Tuesday 31 December 2013

2013-திரும்பிப் பார்க்கிறேன்


 2013 ல் நாட்டில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை பார்ப்போம்.

தமிழகம்

வரலாறு காணாத மின்வெட்டு,  போக்கு காட்டி போன ஹெலன், மாடி புயல், மரக்காணம் கலவரம், பருவமழை தவறியது, தொடரும் மீனவர் பிரச்சினை என்று இந்த வருட நிகழ்வுகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

சட்ட சபை பெஞ்ச் தட்டிகளுக்கு அம்மா உணவகம், அம்மா குடிநீர், மற்றும் அரசியல் தீர்மானங்கள், உதவாக்கரை திட்டங்கள் என்று ஒரு சில நடவடிக்கைகள் வேண்டுமானாலும் மகிழ்ச்சி தரலாம்.

மற்றபடி தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு  போன்றவை குறைந்ததாகத் தெரியவில்லை.

மேலும் திவ்யா இளவரசன் காதல், பின்னர் ஜாதி மோதலில் இளவரசனின் சர்ச்சைக்குரிய மரணம் என்று செய்தித்தாள்களை ஆக்கிரமித்த சில சம்பவங்கள்.

ஏற்காடு இடைத்தேர்தல் காணாமல் போன கட்சிக்கு ஓரளவிற்கு நம்பிக்கை கொடுத்தது மற்றுமொரு அரசியல் கூத்து.

சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு தந்த சந்தேகக் கோடுகள் என்று சில நிகழ்வுகள் இன்னும் புரியாத புதிர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் அவர்களின் மரணம்.

இந்தியா 

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. பி.ஜே.பிக்கு புத்துயிர் கொடுத்தது, மோடி போன்ற கேடிகளின் திடீர் எழுச்சி. ஊடகங்கள் மோடியின் பெயரை தூக்கிப் பிடித்து இந்தியாவின் தலை எழுத்தை மாற்றப்போவதாக மாய்ந்து மாய்ந்து பிரச்சாரம்.

டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் சாதனை இந்தியாவின் எதிர் காலத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஒரு நல்ல நிகழ்வு. இருந்தாலும் கேஜ்ரிவாலின்  செயல்களை வைத்துதான் இது நல்ல மாற்றமா இல்லை கெட்ட மாற்றமா என்று ஊகிக்க முடியும்.

2012ல் டில்லியில் நடந்த நாட்டையே உலுக்கிய  நிர்பயா கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு ஊடகங்களுக்கு தீனி போட்டன. அதைத் தொடர்ந்து வர்மா கமிட்டியின் 640 பக்க சட்ட தீர்திருத்தம்,ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை  என ஒரு சில நிகழ்வுகள்.

தமிழ் சினிமா

கடந்த வருடம் 152 தமிழ் படங்கள் வெளிவந்தன, அதில் முக்கால்வாசி படங்கள் மொக்கையாக இருந்தன.  தமிழ் திரையுலகம் சினிமா நூறு என்று விழா எடுத்து முழுக்க முழுக்க அம்மா புகழ் பாடின. முக்கியமான திரையுலகப் பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.

வழக்கம்போல தமிழ் பேசாத புது நடிகைகளின் கவர்ச்சி அறிமுகம்.

ஒரு சில நடிகர்களின் படங்கள் அரசியல் காரணங்களால் சொன்ன நாட்களில் வெளிவரமால் போனது.


இசையமைப்பாளர் டி. கே. ராமமூர்த்தி, பி.பி. ஸ்ரீநிவாஸ், லால்குடி ஜெயராமன், டி.எம். சௌந்தர்ராஜன், கவிஞர் வாலி, இயக்குனர் மணிவண்ணன், ராசு மதுரவன், நடிகர்கள் குள்ளமணி, சிட்டிபாபு,  ராஜ சுலோச்சனா, சுகுமாரி, மஞ்சுளா  போன்ற பழம் பெரும் கலைஞர்கள் மரணம் அடைந்தனர்.

2014 இனிதே இருக்க வேண்டுவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

தங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பகிர்வு. 2013 ன்! short and sweet பகிர்வு !!

இனிய புத்தாண்டு வாழ்த்டுக்கள்!!!

துளசிதரன், கீதா

கும்மாச்சி said...

துளசிதரன் கீதா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வருகைக்கு நன்றி.

Unknown said...

நிம்பிள் பேக்ல லுக்க சொல்லோ... நம்பிள் எட்டிப் பாத்துடுச்சு வாத்யாரே...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

கும்மாச்சி said...

நிம்பள்கி புச்சா வருஸம் வந்திக்கிச்சு நல்லா இருபா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.