Sunday 24 June 2018

டீ வித் முனியம்மா சீசன்- 2(4)

எண்டே முனிம்மா எந்து பட்டி......

டேய் மீச பட்டி கிட்டின செவுலு திரும்பிடும்.

ஐய முனிம்மா இன்னா நூசுன்னு கேக்குறான் நீ சூடாயிட்ட.

சரி மீச அல்லாருக்கும் சாயா போடு...

இன்னா பாய் பெருநாள் நல்லா போச்சா

அஹான் முனிம்மா? இன்னா நீ வூட்டாண்ட வரல, நல்ல பிரியாணி செஞ்சு வச்சு உனுக்காக காத்துக்கிட்டு இருந்தோம்.....

எங்க பாய் அன்னிக்கி கடையாண்ட ஒரே கூட்டமா நவுரவே முடில.

சரி முனிம்மா ஊரு நடப்பு, நாட்டு நடப்பு அல்லாம் எப்படி கீது?

அத்தே ஏன் கேட்குற லிங்கம் சாரு? தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறாங்க? ஜெனங்க ஒரு போராட்டம் நடத்திகினா? எதிர் கட்சி ஒரு சால் சாப்பு சொல்லிகினு தெனிக்கும் வெளிநடப்பு செஞ்சுகின்னு கீறானுங்க?

மெய்தான் முனிம்மா, சேலத்துக்கு போறத்துக்கு புச்சா ரோடு போடுறேன்னு பத்தாயிரம் கோடி எடுத்துகினு வந்தானுங்க, ஜெனங்க விவசாய நெலம் கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிகிறாங்க, நியாயம்தானே?

ஆனா நீ பாரு முனிம்மா அல்லாரையும் துட்டு கொடுத்தே செட்டப் பண்ணிடுவானுங்க.........இதெல்லாம் நடக்கிறதுதானே.

அது கரீட்டு நாடார்? அப்பால மதுரையாண்ட ஆசுபத்ரி கொண்டாரப் போறாங்கலாம்?

அதுக்கும் தகறாரு பண்ணுவானுங்க? அல்லாம் துட்டு செய்யுற வேல!!

சரியா சொன்ன பாய், ஆசுபத்ரி கொணாந்தா, இட்லி வேவாது, பப்பு வேவாது, சால்னா துன்ன முடியாதுன்னு சொல்லி கொடி பிடிச்சு கூவிட்டு சரக்கு அடிச்சு மட்டையாய்டுவானுங்க.

முனிம்மா செயலு.....ஸ்ரீரங்கம் போயி யாகம் செஞ்சிகினாராமே?

ஆமா லிங்கம் சார், அதெல்லாம் நல்லா செய்வாங்க, சொம்மனாங்காட்டி பகுத்தறிவு, பெரியாரு.........அண்ணா திராவிடம்னு அப்பப்ப ஓட்டு பிச்சைக்கு அவுத்துவுடுவானுங்க?

அது ஏன்? முனிம்மா?

டேய் லோகு அப்பத்தான் மத்த மதத்துக்காரன் குஜாலா இருப்பான், நமக்கு ஒட்டு உயுமுன்னு இன்னுன் நம்பிகினு கீறானுங்க?

சரி இன்னா புது பட போஸ்டர் உட்டதுக்கு ஏதோ தகராறு செஞ்சுகினுகிறாங்க?

அது ஒன்னியும் இல்லடா செல்வம், போஸ்டருல ஈரோ சுருட்ட வாயில வச்சிகின்னு போஸ் கொடுத்துகிராறு.

ஆமா அதுக்கு இன்னா இப்போ?

அடப்போடா லோகு, அத்த கண்டு நம்ம குட்டி மருத்துவரு வயக்கம் போல இதெல்லாம் நல்ல இல்லன்னு சொல்லிகிறாரு.

ஆமா அவரு வயக்கமா சொல்றதுதானே? நல்லத்துக்கு தானே சொல்றாரு?

அடேய் செல்வம் அது உனுக்கு புரியுது? ஆனா ஈரோக்கு பாலூத்தி பிகில் அடிக்கிறானுங்களே ஒரு கூட்டம் அவனுங்களுக்கு அது புரியுமா?

இன்னா சொல்றாருனுங்க?

அவுக ஈரோ குடிக்கிற சுருட்டு ஒசத்தியான், ரொம்ப துட்டாம்? அது குடிச்சா கேன்சர் வராதாம்?

ஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா?

அது தெரியாது? ஆனா அதுக்காக "லவ்பெல்ல" செமையா கலாய்க்கிரானுங்க. எவனோ ஒரு பையன் டாஸ்மாக் சரக்கடிக்கிரத போட்டு லவ்பெல் பையன் சர்க்கடிக்கிறான், அவுன மொதலா திருத்த சொல்லு அப்பால எங்க தளபதியாண்ட வரலாம்னு ஒரே மெர்சல்.

ஐய முனிம்மா அந்தாளுக்கு மூனும் பொண்ணுதானே, பையனே கெடியாதே?

டேய் லோகு அது ஊருக்கே தெரியும்? இவனுக ஒரு தனி கூட்டமடா?  ஒன்னியும் தெரியாது? அவனுக அவருதான் டாப்பு, மத்தவன எல்லாம் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவானுங்க? அவனுக திட்டசொல்ல சொறிநாய் கூட குறுக்க ஓடாது?

இந்த பேஸ்புக்கு, ட்விட்டர் பக்கம் பாரு ஒரே கலீஜா ஆக்கி வச்சிருப்பானுங்க.

கரெட்டு லிங்கம் சாரு. அத்த ஏன் கேக்குற? நேத்து  கோயம்பேடு பக்கம் போவ சொல்ல ரோகினி தியேட்டராண்ட ஒரு கலாட்டா? அதேதான் வயக்கம் போல இவன் ரசிகனுக்கும் அவன் ரசிகனுக்கும் அடிச்சிகினானுங்க? அப்பால ட்விட்டர்ல வந்து கெட்ட வார்த்தையிலே அடிச்சிகிரானுங்க!!

இவனுங்க திருத்த மாட்டானுங்க

இந்த வாரம் இன்னா புது படம் வந்துகுது?

டேய் செல்வம் "டிக் டிக் டிக்" டா, இன்னும் நீ பாக்கலையா?









Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 19 June 2018

கலக்கல் காக்டெயில் - 187

கண்ணாத்தா கொள்ளையடிச்சுதா?

கண்ணாத்தா கொள்ளையடிச்சுதுன்னு தீர்ப்பு சொன்ன குன்ஹாவை எப்படி எல்லாம் வச்சு செஞ்சீங்க அடிமைஸ்......இப்போ ஆத்தா கொள்ளைடிச்ச பணத்தைதான் தினகரன் பதினெட்டு அல்லக்கைகளுக்கு கொடுத்ததா ஒரு டயர் நக்கி வாக்கு மூலம் கொடுக்குது, டேய் என்னங்கடா இது? அதாலதான் கடைசிவரைக்கும் உங்கள் டயர் நக்க வச்சுது. அந்தம்மா கடைசி வரைக்கும் ரெண்டு இட்லி சாப்டுச்சா? சட்னி வச்சாங்களா? குலாப்ஜாமூன் சாப்டுச்சா? இல்லை ஐஸ் கிரீம்தான் சாப்டுச்சா? தெரியாமயே அடக்கம் பண்ணிட்டு இப்போ அவனவன் அத்த கழுவுல ஏத்தறான்!!

எல்லோரையும் காலில விழ வச்ச ஒத்த ரோசா காலோட போச்சா காலில்லாம போச்சான்னு விசாரணை கமிஷன் வச்சு நல்ல வச்சு செயுரானுங்க?

வெற்றிடம்னு சொன்னவரையும் வச்சு செய்யுறானுங்க!!

நல்ல இருங்கடே!!!!

பிக் பாஸ் 

பிக் பாஸ் டூவாம்! பொன்னம்பலம், ஆனந்த வைத்யநாதன், தாடி பாலாஜி, யாரோ மகாத்தான், ஜனனி, யாஷிகா, நித்யா, இன்னும் சில சில்லறைகளை "உலக்கை" எறக்கி இருக்கிறார்.

பிக் பாஸ் அசிங்கம், யாஷிகா அசிங்கம், பொன்னம்பலம் அசிங்கம், தாய் கிழவி அசிங்கம், மலையெல்லாம் பெண்டத்தால் வாசனை, எல்லாம் அசிங்கம், அபிராமி சீ, ஓவியா ஓவியா, அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டுக்கணும்.

சீ இந்த பிக் பாஸ் அசிங்கம்............பிக் பாஸ் அசிங்கம்...........

ரசித்த கவிதை

ஆதி நிறம்!

நேற்று சில நட்சத்திரங்களைக்
கடந்து செல்லக் கிடைத்தது
கடந்து செல்லும்போது
சில மலைகளையும்
சில மேகங்களையும்
கடந்து செல்லவேண்டியிருந்தது
யார் யாரோ யோசிக்கலாம்
இப்படிக் கடந்து செல்லும்போது
நான் யாரென!
நான் பறவை என்பதா
நான் காற்று என்பதா

ஆழத்தின் அறிதலை
மனப்பேழை நிரப்பி
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
சில நேரம்
குகை ஒன்றுக்குள்
ஓவியமாய் இருக்கிறேன்
சில நேரம்
ஆதி நிறத்தின்
வண்ணமாய் இருக்கிறேன்
சில நேரம்
சலனங்களைப் பருகிய
பெருங்கடலாய் இருக்கிறேன்
நான் யார் என்பதை
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
உங்களது ஒவ்வொரு முடிவிலும்
காலத்தையும் வாழ்வையும்
கடந்து செல்கிறேன் நான்.


- சாமி கிரிஷ்

ஜொள்ளு 



Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 12 June 2018

"பெத்த பாஸு"லுவும், "புஸ்வரூபமும்"

பெத்த பாஸ் ஒன்று முடிந்து இப்பொழுது இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து தொடக்கமாம். இந்த முறையும் "உலக்கை" தான் தொகுத்து வழங்குகிறாராம். இந்தமுறை ஒரு ஓவியா இல்லையாம் பல ஒவியாக்கள் இருப்பாங்களாம், சொல்கிறார்.

போனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து "ஒட்டு" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவர ஓவியா, ஆரவ்,  மருத்துவ முத்தம் என்றும், "ரோமரிஷி" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, "வாய்புரி" நமீதா, மெண்டல் ஜூலி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால் ஓவியா "எஸ்" ஆனவுடன் நிகழ்ச்சி புட்டுக்கொண்டது. எவ்வளவோ வாய்புரி அங்கிளும், கணேஷ் வெங்கட்ராமும் முட்டுக்கொடுத்தாலும் பிந்து மாதவி, சுஜா வாருணி எல்லாம் வேலைக்காகவில்லை. இருந்தாலும் நூறு நாட்களை எப்படியோ எட்டிப் பிடித்தார்கள்.

இந்த முறை இரண்டாம் பாகம் தொடக்கம், முன்னோட்டம், என்று உசுப்பிவிட்டு "புஸ்வரூபம் 2"  ட்ரைலர் விட்டு கல்லா கட்டப்பார்க்கிறார். ட்ரைலரில் "தேச துரோகி"  என்று பன்ச் அடித்து யாரை தூண்டவேண்டுமோ அவர்களை தூண்டிவிட்டு ப்ரமோஷன் வேலையை தொடங்கிவிட்டார் ஆழ்வார் பேட்டையார். இந்த வசனத்திற்கு மெதுவாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. இந்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாறி "போராட்டம்" "நான் நாட்டை விட்டே ஓடிடுறேன்" என்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

பெத்த பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே  "நசரத்பேட்டில்" உள் வீட்டு(நாட்டு) சண்டையும், "பன்ச்" புஸ்வரூபம்  எடுத்து  வெளிநாட்டை கைப்பற்றி தடியடி, முற்றுகை, என்று கொழுந்துவிட்டு எரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே!!!!!

நடக்கட்டும்.


Follow kummachi on Twitter

Post Comment

Sunday 10 June 2018

காலா-----என் பார்வையில்

ந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் "காலா" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் "குபீர்" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வைக்கலாம். மேலும் முக்கியமாக பின்னூட்டம் இட அண்டாவில், இல்ல அண்ட்ராயரில் ஒளிந்து வரும் "அனானிகள்" கொண்ட தெரியுது, நூல் தெரியுது என்று  துப்ப வேண்டுமென்றால் உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் துப்பிக்கொள்ளவும்.

இனி காலா..........

முதலில் பா. ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு, கதைக்களம் ஒரே வரி "எனது நிலம் எனது உரிமை" என்பதை  வைத்து அதை நேர்த்தியாக கதை சொன்ன விதம். மேலும் ரஜினி என்ற மாபெரும் கலைஞனை அவரது பாட்ஷா, படையப்பா சிறையிலிருந்து மீட்டு கபாலியிலும், காலாவிலும் அவரது "முள்ளும் மலரும்" "ஆறிலிருந்து அறுபதுவரை" போன்ற பலபரிமான நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு மற்றுமொரு ஒரு சபாஷ். திரைக்கதைக்கு உதவியாக "ஆதவன் தீட்சண்யா", வசனம் மெருகேற்றலில் "மகிழ்நன்". நல்ல கூட்டணி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் கருத்துக்களையும், தற்கால அரசியல் அவலங்களையும்  பிரச்சார நெடி இல்லாமல் உரைப்பதில்  ரஞ்சித் சாதாரண கதாசிரியர்களிடமிருந்து விலகி நிற்கிறார்.

காலாவில் ரஜினிக்கு வித்தியாசமான அறிமுகம் . எஸ்.பி.பி குரலுடன் "ஒருவன் ஒருவன் முதலாளி, ஆட்டோக்காரன்" என்று வழக்கமான என்ட்ரி தவிர்த்து "காலா ரெண்டு ரன் தான் வேணும், நீ சும்மா தட்டிட்டு வா, ரெண்டு ரன் ஓடிடலாம்" என்ற சிறுவனின் அடவைசை கேட்டு கேமரா பார்த்து "இப்ப பாரு எங்க ஆட்டத்த" என்று சவால் விட்டு ஏதோ என்று சிக்ஸ் அடிக்கப்போகிறார் என்று நினைத்தால் கிளீன் போல்ட் ஆகிறார். அதற்குப் பிறகு அவர் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பில்  சிக்ஸ் அடிக்கிறார். ஜீப்பில் உட்கார்ந்து வரும் தோரணையிலேயே "எமராஜ்" காலனை கண்முன் நிறுத்துகிறார். ஆமா குமாரு........யாரு இவரு.........என்று மந்திரியை நக்கலடிக்கும் விண்டேஜ் ரஜினி, நானா படேகரிடம் "நான் இன்னும் உன்ன கெளம்பச் சொல்லலையே" என்று கெத்து காட்டுவதும், என்ன "உன்னால கொல்ல முடியாது வேணுமென்றால் முதுகுல குத்திக்கோ" என்று நக்கலடிப்பதும் ரஜினி அட் ஹிஸ் பெஸ்ட். ஸ்டைலு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று எந்தப் பிச்சிலும் செஞ்சுரி அடிக்கும் அதிரடி நாயகன். கடந்த பத்து வருஷமாகவே இவர் திரைப்பட வாழ்க்கை முடிந்தது என்று கூறிக்கொண்டு குப்பை கொட்டுபவர்களுக்கு வழக்கம் போல அவர்கள் வயிற்றில் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

திலீப் சுப்பராயனின் அந்த மழை சண்டை காட்சி சூப்பர்.

சந்தோஷ் நாராயணன் பாடல்கள் சுமார் ரகம்தான், ஆனால் பி.ஜி.எம் வழக்கம் போல மிரட்டல்.

படத்தின் ஆர்ட் டைரெக்டர் டி. ராமலிங்கத்திற்கு ஒரு தேசிய விருது பார்சல், தாராவியை அவளவு தத்ரூபம்மாக அமைத்ததற்கு, அதுவும் அந்த டாப் ஆங்கிளில் தாராவி அமர்க்களம்.


வழக்கமான ரஜினி படமாக இருந்தால், அவரைத்தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவ முக்கியத்துவம் இருக்காது, ஒரு சில படங்களை தவிர. ஆனால் காலாவில் மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள். ரஜினியின் மனைவி, முன்னாள் காதலி, மற்றும் பெண் போராளி என்ற மூன்றும் வலிமை மிக்கவை.

ஈஸ்வரி ராவ் தேர்ந்த நடிப்பு, எனக்கும் நெல்லைக்கு டிக்கட் போடுங்க "பெருமாள பார்த்து பேசிட்டு வரணும்" என்று சினுங்குவதிலும் சரி, கணவனை எதிர்த்துக் கொண்டு வெளியே செல்லும் மகனிடம் அடே ராஜா நீ எங்கபோவ என்று அவருக்கு ஆதரவாக பேசியே சரி போடா என்பதில் காலா
சேட்டும் நானே என்று உணர்த்துவதாகட்டும் அருமை.

காலாவின் முன்னாள் காதலியாக வரும் ஹ்யூமா குரேஷி காதல் காட்சிகளில் கரிகாலன் என்று நெகிழ்வதிலும், தாராவியை உயர்த்துகிறேன் என்று மக்களிடம் பேசி கார்பரேட் சூழ்ச்சியை அறிந்து மாறுவதிலும் மின்னுகிறார்.

அடுத்தது "அஞ்சலி பட்டீல்" தாராவியின் பெண் போராளி அறிமுக சீனிலேய அள்ளுகிறார்.

சமுத்திரக்கனி காலாவின் நண்பராக வருகிறார். சதா போதையில் தள்ளாடியபடியே தள்ளாடாத பங்களிப்பு. படம் முழுவதும் காமெடி ஒன் லைனில் சிரிக்க வைக்கிறார்.

இவர்களை தவிர திலீபன், மணிகண்டன், சாயாஜிஷிண்டே, அருந்ததி, சம்பத் என்று ஒரு பெரிய கூட்டமே சொன்ன வேலையை செய்திருக்கிறது.

ஹரிதாதாவாக வரும் நானா படேகர் ரஜினிக்கு சரியான வில்லன், வெறும் அந்த கண்ணாடி மூலம் பார்வையிலேயே நடுங்க வைக்கிறார். தாது "He is a good man don't kill him "என்று சொல்லும் பேத்தியிடம் சிரிக்கும் புன்சிரிப்பில் நானா நானாதான்.

படத்தில் நெகடிவ்............அந்த எரிச்சல் மூட்டும் ராப் பாடகர்கள், கதையை முடிக்க குழம்பியிருப்பது, இன்னும் வலுவாக காட்சி அமைக்க வேண்டிய இடத்தில் இயக்குனரின் சறுக்கல்.

காலா....................ரஞ்சித்தும் ரஜினியும் செய்த சரவெடி






Follow kummachi on Twitter

Post Comment

Monday 4 June 2018

இதோ வந்துட்டானுங்க..................

தோ முன்பே சொல்லியிருந்ததுபோல் அடுத்த போராட்டம் ஆரம்பம். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஆறு மணி நேரம் ஆகிறது. இப்பொழுது வரும் 10000 கோடி மதிப்பில் உருவாகும் புதிய 8 வழி பசுமை வழிச்சாலையால் 66 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இதற்கான தொடக்கமாக அரூர் பகுதியில் அளவு கற்கள் அமைக்கப்பட்டன. அதை தொடர்ந்துதான் அந்த ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். இது தொடக்கம்தான் இந்த போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும், மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் போகப் போக மேலும் உக்கிரம் அடையும் பொழுது வழக்கம் போல பஸ் எரிப்பு, ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்பரஸ் வீச்சு என்று அதகளமாகும். மிச்சமிருக்கும் டம்ளர் பாய்ஸ்க்கு வேலை வந்துவிட்டது.

அணு உலை வந்தால் உயிருக்கு ஆபத்து!!
அனல் மின்சாரம் காற்றை மாசுபடுத்தும்!!
காற்றாலைகள் மேகத்தை விரட்டி மழையைக் தடுக்கிறது!!!!!!!!!!!??
சூரிய ஒளி மின்சார பேனல்கள் கழுவ தண்ணீர் தரமாட்டோம்!!!
ஆனால் எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.

விவசாயத்திற்கு தண்ணீர் கிடையாது.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க விடமாட்டோம்.

எல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால்

டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க.

டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே? ஏன்னா நாங்கள் எல்லாம் வீரம் விளைஞ்ச தமிழ் மண்ணுல இருக்கிறவனுங்க. ஆமா??

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 3 June 2018

கலக்கல் காக்டெயில்-186

யார் சமூக விரோதிகள்??

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நூறாவது நாள்  நடந்த கலவரமும் அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடும் தவிர்க்கப் படவேண்டியது. நூறாவது நடந்த போராட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கி சூடு நடந்ததாக அரசு தரப்பில் சொல்லுகிறார்கள். சமூக விரோதிகள்தான் காரணம் என்று அந்த நடிகர் சொல்லப்போக அவரை "தொம்பிகள்" வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவரை போராளிகளை கொச்சை படுத்துகிறார் என்கிறார்கள். சமூக விரோதிகள் பொது சொத்த நாசமாகியதும், குடியிருப்பில் தீ வைத்தது உண்மைதானே, அப்போது அதை செய்தது சமூக விரோதிகள் இல்லை என்று உங்கள் கூற்றில்தான் நீங்கள் போராளிகளை கொச்சை படுத்துகிறீர்கள்.

அவரை நீங்க யாரு? என்று கேட்ட மானமுள்ள தமிழன்!!! வீரத்தமிழன்!!! அடுத்த நாள் தலையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்தர் பல்டி அடித்து  தன்மானத் தமிழன் ஆகிவிட்டான்.

இதுதான் சாக்கு என்று இணையப்போராளிகள் இரண்டு நாட்களுக்கு நடிகரை ட்ரோல் செய்ய, தன்மானத்தமிழன் குறுக்கு சால் ஓட்டியதில் பொந்துக்குள் சென்று விட்டனர்.

ஆனாலும் விடாமல் தொம்பிகள் தமிழருக்கு எதிரான நடிகரின் படம் ஆஸ்திரியாவில் இல்லை, நார்வேயில் இல்லை, அண்டார்டிக்காவில் இல்லை என்று ட்ரோல் செய்து ஆர்கசம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

கலைஞர் 95

லைஞர் தனது தொண்ணூற்று ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்!! மன்னிக்கவும் அவரது உடன் பிறப்புகள் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நாளில் கூட இணையங்களில் அவரை ஹாஷ் டேக் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அவரை என்னதான் கிண்டலடித்தாலும் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். எந்த ஒரு அரசியல்வாதியும் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்கள் கலைஞர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவை இரண்டையும் அவர் எதிர் கொண்ட விதம் எல்லோராலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.


தற்பொழுது அவர் அரசியல் அரங்கில் இல்லாதது தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு தான்.

கவிதை

கையசைப்பு

ப்போதும்
வயல்கள் ஊடாக
தடதடக்கும் சத்தத்தோடு
போய்க்கொண்டுதான் இருக்கின்றன
தொடர் வண்டிகள்....................
விடுமுறை நாளில்
பெற்றோருக்கு உதவ வந்து
வயல் நடுவே நின்று கொண்டு
வரிசையாய்ப் பெட்டிகளை எண்ணியபடி கையசைக்கும்
கிராமத்துச் சிறுவர்கள் இன்றி.

சினிமா



சமீபத்தில் வந்த "சாவித்திரி" வாழ்க்கை திரைப்படமும் அதை தொடர்ந்து வந்த அவர்களது குடும்ப சர்ச்சைகளும் படத்தின் பிரமோஷனுக்காக செய்ததா என்பதற்கு ஆதாரம் இல்லை, ஆனால் படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி, இன்னும் பார்க்கவில்லை, பார்க்கவேண்டும்.

கைகொடுத்த தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற சாவித்ரியின் படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது, What an artist?



Follow kummachi on Twitter

Post Comment