Thursday 31 July 2014

டீ வித் முனியம்மா--------பார்ட் 16

இன்னா முனியம்மா சூடா இருக்குது............டீ குடிக்குமோ இல்லே தனப்பாயிட்டு வேணுமோ.

எட மீச காலில பெஜாராக்காத ..............உங் கடியாண்ட டீயே தனப்பாதான் இருக்கும்......ஏதோ ஒன்னு போடுறா.........

இன்னா முனியம்மா கும்பகோணம் ஸ்கோலு வயக்குல தீப்பு வந்திச்சாமே

அத்த ஏன் கேக்குற பாய், துட்டு வாங்கிக்கின்னு நுப்பது புள்ளிங்க படிக்கிற இடத்துல ஆயிரம் புள்ளிங்க படிக்கவுட்டானுகளே பேமானிங்க அவனுகள எல்லாம் வுட்டுட்டானுங்க, ஸ்கோல நடத்துற கெயம் கெட்டைங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்துகிறாங்க. அந்த ஸ்கோலு நடத்தின புலவர் பயனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், 940 வருசம் ஜெயிலாம்......

மொதல்ல இருபத்தினாலு பேருங்க மேல கேசு போட்டாங்களே எத்தினி பேருக்கு தண்டன கொடுத்துகிறாங்க.......

அடப்போ நாடாறு, இந்த கேசு ஆரம்பிக்க சொல்லவே மூணு பேரு எஸ்கேப் ஆகிட்டானுங்க.........அவனுகளுக்கும் கொயந்தைங்க செத்ததுக்கும் சம்பந்தம் கெடியாதுன்னு அரசே கேஸ  வாபஸ் வாங்கிடுச்சு............

கச்சிகாரங்களா இருப்பானாங்காட்டியும்...........

அது நமக்கு தெரியாது லிங்கம் சார், கச்சிகாரனுங்களா?  இல்ல துட்டு கொடுத்தானுங்களா? இன்ன மேட்டரோ............

மீதி இருபத்தியொரு பேருல எத்தினி பேருக்கு தண்டனை கொடுத்துகிறாங்க, வெவரம் சொல்லு முனியமா............

டேய் பயம் இப்போதாண்டா நீ வெவரமா இந்த மாதிரி மேட்டருல கேள்வி கேக்குற? எப்பவும் சினிமா நூசு பிகருங்க பத்திதான் பேசுவ.........இன்னா அஞ்சலா மேட்டரு வேல செய்யுதா? பத்து பேருக்கு தண்டன கொடுத்துகிறாங்க, பதினொரு பேர இந்த தீவிபத்துக்கும் அவங்களுக்கு சம்பந்தம் கெடியாதுன்னு ஜட்சு சொல்லிகிறாரு.

ஆடி மாசம் சாமி கும்புட கொயந்திங்கள உள்ளார வச்சு பூட்டிட்டு போச்சே ஒரு டீச்சர் அத்த இன்னா செஞ்சாங்க..........

வாடா லோகு, அம்மன கும்புடறேன்னு அது வகுப்புல கீற கொயந்தைங்கள உள்ளார வச்சு வெளியே தாப்பா போட்டு கோயிலாண்ட போயுக்கீது.....தீ பிடிக்க சொல்ல கொயந்திங்க அல்லாம் வெளிய வரமுடியாம செத்துகீதுங்க.......அந்த டீச்சர வுட்டுட்டானுங்க.........

கோர்ட்டுல ஒரு அம்மா கண்ண துணிய வச்சி கட்டி கீறாங்களே அது இதுக்குதனா,

ஆமாண்டா பயம், இந்த தபா துட்டு வச்சி கட்டிகிறாங்க போல...........

இன்னா முனியம்மா திரியம் நம்ம ஊருல செயினு இஸ்குற பேமானிங்க வந்துட்டானுங்க போல, மோட்டார் பைக்குல வந்து தாலி உருவினு போறானுங்க......

ஆமா பாய், அம்மா ஆட்சிக்கு வந்த சொல்ல சொல்லிச்சு அல்லாம் வேற மாநிலத்துக்கு பூட்டானுங்கன்னு.......அவனுக எங்கியும் போல........இங்கதான் கீறானுங்க........போன வாரம் கூட அண்ணா நகரு, சாந்தி காலனிப்பக்கம் வேலைய காமிச்சிகிரானுங்க........

இவனுகள இன்னா செய்யுறது...........

பொம்பளைங்கதான் உசாரா இருக்கணும்............இப்படிதான் ஒரு நாலு மாசம் முன்னால நானு கோயிலாண்ட கடிய அடைச்சிட்டு பூக்கூடைய தூக்கிகினு நம்ம கொண்டித்தோப்பு பஸ் ஸ்டாண்டு போற சந்துல போய்கினு இருந்தன்.

அப்பால.............

இருடா லோகு, எனிக்கி முன்னாடி ஒரு பொம்பள சுடிதாரு போட்டு தோளுல பை மாட்டிகினு போயிருந்திச்சு. நான் ஒரு இருபதடி பின்னாடி நடந்து வாறன்....பின்னால ஒரு பைக்கு சத்தம் கேட்டுது........அவனுங்க எண்ணிய தாண்டி அந்த பொம்பளயாண்ட போனானுங்க........

அப்பால........

அப்பால அந்த பொண்ணு நவர சொல்ல இந்த பேமானிங்க கயுத்துல கைய வச்சானுங்க. அது டக்கரா அவனுகள வண்டியோடு சேத்து தள்ளி வுட்டுரிச்சு.......நா ஓடி போயி வண்டில கீற சாவிய  புடுங்கி குப்ப தொட்டியாண்ட வீசிட்டேன்..........ஒரே இருட்டா கீது.........

அப்பால

அப்பால நானும் அந்த பொம்பளையும் கொரலு வுட்டாம, அங்க பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருந்த ஜனம் ஓடியாந்து ரண்டு பேமானிங்களையும்  புட்ச்சி போலிஸ் டேஷனாண்ட இட்டுகினு போயி இனிஸ்பெக்டர்  கிட்ட வுட்டுட்டானுங்க......

அப்பால........இன்னா ஆச்சு?

தெரியாது பாய் அவனுங்க இன்னா ஆனானுங்கன்னு..........

அப்பால முனியம்மா நம்ம இந்தியாகாரனுங்க நொம்ப மெடலு வாங்கிக்கிறாங்க போல.....

அஹான் பாய், ஸ்காட்லாண்டுல நடக்குதே காமன் வெல்த், நம்ம ஊருல நடக்க சொல்லகூட ஆட்டைய போட்டானுங்களே அதே போட்டிதான், அதுல நம்மாளுங்க நல்ல கெலிச்சிகிரானுங்க.............நம்ம தமிழ் ஆளு சதீசு சிவலிங்கம்  கூட நல்ல பளு தூக்கி தங்க மெடலு வாங்கிக்கிராறு...........அம்மா கூட அவருக்கு அம்பது லட்சம் கொடுக்கபோவுது.........

சரி முனியம்மா நம்ப மேட்டருக்கு வா........

இன்னடா சினிமாகாரிங்க படமா.........

தோ இந்த பேப்பருல போட்டுக்கிறான்...................நீயே பாத்துக்கடா...........பயம்.









Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 30 July 2014

எண்ணச்சிதறல்-கவிதை


காதல் கவிதை இச்சைகளை  
     கனவுகள் வந்து கலைத்திடுதே
மோதல் செய்த விளைவுகளால் 
     புனையும் ஆசை புதைந்திடுதே  
இயற்கை பாக்கள் இயற்றிடவே
     மனது தவிக்கும் காலங்களில் 
செயற்கை செயல்களின் விளைவுகள் 
     தனது கோரமுகம் காட்டிடுதே
எண்ணங்கள் சிறகடிக்கும் வேளையில்
     கவிதைகள் வடிக்கும் ஆசைகளை 
திண்ணம் கொண்டு அடக்கினால்
     புவியில் தமிழ் பிழைத்திடுமே.









Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 29 July 2014

தங்கிலீஷ் பேசும் தமிழா.

சுத்தமான தமிழ் பேசுவது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. நம் அண்டை மாநிலத்தவர்கள் ஆங்கிலம் கலக்காத அவர்கள் தாய் மொழி பேசுவதை கேட்கையில் நமக்கு நம் தமிழ் தமிழர்களாலேயே எப்படி கலப்படம் செய்து சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது வேதனை.

பொதுவாகவே இரண்டு பேர் தமிழில் பேசினால் ஒரு வாக்கியத்தில் குறைந்தது ஒரு ஆங்கில வாரத்தையோ அல்லது வடமொழி வார்த்தையோ கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

உதாரணமாக எந்த ஓட்டலுக்குப் போகலாம்? பரோட்டா குருமா சாப்பிடுவோமா? பாக்கி சில்லறை வாங்கிட்டயா?இதை மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் தமிழ் போல் தோன்றும் அதற்குக் காரணம் காலகாலமாக இப்படிப் பேசியது பிற மொழிக்கலப்பை மறைந்து போக செய்துள்ளது.

இலங்கை தமிழர்களும், மலேசிய தமிழர்களும் ஒரளவிற்கு பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறார்கள். சமீபத்தில் மலேசியா சென்றபொழுது காலையில் என்னை அழைத்துப்போக வந்த தமிழ் ஓட்டுனர் என்னிடம் காலையில் பசியாறி விட்டீர்களா? என்று கேட்டதை புரிந்துகொள்ள என் போன்ற சென்னை தமிழர்களுக்கு சற்று நேரமாகும்.

சமீபத்தில் இணையத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் தமிழ் பட்டியலை பார்த்தேன். அவற்றை படித்ததில் அதை நடைமுறைப் படுத்தி நமது அன்றாட பேச்சு வழக்கில் கொண்டு வருவது ஒன்றும் கடினமில்லை என்றே தோன்றுகிறது.

சப்பாத்தி----------------------கோந்தடை
புரோட்டா--------------------புரியடை
நூடுஸ்------------------------குழைமா
கிச்சடி-------------------------காய்சோறு, காய்மா
கேக்----------------------------கட்டிகை, கடினி
சமோசா----------------------கறிப்பொதி, முறுகி
பாயசம்-----------------------பாற்கன்னல்
சாம்பார்----------------------பருப்புக்குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி-------------------------தோய்ச்சி, மாவேச்சி
பொறை----------------------வறக்கை
கேசரி------------------------செழும்பம், பழும்பம்
குருமா-----------------------கூட்டாளம்
ஐஸ்கிரீம்-------------------பனிக்குழம்பு
சோடா-----------------------காலகம்
டீ-------------------------------தேநீர்
சட்னி-------------------------அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ்-------------குளிர் குடிப்பு
பிஸ்கட்----------------------ஈரட்டி, மாச்சில்
போண்டா-------------------உழுந்தை
சர்பத்-------------------------நறுமட்டு
சோமாஸ்-------------------பிறைமடி
பஃப்ஸ்-----------------------புடைச்சி
பன்---------------------------மெதுவன்
ரோஸ்ட்--------------------முறுவல்
லட்டு------------------------கோளினி
ஃப்ரூட் சாலட்-------------பழக்கூட்டு
ஜாங்கிரி---------------------முறுக்கினி
ரோஸ் மில்க்---------------முளரிப்பால்
காபி---------------------------குழம்பி

இதை சடுதியில் மாற்ற நினைத்தால் பேசும் நபர்  பித்து பிடித்தவர் போல் மற்றவருக்கு தோன்றும்..............என்ன செய்வது?

இருந்தாலும் மெல்ல சாகும் தமிழை இன்னும் கொஞ்ச காலம் பிழைக்க வழி செய்யலாம்.



Follow kummachi on Twitter

Post Comment

Monday 28 July 2014

அடுத்த சூப்பர் ஸ்டாரும், படுத்த சூப்பர் ஸ்டாரும்

சமீபத்தில் ஒரு பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஒரு நடிகருக்கு வழங்கியது. அதில் நடந்த தில்லுமுல்லு வேலைகளும் அதை தொடர்ந்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் அலசப்பட்டு சந்தி சிரித்துக்கொண்டிருந்தன.

அதை தொடர்ந்து மதுரையில் ஒரு பெரிய விழா எடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு "அடுத்த சூப்பர் ஸ்டார்" பட்டத்தை வழங்க இருந்தார்கள். அதற்கு அந்த நடிகரே மற்ற நடிகர்களை தொலைபேசியில் அழைத்து "எல்லோரும் வாங்கண்ணா" என்று அழைத்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. நடுவில் தமிழக அரசு அந்த விழாவிற்கு தடை செய்து, அதற்கான காரணத்தையும் வெளியிட்டது.

அவரது ரசிகர்கள் விழாவிற்கு மோடி வரப்போகிறார், பிரணாப் முகர்ஜி வருகிறார், அமிதாப் பச்சன், ஷாருக் மற்றும் அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் வருகிறார்கள்  என்றெல்லாம் அலம்பல் செய்து கொண்டிருந்தார்கள். ஆகஸ்டு பதினைந்தாம் தேதி செங்கோட்டையில் கொடியேற்று விழாவை தவிர்த்து பிரதமர் இந்த விழாவிற்கு வருவாரா? என்று நமக்கெல்லாம் கவலை. ஏனென்றால் இந்த விழா அவ்வளவு சரித்திர புகழ் பெற்றது அல்லவா!!!.

மற்ற நடிகர்களோ நான்தான்பா லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று அலப்பறை செய்துகொண்டிருந்தார்கள். இன்னும் படுத்த சூப்பர் ஸ்டார், கெடுத்த சூப்பர் ஸ்டார், மடித்த சூப்பர் ஸ்டார், அடித்த சூப்பர் ஸ்டார், நடித்த சூப்பர் ஸ்டார், நடிக்காத சூப்பர் ஸ்டார் என்று மேலும் சில பட்டங்களை உருவாக்கி நமக்கு எப்படி சூடிக்கொள்ளலாம்  என்றுவருங்கால முதல்வர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே சூடிய பட்டங்கள் போக இன்னும் சில பட்டங்கள் கைவசம் இருக்கின்றன, இவற்றை ரூம் போட்டு யோசித்து வைத்திருக்கிறேன். ஏதேனும் நடிகருக்கு தேவை என்றால் ஒரு லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் எடுத்து கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பித்து வைத்தால் அவரவர் திரையுலகில் கிழித்ததற்கு ஏற்ப பட்டங்கள் அனுப்பி வைக்கப்படும்.

விலாசம்,

கொருக்குப்பேட்டை கும்மாச்சி
கொண்டித்தோப்பு குறுக்கு தெரு
டாஸ்மாக் அருகில்,
கூமட்டை புரம்,
சென்னை 600000.

நடிகைகளுக்கும் பட்டங்கள் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.

அவற்றில் சில

தொப்புள் சூப்பர் ஸ்டார்
தொடை சூப்பர் ஸ்டார்
மடிப்பு சூப்பர் ஸ்டார்
இடுப்பு சூப்பர் ஸ்டார்
எடுப்பு சூப்பர் ஸ்டார்

டெயில் பீஸ்: நடிகர் பிரேம்ஜி அவர்களுக்கு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நடிகர் சிம்பு அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதனை மிகவும் பெருமையுடன் பெற்றுக்கொண்ட பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்.

இதற்கான வெற்றி விழா வருகிற ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி முதலமைச்சர் தொடங்கி வைக்கப்போவதாக நடிகர் அறிவித்திருக்கிறார். அதே விழாவில் குமாரி குஞ்சுளாவிற்கு "இடுப்பு பெருத்த கடுப்பு நடிகை" என்ற பட்டப் பெயரை ஆளுநர் கொண்டையா வழங்குவார்.

ஸ்............ ப்பா மிடில..............




Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 22 July 2014

கலக்கல் காக்டெயில்-151

இலங்கையில் சூனா சாமி 


ஆப் கி பார் மோடி சர்க்கார் ஆனவுடன் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவர்களின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டை மத்திய அரசு எந்த நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறது எனபது வெட்டவெளிச்சமாகிறது. இப்பொழுது சூனா சாமி தலைமையில் ஒரு குழு இலங்கை சென்று ராஜபக்ஷேவை சந்தித்து "கவலை படாதே நைனா, நாங்க எல்லாம் உங்க தோஸ்துதான்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் ஐ. நா. மனித உரிமை குழு தலைவர் நவநீதம் பிள்ளை அவர்களின் குழுவிற்கு விசா மறுத்ததன் மூலம் மத்திய அரசு மனித உரிமை மீறல் விஷயத்தில் தங்களது நிலையை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
சார்க் நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து இலங்கை மீதான சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றன.

கழகங்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்ற "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்ற கூற்றை நமது மத்திய அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

நமது முதலமைச்சர்கள் இன்னும் மீனவ பாதுகாப்பிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இரண்டு கழகங்களுமே தமிழ் ஈழத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன, மற்றபடி மீனவ நலன் எல்லாம் சும்மா உட்டாலக்கடிதான்.

இன்று கூட 38 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

ஈழப்படை நமது மீனவர்களை சுடுவதற்கு இப்பொழுது அதிகாரபூர்வ லைசென்ஸ் கொடுத்துவிட்டார்கள்.

கர்நாடகா அணை திறப்பும் விளக்கமும்

சமீபத்தில் ஹோகநேக்கல்லில் தண்ணீர் ஆர்பரித்து விழுவதாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும் பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது, ஆதலால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று எல்லா தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

காவிரி ஆற்றில் மழை பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டிருப்பதாலும்  க்ரிஷனராஜா சாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும்  அணைகளின் பாதுக்காப்பு கருதி மதகுகள் திறக்கப்படுவதாக தொலைக்கட்சிகள் கூறிக்கொண்டிருக்க, கர்நாடக சட்டசபையில் நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அவர்களோ வேறு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

காவிர் நடுவர்மன்ற தீர்ப்புப்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாத தவனைகளான முறையே 10, 34, 50 டி.எம்.சி  கொடுப்பதற்காக திறந்து விடுவதாக கூறியிருக்கிறார்.

காவிரியை வைத்து நல்லா அரசியல் பன்றாங்கப்பு.

ரசித்த நகைச்சுவை

ஆடித்தள்ளுபடி கடையில் மனைவிகளை தொலைத்த இரண்டு கணவர்கள் சந்தித்துகொண்டனர்.

முதல்வர்:  என்ன சார் தேடுறீங்க?.

இரண்டாமவர்: என் மனைவியைக் காணோம் தேடிக்கொண்டிருக்கிறேன். சரி நீங்க யாரை தேடுறீங்க?

முதல்வர்: என் மனைவியையும் காணோம்? சரி உங்க மனைவி எப்படி இருப்பாங்க சொல்லுங்க சார்?

இரண்டாமவர்: நல்லா அழகா த்ரிஷா மாதிரி இருப்பாங்க சார், சரி உங்க மனைவி எப்படி இருப்பாங்க அடையாளம் சொல்லுங்க.

முதல்வர்: அவ தொலையட்டும் கழுதை, வாங்க நாம இரண்டுபேரும் சேர்ந்து உங்க மனைவியைத் தேடலாம்!!!!!!!!!!!.

ரசித்த கவிதை

தலை(வர்)கள்!! 


நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
    நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
    விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
    ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
    இனமாய் நம்மை எண்ணிடுவார்!

மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!

நன்றி: அருணா செல்வம்.

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

Monday 21 July 2014

டீ வித் முனியம்மா பார்ட் 15

டேய் மீச இன்னாடா அல்லாரும் எங்கே போய்கிறாங்க? பொயுது விடிஞ்சா வந்துருவாக டீ அடிக்க.

வரும் லிங்கம் சாரே? முனியம்மா வருன்ன நேரம்.

டேய் இன்னாடா வருன கிருண சொல்லிகினு தமிய வறுத்து எடுக்கிற.


முனியம்மா வருன்னு சாரே... அவிட நோக்கு அல்லாரும் வருன்னு.

இன்னாடா பயம் இன்னா கடில அஞ்சல கீதா............

இன்னா முனியம்மா எதுக்கு கேக்குற......இன்னா விசயம்........

ஒன்நியம் இல்லடா சொம்மனாங்காட்டிக்கு.......ஒரு மார்கமா வரியே இன்னா விசயம்னுதான்.......

முனியம்மா கட்சில களை பிடுங்குற வேலைய தொடங்கிட்டாரு கலீனறு.

அஹான் பாய் தேர்தலுல உள்குத்து குத்தினவனுக்கேல்லாம் ஆப்பு வைக்கிறாரு, அடுத்த தபா கெலிக்கணும் பாரு...........ஆனா அல்லர்கிட்டேயும் வெளக்கம் கேட்டு எய்தி வாங்கித்தான் ஆப்படிக்கிராறு............அதான் அவரே சொல்லிகினாரே கயகம் ஜனநாயக கச்சி, இன்னிக்கி மந்திரி நாளிக்கி எந்திரி சொல்லுற மட்ட கச்சி கெடயாது.............

ஆமா முனிம்மா அவரு பேசுவாரு...........தூன துரும்பாக்கி, பேண பெருமளாக்கின்னு.............கச்சிகுள்ள ரொம்பதான் அடிச்சிகிராணுக.......அயகிரி கயகம் வெளங்காதுன்னு சாபம் வுட்டுகிராறு.

அட லோகு இவனுக எல்லாம் இப்படிதான்,--------------கெலிக்க சொல்ல கூடி ஆட்டையபோட அனைச்சுக்குவானுங்க...........அப்பால அடிச்சிப்பானுங்க.......குடும்ப சண்டையெல்லாம் குயா அடிக்கு இட்டாந்து குமுருவாங்க, அப்பால கண்ணு புளிச்சிது, காது அரிக்குதுன்னு கட்டிப்பாய்ங்க.

பா.ம.க  வெள்ளி வியா இன்ன நூசு......

நாடார் கட்சி தொடங்கி இருபத்தைந்து வருஷம் ஆயிப்போச்சாம்,-------அதான் ராமதாசு ஒரு அறிக்கை வுட்டுகிராறு,----------மாறி மாறி கூட்டணி வச்சே அப்பீட் ஆயிட்டோம் இனி கூட்டணி கெடியாது.......அல்லாம் தனியா நின்னு ஆச்சிய பிடிப்போம்னு சொல்லிக்ராறு.......

எந்த ஆச்சிய பிடிப்பாராம்----அவங்க ஆச்சியையா

டேய் லோகு சொம்மா நாக்கால் பன்னாதே---

சட்ட சபை நூசு ஏன்னா முனியம்மா.......

அது இன்னா வயக்கம் போல அம்மாக்கு சொம்புதூக்கி அமைச்சருங்க அறிக்கை படிப்பாங்க, மத்தவனுக பெஞ்சு தட்டுவாணுக............எதிர் கட்சிக்காரங்க அம்பேல் ஆவானுங்க.....

சீமான புடிச்சு உள்ள போட்டாங்களே இன்ன விசயம் முனிம்மா....

நாடாரு அந்தாளு ஒரு பத்து அல்லக்கைங்கள வச்சிகினு ஒரு மார்கமாத்தான் இருப்பானுக........அந்தாளு பப்ளிக்கா வரசொல்ல "ஒத்து ஒத்துன்னு" அவனுக அல்லக்கை கூட்டம் இல்லாத இடத்துல கொரலு வுட்டுகினே வருவானுங்க......தோல் கேட்டுல காசு கேட்டா தகராறு பண்ணிகிரானுங்க.......அதான் உள்ள புட்சு போட்டு கிறாங்க.

ஆமாம் முனியம்மா அந்தாளு உடனே அம்மாவ எதுத்து அல்லா இடத்துலேயும் ஆளு நிருத்தப்போறேன்னு...........பேசிகினுகிராறு...

இந்தம்மா அந்தாள ஒரு காமெடி பீசாத்தான் பாக்குது பாய்.

உக்ரைணுல இந்த மலேசியா விமானத்த சுட்டுகிரானுங்க......அத்தினி பேரும் பூட்டாங்க............இன்னா கொடுமபா இது.......

பாய் மலேசியா காரனுக்கு நேரம் சரியில்ல, ஒரு பிளேனு அபீட் ஆயிடுச்சு.....அத்த "உன் கண்ணு மையா என் கண்ணு மையான்னு" மை போட்டு பாரத்தனுங்க கெடிக்கல........இப்போ உக்கிரைன்ல நடக்குற சண்டையில  எவனோ சுட்டுகிறான்.......
அதுக்கு புச்சு புச்சா நெறைய கத வுடுரானுங்கோ........"புட்டின" புட்டுக்க வைக்கத்தான் சுட்டானுங்க. இன்னாவோ லோகு அத்தினி பேரும் செத்துகிரானுங்க.

இன்ன முனியம்மா விஜய் டீவில அவார்டு கொடுக்கிரானுனங்களே அத்த பாக்கல நீ.....

தோடா பயம் உன்னியப்போல வேல வெட்டி இல்லாதவன் தான் அந்த டுபாக்கூர பாத்துகினு இருப்பீங்க.......வருசா வருஷம் அவனுக இத்த போட்டு அவனவன் துண்டைகானோம் துணிய காணோம்னு ஓட வைப்பானுங்க.....டேய் பயம் நீ எதுக்கு அத்த பாக்குறேன்னு எங்களுக்கு தெரியாதா? பிகருங்க அரகுறையா ஆடிக்கினு இருக்கும்.

இன்ன முனியம்மா கேப்டனு இன்னா ஆனாரு? அவரு நூசுல வருதில்ல.....

கேப்டனு ஆசுபத்திரி போய் வந்து ரெஸ்ட்டு எத்துகினு கீறாரு..........அவர வுடு......

வேட்டி கட்டிகினு போனவனுகள உள்ளிய உடாம போன "க்ளப்"ப என்ன செய்ய போறாங்களாம் அம்மா?.

பாய் அம்மா இந்த கிளப்புங்க மேல காண்டாகீது....தி.மு.க ஆட்சி முடிய சொல்ல இந்தம்மா கட்சி ஆளுங்க  இந்த கிளப்புல தண்டல் வாங்க போய்கிரானுங்க.....நியாயமா இந்த கிளப்புங்க ஆளுங்கட்சிக்கு ஒரு ரேட்டும் மத்த ரவுடிங்களுக்கு ஒரு ரேட்டும் கொடுப்பாங்க........போன தபா வாங்க சொல்ல  நாங்கதான் ஆச்சிக்கு வருவோம் அதே ரேட்டு கொடுன்னு சொல்லி கேட்டுகிறானுங்க.........அவனுக கொடுக்கல........அதான் இப்போ இந்த விசயத்த எத்துகினு  ரிவிட்டு அடிக்கிராக.....

அப்படியா முனிமா?............

ஆமாண்டா லோகு அந்தம்மா சட்டசபையிலே சொல்லிகீது......இந்த க்ளப்புங்க எம்மாம் துட்டு வாங்குறாங்க, எம்மாம் துட்டு அரசாங்கத்து கொண்டுக்கிறாங்க, நமக்கு இன்னா லாவம், அந்த இடம் யாருக்கு சொந்தம் எல்லாத்தையும் நோண்ட சொல்லிகீதாம்.

சரிபா வுடு கோயிலாண்ட ஜனம் வர நேரம், அல்லாம் பூக்கடையான்டியே நிக்கும்.வரேன் அப்பால பாக்கலாம்.


Follow kummachi on Twitter

Post Comment

Saturday 19 July 2014

கொஞ்சம் சிரிங்க பாஸ்

இணையத்தில் சுட்ட நகைச்சுவை படங்கள்.

அதானே யாரு தூங்கவில்லை?

கேப்டன் சரக்கடிக்க சொல்ல உருவிடுவானுங்க........
கேப்டன் உங்கள அவனவன் ஓட்டுறான், நாக்கை துருத்தி முறைங்க.......
ஆமாம் உஷார் பண்ணுங்க.....

Follow kummachi on Twitter

Post Comment

Friday 18 July 2014

சட்டசபை லிமரிக் கவுஜைகள்


சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கூடியுள்ளது. அங்கு நடக்கும் நாடகங்கள் ஊடகங்களில் சந்தி சிரிக்கின்றன........அதை வைத்து என்னுடைய மற்றுமொரு லிமெரிக் முயற்சி.

வேட்டி கட்டினா வெளியே துரத்து
பாட்டி சொல்லுது உரிமம் ரத்து
சரக்கடிக்கும் சீமான்கள் எல்லாம்
மறக்காமல் பட்டாப்பட்டி எடுத்து
மாட்டி சென்றால் மானம் பிழைக்கும்.

அம்மா தாயே!!!

கூடுவது மழைக்கால தொடர்
பாடுவது புரட்சிதலைவி புகழ்
தட்டுவது பெஞ்ச் பலகை
திட்டுவது கெட்ட வார்த்தையில்
ஓடுவது ஓடுகாலி எதிர்கட்சியினர்.



சட்டசபை விவாதங்கள் எல்லாம்
கெட்டவைகளை முன்னிறுத்தி மேலோங்கும்
அல்லக்கை கூட்டங்கள் அம்மாவை
பல்லக்கில் தூக்கி வைத்து ஆடும்
மட்டமான அரசியல் அரங்கம்.







Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 16 July 2014

வேட்டியும் வெட்டி கலாச்சாரமும்.

இன்று தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினை "ஏதோ ஒரு சரக்கடிக்கும் க்ளப்பில் வேட்டி கட்டிய நீதிபதியை உள்ளே விடவில்லையாம்". ஆதலால் நமது கலாச்சார காவலர்களும், பகுத்தறிவு பகலவன்களும் இதுதாண்டா சாக்கு என்று தன்மானம், கலாச்சாரம் மற்றும் பகுத்தறிவு என்ற மசாலாக்களை தூவி வடகறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னையில் நிறைய கிளப்புகள் உள்ளன, பெரும்பாலான கிளப்புகளில் "dress code" என்று சொல்லுகிற உடை கட்டுப்பாடு உண்டு. இது கிளப்பின் எல்லா இடங்களிலும் அல்ல, ஒரு சில இடங்களில்தான். உதாரணமாக விளையாட்டு இடங்களில் அரை ட்ரவுசரோ அல்லது டிரேக் சூட் போட்டுக்கொண்டு செல்லலாம். ஆனால் சரக்கடிக்கும் இடங்களில் பேன்ட், சட்டை அல்லது காலர் வைத்த டி ஷர்டுகள் அணிந்துதான் வரவேண்டும். இதற்கான காரணம் என்ன என்று தெரியாது.

ஆதலால் சில பேர் விளையாடி முடித்தவுடன் மேற்கூறிய உடைகளை அணிந்து கொண்டுதான் சரக்கடிக்க வருவார்கள். இந்த கிளப்புகளில் உறுப்பினராகும் படிவத்திலேயே மேற்கூறிய சட்ட திட்டங்களை கூறி கையொப்பம் வாங்கிய பின்தான் உறுப்பினர் அட்டையே கொடுப்பார்கள்.

அதேபோல க்ளப்பில் இருக்கும் உணவு விடுதிகளில் குடும்பங்கள் வரும் இடத்தில் சரக்கடிக்க அனுமதியில்லை. அங்கு வரும் குடும்ப  ஆண்கள் வேட்டி அணிந்து வரலாம்.

ஒவ்வொரு கிளப்பிலும் ஒவ்வொரு விதிகள் உள்ளன. கேரளாவில் நட்சத்திர ஓட்டல் பார்களில் வேட்டி அணிந்து வரலாம். ஏனென்றால் கேரளாவில் பெரும்பாலோனோர் வேட்டி அணிந்துதான் வெளியே வருவர். மேலும் அலுவலகங்களிலும் வேட்டிக்கு அனுமதி உண்டு. அதே கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ளே நுழைய பேன்ட் சட்டை ஷூ மிக முக்கியம்.

ஏன் தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பெரும்பாலான கிளப்புகளில் வேட்டி அணிந்து சரக்கடிக்கலாம், யாரும் உருவிவிட மாட்டார்கள்.

சென்னையில் நடந்த ஒரு சாதாரண நிகழ்வை அரசியலாக்கி சட்டசபையில் இரண்டு நாள் கூச்சல் போட்டு அம்மா இனி இந்த மாதிரி கிளப்புகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டது என்று அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று எத்துனை பேருக்கு தெரியும்?.

மேலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த மாதிரி பணக்கார கிளப்புகளில் அந்தந்த தொகுதி கட்சி பிரதிநிதிகள் தண்டல் வாங்கி உரிய இடத்தில் சேர்க்கிறார்கள் என்று கிளப்பு செக்கரட்டரியை கேட்டுப்பாருங்கள் இவர்கள் வண்டவாலத்தை புட்டு புட்டு வைப்பார்கள்.

அப்படியே அம்மா இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கவில்லை என்றால் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். அதற்கப்புறம் என்ன நடக்கும் என்பது நாமறிந்ததே.

நான் இந்த கிளப்புகளுக்கு வக்காலத்து வாங்க வில்லை. நான் கூறியிருப்பது யதார்த்த நிலை. எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பகுத்தறிவாளிகளுக்கு உடனே தோன்றுவது இந்த கிளப்புகள் எல்லாம் பார்ப்பான்களுக்கு பார்ப்பான்களால் நடத்தப் படுகின்றது என்று அவர்களே முடிவு செய்து வேட்டிக்கு  அனுமதியில்லை பஞ்சகச்சத்திற்கு அனுமதி என்கிறார்கள்.

ஐயா கலாசார காவலர்களே நமது கலாசாரம் வேட்டியில் மட்டும் ஒளிந்து கொள்ளவில்லை.

தமிழன் தன்மானம் என்று கதைக்கும் கலாசார காவலர்களே நமது தன்மானம் வீரம் எல்லாம் மற்றவர்கள் நம்மை கவனிக்க வைக்க வீண் வெட்டி பேச்சு என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கிறீர்கள். தமிழ் கலாசார காவலர்கள் தங்களது  கலாச்சாரங்களை துறந்து வெகு காலம் ஆகின்றது. கவனிக்க நான் தமிழர்களை சொல்லவில்லை, தமிழ் கலாசாரம் பேசும் வீணர்களை சொல்கிறேன். இப்பொழுது கலாச்சாரம் பேசும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் அல்லது வாழும் தங்களது பிள்ளைச்செல்வங்களைக் காண வேட்டி கட்டிக்கொண்டா செல்கிறார்கள். வெட்கமில்லாமல் கோட் சூட் அணிந்துகொண்டு விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கிறார்கள். பின்னர் தமிழ் நாட்டில் இறங்கியவுடன் தங்களது தமிழ் கலாச்சாரம் என்ற ஆயுதத்தை ஏந்தி அரசியல் புரிகிறார்கள்.

கலாச்சாரம் கலாச்சாரம் என்கிறீர்களே, வேட்டி கட்டிக்கொண்டு செய்யும் இந்த செயலுக்கு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்?.

அண்ணே வேட்டிய பிடிச்சிக்கிங்க 


அண்ணே இன்னும் நல்லா தூக்குங்க...........





Follow kummachi on Twitter

Post Comment

சரக்கடிக்க டேபிள் மேட்

ரசித்த கீச்சுகள்

மீட்டிங்ல பேச எதுவும் இல்லாதபோது நாதஸ்வரம் கோபியா மாறிடுறார் மேனேஜர்...........சாவடிக்கிறான்யா-----------இளநிவியாபாரி

நாளைக்கே ஐ டி ப்ரொபெஷனல்ஸ் டென்சன் குறைக்க புது ஹார்லிக்ஸ் கொண்டு வந்தாலும் வருவாங்க------------உளறுவாயன் 

பைக்கில பெட்ரோல் ட்ரை ஆனா கூட கொஞ்ச தூரம் ஓடிருது, ஆனா டாஸ்மாக்க பார்த்தாதான் வண்டி நகரவே மாட்டேங்குது----------புருடா.

நிதிநிலை மேம்பட்டால் மேலும் வரிச்சலுகைகள்#அருண் ஜெட்லி தகவல். # நம்ம ஷோ தான் நல்ல இருக்கதேடா-----------சுபாஷ்.

இந்த ஹார்லிக்ஸ் எங்க மேனேஜர் மாதிரியே இருக்கு. எவ்வளவு கரைச்சாலும் கடைசியா கொஞ்சம் கரையாம மிச்சம் இருந்தே தீருது---------ட்விட்டர் MGR.

நான் ஏன் டேபிள் மேட் வாங்கினேன்னா அதுல வச்சு சரக்கடிக்க வசதியா இருக்குன்னும் ஒரு பிட்ட சேர்த்துக்கலாமே # டொக் டொக்--------புத்திசாலி.

ஜட்ஜூ ராதா இப்பல்லாம் உற்சாகத்துல ஹெவி டேன்ஸ் ஸ்டெப் போட்ட மேனிக்கு வராங்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு----------க்ருஷ்குமார்.

ரோஜாகாரு ரோஜாகாருன்னு சொல்றாங்க அது பார்க்க லாரி மாதிரியில்ல இருக்கு!!---------------சேட்டு.

மாப்பிள்ளைய ஓட ஓட வெட்டியா மாமனார். # ஏண்டா டேய் நான் ஊருக்கு போலாம்னு நினைக்கும் போதா இப்படியெல்லாம் நியூஸ் வரணும் -------கட்டதொர.

நான் உங்களை லவ் பண்றேன்னு சொன்னதும் பெருசு செத்துப் போகும், அப்பா வர்ற எழவு ரொமான்ஸ் சாங் அட்டகாசம்....ராசா மகராசா==முன்டாசுப்பட்டி

நன்றி: ட்விட்டர்


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 July 2014

டீ வித் முனியம்மா -------------பார்ட் 14

இன்னாடா பயம் (பழக்கடை செல்வம்) கொண்டித்தோப்பு ஜனம் அல்லாம் அந்த டிவி கடையாண்ட நின்னுக்கினு லுக்கு வுட்டுகிரானுங்கோ இன்னா விசயம்டா...........

அது ஒன்நியம் இல்ல முனிம்மா, ஃபுட் பாலு மேட்சு பாத்துகினுகீரனுங்க. சொம்மா நெய்மொரு, மெஸ்ஸி லஸ்ஸின்னு ரெண்டு பேரு தெரிஞ்சு வச்சிகின்னு நம்ம பசங்க நெம்பதான் அலம்பல் பண்றானுங்கோ...

டேய் மீச டீ போடுடா..............இன்னா முனியம்மா லிங்கம் சாரு, பாய், நாடாரு, லோகு அல்லாம் கூட அங்கதான் நின்னுகினு கீதா.....

லோகுவ இப்பதாண்ட கடையாண்ட பாத்தேன், நாய இட்டுகினு வந்துகினு கீறான்...........

சரி முனிம்மா பட்ஜெட்டுல இன்னா புச்சா கீது............

வா லிங்கம் சாரே, குந்து..............புச்சா ஒன்நியம் இல்ல, செட்டியாரு போட்ட அதே பட்ஜெட்ட பட்டிதட்டி டிங்கர் பண்ணி கொடுத்துகிரானுங்க, அவனவன் சோத்துக்கே அல்லடிக்கினி கீறான், செலை வைக்கோ இருநூறு கோடி போட்டுகிரானுங்க. அப்பால அது இது லொட்டு லொசுக்குன்னு அல்லாத்துக்கும் ஒரு குத்து மதிப்பா ஒரு நூறு கோடி போட்டுகிரானுங்க..

நீ இன்னா முனியம்மா இப்டி சொல்லுற, அம்மா ஐயா எல்லாம் சூப்பரு பட்ஜெட்டு அப்டின்னு சொல்றாய்ங்க......

அம்மா அப்டிதான் சொல்வாப்ல  அல்லாருக்கும் தெரியும், அது இன்னா செய்யும் பாவம், கோர்ட்டு கேசுன்னு கொடைச்சல் கொடுத்துகிரானுங்க, அதுல எஸ்கேப் ஆவனுன்னா அவனுங்களுக்கு சொம்படிச்சுதான் ஆவனும்.

கலீனரும் சூப்பரு பட்ஜெட்டு, கனிமோயி கோரிக்கைய எத்துகினு பட்ஜெட் போட்டுகிறாங்க, ஏயைக்கான பட்ஜெட்டுங்கிராறு.

அவருக்கு மவளும், பொஞ்சாதியும் மாட்டிகினு கீறாங்க, அவரும் அதையேதான் சொல்லுவாரு.

மொத்தத்துல இன்னா சொல்ற முனியம்மா இந்த பட்ஜெட்டுல நமக்கு இன்னா லாவம் சொல்லு.

அட போ நாடரு, நமக்கு இன்னா வரப்போவுது, பொயுதன்னிக்கும் நமக்கு பூ வியாவாரம், உனுக்கு மளிகை நமக்கு இன்னா லாவம்.

சரி வுடு முனியம்மா, இன்னா ராகுலு பையன் தூங்கிகினு கீரானு படம் போடுறானுங்க.

அதான் பாய் ஜெட்லி பட்ஜெட் வுட சொல்ல பையன் மட்டையாயிகிறான், அத படம் புட்ச்சி போட்டுகிரானுங்க, மோடி கூட தூங்கினாராமே. அதான் புரட்சி தலீவரு அப்பவே பாடினாரு நல்ல பொயுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவன் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டான்.........னு.

முனியம்மா அது அவர் பாடினது இல்ல, நம்ம பட்டுக்கோட்டையார் எயுதினது.

இருக்கட்டும் லிங்கம் சாரு, படத்துல பாடினது எங்க தானை தலைவருதான்...

வேட்டிகட்டின பெரிய மனுசங்கல கிளப்புல உள்ள உடமாட்டேன்னு சொல்லிகிரானுங்க, அத்த வச்சி சட்டசபையில பேசிகிறானுன்களே இன்ன மேட்டறு.

மெட்ராசுல நெறைய சரக்கடிக்க க்ளப்புங்க கீது, அதுல வேட்டி கட்ன ஆளுங்கள் உடமாட்டானுங்க, மப்புல எவனாவது உருவிட்டானா இன்னாவர்து........அதான்.

டேய் லோகு உன் புத்தி போவுது பாரு, அதெல்லாம் ஒரு மேட்டரா?

இன்ன நேத்திக்கி சட்டசபையில மின்வெட்டு வேற, மின் தடை வேறேன்னு நத்தம் சொல்லிகிறாரு........

அதுவா நாடார் சட்டசபையில அம்மாக்கு சொம்படிச்சு பென்ச் தட்ட சொல்ல ஏதாவது குடாக்கு மாதிரி பேசுவானுங்க...........நமக்கு இன்னா மின்வெட்டு மின்தடை அல்லாம் ஒன்னு தான்............சுச்சி போட சொல்ல ஃபேனு சுத்தாது.......அப்பால இன்னா..........

சரி முனியமா நடராசன உள்ளே போட்டுகிராணுங்க போல கீது.....

தோடா பயம் இங்க என்னாட நூசு கேட்க வரசொல்ல ரீஜென்டா இருக்கோணும், சொம்மா சசிகலா நடராசனு மேட்டரு இல்லாத மேட்டரு பத்தி கேட்ட அப்பால டப்பா டான்ஸ் ஆடிடும் அஹான்.......இந்த அர்ரெஸ்ட், ஜாமீனு, வஞ்சிரமீனு எல்லாம் சொம்மனாங்காட்டி செய்வாங்க..........போலீசு காரனுக வேலையில்லாம கீறானுங்க பாரு.  போடா போயி பொயப்ப பாரு இல்ல சினிமா நூசு பிகரு படம்னு பாத்துட்டு போய்கின்னே  இரு.

சரி முனியம்மா காண்டாவாத படம் இன்னா போட்டுக்கிறான் காமி





Follow kummachi on Twitter

Post Comment

Monday 14 July 2014

கலக்கல் காக்டெயில்-150

நிதிநிலை அறிக்கையும் நித்திரையும்

நாட்டின் நிதிநிலை அறிக்கை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இளவரசர் என்று எதிர்கட்சிகளால் அழைக்கப்பட்ட ராகுல் காந்தி ஆழ்ந்த நித்திரையில் இருந்ததாக செய்திகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தூங்குவது இந்திய ஜனநாயகத்திற்கு  ஒன்றும் புதிதல்ல. நரசிம்மராவ், தேவேகௌடா,  மன்மோகன் சிங்க், மற்றும் லாலு பிரசாத் போன்றவர்கள் தூங்கிவழிந்ததை நாடே அறியும்.

கர்நாடகாவில் சட்டசபையில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆபாச படங்களை அலைபேசியில் பார்த்துக்கொண்டிருந்த மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!! பாய்ந்தது நியாபகம் இருக்கலாம்.

தூங்குங்க நல்லா தூங்குங்க இல்லை ஆபாச விடியோ பாருங்க.

நிதிநிலை அறிக்கைபற்றி உங்களுக்கு என்ன கவலை? இல்லை நாட்டின் வளர்ச்சி பற்றிதான் என்ன கவலை?

உங்க சம்பளத்துல கைவைச்சா? முழிச்சிகிட்டு கொரலு விடுங்கப்பு. ஏன் என்றால் நாட்டில் பலபேரு நீங்க வாங்குற சம்பளம், மற்றும் லொட்டு லொசுக்கு அலவன்ஸ் என்று வரிகட்டா சலுகைகள் மீது காண்டா இருக்கானுவ?

வரி எல்லாம் மாத சம்பளம் வாங்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்குதான். உங்களுக்கு என்ன? நீங்கள் எல்லாம் காய்ச்சுவதே வேற...........

தூங்குங்க எசமான் நல்லா தூங்குங்க.

வலைச்சரம்

கடந்த  வாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்வாசி பிரகாஷ் பொறுப்பேற்பதற்கு இரண்டு நாள் முன்பு செய்தி அனுப்பியிருந்தார், குறைந்த அவகாசம்தான் உள்ளது முடியுமா? என்று கேட்டார். செய்கிறேன் என்று தொடங்கினேன். கிட்டதட்ட இருபத்தி ஒன்பது பதிவர்களை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

எல்லா பதிவர்களையுமே விரும்பி படிப்பதாலும், அவர்களது சில குறிப்பிட்ட இடுகைகளை நியாபகம் வைத்துக்கொண்டிருந்ததாலும் அவற்றை தேடிக்கண்டு பிடித்து சுட்டி கொடுக்க முடிந்தது. இருந்தாலும் சில பேரினுடைய எனக்குப் பிடித்த இடுகைகளை தேடிக்கண்டு பிடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு சேட்டை அவர்கள் பேல்பூரி பற்றி ஒரு பதிவு எழுதியிருப்பார், நல்ல நகைச்சுவை பதிவு, மேலும் பார்த்தசாரதி கோயிலில் நண்பருடன் சேர்ந்து மொட்டை போட்டதை பற்றிய ஒரு பதிவு இரண்டையும் கண்டு பிடிக்க முடியவில்லை, ஒரு வேளை அவர் வெளியிட்ட புத்தகத்தில் சேர்த்திருந்தால் இடுகையை எடுத்திருக்கலாம்.

இருந்தாலும் பதிவர்களை அறிமுகப்படுத்துவது அவர்களது சில இடுகைகளை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவாலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த  வாய்ப்பளித்த வலைச்சர ஆசிரியர் குழுமத்திற்கு நன்றி.

சட்டசபையில் பெஞ்சு தட்டும் அவலம்

தமிழ்நாட்டில் சட்டசபை மீண்டும் கூடியது --- இது செய்தி.

அதை தொடர்ந்து நாம் எதிர்பார்த்தபடி மற்ற கட்சிகள் வெளிநடப்பு, சட்டசபை வாயிலில் தொலைக்காட்சிக்கு பேட்டி என்று வழக்கமான செய்திகள் அந்தந்த கட்சி தொலைக்காட்சிகளில் ஓடும்.

எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு ரத்தத்தின் ரத்தங்கள் அம்மா புகழ்பாடி, எல்லா அணைகளையும் திறந்துவிட்ட அம்மா கருணை உள்ளத்தை மெச்சி சொம்பு தூக்கி பெஞ்சு தட்டுகின்ற வைபவம் இனிதே நடக்கின்றது.

எப்படியும் அடுத்த கூட்டத்தொடருக்கு முன் ஒரு அல்லக்கை சட்டசபை பெஞ்சுகள் மாற்றும் காண்டிராக்டு எடுக்காம விடமாட்டாக  போல....

டேய் நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க............

ரசித்த கவிதை

கொடுமையிலும் கொடுமை இது தான்.


ஊன்  உடலே சோர்ந்தாலும்
உள்ளம்  தளர்ந்து போனாலும்
நான்  வருவேன் உனக்காக
நெஞ்சில்  நிறைந்த தேவதையே!!

வான்பரப்பில் நிலவைப் போல்
வந்துதிக்கும்  உன் நினைப்பால்
தேன் சுரக்குது சிந்தைக்குள்
தித்திக்கும்  செம் பூவே !!.....

காத்திருந்து வாடாதே
கண்மணியே தேடாதே
பூத்த   விழி  தாங்காதே
புண்பட்டால் மனமும் தூங்காதே..

நேத்து வரை எமக்காக 
நெடுந்   துயர்கள் கடந்தவளே
ஊத்தெடுக்கும் நன்நீரைப் போல்
ஓடி வருவேன் கலங்காதே ....

தூரத்தில் இருந்தாலும் 
தொல்லை பல இங்கு நேர்ந்தாலும் 
நேரத்தைப் பார்த்தபடி 
நெஞ்சுருகி நானிருப்பேன் 

காலத்தின் கொடுமையினால் 
கடல் கடந்து சென்று விட்டீர் 
ஆழத்தை அறிவார்  எவர் தான்
அர்த்தமற்ற வாழ்வில் இன்று!! 

தாயோடு மகளும் இல்லைத் 
தந்தையோடு தாயும் இல்லை 
நாடோடியானோம் இன்று இந்த 
நரகத்தை என்ன சொல்வேன் !!

--------------------------------------------அம்பாளடியாள் 

ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Thursday 10 July 2014

பட்ஜெட்டும் பண்டாரங்கள் சுடும் பக்கடாக்களும்

ஆப் கி பார் மோடி சர்க்கார் பட்ஜெட் இப்பொழுது நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வழக்கம்போல புதியதாக ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. போன ஆட்சி செட்டியார் பட்ஜெட்டை கொஞ்சம் டிங்கர் பண்ணி, பட்டி தட்டி ஜிகினா ரிப்பன் கட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

மாதந்திர சம்பளகாரர்களுக்கும் மற்றும் அன்றாடங்காயச்சிகளுக்கும் ஒன்றும் இதனால் பயனில்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்று செட்டியார் ஆரம்பித்தவுடன் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அதே கூட்டம் இப்பொழுது எல்லாவற்றிலும் அந்நிய முதலீடு என்று கிழவியை தூக்கி மனையில் வைக்கிறார்கள்.

சரி எப்படியோ போகட்டும் நம் அரசியல் வாதிகள் இந்த பட்ஜெட் பற்றி என்ன சொல்லுவார்கள்.

அம்மா: நாட்டை வளர்ச்சி பாதையிலே கொண்டு செல்லக்கூடிய நல்ல நிதிநிலை அறிக்கை, இதனால் ஏழைமக்கள் பயனுருவார்கள், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தக்கூடிய நல்ல அம்சங்கள் உள்ளன.

கலைஞர்: வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு ஒன்றும் இல்லை. ஏழைகளை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கை இது. அம்மையார் சொத்துக்குவிப்பு வழக்கை மனதில் கொண்டே இதை நல்ல பட்ஜெட் என்கிறார் என்பதை மக்களாகிய நீங்கள் நன்று அறிவீர்கள்.

ராமதாஸ்: எனது மகன் அன்புமணி கூறிய அறிவுரைகளை ஏற்காமல் மத்திய அரசு இந்த நிதிநிலை அறிக்கையை தயார் செய்துள்ளது. இதனால் சாதாரண ஏழை குடிமக்களை இன்னும் ஏழையாக்கும் நிதி நிலை அறிக்கை மேலும் வன்னியர்களுக்கு என்று எந்த ஒரு நிதியும் ஒதுக்காததை பா.ம.க வன்மையாகக் கண்டிக்கிறது.

கேப்டன்:இந்த நிதிநிலை அறிக்கை நாட்டை வளர்ச்சிப்பாதையிலே கொண்டு செல்லும் என்று அந்தம்மா சொல்லுது. ஒன்று புரிஞ்சுக்கங்க மக்கழே சரக்குக்கு  வரியை குறைக்கவில்லை என்றால் எந்த நாடும் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியாது. நாளுக்கு நாள் அந்தம்மா சரக்கு விலைய ஏற்றி ஏழை வயிற்றில் அடிக்குது அப்புறம் எங்கே வளர்ச்சி. 

மக்கள்: இவனுங்களுக்கு இதே பொழைப்பா போச்சி.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 7 July 2014

டீ வித் முனியம்மா -----பார்ட் 13

டேய் மீச இன்னாடா உங்காளுங்க அல்லாம் ஒய்ங்கா கீறாங்க......

எண்டே முனியம்மா என்ன சோதிக்கினு?

அடப்போடா கட்டடம் மய பெய்ஞ்சு உயுந்துதே உங்காளுங்க மலயாலத்தானுங்க செத்துட்டானுங்களா பொயச்சு கிட்டானுங்களா?

ஹேய் நம்மாளுங்க குவைத்துலதான் கொளுத்து வேலைக்கு போவும், இவ்விட அல்லா.

அப்படி போடுறா அரிவாள, அதானே இங்கன டீதானே ஆத்துவீங்க...இன்னாடா சொல்லுற பயம்.

அஹான் முனியம்மா, மொக்ளிவவாகாத்துல கட்டடம் கட்ட சொல்லவே உயுந்துகிது,  கொளுத்துக்காரனுங்க அல்லாம் கொயந்தகுட்டியோட மாட்டிக்கினு கீறானுங்க.

அதாண்டா கேலு, பயர் சர்வீஸ் காரனுங்க மூணு நாலு சோறு தண்ணி இல்லாம வேலை செய்து, சில உயிருங்கல காப்பாத்திகிறானுங்க. நாலு மோப்ப நாயி இட்டாந்து தேடி நெறைய பொணத்த எத்துகிரானுங்க.

முனியம்மா இப்போ எல்லா பேட்டையிலும் புச்சு புச்சா கட்டிடம் எயுப்புரானுன்களே, அல்லாத்துக்கும் பெர்மிசனு வாங்கிருப்பானுங்க.

அதெல்லாம்  நமக்கு தெரியாது பாய், ஆனா துட்டு விளையாடுதுன்னு பேசிக்கிராய்ங்க.

அத்த வுடு, முனியம்மா அம்மா ஒரு ஆள போட்டு விசாரணை கமிசன் வச்சிருக்கீதே.

அவரு இன்னா செய்வாரு நாடார், ஓய்வு கெடச்ச பொறவு, இது மாதிரி கமிசன் போட்டு துட்டு கொடுத்து அறிக்கை கேப்பாங்க, அவரும் ஒரு முயு அறிக்கை கொடுப்பாரு,அத்த வாங்கி கூவத்தாண்ட காவால போட்டு போய்கினே இருப்பாங்க.

ஆப் கி பாரு சர்க்காரு, ன்னு கூவி கூவி ஒட்டு வாங்கினாங்க இப்போ அல்லா வெலயும் ஏத்திகினு போய்கினே இருக்காங்க.

அதெல்லாம் லிங்கம் சார் யார் வந்தாலும் அதையே தான் செஞ்சுகின்னு இருப்பாங்க.

டேய் இன்னடா லோகு கம்முனு குந்திகினு கீற.........

ஒன்னியம் இல்ல முனியம்மா, ரயிலு டிக்கட் வெலையெல்லாம் எத்திகிரானுங்க, பொஞ்சாதி வேற ஊருக்குஅம்மா வூட்டுக்கு போவனும்னுது  இன்னா செய்யுறதுன்னு பாக்குறேன்.

அடப் போடா குடாக்கு, அதுக்கு இன்னா இப்போ உன் கடையில பானு பராக்கு வச்சுகிற இல்ல அத்த வெலை ஏத்திடு, தானிக்கி தீனி சரி போயுந்தி.

முனியம்மா சினிமா நூசு இன்னா........

இன்னாடா சினிமா இப்ப படம் வருது ஒன்னியும் நல்லா இல்ல, நம்ம தலிவர் படம் மாதிரி வருமா?இல்ல அப்ப வந்த ஹீரோயினி மாதிரி வருமா? 

கண்ட பிகருங்க எல்லாம் இப்ப நடிக்குதுங்க இன்னாத்த சொல்ல.



 

Follow kummachi on Twitter

Post Comment

Friday 4 July 2014

கலக்கல் காக்டெயில்-149

மவுலிவாக்கம் சொல்வது என்ன?

மவுலிவாக்கத்தில் பதினொரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட அறுபது உயிர்கள் இது வரை பலியாகியிருக்கிறது. தேடுதல் பனி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் அரைமணிநேர மழைக்கே கட்டிடம் பாதி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இடிந்து விழுந்துள்ளது.

இப்பொழுது அரசு தனது இருப்பை காட்டிக்கொள்ள ஒரு ஒய்வு பெற்ற நீதிபதியை அழைத்து காசு கொடுத்து "இன்னா நடந்துதுன்னு கண்டு பிடி நைனா?" என்று ஆணையிட்டிருக்கிறது. மறுபுறம் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமமும் எல்லா அதிகாரிகளையும் முடுக்கி இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் அடுக்குமாடிக்கட்டிடங்கள், கட்டி முடித்தவை, ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டவை எவை எவை என்று ஒரு ஆய்வறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல் இல்லாமல் கட்டப்படுவது சென்னையில் காலம்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

எனது நண்பர் கட்டிட தொழிலில் உள்ளார். அவரிடம் இதை பற்றி விசாரித்த பொழுது இதெல்லாம் இங்க சாதாரணம் என்றார். நாம் ஒப்புதல் வாங்கிக்கட்டலாம் என்றால் நமது வரைபடத்தை சமர்ப்பித்தவுடன் ஒரு அதிகாரி வருவார், பார்வையிட்டு விட்டு கட்ட ஆரம்பிக்கலாம் சார், ஒப்புதல் வாங்கிக்கோங்க என்பார் ஆனால் ஒப்புதல் சான்றிதழ் மட்டும் கைக்கு வரவே வராது. அவை அதற்கப்புறம் சந்திப்பதே குதிரை கொம்பு. இதெல்லாம் அவர்களின் நிரந்தர வருமானத்திற்கு வழி என்றார். உண்மைதான்.

இப்பொழுது ஆய்வு செய்யும் அதிகாரிகள் கூடிய விரைவில் ஒருஅடுக்குமாடி கட்டிடம் வாங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

யார்யா இந்த ஷரப்போவா?

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரப்போவாவிடம் சச்சின் தெரியுமா என்று கேட்டதற்கு யார் பா அவரு எனக்கு தெரியாது என்று சொல்லப்போக நமது சச்சின் வெறியர்கள் சமூக வலைதளங்களில் ஷரப்போவாவை நார் நாராக கிழித்துவிட்டார்கள்.

அட அப்ரசண்டிகளா அதுக்கு ஏண்டா? மெர்சல் ஆவுறீங்க,பதிலுக்கு  எங்களுக்கு கூடத்தான் "ஷரப்போவா"  காலு, தொடை மட்டும் தான்   மற்றபடி அந்தம்மா மூஞ்சி தெரியாதுன்னு சொல்லிட்டு போவ  வேண்டியதுதானே.

ரசித்த கவிதை 
குழந்தை வரைந்த ஓவியம்


குழந்தை
வட்டமும் சில கோடுகளும்
வரைந்து
அம்மா என்றது
வட்டத்திற்குள்
மேலும் ஒரு கோட்டை
படுக்க வைத்து
அப்பாவையும் கைப்பிடித்தது
அம்மாவுக்குப் பக்கத்தில்
மேலும் ஒரு வட்டத்தை வைத்து
தானே மூன்றாவதானது
படைத்தவர்களை ஒன்றாகவும்
படைப்பைத் தனியாகவும்
காட்சிப் படுத்திய குழந்தையின்
கன்னத்தில் முத்தமிட்ட தாய்
அம்மாவுக்கு
முத்தம் தாவென யாசிக்கையில்
குழந்தை முத்தமிட்டது
தான் படைத்த அம்மாவிற்கு


ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 2 July 2014

கோட்டையில் கொடியை நாட்டி..............

நேற்று  எனது வலைப்பூவை புதுப்பிக்க வந்த மின்னஞ்சலையும் அது தொடர்பான எனது பிரச்சினைகளையும், தொழில்நுட்ப வித்தகர்களின் உதவியையும் நாடி பதிவு இட்டேன்.

நேற்றைய பதிவை படிக்க இங்கே  சொடுக்கவும்.


வழக்கம்போல் திண்டுக்கல் தனபாலன் சுட்டி அனுப்பி முயற்சிக்க சொல்லியிருந்தார். ப்ளாகர் நண்பனின் தளத்தில் மேற்கூறிய பிரச்சினைக்கு தீர்வு அளித்திருந்தார்.

அவரது பதிவை கவனமாகப்  படித்து அவர் கூறியபடியே செய்து பார்த்தேன் பின்பும் "பப்பரப்பா" தான்.  பின்புதான் தெரிந்தது கூகுள்அட்மின் கன்சோலில் நுழைய நமது ப்ளாகை டாட் காமாக மாற்றிய பொழுது கொடுத்த மின்னஞ்சல் விவரம் தேவை. அது நமது முதன்மை கணக்கு மின்னஞ்சல் அல்ல. பகவான்ஜி பின்னூட்டத்தில் வந்து யோவ் நீர் எப்படி கல்லாவை தொறந்தே என்று எல்லோருக்கும் சொல்லு என்று கேட்டிருந்தார்.

ப்ளாகர் நண்பனில் அப்துல் பாசித் கடவுச்சொல் மீட்க வழிகள் கொடுத்திருந்தார். ஆனால் "user name" மறந்து போன என் போன்ற தீவட்டிகளுக்கு எந்த தொழில் நுட்ப வல்லுனர்களும் உதவ முடியாது. இருந்தாலும் மூஞ்சிப்புத்தகத்தில் சொடுக்கி அனுப்பி   http://
www.mykeepcalmandcarryon.com/2013/09/tutorial-how-to-renew-your-blog-domain.html
கல்யாண சுந்தர் முன்வந்தார். இருந்தாலும் தவறு என் மீது. " user name" மறந்து விட்டது. ********@kummacchionlie.com என்ற முகவரியில் முன்பாதி என்ன கொடுத்தேன் என்பது மறந்துவிட்டது. நான் டாட் காம் மாறி நான்கு வருடங்களாகிறது.கூகிளாண்டவரிடம்  முறையிடலாம் என்றால் அவரது தரிசனம் கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது. மேலும் அவரை அணுக எங்கு கப்பம் கட்டவேண்டும் போன்ற விவரங்கள் என்னிடம் இல்லை. Forum சென்று கூட்டு பிரார்த்தனை செய்யலாம் இருந்தாலும் என் போன்ற மாங்காக்களுக்கு அங்கு விவரம் கிடைக்காது.

இரவு முழுவதும் யோசித்து தூக்கம் கெட்டது. காலையில் அசதியில்  உறங்கிய பொழுது கனவில் வேறு எனது வலைப்பூ இன்னும் இரண்டு வாரங்களில் இயற்கை மரணம் அடைந்து விடுவதாகவும், பின்பு நான் பிரிவாற்றாமையால் வாடி சரக்கடிக்க காசு வாங்க மனைவியிடம் கெஞ்சுவதாகவும்  பயமுறுத்தி எழுப்பிவிட்டது. 

காலையில் எழுந்ததும் மனைவி வேறு என்ன ஏதோ பறிகொடுத்தது போல் இருக்கிறீர்கள், ஏன் இன்று சரக்கடிக்க ஏதாவது புது கதையா? என்று ஏடாகூடமாக கேள்வி கேட்கவே விவரத்தை சொன்னேன்.

எப்பொழுதும் டைரியில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பீர்களே இதை எல்லாம் எழுதி வைக்கக்கூடாதா? என்று உசுப்பி விடவே 2010 வருட டைரியை தேடிக்கண்டு பிடித்ததில் ஜூலை மாதம் ஏதோ ஒரு தேதியில் இந்த விவரத்தை பென்சிலில் குறிப்பிட்டு வைத்திருந்தேன், அதை போட்டு பார்க்க கூகுள் கன்சோல் கோட்டை  வாசல் திறந்தது.

யுரேகா யுரேகா ( எவோ அவ ரேகா) என்று கூவி விட்டு கடனட்டை விவரங்களை சரிபார்த்தேன், எல்லாம் சரியாகவே  இருந்தது.

ஆதலால் இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் user name என்ன கொடுத்தீர்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் வாங்கியவர்கள் என்றால் bloggeradmin@உங்கள் வலைப்பூ முகவரி.com  என்றிருக்கும். வெகுகாலம் முன்பு செய்திருந்தால்  bloggeradmin என்ற இடத்தில் வேறு பெயர் கொடுத்திருப்பீர்கள். அதை நினைவு கூர்வது நல்லது.

இல்லை என்றால் எத்துனை முறை நமது வலைப்பூ முகவரி கொடுத்தாலும் இது இப்பொழுது கணக்கில் இல்லை என்று வரும்.

கூகிள் என் இந்த முகவரியை நமது முதன்மைக் கணக்குடன் இணைக்கவில்லை என்பது புரியாத புதிர்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 1 July 2014

ஐயா,அம்மா, கனவான்களே..............

இன்று காலையில் கூகிளிருந்து மின்னஞ்சல் வந்தது. எனது கும்மாச்சி தளம் இந்த மாதம் இருபத்தியேழாம் தேதி நிறைவடைந்துவிடும். நீங்கள் உங்களது  தளத்தை புதுப்பிக்க உங்களது கடனட்டை விவரங்களை சரிபார்க்கவும் என்று சொடுக்கியும் கொடுத்திருந்தார்கள்.

https://support.google.com/a/answer/4377734



இதை சொடுக்கி அந்தப் பக்கத்திற்குப்போனால்,எனது மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்டது, அதை கொடுத்து சொடுக்கியபின் திரும்பவும் அதே பக்கமே வருகிறது.

இதில் எப்படியோ தேடிக்கண்டு பிடித்து கூகிள் அட்மின் கன்சோலுக்கு செல்லலாமென்றால் எத்துனை முறை எனது மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல் கொடுத்தாலும் திரும்பவும் ஒரே பக்கத்திலேயே பப்பரப்பா என்று நிற்கிறது. திரும்பத்திரும்ப கடவுச்சொல்லை கேட்டு கழுத்தருத்துக்கொண்டிருக்கிறது.

நான் எனது கும்மாச்சி தளத்தை பிளாக்கர் மூலமாக பெற்றுக்கொண்டேன். பின்னர் இரண்டு வருடங்கள் "Google Wallet" மூலமாக தானாகவே புதுப்பிக்கப்பட்டது.

தற்பொழுது கூகிள் ஒரு முறை கூகுள் கன்சோல் சென்று உங்களது பில்லிங் விவரங்களை சரிபார்க்கவும் என்று சொல்கிறது.

காலையிலிருந்து அன்னந்தண்ணி  உண்ணாமல் இந்த கூகிள்   கன்சோலில் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் கோட்டை கதவு திறக்கவில்லை. இதில் பின்வழியாக நுழைய ஏதாவது கதவுகள்உள்ளதா, இல்லை நமது மின்னஞ்சல் கணக்கு வழியாக நுழைய முடியுமா?

இந்த துறையில் விஷயம் தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்தால் அவர்களது எல்லா பதிவுகளும் கோடானுக்கோடி ஹிட் பெற்று பிரபல ப்ளாகர்களின் எழுத்தில் சிக்கி சின்னாபின்னாமாகாமல் இருக்க எல்லாம் வல்லவனை வேண்டிக்கொள்கிறேன்.


 

Follow kummachi on Twitter

Post Comment