Thursday 19 December 2013

கூட்டணி கூடி வரும் நேரம் (கவுஜ)


கூட்டணி கூடி வரும் நேரம்
கட்சிகள்  பொதுக் குழு கூடும்
நாட்டின் நலம் சில காலம்
நலம் பெற திட்டம் தீட்டும்
ஏட்டினில் செய்திகள்  பல பாரும்
கொள்கை குப்பை மேட்டில் ஏறும்
வீட்டினில் செல்வம் எட்டி பார்க்கும்
மது வாசம் மேடையில் வீசும்
மேட்டுக் குடி பொருள் யாவும்
விலை இல்லா பெயர் பெற்று
காட்டில் வந்து கடை ஏறும்
தேர்தல் என்ற முறை கண்ட
நாட்டின் வளம் பல காலம்
நலிந்து வலு இழந்து போகும்.




   



Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏற்கனவே அப்படித்தான்...!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

rajamelaiyur said...

கொள்ளை அடிக்கதானே கூட்டணி

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

Unknown said...

கொள்கை யில்லா கூட்டணி
கூடிக் கேட்கும் ஓட்டினி
சொல்லிப் பயன் இல்லையே
சொல்ல இயலா கொள்ளையே!
வெள்ளிப் பணம் வீதியில்
வீச மக்கள் பீதியில்
எள்ளு நிலை காணுமே
ஏக இந்தியா நாணுமே!

கும்மாச்சி said...

ஐயா கவிதையில் பின்னூட்டம் அருமை, வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.