Wednesday 18 January 2012

நாயர் சாம்ராஜ்யம்-(5)

விறகு தொட்டியில் தென்பட்ட இரண்டு பெண்களுக்காகத்தான் இஸ்திரியும், ப்ளூட்டும் எப்பொழுதும் விறகு தொட்டியிலே தவமிருந்தனர். பின்னர்  விறகு தொட்டி உரிமையாளர் இவர்களை கட்டையால் விரட்டியடித்தது தனி கதை. 

விறகு தொட்டியின் உரிமையாளர் நாடாரின் சொந்த சகோதரர். ஆனால் அவர்களும் நாயரின் கூட்டத்திற்கு  வியாபரரீதியாக போட்டி கிடையாது. மேலும் நாடார் சகோதர்களின் குடும்பச் சண்டையால் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. விறகுக் கடை நாடார் ஒரு அவசரத்திற்குக் கூட மளிகை கடை நாடாரிடம் எதுவும் வாங்க மாட்டார்.

இப்பொழுது நாராயணனை கடையில் காண முடிவதில்லை. அவன் இப்பொழுது நகரின் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய அசைவ உணவு விடுதி தொடங்கிவிட்டதாக நடேசன் சொன்னான். அவன் கடையை கவனிக்க நம்பியார் வந்தார். அவருக்கு ஒரு அறுபது வயதிருக்கும். சிகரெட்டு குடிக்க ஆரம்பித்த எங்களுக்கெல்லாம் கடனில் தரும் கேரளா வள்ளல். கடையின் பின்புறம் உள்ள தட்டிக்கு பின்தான் ஊருக்கு பயந்து தம் அடிப்போம். நம்பியார் ஒற்றையாள், குடும்பம் கிடையாது.  மதிய உணவு வேளையில் நாயர் கடைக்கு சாப்பிட கடையை மூடாமலே சென்று விடுவார். நாங்கள் வந்தால் கடையில் நுழைந்து சிகரேட் எடுத்துக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. ஆனால் சாப்பிட்டுக்கொண்டே கடையை பார்த்துக் கொண்டிருப்பார்.

நம்பியாரிடம் பேச்சுக் கொடுத்து நாயரின் மனைவி என்ன ஆனாள் என்று கேட்டால் “எடோ ஜோலிய நோக்கு” என்பார் வேறெதுவும் சொல்லமாட்டார்.

நாளடைவில் அவரும் வேலாயுதனும் நண்பர்கள் ஆனார்கள். வேலாயுதன் ரொட்டிக்கடையை தன் பெண்டாட்டியை கவனிக்க சொல்லிவிட்டு நம்பியாருடன் பேசிக்கொண்டிருப்பான். அவர்களுடைய பேச்சு பெறும்பாலும் நாயரைப் பற்றிதான் இருக்கும். அவர்கள் பேச்சிலிருந்து நாயர் அந்தக் கூட்டத்தின் பெரிய சர்வாதிகாரி என்பது தெரியவந்தது. அவர்களுக்குள் எந்த பிணக்கு வந்தாலும் நாயர்தான் நாட்டாமை. நாயரின் மனைவி ஓடிப்போய் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடிவிட்டது.

வ்வொரு வருடம் ஜனவரி ஆரம்பத்தில் இங்கு ஐயப்ப பக்தர்களின் திருவிழா நடக்கும். மகரஜோதி காணச்செல்லுமுன் இங்கு பஜனைகளும், கச்சேரிகளும் களைகட்டும். ஜோதி தரிசனத்திற்கு கிளம்பும் தினம் நாயர் நான்கு யானைகள், ஐம்பது சிறு பெண்கள் குத்துவிளக்கு ஏந்தி வர அந்த ஏரியாவே அமர்க்களப்படும். கேரளாவின் அத்தனை குஜிலிகளும் இங்கே வந்துவிட்டார்களோ என்று தோன்றும்.

நாங்க எங்க படிப்பை எல்லாம் துறந்து பெண்களைக் காண ஆஜராகிவிடுவோம். வீட்டில் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வீட்டில் படிக்கிறோம் என்று சாக்கு சொல்லி  வீட்டில் எஸ் ஆகிவிடுவது வழக்கம். எல்லோரும் தவறாமல் திருவிழாவிற்கு எங்களுக்கே உரிய பிரத்தியேக காரணத்தால் அங்கு இரவு முழுவதும் தவம் கிடப்போம்.

மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் நடக்கும் இந்த திருவிழாவை காண நகரத்தின் பல பகுதிகளிருந்து மக்கள் வருவார்கள். நள்ளிரவு வரை நடக்கும், பின்பு சபரிமலை செல்பவர்கள் குருசாமி கோவிந்தன் நாயருடன் ரயில் நிலையத்தை நோக்கி கோஷமிட்டுக் கொண்டே செல்வார்கள்.

அந்த வருடம் நாயர் குழு சபரிமலை போன இரண்டாவது நாள் நான் நம்பியார் கடைக்கு சென்ற பொழுது நாயரின் வீட்டில் அவரின் பெண்கள்  விளையாடுவதை கண்டேன். 

.............தொடரும்

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Unknown said...

கதை..சுவாஸ்ரமா வரும் போது தொடரும் போட்டுவிடுகிறீர்கள் போங்க...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதுதான் பார்த்தேன், ஐந்து பாகங்களையும் வரிசையாக படித்து முடித்துவிட்டேன், தொடர் நன்றாக போகிறது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒவ்வொரு பாகத்திலும் இன்னும் 1-2 பாராகிராஃப்கள் அதிகமா எழுதலாம்.

கும்மாச்சி said...

உங்களது யோசனைக்கு நன்றி, ப.கு. ஸார்.

giri said...

சுவாரஸ்யமாக இருக்கிறது. குட்

giri said...

சுவாரஸ்யமாக இருக்குறது. குடெ

giri said...

Good

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.