Tuesday 24 February 2015

"பிரியாணி" சின்ன வீடு மாதிரி

ரசித்த கீச்சுகள்

டேய்ய்ய் ஆஸ்திரேலியா நீங்க மட்டும் ஆம்பளையா இருந்தா பச்சை கலர் யுனிபார்ம் போட்டு இந்தியாவோட விளையாட வாங்கடா---------ஆல்தோட்டபூபதி.

மக்களின் முதல்வர் நல்லாசியுடன் ஆஸ்கர் வழங்கப்பட்டது-------------காக்கிசட்டை சேட்டு.

சந்தோஷத்தை சந்தோஷமாக கொண்டாட பெண்களால் மட்டுமே முடிகிறது. ஆண்களுக்கு கொண்டாட தண்ணிய உட்டா வேற ஒரு மண்ணும் தெரியாது-----------அன்சாரி மஸ்தான்.

எச்சூஸ்மீ.............கத்தி படத்துக்கு ஆஸ்கர் அவார்டு கிடைச்சிடுச்சா?---------------மாயவரத்தான் 

இப்ப ஒரு வேலையும் செஞ்சிடாத, நாளைக்கு மனைவி வந்தா துணி துவச்சு, காய்கறி வெட்டிதரத பார்க்காமலா போயிடப்போறேன் என்பதே அம்மாக்களின் உச்சபட்ச சாபம்-----------------------சசிதரன் 

பிரியாணி நல்லாத்தான் இருக்கும், ஆனா சின்னவீடு மாதிரி எப்போதாவதுதான் டச் வச்சிக்கணும், இட்லி தோசை மாதிரி பெர்மணன்டா குடும்பம் நடத்த முடியாது-------------------அண்ணாமலை 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்பு அமைச்சர்-இளங்கோவன் # அவங்க அமைச்சர்னா நீங்கதான் முதலமைச்சர்னு அவங்க சொல்லணும் அப்படித்தானே  தாங்க முடில சார் ----------------------நீதி அரசன்

ஏம்பா.........சூப்பர் சிங்கர்லே ஜெயிச்சவங்க ஸ்டேட் ஜாதியெல்லாம் தெரிஞ்சிடுச்சா? கேரளாவோ, ஐயராவோ இருந்த திட்டி பதிவு ரெடி பண்ணனும் அக்காங்..............மாயவரத்தான் 

அம்மா வெளிய வராத விட முக்கியம் ஹுசைனி போன்றவர்கள் செய்யும் லூசுத்தனத்தை உடனே நிறுத்துவது!! செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?-----------ட்விட்டர்MGR.

நீ அடிக்கறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்#ஷூகான் ஹுசைனி-----------இளநி வியாபாரி


ஆணி அடிக்கும் போது வலி பொறுக்கமுடியாம ஐயோ அம்மான்னு கத்திருக்காரு ஹுசைனி, நம்ம அண்ணே புரட்சித் தலைவியதான் சொல்லுறாருன்னு இவனுக ஆணிய ஒரே அடி--------ரோபல்காந்த் 

பெண்களோட தன்னம்பிக்கை எந்த அளவுக்கு அற்புதம்னா, லட்சம் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினாலும், பிரேக்கை நம்பாம தன் காலாலதான் நிறுத்துவாங்க-----------அண்ணாமலை 

Follow kummachi on Twitter

Post Comment

Monday 23 February 2015

நாங்க மெர்சலாயிட்டோம்---------கிரிக்கெட் கானா

இந்திய அணிக்கு போட்டி துவங்கும் முன்பே நமது ஊடகங்கள் "இரங்கற்பா" படித்து விட்ட நேரத்தில் என்றும் இல்லாத எழுச்சி பெற்று தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணிக்கு இந்த வாழ்த்துப்பா...............

"ஐ" பட மெர்சலாயிட்டேன் மெட்டில்..................



மொத தபா கெலிச்சிகினாங்க
பெஜாராகி நின்னான் ஹஸ்சி
சொதப்பிவுடாம அடிச்சிகினாங்க
முன்னூத்தி ஏழு ரன்ன ........
நாங்க மெர்சலாயிட்டோம்
நாங்க மெர்சலாயிட்டோம்

தவானுப் பையன் தான்
குத்த வச்சிதான்
க்ரீசுமேல குந்திக்கிநானே............
ஸ்டேய்னு பந்தெல்லாம்
பௌண்டரி மேலத்தான்
பறந்து பறந்து
அடிச்சிக்கினானே
ரஹானே வந்தான்..............
சொயட்டி உட்.........டான்ன்ன்...................
நாங்க மெர்சலாயிட்டோம்............
நாங்க மெர்சலாயிட்டோம்..............

அம்லாப் பையன் தான்
அவசரமா அபீட் ஆயிட்டானே.....
டுப்லேசிஸ் தான் டொக்காயி
டீலு உட்டானே............
டிவிலியர்ஸ் வந்தான்ன்ன்..............
டுபாக்கூராகிபோ........னான்....
நாங்க மெர்சலாயிட்டோம்............
நாங்க மெர்சலாயிட்டோம்..............

மொத தபா கெலிச்சிகினாங்க
பெஜாராகி நின்னான் ஹஸ்சி
சொதப்பிவுடாம அடிச்சிகினாங்க
முன்னூத்தி ஏழு ரன்ன ........
நாங்க மெர்சலாயிட்டோம்
நாங்க மெர்சலாயிட்டோம்



Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 February 2015

டீ வித் முனியம்மா-பார்ட் 31

லோகு இன்னாடா இந்நேரத்துக்கு வந்து குந்திகின.

இன்னா செய்யுறது முனிம்மா சரக்கு வாங்க போன என் மச்சான் இன்னியம் வரல அதான் கடியாண்ட அம்மாவ வுட்டு இங்க வந்துகினேன்.

சரிடா மீசையாண்ட டீ சொலிக்க.............

தோடா முனிம்மா செல்வம் வந்துகினான் பாரு...........

நாடார், பாய் லிங்கம் சாரு அல்லாரும்  வந்துகினு இருக்காக..........

நீ நூசு இன்னா படி முனிமா.........

கேஜ்ரிவாலு டில்லில சொம்மா சொல்லி அடிச்சிகிரான்பா..............எய்வது சீட்டுல அருவத்தியேயு சீட்ட அள்ளிகிறான்..........

முனிம்மா மோடி அலை மோடி அலைனுவானுங்களே இன்னா கடலு கம்முனு சுருன்டுகிச்சா.............

அடப்போ லோகு...........டில்லில எங்கடா கடலு? சொம்மா வாருகோலு வச்சி அல்லாத்தையும் வலிச்சிகினாறு........

அது சரி முனிமா காங்கிரஸ் இன்ன இப்படி புட்டுகிச்சு.............

டேய் காங்கிரசு பத்து வருஷம் இன்னா ஆட்டம் ஆடினாகடா...................எது எத்தாலும் ஊயலு............அதான் இப்போ அடங்கிட்டானுங்க.

முனிம்மா அப்பால.........

டேய் செல்வம் அவரு பட்ச்சவருடா....................வந்து மொதொல ஒரு வேல செஞ்சுகினாறு பாரு........கவர்மெண்டு ஆபீசுல வேல செய்யுற ஆளுங்களோட புள்ள குட்டிங்க எல்லாம் காப்பரேசன் ஸ்கோலுலதான் படிக்கோணும் னு சொல்லிகினாரு.

அதால இன்னா ஆவப்போவுது.................

நாடார்.....காப்பரேசன் ஸ்கோலுல நல்ல டீச்சர வேலைக்கு வெப்பானுங்க............இல்லாங்காட்டியும் காசு வாங்கிக்கினு கண்ட கசுமாலம் எல்லாம் உள்ள உட்ருவானுங்க..............அவனுக புள்ளைங்களே படிக்க சொல்ல அப்டி செய்வானுங்களா?

அப்பால இன்ன செய்யப்போறாராம்?

பாய் அப்பால கரண்டு வேலைய பாதிக்கி பாதியா கம்மி பண்ணிகிராறு.......

சரி முனிமா எவ்வளவு நாளைக்கு இது தாங்கும்னு பாப்போம்.......

கரீட்டா சொன்ன லிங்கம் சாரு, நாம் பாக்காத சி.எம்மா...........

இன்ன முனிம்மா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ரிஜல்ட் வந்துகீதே...........

அடப்போ லோகு இதெல்லாம் ஒரு நூஸா? ஆளுங்கட்சிதான் கெலிக்கும்.......

திருமங்கலம் ஃபார்முலா வரும் முன்னிய கள்ள ஒட்டு குத்தினானுங்க..........ஆளுங்கட்சி போலிச கைக்குள்ள வச்சிகினு செய்வானுங்க............

ஆமா அதான் இப்போ முடியாதில்லா.............

அதான் லிங்கம் சார் இப்போ துட்டு குட்த்து  கெலிக்கிறாங்க.

இன்னா முனிமா அந்தம்மாவிட தாஸ்தி ஒட்டு வாங்கிக்கீதாம்.............மெய்யாலுமா?

ஆமாண்டா லோகு மெய்யாலும்தான்...............அந்தம்மா எந்த மந்திரிபயலுக்கு ஆப்பு வக்கப்போவுதோ!

ஏன் முனிம்மா தேர்தல் கமிசன் இன்னா செஞ்சுகின்னு இருந்தானுங்க...........இம்மா துட்டு வேலயாடிகீதுன்னு சொல்றானுங்க..........

அதுவா பாய் அவனுங்க எப்பவுமே ஆளுங்கட்சிக்கு ஜால்ரா ஆவானுங்க........இல்லன்னா அவனுகளுக்கு கட்சிக்காரனுங்க உண்ட கொடுத்துருவானுங்க..............அதால தேர்தல் கமிசன் ஆளுங்க கம்முன்னு போவானுங்க........

இன்னா முனிம்மா பன்னீரு சட்டசபையை மறுக்கா கூட்டிகிராறு............

அடப்போ நாடாரு இன்ன பேசுவானுங்க............ஆத்தா அத்த செஞ்சிச்சு இத்த செஞ்சிச்சுன்னு சொம்படிப்பனுங்க............அப்பால பெஞ்சு தட்டி கையி நோவேடுத்தா முடிச்சுடுவானுங்க...........

சரி முனிம்மா நமாளுங்க கப்ப தூக்கிடுவானுங்க...........

இன்னத்த தூக்குவானுங்க தமாசு பாரு...............அல்லாம் அடுத்து அப்ப்ரிக்க காரனுங்க கூட ஆடறானுங்க..........அப்போ அல்லாம் புட்டுக்குவானுங்க.......

ஆப்போநெண்டா ஆளே இல்ல சோலோவாயிட்டேன்..........நான் முன்னே போல இப்போ இல்ல ரொம்பா மாறிட்டேன்............

டேய் செல்வம் இன்னாடா கானா பாடிக்கினு பிலிமு காட்டுறே..........படம் பாத்துகினியா......

படம் சூப்பரா கீது முனிம்மா...........படத்துல ஒரு பிகரு வருது சூப்பரா கீது........

டேய் நீயி எங்கடா மாறப்போற.............நான் அப்பால போவங்காட்டியும் பேப்பர எத்து பிகர பாப்ப...........









Follow kummachi on Twitter

Post Comment

கலக்கல் காக்டெயில்-166

இடைத்தேர்தல் அவசியமா?

சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் இடைதேர்தல் வரும் என்று தெரியும்.  ஆனால் இப்பொழுது நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான காரணம் வேறேமாதிரி. எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் வெற்றி யாருக்கு என்பது நாமெல்லோரும் அறிந்ததே. எந்த கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக  இருக்கும் பொழுது  தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி வென்றுவிடுவார்கள். இது நமக்கு தெரியும், ஏன் தேர்தல் கமிஷனுக்கே தெரியும்.

கள்ள ஒட்டு கலாசாரத்தை ஒழிக்க ஒருவர் வந்து ஒழித்துக் கட்டினார். இப்பொழுது அரசியல்வாதிகள் இந்த புதிய கலாச்சாரத்தை (திருமங்கலம் பார்முலாவாமாம்) இறக்குமதி செய்துள்ளார்கள். இதற்கு யார் வரப்போகிறார்களோ?.

அது வரை இந்த தேர்தலை நிறுத்தி வைக்கலாம். ஆளுங்கட்சி உறுப்பினரையே எதிர்ப்பு இல்லாத வெற்றியாளர் என்று தேர்தல் கமிஷனே அறிவித்துவிட்டு இந்த தேர்தல் தண்டசெலவை நிறுத்தலாம்.

இத சொன்னா நம்மள.............வர காச கெடுக்க வராண்டா என்று அடிக்க வருவார்கள்.

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

கிரிக்கெட்டே ஒரு "முனாபுனா" விளையாட்டு என்று ஒரு கருத்து உண்டு. எது எப்படியோ இந்த "முனாபுனா" விளையாட்டில் எந்த அணி விளையாடினாலும் வராத ஒரு பரபரப்பு இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் தொற்றிக்கொண்டு விடுகிறது. அன்று காலை எழுந்தவுடன் ஒரு பரபரப்பு,  சரி இன்று இதைப்பற்றி கண்டுகொள்ளக்கூடாது கருமமே கண்ணாக ஆணி பிடுங்க வேண்டும் என்று இருந்தாலும், டேமேஜர் வந்து ஸ்கோர்  சொல்லி உசுப்பேத்தும் பொழுது போயா மேனேஜரே ஆணி புடுங்கல (அவர் என்றைக்கு புடுங்கி இருக்கிறார்?) என்று நெட்டை திறந்து ஐக்கியமாகி எட்டு மணி நேரம் கழித்தாகிவிட்டது. இந்த ஜோதியில் கலந்ததால் தேவையுள்ள ஆணியெல்லாம் புடுங்கி ஓயும் பொழுது மேட்சும் முடிந்தது.

சரி மேட்ச் முடிந்தது ஜெயிச்சாட்டானுங்கப்பா என்று வேலையை ஏறக்கட்டும் பொழுதுதான் யோவ் அந்த ரிபோர்ட் ரெடி பண்ண சொன்னேனே என்ன ஆச்சு? என்று கேட்கும் டேமேஜரை பாகிஸ்தான் கேப்டன் ஆக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

ரசித்த கவிதை 

எங்கே சென்றாய்?

கண்ணிருந்தும் குருடாக்கி!
    காதிருந்தும் செவிடாக்கி!
மண்ணிருந்தும் தரிசாக்கி!
    மலரிருந்தும் வீணாக்கி!
பண்ணிருந்தும் வாய்மூட
    பா..இருந்தும் கைமூட
என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?

நிலவில்லா வானமாக
    நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
    மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!
நன்றி: அருணா செல்வம் 

ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Monday 16 February 2015

அனேகன்-எனது பார்வையில்

கே.வி.ஆனந்திடமிருந்து ஒரு ரொமாண்டிக் த்ரில்லர். எழுத்தாளர் சுபாவினுடைய கதை.

விடியோ கேம்ஸ் ப்ரோக்ராம் அமைக்கும் கம்பனியில் அமைரா தஸ்தூருக்கு வேலை. பாப்பாவிற்கு பூர்வ ஜென்ம நினைவுகள் எல்லாம் நியாபகம் வந்து படுத்துகிறது. ஒவ்வொரு ஜென்மத்திலும் காதலனுடன் சேர முடியவில்லை. பரிதாபமாக இறந்து போக நேரிடுகிறது.

நிகழ் காலத்தில் தனது காதலனை மறுபடியும் சந்திக்கிறார். அவரிடம் ஒவ்வொரு முறை தனது கனவுகளை சொல்லும் பொழுதும் காதலனுக்கு மெண்டலாக (அழகான மெண்டலாக) தெரிகிறார்.

ஒரு ஜென்மம் 1960 களில் பர்மாவில் நடக்கிறது. அங்கு தமிழர்களுக்கு எதிராக கிளர்ச்சி வந்த பொழுது அங்கிருந்து காதலன் நாடு கடத்தப்படும் பொழுது அவருடன் எஸ் ஆக கப்பல் ஏறியதும் ராணுவ அப்பாவால் காதலன் சுடப்பட்டதும் காதலி தானும் அவருடன் தண்ணீரில் மூழ்கி இருக்கிறார்.

மற்றுமொரு ஃபேண்டசி காதல் இளமாறன் சொம்மா ஒரு பாட்டிற்காக சேர்த்திருக்கிறார்கள்.

படத்தின் கலக்கல் அந்த வியாசர்பாடி காதல் தான். இடைவேளைக்குப் பிறகு வரும் அந்த எபிசோடில் காளி, கல்யாணி காதல், பின்னர் வில்லனால் ஏமாற்றப்பட்டு, சாகடிக்கப்பட்டு புதைக்கப் படுகிறார்கள். அந்த கொலையின் மர்மம் இருபத்தெட்டு  வருடங்களுக்குப் பிறகு அமைராவின் மருந்து செய்யும் வேலையில் முடிச்சவிழ்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமானவர யார்? அவர்  எப்படி முடிக்கப்படுகிறார் என்பது படத்தின் உயிரோட்டம், இன்னும் கொஞ்ச வழக்கமான பாணியை தவிர்த்து விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம்.

வியாசர்பாடி காதல் ஆரம்பித்தவுடன் வரும் பாட்டு "டங்கமாரி ஊதாரி" கலக்கல் ரகம். தனுஷ் தரலோகல் லெவலுக்கு இறங்கி கலக்கியிருக்கிறார். அந்த காதலில் ஐயர் பெண்ணாக அமிராவும் அம்சமாக செட்டாகிறார்.

கிட்டத்தட்ட நான்கு ரோல்களில் தனுஷிற்கு தன் திறைமையைக் காட்ட நல்ல ஸ்கோப். தனுஷ் கீசிக்கிறார்.

கார்த்திக்கிற்கு ரீ என்ட்ரி இதைவிட நன்றாக அமையாது. அசால்டாக நடித்திருக்கிறார்.

அமைரா தஸ்தூர் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சாதாரணமாக வட இந்திய நடிகைகளை எங்களது இயக்குனர்கள் உத்திரப்ரதேசத்தை உரித்து மத்திய பிரதேசத்தை அசக்கி ஆடவைத்து அனுப்பிவிடுவார்கள். அவர்களிடம் அதற்கு மேலும் எதிர் பார்க்கமுடியாது. ஆனால் அமைரா தஸ்தூர் பாப்பா அழகாகவும் இருந்துகொண்டு நடிக்கவும் செய்கிறார். ஐஸ்வர்யா தேவன் சில இடங்களில் அள்ளுகிறார்.

அமைராவிற்கு  நல்ல இயக்குனர்களும்  நல்ல கதைகளையும் கிடைத்தால் ஒரு ரவுண்டு கட்டி அடிக்கலாம்.

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். "டங்கா மாரி ஊதாரி" டிபிகல் லோக்கல் சரக்கு. ஆத்தாடி ஆத்தாடி நல்ல மெலடிதான், ஆனால் "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன" வை தட்டி டிங்கரிங் பண்ணி வைத்திருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது.

இந்தக் கதைக்கு லாஜிக்கெல்லாம் தேவையில்லை, பூர்வ ஜென்மமோ இல்லை எப்போலமைனோ இல்லை ஏதோ ஒரு மைனோ வேலை செய்தால் தோன்றும் சிந்தனைகளுக்கு லாஜிக் ஏது..............சும்மா தாறு மாறாக பூந்து வூடு கட்டியிருக்கிறார்கள் கேவி ஆனந்து குழுவினர். பாடல் காட்சிகள் படமாக்கிய விதம் குறிப்பாக ஆத்தாடி ஆத்தாடியும், டங்கா மாரியும் நன்றாக உள்ளது.

மொத்தத்தில் படம் டிபிகல் மசாலா ஹிட்...................



Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 February 2015

டீ வித் முனியம்மா பார்ட்-30

டேய் மீச இன்னாடா முனியம்மா வர்ல..........சரி எனிக்கு சைனா டீ போடுறா......இட்லி வடகறி கீதா...............

இல்லே சாரே இந்நல வட அல்லாம் போயி..........

இன்னாது நேத்தி வட மீந்து போவலையா..........போடா இன்னாதான் கீது இடியாப்பம் பாயா கீதா..........

ஐய முனிமா இன்னா லேட்டு .............

டேய் லோகு, செல்வம் நான் இன்னாடா உன்னிய மாரியா.........வியாவாரம் முக்கியம்டா..............

தோடா அல்லா பெருசுங்களும் வந்துகின்னுகீது பாரு.

சரி முன்னிமா இந்தம்மா தமியிசை "குதிரயே ஓடிச்சு......... அப்பால லாயத்த இய்த்து மூடி இன்னா யூசுன்னு கேக்குதே" இன்னா விசயம்..........

அதா லோகு ஸ்ரீரங்கத்துல தேர்தல கண்காணிக்க கர்னடகாவிலேந்து ஒரு இனிஸ்பெக்டறு வராராம்.அந்தாளு இப்போ வந்து இன்னா பிரயோசனம். அதுக்குள்ளார எல்லா கட்சிங்களும் துட்டு அள்ளி வுட்டுக்கினானுகளே. அந்த காண்டுலதான் அந்தம்மா அப்படி பேசுது.............

அதுவும் நியாயம்தானே.............

அடப்போ பாய்....... திராவிட கட்சிங்க வந்த பின்னால எங்க நியாயம் நேர்மை எல்லா.......இவனுங்க ஆட்சியில இருக்கசொல்ல  பணத்த அள்ளிவுடுவானுங்க..........அவனுங்க வந்தா அவனுங்க அள்ளி வுடுவானுங்க...........

அவனுங்க கொடுத்தா வாங்குற பேமானிங்களுக்கு அறிவு எங்க போச்சு......

அது இல்ல லிங்கம் சாறு வாங்குறவன் அடிச்ச  துட்டுல நமக்கு கொடுக்குறான் வாங்கிக்கினா இன்ன தப்புன்னு இப்போ ஜனம் நெனைக்குது.......இன்னத்த சொல்ல.

மொதல்ல கள்ள ஒட்டு குத்தி.................கெலிச்சானுங்க..............சேசன் வந்து அட்டை கொடுத்து அதுக்கு ஆப்பு வச்சாரு.............அதால இப்போ புச்சா பணம், பிரியாணி, சாராயம், டாப்பப்புன்னு இறங்கிட்டானுங்க..............

அய்யே அது இன்னா முனிம்மா டாப்பப்பு.............

அய்ய உனுக்கு தெரியாதா நாடார்...........ஸ்ரீரங்கத்துல சில கடையில போயி உன் செல்லுக்கு இனாமா சார்ஜு போட்டுக்கலாமா............

சரி அத்த வுடு முனிம்மா டெல்லில யாரு வருவாங்க........

கேஜ்ரிவால்தான் வருவாராம் போல.............சொல்லிகிரானுங்க.

போன தபா வந்து துண்டைகானோம் துணியக் காணோமுன்னு அம்பேல் ஆயிட்டாபோல...........இப்ப இன்ன செய்வாரு.........

கேஜ்ரிவாலுக்கு கிரண்பேடிய மேலுன்னு சொல்றாங்க...........

அடப்போடா கேஜ்ரிவால் மேலு.............கிரண்பேடி பீமேலுடா...........

அய்ய தோபாருடா முனிம்மா நக்கல் செய்யுது............

இன்னா முனிமா நம்ம கேப்டனு.............பா.ஜ.க வுக்கு தண்ணி காமிக்கிறாராமே..

ஆமாண்டா அவரு கச்சில ஆளு நிக்கப்போவதா சொன்னாரு, பி.ஜே.பி சந்துல பேந்தா வுட்டுகிச்சா............மனுசன் மெர்சல் ஆயிட்டாரு.

முன்னிமா புச்சா படம் வந்துகிச்சே...............தல படம் எப்படி கீதாம்.

ஒரே டிக்கடுல மூணு படம் காமிக்கிராங்கன்னு அவனவன் நக்கல் வுட்டுகினு கீறானுங்க............இவனுங்க அரச்ச மாவையே அரச்சிகினு புளிப்பு ஊத்திகினு கீறானுங்க.

இந்தி படம் எப்படி கீதான்...............

கமலு பொண்ணு வருதே அந்தப் படமா............படம் நல்லகீதுன்னு கோயிலாண்ட பேசிக்கினு போனாணுக............நமக்கு இன்னா தெரியும் இந்திப் படம் பத்தி.................

முனிம்மா ஐய பேப்பர குடு இன்னா போட்டுக்கிறான்

செல்வம் இன்னாடா பொம்பளையாளுங்க படமா..............










Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 3 February 2015

இளங்கோவன்-பயோடேட்டா

இயற்பெயர்:                          இளங்கோவன்
பூர்விகம்:                                ஈ.வெ.ரா குடும்பம்
பெருமை:                               ஈ.வெ.கே. சம்பத்தின் வாரிசு
சமீபத்திய சாதனை:           எல்லோரையும் வாசன் கட்சிக்கு அனுப்புவது.
நிரந்தர சாதனை:                 கோஷ்டியில் கும்மி அடித்தது
நண்பர்கள்:                             இப்போது குஷ்பூ, எப்போதும் யாரும் இல்லை
எதிரிகள்:                                 கணக்கிலடங்காது
சமீபத்திய எரிச்சல்:             டில்லி பயணம்(அன்னையிடம் அர்ச்சனை பெற்றது)
நிரந்தர எரிச்சல்:                   வாசன், சிதம்பரம் கோஷ்டி
தற்போதைய முகவரி:       சத்யமூர்த்தி பவன்
நிரந்தர முகவரி:                   ஈரோடு
மறந்தது:                                 கோமளவல்லி
மறக்காதது:                           கோமாளித்தனம்
பிடித்த பல்லவி:                   "நான் ஒரு முட்டாளுங்க"

      

Follow kummachi on Twitter

Post Comment

Monday 2 February 2015

கலக்கல் காக்டெயில்-165

உங்க தாத்தா அரிசி பதுக்கியவர்

சமீபத்தில் காகிரசை விட்டு வெளியேறிய "ஜெயந்தி நடராஜனை" தற்போதைய தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் இளங்கோவன் விமர்சித்த விமரசனம்தான் தலைப்பில் உள்ளது. தலைவர் பொறுப்பேற்றவுடன் சிதம்பரம், கார்த்திக், ஜெயந்தி நடராஜன் என்று எல்லோரையும் தன் அரைவேக்காட்டுத்தன பேச்சால் வருத்தெடுத்துக்கொண்டிருக்கிறார் இளங்கோவன்.

ஜெயந்தி நடராஜன் தான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது ராஜீவ் ஒரு சில ஆட்களுக்கு ஒப்பந்தம் தர நிர்பந்தித்தார் என்று சொல்லப்போக, இளங்கோவன் "உங்க தாத்தா பக்தவத்சலம் பஞ்ச காலத்தில் அரிசி பதுக்கியவர்  தானே" என்று காங்கிரஸ் கட்சி தலைகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறார்.

நல்ல கட்சிய வளர்க்குறீங்க அப்பு, புஷ்கு.........அக்கா கூப்பிடுறாங்க தமிழ் நாடு காங்கிரஸ் சார்பா சத்தியமூர்த்தி பவன்ல ஒரு குத்து போடுங்கபா...........

தள்ளாடும் தமிழகம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு "இரண்டு லட்சம் கோடி கடன், தள்ளாடும் தமிழகம்" என்று ஜூனியர் விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் தமிழகம் கடன் சும்மையில் தள்ளாடிக்கொண்டிருப்பதாகவும் அதற்கு உண்டான காரணங்களை அலசி ஆராய்ந்து புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையை நாம் படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

தொழில் வளர்ச்சியிலும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியிலும் அண்டை மாநிலங்கள் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கின்றன, மேலும் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க யாரும் முன் வராததற்குக் காரணம் மின்சாரப் பற்றாக்குறையே என்று சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் நமது அமைச்சரோ தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கப்சா விட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழகம் தள்ளாடுகிறது என்பது டாஸ்மாக்கில் நிற்கும் வரிசையைப் பார்த்து கணக்கிட்டுவிடலாம்.

கீச்சோ கீச்சு
ஆஞ்சநேயருடன் நான் இரண்டு முறை பேசியுள்ளேன், அசப்பில் என்னை மாதிரியே இருக்கிறாய் என்று கூறினார்---------------கட்டதொர 

சின்ன வயசுல ஜட்டி போடாம ஜிப்பு போடும் போது ஒரு கவனம் வருமே அந்த கவனம் வாழ்நாள் முழுக்க இருந்தா  வாழக்கையில் முன்னேறிரலாம்------------------------சிக்கல்காரன் 
அந்த கவனம் வாழ்நாள் முழுக்க இருக்கனும்னு இன்னிக்கு வரை ஜட்டி போடாம ஃபேண்ட் போடுறியே உன் கடமை உணர்ச்சி கண்டு...............புதியவன் 

ரசித்த கவிதை 

தொக்கி நிற்பது 

விழுங்கிய பின்னும்
தொண்டையில் நிற்பதுபோல்
நெருடலில் வாழைப்பழம், சோறு என
எதைஎதையோ விழுங்கிப் பார்த்தும்
விலகாத புதிராகப் போய்விட்டது என
தேத்திக்கொண்டு
உறங்கப்போனவனின் கனவில்
தொக்கி நிற்கிறது
மாத்திரை ஒன்று----------------------------நன்றி: கீரன் செல்லதுரை 

ஜொள்ளு 



Follow kummachi on Twitter

Post Comment