Friday 20 January 2012

நல்ல டீமு இப்போ நார்நாரா போனதடி


படிக்காதவன் படத்தில் ரஜினி பாடும் மெட்டில் படிக்கவும் இல்லை பாடவும். முடிந்தால் இரண்டு கட்டிங் வுட்டு, அட்டபிகரை (அட்ராசக்க செந்தில் பாஷையில் “ஜிகிடி”) அனைத்துக் கொண்டு அவரவர் வசதிக்கேற்ப பாடலாம்.  

டீமைத் தெரிஞ்சுகிட்டேன்
கிரிக்கெட் புரிஞ்சுகிட்டேன்
கண்மணி என் கண்மணி
பந்தும் வந்திடுச்சி
ஸ்டம்பும் பறந்திடுச்சு
கண்மணி என் கண்மணி
நல்ல டீமுன்னுதான்
நான் கேப்டனானேன்
நல்ல டீமு இப்போ
நார் நாரா போனதடி
கண்மணி என் கண்மணி

நேற்று நான் தோனி
இன்று ஆகலை போனி
என்னை காப்பாற்றும்
பேட்ஸ்மேன்கள் ஒரு பாணி
ஸ்பீட் பௌலர
கண்டு புட்டு
டெண்டுல்கர் கூட
பெவிலியனில் பம்முறான்டி
கண்மணி என் கண்மணி
அதிரடி ஆட்டக்காரன்
வீரூ சேவாக் இப்போ
அடிவாங்கிப் போரானடி
கண்மணி என் கண்மணி

லக்ஷ்மன் இப்போ வேஸ்ட்டு
டிராவிட் பார்மு லாஸ்ட்டு
கோஹ்லி நடு விரல் காட்டி
இழந்தான்டி பணம் காசு
இஷாந்தும் ஜஹீரும்
வைட் பந்து போட்டு
எங்களை ஒழிச்சாண்டி
கண்மணி என் கண்மணி

பிட்ச தெரிஞ்சுகிட்டேன்
அம்பயரை புரிஞ்சுகிட்டேன்
கண்மணி என் கண்மணி
நாக்கை புடுங்கிகிட்டு
நாண்டுகிட்டு சாக
நாடு திரும்புறோமடி
கண்மணி என் கண்மணி  

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

1st cut

கும்மாச்சி said...

நன்றி செந்தில்.

Unknown said...

யோவ் மாப்ள நாங்கல்லாம் எம்புட்டு பாத்து இருக்கோம்...இதெல்லெம் எம்மாத்திரம் ஹிஹி!

கும்மாச்சி said...

அது சரி விக்கி, இதெல்லாம் நமக்கு ஜூஜூபி.

கோகுல் said...

இவங்கள புரிஞ்சுக்கவே முடியலையே?

கும்மாச்சி said...

கோகுல், ஆஸ்திரேலியா டூருன்னு சொல்லி கூட்டிகிட்டு போயிட்டு அங்கன போயி கிரிக்கட் விளயாடுன்னு சொன்னா அவனுக என்ன பண்ணுவானுங்க பாவம்.

rajamelaiyur said...

இதை தோனிக்கு மெயில் பண்ணுங்க ..

rajamelaiyur said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜா.

ராஜி said...

பாட்டு நல்லாதான் இருக்கு சகோ

ராஜி said...

சிசிச்சு மாளலை

Unknown said...

வாங்க..வாங்க...எல்லாம் சேர்ந்து பாடலாம்...
டீமைத் தெரிஞ்சுகிட்டேன்
கிரிக்கெட் புரிஞ்சுகிட்டேன்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி, வீடு.

Anonymous said...

பணங்ககாசை கண்டுக்கிட்டு பின்னாடி ஓடினவனுக்கு ஒரு ஓட்டம் கூட எடுக்க முடியலை கண்மணி கண்மணி...
ஊரை..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ரெவ்ரி

முத்தரசு said...

நல்ல பாட்டு நச்சுனு இருக்கு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.