Thursday 28 June 2012

ஒலிம்பிக் விளையாட்டு நகைச்சுவைகள்


ஜோக் 1
ஒலிம்பிக்கில் "ஃபென்சிங்" விளையாட்டில் பங்குபெரும் ஒரு ஜெர்மனிய வீரரும், ஒரு பிரான்ஸ் நாட்டு வீரரும், ஒரு ஹங்கேரிய வீரரும் தங்கள் பெருமைகளை பேசிக்கொண்டனர். யோவ் சும்மா பேசினா போராதய்யா சும்மா அவன் அவன் திறமையை காமிங்க என்றார் ஜெர்மானிய வீரர்.
உடனே பிரான்ஸ் வீரர் தன்னுடைய வாளை உருவி அங்கே பறந்து கொண்டிருந்த ஒரு ஈயை நோக்கி வீசினார். ஈ சரியாக இரண்டு துண்டாக விழுந்தது.

உடனே ஜெர்மனிய வீரர் தன் வாளை சுழற்றி மற்றொரு ஈயின் மீது சுழற்றி வீசினார், ஈ தன் இரண்டு இறக்கைகளும் துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது.

இப்பொழுது ஹங்கேரிய வீரர் தன் வாளை எடுத்து மற்றொரு ஈயின் மேல் இரண்டு மூன்று முறை வீசினார். ஆனால் ஈ பறந்து கொண்டே இருந்தததை பார்த்து மாற்ற இருவரும் நக்கலாக சிரித்தனர்.
ஹங்கேரிய வீரர் தன் வாளை கீழே போட்டு தன் இரு கைகளையும் வெற்றி என்று உயர்த்தினார். 

“இனி அந்த ஈயால் இனப்பெருக்கம் செய்யமுடியாது” என்றார் ஹங்கேரிய வீரர்.

ஜோக் 2
அந்த வீரர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று விட்டு ஒரே புலம்பல். கூட இருந்தவர் "யோவ் ஏன் புலம்புறீர் உனக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்று மகிழ்ச்சியாய் இரு" என்றார்.

அதற்கு "யோவ் வெள்ளிப்பதக்கம் என்னான்னு தெரியாம பேசாதே.
அதற்கு அர்த்தம் நீ கிட்டத்தட்ட வென்றுவிட்டாய், ஆனால் வெல்லலை, மேலும் தோத்துப்போன கேனயன்களில் நீதான் முதல் என்று சொல்லாம சொல்லுறாங்க, அதான்யா புலம்புறேன்".

ஜோக் 3
அது சுத்தி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று.
ஒரு ரஷ்ய வீரர் முதலில் எறிந்தார் மிக அதிக தூரம் கிட்டத்தட்ட உலக சாதனை எண்பத்தைந்து மீட்டர்களை எட்டிவிட்டார். உடனே நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவரின் சாதனையைப்பற்றிக் கேட்டனர். அதற்கு நான் ரஷ்யா ரானுவப்படையில் இருக்கிறேன் அங்கு எனக்கு கற்று கொடுக்கப்பட்ட ஒழுக்கமே காரணம் என்றார்.

அடுத்ததாக ஒரு பல்கேரிய நாட்டு வீரர் எறிந்தார் அவர் முன்பு வீசிய ரஷ்யா வீரரை வீட இரண்டு மீட்டர் அதிகம் எறிந்தார். உடனே நிருபர்கள் அவரை மொய்த்தனர். அதற்க நான் விவசாய குடும்பத்திலிருந்து வருகிறேன். விவசாயம் செய்து என் உடம்பு தெம்பு ஏறியதே காரணம் என்றார்.

மூன்றாவதாக வந்த இங்கிலாந்து வீரர் அலட்சியமாக எறிந்து நூறு மீட்டரை எட்டினார். அவருக்கு தங்கம் கிடைத்தது, இப்பொழுது அவரை சுற்றி ஒரே நிருபர்கள் கூட்டம், அவரது வெற்றிக்கு காரணம் கேட்டனர்.
அதற்கு அவர் “நான் ஒரு வாழைப்பழ சோம்பேறிக் குடும்பத்தில் பிறந்தவன். எங்களிடம் யாராவது வேலை செய்ய சொல்லி சுத்தி கொடுத்தால் அதை கண்காணாமல் எறிந்து விடுவோம்” என்றார்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 25 June 2012

துப்பாக்கி (சுடப்பட்ட கதையா?)


துப்பாக்கி கதை என்ன என்பதை முதன் முதலாக ஒரு இணையம் வெளியிட்டுள்ளது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துப்பாக்கி வழக்கமான கதையாக இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது என்று எல்லோராலும் பேசப்படுகிறது. இனி கதைக்கு போவோமா...............

கதை கதாநாயகன் கதாநாயகிக்கு கடிதம் மூலமாகவே சொல்லுவது போல் உள்ளது. இனி.........................

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். 

“அலுவலகத்தில் இருக்கிறேன் நீலகிரிஸில் சாயங்காலம் சந்திக்கலாம்” என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலிக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனை பார்த்தபோது “எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது” என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிகபட்சம் என்றாலும் எருமைமாடு என்பது உனது அப்பனுக்கு குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டர் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவர் கண்களில் மின்னியதை நான் கவனிக்க தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குபின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிருக்கும் டேபிளிற்கும் இடையே சும்மார் நூறு ஓட்டங்களாவது எடுத்திருப்பான் சர்வர்.

கதாநாயகி நான் இல்லை
சரவணபவனிலும், தலப்பாகட்டிலும் நீ புல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சினை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே.

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டுவர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது “தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லப்பா..........வயசாச்சில்ல........” என தன் திருவாய் மலர்ந்தார். திடப் பொருளிருந்து இப்போது ரோஸ்மில்க் என்ற திரவப் பொருளுக்கு மாறினார். அப்பாடா ஒரு வழியாக முடித்து விட்டார் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று இருந்த பொழுது “ஒரு கஸார்ட்டா” என்று மேலும் சர்வரை அழைத்தார். கஸார்ட்டாவும் ஜருதா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதை தவிர கோவிலில் உண்டைகட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உங்கப்பனுக்கும் ஆறு வித்யாசங்கள் கூட இல்லை.  “தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடறது நல்லதுப்பா” என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியது.

படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லீங்கோ
ஸார் நான் உங்க பெண்ணை விரும்பறேன், அவளையே கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அது விஷயமாக பேசத்தான் போன் பண்ணினேன்” என்று மெல்ல பேச்சை துவங்கினேன். “அப்ப போன வாரம் இது விஷயமாய் பேச ஆனந்தபவனுக்கு வந்தது நீங்க இல்லையா தம்பி” என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான் மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை ப்ரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.

“தம்பி இது பெரிய விஷயம், ஒரே நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது நீங்க என்ன பண்றீங்க நாளைக்கு அன்னபூர்ணா வந்துடுங்க அங்கே பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனை கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது எனது துர்பாக்கியமே.

என்ன இப்போ புரிஞ்சுதா துப்பாக்கி கதை.
மின்னஞ்சலில் வந்த ஒரு கதைதான் இங்கு சுடப்பட்டிருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 24 June 2012

கண்ணதாசன்


ஜுன் 24, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள். அவர் எழுதிய எத்தனையோ பாடல்கள் இருக்க, பின் வரும் பாடல் ஓரு தனித்துவம் பெற்றது.  அவருக்கே உரிய நக்கல் உணர்வில் எழுதியது. பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” பாடலை எக்கால தமிழ்நாட்டிற்கும் பொருந்துமாறு மாற்றி எழுதிய கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி.  

செந்தமிழ் நாடெனும் போதினிலே ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!

காவிரி தென்பெண்ணைப் பாலாறு தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி என
மேவிய ஆறு பலவினிலும் உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!

நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே வட
மாலவன் குன்றம் தனில்ஏறி தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!

கல்விசிறந்த தமிழ்நாடு காம
ராசர் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!

சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலைஇமயம் எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!


இன்னமும் எத்தனை வருடங்களானாலும் அன்றன்றைய நிலைமைகளை அப்படியே கண்முன்பு நிறுத்தும்விதமாக பாடிச்சென்றிருக்கும் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்லுவது!

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 23 June 2012

அஞ்சாநெஞ்சன் பயோடேட்டா


இயற்பெயர்
மு.க. அழகிரி
நிலைத்த பெயர்
அஞ்சாநெஞ்சன்
தற்போதைய பதவி  
மத்திய அமைச்சர்    
தற்போதைய தொழில்
பண்ணையில் ஓய்வெடுப்பது   
உபரி தொழில்
தலைமைக்கு குடைச்சல் கொடுப்பது    
பலம்
குண்டர்கள்
பலவீனம்
அஞ்சாம் வகுப்பு   
தற்போதைய சாதனை
வெளியே இருப்பது
நீண்டகால சாதனை
திருமங்கலம் பார்முலா கண்டுபிடித்தது   
சமீபத்திய நண்பர்(கள்)
தம்பியின் எதிரிகள்    
நீண்டகால நண்பர்
இல்லாதுதான் பிரச்சினை
பூர்வீக சொத்து 
மதுரை
தற்போதைய சொத்து
கைக்கு வரவில்லை
சமீபத்திய எரிச்சல்
தலைமை கண்டுகொள்ளாதது
நிரந்தர எரிச்சல்
தினகரன் கருத்துக்கணிப்பு  
நம்புவது
அதிர்ஷ்டம்  
நம்பாதது
தலைமை
பிடித்த பல்லவி
அச்சம் என்பது மடமையடா
பிடிக்காத பல்லவி
அண்ணன் என்னடா தம்பி என்னடா
பாராளுமன்றம்  
எங்கே இருக்கு?   



Follow kummachi on Twitter

Post Comment

Friday 22 June 2012

தொழில்நுட்ப பதிவர்களுக்கு நன்றி


முதன் முதலில் என்னுடைய வலைப்பூ தொடங்கி கிட்டதட்ட ஒரு நான்கு மாத காலம் ஒன்றும் பிரச்சினை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் ஈழப் பிரச்சினை வேறு நல்ல உச்சகட்டத்தை அடைந்த காலம். அதைப் பற்றி சூடான  இடுகைகள் போட்டுக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் பார்த்தால் ..த்தா என் வலைப்பூவை காணவில்லை.

அடடா என்ன ஆச்சு, மவனே ராஜபட்சே பன்னிதான் என் வலைக்கு ஆப்பு வச்சிட்டான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். பின்னர் நைஜீரியா ராகவன் யோவ் அது பிரச்சினை இல்லையா, உன்னோட டெம்ப்ளேட்ல ஏதோ கோக்குமாக்கு ஆயிடுச்சி அதை முதலில் செக் பண்ணு என்றார். நமக்கு டெம்ப்ளேட் எல்லாம் தெரியாது சாப்பாடு ப்ளேட் தெரியும், நம்பர் ப்ளேட் தெரியும். இதென்னடா வம்பா போச்சி என்று கூகிளாண்டவரிடம் முறையிட்டேன். அவரோ என்னால் ஒன்னியம் பண்ணமுடியாது விஷயம் எமனிடம் போயிடுச்சி என்றார்.
புட்டுக்கிச்சு

பிறகு ஒரு புதிய வலைப்பூ வேறே பெயரில் (குறுக்கே தேவையில்லாத எழுத்தெல்லாம் போட்டு) தொடங்கினேன். பழைய இடுகைகளை தேடிக்கண்டு பிடித்து மீள் பதிவாக போட்டேன். இருந்தாலும் பழைய வலைப்பூவில் இருந்த முப்பதாயிரம் ஹிட்சும் ஒரு நூற்றைம்பது பின்தொடர்பவர்களும் புட்டுக்கின்னு கோவிந்தாவாயிடிச்சி.
சரி இனி விஷயம் தெரியாம டெம்ப்ளேட் பக்கம் போகக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். 
கவலை வேண்டாம், நான் இருக்கேன் மாமு.

வந்தேமாதரம் சசிகுமார்
அப்பொழுதுதான் நமக்கு ஆபத்பாந்தவனாக வந்தார் நம்ப வந்தேமாதரம் சசிகுமார். இவருடைய வலைப்பூவை பின் தொடர்ந்து பார்த்து என் வலைப்பூவில் சிறு சிறு நகாசு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். அந்த விஷயத்தில் எனக்கு இதில் தொழில்நுட்பங்களின் அரிச்சுவடியை அறியத்தந்தவர், சசிகுமார். 



ப்ளாகர்நண்பன் அப்துல் பாசித்
அப்துல் பாசித் அவர்களின் வலைப்பூ ப்ளாகர் நண்பன், பெயருக்கு ஏற்றது போலவே புதிதாக பிளாக் தொடங்கியவர்களுக்கு இவரின் தளம் எல்லா டிப்ஸ் களையும் அள்ளி வழங்கும். இவர் கிட்டத்தட்ட இதை ஒரு தொடராகவே எழுதினார். என் வலைதளத்தில் பிரச்சினை என்றால் இவருடைய தளத்தில் நமக்கு வேண்டிய தீர்வு கிடைத்துவிடும்.



கற்போம் பிரபு கிருஷ்ணா
மற்றுமொரு தொழில் நுட்ப வலைப்பூ. பிரபு கிருஷ்ணா தளத்தில் சென்றால் ஃபீட் பர்னர், ஓட்டுப் பட்டை பிரச்சினை போன்றவற்றிற்கு  லகுவாக தீர்த்து வைப்பதற்கு தீர்வுகள் வைத்திருப்பார்.
என் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வெகுநாட்களாக வேலை செய்யாமல் இருந்தது. எத்தனை முறை நீக்கி மறுபடி போட்டாலும் வேலை செய்யாது. அதற்கு தீர்வு இவரிடம் கிடைத்தது. பிரச்சினையில் ஓட்டுப்பட்டையில் இல்லை ஃபீட் பர்ணரில் தான் உள்ளது என்று தீர்த்து வைத்தார்.



இப்பொழதெல்லாம் வலைப்பூவில் பிரச்சினையா? ஞே.... என்று முழிக்க வேண்டாம் இவர்களது தளத்திற்கு சென்றால் தீர்வு கிடைத்துவிடும்.

இந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் சேவையை வாழ்த்த எனக்கு தொழில்நுட்ப அறிவில்லை வணங்குகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 21 June 2012

கலக்கல் காக்டெயில்-76


அப்துல் கலாம்
குடியரசு தலைவர் போட்டிக்கு வேட்பாளர்கள் தேர்விலேயே அரசியல் ஆட்டம் தொடங்கி விட்டது. மம்தா காங்கிரசை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்ற அரசியலுக்காக ப்ரனாபை எதிர்த்து ஒரு போட்டி வேட்பாளரை தேடினார். பின்பு அப்துல் கலாமை பலி ஆடாக ஆக்கப்பார்த்தார். ஆனால் கலாம் தன் நற்பெயருக்கு களங்கம் வர வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார். இப்பொழுது மம்தா கட்சியான திரிணமூல் காங்கிரசிலேயே ப்ரனாபிற்கு ஆதரவு பெருகிக்கொண்டு வருகிறது.

அம்மா ஆதரித்த சங்கமாவை அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியே ஆதரிக்க வில்லை. அவர்பாடு மிகவும் கேவலமாகிவிட்டது.
கலாம் அவர்களின் இந்த நல்ல முடிவிற்கு அவரது அண்ணனும், ஆசிரியரும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மக்கள் விருப்பம் கலாமே, அதை யார் கண்டு கொள்கிறார்கள்.

நிலம் வாங்கலையோ நிலம்
தொலைக்காட்சிகளில் சில போனியாகாத சேனல்களில் சின்ன சின்ன நட்சத்திரங்கள் கூறு போட்ட நிலங்களை கூவி கூவி வித்துக் கொண்டிருக்கிறார்கள். மேல்மருவத்தூரில் நின்று கொண்டு சென்னை கூப்பிடு தூரம் என்று கூவுகிறார்கள். இவர்கள் எல்லா நிலங்களையும் விற்றால் இவர்களுக்கு ஒரு கிரௌண்ட் பட்டா இலவசமாம் என்பது வேறு கதை. இந்த நிலங்களெல்லாம் இதற்கு முன் என்னவாக இருந்தன. இவை விலை நிலங்களா? அப்படியென்றால் இது போன்று விலை நிலங்கள் விற்கப்பட்டால் “பூவா”விற்கு என்ன செய்வது என்பது எல்லாம் ஒரு பெரிய கேள்விக்குறி?

இதை எல்லாம் அரசாங்கம் கண்டு  கொள்ளாதா? அது சரி முக்கால் வாசி நிலங்கள் எல்லாம் அரசியல்வாதிகளால் வளைக்கப்பட்டது தானே, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த வியாபாரம் நிற்காது.

ரசித்த கவிதை
எதை வேண்டுமென்றாலும் கருப்பொருள் ஆக்கி கவிதை புனையலாம் என்பதற்கு இந்த பாரதிதாசன் கவிதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. யாத்திரைக்கு வேண்டிய அத்தியாவசியமான பொருட்களை பட்டியலிடுகிறார்.

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ரைக்கே!


18+ நகைச்சுவை  
அந்தக் கல்லூரியில் அனாடமி வகுப்பு எடுக்கும் ஆசிரியரின் குறும்புத்தனத்தால் வகுப்பில் உள்ள மாணவிகள் கடும் கடுப்புடன் இருந்தனர். எப்போது பார்த்தாலும் அந்த ஆசிரியர், ஒரு மாதிரியான கதைகளைச் சொல்லி பாடம் நடத்துவது வழக்கம். அடுத்த முறை அப்படி எதையாவது   அவ ர் உளறினால், எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் வகுப்பை விட்டு வெளியேறுவது என்று மாணவிகள் அனைவரும் கூடி முடிவெடுத்தனர்.

அனாடமி வகுப்பும் வந்தது. ஆசிரியரும் வந்தார். .வழக்கம் போல பாடம் எடுக்கத் தொடங்கினார். பிறகு வழக்கம் போல அவர் தனது பாணியில் பேசத் தொடங்கினார்.

"
பிரான்ஸ் நாட்டில் விபச்சாரப் பெண்களுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாக அவர்கள் கூறினார்கள்... என்று அவர் ஆரம்பித்தபோது, மாணவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு ஒட்டுமொத்தமாக மொத்த மாணவிகளும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்துப் பேச வாயெடுத்தனர்.

அப்போது குறுக்கிட்ட அந்த அனாடமி ஆசிரியர், இளம் பெண்களே, பிரான்ஸுக்கு அடுத்த பிளைட் நாளைக்குத்தான் கிளம்புகிறது, இப்போது கிடையாது, உட்காருங்கள்... என்றார்
.............(நன்றி தட்ஸ்தமிழ்)


இந்த வார ஜொள்ளு 

அடுத்த இடை தேர்தல் எப்போ?




21/06/2012

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 20 June 2012

பிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)


தொலைகாட்சி பேட்டியாளர்: நேயர்களே உங்கள் அணைவருக்கும் இனிய நடு இரவு வணக்க்க்க்க்கம். நீங்கள் இதுவரை ஆவலோடு எதிர் பார்த்திருந்த பிட்டு பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்  “பிட்டு” பிரகாஷ் அவர்களின் பேட்டி காண உங்களை ஜொள்ளுடன் வரவேற்கிறோம். வணக்கம் பிட்டு பிரகாஷ் அவர்களே, உங்களை நேயர்கள் சார்பாக வரவேற்கிறோம்.
பிட்டு பிரகாஷ்: வணக்கம்
தொ.கா.பே: ஸார் உங்களுக்கு “பிட்டு பிரகாஷ்” என்று எப்படி பெயர் வந்தது?, மேலும் உங்களுடைய சிறிய வயது நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
பி.பி: சொல்றேன், எங்க அம்மாவுக்கு சொந்த ஊரு “பிட்” ரகுண்டா, அங்கே தான் அப்பாவும் ஜாக்கெட் “பிட்டு” கடை வைத்திருந்தார். அவர்களுக்கு நான் ஒரே மகன் நான் பிறக்கும் பொழுது “பிட்டு” துணிகூட இல்லாமல் பிறந்ததனால் எனக்கு அம்மா ஆசையாக “பிட்டு பிரகாஷ்” என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது தெரியாது இந்த “பிட்டு” என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு தொடரும் என்று.
தொ.கா.பே: உங்களுடைய பள்ளிப் படிப்பை பற்றி சொல்லுங்க.
பி.பி: அதை என் கேட்கறீங்க நான் எல்.கே.ஜி படிக்கும் பொழுது அன்டிராயரை உருவிடுவேணாம்.
தொ.கா.பே: யாருது? உங்களுடையதா?
பி.பி: இல்லை பக்கத்து பிள்ளைகளுடையதை. ஆதலால் டீச்சருங்க எல்லாம் உஷாரா இருப்பாங்களாம். அடிக்கடி அப்பாவிடம் புகார் கொடுப்பாங்களாம். அதனால அங்கேயே எனக்கு “பிட்டு” உணர்வு இருந்திருக்கு.
தொ.கா.பே: ஸோ அப்பவே உங்களுக்கு “பிட்டு” பட எண்ணம், கனவு எல்லாம் வந்திடுச்சின்னு சொல்லுங்க.
பி.பி: ஆமாம், பின்னர் நான் பள்ளி பரீட்சை எல்லாம் முதல் ரேங்கில் பாஸ் செய்தேன்.
தொ.கா.பே: அப்படியா அவ்வளவு நல்ல படிப்பீங்களா.
பி.பி: அட நீங்க வேறே, அதெல்லாம் ஒன்றும் இல்லை நல்லா “பிட்டு” அடிப்பேன்.
தொ.கா.பே: ஸார் உங்களுக்கும் “பிட்டு பிந்து”வுக்கும் காதல் என்று பேச்சு அடிபடுகிறதே, உங்களுடைய காதல் பற்றி சொல்லுங்க.
பி.பி: அது ஒரு பெரிய கதைங்க. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பரீட்சைக்கு “பிட்டு” தயாரிக்க நண்பனை பார்க்க சென்று கொண்டிருந்தேன். அப்போ ஒரு சந்தில  இந்த “பிந்து”வை பார்த்தேன். அவங்க ஒரு “பிட்டு” துணி கட்டியிருந்தாங்க அடாடா அதை பார்த்தவுடனே எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. சரின்னு அவங்க கிட்டே ஒரு “பிட்”டை போட்டேன். அது வொர்க் அவுட் ஆகி இவ்வளவு தூரம் வந்து விட்டது.    
தொ.கா.பே: சரி ஸார் உங்கள் முதல படம் “சந்திலே சிந்து பாடிய பிந்து” பற்றி உங்கள் அனுபவங்களை சொல்லுங்க.
பி.பி: அந்த கதை என் உள்ளே ரொம்ப நாளா ஊறிக்கிட்டு இருந்தது. நான் ஒன்னும் புதுசா எதுவும் அந்தப் படத்தில் சொல்லவில்லை. இப்போ நாட்டில சாமியார்களும் மடத்தில் நடக்கும் சமாச்சாரங்களையும் என்னோட பாணியில் சிறிது மாசாலா தடவி “பிட்டு பிட்”டா விட்டேன் அவ்வளவுதான்.
தொ.கா.பே: அதுல வர அந்த சாமியார் சொல்லுகிற பன்ச் டயலாக் ரொம்ப சூப்பர் ஸார்.
பி.பி: ஆமாம்,  ஏண்டா “பிட்டு பிட்டு”ன்னு கேவலமா சொல்லுறீங்க, ஆனானப்பட்ட ஆலால கண்டனே “பிட்டு”க்கு மண் சுமந்தவர் தானே என்ற அந்த வசனம் ரொம்ப பேமஸ் ஆயி ஹிட்டாகி, இன்னிக்கி “பிட்டு” படம் பார்க்கிற ரசிகர்கள் அதை எப்போதும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.
தொ.கா.பே: ஆமாம் ஸார் அதிலே சாமியார் “குக்கி”யை பற்றி சொல்லும் பொழுது கூட அப்படியே ரசிகர்கள் உற்சாகமா கைதட்டினாங்க.

பி.பி: ஆமாம் அந்த வசனம் அந்த இடத்தில் ரொம்ப தேவை என்றுதான் வைத்தேன், அவரை காவலர்கள் நடிகையுடன் தொடர்பை பற்றி விசாரிக்கும் பொழுது, சாமியார் இதெல்லாம் என்ன பெரிய விஷயம் நான் வரும் பக்தைகளிடமும் சந்திலே சிந்து பாடியிருக்கிறேன் அதான் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்களே “குக்கி’ அதான் என்பார், அந்த வசனம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொ.கா.பே: உங்களுடைய அடுத்த படம் என்ன என்று சொல்ல முடியுமா
பி.பி: அடுத்த படம் பெயர் “ஒரு பிட்டு ஒரு பிந்து” அதாவது ஓ.பி.ஓ.பி. படம் “பிட்டு பிட்டா” நல்லா வந்துகிட்டு இருக்கு. படம் பிட்டு பட சரித்திரத்தையே மாற்றி எழுதும் என்பது பிட்டின் மீது சத்தியம். இந்தப் படத்திற்கு கதை வசனம் எல்லாம் நானே. இந்தப் படத்தில் நான் இன்னும் ஒரு வேலை எக்ஸ்ட்ராவா செய்கிறேன். படத்திற்கு காஸ்ட்யூமும் நானே செய்கிறேன்,  அதற்காக நாலு கர்சீப் டிசைன் செய்திருக்கேன். அதுதான் ஹீரோயின் போடுவாங்க. இதில் பிட்டு பிந்துவிற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் பிட்டளவும் சந்தேங்கமில்லை.
தொ.கா.பே: ஸார் ரொம்ப நன்றி இதுவரை எங்களது கேள்விகளுக்கு பிட்டு பிட்டாக பதில் அளித்தீர்கள், நேயர்கள் சார்பாக வி பிட் டு செ பிட் பை
பி.பி: பிட் பை, பிட் நைட்.

Follow kummachi on Twitter

Post Comment