Thursday 7 June 2012

பல்பு விகடன்


லட்சிய தி.மு.க தலைவர் விஜய டீ. ஆருக்கும், விகடனாருக்கும் என்ன வாய்க்கா வரப்பு பிரச்சினை என்று தெரியவில்லை. டீ.ஆர் விகடனை ஒருமையில் விளித்து சகட்டுமேனிக்கு தாளித்து கொண்டிருந்தார். (பார்க்க காணொளி)

அதை தொடர்ந்து நேற்றைய தினம் ட்விட்டரில் விகடன் மாலை ஐந்து மணிக்கு தமிழ் நாட்டையே புரட்டிப் போடவிருக்கும் முக்கியமான அரசியல் அறிவிப்பு வெளியாகும் என்று போடவே எல்லா கீச்சர்களும் என்னவாக இருக்கும் என்று தங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கீச்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி அறிவிப்பு ஐந்து மணிக்கு வரவில்லை. அதற்கு டீ.ஆர் ஸ்டைலில் எதுகை மொதுகையுடன் கீச்சு வேறு விகடன் போட்டது.

அட என்ன இது இக்கட்டு --- ஆயிடுச்சு பவர்கட்டு --- ஆகிடுமாம் மணி ஆறு --- என்ன செய்யலாம் நீ கூறு!

அதற்குள் அவரவர்கள் விதவிதமாக விகடனை விமர்சித்து கீச்சி கிழித்துவிட்டார்கள். 

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சுட்டி விகடன், அவள் விகடன், நாணயம் விகடனை தொடர்ந்து இனி பல்பு விகடனும் வரும் என்று ஒருவர் கீச்சினார். 

இதில் ஒரு கூட்டம் வலைபாயுதேயில் நம்ம கீச்சை கண்டுக்கமாட்டாங்க பாஸ் உஷார இருங்க என்றும் தாத்தாவை கழுவி ஊத்தாதீங்க என்றும் உஷார்படுத்தத் தொடங்கினார்கள்.

கடைசியாக ஆறு மணிக்கு தமிழகத்தை புரட்டிப் போடும் செய்தியை விகடனார் வெளியிட்டார்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் லட்சிய தி.மு.க ஆளும் கட்சி அ.தி.மு.க.வை ஆதரிக்கும் என்பதே அந்த அறிவுப்பு.

நக்கல்தான், யு டூ விகடன்.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.