Tuesday 28 May 2013

கலக்கல் காக்டெயில்-111

சூதாட்டங்கள் 

இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவரின் மருமகன், விந்து தாராசிங் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் இப்பொழுது சூது வலையில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கிரார்கள். இதில் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஊடகங்களிடம் மாட்டிகொண்டு முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார். அவரை எங்க சென்றாலும் எப்போ ராஜினாமா? எப்போ ராஜினாமா? என்று குடைந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்  பொழுதும் கோல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டிக்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வரையில் சூதாட்டம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. முதலில் சென்னைதான் ஜெயிப்பார்கள் என்றுதான் எல்லோரும் பணம் கட்டியதாகத் தெரிகிறது. பின்னர் நிலைமை மாறிக்கொண்டே வந்தாலும் புக்கிகள் சென்னை ஜெயித்தால் அதிகம் காசு என்று அறிவித்து மேலும் அதிக காசை அள்ளியிருக்கிறார்கள்.இப்பொழுது இந்த முடிவுகள் எல்லாமே கேள்விக்குறியாகிறது.

இந்த சூதாட்டங்களை தவிர்க்க முடியாது. எங்கள் வீட்டருகில் "உள்ளே வெளியே" விளையாடிக்கொண்டிருப்பார்கள். புகைவண்டி பாலமருகே ஆடுவார்கள். ஒரு நாள் போலிஸ் வந்து அவர்களை பிடித்து சென்றது. சிலமாதங்கள் கழித்து அவர்கள் இடத்தை மாற்றினார்கள், தேசிய நெடுஞ்சாலையில் ஆற்றுப்பாலம் மீது அமர்ந்து கொண்டனர். ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்கள். எதிரே வரும் வண்டியின் கடைசி எண் ஒற்றைப்படையா? இரட்டைப்படையா? என்று காசுவைத்து விளையாடுவார்கள்?

சோம்பேறிகள் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.

ரயில்கேட், கோல்கேட் எல்லாம்.............

சிலநாட்களுக்கு முன்பு வடஇந்திய ஊடகங்கள் ரயில்கேட் கோல்கேட் என்று புலம்பிக்கொண்டிருந்தன. தற்பொழுது கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த கிரிக்கெட் விஷயம் தேவைக்குஅதிகமாக செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும்பொழுது அரசியல் அரங்கில்இன்னும் ஏதோ ஒரு பெரிய தில்லுமுல்லு பின்னுக்கு தள்ளப்படுவது போல் தோன்றுகிறது.

நேபாளத்தின் யசோதா 

புஷ்பா நேபாளத்தை  சேர்ந்தவர். காட்மாண்டு செயின்ட் சேவியர் கல்லூரியில் சமூகவியல் மாணவி. கல்லூரியில் அவர்களை சிறைக்கு பார்வையிட அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு சிறையில் சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடுவதைக் கண்டார். அவர்களது தாய்மார்கள் சிறையில் கைதிகள். குழந்தைகள் சிறையிலேயே வளரவேண்டிய சூழ்நிலை. இதை மாற்ற அரசாங்கத்துடன் போராடி "சோலோ டம்ப்" என்ற குழந்தை காப்பகத்தை தொடக்கி அந்த குழந்தைகளை நல்ல சூழ்நிலையில் வளர்க்க ஆரம்பித்தார். குழந்தைகளின் மனநிலையில் நல்ல முன்னேற்றம்.

தாய்மார்கள் விடுதலை  ஆனவுடன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க ஆரம்பித்தனர். இவரை மக்கள் நேபாளத்தின் யசோதா என்கின்றனர்.வித்தியாசமான புஷ்பாவின் சிந்தனை குழந்தைகளின் நல்ல  எதிர்காலத்திற்கு வித்திட்டு இருக்கிறது. வாழ்த்துவோம்.

ரசித்த கவிதை

காதலர்க்குத்தான்
காதலிப்பவர்கள் மீது
பைத்தியம்

கணித அறிஞனுக்கு
எண்கள் மீது
பைத்தியம்

கவிஞனுக்கு
சொற்கள் மீது
பைத்தியம்

ஓவியனுக்கு
வண்ணங்கள் மீது
பைத்தியம்

பாடகனுக்கு
இசை மீது
பைத்தியம்

குழந்தைகளுக்கு
பொம்மைகள் மீது
பைத்தியம்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்றின் மீது
பைத்தியம்

நம் எல்லோருக்கும்
புகழின் மீது
பைத்தியம்

எந்தவொன்றின் மீதும்
பைத்தியமில்லாமல்
இருக்கிறது
பைத்தியம்.

-------------------------அ. நிலாதரன் 

ஜொள்ளு 




28/05/2013




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 25 May 2013

டி.எம்.எஸ் - -கண்ணீர் அஞ்சலி

பின்னணிப்பாடகர் டி.எம்.எஸ் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ஐம்பதுகளில் பாடத்தொடங்கிய டி.எ.எஸ் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ் திரையுலக பின்னணி இசையில் கொடிகட்டிப் பறந்தவர்.

மார்ச் 24, 1922ம் ஆண்டு மதுரையில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்காருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பிரபல வித்வான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக சங்கீதம் பயின்றார்.பல ஆண்டுகளாக இசைக்கச்சேரி செய்துவந்த டி.எம். எஸ் அவர்களை சுந்தர்ராவ் நட்கர்னி தன்னுடைய கிருஷ்ணா விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி" என்ற பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரிகுமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களை அவருக்கு பாடுவதற்கு வாய்ப்புக்கிடைத்தது. மந்திரிகுமாரியில் அவர் பாடிய "அன்னம் இட்ட வீட்டிலே" பாடல்தான் முதலில் வெளிவந்தது.

நடிகர்திலகத்திற்கு முதலில் சிதம்பரம் எஸ் ஜெயராமன் அவர்கள்தான் பின்னணி பாடி வந்தார். பின்னர் நடிகர் திலகத்தின் விருப்பத்தை ஏற்று ஜி. ராமானாதன் அவர்கள் "தூக்குத்தூக்கி" படத்தில் அவரை எல்லாப் பாடல்களையும் பாட வைத்தார். "பெண்களை நம்பாதே", "ஏறாத மலைதனிலே", "சுந்தரி சௌந்தரி" போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. பின்னர் எம்.ஜி. ஆர், எஸ்.எஸ்.ஆர், ஜெய்ஷங்கர் போன்ற நடிகர்களுக்கும் நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை, டி. எம். எஸ்ஸின் குரலில் வந்த தனிப்பாடல்கள் தனித்துவம் பெற்றன.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு கத்தார் தமிழ் சங்கம் சார்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு ஒரு நட்சத்திர ஓட்டலில் கலைஞர்களுடன் விருந்தில் கலந்து கொள்ள தமிழ் சங்கம் சார்பில் எனக்கு அழைப்பு வரவே குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அன்று டி.எம்.எஸ், பி. சுசீலா அவர்களுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தது மறக்க முடியாதது. அடுத்த நாள் இசை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நாற்பது பாடல்களை பாடினார்கள். அதில் டி.எம். எஸ் பாடிய "எங்கே நிம்மதி" இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நான் முதல்நாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது என்னுடைய விருப்பமாக சொல்லிய "சிந்தனை செய் மனமே" என்ற அம்பிகாபதி பாடலை பாடி எங்களை இசைவெள்ளத்தில் மூழ்கடித்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை சந்தித்து இந்த வயதிலும் இவ்வளவு சக்தியுடன் பாடுகிறீர்கள் ஐயா மிக்க நன்றி என்றேன். எல்லாம் "முருகன் செயல்" என்றார்.

அவருடைய பாடல்கள் ஏறக்குறைய எல்லாமே பிடிக்கும் அதுவும் குறிப்பாக அவர் பாடிய பழைய பாடல்கள். நான் பெற்ற செல்வம், மாசிலா நிலவே நம், வசந்தமுல்லை, எர்க்கரையின் மேலே, சித்திரம் பேசுதடி, தூங்காதே தம்பி தூங்காதே, யார் அந்த நிலவு  என்று சொல்லிக்கொண்டே போகலாம். சாரதா என்ற திரைப்படத்தில் அவர் பாடிய "மெல்ல மெல்ல அருகில்வந்து" என்ற பாடலில் அவர் குரலில் காட்டிய பாவம் வியக்கவைத்திருக்கிறது.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 24 May 2013

செத்தான்டா சிமெண்டு மூட்டை

டில்லியில்  உருவான ஐ.பி. எல் ஸ்பாட் ஃபிக்சிங் புயல் தென்மேற்காக நகர்ந்து முபையில் மையம் கொண்டு இப்பொழுது தென் கிழக்கு நோக்கி நகர்ந்து சென்னையை தாக்கிக்கொண்டிருக்கிறது.

குர்கானில் ஒரு காவல் துறை அதிகாரி மர்மமான முறையில் மரணம் அடைந்ததில் தொடங்கியது இந்த புயல். அவர்தான் ஐ.பி. எல்லில் தில்லுமுல்லு நடக்கிறது என்ற சந்தேகத்தை கிளப்பியவர். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள புக்கீஸ் கொடுத்த தகவலின் பேரில் முதலில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, மற்றும் சவான் என்று  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தது டில்லி காவல் துறை. அதிலிருந்து தொடங்கிய வேட்டை இப்பொழுது சென்னை வரை வந்திருக்கிறது.

ஸ்ரீசாந்த் அறையிலிருந்து கைப்பற்றிய மடிக்கணினியிலிருந்து அவர் சில நடிகைகளுடன் இருந்த ஏடாகூடா படங்களை வைத்து அவரை மிரட்டி அவரிடமிருந்து விஷயங்களை கறக்க ஆரம்பித்தனர். மேலும் அவரது மன்மத லீலைகளை நாளுக்கு நாள் காவல் துறை வெளிவிட்டுக்கொண்டிருக்கிறது. அவர் தொடர்பு வைத்திருந்த நடிகைகளில் நம்மூரு வீரமான ப்ரியம் நடிகையும் உண்டு எனபது உபரி தகவல். அவர் ஒரு மேட்சில் வீசிய ஒரு ஓவரில் குறிப்பிட்ட ஓட்டங்களை கொடுத்தே ஆகவேண்டும் என்று பேசி இந்த சூதாட்டக்காரர்கள் நாற்பது லட்சம் வரை பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் அவர் ஒரு ஓட்டம் கம்மியாக கொடுத்ததனால் புக்கிகள் பணத்தை திரும்ப கேட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அதை எப்படியோ சமாளித்து பணத்தை அமுக்கிக்கொண்டுவிட்டார்.

பின்னர் மும்பை போலிஸ் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன் விண்டூ தாராசிங்கை கைது செய்தது. இவர் இந்த சூதாட்டத்தில் ஏஜண்டாக செயல்பட்டார் என்று கிடைத்த துப்பின் பேரில் கைது செய்து விசாரிக்க அவர் சென்னை பக்கம் கை காண்பித்து விட அது இந்திய கிரிகெட் வாரிய தலைவர் சீனு மாமாவின் மருமகன் "குருநாத் மெய்யப்பன்" காவல் துறை விசாரணை வரை வந்திருக்கிறது.

குருநாத் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கும் தொழிலில் கொடிகட்டிப் பறந்த மெய்யப்ப செட்டியாரின் பேரனாவார். இவர் ஒரு கோடி ருபாய் வரை சூதாடியிருப்பதாக காவல்துறை சொல்கிறது. மேலும் இவருக்கு ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங்கில் பெரும் பங்கு இருந்ததாக காவல்துறை சந்தேகிக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்களுக்கு சில நடிகைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள காரனமா(மா)க இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த நடிகைகளில் விரல் நடிகரிடம் கடிபட்டவரும், உலக்கை நாயகனின் நடிகை மகளும் அடக்கம். தற்பொழுது உலக்கையின் மகள் ஒரு அதிரடி வீரருடன் ஜல்சா செய்வதாக தகவல்.


இது போதாதென்று சீனு மாமாவின் மகன் அஸ்வின் வேறு பங்காளி சண்டையில் அப்பாவை பற்றியும் மச்சானை பற்றியும் காவல்துறையிடம் போட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். மொத்தத்தில் சிமெண்டு சீனுவிற்கு வந்ததும் சரியில்லை வாய்த்ததும் சரியில்லை. இப்பொழுது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் இல்லை என்று அணி நிர்வாகம் கூறுகிறது. சீனு மாமாவும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார். அவரது கிரிக்கட் வாரிய பதவி ஆட்டம் காணுவதால் குருநாத்தை என் மருமகனே இல்லை என்று சொன்னாலும் சொல்லுவார்.வாரியத்தில் இருக்கும் சொத்திற்கு பங்கு போட சிமிண்டு போல காத்திருக்கும் கூட்டம் அவருக்கு நாள் குறிக்கிறார்கள்.

இந்த விசாரனையில் அம்பயர்களையும் விட்டுவைக்கவில்லை. அதற்கு முதல் பலி ஆசாத் ராஃப்.

இந்த ஐ.பி.எல் சூதாட்டம் ஒன்றும் புதியதல்ல.  முதலாவது ஐ.பி.எல்  தொடக்கத்திலேயே இந்தப்போட்டிகளின் பேரில் சந்தேகம் எழுந்தது. இதன் சூத்திரதாரியான லலித் மோடி முதலில் நாயடிபட்டு நாட்டை விட்டே வெளியேறினார். பின்னர் இப்பொழுது மத்திய அமைச்சராக இருக்கும் சசி தரூர் கொச்சின் அணி உரிமையில் தில்லுமுல்லு செய்து தனது காதலிக்கு பங்கு வாங்கினார். அதனால் அவர் அமைச்சர் பதவியை இழக்க வேண்டி நேரிட்டது, பின்னர் மறுபடியும் மத்திய மந்திரியானது வேறு கதை. இது போன்ற தில்லுமுல்லுகள்தான் இப்பொழுது பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.

வழக்கம்போல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி பூச்சாண்டி காட்டிவிட்டு வரவேண்டியது வந்தவுடன் அடங்கிவிடும்.

ஊழல் பெருச்சாளிகள் நிறைந்தது அரசியல் என்று தெரிந்தும் ஐந்து முறைக்கு ஒரு முறை அவர்களுக்கே ஓட்டை மாற்றி மாற்றிக் குத்தி வேடிக்கை பார்க்கும் பொது மக்களைப்போல, இதையெல்லாம் தெரிந்திருந்தாலும் மட்டையடி ரசிகர்கள் அடுத்த போட்டிக்கு அதிகாலையில் வரிசையில் நின்று டிக்கட் வாங்கி ஆர்ப்பரிப்பார்கள்.

சரிபா இன்னிக்கு யார் யார் ஆடுறாங்க?.



Follow kummachi on Twitter

Post Comment

சிரிச்சுகிட்டே இருங்க

மின்னஞ்சலில் வந்த சில நகைச்சுவை படங்கள்

மரியாதையா வண்டிய கொணாந்து வுட்டுடுங்க





ஆமாம் அட்டபிகரு எல்லாம் அப்படியே அபீட் ஆயிடுங்க 


ஆனால் ஆறு வித்தியாசம் இருக்குது


அதானே!


ஆனால் பூகோளம் உண்டு


வண்டியுள்ள பிகரா பாரு


என்னா நாதாரி தனம்


பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி

இது என்ன சின்னபிள்ளத்தனமால்ல இருக்கு 


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 23 May 2013

ஒரு காலில் நின்றால் ஒக்காலியா?

ட்விட்டரில் படித்ததில் ரசித்தவை...........

தி.மு.க வுடனான உறவில் கசப்பு, உரசல், விரிசல் எதுவுமே இல்லை @ திருமாவளவன் #சோறா? சொரனையா? சோறுதானே முக்கியம்!!! 

முள்ளும் மலரும் என்றார்கள் பார்த்துக்கொண்டே இருகிறேன் எந்த முள்ளும் மலரவில்லை.

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் ஆனா இந்த வெயிலுல டூவீலர் சீட்ல உட்காரப்ப கொல்லும்.

சினிமாவுல ஆபாசத்தை  ஒழிக்கணும் . ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் கோரிக்கையாமே. நம்ம அன்புமணியா?

ஒருவன் ஒருவன் முதலாளி, உட்கார்ந்திருக்குது பெருச்சாளி# அலுவலகத்தில் கீச்சிங்.

பெண்கள் மேலாடை இல்லாமல் உலாவலாம்-நியுயார்க்# அப்போ பசங்க கண்டிப்பா கீழாடை அணிஞ்சே ஆகணும்.

மலையாளிகளில் டவலால் பிரபலமானவர்கள் இரண்டு பேர் ஒன்று ஷகீலா, இரண்டாவது ஸ்ரீசாந்த்.

டாடி டாடி எனக்கு ஒரு டவுட்டு? தமிழ்த்தாய் தமிழ்த்தாய் என்கிறாங்களே அவங்க எந்த காலத்தில வாழ்ந்தாக டாடி சொல்லுங்க டாடி சொல்லுங்க

தண்ணில இருந்தா வெயிட்டு குறையும் -பிசிக்ஸ்
தண்ணியிலேய இருந்தா கன்னாபின்னான்னு வெயிட்டு போடும்-பயாலஜி.

தோல்வியைக்கண்டு துவண்டு விடக்கூடாது, தோல்விக்கானக் காரணத்தை கூட இருக்கிறவன் மேல போட்டுவிட்டுடனும்.

புடுங்கித் தின்னாலும் திம்போம்,  திருடி திங்கமாட்டோம்யா............அப்பேர்பட்ட பரம்பரைல வந்தமாக்கும்.

கடவுள் எனும் சோம்பேறி கண்டெடுத்த சோமாறி-மனிதன்

ட்விட்டரே தொழில் என்று பாடுவோம், ட்விட்டுவதே வேலை என்று போற்றுவோம்.

மூணு கால் இருந்தா முக்காலி, நாலு கால் இருந்தா நாற்காலி, அப்போ ஒரே காலில் நிற்கிற பெடஸ்டல் ஃபேன் என்ன ஒக்காலியா?



Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 22 May 2013

சிரிச்சுட்டு போங்க

இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்

வெட்டி வேலை




ரூம் போட்டு யோசிப்பாரோ


டாக்குட்டர்


அதானே நாங்களும் பயப்படல


வெளங்கிடும்


திஸ் இஸ் டூ மச்

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 21 May 2013

நான், நாணா மற்றும் அவள் ...................மீள்பதிவு

நான், நாணா மற்றும் அவள்... என்ற கதையை மீள்பதிவு செய்கிறேன். சமீப காலமாக அரசியல் பதிவுகள் மற்றும் மொக்கை பதிவுகளில் காலத்தை கழித்ததால் இது போன்ற பதிவுகள் அதிகம் எழுதமுடியவில்லை. ஆகவே வெள்ளோட்டமாக இரண்டு வருடம் முன்பு எழுதிய இந்த சிறுகதையை சில திருத்தங்களுடன் மீள்பதிவாக சமர்ப்பிக்கிறேன். படித்து விட்டு குறை நிறைகளை பதிவு செய்யவும்.

நான், நாணா மற்றும் அவள்



இந்தக் கதையில் வரும் “நான் நானல்ல. நாராயணன் என்கிற நாணாவுக்காக 
 “நான் நாணாவாகி இருக்கிறேன். கதையில் “நான் நானாக  வரும்பொழுது நாணா என்ன ஆவான் என்பது தெரியாது. இனி கதை நாணாவின் வார்த்தைகளில்........

விடியற்காலையில் எதிர் வீட்டில் லாரியிலிருந்து சாமான் செட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். “எடோ அதே அவ்விடயானும் இறக்கு” என்று எங்களுக்கு புரியாத மொழியில் லாரிக்காரன் சம்சாரித்துக் கொண்டிருந்தான். நேற்றைய இரவு புல் மப்பில் படுத்து உறங்கி  காலையில் என்ன அவசரம் ஒரு பத்து மணிக்கு எழுந்திருக்கலாம் என்ற எனக்கு இந்த அகால வேலை விழிப்பு எரிச்சலை தந்தது.
என்னுடன் சரக்கடித்த வேலுவும், கோபால், சங்கர் இவர்கள் எல்லாம் அங்கு ஆஜராகி கூலிக்காரனுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடப் பாவிகளா சாவப் போற ஆயாவுக்கு தண்ணி குடுக்காத இந்தப் பசங்க எதிர் வீட்டிற்கு வேலை செய்கிறார்கள் என்றால் ஏதோ புதிய பிகர் அந்த வீட்டிற்கு வருவது சத்தியம் என்று நானும் காலை காபியை துறந்து அங்கு ஆஜரானேன்.

அந்த வீதிக்கு புதியதாக வந்த மனிதரை வார்த்தைக்கு வார்த்தை “சித்தா” இதை எங்கே வைக்க வேண்டும் என்று சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த என் நண்பர்கள் கூட்டம் கண்டு எனக்கு ஆச்சர்யம். இப்பொழுது வீட்டிலிருந்து “கொச்சச்சா” என்று கூவிக்கொண்டு வந்த அந்த பெண்ணைக் கண்டதும் ஆடிப்போய் நம்ம பசங்க விடியலில் வேலை செய்வதின் ஆச்சர்யம் விலகியது.


அவளுக்கு பதினெட்டு வயது இருக்கும், நல்ல மலையாளக் கட்டை, குதிரை வால் பின்னலிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நடையிலும், கன்றுக் குட்டி கண்களையும் கண்ட நமது பி.ஜே.பிங்க (பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க) கடை வாயில் வழியவிட்டுக் கொண்டு வந்த காரியத்தை துறந்தார்கள். கொச்சச்சன் என்று விளித்துக் கொண்டே வந்த அவள் எங்களை நோக்கி ஒரு புன்னகை வீசினாள். அதைக் கண்ட சங்கர் மூத்திரம் குடித்த மாடு போல் ஆகிவிட்டான். சித்தா நீங்க இருங்க, இவங்களோட பேசிக்கிட்டு இருங்க, நான் சாமானை எல்லாம் இறக்குகிறேன் என்று லாரிக்காரனுக்கு கை கொடுக்க சென்று விட்டான். அந்த வீட்டு அம்மாவுடன் உள்ளறையில் மற்றும் ஒரு பெண் குரல் கேட்கும் அவள் யாரென்று தெரியவில்லை.

அவர்களின் சித்தப்பா ஒரு வெட்டி என்று பேச்சு வாக்கில் புரிந்து கொண்டேன். அவருக்கு அந்த வீட்டில் மரியாதை இல்லை என்பதை அந்த பெரியவளின் நடத்தையிலும் அவர்களின் அம்மாவின் பேச்சிலும் புரிந்து கொண்டோம்.

அந்த குடும்பம் அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வேலைக்கு போய் வந்தவுடன் எல்லோரும் கோபால் வீட்டு மொட்டை மாடியில் அரட்டையை தொடங்குவோம். சித்தாவும் தவறாமல் ஆஜராகிவிடுவார். எங்களுடன் மப்பு பார்ட்டி, நைட் ஷோ என்று எல்லாவற்றிற்கும் ஒட்டிக் கொள்வார். அவரை கழற்றி  விடலாம் என்றால் சங்கர் முரண்டு பிடிப்பான். ஏதோ அவரை அவனின் மாமனார் போல் நடத்திக் கொண்டிருந்தான். சங்கர் இல்லாத பொழுது எங்களுக்கு சிகரட் வாங்குவது, தண்ணி வாங்கி வருவது என்று மற்ற நண்பர்கள் அவரை எடு பிடி ஆக்கிவிட்டார்கள். அவரும் சளைக்காமல் எங்களுக்கு உழைத்துக் கொண்டிருந்தார்.

சங்கர் சித்தாவை வைத்து அவளை எப்படியும் மடக்கிவிடலாம் என்று கற்பனை செய்து கொண்டு அவருக்கு அளவுக்கு அதிகமாகவே மரியாதை செய்து கொண்டிருந்தான். 

கடந்த மூன்று நாட்களாக சித்தாவைக் காணவில்லை. அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அண்ணனுடன் சொத்து தகராறு என்று பக்கத்து வீட்டு பாணலிங்கம் மாமா சொல்லிக் கொண்டிருந்தார். சித்தா இல்லாமல் சங்கருக்கு பசலை வந்து விட்டது.

ஒரு நாள் காலை நான் பேங்கில் பணம் எடுக்கலாம் என்று சென்றேன். அங்கு அந்த எதிர் வீட்டு அம்மாவும், கூட ஒரு பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பெண் என்னைப் பார்த்து முறுவலித்தாள்.
அவள் நாங்கள் முதலில் பார்த்த பெண் அல்ல. ஆனால் அவள் தங்கை என்று முகஜாடை சொல்லியது. அன்று அங்கு பார்த்த பிறகு எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். அவள் ஊனமுற்றவள்ஆதலால் அவள் வெளியே அடிக்கடி வருவது இல்லை என்று என் அம்மா சொன்னாள்.

அவளின் அழகு என்னைக் கட்டிப்போட்டது. இப்பொழுது அவளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன், இதை தான் நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவனும் இதை எழுதிக் கொண்டிருக்கிறான் அவன் அவளைப் பார்த்ததில்லை.
/
/
/
/


எதேச்சையாக நேற்று "நான்" அவளை அவள் வீட்டின் தோட்டத்தில் பார்த்தேன்.  "நானும்" இப்பொழுது சித்தாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
டேய் நாணா கதையை மேலே சொல்லுடா, எங்கே போகிறாய்?.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 20 May 2013

கலக்கல் காக்டெயில்-110

சூது கவ்வும்

ஐ.பி. எல் ஆட்டங்களை சூது கவ்வும்
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்

சமீபகாலமாக கிரிக்கெட் வாரியத்திற்கு பிடித்த பேராசையினால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. ஐ.பி.எல் பணம் குவிக்கும் யுக்தி வந்தவுடன் அதில் வரும் வருமானம் அள்ள அள்ள  குறையாதது. கூடவே அந்த விளையாட்டுகளின் மீதான சூதாட்டமும் பெருகிக்கொண்டே போனது.அதன் எதிரொலியாகத்தான் ஸ்ரீசாந்த் மற்றும் இரண்டு வீர்களின் கைது.  ஸ்ரீசாந்தை தலைமேல் வைத்துக்கொண்டாடிய கேரளா ரசிகர்கள் அவரை கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் அவர் உண்மையான குற்றவாளியா?, இல்லை பலிகடா ஆக்கப்பட்டவரா? என்பதெல்லாம் நியாயமாக விசாரணை நடந்தால் தெரியவரும். இப்பொழுது ஸ்ரீசாந்தின் நேர்மை சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. அவரது லேப்டாப்பில் பல பெண்களின் நிர்வாணப்படங்கள் இருந்தன, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் போன்ற செய்திகளையும் காவல் துறை அவ்வப்பொழுது வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பொன் ஆசை, பெண் ஆசையினால் வந்த வினை.

இந்தப் போட்டிகளில் மேல் உள்ள நம்பகத்தன்மை ஒவ்வொரு போட்டியும் கடைசி  ஓவர் வரை இழுக்கப்படுவதில் தொக்கி நிற்கிறது. மொத்தத்தில் இந்தப் போட்டிகள் எல்லாவற்றிலுமே ஒரு செட்டப் இருப்பதாக நமக்கு தோன்றினால் அதில் ஆச்சர்யமில்லை.

ஃபைஸ்டார் பார்ட்டி

கர்நாடகாவில் தோற்ற பி.ஜே.பி அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் தங்களது வியூகத்தை மாற்றிக்கொண்டால்தான் கொஞ்சமாவது தேறமுடியும். கட்சியின் தலைவரை முன்னிருத்துவதிலேயே அவர்களுக்குள் உள்ள பிரச்சினை தீர்ந்தப்படில்லை. அத்வானி, ராஜ்நாத், சுஷ்மா, மோடி, ஜெயிட்லி என்று ஐந்து பேரும் பிரதமர் கனவில் இருக்கின்றனர். யார் என்று முடிவு செய்யாமல்  தேர்தலை சந்தித்தால் எதிரிக்குத்தான் லாபம். பிறகு என்ன அடுத்த ஐந்து வருடம், ரயில்கேட், கோல்கேட், பூட்கேட், அந்தகேட், இந்தகேட் என்று புது புது ஊழல்கள் நடக்கும்.

அட போங்கப்பா

ரசித்த கவிதை 

தீவிரவியாதி 


தீதையும், நன்றையும் பகுத்தறிவதால் நான் பகுத்தறிவுவாதி
அயலானிடமும் அன்பு பாராட்ட அறிவதால் நான் கிறித்துவன்
தேவன் ஒருவனே என ஓதுவதால் நான் இஸ்லாமியன்
உண்மையை உணர என்னுள்ளே தேடுவதால் நான் இந்து
குருநாதர் சொல்வழி செல்வதால் நான் சீக்கியன்
ஆசைகளை வென்றிட விழைவதால் நான் பௌத்தன்
அகிம்சையை நேசிப்பதால் நான் சமணன்
இருப்பினும் கேள்வி ஒன்று இருக்கிறது எனக்கு

- அனைத்தும் இப்படி நம்முள்ளே இருக்க,
நான் "இவன்", நீ "அவன்" என பிரிக்க,
குண்டுகள் வெடிக்க, அவன் யார்?

நன்றி ............................புதுயுகன்

ஜொள்ளு



21/05/2013

Follow kummachi on Twitter

Post Comment

Friday 10 May 2013

படித்ததில் ரசித்தது-1

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்று இருந்த பொழுது இரண்டு தொகுப்புகளை வாங்கி வந்தேன். இரண்டாம் தொகுதியும், மூன்றாம் தொகுதியும் தான் கிடைத்தது. மூன்றாம் தொகுதியில் நாற்பத்தியிரண்டு சிறுகதைகள் உள்ளன. அவற்றை படித்துக்கொண்டு வந்த பொழுது "சசி காத்திருக்கிறாள்" என்ற கதை மிகவும் ரசிக்கத்தகுந்ததாக இருந்தது.

கதையில் முதலில் டெல்லியின் போக்குவரத்து மிகுந்த தெருவில் ஒரு விபத்து. சினிமா தியேட்டரின் முன்பு போஸ்டரை பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு வந்த ஒரு டாக்சி ஓட்டுனர் ஒரு இளைஞரின் மேல் மோதி விடுகிறான். இளைஞருக்கு பலத்த அடி. வழக்கம்போல் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன் அடிபட்டவனின் பையை துழாவி அவன் பர்சை எடுத்து வைத்துக்கொண்டு அவனை மருத்துவமனையில் சேர்க்கிறான். மருத்துவர்கள் இவன் பிழைப்பது கடினம் அவனது உறவினரிடம் தகவல் சொல்லி கூட்டி வாருங்கள் என்கிறார்கள்..............

வீட்டில் சசி தனியாக கணவன் வரவை எதிர் நோக்கியிருக்கிறாள். அன்று அவர்களது கல்யாண நாள். கணவன் அலுவலகத்திலிருந்து வரும் முன்பு சினிமா டிக்கட் வாங்கிக்கொண்டு வருகிறேன். இரவு சினிமா போய்விட்டு, பின்பு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு விட்டு நமது முதல் கல்யாண நாளை இன்று விடிவிடிய கொண்டாடலாம் என்று சொல்லி சென்றிருக்கிறான். நேரமாகிக்கொண்டிருக்கிறது. கணவன் இன்னும் வரவில்லை. அலுவலகம் முடிந்து சினிமா டிக்கட் வாங்கிவர இவ்வளவு நேரமா என்று சிந்திக்க சிந்திக்க விபரீத எண்ணங்கள் அவளை ஆட்கொள்கின்றன. கிடந்து தவிக்கிறாள். நேரமாகிக்கொண்டே போகிறது. அவளுக்கு பயம் அதிகரிக்கிறது. அப்பொழுது வீட்டின் எதிரில் டாக்சி வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கியவன் டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு அவள் வீட்டை நோக்கி வருகிறான். அவன் கிட்டே வர வர அவனது வெள்ளை சட்டையில் ரத்தக்கறையை காண்கிறாள்....................வேண்டாம் இதற்கு மேல் கதையை தொகுப்பில்  படியுங்கள். சுஜாதா எப்படி வெகுவான வாசகர்களை கவர்ந்தார் என்பதற்கு இது போன்ற கதைகள் சான்று.

சமீபத்தில் விகடனில் கேள்வி பதில் பகுதியில் படித்த ஒன்று இன்றைய நீதித்துறை நடைமுறையை சிந்திக்க வைத்தது.

மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் நீதித்துறை சார்ந்த வெண்பா.

வரும்வா தியரோ டுறவுபற்று
வரவு முதல்செய் குதல்விரைவில்
கருவி விவாதம் தீர்க்காது
காலங் கழித்தல் சோம்பலினால்
உருவ வழக்கின் நிலையினைநன்
குணராத் தன்மை பொது நீங்கல்
பொருவில் இவையா தியபுரைகள்
இலஞ்ச மதனை பொருவுமால்

பொருள்: வழக்காளிகளுடன் நட்பு கொள்ளுதல், கொடுக்கல், வாங்கல் விரைவில் வழக்கை தீர்க்காமை,  காலம் கடுத்துதல்(வாய்தா கொடுத்து/வாங்கி), நடுநிலைமை தவறுதல் முதலிய குற்றங்கள் யாவும் லஞ்சம் வாங்குவதற்கு சமமாகும்.

நீதிபதிகளுக்கு நல்ல அறிவுரை.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 8 May 2013

கூண்டுக்கிளி

 கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல்  வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுதே, உச்ச நீதிமன்றம் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் சி.பி.ஐ யை கூடுக்கிளி என்றும் நிறைய எஜமானர்களால் இந்தக்கிளி கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற ஊரறிந்த உண்மையை போட்டு உடைத்துள்ளது.
 
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையை திருத்திய விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர் ஆகியோர் சில திருத்தங்களை செய்த விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம் செய்தார் என்பதை ஒப்புக் கொண்டு சிபிஐ இயக்குனர் மன்னிப்பு கோரி தாக்கல் செய்திருந்த அறிக்கை மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. "சிபிஐ என்ற அமைப்பின் வேலை விசாரணை நடத்துவதுதானே தவிர மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்துக் கொண்டிருப்பது அல்ல...மத்திய அமைச்சர்கள் தங்களது துறை தொடர்பான சிபிஐயின் விசாரணையை அறிக்கையைப் பார்வையிடலாம்.. ஆனால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விவகாரங்களில் தலையிடக் கூடாது. விசாரணை வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சிபிஐ விசாரணையில் தலையிட முடியும்? கடந்த மார்ச் 7-ந் தேதியன்று இரவு சிபிஐ அலுவலகத்தில் நிலக்கரி துறையின் இணை செயலர், பிரதமர் அலுவலகத்தின் இணை செயலர் ஆகியோருக்கு என்ன வேலை? சிபிஐ ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக இருக்கு.. சிபிஐ அமைப்புக்கு நிறைய எஜமானர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாக சிபிஐ இருக்கிறது.... சிபிஐ சுதந்திரமாக செயல்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்தால் நாங்கள் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கமாட்டோம். அப்படி இல்லை எனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் ." என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.
 
மேலே உள்ள செய்தி இன்றைய ஊடகங்களில் வந்தவை. இதில் என்ன கொடுமை என்றால் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. செய்த ஊழலை சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் "கோல்கேட்" (பேரல்லாம் பெத்த பேருதான்) நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையை திருத்தி சமர்ப்பித்ததில்  மத்திய அரசின் அமைச்சர்  அஸ்வினி குமாரின் பங்கு உள்ளது என்று எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சி மற்றொரு கட்சியை ஊழல் குற்றச்சாட்டு வைத்து ஆட்சியை பிடிக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. பிறகு தங்கள் மீது தொடரும் வழக்கை காலம் தாழ்த்தி பின்னர் மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் நீர்த்துப்போக செய்கிறார்கள். நீதித்துறையிலும் இந்த பெருச்சாளி பூந்திருப்பது அவ்வப்பொழுது செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஊழல் எங்கும் எல்லாவற்றிலும் உள்ளது என்பதை நமது அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இதற்கெல்லாம் எப்பொழுதுதான் விடிவு காலமோ?




Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 7 May 2013

கலக்கல் காக்டெயில் -109

ஜாதி அரசியல்

மகாபலிபுரத்தில் கிளப்பிய வெறி மரக்காணத்தில் பற்றவைக்கப்பட்டு இப்பொழுது தமிழகமெங்கும் எரிந்துகொண்டிருக்கிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல் அரசிய ஆதாயத்திற்காக இந்த மாதிரி வன்முறை தூண்டும் பேச்சுகளுக்கு தடை விதிக்கப்பட்டு மீறினால் தக்க தண்டனை அளிக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் சிறை பிடிக்கப்பட்டதானால் தொண்டர்கள் பஸ்ஸை எரிப்பது, மரங்களை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்தை தடைப்படுத்துவது போன்றவை அத்து மீறிய செயல். வடமாவட்ட மக்கள் போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். முதலில்  அரசாங்கத்தை கண்டித்து கூவிய கட்சி தொலைகாட்சி இப்பொழுது முதல்வர் எடுத்த நடவடிக்கையின் தீவிரம் உணர்ந்து பம்ம ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றது.

நல்ல ஆட்சி செய்யும் அம்மா "தலைவரிடம் கருணை காட்டவேண்டும்" என்று இறங்கி வருகிறார்கள்.

ஜாதி அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை எத்தனையோ தேர்தல் முடிவுகள் தெரிவித்தாலும் இவனுங்க அடங்கமாட்டேங்கிறாங்க.

கூடங்குளம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

கூடங்குளம் பற்றி உச்சநீதிமன்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மக்களின் அச்சத்தை போக்குங்கள் என்று அறிவுரை கூறி பதினைத்து நெறிமுறைகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள். மேலும் கூடங்குளம் எல்லா பாதுகாப்பு வசதிகளையும் செய்து உற்பத்தியை தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

ஆனாலும் போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது என்று கூறுவது நேர்மையான வாதம் அல்ல. அப்படி என்றால் எதற்கு உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். தீர்ப்பு சாதகமாக வந்தால் ஏற்புடையது இல்லையென்றால் கட்டுப்படுத்தாது என்று சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

ரசித்த கவிதை 

துடிப்பு

சட்டெனப் பிடித்து
பட்டென அறுத்து
தடதடவெனத் துண்டாக்கி
பாலிதீன் பையில்
வாங்கி வந்த பிறகும்
துண்டுகளில்
துடித்துக் கொண்டிருக்கும்
கறிக் கோழிக்கு
முழுவதாக  சாவதற்குக்கூட
நேரம் கொடுப்பதில்லை
இன்றைய மானுடம்

--------------------------------கவிஜி

ஜொள்ளு



07/05/13






Follow kummachi on Twitter

Post Comment