Tuesday 31 January 2012

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்


ச்சத்தீவை மீட்போம்................தமிழக ஆளுநர் உரை.
ஐயா ரோசையா போன ஆளுநர் உரையையே கொடுத்துட்டாங்க போல தேதியை பாருங்க .................

என் மகனுக்கு நானா பதவி கேட்டேன்................அஞ்சா நெஞ்சன்
அதானே தானா தலைவரு கொடுப்பாரு

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்..........ஜொள்கிறார் ரித்திக் ரோஷன்
ஆமாம் கிட்டே போகாதீங்க பத்திக்கிட போவுது.

திவாகரன் சொல்லித்தான் கஸ்தூரியின் வீட்டை இடித்தோம்......பொக்லைன் இயந்திரம் வாக்குமூலம்.
என்னது இயந்திரம் வாக்குமூலமா, இயந்திர உரிமையாளர் என்று சரியா தெளிவா சொல்லுங்கப்பு.

ஆளுநர் உரை கருத்து கூறாமல் பின்வாசல் வழியாக விஜயகாந்த் ஓட்டம் #செய்தி
அவர் அவசரம் புரியாத செய்தி, டாஸ்மாக் பத்துமணிக்கு மூடிடுவாங்க.

தைலாபுரத்தில் முதல் என்ட்ரி யாருக்கு திண்டிவனம் போலீசா, சி.பி.ஐ போலிஸா?
யாரு என்ட்ரி ஆனா என்ன? முதல் கைது யாரு? அதான் மேட்டரே.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் எண்ணம் இப்பொழுது இல்லை............டிராவிட்
இன்னும் இருபது முறை பௌல்ட் ஆகி சாதனை புரிந்த பின்தான் ஓய்வு பெறுவேன்.......................எங்களை இன்னும் நம்பும் ஏமாளிகள் இருக்கும் வரை.

முந்தைய ஆட்சியில் நாங்கள் ஒரு நாளைக்கு எட்டு நில அபகரிப்பு செய்து சாதனை புரிந்தோம்...............குஷ்பு சொல்லாமல் விட்டது.

சட்டசபையில் எப்படி நடக்க வேண்டும்..................கலைஞர் தலைமையில் தி.மு.க ஆலோசனை.
போன முறை முன்வாசல் வழிய வெளிநடப்பு செய்தாங்க, ஒரு மாறுதலுக்கு இந்த  முறை பின்வாசல் வழியா வெளிநடக்க சொல்லுங்க தலைவா.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை பிடிக்க முடியாது............மணிசங்கர் அய்யர்
அதுவரைக்கும் இந்தியாவில் காங்கிரசே இருக்குமா? இருக்காதா? அத முதலில் சொல்லுங்கப்பா.

நான் உடல் மெலிந்ததற்கான காரணத்தை விரைவில் அறிவிப்பேன்...........நடிகை அசின்
கடந்த இரண்டு மாதங்களாக பால், முட்டை, அரிசி, காய்கறிகள் எதுவும் தமிழ்நாட்டிலிருந்து போகவில்லை என்ற காரணம் எங்களுக்கு முன்பே தெரியும்.

வார இறுதி நாட்களில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்க மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது..................செய்தி
அடப்பாவிகளா!!!!!!!! அடுத்த குழந்தைக்கும் அங்கேயே அட்வான்ஸ் புக்கிங் பண்ணுவாங்களோ?

Follow kummachi on Twitter

Post Comment

Monday 30 January 2012

மாவட்ட செயலாளராக முப்பது லட்சமா?


ம்மாவிற்கும் சசிகலா கூட்டத்திற்கும் நடக்கும் "நீ கொடுத்த நான் கெடுத்தேன்" போராட்டம் நாளொரு வழக்கும் பொழுதொரு கைதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதில் ஒரு கட்டமாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது கொலை வழக்கு பாய்கிறதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

நீலகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தான் மீண்டும் மாவட்ட செயலாளராக முப்பது லட்சம் ரூபாய் ராவணனுக்கு கொடுத்ததாகவும், ஆனால் அந்த பதவி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதால் பணத்தை திருப்பிக் கேட்டபொழுது ராவணன் அதை கட்சி நிதியாகத்தான் தந்திருக்கிறாய் ஆதலால் திருப்பி தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார்.

செல்வராஜ் மேலிடத்தில் புகார் கொடுப்பதாக சொன்ன பொழுது, ராவணன் உயிருடன் ஊரு போய் சேர மாட்டாய் என்று மிரட்டிய நிலையில் செல்வராஜ் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இதுதான் இப்பொழுது ராவணன் மீது பாயும் வழக்கிற்கு முகாந்திரம்.

ஒரு கட்சியின் மாநில செயலாளராக முப்பது லட்சம் செலவு செய்ய முன் வருகிறார்கள் என்றால், அந்த பதவி வந்தவுடன் அவர்கள் மீண்டும் அதை வட்டியும் முதலுமாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே செலவழிக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று என்னுடைய நண்பனிடம் கேட்டேன், அவர் மச்சான் ஒரு ஒன்றிய தலைவர்.

அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் எனக்கு திகைப்பு.

ஒன்றியமே பதவிக்கு பதினைந்து லட்சம் வரை செலவு செய்கிறார்களாம். போட்ட காசை ஒரு வருடத்திலேயே எடுத்து விடுவார்களாம். அந்த ஏரியா ரோடு, மற்ற மராமத்து லொட்டு லொசுக்கு எல்லா கான்ட்ராக்டுகளும் இவர்கள் வசம்தானாம். ஒவ்வொன்றிலும் இருபது விழுக்காடு வரை இவர்களுக்கு பணி செய்யாமலே வருதாம்.

அப்புறம் அந்த திட்டம், இந்த திட்டம் என்று வருவதெல்லாம் “போனஸ்” தான்.

அப்படியென்றால் இந்த சட்டசபை உறுப்பினர், மந்திரி, பாராளுமன்ற உறுப்பினர் இதற்கெல்லாம் எவ்வளவு முதல் போட்டு எவ்வளவு எடுப்பார்கள்? அப்பப்பா!!!!!!!!!!!!!!!

அடப்பாவிகளா? இப்பவே கண்ணை கட்டுதே.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 27 January 2012

“வேட்டை” அதிரடி ஆட்டம்


ந்த “வேட்டை” லிங்குசாமியின் சமீபத்திய திரைப்படத்தை பற்றி அல்ல.

அம்மாவின் அதிரடி ஆட்டத்தை பற்றியது. நேற்றைய தினம் அம்மா அக்ரி கிரிஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி இவர்களின் அமைச்சர் பதவியை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது உ.பி. ச. தோட்டத்திலிருந்து வெளியேற்றியபின் தொடரும் நடவடிக்கைகளில் ஒன்று.

இவர்கள் இருவரும் சசிகலாவின் ஆதரவில் அமைச்சரானவர்கள். இதில் வேலுமணி அமைச்சரான முதலே தன் வசூல் வேட்டையை தொடங்கிவிட்டாராம். கிட்டத்தட்ட நானூறு கோடி வரை ஆட்டையை போட்டதாக சொல்கிறார்கள். இதெல்லாம் எனக்கல்ல அம்மாவுக்கு (எந்த அம்மாவுக்கு?) என்று சொல்லித்தான் வசூலித்திருக்கிறார். மேலும் இவருக்கும் தி.மு.க பெரும்புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டாம்.

அம்மாவின் நடவடிக்கை அமைச்சர் பதவி நீக்கத்துடன் முடியாது என்று நம்புவோமாக. அடித்த பணத்தை எப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம். இல்லையென்றால் இதுவும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை  என்று தான் மக்கள் நினைப்பார்கள்.

இவர்களிடமிருந்து பறித்த பதவிகள் முக்கூர் சிவசுப்ரமணினுக்கும், சிவபதிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது போலீசார் திவாகரனை தேடும் வேட்டையில் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றனர். ஏற்கனவே ராவணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

திவாகரனை தேடி பசுல்லா ரோட்டில் உள்ள இளவரசியின் வீட்டில் போலீசார் தேடியிருக்கின்றனர். சசிகலா இப்பொழுது அங்கே தான் தங்கியிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கேள்வி.

இன்னும் சில அதிரடி நடவடிக்கைகள் வர இருக்கின்றன.

இதெல்லாம் சொத்து  குவிப்பு வழக்கின் முன் நடவடிக்கையா? என்பது போக போகதான் தெரியும்.

ஆனால் அம்மா இந்த கூட்டத்தை வளர்த்துவிட்டதற்கு உண்டான பலனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

மக்கள் மாக்கள் அல்ல.  

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 26 January 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர்---3


சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 விஜய் டீ. வியின் அருமையான நிகழ்ச்சி. இதில் வரும் குழந்தைகளிடம்தான் எத்தனை திறமை. இப்பொழுது இது நல்ல கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் சரத்,  மலையாள பட இசையமைப்பாளர் சிறப்பு விருந்தினர். அவர் இசை அமைத்த ஒரு பாடலை “சுகன்யா” என்ற பெண் மிகவும் அருமையாக பாடினார். எனக்கு இவர்தான் அடுத்த அல்கா அஜீத் என்று தோன்றுகிறது.

அஞ்சனா, மதுமிதா, பிரகதி (நீங்களெல்லாம் ரொம்ப கேலி பண்றேள், நம்ம சூப்பர் ஸ்டார் இங்கிலீஷ்) போன்ற பாடகிகள் நிச்சயமாக கடைசி பத்து வரை வர நல்ல வாய்ப்புள்ளது.

இதில் போன வாரம் வெளியேற்றப்பட்ட சிறுவன் அழுதது ரொம்ப டூ மச் த்ரீ மச்.

இவரை தவிர இன்னும் நிறைய இளம் பாடகர்கள் மிகவும் “நன்னாவே பாடிண்டிருக்கா”.

கலைஞர் டீ. வியில் உஷா உதூப்பும், அனுராதா ஸ்ரீராமும் நடுவர்களாக இருந்து நடத்தும் மற்றும் ஒரு சிறுவர், சிறுமியருக்கான இசை நிகழ்ச்சி. இன்று அந்த நிகழ்ச்சியில் “அன்பென்ற மழையிலே” என்ற மின்சாரகனவு பாடலை மற்றுமொரு முறை கேட்கும் பொழுது மிகவும் நன்றாகவே இருந்தது.

மெகா சீரியல்களை துறந்து இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் சூப்பர் சிங்கர் ஜோதியிலும், குயில் பாட்டிலும் ஐக்கியமாகி விட்டார்கள்.

எனது கவலை எல்லாம் இறுதி போட்டி முடிந்தவுடன் எங்கு போனாலும் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என்று ஒரு கூட்டம் புலம்புவதை கேட்கவேண்டுமே என்பதுதான்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 25 January 2012

காவியாவின் குழந்தை


காவியாவிற்கு இன்று அலுவலகம் வந்தது முதல் ஏனோ வேலை ஓடவில்லை.

அவளது குழந்தையின் முகம் மீண்டும் மீண்டும் நியாபகம் வந்து பெற்ற வயிற்றை பிசைந்து எடுத்தது. இரண்டு நாட்களாக இரவில் தூக்கத்தில் “ஓவியா” கேவுவது ஒரே கவலையாக இருந்தது. கார்த்திக்கிடம் சொன்னால் குழந்தை கனவில் பயந்து இருக்கும் என்கிறார். எட்டு மாத குழந்தைக்கு கனவு வருமா? தெரியவில்லை.

காலையில் குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்து விட்டு வருமுன் மனதில் ஏதோ ஒரு கலக்கம். இன்று அரை நாள் லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடலாமா என்று தோன்றியது, ஆனால் மேனேஜரிடம் கேட்க தயக்கமாக இருந்தது, இன்னும் இரண்டு நாட்களுக்குள் ப்ராஜெக்டை முடிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இன்னும் பாதி வேலை கூட முடிந்த பாடில்லை. போதாத குறைக்கு இன்று காலை அலுவலகம் வந்தது முதல் ஒற்றை தலைவலி வேறு படுத்திக்கொண்டிருந்தது.

முதல் ஆறு மாதம் வரை மாமியார் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் ஒரு மாதம் முன்பு மாமனார் தனியாக எவ்வளவு நாள் இருப்பார் என்று அம்பாசமுத்திரம் சென்று விட்டார்கள்.

மதிய இடைவேளையில் ப்ராஜெக்டை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சிடுமூஞ்சி மேனேஜரிடம் “ஸார் தலைவலி, ஜுரம் வரும்போல் உள்ளது” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.  ஆபிஸ் விட்டு வெளியே வந்தவுடன் ஆட்டோ எளிதாகக் கிடைத்தது. அரை மணியில் வீடு வந்து, அழைப்பு மணியை அழுத்தினாள். வேலைக்காரி கதவைத் திறந்தாள், காவியாவை கண்டதும் அவள் முகம் மாறியது.

காவியா குழந்தையை காண நேராக பெட் ரூம் நோக்கி சென்றாள். குழந்தை கட்டிலில்லை. குழந்தை எங்கே? என்று வேலைக்காரியிடம் கேட்டுக் கொண்டே மற்றொரு அறைக்கு சென்று பார்த்தாள், குழந்தை அங்கும் இல்லை எனவே வேலைக்கரியிடம் மறுபடியும் குழந்தை எங்கே? என்று கேட்டாள்.  வேலைக்காரி பேந்த பேந்த விழித்தாள்.

காவியாவிற்கு பதட்டம் அதிகமானது. பக்கத்து வீட்டு மாமியிடம் கேட்கலாம் என்று போனால் அவர்கள் வீடு பூட்டியிருந்தது. திரும்ப வீடு வந்து வேலைக்காரியை அதட்டினாள். ஒன்றும் அவளிடமிருந்து பதிலில்லை. உடனே தன் கணவனுக்கு போன் செய்தாள். அவன் குழந்தை தவழ்ந்து வெளியே எங்கேயாவது போயிருக்கிறதா தேடு என்று போனை வைத்துவிட்டான். குழந்தையை வீடு முழுவதும் சுற்றி தேடினாள் காணவில்லை. வேலைக்காரி தேடுவதற்கு கூட வராததை அவள் பதட்டத்தில் கவனிக்கவில்லை.

அக்கம்பக்க வீடுகளில் விசாரித்தாள் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடியிருக்கும், திரும்ப வீடு வந்து சேர்ந்து வேலைக்காரியிடம் விசாரிக்க ஆரம்பித்தாள். வேலைக்காரி இப்பொழுது என்னை மன்னிச்சிருங்கம்மா என்று அழ ஆரம்பித்தாள். அப்பொழுது அழைப்பு மணி அழைக்கவே கதவை திறந்தவுடன் கார்த்திக் என்ன குழந்தை கிடைத்ததா இல்லையா? என்றான்.

இருவரும் சேர்ந்து வேலைக்காரியை மிரட்டவே அவள் உண்மையை ஒப்புக்கொண்டாள்.

இருவரும் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு அந்த நகரத்தின் கோடியில் உள்ள ஹைவேஸ் சிக்னலை நெருங்கும் பொழுது அங்கிருந்த ஒரு பிச்சைக்கரியிடம் குழந்தையைப் பார்த்தனர். காவியா ஓடோடி சென்று அவளிடமிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்ததும் வேலைக்காரியை போலீசிடம் சொல்லிவிடுவோம் என்று விசாரித்ததில் அவள் குழந்தையை பிச்சைக்காரிகளுக்கு காலை பதினொரு மணி முதல் மூன்று மணி வரை வாடகைக்கு விடுவதாக ஒப்புக்கொண்டாள்.

காவியா இதை போலிசுக்கு சொல்லலாம் என்றதும், கார்த்திக் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

காவியா வேலைக்காரியை துரத்திவிட்டு வேலையையும் விட்டுவிட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 23 January 2012

கலக்கல் காக்டெயில் -57


ஆட்சியில் இருப்பது யார்?

ர வர தமிழ் நாட்டில் ஆட்சி யார் கையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஆத்தா எந்த முடிவெடுத்தாலும் உயர்நீதிமன்றமோ இல்லை மேல் முறையீடு செய்தவுடன் உச்சநீதிமன்றமோ அம்மாவின் ஆணைக்கு அப்பப்போ ஆப்பு வைத்து விடுகிறார்கள். சமச்சீர்கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், மக்கள் நலப்பணியாளர்கள் வரிசையில் இப்பொழுது புதிய தலைமை செயலகத்தை அம்மா மருத்துவமனையாக்குகிறேன் என்று அரசாணை பிறப்பித்து டெண்டரும் விட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் வேளையில் உயர் நீதிமன்றம் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்றாகிவிட்டதா? என்று தாற்காலிகமாக நிறுத்திவிட்டது.

ஆனால் அதையெல்லாம் பற்றி ஆத்தாவுக்கென்ன? நான் ஏதாவது இப்படி அதிரடியாக செய்துகொண்டுதான் இருப்பேன், என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது!! என்று தினம் ஒரு கூத்து அரங்கேறும்.



ஒரு அணில் காக்காவாகிறது

முதலில் “அணில்” அப்பா, அம்மாவை பார்த்து பூங்கொத்து கொடுத்து நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவரானார், அதற்கே உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது அவருக்கு. அடுத்ததாக உ.பி.ச. துரத்தப்பட்டவுடன் அணில் ஆத்தா அந்த இடத்தில் இப்பொழுது இருக்கிறாராம். உ.பி. ச தோட்டத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை இப்பொழுது இவர்தான் பார்த்துக்கொள்கிறாராம். அதற்கு அச்சாரமாகத்தான் இசைக்கல்லூரிகளின் மேற்பார்வை பொறுப்பை அம்மா கொடுத்தாராம்.

எப்படியும் அப்பனும், ஆத்தாளுமாக சேர்ந்து அணிலை அலாக்காக அரசியலில் “கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மனையில் வை” என்று தூக்கி வைத்துவிடுவார்கள் போல.
எப்படியோ “அணில்” கூட்டம் இப்பொழுது காக்கா கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் இவர்கள் சலுகைகள் பெறாமல் இருக்க மாட்டார்கள். முந்தைய ஆட்சியில் அங்கு ஒட்டிக்கொண்டு நல்ல கல்லா கட்டினார்கள், கடைசியில் வந்த பிணக்கில் காக்கைகள் திசை மாறிடிச்சு.

பொதுக்குழு

குடும்பத்தில் இப்பொழுது குடுமிபிடி சண்டை என்றவுடன் பொதுக்குழுவை கூட்டுகிறார் ஐயா. அதிலும் குழப்பமாம். பெரிசு சொன்ன தேதியை தளபதி ஒப்புக்கொள்ளவில்லையாம். அந்தவீட்டு சகோதரி கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே பிப்ரவரி மூன்றாம் தேதிதான் கூட்டம் என்பதில் குறியாக உள்ளாராம்.

துணைவியார், நான் உயிரோடு இருக்கும்பொழுதே என் பெண்ணை இப்படி காய்ச்சுகிறார்களே என்று ஒரே புலம்பலாம்.

நல்லா அடிச்சுகிட்டு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்தாலும் வரலாம்.



ரசித்த கவிதை

கனவு வந்து போனபின்பும்
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல் 
நீ வந்து போனதற்கான தடயங்களின்
நிழல்களை என் மனதுக்குள் தந்துவிட்டு
நிஜங்களை நீ பறித்து செல்ல-நான்
நிழலாய் பின் தொடர்கிறேன்-உன்னை
உந்த நினைவுகளைச் சுமந்த படியே.........

----------------சி.உதயா




இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment