Tuesday 31 December 2013

2013-திரும்பிப் பார்க்கிறேன்


 2013 ல் நாட்டில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை பார்ப்போம்.

தமிழகம்

வரலாறு காணாத மின்வெட்டு,  போக்கு காட்டி போன ஹெலன், மாடி புயல், மரக்காணம் கலவரம், பருவமழை தவறியது, தொடரும் மீனவர் பிரச்சினை என்று இந்த வருட நிகழ்வுகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

சட்ட சபை பெஞ்ச் தட்டிகளுக்கு அம்மா உணவகம், அம்மா குடிநீர், மற்றும் அரசியல் தீர்மானங்கள், உதவாக்கரை திட்டங்கள் என்று ஒரு சில நடவடிக்கைகள் வேண்டுமானாலும் மகிழ்ச்சி தரலாம்.

மற்றபடி தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு  போன்றவை குறைந்ததாகத் தெரியவில்லை.

மேலும் திவ்யா இளவரசன் காதல், பின்னர் ஜாதி மோதலில் இளவரசனின் சர்ச்சைக்குரிய மரணம் என்று செய்தித்தாள்களை ஆக்கிரமித்த சில சம்பவங்கள்.

ஏற்காடு இடைத்தேர்தல் காணாமல் போன கட்சிக்கு ஓரளவிற்கு நம்பிக்கை கொடுத்தது மற்றுமொரு அரசியல் கூத்து.

சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு தந்த சந்தேகக் கோடுகள் என்று சில நிகழ்வுகள் இன்னும் புரியாத புதிர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் அவர்களின் மரணம்.

இந்தியா 

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. பி.ஜே.பிக்கு புத்துயிர் கொடுத்தது, மோடி போன்ற கேடிகளின் திடீர் எழுச்சி. ஊடகங்கள் மோடியின் பெயரை தூக்கிப் பிடித்து இந்தியாவின் தலை எழுத்தை மாற்றப்போவதாக மாய்ந்து மாய்ந்து பிரச்சாரம்.

டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் சாதனை இந்தியாவின் எதிர் காலத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஒரு நல்ல நிகழ்வு. இருந்தாலும் கேஜ்ரிவாலின்  செயல்களை வைத்துதான் இது நல்ல மாற்றமா இல்லை கெட்ட மாற்றமா என்று ஊகிக்க முடியும்.

2012ல் டில்லியில் நடந்த நாட்டையே உலுக்கிய  நிர்பயா கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு ஊடகங்களுக்கு தீனி போட்டன. அதைத் தொடர்ந்து வர்மா கமிட்டியின் 640 பக்க சட்ட தீர்திருத்தம்,ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை  என ஒரு சில நிகழ்வுகள்.

தமிழ் சினிமா

கடந்த வருடம் 152 தமிழ் படங்கள் வெளிவந்தன, அதில் முக்கால்வாசி படங்கள் மொக்கையாக இருந்தன.  தமிழ் திரையுலகம் சினிமா நூறு என்று விழா எடுத்து முழுக்க முழுக்க அம்மா புகழ் பாடின. முக்கியமான திரையுலகப் பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.

வழக்கம்போல தமிழ் பேசாத புது நடிகைகளின் கவர்ச்சி அறிமுகம்.

ஒரு சில நடிகர்களின் படங்கள் அரசியல் காரணங்களால் சொன்ன நாட்களில் வெளிவரமால் போனது.


இசையமைப்பாளர் டி. கே. ராமமூர்த்தி, பி.பி. ஸ்ரீநிவாஸ், லால்குடி ஜெயராமன், டி.எம். சௌந்தர்ராஜன், கவிஞர் வாலி, இயக்குனர் மணிவண்ணன், ராசு மதுரவன், நடிகர்கள் குள்ளமணி, சிட்டிபாபு,  ராஜ சுலோச்சனா, சுகுமாரி, மஞ்சுளா  போன்ற பழம் பெரும் கலைஞர்கள் மரணம் அடைந்தனர்.

2014 இனிதே இருக்க வேண்டுவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Follow kummachi on Twitter

Post Comment

Monday 30 December 2013

கடிச்ச பத்து கடிக்காத பத்து

வேலை நிமித்தமாக மலேசியா சென்று வந்ததால் கடந்த பத்து நாட்களாக  வலையுலகம் பக்கம் வர முடியவில்லை. வருடக் கடைசி என்பதால் அந்த வருடம் வந்த படங்களை பட்டியலிட்டு பிடித்த பத்து, பிடிக்காத பத்து, கடிச்ச பத்து கடிக்காத பத்து, வெடிச்ச பத்து, வெடிக்காத பத்து, முடிச்ச பத்து, முடிக்காத பத்து என்று பல பட்டியல்கள் அணி வகுக்கும். இனிதான் இவற்றையெல்லாம் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.

நடுவில் ஹாரி அடுப்பில் ஆரம்பித்து அவிச்ச முட்டை வரைவந்த பதிவுகளை மேலோட்டமாக பார்க்க முடிந்தது. அதற்கு முத்தாய்ப்பாக "காணாமல் போன கனவுகள்" ராஜி அம்மா கழுவிய பாத்திரத்தில் கணவனை துவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போட்டு அசத்தினார்கள்.

இப்பொழுதெல்லாம் பதிவுலகம் பக்கம் வரவில்லை என்றால் கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ரெண்டு கட்டிங் இல்லாமல் சரியாக மாட்டேன் என்கிறது.

ஒயின்ஷாப் பிரபாகரன் கனவுக்கன்னிகள் பதிவைப் பார்க்கும் பொழுது ஐயோ எத்துனை பதிவுகளை படிக்கத் தவறிவிட்டோம் என்ற ஏக்கம் எழுகிறது.

மலேசியப் பயணம் முடிந்து பதிவுலகம் பக்கம் வர முதல் மொக்கை தொடங்கியாகிவிட்டது.

இனி வழக்கம்போல மொக்கைகளை தொடரலாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 20 December 2013

கலக்கல் காக்டெயில்-132

துணை தூதர் கைது விவகாரம்

அமெரிக்காவில் இந்திய துணை தூதர் கைது விவகாரத்தில் இந்திய அரசு அதிரடியாக நடந்து அவரை பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்துவிட்டது. உண்மையில் அவரின் கைது பின்னணியைப் பார்க்கும் பொழுது நமது இந்திய அரசாங்கத்தின் ஒருதலைபட்ச மனப்பான்மை நன்றே புரிகிறது.

இந்திய துணை தூதர் தம் இல்லத்தில் வேலைக்கு வைத்திருந்த பணிப்பெண் சந்கீதாவிற்கு குறைந்தபட்ச சம்பளத்தை தராததும், அளவுக்கு அதிகநேரம் வேலை வாங்கியதும் தான் முக்கிய குற்றச்சாட்டு.

அமெரிக்க இந்திய அரசுகளின் அதிரடி நடவடிக்கைகளும் ஊடகங்களின் "நானே ராஜா, நானே மந்திரி, நானே நீதி" போக்கும் ஒரு சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுக்கின்றன.

சங்கீதா ராபர்ட் இப்பொழுது அரசாங்கத்தின் போக்கைக் கண்டு தலை மறைவாகியுள்ளார். ஊடகங்களை காணவும் மறுக்கிறார்.

நீதிதேவதை வழக்கம்போல் கன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். 

தேசிய கட்சிகளுக்கு பெப்பே.........

தமிழகத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளுமே தங்களது பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் வியூகங்களுக்கு ஏற்பாடுகள் செய்கின்றன.

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கிட்டத்தட்ட அனாதையாக கைவிடப்பட்ட நிலை.

ஸ்பெக்ட்ரம் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கை வைத்து மிரட்டியும் இரண்டு கட்சிகளும் கூட்டு சேர மறுக்கின்றன. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் காங்கிரசை சேர்த்தால்  முதலுக்கு மோசமாகிவிடும்.

பி.ஜி.பி யுடன் தமிழகத்தில் தற்பொழுது சேர்ந்துள்ள ம.தி.மு.க வும், பா.ம.க வும் தி.மு.க வை கூட்டணியில் உள்ளே விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் சேர தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தயங்காது.

ஆட்சியில் பங்குபெறும் கட்சியை வைத்து பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் ஸ்பெக்ட்ரம்  வழக்கின் போக்கும் மாறும்.

இதுதாண்டா அரசியல்.

ரசித்த கவிதை

கூடிவாழ்வோம்


செந்தமிழ்ப் புகழினைக் காத்திடுவோம் - தமிழ்
     செழித்திடப் பாமலர் கோர்த்திடுவோம்!
சிந்தையில் நன்னெறி சமைத்திடுவோம் - நாடு
     சிறந்திட நல்வழி அமைத்திடுவோம்!

வறுமையை வேருடன் நீக்கிடுவோம் - கொடும்
     மடமையாம் நோய்தனைப் போக்கிடுவோம்!
கடமையால் மேன்மையைத் தேக்கிடுவோம் - நாம்
     கற்றவர் வழியை நோக்கிடுவோம்!

விலையதின் உயர்வையே குறைத்திடுவோம் - நன்கு
     விலைப்பொருள் பெருகிட உழைத்திடுவோம்!
மலையென ஒற்றுமை வளர்த்திடுவோம் - கூடி
     மகிழ்வுடன் அனைவரும் வாழ்ந்திடுவோம்!
 
கவிஞர்.கி. பாரதிதாசன் 
 

ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 19 December 2013

கூட்டணி கூடி வரும் நேரம் (கவுஜ)


கூட்டணி கூடி வரும் நேரம்
கட்சிகள்  பொதுக் குழு கூடும்
நாட்டின் நலம் சில காலம்
நலம் பெற திட்டம் தீட்டும்
ஏட்டினில் செய்திகள்  பல பாரும்
கொள்கை குப்பை மேட்டில் ஏறும்
வீட்டினில் செல்வம் எட்டி பார்க்கும்
மது வாசம் மேடையில் வீசும்
மேட்டுக் குடி பொருள் யாவும்
விலை இல்லா பெயர் பெற்று
காட்டில் வந்து கடை ஏறும்
தேர்தல் என்ற முறை கண்ட
நாட்டின் வளம் பல காலம்
நலிந்து வலு இழந்து போகும்.
   Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 18 December 2013

சைக்கிள் கேப்பில எவனோ வேட்டிய உருவிட்டாண்ணே.......

வலை கீச்சுதே

ரசித்த கீச்சுகள்

ஷூவும் கடிக்கிறது, கொசுவும் கடிக்கிறது. கொசுவை அடிக்கிறோம், ஷூவை துடைத்து பாலிஷ் போடுகிறோம்-----------ரப்பர் வாயன் 

தேர்தல் முடிவு காங்கிரசுக்குபின்னடைவுதான்- கருணாநிதி# வெந்த புண்ணுல வேலை சொருகுறாராம்ம்ம்மா-------வேடன்மெட்ராஸ் பஸ்சுல உக்காந்துகிட்டு "நான் மெட்ராஸ் போறேன்"னு நினச்சா சாதா தாட். "மெட்ராஸ் என்னை நோக்கி வருது"ன்னு நினச்சா அதான் பாசிட்டிவ் தாட்----------கருத்து கந்தன் 


|| பத்து மிளகு கைல இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் || #பழமொழி பொங்கல்ல வந்தா சாப்பிடுங்க தூக்கி போட்டுடாதிங்க.-----ட்விட்டியவாதி


வைகோ கூட்டணி குறித்துப் பேசினாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது-இல.கணேசன்#மாப்ள அவருதான் ஆனா அவர் சட்டையை பத்தி எனக்கு தெரியாது------------அறுந்த வாலு


6 மாதம் தான் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும்- ஜெயலலிதா ## அப்புறம் ... ஒரே வெட்டுதான் ,இருட்டுத்தான்-----------கரிகால சோழன் 


முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல: பழ.நெடுமாறன் ி.# இப்டி பேசுனா அது ஆளுங்கட்சிக்கு எதிரானது.ஜெ வின் எண்ணங்கள் புதிரானது------சி.பி.செந்தில்குமார்


நல்லா இருக்கும் தம்பிய லூசா நடிக்க வச்சா செல்வராகவன், லூசா இருக்கும் தம்பிய லூசாவே நடிக்க வச்சா வெங்கட்பிரபு #படித்ததில் பிடித்தது---ர. விவேக் 


மார்கழி மாசத்தில நாய்களுக்கு ஏன்தான் கடவுள் சீசன் வைச்சாரோ .. சின்ன பசங்களை அதிகாலையில பஜனை கூட்டிட்டு போகமுடியல------மன்மதக்குஞ்சு


குளிருக்கு 'மங்கி கேப்' போட்டு போனா, பூச்சாண்டி போறான் பாரு'னு நம்மள காட்டி கொழந்தைக்கு சோறுட்டுறாங்கபா #ஃபன்னி வில்லேஜ் பீப்புள்ஸ்------ரவுசு 


திமுக விலகியதால் சுமை குறைந்துவிட்டது - EVKS இளங்கோவன் # அது கிடக்குது 'கழுதை'... மு.க மைன்ட் வாய்ஸ்கள்....!-------ட்விட்டர் பவன்ஹி..ஹி..இன்று மாங்கல்ய நோன்பாம் என்று இளித்தேன்!தெரியும் போய் உன் வேலையைபாரு என்கிறார் வீட்டுக்காரம்மா!#கலிகாலமடா சாமி!------வெ. புகழ்மணி 


எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது-இளங்கோவன்#அண்ணே,சைக்கிள் கேப்ல எவனோ நம்ம வேட்டியை உருவிட்டான்னே---------உடன் பிறப்பேஎந்த கூட்டணியா இருந்தால் என்ன? தீர்மானிக்க போவது என்னமோ குவார்ட்டரும் கோழி பிரியாணியும் தான் ...நீதிடா..நேர்மைடா..ஞாயம்டா # ஒழிங்கடா-------முத்துச்சரம்

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 December 2013

நோட்டாவுடன் புதிய கூட்டணி ----------கேப்டன் அதிரடி அறிவிப்பு

புதிய கூட்டணி குறித்து விவாதிக்க கேப்டன் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அண்ணி பிரேமலதாவும், மச்சான் சுதீஷும் மேடையில்  இருக்க கட்சியில் மிச்சம் உள்ள எம்.எல். ஏக்களும் சில  வட்டம் மாவட்டங்களும் தரையில் அமர்ந்து மிச்சர் தின்று கொண்டிருக்கின்றனர்.

முதலில் அண்ணியார் பேச்சை துவக்குகிறார். தே.மு.தி.க வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் யாரிடம் கூட்டணி வைப்பது என்பதை பற்றி நாம் முடிவெடுக்கக் கூடியிருக்கிறோம். நான் நமது கட்சியின் சார்பாக முடிவெடுக்கும் உரிமையை கட்சியின் ஒரே தலைவர் (மாமோய் வீட்டுல வா வச்சிக்கிறேன்) கேப்டன் அவர்களுக்கு அளிக்கிறேன்.

பிறகு மச்சான் சுதீஷ் மைக் பிடிக்கிறார்.அக்கா அவர்கள் சொன்னது போல நமது கட்சியாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று முடிவெடுப்பதை மாமா கேப்டனின் கைகளில் அளிப்பதை நான் வழி மொழிகிறேன்.

பிறகு கேப்டன் மச்சான் சுதீஷின் பலத்த கரகோஷத்துடன் மைக்கை பிடிக்கிறார்.

நண்பர்களே கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டணி முடிவை என்னிடம்ம் கொடுத்திருக்கின்றனர். ஆதலால் நான் தான் கூட்டணி குறித்து நல்லதொரு முடிவெடுப்பேன்.

டேய்..........மிச்சர் பேக்கட்ட கீழே பிடி.

 நான் அடிக்கடி கடவுலடனும் மக்கழுடனும் தான் கூட்டனி வைப்பேன் என்று சொழ்ழுவேன். ஆனால் மக்கழ் நமக்கு அளிக்கின்ற ஆதரவை பார்க்கும் போழ்.....து இனி கடவுளும் நம்மை கைவிட வாய்ப்புண்டு. மேலும் பண்ருட்டியார் நம்மை விட்டு போனதற்கு எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த அம்மாவுடன் நாம் கூட்டணி வைத்து சந்தித்த வழக்குகள் ஏராளம். நம்மை மதுரை நீதிமன்றம், கடலூர் நீதி மன்றம் என்று பொய் வழக்குகள் போட்டு துரத்துது. மேலும் நாம் போகும் இடங்களிலெல்லாம் பீசை பிடுங்கி இருட்டடிக்குது.

கலீஞர் நான் போ சொல்ல வர சொல்ல கும்பிடு போட்டுட்டு இப்பொழுது நம்மை கைவிட்டு விட்டார்.

காங்கிரசும், பா.ஜ.க வும் என்னுடைய தலைமையில் கூட்டணி வைக்க ஒத்துக்கொண்டால் நான் நல்ல மருந்து குடித்து முடிவெடுப்பேன்.

புதுடில்லி சட்டமன்ற தேர்தலில் நமக்கு விழுந்திருக்க வேண்டிய ஓட்டுக்களில் ஆட்டையைப் போட்ட கேஜ்ரிவால் கட்சியுடன் கூட்டணி அமைக்க நான் ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

நம்மை விட அதிக வாக்குகள் பெற்ற "நோட்டா"வுடன் கூட்டணி அமைக்கலாமா என்று யோசித்து வருகிறேன். கூடிய விரைவில் நோட்டா தலைவருடன் பேசி நல்லதொரு முடிவை மக்கழ் மன்றத்திலே வைப்பேன்.

வழப்போகும் நாடாளு மன்றத்தேர்தலில் நாழ்ழ்ப்பது சீட்டுகளிலும் வெல்வது உழு(று)தி.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 16 December 2013

கலக்கல் காக்டெயில்-131

வலையில் சிக்கிய ரத்தத்தின் ரத்தங்கள் 

பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், தென் சென்னை எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் இருவரும் இல்லாத எண்ணை நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் வழங்க கை நீட்டியிருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய செய்தி அல்ல. வழக்கமாக இந்தியாவில் உள்ள எந்த எம்.பி. இடமோ இல்லை எம்.எல்.எவிடமோ சிபாரிசு கடிதம் வேண்டி சென்றால் காசு கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.

ஆனால் தவறாமல் எல்லோரும் சொல்லுவது இந்தக்காசு அவர்களுக்கு அல்ல, கட்சி தலைமையிடம் கொடுக்கவேண்டும் என்பார்கள்.

இதெல்லாம் அரசியலில் சாதாரணம்.

கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்

தி.மு.க வின் பொதுக்குழுவில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். இது ஸ்பெக்ட்ரம் கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமா இல்லை தேர்தல் பேரத்தில் அதிக சீட்டில் போட்டியிட அச்சாரமாக போடப்பட்ட உவ்வாகட்டி உட்டாலக்கடியா என்பது போகபோகத் தெரியும்.

எல்லோரும் தனியாக போட்டியிட்டால்ஒவ்வொரு கட்சியின் வண்டவாளம் தெரிந்துவிடும்.

எல்லோரும் தனி என்றால் நல்ல முடிவே வரவேற்போம், ஏனென்றால் மாற்றுக் கட்சிக்கு வகையுண்டு.

தி.மு.க வுடன் கூட்டணி இல்லை என்றவுடன் இளங்கோவன் நிம்மதியாய் இருக்கிறாராம். நல்லா சொல்றாங்கப்பா.

ரசித்த கவிதை 

மலருக்கு மலர் என்று பெயர்

நினைவுத் தாழ்வாரத்தில்
பற்றி படர்ந்தேருகிறது
பதின் பருவத்தின்
மலர் ஒன்று.
மல்லி
முல்லை
பிச்சி எனும்
பெயர்கள் எதுவும் தேவையில்லை
மலர் என்பதே போதுமானதாயிருக்கிறது!.
                                                  ------கடங்கநேரியன்

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 December 2013

கதை சொல்லுது பாட்டி

இருண்ட தமிழகத்தைப் பற்றி எழுதாத பதிவர்களே இல்லை. என்னதான் மாய்ந்து  மாய்ந்து எழுதினாலும் படிக்க வேண்டியவர்கள் படிப்பதில்லை. நிலைமை எப்பொழுது சீராகுமோ தெரியவில்லை. சென்னையில் இரண்டு மணிநேர மின்வெட்டு என்றால் மற்ற இடங்களில் கேட்கவே வேண்டாம்.

நமக்கு தெரிந்த வரையில்  இந்த மின்வெட்டுப் பிரச்சினை தீரவே தீராது. உண்மையில் தனியார் மின்திட்டங்கள் கைவிடப்பட்டதே மின்வெட்டுக் காரணமாம். தமிழகத்தில் மட்டும் கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் 2007ம் ஆண்டே தனியார் மின்திட்டங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதியளித்தன. இந்த திட்டங்கள் வந்திருந்தால் 17,140 மெகாவாட் உபரியாக உற்பத்தி செய்திருக்கமுடியும்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த்பாரத் மற்றும் கோல்டன் ஜென் நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் பணிகளைத் தொடங்கவில்லை. இதற்காண காரணங்களாக பல்வேறு தரப்பு எதிர்ப்புகளும், உள்ளூர் பிரச்சினைகளும் சொல்லப்படுகின்றன. மேலும் கமிஷன் ரேட் படியவில்லையா என்று தெரியவில்லை.

ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் ஆளும் கட்சிகள் கேட்கும் கமிஷன் கட்டுப்படியாகததால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது பழைய கதை.

இதற்கான காரணங்களை கேட்டால் இன்றைய முதல்வரும், நேற்றைய முதல்வரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவார்கள். இல்லை மத்திய அரசின் சதி, மாநில அரசின் விதி என்பார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மூன்றே மாதத்தில் ஆக்கிகாட்டுவேன் என்று ஒட்டு வாங்கிய பாட்டி ஒன்னாப்பு பிள்ளைகளுக்கு சொல்லுவது போல்

ஒரு காக்கா கரண்டு கம்பத்தில உட்கார்ந்திருந்ததாம். அப்போஅந்த வழியாஒரு தள்ளு வண்டி தாத்தாவும் அவர் மகன் கோணவாய் குமரனும் போய்க்கொண்டிருந்தார்களாம்.

கரண்டு கம்பத்திலிருந்த காக்கையை பார்த்து தாத்தா "விடியலின் குரலே, கருமையின் அழகே காகமே, மின் கம்பத்தில் அமர்ந்திருக்கிராயே மின்சாரம் பாய்ந்து மாள்வாய்" என்றாராம்.

அதற்கு அந்த காகம் " நீர் ஆண்ட பொழுது பிடுங்கிய மின்சாரம் இன்னும் வரவில்லை, இது கூட தாத்தா தெரியாமல் குடும்ப வாழ்க்கையில் மூழ்கி விட்டாயே, உனக்கு உன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை, என் உயிரைப் பற்றி கவலை வேண்டாம்" என்று எள்ளி நகையாடியதாம்.

இப்படிதான் போன முறை ஆட்சி நடந்தது, அதை ஒரு காக்காகூட  எள்ளி நகையாடும்படி இருந்தது.  இப்பொழுது என்னுடைய பொன்னான ஆட்சியிலே மின்சாரம் நிரம்பி வழிகிறது. எல்லோரும் அதை பக்கெட்டில் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

  என்று கதை சொல்லுவார்கள்.

மக்களும் இதையெல்லாம் கேட்டு அடுத்த முறை மாற்றி குத்துவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 8 December 2013

சொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்


புரட்சி தலைவர் வழிகாட்டுதலின் பேரில் நல்லாட்சி புரியும் என் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதே இந்த ஏற்காடு இடைத்தேர்தல் நிரூபிக்கறது--------தமிழக முதல்வர்.  

சுண்டலும் பிரியாணியும் கட்டு கட்டாக பணமும் கழண்டதனால தான் இந்த வெற்றின்னு கூடுவாஞ்சேரி கோவிந்தன் சொல்றாரு.

வருந்தாதீர்கள் தோல்விகளை ஏணிப் படியாக்கி கொள்ளுங்கள்-------ஏற்காடு தோல்வி குறித்து கலைஞர்.

குடுக்குற காசுல ஆட்டையைப் போட்ட  உடன் பிறப்புகளே அடுத்த முறையாவது உள்குத்து குத்தாமல் அடுத்தவன் காசுல ஆட்டையைப் போடப்பாருங்கள்.


எல்லாப் புகழும் மோடிக்கே-----தேர்தலில் வென்ற முன்னாள் முதல்வர் வசுந்த ராஜே சிந்தியா.

பின்ன வேற யாராவதுன்னு சொன்னா நாற்காலியப் பிடுங்கிடுவாக.

2014ல் மோடி பிரதமராவது உறுதி--------வை.கோ 

 எத்தனை நாளுக்குத்தான் அம்மா முந்தானியே பிடிச்சிக்கிட்டு அலையறது.


தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆராய்ந்து பார்க்கும் ---------மத்திய அமைச்சர் நாராயண சாமி 

இன்னும் பதினைந்து நாட்களில் நாங்க அமோக வெற்றி பெறுவோம், சே! கூடங்குளம் நியாபகத்துல சொல்லிட்டோமோ.

தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராயும்-நாராயணசாமீ # நீங்க கரண்ட்ல பண்ண ஆராய்ச்சி கூடங்குளத்தில கடல பர்பியாக் கெடக்குதாம். அத எடுங்க!---------ட்விட்டர் தாத்தா ட்விட்டரில் 

Follow kummachi on Twitter

Post Comment

Friday 6 December 2013

கலக்கல் காக்டெயில்-130

கருப்பு நிலா மறைந்தது.........

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது மிகச்சிறந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட "கருப்பு நிலா" நெல்சன் மண்டேலா மறைந்து விட்டார்.

வெள்ளையர்களின் இனவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி இருபத்தியேழு ஆண்டுகள் சிறையில் வாடியவர். பல்வேறு நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் 1990 ல் சிறையிலிருந்து விடுவிக்கபட்டார். ஒரு நாட்டின்  இனவாத அரசை ஒழித்து தங்களினத்தவருக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுத்தர  இருபத்தியேழு ஆண்டுகள் தனிமையில் சிறையில் கழித்த ஒரே போராளி மண்டேலா. அவரை சிறையிலிருந்து விடுவிக்க மன்னிப்பு கேட்க தென் ஆப்பிரிக்க அரசு கேட்டுக் கொண்டபொழுது அதை நிராகரித்தவர்.

தென் ஆப்பிரிக்காவின் வரலாற்றில் முதன் முதலாக எல்லா இன மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் அவர்.

உலக சரித்திரத்தில் மண்டேலாவின் புகழ் என்றென்று நிலைத்திருக்கும்.

வெள்ளை இருட்டை விலக்கவந்த கருப்பு நிலா மறைந்துவிட்டது-----கலைஞர் ட்விட்டரில் 

கூட்டணி கூத்து 

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைகளின் தேர்தலின் கருத்து கணிப்பில் பி.ஜே.பி. மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்கும் போல் தெரிகிறது. டில்லியிலும் அதிக இடங்களை பிடிப்பதாக பேசப்படுகிறது.

அதை வைத்து இப்பொழுது கூட்டணி கும்மாளம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இளவல் அம்மாவை தொடர்பு  கொண்டதாக செய்திகள் வருகின்றன. ஐயாவும் புது புது வசனங்களை தேடிக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே கேப்டனுக்கு வெள்ளையுள்ளம் என்று கொக்கி போட்டிருக்கிறார்.

மக்கள் உள்ளம் தேடி புகுந்த மோடியே என் இதயத்தின் நாடியே வா........தலைமையேற்க வா போன்ற வாசகங்கள் கோபாலபுரத்திலிருந்து எந்நேரமும் வரலாம்.

ரசித்த கவிதை

கன்னி ஒருத்(தீ) !!

கன்னி ஒருத்தி
       கடற்கரையில் நின்றிருக்க
மின்னி இடியிடித்து
       மேற்றிசையில் காற்றடிக்க
என்றும் இலாதோர்
       எதிராக வந்தஅலை
நின்றே இருந்தவளை
       நேர்மையின்றிச் சாய்த்துவிடப்
பின்னல் குழல்நனையப்
       பின்னே விழுந்தாளே!
தென்னை இளங்காற்றாய்த்
       தேவனாக வந்தவனோ
முன்னால் கரம்கொடுத்து
       மூச்சடக்கித் தூக்கிவிடச்
சின்ன இளமனது
       சீரிழந்து போனதம்மா!


நன்றி: அருணா செல்வம்

 ஜொள்ளு Follow kummachi on Twitter

Post Comment

Thursday 5 December 2013

நமீதா இன் 3D

வலை கீச்சுதே

இந்த வாரம் ரசித்த கீச்சுகளில் சில

முதியோர் இல்லத்தையும் அநாதை இல்லத்தையும்  ஒன்று சேர்த்து விடுங்கள். பாட்டி தாத்தாவும் பேரக்குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்!!----------குறும்பு விவேக்கருத்து கணிப்பு வெளியே வந்தாச்சு! 4-ஸ்டேட்லேயும் மோடி கட்சி லீடிங்காம்! கலைஞர் உஷார்! #வாஜ்பாயியின் இளவல் மோடியே! என் இதயத்தின் நாடியே!------அன்புடன் திருநாவு 

சாப்பிடும் சைட் - டிஷ் அளவு குறைந்து அடிக்கும் சரக்கின் அளவு அதிகமானால் நீ ஒரு முழுக்குடிகாரனாய் மாறிக்கொண்டிருக்கிறாய் என அர்த்தம் ..!-------கருத்து கந்தன் 

என்னதான் விடிய விடிய பேன் ஓடினாலும் கரண்ட் போனா டக்குனு நின்னுடும்-------தம்பி முத்துஊ 

ராப்பிச்சக்காரான் என்ற இனத்தையே அழித்த பெருமை நம்ம FRIDGEஐயே சேரும். எல்லாத்தையும் தூக்கி உள்ள வை--------- V ஸ்ரீதர் 

பஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... #இது தான் வாழ்க்கை #தத்துவமே தான்...----------திரு 

இந்நேரம் நவாஸ் ஷெரிஃப் பேசுன பேச்சுக்கு நாலு குண்டை அவனுக தலையில போட்டு பீதிய உண்டாக்கிருக்க வேணாம்.அட போங்கையா:(----------சிக்கல்காரன் 

விகடன் இந்த வாஆஆஆஆரம்.... நமீதா இன் 3D ! #வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ-----------ஜூனியர் ஓல்ட்மாங்க்


இன்னும் ரெண்டு மூணு நாட்களில் கலைஞரின் காங்.மீதான தாக்குதல் பலமாக அதிகரிக்கும்போல.பின்னே பாஜக வலுவடையும் போல தெரியுதே...#தாவுடா தாவு!!!-------------Chilled Beers

அடி பிடிச்சிருச்சு, பீஸ் கம்மி, வெறும் குஸ்கா. தம் பத்தலை இவை பிரியாணி படம் குறித்து ட்விட்டரில் எதிர்பார்க்கப் படும் விமர்சனங்கள்-----------முரளிகண்ணன் 

பேசாம இன்னைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலைனு அறிக்கை விடச் சொல்லலாம். # சென்னை விமான நிலைய கூரை, கண்ணாடி வியாக்யானங்கள்!----------பிரேம்குமார் 

சண்ட போடுற பக்கிக சத்தியமூர்த்தி பவன்ல போயி சண்ட போடுங்கய்யா,எதுக்கு இங்க வந்து சண்ட போட்டு என்னை மாதிரி பப்ளிக்கை டிஸ்டர்ஃப் பண்றீங்க-----------ரயில்பயணி Follow kummachi on Twitter

Post Comment

கண்ணீரில்லாமல் -சுஜாதா

சமீபத்தில் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது "கண்ணீரில்லாமல்" என்ற சுஜாதா எழுதிய கட்டுரைத் தொகுப்பை வாங்கி வந்தேன்.  அதில் ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கண்ணீரில்லாமல் யாப்பு
கண்ணீரில்லாமல் கர்நாடக சங்கீதம்
கண்ணீரில்லாமல் மேற்கத்திய சங்கீதம்
கண்ணீரில்லாமல் ஐன்ஸ்டைன்
கண்ணீரில்லாமல் இந்துமதம்

இந்த ஐந்துக் கட்டுரைகளில் முதலில் இடம் பெற்றுள்ள யாப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயதில் மதிப்பெண்கள் மனதை ஆக்கிரமித்ததால் உருபோட்ட தமிழ் இலக்கணம், இப்பொழுது மறுபடியும் படிக்கும் பொழுது கவிதைகளை ரசிக்க முடிகிறது. இதில் மரபுக்கவிதைகள் பற்றி எழுதியிருக்கிறார்.

யாப்பு என்பது எதையும் கட்டுவதற்கு அல்ல தைப்பதற்கு ஏற்பட்ட சொல். "கழல் யாப்பு காரிகை நீர்த்து" என்கிறது திருக்குறள். பாரதி "காசிப் பட்டுப் போல பாட்டு நெய்ய வேண்டும், அல்லது உழவனுக்கு வேண்டிய உறுதியான கச்சை வேட்டிபோல  நெய்ய வேண்டும். மல் நெசவு கூடாது, மஸ்லின் நீடித்து நில்லாது" என்றார் என்று கட்டுரையைத் தொடங்குகிறார்.

பின்பு தமிழ் எழுத்துக்களின் பாகுபாட்டை விவரித்து அசை சொல்லுக்கு விளக்கமளிக்கிறார்.

பின்பு எளிமையான எடுத்துக்காட்டுடன் நேரசை நிரையசை என விவரித்து யாப்பிலக்கணத்தின் பாகுபாட்டையும் அதன் சூட்சுமங்களையும் விவரிக்கும் பொழுது நமக்கு நன்றாகப் புரிகிறது. கட்டுரையை நிதானமாக படித்து புரிந்து கொண்டால் யாப்பை ரசிக்க முடிகிறது.

சற்றே துவையல் அரை தம்பி ஒருபச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்தவை-குற்றமிலை
காயமிட்டுக் கீரை கடை கம்மெனவே மிள
காயரைத்து வைப்பாய் கறி

எனும் சிவஞான முனிவரின்  கறி வைக்கும் வெண்பாவின் யாப்பிலக்கணம் புரிகிறது.

தமிழ் கவிதைகளை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என பாகுபடுத்தி அவைகளின் ஓசை நயங்களை விவரிக்கிறது கட்டுரை.

ஒவ்வொரு பாவகைகளுக்கும் மூன்று வித உட்பிரிவுகள்.அந்த உட்பிரிவுகளில் மிகவும் பிரபலமானவை கலித்துறையும்,ஆசிரிய விருத்தமும் மிகவும் பிரபலமாயின.

ஆசிரிய விருத்தத்தில்அறுசீர் விருத்தம் கம்பர் தொட்டு சமகால கவிஞர்கள்  வரை நிறைய எழுதுகிறார்கள். தற்பொழுது கவிதாயினி அருணா செல்வம் அவர்கள் எழுத்தும் கவிதைகளை நான் மிகவும் ரசிப்பேன்.

பதிவர் தோழி அருணா செல்வம் சமீபத்தில் எழுதிய "கோபமா என்னுடன்" என்ற  அறுசீர்விருத்தத்தை அதன் பொருளையும் தாண்டி இப்பொழுது என்னால் ரசிக்க முடிகிறது.

சுஜாதாவிற்கு நன்றி.

சமீபத்தில் அருணா செல்வம் அவர்கள் எழுதிய அறுசீர் விருத்தம்

காலை உறக்கம் கலைந்ததுமே
    கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
    விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
    சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
    நுவலும் பொருளில் தெரிகின்றாய்!

என்னில் உள்ளே இருந்தாலும்
    எதிரில் காண ஓடிவந்தால்
“என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
    என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
    ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
    என்தன் உயிரே என்செய்வேன்?!  
     
எந்த நிலையில் உனைமறந்தேன்
    என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
    அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
    சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
    இருக்கும் நேரம் அதுவென்பேன்!

மறத்தல் என்பது மனிதருக்கு
    மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
    சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
    மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
    இனிமை அதுவே தருமென்பேன்!
      
அருணா செல்வம் வலைப்பூவிற்கு செல்ல சொடுக்கி 
கண்ணீரில்லாமல்------------சுஜாதா 
உயிர்மைப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது விலை 30 ரூபாய்  


Follow kummachi on Twitter

Post Comment