Tuesday 17 February 2015

கலக்கல் காக்டெயில்-166

இடைத்தேர்தல் அவசியமா?

சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் இடைதேர்தல் வரும் என்று தெரியும்.  ஆனால் இப்பொழுது நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான காரணம் வேறேமாதிரி. எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் வெற்றி யாருக்கு என்பது நாமெல்லோரும் அறிந்ததே. எந்த கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக  இருக்கும் பொழுது  தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி வென்றுவிடுவார்கள். இது நமக்கு தெரியும், ஏன் தேர்தல் கமிஷனுக்கே தெரியும்.

கள்ள ஒட்டு கலாசாரத்தை ஒழிக்க ஒருவர் வந்து ஒழித்துக் கட்டினார். இப்பொழுது அரசியல்வாதிகள் இந்த புதிய கலாச்சாரத்தை (திருமங்கலம் பார்முலாவாமாம்) இறக்குமதி செய்துள்ளார்கள். இதற்கு யார் வரப்போகிறார்களோ?.

அது வரை இந்த தேர்தலை நிறுத்தி வைக்கலாம். ஆளுங்கட்சி உறுப்பினரையே எதிர்ப்பு இல்லாத வெற்றியாளர் என்று தேர்தல் கமிஷனே அறிவித்துவிட்டு இந்த தேர்தல் தண்டசெலவை நிறுத்தலாம்.

இத சொன்னா நம்மள.............வர காச கெடுக்க வராண்டா என்று அடிக்க வருவார்கள்.

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

கிரிக்கெட்டே ஒரு "முனாபுனா" விளையாட்டு என்று ஒரு கருத்து உண்டு. எது எப்படியோ இந்த "முனாபுனா" விளையாட்டில் எந்த அணி விளையாடினாலும் வராத ஒரு பரபரப்பு இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் தொற்றிக்கொண்டு விடுகிறது. அன்று காலை எழுந்தவுடன் ஒரு பரபரப்பு,  சரி இன்று இதைப்பற்றி கண்டுகொள்ளக்கூடாது கருமமே கண்ணாக ஆணி பிடுங்க வேண்டும் என்று இருந்தாலும், டேமேஜர் வந்து ஸ்கோர்  சொல்லி உசுப்பேத்தும் பொழுது போயா மேனேஜரே ஆணி புடுங்கல (அவர் என்றைக்கு புடுங்கி இருக்கிறார்?) என்று நெட்டை திறந்து ஐக்கியமாகி எட்டு மணி நேரம் கழித்தாகிவிட்டது. இந்த ஜோதியில் கலந்ததால் தேவையுள்ள ஆணியெல்லாம் புடுங்கி ஓயும் பொழுது மேட்சும் முடிந்தது.

சரி மேட்ச் முடிந்தது ஜெயிச்சாட்டானுங்கப்பா என்று வேலையை ஏறக்கட்டும் பொழுதுதான் யோவ் அந்த ரிபோர்ட் ரெடி பண்ண சொன்னேனே என்ன ஆச்சு? என்று கேட்கும் டேமேஜரை பாகிஸ்தான் கேப்டன் ஆக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

ரசித்த கவிதை 

எங்கே சென்றாய்?

கண்ணிருந்தும் குருடாக்கி!
    காதிருந்தும் செவிடாக்கி!
மண்ணிருந்தும் தரிசாக்கி!
    மலரிருந்தும் வீணாக்கி!
பண்ணிருந்தும் வாய்மூட
    பா..இருந்தும் கைமூட
என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?

நிலவில்லா வானமாக
    நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
    மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!
நன்றி: அருணா செல்வம் 

ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் டேமேஜர் தான்...

கவிதை அருமை...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அரசியல் கருத்துடன் நல்ல கவிதையும் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
த.ம 3
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.