Wednesday 8 May 2013

கூண்டுக்கிளி

 கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல்  வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுதே, உச்ச நீதிமன்றம் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் சி.பி.ஐ யை கூடுக்கிளி என்றும் நிறைய எஜமானர்களால் இந்தக்கிளி கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற ஊரறிந்த உண்மையை போட்டு உடைத்துள்ளது.
 
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையை திருத்திய விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர் ஆகியோர் சில திருத்தங்களை செய்த விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம் செய்தார் என்பதை ஒப்புக் கொண்டு சிபிஐ இயக்குனர் மன்னிப்பு கோரி தாக்கல் செய்திருந்த அறிக்கை மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. "சிபிஐ என்ற அமைப்பின் வேலை விசாரணை நடத்துவதுதானே தவிர மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்துக் கொண்டிருப்பது அல்ல...மத்திய அமைச்சர்கள் தங்களது துறை தொடர்பான சிபிஐயின் விசாரணையை அறிக்கையைப் பார்வையிடலாம்.. ஆனால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விவகாரங்களில் தலையிடக் கூடாது. விசாரணை வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சிபிஐ விசாரணையில் தலையிட முடியும்? கடந்த மார்ச் 7-ந் தேதியன்று இரவு சிபிஐ அலுவலகத்தில் நிலக்கரி துறையின் இணை செயலர், பிரதமர் அலுவலகத்தின் இணை செயலர் ஆகியோருக்கு என்ன வேலை? சிபிஐ ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக இருக்கு.. சிபிஐ அமைப்புக்கு நிறைய எஜமானர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாக சிபிஐ இருக்கிறது.... சிபிஐ சுதந்திரமாக செயல்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்தால் நாங்கள் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கமாட்டோம். அப்படி இல்லை எனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் ." என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.
 
மேலே உள்ள செய்தி இன்றைய ஊடகங்களில் வந்தவை. இதில் என்ன கொடுமை என்றால் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. செய்த ஊழலை சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் "கோல்கேட்" (பேரல்லாம் பெத்த பேருதான்) நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையை திருத்தி சமர்ப்பித்ததில்  மத்திய அரசின் அமைச்சர்  அஸ்வினி குமாரின் பங்கு உள்ளது என்று எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சி மற்றொரு கட்சியை ஊழல் குற்றச்சாட்டு வைத்து ஆட்சியை பிடிக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. பிறகு தங்கள் மீது தொடரும் வழக்கை காலம் தாழ்த்தி பின்னர் மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் நீர்த்துப்போக செய்கிறார்கள். நீதித்துறையிலும் இந்த பெருச்சாளி பூந்திருப்பது அவ்வப்பொழுது செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஊழல் எங்கும் எல்லாவற்றிலும் உள்ளது என்பதை நமது அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இதற்கெல்லாம் எப்பொழுதுதான் விடிவு காலமோ?
Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

Jayadev Das said...

இத விட வேறென்ன கேவலம் வேண்டும், ஆனாலும் இவனுங்களுக்கு இது உரைக்கவா போகுது?!!

கும்மாச்சி said...

ஜெயதேவ் தாஸ் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இதுவரைக்கும் நான் பார்த்த அரசுகளிலேயே இந்த காங். அரசுதான் மகா கேவலமான அரசு. எத்தனை ஊழல்கள்? இதில் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்?!!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கலாகுமரன் said...

லோக்பால் மசோதாவில் முன்னெடுத்து வைக்கப்பட்ட விவாதம் இப்போது நீதிமன்றத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

கும்மாச்சி said...

கலாகுமரன் உங்கள் கருத்து உண்மையே. வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

எப்போதோ பல பெருச்சாளிகள் புகுந்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன...

Unknown said...

பிஜேபி_யின் பிரிவினையும் ஒற்றுமையின்மையுமே காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க காரணம். இது காங்கிரஸின் உண்மையான வெற்றியல்ல.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

கும்மாச்சி said...

உண்மை ரேவதி, மக்களுக்கு தெரியும் இது காங்கிரசின் உண்மையான வெற்றி அல்ல என்று, வருகைக்கு நன்றி.

Anonymous said...

........ விடிவு காலமோ ?
பெறிய கேள்விக்குறியாக போடவும், தயவு செய்து....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.