Sunday 8 September 2019

சீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................

கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரோ ஏவிய சந்திராயனைபற்றியும், நிலவில் இறங்குவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த விக்ரம் லேன்டர் தொடர்பை இழந்ததும் பற்றிதான் சமூக வலைதளங்களில் பேச்சு.

மோடி சிவன் கட்டித்தழுவல், கண்ணீர் காட்சி பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலைதளங்களில் வலம் வந்துவிட்டன.

லேன்டர் மேட்டர்  தமிழ்நாட்டில் உள்ள வக்கிரம் பிடித்தவர்களை தோலுரித்து காட்டியது.

இனி சீமானார் பேச்சு............கற்பனைதான்.................


நானும் தலைவரும் சந்திரனை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் , நம்ம தம்பி........... துரைதான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். ரொம்ப வேகமாக நிலவை நோக்கி சென்று கொண்டிருந்தான்........நான்தான்... தம்பி ரிவர்ஸ் கியர் போட்டு பிரேக்க விட்டு விட்டு பிடி..........அப்போதான் ஸ்மூத்தா லேண்டாகும்..........அப்பால அந்த கீழ வச்சிருக்கிறோம் பாரு ஆமை ஓடு அத்த கவுத்து போட்டாபோல வண்டில மாட்டி இறக்கு ராக்கெட்டுக்கு ஒன்னும் ஆவாது......நம்ம அப்பத்தா  வேற அங்கு வட சுட்டுகிட்டு இருக்கும்.......சட்டி கவுந்துட்டா நமக்கு வட கிடைக்காது...........ஹ்...ஹா.ஹ...ஹா........உடனே பக்கத்திலிருந்த தலைவரு என் முதுகுல தட்டி..........தம்பி நீதான்பா தலைவர் நான் உன் தம்பி என்றார். அப்புறம் வண்டிய விட்டு நானும் தலைவரும் இறங்கினோம்.........உடனே அங்கிருந்த நம்ம மக்கள் வாங்க சீமான் அண்ணே உங்க கூட இறங்கியிருக்காரே அவர் யாருன்னு கேட்டாங்க? நான்தான் தம்பி அவரு தமிழ் தேசிய தலைவரு.........ன்னு அறிமுகப்படுத்தினேன்...........ஹ...ஹ...ஹ...ஹ...ஹா. அப்புறம் அப்பத்தா வந்து சூடா..இரண்டு வடை  எனக்கு கொடுத்திச்சு,............அப்பத்தா தலைவருக்கும் ரெண்டு வட கொடுங்கன்னு கேட்டேன்...........அதுக்கு அப்பத்தா நீ சாப்பிடு அவருக்கு வட ஒரு கேடா? ன்னுச்சு..............வேணுமுன்னா ஊசிப்போன அரை வடை இருக்கு அத்த கொடுக்கிறேன்னிடிச்சு.அப்புறம் நான்தான் அப்பத்தாகிட்ட பதவிசா பேசி ஒரே ஒரு வட வாங்கி தலீவருகிட்டே நீட்டினேன்...........அவருக்கு அப்படியே கண்ணு கலங்கிடிச்சு........தம்பீன்னு என்ன கட்டிபிடிச்சு என்ன நிலவுக்கு கூட்டி வந்ததுமில்லாம வட வாங்கிக் கொடுத்த பாரு நீதான் தம்பி  நம்ம தமிழ் ஈழத்த காக்கவந்த அடுத்த தலைவருன்னு ஒரே கண்ணீர் விட்டு கதற ஆரபிச்சுட்டார்.

அப்போதான் அந்த பக்கம் நம்ம ஆர்ம்ஸ்ட்ராங்கு பையன் என்ன பாத்து ஓடி வந்தான்...........

அண்ணே சீமான் எப்படி இருக்கீங்க உங்க பேச்சு இங்கே தினம் கேட்குது.....அத கேட்காம நாங்க இங்க இருக்க முடியாது.

அப்புறம் தம்பி உனக்கு இங்கே என்ன பிரச்சினை ............அப்படின்னு கேட்டேன்.

இங்கே தண்ணியே இல்ல............ஆடு...........மாடுங்க கூட இல்ல.......இருந்தா கொஞ்சம் பாலாவது கறந்து குடிப்போம் அப்படின்னு ஒரு அழுவாச்சி.

தம்பி கலங்காத...........அடுத்தது நிலவுல நம்ம ஆட்சிதான்.........நம்ம தம்பிங்ககிட்ட சொல்லி ஒரு பத்தாயிரம் மாடு, கூட கண்ணு.........ஒரு ரெண்டு லட்சம் வக்க பிறி எல்லாம் அடுத்த வண்டில ஏத்தி அனுப்ப சொல்லியிருக்கேன்..........கவலை படாத தம்பின்னு...........சொன்னேன்.

அப்படியே ஆம்ஸ்ட்ராங்கு என் கால பிடிச்சிக்கிட்டான்.

உடனே தலீவரு என்ன தம்பி நாம திரும்ப எப்போ பூமிக்கு போப்போறோம் அப்படின்னாரு?

வாங்க வண்டில ஏறுங்க..............போகலம்முன்னு கிளம்பி அடுத்த இரண்டு நிமிடத்துல அவர கிளிநொச்சில இறக்கிட்டு............ஒரு ஆமை ஓட்டுல ஏறி இங்கே வந்துட்டேன்..........

ஹே.........ஹ.............ஹி   





Follow kummachi on Twitter

Post Comment

Thursday 5 September 2019

ஆச்சார்யா தேவோ பவ

ஆசிரியர் தினங்களில் பெரும்பாலும் எல்லோரும் நினைவு கொள்வது நம்மை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வியையும் மற்றும் தொழில் நிறுவனங்களில் நமக்கு தொழில் சொல்லிக்கொடுத்த பயிற்ச்சியாளர்களையும்தான்.

ஆனால் நமது வாழ்வில் நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் வாழ்க்கை பாதையில் தேவையான போதனைகளை தந்த அனைவருமே நமது ஆசிரியர்கள்தான். அந்த வகையில்  தாய், தந்தை, ஆசிரியர் தொடங்கி எத்தனையோ முகம் மறந்த ஆசிரியர்கள் நம் வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.

அந்த வகையில்..............

நான் சென்னையில் மணலியில் பணி புரிந்த காலம். இரவு பகல் என்று ஷிப்ட் வேலை.  தி.நகர் பஸ் ஸ்டாண்டில் கம்பனி வண்டி ஏறினால் சுமார் ஒரு மணி நேர பயணம். சென்னை சிட்டியில் உள்ள எல்லோரையம் வண்டி ஏற்றிக்கொண்டு விவேகானந்தர் இல்லத்தருகே எங்கள் பஸ் இன்றைய காமராஜர் சாலை (பீச் ரோட்) பிடித்து அடுத்த நிருத்தம் பீச் ஸ்டேஷன். பிறகு நேராக கம்பனி செக்யூரிட்டி கேட்தான். நிற்க நான் சொல்லவந்தது எங்கள் பஸ் ரூட் பற்றி அல்ல.

இந்த பஸ் ரூட்டில்தான் அண்ணா நீச்சல் குளம் உள்ளது. ஒருநாள் நாங்கள் இரவு டூட்டி முடிந்து வரும் பொழுது அண்ணா சமாதி அருகே ஏதோ சினிமா ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. (டைரடக்கர் ஸ்ரீதர் கார்த்திக்கையும், ஜீஜியையயும் விரட்டிக்கொண்டிருந்தார்)  எவனோ பஸ்ஸில் இருந்த ஒருவன் குரல் கொடுக்க தூக்கத்தில் இருந்து முழித்த என் சக தொழிலாளி..

 டேய் மச்சி இறங்கு இறங்கு.. ...

என்று சொன்னவுடன் நான் அங்கேயே தூக்க கலக்கத்தில் இறங்கி விட்டேன், கூட இறங்கிய நண்பன் அண்ணா நீச்சல் குளம் நோக்கி நடையை கட்டினான்.

டேய் எங்கடா போற...

நீச்சல் குளத்திற்கு

எதுக்குடா என்ன கூப்பிட்ட

நான் எங்கே கூப்பிட்டேன்

நீதானடா எறங்கு எறங்குன்ன

டேய் நான் உன்ன கூப்பிடலடா சகாதேவனை கூப்பிட்டேன் அந்த பாடு தூங்கிட்டான் போல...

சரி உனக்கு என்ன இப்போ பிரச்சினை என்றான்.

ஒன்னும இல்ல இப்போ நான் பல்லவன் பிடிச்சுதான் வீட்டுக்கு போகணும்

ஒன்னும் பிரச்சினை  இல்லை என்னோடு ஒரு அரை மணி நேரம் இரு அப்புறம் மேன்ஷன் போயிட்டு என்னோட வண்டியில் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்றான்.

நான் பார்வையாளராக இருக்க அவன் பாட்டிற்கு நீந்த சென்றுவிட்டான்.

அப்பொழுது வந்த ஆசைதான் எனக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.......

அன்று முதல் நான் அவனுடன் நீச்சல்  குளத்திற்கு ரெகுலராக ஆஜராகி விடுவேன்.

அனால் பிரச்சினை எனக்கு நீந்தத் தெரியாது.

தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீரில் காலையும் கையையும் அடித்துக்கொண்டிருப்பேன்

அதை பார்த்த ஒரு முதியவர், அவருக்கு கிட்டத்தட்ட ஒரு எனபது வயதிருக்கும், தம்பி இங்கே வா நீச்சல் எனபது இப்படி அல்ல.

முதலில் நீ மூழ்க மாட்டாய் என்று நம்பிக்கை வை. பிறகு தண்ணீரில் மூழ்கும் பொழுது கண்களை மூடாதே............பிறகு நீந்தும்  பொழுது தலையை எந்த கோணத்தில் வைத்துக்கொண்டால் எளிதாக நீந்தலாம் என்று எத்துணையோ பாடங்களை கற்றுத்தந்தார், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தண்ணீரில் பிணம் போல மிதக்கும் வித்தையை கிட்டத்தட்ட இரண்டே நிமிடங்களில் எனக்கு கற்றுத்தந்தார்.

அதன் பிறகு எனக்கு நீச்சல் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் காலப்போக்கில் நமது பழக்க வழக்கங்களால் நீச்சல் குளம் பக்கம் போகவில்லை.

ஆனால் சமீபத்தில் ஆர்தரைடிஸ் தொல்லையால் அவத்திப்படும் பொழுது எனது மருத்துவர் ..................உங்களது பிரச்சினை போக வேண்டுமென்றால் வாட்டர் தெரப்பி தான் சிறந்தது என்றார்.

இப்பொழுது மறுபடியும் நீச்சல் குளம் நாடி.....................அவரை நினைவு கொள்கிறேன்............

கிட்டத்தட்ட இரண்டே மாதங்கள் எனது நீச்சல் பயிற்சியை தொடர்ந்ததால் வலி போயயே போச்சு..........

இப்பொழுது எனக்கு நீச்சல் பயிற்சி அளித்த அந்த முதியவரை நினைவு கொள்கிறேன்.

குருவே சரணம்..........

Follow kummachi on Twitter

Post Comment