Sunday 29 August 2010

ஜெஸ்ஸி என்னை முத்தமிட்டாள்

விமானம் புறப்படுவதற்கான கடைசி அறிவுப்பு செய்துவிட்டார்கள்.


கிளம்புமுன் ஜெஸ்ஸி என்னை முத்தமிட்டாள்.

நான் என் கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளிகளும், என் முகம் அழும் விகாரமும் தெரியவேண்டாம் என்று முகத்தை திருப்பிக் கொண்டேன். பிறகு விறுவிறு வென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டேன், என் மனைவியும் பிள்ளைகளும் வர தாமதமாகியது. பின்பு வீடு வந்து ஏதோ சாப்பிட்டு உறங்க சென்றேன். உறக்கம் பிடிக்கவில்லை. என் மனைவி என்னை பரிதாபத்துடன் பார்த்தாள். ஜெஸ்ஸி இல்லாத இந்த வீடு எப்படி இருக்கப் போகிறது?, என்ற அர்த்தமற்ற யோசனை. வாழ்கை இயங்கிக் கொண்டிருக்கும் ஜெஸ்ஸியின் ஞாபகம் எங்கள் எல்லோரிடமிருந்து குறைய சில காலமாகும். என் குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிக் கொண்டு எங்களை ஏறெடுத்து பார்க்கவே இல்லை.

நான் எனது கல்லூரிப் படிப்பை முடித்து அந்த நகரத்தில் சிறந்தக் கம்பனியில் மெடீரியல் டிபார்ட்மெண்டில் பர்ச்சேஸ் ஆபீசராக பதவி ஏற்றேன். ஆபரேஷன் டிபார்ட்மென்ட் ஆர்டர் செய்யும் பொருட்களை அவர்கள் கொடுக்கும் டெக்னிக்கல் விவரங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த புள்ளி கோரி குறைந்தது மூன்று சப்ளயரிடம் கொடசன் பெற்று அதனுடைய தரச்சான்றிதழ் ஆபரஷனுக்கு கொடுக்க வேண்டும். தர அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் கடைசி முடிவு என்னுடையது தான். இது அவர்களுக்கு பிடிக்க வில்லை. இதனால் எனக்கும் ஜோசெப்க்கும் ஒரு முறை ஒரு பெரிய வாக்குவாதம் வந்து இருவரும் நேரில் வந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தோம். எங்களது சண்டை கம்பெனியில் மிகவும் பிரபலம். மேலும் வந்த பரிவர்த்தனைகளில் எங்களது சண்டை முற்றி ஒருவர் சொல்வதை மற்றொருவர் வேணும் என்றே எதிர்ப்போம். அப்படி இருந்த எங்களை நண்பர்களாக வைத்தவள் ஜெஸ்ஸி. எப்படி?

அன்று எதோ பொருள் வாங்க வேண்டும் என்று அந்த அங்காடிக்கு சென்றேன். அங்கு நான் ஜோசெப்பை கவலை தோய்ந்த முகத்துடன் கண்டேன். அவனுடைய மனைவி அவனருகே கண்ணீருடன் “ஜெஸ்ஸி ஜெஸ்ஸி” என்று பிதற்றிக் கொண்டிருந்தாள். நான் எங்களது சண்டையை மறந்து என்ன என்று விசாரித்தேன். அவனது இரண்டு வயதுக் குழந்தை அந்த கடைக்கு அவர்கள் ஜவுளி வாங்கிய நேரத்தில் காணவில்லை. கடை சிப்பந்திகள் தேடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மணி நேரமாக தேடிக் கொண்டிருக்கிரார்கள் குழந்தை கிடைக்கவில்லை. நான் அவர்களை தேற்றி குழந்தையை தேடச் சென்றேன். நான் ஜெஸ்ஸியைப் பார்த்ததில்லை. அந்தக் கடை நான்கு மாடிகள் கொண்டது. இவர்கள் முதல் மாடியில் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் மேல் இரண்டு மாடியிலும் தேடச் சென்றேன். நான் படிவழியாக இரண்டாவது மாடியில் ஏறும் பொழுது அட்டைப் பெட்டிகள் எல்லாம் அடுக்கியிருந்த இடத்தைப் பார்த்தேன், சரி அங்கே தேடலாம் என்று சென்றாள், ஒரு குழந்தை அட்டைப் பெட்டிகளின் நடுவே சிறிய அட்டைப் பெட்டிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஜெஸ்ஸியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து குழந்தையை தூக்கினேன்.

உன் பெயர் என்ன என்று கேட்டேன்.

மழலையில் “ஜெச்சி” என்றது.

குழந்தையை தூக்கிக் கொண்டு ஜோசப் இருக்குமிடம் வந்தேன், அவன் மனைவி மயக்கமுற்றிருந்தாள். அவர்களை சுற்றி ஒரே கூட்டம். நான் கூட்டத்தை விலக்கி குழந்தையை ஜோசெபிடம் கொடுத்தேன். கூட்டம் அவன் மனைவிக்கு மயக்கம் தெளியவைத்து ஆசுவாச படுத்திக் கொண்டிருந்தார்கள். மயக்கம் தெளிந்து குழந்தையை வாரி அணைத்தாள்.

ஆதற்கு பிறகு நானும் ஜோசெபும் மிக நெருங்கினோம். பிறகு எனக்கு கல்யாணம் நடந்தது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாம் ஒன்றாகக் கொண்டாடினோம். எனக்கு பிறந்து குழந்தைகளுக்கெல்லாம் ஜெஸ்ஸி தான் அக்கா. ஜெஸ்ஸி எப்பொழுதும் என் வீட்டில் தான் இருப்பாள். அவள் எங்களுக்கு முதல் குழந்தை.

ஒரு முறை ஜோசப்பும் அவன் மனைவியும் வேளாங்கண்ணி சென்றார்கள். ஜெஸ்ஸியை எங்கள் வீட்டில் விட்டுச் சென்றார்கள். வேளாங்கன்னியில் இருந்து திரும்பும்பொழுது கார் விபத்தில் என் நண்பன் ஜோசப் இறந்து போனான். அவன் மனைவி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினாள். அப்பொழுது ஜெஸ்ஸிக்கு ஆறு வயது. மரணம் புரியாத வயது.

அவள் அம்மாவால் குழந்தையை கவனிக்க முடியாத நிலை. ஜெஸ்ஸி என் குழந்தைகளுடன் மூன்றாவது குழந்தையாக வளர ஆரம்பித்தாள்.

அந்த ஜெஸ்ஸிதான் இப்பொழுது இருபத்திரண்டு வயதாகி சாலமனை மணமுடித்து அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறாள்.

அவளை விமான நிலையத்தில் வழியனுப்ப சென்ற பொழுது தான் என்னை முத்தமிட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 26 August 2010

மழை

வானம் பார்த்து


பயிர் வளர்த்து

வயல் வெளியில்

வருகை பார்த்து

உலகை வாழ

வைக்கும் விவசாயிக்கு

உண்மையான தேவதை



கிராமத்தில் போற்றப்பட்டு

கழனியிலே காலணி படாது

கட்டிக்காக்கும் காவலர்களின்

கண் கண்ட தெய்வம்



நகரத்திலே நடந்து வந்தால்

முதல் நாள் போற்றப்பட்டு

தொடர்ந்து வந்தால்

தொல்லை என தூற்றப்பட்டு

மடை திறந்து வந்தால்

மக்களால் வெறுக்கப்படும்.



எப்பொழுது விழுந்தாலும்

ஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்

ஏன் எனக் கேட்போருக்கு

எந்நிலையில் இருந்தாலும்

என் அங்கம் தடவி

சத்தமுடன் விழுந்து

முத்தமழை பொழிந்து

என்னை தழுவுபவள்

அவள் தானே

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 22 August 2010

கலக்கல் காக்டெயில்-6

முன்னூறு விழுக்காடு அதிகமா.................ங்கொய்யால


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூபாய் 16000 இருந்து 50000 ஆக உயர்த்தப் படுகிறது. இது ரொம்ப டூ டூ மச். ஏற்கனவே இவனுகளுக்கு தொகுதி நிதி, போக்கு வரத்து லொட்டு லொசுக்குன்னு எக்கச்சக்கமா செலவாகுது. ஏம்பா இவனுக இதெல்லாம் வாங்கிக்கின்னு இனிமே அந்தக் கான்ட்ராய்ட்டுல கமிசன், ஒழுகுறதுல பிடிச்சிக்கிறேன், வழியுதுல நக்கிக்கிறேன்னு அப்போ இனிமே செய்யாம இருப்பாங்களா? இப்போ வர சம்பளத்து வச்சிக்கின்னே இவனுங்க பண்றே லொள்ளு தாள முடியல. இன்னும் பாராளுமன்றத்துல அடிச்சிக்கிரானுங்க, இது பத்தாததாம் ரூ 80000 வேணுமாம்.

கிரிகெட்

இந்த ரண்டீவ் நோ பால் விஷயத்துல ஸ்ரீலங்கா ரொம்பத்தான் காண்டாயிருக்கானுங்க, இந்த பதிவ போட சொல்ல, இன்றைய ஆட்டத்தில் அந்த நடுவர் குமார தர்மசேனா மவனே பந்து நம்ம பசங்க பக்கம் போனாலே கையே தூக்கிடுராறு. சொல்லி அனுப்பிச்சிருக்காங்க போல. போதாக் குறைக்கு நம்ம பசங்க பந்த தொடவே பயப்படுரானுங்க.


ரசித்த கவிதை

உறங்குகையிலே பானைகளை

உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே

உருப்படியாய் இருப்பதையும்

கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்

இறங்குவோரைக் கொன்று

இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்

இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்

வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்

பொறக்கும் போது பொறந்த குணம்

போகப் போக மாறுது - எல்லாம்

இருக்கும் போது பிரிந்த குணம்

இறக்கும் போது சேருது

நன்றி- பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.



ரசித்த நகைச்சுவை 


கடற்கரையில் காதல் ஜோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.

அவன்: கண்ணே உன் மடியிலே தலை வச்சிக்கட்டுமா.

அவள்: ஹூம்

அவன்: அப்படியே குனிந்து என்னை முத்தமிடேன்.

அவள்: போங்க இந்த வேலை எனக்கு ராசியில்லை, இது மாதிரி நான் செஞ்சா, அவனுங்க அடுத்த வாராமே வேறே யாரையாவது கல்யாணம் செஞ்சிகிறாங்க.

அவன்: அதுக்கு தான் கேட்டேன், அந்த ஷீலா கல்யாணம் பண்ணிக்க முரண்டு பிடிக்கிறாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 21 August 2010

எந்திரனும் ஆற்காட்டாரும்


சென்னை: டெல்லி, மும்பை, கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.


ஏய் அவிய்ங்களா நீங்க, நீங்க இன்னும் போகலையா......

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,

தமிழகத்தில் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அதிலிருந்து 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அய்யா கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்கையா

அனல் மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தோனேசியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

இதே கதைய எத்தனை முறை தான் சொல்லுவீங்க. ஏங்க போன முறை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொழுது குளறுபடின்னு சொன்னாங்களே அது டுபாக்கூரா.

காற்றாலைகள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதல் செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடையில் காற்று வீசுவது குறைவு.

எங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலையா, அதால தான் இடத்த மாத்திட்டீங்களா...........

இதுவரை காற்றாலை மூலம் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளோம்.

சரி அதுக்கு இப்போ இன்னாங்கறீங்க.

மரம், இலை, எரு, கோழி எச்சம் ஆகியவற்றில் இருந்தும் மரபுசாரா மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு, தமிழகத்தை ஊக்குவித்து வருகிறது.

ஏங்க இது நாலாப்பு பாடத்தில வருதுங்க, இன்னும் நீங்க பாஸ் செய்யலையா?.

சிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியின் மூலம் 6 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

நல்லாத்தான் ஒப்பிக்கிறீங்க, நீங்க அடுத்த வருஷம் காட்டாயம் அஞ்சாப்புதான்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதியின்படி 5,500 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்போர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஐநூத்தியிம்பது சதுர அடி வூட்டுக்கே முழி பிதுங்குது, அத்த விடுங்க மேலே சொல்லுங்க.

அதே போல கரும்பு சக்கை மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரி இப்போ இன்னா சொல்ல வரீங்க, நம்ம வூட்ல பாதி நேரம் மின்சாரம் இல்ல அதுக்கு இன்னா இப்போ சொல்றீங்க.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் 2 மணி நேர மின் தட்டுப்பாடு உள்ளது.

அப்படிப் போடு அறிவாள, சப்ஜெக்டுக்கு வந்துட்டீங்க

அதே நேரத்தில் டெல்லியில் 6 மணி நேர மின் வெட்டும், மும்பையில் 2 மணி நேர வெட்டும், கர்நாடக மாநிலம் முழுவதும்10 மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது என்றார் வீராசாமி.

அதால, தமிழ்நாட்டுல கணக்குப் போட்டு மொத்தமா பதினெட்டு மணி நேரமா.

ங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல.



சரி தலைப்புக்கும் சப்ஜெக்ட்டுக்கும் இன்னா சம்பந்தமுன்னு ரோசனை செய்யாம வோட்ட போடுங்கப்பு.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 19 August 2010

கலக்கல் காக்டெயில்-5

கைபிள்ள சுராஜ் ரண்டிவ்



ஸ்ரீலங்காவில் நடந்து கொண்டிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா, ஸ்ரீலங்காவிற்கும் நடந்த ஒரு நாள் போட்டியில் சேவாகின் சதத்தை முடக்கி ரண்டிவ் வீசிய “நோபால்” பற்றிதான் இப்பொழுது கிரிகெட் ரசிகர்கள் வட்டாரத்தில் சூடான விஷயம்.

ரண்டிவ் இதை தானாக செய்தது மாதிரி தெரியவில்லை. சங்கா சொல்லியிருக்க வேண்டும், இப்பொழுது தில்ஷன் தான் சொன்னார் என்று அவர் நிஜாரையும், ரண்டிவ் கோமனத்தையும் உருவியிருக்கிரார்கள்.

ஆனால் ஒன்றும் தெரியாமல் நடித்த சங்காவிற்கு இந்த வருட சிறந்த நடிகருக்கான விருது கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

ஏம்பா முதல் டெஸ்டில் முரளிக்கு 800வது விக்கெட் கொடுக்காமல் இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் ஒஜா ரன் அவுட் ஆகியிருந்தால் ஸ்ரீ லங்காவிற்கு எப்படி இருந்திருக்கும்?.

ஆனா இந்திய கிரிக்கெட் வாரியம் ஒஜாவின் கோமனத்தை உருவாது.

விளையாட்டை விளையாட்டா ஆடுங்கப்பா? BCCI யோட விளயாடதிங்க, பொல்லாதவனுங்க நிஜார உருவி பேஜார் பண்ணிடுவானுங்க.

சிம்மொன்ஸ்(குரங்குப் பய), பஜ்ஜி விவகாரம் நியாபகம் இருக்கட்டும்.

ஆனால் இந்திய ஊடகங்கள் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு ரொம்ப பெரிசாத்தான் கூவரானுங்க. ஸ்ரீலங்கா போர்டும் பயந்துகின்னு எங்க பிச்சைப் போடறது நிப்பாட்டிடுவாங்கன்னு நடவடிக்கை எடுக்குரானுங்க.

வாழ்க கிரிக்கெட்.



ரசித்த கவிதை.

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!



நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்



ரசித்த விடுகதை ++18


ரம்பாவிற்கு பெருசு, சிம்ரனுக்கு சிறுசு, பெண்களுக்கு(girls) இருக்கும் ஆண்களுக்கு(boys) இருக்காது அது என்ன?

ரொம்ப யோசிக்காம விடை சொல்லுங்க.



ஹூம் ஹூம் தப்பா யோசிக்காதீங்க










விடை தெரியாதவர்கள், மேலே பார்க்காதீங்க, அப்படியே கீழே வாங்க.

\

\

\

\

\

\

\

விடை: ஆங்கில எழுத்து “R”.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 18 August 2010

உமாசங்கர் பணிநீக்கத்திற்கு கண்டனம்

தருமி அவர்கள் தொடங்கி வைத்து இப்பொழுது அவரவர்கள் பாணியில் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை வெளிக் கொணர்ந்தமைக்காக பலவருடம் முன்பு பணி தொடங்கிய ஒருவரின் சான்றிதழை காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது, “கூடை வைத்திருப்பவர்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் கிடையாது” என்று கவுண்டர்(ஆல் இன் ஆல் அழகுராஜா) சொல்வது போல் உள்ளது.


“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று கண்டும் காணாமல் போகமுடியாது. குறைந்த பட்சம் நமதுப் பதிவில் நம் கண்டனத்தை தெரிவிப்போம்.

பல வருடங்களுக்கு முன்பு முதலமைச்சரின் மனைவி பட்டுப் புடவை வாங்க பனகல்பார்க் எதிரில் நோ பார்க்கிங் ஏரியாவில் தன் காரை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அப்பொழுது பஸ் நிறுத்தமும் அங்கு இருந்ததால் நிறைய ட்ராபிக் நெருக்கடி. அந்த ஏரியாவில் பணியில் இருந்த சார்ஜன்ட் முதலமைச்சர் மனைவியின் காரை எதிர் புறத்தில் நிறுத்தும்படி டிரைவரை கேட்டிருக்கிறார். அதற்கு அவர் “இது அம்மா கார் உன்னால் முடிந்ததை செய்” என்று சொல்லியிருக்கிறார். சார்ஜன்ட் தன் கடமையை மீறாமல் சார்ஜ் ஷீட் கொடுத்திருக்கிறார்.

விஷயம் முதலமைச்சரிடம் போனது. அவர் அந்த ஏரியா டிராபிக் கமிஷனரை அழைத்து, சார்ஜ் ஷீட்டை திரும்பப் பெரும்படியும், சார்ஜண்டை தற்காலிக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுருக்கிறார். கமிஷனர் மறுத்துவிட்டார். அவருக்கும் இதே கதி தான் நடந்தது. ஆனால் பணி நீக்கம் செய்யவில்லை அவரை இடம் மாற்றினார்கள். ஆனால் கமிஷனர் ராஜினாமா செய்துவிட்டார்.

இதெல்லாம் அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் பொழுது ஆடும் ஆட்டம். இவனுங்க எல்லாம் எப்போ திருந்துவானுங்க?

“பட்டாபட்டி” பதிவப் படிங்க, அவர் கோபமும் கண்டனமும் அவருக்கே உரிய பாணியில் பின்னியிருக்கிறார்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 August 2010

காதலில்லா காமம்

அரையிருட்டில் தவிக்கவிட்ட


அப்பனும் ஆத்தாளும்

கூறுகெட்ட வாழ்க்கை கண்டு

குடிமுழுகி மறைந்து போக



மூச்சு முட்ட குடித்துவந்து

முள் மூஞ்சி மனிதர்கள்

மாரினிலே தேய்க்கையில்

மனசு ரொம்ப நோகுது



காதலில்லா காமம்

காசு பணம் கொடுக்குது

காமமில்லா காதல்

கடைசி வரை கசக்குது



என் வயது பிள்ளைகள்

ஏடேடுத்து படிக்குது

எனக்கு மட்டும் வாழ்கை

ஏன் இப்படி இருக்குது?

Follow kummachi on Twitter

Post Comment

Monday 16 August 2010

கலக்கல் காக்டெயில்-4

என்னது? சீட்டாடி செத்துட்டானா.....................!!!!


எப்படி எல்லாம் சாவறாய்ங்கப்பா

“வடி”வா புலம்ப வச்சிட்டான் .

போனமுறை ஒரு பத்து நாள் விடுப்பில் ஊருக்கு சென்று வந்தேன். போய் இரண்டாவது நாள் நண்பனிடம் இருந்து அலைபேசி அழைப்பு. எங்களது பள்ளித் தோழன் மாணிக்கம் மாரடைப்பால் இறந்து விட்டான். உடனே வண்டி எடுத்துக் கொண்டு மணலி சென்றோம். மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு அகால மரணம்.

அவன் தம்பியும் எங்கள் பள்ளியில் படித்தான். அவனிடம் துக்கம் விசாரித்தோம். மாணிக்கம் பள்ளி படிப்பு முடிந்தவுடன், மணலி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தான். பின்பு எப்போதாவது எங்களைப் பார்க்க சென்னை வருவான்.

மாரடைப்பு சம்பந்தப் பட்ட நோயோ, சர்க்கரை நோயோ இல்லை என்று அவன் தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் கிடையாது என்றும் சொன்னான்.. பிறகு சற்று நிறுத்தி அண்ணனிடம் ஒரே ஒரு கெட்டப் பழக்கம்தான், “சீட்டாடுவாபோல” என்றான்.

இதைக் கேட்டவுடன் எனக்கு என்னது சீட்டாடி செத்துட்டானா? அந்த அகால வேலையில் கத்த முடியாமல் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.



ரசித்த கவிதை.

எத்தனை தடவை

கொள்ளையடிப்பது

ஒரே வீட்டில்

உன் கண்கள்.



ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளைந்தது

முதியோர் கல்வி.



அறுக்கமாட்டதவன் இடுப்பில்

ஐம்பத்தெட்டு அரிவாள்

அதிகபட்ச மந்திரிகள்.



அமாவாசையன்று

நிலவு

எதிர்வீட்டு சன்னலில்



++ 18 ஜோக்


இரு நாட்டுக்கும் சண்டை உச்சத்தில் இருந்தது. அவன் சண்டை விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் பொழுது எதிரிகளால் விமானம் சுடப் பட்டு அவன் தப்பி எதிரிகளிடம் சிக்கினான்.


அவர்களிடம் கெஞ்சினான். என்னை விட்டு விடுங்கள் நான் பிள்ளை குட்டிக்காரன்.


எதிரிகள் சரிப்பா உன்னை விட்டு விடுவோம், ஆனால் நாங்கள் சொல்லும் காரியங்களை நீ செய்ய வேண்டும் என்றார்கள்.


அதோ பார் எதிரில் மூன்று கூடாரம் தெரிகிறதல்லவா அதில் முதலில் உள்ளதில் இரண்டு பாட்டில் வோட்கா இருக்கிறது அதை நீ முதலில் ஐந்து நிமிடத்தில் குடிக்க வேண்டும், பிறகு இரண்டாவது கூடாரத்தில் ஒரு புலி பல்வலியால் துடித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பல்லை நீ பிடுங்க வேண்டும். மூன்றாவது கூடாரத்தில் ஒரு அழகானப் பெண் இருக்கிறாள் அவளை நீ திருப்திப் படுத்தவேண்டும். இவைகளை செய்தால் உனக்கு விடுதலை என்றார்கள்.


முதல் கூடாரத்தில் சென்று இரண்டு பாட்டில் வோட்காவை காலி செய்தான்.

இரண்டாவது கூடாரத்திற்கு சென்றான். புலியின் உறுமல் பயங்கரமாக கேட்டது. “தோ பார் புழி, கொஞ்சம் பொழுத்துக்கோ, உன் நல்லதுக்குத்தான் செய்கிறேன் என்றான். புலியின் உறுமல் இன்னும் பயங்கரமாகக் கேட்டது. பின்பு அதிலிருந்து சட்டை பேன்ட் எல்லாம் கிழிந்து பலத்தக் காயங்களுடன் வெளியே வந்து அவர்களிடம்


“ஏங்க அந்த அழகானப் பொண்ணுக்கு பல்வலி என்றீர்களே அவள் ரெடியா” என்றுக் கேட்டான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 August 2010

இனி அவசியமில்லை

அன்று காலையில் எதிரில் உள்ளக் காலி மனையில் லாரிகளில் செங்கல் வந்து இறங்கும் பொழுதே அந்த மனையின் சொந்தக் காரர் வக்கீல் வீடு கட்டப் போகிறார் என்பது எங்களுக்கு நிச்சயமாகிவிட்டது. அப்பொழுது தான் ஊருக்கு சற்று வெளியே காலியாக இருந்த மனைகளில் வீடு ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருந்தது. என் வீட்டிற்கு இரண்டு பக்கமும் காலி மனைகள் தான்.




முதலில் காலி மனையின் முன்பக்கத்தில் ஒரு குடிசை போடப் பட்டது, அஸ்திவாரம் தோண்டும் முன்பு அங்கு ஒரு வாட்ச்மேனும் வேலைக்கு வந்தார். அவர் தான் செங்கலுக்கும் தெருவில் கொட்டியுள்ள மனலுக்கும் காவல். எழுபதை நெருங்கும் முகம், முப்பதுக்குள்ள தேகம். உழைத்து கைகள் முறுக்கேரியிருந்தன. இரவு நெடு நேரம் வரை மணலில் படுத்துக் கொண்டிருப்பார். அஸ்திவார வேலையில் மேஸ்திரிக்கு உதவியாக இருப்பார். குடிசையில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.



எப்பொழுதாவது நான் இரவு சாப்பாட்டை முடித்து வாசலில் வரும் பொழுது என்னிடம் பேச்சுக் கொடுப்பார். அப்படித்தான் அவர் பெயர் கண்ணன் என்றும், அவர் குடும்ப நிலவரத்தையும் தெரிந்துக் கொண்டேன். ஒரு பத்து வருடம் முன்பு மனைவியை இழந்து விட்டார். ஒரே பிள்ளையும், ஒரே பெண்ணும் அம்பாசமுத்ரத்தில் இருக்கிறார்கள். மகன் மளிகைக் கடை நடத்துகிறான். மகன் சரியாக வைத்துகொள்ளாததால் ஊரை விட்டு தன் கையை நம்பி பொழைக்க வந்து விட்டார். சில நாட்களில் எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு டிபனும் டீயும் கொடுப்போம். அவர் செங்கல் மணலுடன் அவ்வபோழுது எங்கள் வீட்டுக்கும் காவல் காரராக இருந்தார்.



சில நாட்கள் போன பிறகு அந்தக் குடிசையில் ஒரு பெண் தன் கைக் குழந்தையுடன் இருப்பதைக் கவனித்தேன். அவரது மகளாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு மணலில் அமர்ந்து அவருடன் பேசும் பொழுது நான் குடிசையைப் பார்ப்பதைக் கண்டு அவரே அந்த பெண்ணை பற்றி சொன்னார். அந்த இடத்தில் வேலை செய்யும் சித்தாள்களில் அவளும் ஒருத்தியாம். ஊருக்கு தள்ளியிருந்த குடியிருப்பில் வசிப்பவள், அவள் கணவன் இந்தக் குழந்தையைக் கொடுத்து விட்டு ஓடிவிட்டானாம். இவள் தனியாக அங்கு மானத்துடன் வசிக்க முடியவில்லையாம். அங்கு இருக்கும் ஆட்களின் தொல்லைத் தாங்க முடியாமல் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறாள். அவளுக்கு இவர் அந்த சின்ன குடிசையை விட்டு மணலில் படுத்துக் கிடக்கிறார்.



அன்று இரவு என் அலுவலக வேலை முடிந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. தெருவில் திரும்பும்பொழுது கவனித்தேன், கண்ணனை மணல்மேட்டில் காணவில்லை. அந்தக் கட்டிட மனையை நெருங்கும் பொழுது, சிறு சிறு சலப்பு, கண்ணன் முனகிக்கொண்டிருந்தார். நான் வரும் சத்தம் கேட்டவுடன் ஒருவன் மனையின் பின்புறம் ஓடுவதைக் கவனித்தேன். அந்தப் பெண் உடையை சரி செய்துக் கொண்டு கிழவரின் அருகில் வந்தாள். குழந்தை உள்ளே அழுதுக் கொண்டிருந்தது. கிழவருக்கு தலையில் பலத்த அடி, பின் மண்டையில் ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. அவள் சற்றும் தயங்காமல் தன் சேலையைக் கிழித்து அவருக்கு மண்டையில் கட்டுப் போட்டாள்.



கண்ணனை நான் அன்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். மருத்துவர் அவருக்கு தையல் போட்டு கட்டுக் கட்டி மருந்துப் பரிவாரங்களுடன் அனுப்பித்து விட்டார்.



திரும்பி வரும்பொழுது அந்த மனையிலிருந்து ஒருவன் இரு தொடைகளுக்கும் நடுவில் கைகளை வைத்துக் கொண்டு வழியில் முனகிக்கொண்டு சென்றான். காலிடுக்கில் ரத்தம் வந்து அவன் கைலியை நனைத்திருன்தது அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.



அவரை அந்தக் குடிசையில் விட்டு வரும் பொழுது அந்தப் பெண்ணிடம் கேட்டேன் யார் அவரை அடித்தது என்று. வந்தது ஓடிப் போன அவள் புருஷனாம். குடித்து விட்டு திரும்ப அவளிடம் கலாட்டா செய்திருக்கிறான். தடுக்க வந்தக் கண்ணனை மண்டையில் உத்திரத்திற்கு வைத்திருந்த கம்பியால் அடித்திருக்கிறான்.



நான் அவளிடம் மறுபடியும் பிரச்சனை வராமலிருக்க வேண்டுமென்றால் நான் என் டிபார்ட்மெண்டில் சொல்லி அவனை ஓட வைக்கிறேன் என்றேன்.

அதற்கு அவள் “தேவையில்லை சார் நானே செய்துவிட்டேன்” என்று கண்ணனை அடித்த கம்பியை நோக்கினாள்..

நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவன் மறுபடி வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது.

புருஷன் எந்தத் தேவைக்கு வந்தானோ இனி அதற்கு அவசியம் இல்லாமல் பண்ணிவிட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 4 August 2010

கலக்கல் காக்டெயில் -3

எப்படியெல்லாம் ஆப்பு வைக்கிறாய்ங்கப்பா


அந்தப் பேருந்தில் இரண்டுப் பேருந்து கொள்ளும் அளவு கூட்டம். எல்லாம் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் கூட்டம். அடுத்த நிறுத்தத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் ஏறிக்கொண்டார்கள். அந்தப் பெண் முண்டியடித்துக் கொண்டு என்னருகே வந்து நின்றாள். அவளைப் பார்த்தால் அலுவலகம் செல்பவள் மாதிரி தோன்றவில்லை. என் முன்னால் நின்ற இளைஞனின் மேல் அவள் உரசினாள். அவளின் எண்ணம் எனக்கு விளங்கிவிட்டது, இளைஞன் கிறங்கும் நேரம் அவன் பர்ஸ் அடிக்கப்பட்டு கை மாறி அடுத்த இறக்கத்தில் இறங்கிச் சென்றுவிடுவார்கள்.

நான் இளைஞனை உஷார்ப் படுத்தினேன். அடுத்த இறக்கத்தில் நான் இறங்கி தெருவின் எதிர் புறம் உள்ள நிறுத்தத்தில் வேறு பேருந்து பிடிப்பதற்கு தெருவைக் கடந்தேன். அப்பொழுது என்னை நோக்கி வேகமாக வந்த ஆட்டோ என்னைக் கடந்து பின் சக்கரத்தை என் காலின் மேல் ஏற்றிச் சென்றது. நான் காலைப் பிடித்துக் கொண்டு நிமிருவதற்குள் ஆட்டோ எதிரே உள்ள சந்தில் திரும்புவதைக் கவனித்தேன்.

அந்தப் பேருந்துப் பெண் என்னை பார்த்து நாக்கை துருத்திக் காட்டிவிட்டு சென்றாள்.



ரசித்த கவிதை.

நதியின் பிழை அன்று நறும்புனல்

இன்மை அற்றே

பதியின் பிழை அன்று பயந்து

நமைப் புரந்தான்

மதியின் பிழை அன்று மகன்பிழை

அன்று மைந்த !

விதியின் பிழை இதற்கு என்னை

வெகுண்டது என்றான்.

................கம்பன்

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

நதி செய்த குற்றமில்லை

விதி செய்த குற்றமின்றி

வேறு யாரம்மா ?

.........கண்ணதாசன்

ஆஹா என்ன கருத்து ஒற்றுமை



நகைச்சுவை


அந்த இளைஞனும், யுவதியும் எதிர் எதிர் திசையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டு வந்தார்கள். இருவரும் உணரும் முன்பே இரு வண்டிகளும் மோதிக் கொண்டு, தெருவின் எதிர் புறம் உள்ள புல்வெளியில் தூக்கி எறியப் பட்டனர். நல்ல வேலை இருவருக்கும் அடிபடவில்லை. கார் இரண்டும் அடித்து நொறுங்கிப் போயிருந்தது.

இளைஞன் அவளிடம் “நல்ல காலம் பார்த்தாயா எல்லாம் கடவுள் செயல், நாமிருவரும் தப்பியுள்ளோம். தனியாகவும் உள்ளோம். நாமிருவரும் இணைவோம்” என்றான்.

ஆமாம் என்று சொல்லிக் கொண்டே அவள் தன் காரின் அருகே சென்று உடைந்த காரிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தாள். பார்த்தாயா என் கார் சுக்குநூறாக உடைந்தாலும் இந்த வைன் பாட்டில் உடையவில்லை. இதுவும் கடவுள் செயல்தான்.

நாமிருவரும் இதைக் குடித்துவிட்டு ஜாலியாக இருப்போம் என்றாள். பின்பு பாட்டிலை திறந்து அவனிடம் கொடுத்தாள்.

அவன் அதில் பாதியை குடித்து விட்டு அவளிடம் கொடுத்தான். இல்லை எனக்கு கொஞ்சம் போதும் இன்னும் குடி” என்றாள்.

அவன் மேலும் குடித்துவிட்டு அவளிடம் பாட்டிலை கொடுத்தான்.

பிறகு அவன் அவளிடம் “சீக்கிரம் குடி, பின் ஜாலியாக இருக்கலாம் அதோ பார் அங்கு ஒரு மறைவிடம் இருக்கிறது, என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான்.

“இல்லை போலிசுக்கு போனில் சொல்லியிருக்கிறேன் எப்பொழுது வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment