சாதனமாக இல்லாமல்,
தாகம் தணிக்கும் தண்­ணீராக
- இருக்க வேண்டும்.


அரசியல் சாக்கடை என்று
கூவி கொண்டு இருக்காமல்
அதில் உள்ளே சென்று சுத்தம்
- செய்ய வேண்டும்.


அரசியல் சண்டை போடும்
சாதகமாக இல்லாமல்
சமத்துவம் பாடும் வேதமாக
- இருக்க வேண்டும்.


அரசியலுடன் கைகோர்ப்போம்!
ஆனந்தத்தின் இருப்பிடமாக
தேசத்தை மாற்றுவோம்!-------------------------ஸ்ரீ ஹேமா



ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Saturday 21 September 2013

அடாவடி ஆத்தாவும் சினிமா நூற்றாண்டும்

இந்திய சினிமா தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகியதை வைத்து இந்திய சினிமா நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. தமிழக முதல்வர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

விழாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும், கர்நாடக முதல்வர் சித்த ராமையா, கேரளா முதல்வர் உம்மன்சாண்டியும் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பங்கேற்க கலைஞர்களுக்கு அம்மா ஆணையுடன் அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டதாக இணையங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  இதைப் பற்றி கலைஞரிடம் கேட்ட பொழுது "அவர்கள் யார் என்னை அழைக்க" என்று நெத்தியடி பதில் கொடுத்திருந்தார். இவர் மட்டும் செம்மொழி விழாவிற்கு எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாரா என்ன?

இந்த விழா செலவிற்காக முதலமைச்சர் பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்ததாக செய்திகள் வந்தன. யார் வீட்டு பணம், சத்தியமாக அம்மாவின் அறுபத்தாறு கோடியிலிருந்து இல்லை என்பது ஊரறிந்த உண்மை.

வழக்கம் போல் நடிகைகளின் தொடைகறியும், தொப்புள் சூப்பும் இந்த விழாவில் அளிக்கப்படும். இந்தக் கூத்தை ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர், நான்கு முதலமைச்சர்கள் தங்கள் கடமையை விட்டு விட்டு காணப்போகின்றனர்.

இந்த விழாவிற்கு செய்திகள் சேகரிக்க ஜெயா டி.வி.க்கு மட்டும்தான் அனுமதியாம்.(நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஜெயா டிவி உரிமை வாங்கியிருப்பது  அறிந்த விஷயம்) மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை நடத்துவோரிடம் இதுபற்றிக் கேட்டபொழுது முதலமைச்சர் நிதியுதவி செய்துள்ளார் அதனால்தான் ஜெயா டிவிக்கு மட்டுமே உரிமை என்று சொல்லியிருக்கிறார்கள். அடேய் அந்தப் பணம் மக்கள் பணம், அம்மா பணம் இல்லை.

மேலும் அணிலு, புயலு, கேப்டன் இவர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் வைத்து "தயவு செய்து அந்தப் பக்கம் தலைவைத்து படுக்காதீர்கள்" என்று விழா அமைப்பாளர்கள் தனியாக நோடீஸ் வைத்திருக்கிறார்கள். பாவம் அணிலு ஆத்தாவிடம்  இந்தப் பம்மு பம்மியதற்கு நல்ல மரியாதை. அதனால் என்ன அடுத்த தேர்தலில் அவர் மாற்று கட்சிக்கு "பெருச்சாளியாக" உழைப்பார்.

"புயல்" என்னை எப்படியாவது கூப்பிடுங்க வேணுமென்றால் அம்மாவை புகழ்ந்து ஒரு நகைச்சுவை நாடகம் போடுகிறேன் என்றுஅம்மாவுடன் தூதுவிட்டு பார்த்தார். ஆனால் ஆத்தா இன்னும் உக்கிரமாக இருப்பதாலும் மலை ஏறவே முடியாது என்று நெட்டு குத்தாக நிற்பதாலும் அவரின் வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்டது.

கேப்டனுக்கு இப்பொழுது நேரம் சரியில்லை, ஊரூராக கோர்ட் வாசல் படி ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறார்.

மறைந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா ஒரு தீர்க்க தரிசி, அவர் வழி தனி வழி, கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதீர்கள், நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை என்று உண்மையைக் கூறிக்கொண்டிருந்தார்.

இந்தக் கூத்தாடிகள் கூட்டமும் அதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஆளும்கட்சி தலைமையை எப்பொழுதும் அண்டிப்பிழைக்க வேண்டிய நிலை. யார் ஆட்சியில் வந்தாலும் பாசத்தலைவனுக்குப் பாராட்டு, பரதேசிக்கு பாராட்டு என்று ஏதாவது ஒரு விழா வைத்து சொம்படிப்பார்கள்.

இத்தனை நாட்கள் கூத்தாடிகளுக்கு தேதி கொடுக்காத ஆத்தா இப்பொழுது நூற்றாண்டு விழா சாக்கில் தேதி கொடுத்து வரவிற்கும் நாடாளு மன்றத்தேர்தலுக்கு கூத்தாடிகளின் ஆதரவை தேடிவிட்டார்.

ஹூம் நடத்துங்க, நடத்துங்க.





Follow kummachi on Twitter

Post Comment

Friday 20 September 2013

சிரிக்க சிந்திக்க

உலகத்தின் மிக நீளமான கழிப்பிடம் எது?

விடை: கடைசியில்

கழிவறையில் உதடுகள்

அந்த பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பள்ளிப் பெண்களின் போக்கு புரியவில்லை.

கழிவறை கண்ணாடியில் உதட்டுச்சாயம் பூசிய உதடுகள் படம் எல்லா இடத்திலும் இருக்கும், பள்ளியின் துப்புரவாளர் எத்துனை முறை துடைத்து வைத்தாலும் அடுத்த நாளிலும் இதே பிரச்சினை.

பள்ளியில் சில குறும்புக்காரப் பெண்கள் உதட்டுச் சாயத்தை பூசிக்கொண்டு கண்ணாடியில் முத்திரை பதித்துவிட்டு செல்வது வழக்கம்.

தலைமைஆசிரியர் வகுப்பு வகுப்பாக சொல்லியும் உபயோகமில்லை. துப்புரவாளறுக்கு இது தேவையில்லாத வேலை.

அன்று காலை ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவிகள் செய்யும் குறும்பால் துப்புரவாளர் எப்படி கண்ணாடியை சுத்தம் செய்கிறார் என்று காண்பிக்க செய்தார்.

துப்புரவாளர் "மாப்"பை கழிவறை தொட்டியில் நனைத்து கண்ணாடியை சுத்தம் செய்தார்.

இனி பெண்கள் கண்ணாடியை முத்தமிடுவதில்லை.

சித்தீ................

அவளின் அழகு அவனை அசத்தியது. எப்படியும் அவளை கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவளுக்கேற்ற அழகோ இல்லை அந்தஸ்தோ இல்லை.

இருந்தாலும் அவளை அணுகி அவளிடம் "என் அப்பாவிற்கு நூறு கோடி சொத்துள்ளது. அவர் எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் அபீட் ஆகிவிடுவார், பின்பு நூறு கோடியும் எனக்குத்தான், என்னை திருமணம் செய்துகொள்கிறாயா" என்று கேட்டான்.

அவள் " அப்படியா சரி உங்கள் முகவரியைக் கொடுங்கள் பிறகு சொல்கிறேன்" என்று முகவரியை வாங்கிக்கொண்டாள்.

இரண்டு வாரத்தில்  அவள் அவனுக்கு சித்தியாகிவிட்டாள்.

உன் தங்கையை நான் கட்டுறேன் என் தங்கையை நீ கட்டு

ராகுலும், ராஜீவும் கல்லூரியில் மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களை நோக்கி அந்த இரு மாணவிகளும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் கையில் ராக்கி இருந்தது, அதைக் கட்டத்தான் இருவரையும் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால்  அந்த பெண்களுக்குத்தான் இருவரும் ரூட் விட்டுக்கொண்டிருந்தனர். 

ராகுல் ராஜீவிடம் " கவலை வேண்டாம் மச்சான் என்தங்கையை நீ கட்டு உன் தங்கையை நான் கட்டுறேன்".


முதல் கேள்விக்கு விடை: இந்திய ரயில் இருப்புப்பாதை.



Follow kummachi on Twitter

Post Comment

Thursday 19 September 2013

அம்மா தண்ணி போடுது தலைவரே!!!

சொறியாலயத்தில் பொதுக்குழு கூட்டம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அவசரக்கூட்டம்.

பொறைமுருகன், தொளபதி, பணிவிழி, வேரு, வெண்முடி, டி. ஆர்.வாலு, புஷ்கு   மற்றும் தென் சென்னை மாவட்டம் குண்டழகன் மற்ற வட்ட மாவட்டம், சதுரம், செவ்வகம் என எல்லோரும் ஆஜர். வழக்கம் போல அஞ்சா குஞ்சன் கடுப்பில் வரவில்லை.

தலைவர் அஞ்சதுண்டு நடுநாயகமாக வீற்றிருக்கிறார். ஒலிவாங்கியைப் பிடித்து கூட்டத்தை தொடங்குகிறார். கழக கண்மணிகளே, என் உடன் பிறப்புகளே எதிர்கட்சி வரவிருக்கும் தேர்தலை ஒட்டி அம்மையார் வியூகங்களை அமைக்கிறார். நாம் பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்பை கண்டு அஞ்சமாட்டோம். மேலும் நம்மை அழிக்கப்பார்க்கிறார்கள். கழகத்தை யாராலும் அழிக்க முடியாது.

பொறை முருகன் தனக்கே உரிய பாடி லாங்குவேஜில் நக்கலாக சிரிக்கிறார், பின்னர் மைன்ட் வாய்சில் "ஆமாம் அந்த வேலையைத்தான் உங்க குடும்பத்துக்கு கொடுத்திட்டீங்களே மத்தவங்க எப்படி அழிக்க முடியும்".

தலைவர்: இனி நமது ஆட்டத்தை தொடங்க வேண்டிய நேரமிது. வழக்கம்போல கூட்டணி வைத்துக்கொள்வதை என்னிடம் விட்டு உங்கள் கருத்தை ஒவ்வொருவராக கூறுங்கள்.

வெண்முடி: தலைவரே அந்தம்மா தண்ணி போடுது.

தலைவர்: அதைதான் நான் அன்றே சொன்னேன் தம்பி "அம்மையாருக்கு இன்று சற்று அதிகமாகிவிட்டது போலும் என்று"

வெண்முடி: (மைன்ட் வாய்சில்) ஆமாம் அப்புறம் கைதுக்குப் பயந்து கோவம் என்று திருத்திக்கிட்டு இப்போ ஏன்னா பேசுறாரு பாரு. அது இல்லை தலைவரே "அம்மா தண்ணி"ய சொன்னேன். அப்புறமா மலிவு விலையில இட்லி போடுது, சாம்பார் சோறு போடுது, தயிர் சோறு போடுது, அனேகமா நாற்பதும் அடிச்சிடும் போல.

தலைவர்:துவண்டு விழாதே தோழா, அதற்குத்தான் நாம் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிக் கடமை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். மணிமேகலை இருக்கும் வரை அம்மையாரின் பிரதமர் கனவு நிறைவேறாது.

வட்டம், மாவட்டங்கள்:  ஆமாம் தலைவரே.

தலைவர்: கலங்காதே கண்மணிகளே, நமது தொளபதி இருக்கும் வரை நாற்பதும் நமக்குத்தான்.

குண்டழகன்: (மைன்ட் வாய்சில்) ஆமாம் அவர் சீட்டே கொளத்தூர்ல போன தபா "டப்பா டேன்ஸ் ஆடிக்கிச்சு. ஆமாம் தலைவரே தொளபதி இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நாற்பதும் நமதே.

தலைவர்: நாற்பதிலும் நாம் வெற்றிக்கனியை பறிக்கவேண்டுமேன்றால் வலுவான கூட்டணி தேவை.

வாலு: (மைன்ட் வாய்சில்) ஆமாம் இப்போ இருக்கிற நெலமையில எவனும் நம்ம சீண்ட மாட்டேங்கிறான். தலைவரே நீங்கள் ஆணையிடுங்கள் மணிமேகலை அம்மாவுடன் நான் பேசி கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறேன்.

தலைவர்: தம்பி வாலு கவலை வேண்டாம் மணிமேகலையை நான் பார்த்துக்கொள்கிறேன். இங்கிருக்கும் தமிழ் குடிதாங்கி, தோணி முதலியோரை நம் பக்கம் இழுக்கவேண்டும்.

வேரு: இல்லை தலைவரே அவர் வருவாரா தெரியவில்லை. வேட்டியும், புடவையும் மாறி மாறி தோய்த்து அவர் துவண்டு விட்டார். இந்த முறை ஏதாவது கோமணம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இல்லையென்றால் நிர்வாணமாக நிற்பேன் என்று சூளுரைக்கிறார்.

தலைவர்: தம்பி தோனியையும் கூப்பிட்டு பார்ப்போம்.

கூசா:அவர் எப்படி தலைவரே வருவாரு? அவரு இப்போ ஜார்கண்டில் மோட்டார் பைக் வச்சிக்கினு போலிஸிற்கு கொடச்சல் கொடுத்துகிட்டிருக்காறு.

தலைவர்: தம்பி கூசா நான் அந்த கேப்டனை சொல்லவில்லை.

கூசா: ஓ அவரா? அவரே இப்போ நாக்கை துருத்த முடியாமல் அவமதிப்பு வழக்கில் ஊர் ஊராக கோர்டில் ஆஜராகி நாக்கு வெளியே தள்ளி கெடக்குறாரு.

தலைவர்: தம்பி பொறுத்திரு பொங்கி எழாதே.அவரை எப்படி வளைப்பது என்று பழந்தின்று கொட்டை போட்ட எனக்குத் தெரியும்.

பொறை முருகன்: மைன்ட் வாய்சில் ஆமாம் இவரு கேப்டன் அங்கே இங்கே டாஸ்மாக் என்று போக சொல்ல எல்லா இடத்திலேயும் கும்பிடு போட்டு பார்க்குறாரு, அந்தாளு மப்பும் மந்தாரமுமா வெறைப்பா போறாரு. 

தலைவர் உதவியாளர் பன்முகனாதனை திரும்பி பார்த்து துண்டு சீட்டு எதிர்பார்க்கிறார்.

பன்முகநாதன் சட்டைப்பையில் தேடி கிடைக்காமல் முழிக்கிறார்.

தலைவர்: யோவ் சீட்ட எங்கே வச்ச?  கலாசலா இல்லை சரோஜா சாமான் நிக்காலோவா?

பன்முகநாதன்: (மைன்ட் வாய்சில்) ஆமாம் இவரு வைக்கிற இடத்துலதான் வச்சேன் பேரு யாருக்கு தெரியும்.

தலைவர் முடிவுரையை ஆரம்பிக்கிறார்.

தலைவர்: தம்பி பொறுத்திருங்கள். எல்லோரும் நம் பக்கம் இருக்கிறார்கள். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது. நாம் மதவாத முகமூடியை கழற்றி எறிந்துவிட்டு காவி ஜோதியில் கலந்துவிடுவோம். கண்மணிகளே கலங்காதீர்கள். இம்முறை நாம் களப்பணி களைப்படையாமல் ஆற்றவேண்டும். தொங்கியிருக்கும் தொண்டர்களை தூக்கி நிறுத்த வேண்டும். மற்றும் தேர்தல் நிதி திரட்டும் வேலையை இன்றே துவங்க வேண்டும். நிதி நிறைந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர்கள் கட்டுக்கள் தாரீர்.அடித்த கொள்ளைகளே கதி என்றிருக்கும் என் குடும்பம் செழித்திட இன்றே புறப்படுவீர். நம் மக்கள் நலம் காண  நாலு காலால் உழைப்போம். கண்மணிகளே எல்லோரும் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து அண்ணா பெரியார் சொன்ன வழியிலே  கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று முழங்கி, களம் பல கண்டு, அஞ்சி நடுங்காமல் கையை காலை பிடித்தாவது கூட்டணி அமைப்பேன்.

நாளை நமதே, நாற்பதும் நமதே. அண்ணா நாமம் வாழ்க.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 18 September 2013

கலக்கல் காக்டெயில்- 122

இந்தியா ஒளிரும்

இந்திய ஒளிரப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பா. ஜ. க தனது பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்டிவிட்டது. காங்கிரசோ நாங்கள் முதலில் அடையாளம் காட்டமாட்டோம், தேர்தல் முடிவிற்கு பின் எங்களது எம்.பி.க்கள் தேர்வு செய்வார்கள் என்று "இந்தியாவின் எதிர்கால நட்சத்திரத்தை" பொம்மையாக உட்காரவைக்க கட்டியம் கூறிவிட்டார்கள்.

பா.ஜ.க.விற்கு ஆதரவு தேடி அம்மாவிடம் போன சோவிடம் "இன்னாது ஆதரவா? நானா?போயா பொழைப்பைப்பாரு, நானே பிரதமர் வேட்பாளார், என்னாண்டையே ஆதரவா? என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

இருந்தாலும் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள், பின்னர் தொங்கு பாராளுமன்றம், ஆடும் பாராளுமன்றம் என்ற பெயரில் குதிரை பேரம், கழுதை பேரம் எல்லாம் முடிந்து, அந்த டம்மி நாற்காலியில் யார் உட்காருவார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரிந்துவிடும்.

இந்தியா ஒளிர்வது எப்படியும் உறுதி.


தண்ணி கொடுத்த தாயே? ஊருகாயும் கொடும்மா!!

தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா தண்ணிவந்துவிட்டது.ஒரு லிட்டர் தண்ணீர் பத்து ரூபாயாம். மக்களுக்கு இலவசமாக தரவேண்டிய தண்ணீருக்கு விலை. எத்துணையோ விலையில்லா பண்டங்களை மக்களுக்கு வழங்கிய அரசு தண்ணீருக்கு மற்றும் விலை வைத்திருக்கிறது. அதில் உள்ள வியாபார நோக்கமும், தேர்தல் உத்தியும் அப்பட்டமாகத் தெரிகிறது.

அம்மா தண்ணி திட்டத்தையும் போற்றிக்கொண்டு ஒரு கூட்டம் உலவிக்கொண்டிருக்கிறது. கட்டிங் கொடுத்தாச்சு, மிக்சிங்கிற்கு தண்ணீரும் கொடுத்தாகிவிட்டது. இனி சைடு  டிஷிற்கு கோழி வருவலும், ஊருகாயும்தான் பாக்கி, அதையும் கொடுத்தால் தமிழ் குடிமகன்கள் ஈரல் கெடும் வரை அம்மாவை மறக்கமாட்டார்கள்.

கூத்தாடிகள் ரெண்டுபட்டால்...........

தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிந்த கையேடு தோற்றவர் வழக்கு தொடர்ந்து ஜெயித்தவரை செயல்படமுடியாதபடி தடை வாங்கிவிட்டார்.

இனி அடுத்த நடிகர் சங்க விவகாரம் அரங்கேற இருக்கிறது. இங்கு எத்தனை பேருக்கு மண்டை உடையுமோ.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். ஆனால் கூத்தாடிகள் ரெண்டு பட்டு நம்மை மொக்கை படங்களிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று நம்புவோமாக.

ரசித்த கவிதை

எல்லைகளற்றது

அந்திவானம்
அத்தனை அழகில்லை
இதுவரை
வரையறை வைத்து
வரைந்திட்ட வாழ்வில்
வர்ணம் கொண்டு
புதுவர்ணம் கொடுத்தாய்
உயிர்கிளியின் கூண்டுகள் தன்னை
வான்நோக்கி பறந்திட
திறந்திட்டாய்
சிறகசைப்பின் வெகுதூரக்கவனிப்பில்
வந்துசேர கிடைத்திட்ட இடமதில்
சலசலக்கிற ஆறும்
சந்தமாய் பேசும் காடும்
மெளனமாய் உனை என்னிடம் சேர்க்க
அடர்ந்திருக்கும் இவ்வானில்
பார்க்க கிடைக்கும்
முழு நிலவும்
மடிகொடுத்து
உனை நிறைக்க
நீ அருகிருக்கும்
அந்திவானம்
அத்தனை அழகில்லை
இதுவரை.--------------------------------ரேவா

ஜொள்ளு




 

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 September 2013

ஹன்சிகா ஸ்பீட் ப்ரேக்கரா? இலியானா ஸ்பீட் ப்ரேக்கரா?

அம்மா கீச்சு, ஐயா கீச்சு, அண்ணா கீச்சு, அக்கா கீச்சு, ஐயோ கீச்சு

ரசித்த கீச்சுகள் 

காங்கிரஸ் அரசு இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல் தருதாம், நமக்கு அதா முக்கியம் நாம் மோடியை எத்ரிப்போம் மதச்சார்பற்ற அரசை அமைப்போம்-------ஜூனியர் ஒல்ட்மாங்க்

கூகிள் தேடலில் ஒபாமாவையே முறியடிச்சுட்டாப்ல மோடின்னு பெருமை  பீத்தறான் ஒருத்தன், அடேய் நமீதாவைத் தெரியுமாடா உனக்கு------ராஜூ என்.



வாழ்கை ஒரு நிக்க வெச்ச வட்டமடா அதுல இந்த பக்கம் மேல ஏறுனா அந்த பக்கம் கீழ உழுவ அந்த பக்கமும் அதே மாறித்தான் #சோ படுக்க போட்டுட்டு தூங்குங்க---------அசால்ட்டு ஆறுமுகம்




ஸ்பீடு பிரேக்கர இலியானா மாதிரி போட சொன்னா.. ஹன்சிகா மாதிரி போட்டு வெச்சுருக்கானோ.. # இருட்ல வுழபாத்தேன் :-//--------தல தளபதி



'கண்ணுக்கு கீழ வேர்க்குது பாரு 'என அழுகையை அசால்ட் ஆக்கிச்செல்லும் நட்பின் கலாய்ப்புகள் வரம்..---------பாலா



மோடியை சப்போர்ட் பண்றது நாட்டுபற்றுத்தனம் மாதிரியும், எதிர்ப்பது அறிவுஜீவித்தனம் மாதிரியுமான ஒரு மாயை உருவாகி வருவதை உணர முடிகிறது!----------வேடன்



புரட்டாசி ஆரம்பிச்சுடுச்சு..இனி வீட்ல ஒரு ஆம்லேட் கிடைக்காது # பெருமாளே..இப்ப உனக்கு சந்தோஷமா?----------கட்டதொர 


ஆஃபீஸில் ஒயிட்போர்ட் மார்க்கர் திறக்கும்போது, டாஸ்மாக், சைட் டிஷ் ஞாபகம் வந்தால் நீயும் என் நண்பனே...!-----------தமிழ் பறவை 


கஷ்டத்தை சொன்னால் எங்க "நான் அப்போவே சொன்னேன் கேட்டியா" என்று சொல்லுவார்களோ என பயந்து மறைக்கப்பட்டவை பல...----ஷிவாங்கி



எதிரி எந்த காயை நகர்த்துகிறார் என்பதை பார்த்து நாம்காய் நகர்த்துவோம்-வைகோ#அவங்க கத்திரிக்காய்ண்ணே,நாம முருங்கக்காய நவுத்துவோம்--------தோட்டா



ஏழைகள் மிகப் பெரிய கனவு காண வேண்டும்: ராகுல் காந்தி # அண்ணன் வித்தியாசமா குட்னைட் சொல்றாரு...எல்லாரையும் தூங்க சொல்றாரு----இளந்தென்றல்



விஜய் அண்ணாவ வேணாம்னு சொன்ன ஒரே ஆள் ராகுல் காந்தி தான். எவ்வளவு புலனடக்கம் இருந்தா அப்பிடி சொல்லிருப்பார்! கிரேட்!-------ராஜன் லீக்ஸ்

Follow kummachi on Twitter

Post Comment

அத்வானி பயோ(பரிதாப)டேட்டா





 இயற்பெயர்
 லால் கிருஷ்ண அத்வானி 
வயது பிரதமராகும் வயதுதான்
தற்போதைய பதவி பி.ஜே.பி.யின் பீ(மூ)த்த தல
வகித்த பதவிகள் துணை பிரதமர், உள்துறை மந்திரி, தகவல் தொடர்பு துறை மந்திரி
 மறந்த பதவி
 ஆர்.எஸ்.எஸின் காரியதரிசி
 சமீபத்திய சாதனை
 கட்சியில் குழப்பம் விளைவிப்பது
 நிரந்தர சாதனை 
 ரத  யாத்திரை, கரசேவை
ஆசை
 ஆறு மாதமாவது பிரதமராக
 நிராசை
 பிரதமர் பதவி
 சமீபத்திய எரிச்சல்
 ராஜ்நாத்சிங்க்,ஆர்.எஸ்.எஸ் தல 
 நிரந்தர எரிச்சல் 
 கட்சியின் உபரி தலைகள்
பிடித்த பல்லவி
"தலைவா தலைவா"
பிடிக்காத பல்லவி
"மோடி மோடி மகுடி மகுடி"
அம்மாவிடம் வாங்கிய பட்டம்
செலெக்டிவ் அம்னீசியா
நண்பர்கள்
யாரும் இல்லை
எதிரிகள்
கட்சியில் உள்ள எல்லோரும்
தேவை
அரசியலில் ஓய்வு
எழுதி கிழித்தது
"என் நாடு என் வாழ்க்கை"


Follow kummachi on Twitter

Post Comment

Monday 16 September 2013

அம்மா தண்ணி பத்து ரூபா...............

அம்மா தண்ணி இன்று முதல் முன்னூற்றி நான்கு மையங்களில் விற்பனைக்கு வருகிறது. ஒரு லிட்டர் பத்து ரூபாயாம். குடிமக்களுக்கு விலையில்லாமல்  கிடைக்க வேண்டியது குறைந்த விலையிலாம். தேவையில்லாத மடிக்கணினி இலவசமாம் மன்னிக்கவும் விலையில்லாததாம்.  என்ன அரசடா இது.

அம்மா உணவகம், அம்மா தண்ணி என்று லோக்சபா தேர்தலை வைத்து இன்னும் என்ன என்னவரவிருக்கின்றனவோ.

தமிழனுக்கு கொண்டாட்டம் தான்.

அம்மா உணவகத்தில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று ஏற்கனவே களைகட்டியாகிவிட்டது. அடுத்து சப்பாத்தி, பிரியாணியும் போடஇருக்கிறார்கள்.

பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதி வண்டி. மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி.விலையில்லா சீருடை, புத்தகம் இத்தியாதி......

மேலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று ஒரு ரவுண்டு முடிந்து விட்டது.

இப்படியே போனால் அம்மா பால், அம்மா மோர், அம்மா கட்டிங் என்று நிறைய எதிர்பார்க்கலாம்.

ஒரு வழியாக தமிழனின் தாகமும், சாப்பாடு பிரச்சினையும்  தீர்த்தாகிவிட்டது. இதையெல்லாம் சாப்பிட்டால் செரிமானம் ஆக ஊர் சுற்றவேண்டும். அதற்கு விலையில்லா இரு சக்கர வாகனம் வேண்டும். அடுத்து அதன் பின்னே ஏற்றி செல்ல விலையில்லா பிகர்கள் வேண்டும்.

மாலையில் உற்சாகத்திற்கு "டாஸ்மாக்" சரக்கு வேண்டும். அதுவும் முதல் இரண்டு ரவுண்டு விலையில்லாமலும், மேலும் இரண்டு ரவுண்டு வேண்டுமென்றால் மலிவு விலை கட்டிங்கும் கொடுத்தால் புண்ணியமாய் போகும்.

இன்னும் விலையில்லா சரக்குகள் நிறைய இருக்கின்றன. விலையில்லா கட்டில், மெத்தை, குளிர்சாதனம், ஆணுறை என்று வர வாய்ப்புகள் உண்டு.

இப்படியே எல்லாம் விலையில்லாமல் கிடைத்தால் யாரும் ஆணி பிடுங்க வேண்டிய அவசியமே இருக்காது.

நாமும் எல்லா விலையில்லா சரக்குகளையும் கொண்டு "விலையில்லாமல் போகலாம்".

வாழ்க விலையில்லா  தமிழகம், வளர்க இந்திய விலையில்லாத வல்லரசு.




Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 3 September 2013

கலக்கல் காக்டெயில் -121

மணிமேகலை 

அகில உலக மணிமேகலை என்று கலைஞரால் புகழப்படுகிற இத்தாலி அம்மா மூளையில் (??) உருவானதாக சொல்லப்படும் உணவு பாதுகாப்பு மசோதா ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவின் உள்நோக்கம் மிகவும் நல்லதாக தோன்றினாலும் நடைமுறையில் உள்ள சிக்கல்களும், மாநிலத்திற்கு வழங்கப்படும் தானியங்களிலும், மானியங்களிலும் எந்தளவு தாக்கம் இருக்குமென்பது போக போகத்தான் தெரியும்.

அம்மாவும், கலைஞரும் இதை வைத்து அடுத்த அரசியலை தொடங்கிவிட்டார்கள். இருவரும் விடும் அறிக்கைகள் ஒருவரை ஒருவர் தாக்குவதற்குத்தானே தவிர வேறொன்றும் உபயோகம் இருப்பதாக தெரியவில்லை.

ஒருவேளை "அம்மா உணவு பாதுகாப்பு மசோதா" என்று பெயர் சூட்டியிருந்தால் அம்மா ஆதரித்திருப்பார்களோ?. பா.ஜ.க. இந்த மசோதாவை ஆதரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கு

அறுபத்தியாறு கோடி ஆட்டையைப் போட்ட வழக்கில் நீதிபதிகளும், அரசு வக்கீல்களும் மாற்றப்பட்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பது சரியான அரசியல் கூத்து. கர்நாடகாவில் ஆட்சி மாறியவுடன் ஏற்படும் மாற்றங்கள் நீதித்துறையையே கேவலப்படுத்துவதாக உள்ளது.

எது எப்படி என்றாலும் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

எப்படி இருந்த நித்தி இப்படி ஆயிட்டார்?

தந்தி டிவியில் "ரஞ்சி புகழ் நித்தி" லக்ஷ்மி, குஷ்பூ, நிர்மலா பெரியசாமி ஸ்டைலில் பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு வந்து விட்டார். எல்லா வழக்குகளும் "அடுப்பு தொடுப்பு" வழக்குகளாகவே உள்ளன.

இரண்டு பெண்மணிகள் குழாயடி சண்டையை "தெய்வமே" என்றுவேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

கதைவை திற காற்று வரட்டும் என்று முழங்கியவர் காதை திறந்து சென்னை தமிழ் "நல்ல அஜால் குஜால்" வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பஞ்சாயத்து தீர்ப்பு வரும் வரை பார்க்கும் பொறுமை நம்மிடம் இல்லை.

ரசித்த கவிதை 

விருப்பமின்மை 
கப்பல் செய்து
தருகிறீர்கள்
கத்திக் கப்பலென.
நெருப்பு வளையத்தில் குதிக்கும்
சித்திரக்காரப் பையனை
குழந்தைகளோடு அமர்ந்து
பார்க்கிறீர்கள்.
சமர்த்தாய் இருந்தால்
அதுவும் இதுவும் தருவதாக
பேரம் பேசுகிறீர்கள்.
பின்னாளில் வன்முறையாளன்.,
மனித வெடிகுண்டு.,
கையூட்டு வாங்கினான் என
கம்பி் வண்டிகளில்
முகம் மூடிச் செல்லும்போது
கண்ணீர் வடிக்கிறீர்கள்.
வெட்ட முடியாத அளவு
வளர்த்தது நீங்கள்தானென
ஒருபோதும் உணரவிரும்பாமல்.
---------------------------------------------------தேனம்மை லக்ஷ்மன்

ரசித்த கீச்சுகள் 

மதகுருமார்கள் பெண்களிடம் தள்ளியிருப்பதை கடைபிடிக்க வேண்டும்-ராம்தேவ்#ஆனா பொம்பள வேசம் போட்டு எஸ்கேப் ஆகலாம்!!--------தமிழ் கிறுக்கன் 

போண்டாவுக்குள் முட்டை போனதைவிட, சோடாவுக்குள் கோலி குண்டு போனதை விட ஆச்சரியமளிப்பது, இவ்ளோ டைட்டான சுடிக்குள் பொண்ணுங்க போனதுதான்-----------ஆல்தோட்ட பூபதி 

ஜொள்ளு 





Follow kummachi on Twitter

Post Comment