Monday 25 July 2016

மனிதன் 2.0

இன்று சாப்பிடக்கூட நேரம் கிடைக்க வில்லை. ஆணி புடுங்குவதில் அவ்வளவு நேரம் போய்க் கொண்டிருக்கிறது.........இத்துணைக்கும் தேவையில்லாத ஆணியைத்தான் புடுங்கிக்கொண்டிருக்கிறோம்.......அது சரி என்னிக்கு தேவையுள்ள ஆணியை புடுங்கி இருக்கிறோம்..........அத விடுங்க...பசி சிறுகுடலை பெருங்குடல் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்
ஒரு நாளும் என் நோவு அறியாய்- இடும்பை
கூர் என் வயிரே உன்னோடு வாழ்தல் அரிது..
என்று புலம்பிய அவ்வையாருக்கு ஒரு லெவல் மேலே போய்
என்ன வாழக்கையோ சேர்ந்தார்ப்போல் இரண்டு வேளை பட்டினி இருக்க முடியவில்லை இரண்டு வேளைக்கு சேர்த்து சாப்பிடவும் முடியவில்லை என்று  சுருளிராஜன் போல் புலம்பிக்கொண்டு இருக்கிறேன்.

நம்மை படைத்த பிரம்மா ஏன் வயிற்றில் ஒரு ஜிப் போல் வைத்திருக்கக்கூடாது....பசி என்றால் ரண்டு பர்கரை ஜிப்பை திறந்து உள்ளே போட்டு அரை பாட்டில் கோக்கை உள்ளே தள்ளினால் இந்தமாதிரி வேலை தலையைத்தின்னும்வே நாட்களில் ஜோலி  முடிந்தது. எல்லா சிஸ்டத்திலும் upgarde உண்டு ஏன் சங்கர் கூட ரஜினியை வைத்து அடுத்த வெர்ஷன் எந்திரன் 2 ஓ எடுத்துக்கொண்டிருக்கிறார். நம்மை படைக்கும் பிரம்மா ஏன் அவரது சிஸ்டத்தை upgrade செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன், பசி மிஞ்சிப்போய் விட்டது. சரி வேலை அலுப்பில் இரண்டு சோமபானமும் சமோசாவும் அடித்து மட்டையாகிவிட்டது.

திடீரென்று கைபேசி அழைக்கவே ;எடுத்தால் இது ஏதோ தெரியாத நம்பர். வழக்கமான பத்து எண்களுக்கு பதில் முப்பது நம்பர்கள் இருந்தன........

ஹலோ..........நான் பிரம்மா பேசறேன் என்று ஒரு குரலுக்கு பதில் மூன்று குரல்கள் கேட்டன........ஏனோ "வா வா மஞ்சள் மலரே" என்று வெவ்வேறு அலை வரிசையில்.....கேட்டது.

நான் கும்மாச்சி கும்மாச்சி கும்மாச்சி பேசறேன் என்றேன்.....

டேய் லூசு எனக்கு தான் மூணு வாய் இருக்கு உனக்கு ஒரு வாய்தானே ஒரு தடவை சொல்லேன் என்றது எதிர்முனை............

சார் நீங்க...........என்று தடுமாறு முன்...........நான்தாண்டா ப்ரொடக்ஷன் மேனேஜர் பிரம்மா என்றது எதிர்முனை.

உனக்கு என்ன என் ப்ரோடக்ஷனில் சந்தேகம்..............

இவருக்கு எப்படி தெரியும்? என்று யோசித்துக்கொண்டே நெறைய இருக்கு ........என்றேன்

சரி நீ நேர்ல வா உனக்கு புஷ்பக விமானம் ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார் பிரம்மா

உடனே அவரனுப்பித்த விமானத்தில் ஏறி பரலோகம் சென்று விட்டேன்...

விமானத்திலிருந்து இறங்கியவுடம் பிரம்மாவே அவரது வொர்க் ஷாப்பிற்கு அழைத்து சென்றார்..........

என்ன சந்தேகம் கேள் என்றார்..

சார் ஏன் இன்னும் ஒரே மாடலையே இன்னும் செய்து கொண்டிருக்கீர்கள் ஏதாவது அப்க்ரேட் செய்தால் என்ன என்றேன்.

நம் நாட்டில் ஹிந்துஸ்தான் மோட்டார் கூட ஒரு மாறுதலையும் செய்யாமல் மார்க் 1,2,3,4 ன்னு அம்பாசிடரை  அடிச்சு விடுகிறது என்றேன்.

சும்மா பொத்திண்டு இரு........ஏற்கனவே ஒரு தடவை நான் தப்பு செய்து ஜி. எம் சிவா என்னை வேலையை விட்டு எடுக்க இருந்தார்.....ஏதோ டி'ஜி. எம் விஷ்ணு சிபாரிசில் ஒரு இன்க்ரிமென்ட் கட்டோடு போய் விட்டது.........

ஏன் என்ன ஆச்சு என்றேன்..

இப்படிதான் ஒரு முறை கடைசியாக எல்லா பிராடக்டும் கன்வேயரில் வரும் பொழுது தலையில் சிப் வைக்க வேண்டியது என் வேலை........முதல் ப்ராடக்ட் வரும் பொழுது எனக்கு அவசரம்...பாத் ரூம் போகவேண்டி இருந்ததால் டிஸ்பாட்சில் இருக்கும் கணேசனை கொஞ்சம் பார்த்துக்கோடா என்று சொல்லி விட்டு சென்றுவிட்டேன்.......பூலோகத்தில் தான் உங்களுக்கு தெரியுமே நான் அல்பசித்தைக்கு போனால் எவ்வளவு நேரம் ஆகுமென்று......

இந்த கணேசன் மண்டையை மண்டையை ஆட்டிண்டு ப்ராடக்டில் சிப்பை வைக்க மறந்து விட்டான்.....

நான் வந்து பார்த்ததும் உங்கள் பாஷையில் சொல்லப்போனால் மெர்சலாயிட்டேன்................என்னடா கணேசா இப்படி பண்ணிட்டே........உங்கப்பன் சிவா என்ன தாளிச்சிடுவாறேடா.........என்றதற்கு.......இப்போ என்ன சித்தப்பு செய்யறது.........என்று முழிக்கிறான்.......சரிடா அதோ கடைசியா வரான் பாரு அவன் மண்டையை திறந்து எல்லா சிப்பையும் போட்டுவிடு என்றேன்.............

சரி இப்போ என்ன செய்யறதுன்னு கணேசன் மண்டையை மண்டையை ஆட்டுறான்.

சரி லோடிங்கில் யாரு என்றேன்........நம்ம சுப்புனிதான் என்றான்..

சரி சுப்புனிகிட்ட சொல்லி சிப்பு இல்லாத எல்லா மண்டையிலும் கலர் துணிய கட்டிவிடு என்று சொல்லி கடைசி ஆள வுட்டுடு என்றேனோ நான் பொழைச்சேன். நல்லகாலம் அந்த ஆள் பூலோகத்தில் போயிட்டு அந்த கலர் துணி கட்டின ஆளுக்கெல்லாம் தலைவர் ஆயிட்டார்.

சரி பிரம்மா சார் இப்போ உங்க கஷ்டம் புரியுது..........இப்போ என் பிரச்சினைக்கு வாங்க........

உங்க டிப்பர்ட்மேன்டுல R&D கிடையாதா? என்றேன்.

யார் சொல்லித்து இருக்கே என்றார்.

அப்போ என் சார் இந்த மனுஷன ஒரே மாடல பண்ணி இத்தனை யுகமா, க்ரித யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் ஏன் இப்போ கலியுகம் வரைக்கும் ஒரே மாடலை செஞ்சிண்டு இருக்கீங்க.....அந்த மாடலில் கொஞ்சம் அப்க்ரேட் செய்யறது........உதாரணத்திற்கு........நாலு கை வைக்கிறது.....கையில குடைச்சல் வலின்னா கையை கைட்டி ஹேங்கருல மாட்டிட்டு வேறே கைய மாட்டிண்டு போயிண்டே இருக்கலாம் இல்லையா? அப்புறம் இப்பல்லாம் மின்ன மாதிரி இல்லை யார் வீட்டுக்கு போனாலும் முதலில் வைஃபகனெக்ஷன் கொடுத்துட்டு அடுத்தது பீரா ஹாட்டா என்றுதான் கேட்கிறார்கள். அந்த லிவர ஒரு ரெண்டு மூணு வச்சு அப்க்ரேட் செய்யறது......

டேய் நீ மானிடா உன்ன இங்க  வரவெச்சேன் பாரு என்ன பாத ரக்ஷையால அடிச்சிக்கனும்............

ஐயோ சாரி பிரம்மா சார் புஷ்பக விமானத்துல ஏறும் பொழுது உங்க செக்யூரிட்டி என் பாத ரக்ஷைகளை கழட்டி எடுத்து எரிஞ்சிட்டானுங்க. மன்னிச்சிக்குங்க.........

என்ன நக்கலா மானிடா.......வா உன்னை டி.ஜி. எம் கிட்டேயும் ஜி.எம் கிட்டேயும் கூட்டிப்போகிறேன்......அதுக்கு முன்னால அவா செகரிட்டறி லக்ஷ்மி, பார்வதியை கூப்பிட்டு சொல்லனும்.........

சரி சரி வா இரண்டு பேரும் கான்பாரன்ஸ் ஹாலில் தான் இருக்கிறார்கள்.....

போற வழியில் R &D இருக்குன்னு சொன்னீங்களே அவங்க ரிசர்ச் ஒன்றும் பண்றதில்லையா என்றேன். அதற்கு அவர் டேய்........அது  ரிசர்ச் அண்ட் டெவெலப்மென்ட் இல்லே ரிசீவ் அண்ட் டெஸ்பாச்  என்றார்.....

கிழிஞ்சிது போங்க என்று பேசிக் கொண்டே.........கான்ஃபரன்ஸ் ரூம் வந்துவிட்டோம்.

ஹாலில் உள்ளே நுழைந்தவுடன்.........

குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வரா என்று உள்ளே நுழைந்தேன்.....................சரி சரி நிறுத்து........அந்த மாண்புமிகு...புரட்சி.. கூட்ட ஆளா நீ விஷயம் என்ன அதை சொல்லு......என்று இருவரும் கோரஸாக கூறினார்கள்........

சிவா சார் விஷ்ணு சார் பிரம்மா கூட பேசிண்டு இருந்தேன்.........ஏன் உங்க ப்ரோடக்ஷனில் அப்க்ரேட் செய்யக்கூடாது...............ஹார்ட்வாரிலோ இல்லை சாப்ட் வேரில் அப்க்ரேட் செய்யறது.........உதாரணத்திற்கு எங்களது பெண்களிடம் வாயை நீளமாக வைத்திருக்கிறீர்கள்.........அதை குறைக்க வேண்டியது தானே.

உடனே ஜி.எம்.........சரி குறைக்கிறேன்.............கையை நீளமாக வைக்கிறேன் ஓ.கெ வா என்றார்.

அய்யோ வேணாம் சார் ஏற்கனவே நான் விழுப்புண்களோட தான்  இங்கே வந்திருக்கேன்........என்றேன்............

இல்லை ஜி. எம் சார் இந்த ஹார்ட்டு, லிவர் இதெல்லாம் கொஞ்சம் மாற்றியமைத்து இரண்டு செட் வைத்தால் என்ன?  மேலும் சாப்ட்வேரிலும் இத வரைக்கும் வேறே வெர்ஷன் வந்ததே இல்லை........

அதற்குள் விஷ்ணு குறுக்கிட்டு "டேய்......மானிடா நீ அதிகப் பிரசங்கித்தனமாக பேசுகிறாய்.........என்ன தைர்யம் இருந்தால் சிவா சாருக்கே அறிவுரை கூறுவாய்....அவருக்கு கோவம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா.......அசையும் பொருள் நிற்கும்.........நிற்கும் பொருள் அசையும்".........என்று ஏ.பி.என் சார் வசனத்தை பேசி அவரை உசுப்பிவிட்டார்.........

அதற்குள் ஜி.எம் கண்கள் சிவக்க "எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியும்.....எல்லாம் எமக்குத் தெரியும்"...........மறுபடியும் திருவிளையாடல் வசனம் பேசி  மண்டையில் பல்பு எரிய முறைத்தார்..........மானிடா நீங்கள் தயாரிக்கும் பொருட்களில் ஹார்டுவேர், சாஃப்ட் வேர் வேறென்ன அண்டேர்வேரில் கூட வேறு வெர்ஷன் வைத்துக்கொள்ளு யார் வேண்டாம் என்றது...........இங்கே வந்து லந்து பண்ணிக்கொண்டு எங்களை மெர்சல் ஆக்குகிறாய்.......முதலில் யார் இவனை உள்ளே விட்டது.....எங்கே அந்த செக்யூரிட்டி காளையன்...........வேண்டாம் முதலில் அந்த தர்மராஜுக்கு போன் போட்டு இவனை தூக்கிப்போக சொல் என்று கர்ஜித்தார்........

இல்ல சார்.........இந்த புஷ்பக......சரி வேண்டாம் பிரம்மா சாருக்கு இந்த வருஷமும் இன்க்ரிமெண்டு நம்மால் கெடக்கூடாது.........என்று நிறுத்திக்கொண்டேன்.

தர்மராஜ் அதற்குள் அங்கு வந்து "பேர கேட்டாலே சும்மா அதிருதில்லை" என்று உள்ளே நுழைந்தவுடன்.............துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓட ஆரம்பித்தேன்...........அதற்குள் எதிரே பிரம்மாவின் செக்ரட்டரி சரசா  வர "சரசா மேடம் வழிவிடுங்க" என்று கத்திக்கொண்டே ஓடினேன்........உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துவிட்டது,.......

யோவ் எழுந்திருயா............தூக்கத்தில் என் பெயரைத் தவிர எல்லா பொம்பள பேரையும் கூப்பிடு யார்யா அவ சரசா..............என்று பூரிக்கட்டை சகிதம் தங்க்ஸ்................சுப்ரபாதம் பாடினாள்.


















Follow kummachi on Twitter

Post Comment

Saturday 23 July 2016

கபாலியை யாருக்கும் பிடிக்காது

கபாலியை பற்றி உங்களுக்கு தெரியுமுன் சபேச அய்யரையும் அம்பாவையையும் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்......

மேற்கு மாம்பலத்தில் அயோத்யா மண்டபம் என்று ஒரு லேன்ட் மார்க். 49 தியாகராய நகர் போரூர் பேருந்தில் தி. நகர் பேருந்து நிலையத்தில் ஏறி இருபது பைசா கொடுத்து டிக்கட் எடுத்தால் அனிதா பார்மசி வாசலில் இறக்கி விடுவார்கள். அங்கே இருந்து மேற்கே பார்த்தால் அயோத்யா மண்டபம், அதன் வாசலில் இதயக்கனி போஸ்டரில் ராதா சலூஜா மேல் தர்பை சமித்து இத்யாதி வஸ்துக்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார் சபேச ஐயர். ஆள் கச்சையாக குடுமி வைத்துக்கொண்டு கடைக்கு வருபவர்களை நக்கலடித்து வியாபார உத்திகளை பற்றி கவலைபடாமல் "என்ன ஒய் தண்டபாணி பொண்ணு ஒக்காந்துட்டாளா" என்று கப்பிதனமாக கேள்வி கேட்டு அவரே சிரித்துக்கொள்வார்.

அவரோட சீமந்த புத்தரி .........சீமந்த புத்ரி என்ன ஒரே புத்ரிதான் அம்பா. அம்பாதான் எங்களது ஏரியா பாலைவன சோலை. எப்பொழுதும் தாவணி அணிந்து கொண்டு ... வாக வசந்தமாளிகை வாணிஸ்ரீ மாதிரி தெருவில் திரிந்துகொண்டு இருக்கும். மேற்படி விவரம் புரியவேண்டுமெனில் வாசகர்கள் வசந்த மாளிகை திரைப்படத்தை ஒரு முறை பார்ப்பது மிகவும் நல்லது.

நிற்க இந்தக் கதை வசந்த மாளிகை வாணிஸ்ரீ பற்றி என்று நினைத்து மேலே படிப்பவர்கள் கதையிலிருந்து விலகுவது உச்சிதம்.

அன்று வழக்கம்போல் எதிர்த்த வீட்டு சுவற்றில் கரியில் கோடு போட்டு கிரிக்கட் விளையாடிக் கொண்டு இருந்தோம். திடீரென்று "திருடன் பிடிங்க  பிடிங்க" என்று எங்கள் வீட்டு நாலு வீடு தள்ளியிருக்கும் ராஜி ஆண்ட்டி கத்திக்கொண்டு ஓடினார்கள். நாங்கள் எங்களது விளையாட்டை துறந்து அவனை பிடிக்கும் முன்பு அவன் ஓடி சரேலென்று இடது பக்க சந்தில் திரும்பி ஓடி மறைந்து விட்டான்.

விஷயம் இதுதான் ராஜி ஆண்ட்டி அலுவலகத்தில் திரும்பி வரும் பொழுது அவரது கைப்பையை திருடிக்கொண்டு ஓடி விட்டான் திருடன். அடுத்து அவன் யார்  என்று ஆராய்ச்சியில் இறங்கும் பொழுது அம்பா வந்து எனக்குத் தெரியும் கபாலிதான் ஓடினான் என்றாள்.

கபாலி எங்களது தெருவிலிருந்து மேற்காலே போயி வடக்கால திரும்பினால் நாற்பது குடிசை என்று ஒரு இடம் உண்டு அங்கு வசிப்பவன். ஆள் திடகாத்திரமாக இருப்பான். மிகவும் சாதுவான ஆனால் அழுத்தமான ஆள். அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று எங்களுக்கு தெரியும்.

எங்கள் தெருவில் உள்ளவர்கள் யாருக்கும் கபாலியைப் பிடிக்காது. அதற்கு பிரத்யேக காரணங்கள் பெரிதாக ஒன்றும் இல்லை, கபாலியைப் பிடிக்காது அவ்வளவுதான்.

ஏய் அம்பா இங்கேவா? அது கபாலிதானா என்று சபேச ஐயர் வினவ, ஆமாம்ப்பா நான் பார்த்தேன் என்றாள். போடி பித்துக்குளி சரியா தெரியாம எதுவும் சொல்லாத அவனுக்கு தெரிஞ்சா நம்மள சவட்டிடுவான், நமக்கு அடி தாங்காது என்றார்.

இப்போது ராஜி மாமி போலிசுக்கு போன் பண்ணி கபாலிதான் கைப்பையை அடித்தவன் என்று குற்றப்பத்திரிகை பதிவு செய்துவிட்டாள்.

கபாலியை அதற்குப் பிறகு தெருவில் பார்க்க முடியவில்லை.

இது நடந்து ஒரு வாரம் சென்ற பின்பு ஒரு நாள் சபேச அய்யர் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் ஏய் அம்பாவை பார்த்தியா? நேத்து ராத்திரியில் இருந்து ஆளை காணோம் எங்கே போச்சுன்னு தெரியலையே என்று பித்துப் பிடித்தவர்போல் சுற்றிக்கொண்டு இருந்தார்.

அதற்கு பிறகு வெகு வருடங்கள் ஆகியும் கபாலியைப் பற்றியோ அம்பாவை பற்றியோ யாருக்கும் விஷயம் தெரியவில்லை.

பிறகு நான் வேலை விஷயமாக வெளிநாட்டில் செட்டில் ஆகி முதல் வருடம் விடுமுறையில் சென்ற பொழுது விசாரித்ததில் சபேச ஐயர் வீட்டை காலி செய்துகொண்டு போய்விட்டார் என்றும் அவர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை என்றார்கள்.அம்பாவை பற்றியோ கபாலியை பற்றியோ தகவல் இல்லை.

இது நடந்து கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சலஸ் சென்றிருந்தேன், நண்பர் வீட்டில் இரண்டுநாள் தங்கப்போவதாக சொன்னேன். அவர் ஹாலிவுட், பெவர்லி ஹில்ஸ், யுனிவர்சல் ஸ்டூடியோ எல்லாம் கூட்டிக்கொண்டு சென்றார்.

யுனிவர்சல் ஸ்டூடியோவில் மாலை நான்கு மணிக்கு ஒரு ஸ்டன்ட்டு ஷோ இருக்கிறது அதை பார்க்கவில்லை என்றால் மோட்சம் கிடைக்காது என்றார். சரி மோட்சத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய நாலு மணிக்கே சென்று வரிசையில் நின்றோம். அப்பொழுது பின்னாலிருந்து என் தோளை தட்ட ஏய் நீ நம்ம "கும்மு" தானே என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பினால் கபாலி. ஏய் நீ எங்கே இங்கே என்றேன். நான் இங்குதான் வேலை செய்கிறேன், ஷோ முடிந்தவுடன் இதே இடத்தில் வந்து நில்லு என்று அரங்கினுள் சென்றுவிட்டான்.

ஷோ நன்றாக இருந்தது, பிரதான ஸ்டன்ட்டு வேலைகளை செய்தது கபாலிதான். ஷோ முடிந்தவுடன் கபாலி வந்து எங்களை அவன் வீட்டிற்கு அழைத்தான்.

கநோகோ பார்க்கில் அருமையான தனி வீடு. மனைவியை அறிமுகம் செய்தான், ஏய் இதுதான் மரியா மை வைப் என்றான். மரியாவிற்கும் கபாலிக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் அழகோ அழகென்று இருந்தாள். பின்பு அவனிடம் நீ அம்பாவுடன் ஓடிவிட்டதாகதான் ஊரு நினைத்துக்கொண்டிருக்கிறது என்று கேட்ட பொழுது அம்பாவா ஆஹாஹா..........என்று கபாலி மாதிரியே சிரித்தான்.

சரி உனக்கு ஒரு சர்ப்ரைஸ், அம்பாவும் இங்குதான் இருக்கிறாள் பார்க்கிறாயா? என்றான்.

என்னடா சொல்ற என்றதற்கு சரி டின்னர் சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றான்.

சாப்பிட்டு முடிந்தவுடன் அம்பாவை பார்க்க சென்றோம்.

அம்பா மிகவும் மாறியிருந்தாள், அடையாளம் கண்டுகொள்ள திணறினாள்.

அம்பா உனது கணவர் எங்கே?..... இதோ இப்பொழுதுதான் ஆபீசிலிருந்து வந்தார் மாடியில் இருக்கிறார் இதோ கூப்பிடுகிறேன் என்று அவரை அழைத்து வந்தாள்.

ஏய் அம்பி நீ எங்கே இங்கே என்றேன்..அம்பா நீ எப்படி... ஒன்றும் புரியவில்லை.

அம்பி எங்கள் வீட்டில் மாடியில் குடியிருந்தான்...........ஒரு மருந்து கம்பெனியில் வேலை செய்து மாதம் தவறாமல் அப்பாவிடம் வாடகையை சரியாக கொடுத்து விடுவான்.

அந்த திருட்டு சம்பவம் நடக்கும் ஒரு வாரம் முன்புதான் வீட்டை காலி செய்துகொண்டு மாற்றலாகி  பாம்பே சென்று விட்டான்.

ஓ......கதை அப்படி போனதா............ஹூம் மகிழ்ச்சி என்றேன்.

அம்பாவிடம் அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்ட பொழுது தோ இங்குதான் இருக்கிறார் வாக்கிங் போயிருக்கிறார் வந்துவிடுவார் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அரை டிராயர், டி ஷர்ட், ஸ்நீக்கர்ஸ் உடன் சபேச ஐயர், அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார்.

அம்பா அவரிடம் அப்பா இது யார் தெரிகிறதா? என்று கேட்க தெரியும் நீ "கும்மு" தானே...... ஏண்டா நீ அந்த பத்தாம் கிளாசை பாஸ் பண்ணிட்டியோ...........நாலஞ்சு தடவ எழுதினவன் தானே என்றார்.

கூட இருந்த கபாலியை "கொழந்த" எப்படிடா இருக்கே..........நீ ஒண்டி இல்லேன்னா இந்த பித்துக்குளியை கண்டு பிடித்திருக்க முடியாது என்று கண்ணில் நீர் வர சிரித்தார்.





Follow kummachi on Twitter

Post Comment

Friday 22 July 2016

கபாலி..........

நேற்றே வளைகுடா நாடுகளில் "கபாலி" திரையிடப்பட்டுவிட்டது. வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சி பார்த்தாகிவிட்டது.

படம் எப்படி? மாறுபட்ட கருத்துக்களுடன் வெளியே வந்தேன்........

இது ரஜினி படமா? இல்லை ரஞ்சித்தின் படமா என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள்.

ரஜினி ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் எனபதும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது.

படம் என்னுடைய பார்வையில்............

கதை சுருக்கம் விரிவான கதையெல்லாம் எழுதி இந்த விமர்சனத்தை முன் வைக்கப்போவதில்லை....

முதலில் ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு.............ரஜினி என்ற ஒரு சூப்பர் ஸ்டாருக்காக கதையில் சமரசம் செய்துகொள்ளவில்லை. மேலும் ஒரு அடக்கப்பட்ட சமூகத்தின் கொந்தளிப்பை தைர்யமாக வெளியே கொண்டு வந்தது. காந்தி கோட்டை துறந்ததும்......அம்பேத்கார் கோட்டை அணிந்ததிலும் அரசியல் இருக்கிறது என்று ரஜினியின் வசனத்தில் ஒரு சமூகத்தின் எழுச்சியை பொறுக்காத கூட்டத்திற்கு வைத்த சவுக்கடி.

அதே சமயத்தில் எந்த காட்சியை மிகைப்படுத்த வேண்டும், எதில் மேம்போக்காக காட்டிவிட்டு போய்க்கொண்டிருக்க வேண்டும் என்பதில் பெரிய சறுக்கல். மேலும் கதையில் திருப்பம் எனபது மருந்தளவிற்கும் இல்லை அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை செய்யத் தவறிவிட்டார். உதாரணமாக ரஜினியும் தன்ஷிகாவும் ராதிகாவை தேடி இந்தியா வந்து பாண்டிச்சேரி சென்று அவரை காணும் பொழுது அதே சமயத்தில் வில்லன் கூட்டம் கபாலி குடும்பத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறார்கள், இந்த இரண்டையும் சேர்த்து இன்னும் அழகாக பின்னியிருக்கலாம்.

ரஜினி: வழக்கமான வேகமான நடையை துறந்து வயதிற்கேற்றார்போல் செய்திருக்கிறார். முக்கியமாக தேவையில்லாத நடனங்களோ இல்லை காதல் காட்சிகளோ இல்லை.  ரஜினியின் மிகைப்படுத்தாத நடிப்பு இதில் பாராட்டப்பட வேண்டும். குறிப்பாக தனது மகள் தன்ஷிகா என்று அறிந்தவுடன் கண்கள் இமைக்காது நடந்து செல்லும் காட்சி, வெகு வருடங்களுக்கு பிறகு தனது மனைவியை சந்திக்கும் தருணம்........"ஒற்றைக்கை காளி" கண்முன் வந்து போவதை தவிர்க்க இயலவில்லை. இந்த ரஜினிதான் இப்பொழுது தேவை...........இனி பாட்ஷாகளோ படையப்பாக்களோ வேண்டாம்........காலம் அதை ஏற்றுக்கொள்ளாது.

ரித்விகா, ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பு பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாட்டுக்கள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லாவிட்டாலும் படத்தின் முக்கியமான விஷயம் BGM அதில்  சந்தோஷ் நாராயன் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் முதல் முப்பது நிமிடம் நிமிர்ந்து உட்கார வைத்தது.........பிறகு ஆயாசம்............கடைசி இருபது நிமிடம்.........சரி.....நடுவே ரசிகர்களை கட்டிப்போடும் காட்சிகள் இல்லாதது மிகப்பெரிய குறை.

மொத்தத்தில் இது சந்திரமுகியோ, பாட்ஷாவோ, படையப்பாவோ இல்லை.

இந்தப்படம் எதிர்பார்த்த அளவு என்னுடைய பார்வையில் சத்தியமாக இல்லைதான்............

இது ஓடும் ஓடாது என்பது வேறு விஷயம்.............ஆனால் ரஜினி இது போன்ற வயதுக்கேற்ற கதாபாத்திரங்களையே  தேர்ந்தெடுப்பது  அவருக்கும் ரசிகர்களுக்கும்  நல்லது.


கபாலி................மிகுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.


Follow kummachi on Twitter

Post Comment

Monday 18 July 2016

ஒரு கொலையும் சில களவானிகளின் அரசியலும்

அதிகாலை வேளையில் ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடத்தப்படுகிறது. ஒரு சில பேர் அதை நேரில் பார்த்திருக்கின்றனர். கொலை நடந்து போலீஸ் துப்பு துலக்குமுன்பே ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் பலவிதமான கருத்துகள் பரப்படுகின்றன. அனைத்தும் ஊகங்களின் பேரிலே அரங்கேறுகிறது. சில பிரபலங்கள் அதற்குள் இவர்தான் குற்றவாளி என்று வேறு ஒருவரை சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புகின்றனர்.

காவல்துறை கிடைத்த ஆதாரங்களின் பேரிலே சில நாட்களில் கொலையாளி என்று ஒருவரை கைது செய்கிறது. அதற்குள் ஊடகங்கள் தங்களது பத்திரிகையின் வியாபார நோக்கில் சில கருத்துகளை அள்ளி விடுகிறது.

இந்த கால கட்டங்களில் காவல்துறை மேலும் சில ஆதாரங்களை திரட்டுகிறது. அதற்குள் இந்த கொலை வழக்கில் ஜாதி அரசியல் நுழைகிறது. கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் தான் தான் அந்த குற்றத்தை செய்தார் என்று ஒத்துக்கொண்டதாக காவல் துறை அறிவித்தகாக ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இப்பொழுது அல்லக்கை அரசியல் வாதிகள் ஜாதி அரசியலை கையில் எடுத்துக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர் நிரபராதி என்று சில செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்புகின்றன. இது கௌரவகொலையோ இல்லை ஜாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் என்று விஷத்தை தூவுகின்றன. இப்பொழுது மற்ற கட்சிகளும் களத்தில் குதித்து தங்களது இருக்கையை காட்டிக்கொள்கின்றன.

எது எப்படியோ இந்த வழக்கு வழக்கு மன்றத்திற்கு வரும் பொழுது தகுந்த ஆதாரம் இல்லாமல் தீர்ப்பு வழங்காது. குற்றவாளி தப்பிக்கலாம் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற நமது சட்டத்தின் ஒரு நியதியை பிடித்துக்கொண்டு வழக்கு அதே பாதையில் செல்லும். மேலும் இந்த வழக்கு பல காலம் நீடிக்கலாம்.

அது வரை ஊடங்கங்களும் சமூக வலைத்தளங்களும் அடுத்த கொலையோ இல்லை ஒரு கற்பழிப்போ நடக்கும்வரை தங்களது கற்பனையை தட்டிவிட்டு செய்திகள் வெளியிடும். வேறு எதாவது நிகழ்ச்சி நடந்தால் இந்த வழக்கு பின்னால் தள்ளப்படும் ஊடகங்களை பொறுத்த வரை...............

குற்றம சுமத்தப்பட்டவர் நிரபராதி என்று தீர்ப்பு வெளியாகலாம். கொலை செய்யப்பட்டவர் தானே தன்னை வெட்டிக்கொண்டு இறந்திருக்கலாம் என்ற அனுமானத்தை வழக்கம்போல் நீதிமன்றம் மக்களிடமும் ஊடகங்களிடமும் விட்டுவிடும்............

வாழ்க ஜனநாயகமும் பத்திரிகை சுதந்திரமும்...............
   

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 14 July 2016

ஆதலினால் காதல் செய்வீர்...................

காதலினால் மாதருக்கு அமில வீச்சுமுண்டாம்
கலவியில்லை எனில் கத்திக் குத்துமுண்டாம் 
காதலினால் மாந்தருக்கு அரிவாள் வெட்டுமுண்டாம் 
கௌரவக் கொலைகள் உண்டாம் ஆணவக்கொலைகளுமுண்டாம்
கோர்ட்டும் உண்டாம் வழக்குமுண்டாம் 
ஆதலினால் காதல் செய்வீர் இவ்வுலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலக நிலைமை 
காதலினால் வாழாமல் இருக்கக்கூடும் 
கவலை சேரும் பெற்றோர் நிம்மதி குலையும்
ஆதலினால் காதல் செய்வீர் இவ்வுலகத்தீரே.............


சுவாதிகளுக்கும்  இளவரசன்களுக்கும் சமர்ப்பணம்................... 

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 13 July 2016

கும்மாச்சிடா................

கூப்பிடுறா அந்த கும்மாச்சிய..................

கும்மாச்சின்னு  சொன்னவுடனே அந்த கலக்கல் காக்டெயில் போட்டுக்கிட்டு பிட்டு படம் போட்டு, அங்க இங்கே காப்பி பேஸ்டு போடுற மொக்க பதிவு கும்மாச்சின்னு நெனைச்சியாடா  ............கும்மாச்சிடா...........

நெருப்புடா.............பருப்புடா................நெருங்குடா...........நெருங்கினா.........சாம்பார்டா...............

கும்மாச்சி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..........ஆறு மாதத்திற்கு முன்னே போன கும்மாச்சி அந்த மொக்கைய விட கேவலமான மொக்க போட பதிவுலகம் வந்துட்டேன்னு போயி சொல்லு..........

நெருப்புடா..............பருப்புடா.................கடுப்புடா............அடுப்புடா...............சாம்பார்டா.........................


மகிழ்ச்சி................



Follow kummachi on Twitter

Post Comment

Monday 4 January 2016

கலக்கல் காக்டெயில் 175


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

யானையும், சம்பத்தும்,  இன்னோவாவும் 

இன்னோவா சம்பத்து நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது கேடுகாலம் வைகோவை விட்டு பிரிந்து அடிமைகட்சியில் ஐக்கியமானதுதான். பொதுவாகவே அடிமைகட்சியில் உள்ள அமைச்சர்கள் எந்த பேட்டியும் கொடுக்கமாட்டார்கள். மைக்கைக் கண்டாலே கல்லடிபட்ட நாய் போல வாலை காலிடுக்கில் சொருகிக்கொண்டு ஓடுவார்கள், அதற்கு உதாரணம் சென்னை "செயற்கை" வெள்ளத்தில் பேட்டி எடுக்க வந்த நிருபரின் ஒலிவாங்கியை தட்டி விட்டு ஓடிய மேயரும், ஓளர்மதியும்.

இன்னோவா சம்பத்து தந்தி டிவி பாண்டேவிடமும், புதியதலைமுறை குணசேகரனிமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றார். அவரை சொல்லிக்குற்றமில்லை. அவர் எப்படி பேசியிருந்தாலும் அவருக்கு ஆப்பு நிச்சயம்தான், அதுதான் அடிமைகட்சியின் தனித்தன்மை. நாடாளுமன்ற தேர்தலின் பீஜெபியுடன் "ஆத்தா" இணக்கமாக செயல்படுவார் என்று சொன்ன மலைச்சாமியின்  கதி என்ன என்று நமக்குத் தெரியும். மொத்தத்தில் பாண்டேவும், குணாவும், சம்பத்தை வச்சி நல்லாவே செஞ்சுட்டாங்க.

கூட்டணி அரசியல் 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கே மாதங்கள் உள்ளன. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கவில்லை. இன்றைய தேதியில் கேப்டனுக்கு நல்ல டிமான்ட். பா.ம.க விழுப்புரம் மாநாடு எல்லாம் கூட்டி அன்புமணி முதல்வர் என்றால் எல்லா கட்சியும் எங்களோடு வாங்க என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

கேப்டன் இப்பொழுது முடிவெடுக்கமாட்டார் என்பது நமக்குத் தெரியும். அதன் காரணம் அரசியலில் அரிச்சுவடி பிடித்தவனுக்கும் தெரியும். ஆத்தா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று சொல்லிவிட்டு வெள்ளத்தின் போது தூங்கியதால் இப்பொழுது நிலைமை மாறியிருக்கிறது.

இந்த தடவை மக்கள் ஓட்டிற்கு அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

பிடித்த கவிதை 

கை
ற்றை அள்ளிவந்து 
வீடு கட்டாதே’ என்றானே.
நான்தான் கேட்கவில்லை
இப்போது வீடுபுகும் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
’வயலைத் தூர்த்து
மனை போடாதே’ என்றானே.
நான்தான் செவிமடுக்கவில்லை
இதோ என் சோற்றுப்பானை
தண்ணீரில் மிதக்கிறது.
 ’பணத்தை நம்பாதே
பாதாளத்தில் தள்ளும்’ என்றானே
உண்மைதான்
கணக்கில் பல லகரம் இருந்தும்
கையேந்தி நின்றேன்.
’மனிதர்களை நம்பு
மதமும் சாதியும்
முகமூடிகள்’ என்றாயே
நம்புவேன் இனி,
அதோ வருகிறது
வெள்ளத்தில் தத்தளிப்பவனைக்
கரைசேர்க்கும் கரமொன்று
அதில் கடவுள் குறித்த
எந்த முத்திரையும் இல்லை.

நன்றி: சூ. சிவராமன் 

ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment